
காலையில் இளமாறன் விழித்து செந்தமிழ் அருகில் இல்லாததை பார்த்தான் … கிச்சனில் இருப்பாள் என்று நினைத்து கொண்டான் … எழுந்து பாத்ரூமிற்கு சென்று வந்தவன் … அலமாரியில் இருந்த நேற்று அவள் போட்டிருந்த சேலை … தாலி நகைகளை பார்த்து பதறி போனான் … வீடு முழுக்க அவளை தேடினான் … வெளியே அவள் செருப்பு இருந்தது … அது அவன் வாங்கி தந்தது அதனால் அதையும் போடாமல் சென்று விட்டாள் … உள்ளே சென்று பார்த்தான் அவள் பை இல்லை …
அய்யோ என்ன செய்வேன் … அம்மா வந்து கேட்டால் என்ன பதில் சொல்வேன் … பிசாசு எங்கு போனாளோ … என்ன ஆனாளோ என்று அவனுக்கு கோபமாக வந்தது…
இனியனுக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான் … அவன் ரேவதிக்கு விஷயத்தை சொல்ல ஆளுக்கொரு பக்கம் அவளை தேடினார்கள் … அவள் அப்பா வீட்டிற்கு செல்லவில்லை … போலீசில் புகார் தந்தார்கள் … அன்று நடந்த தற்கொலைகள் … ஆக்சிடென்ட்கள் … கொலைகள் எல்லா பெண்களின் பிணங்களையும் ஹாஸ்பிடல்களில் சென்று அடையாளம் பார்த்தான் இளமாறன் … நேரம் ஆக ஆக அவனுக்கு பயம் அதிகமாகிக் கொண்டே போனது … பிணங்களை எல்லாம் பார்த்து அதிர்ச்சியில் இருந்தவன் … அய்யோ இந்த மாதிரி எல்லாம் அவளை பார்த்து விட்டால் என்ன செய்வேன் என்று அவன் மனம் பதறியது …
அங்கு அமர்ந்து கைகளால் முகம் மூடி கதறி அழுதான் … செய்த தவறுகள் அவன் மனதை கொல்ல ஆரம்பித்தது … உடனிருந்த இனியனும் ரேவதியும் அவனை பார்த்து கலங்கி போனார்கள் … செந்தமிழ் கிடச்சுடுவா … தைரியமா இரு இளமாறா என்று அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள் …
எதேச்சையாக ரேவதி அங்கிருந்த வேறு ஒரு போலீஸ் ஆபீசரை பார்த்து அண்ணா என்று அழைத்து பேசிக் கொண்டிருந்தாள் … அது யார் என்று இவர்கள் திரும்பி பார்த்தால் அது இவர்களுடைய கல்லூரி நண்பன் சரவணன் …
டேய் சரவணா என்று இரண்டு பேரும் சென்று அவனை அணைத்து கொண்டார்கள் … ரேவதி உனக்கு எப்படி இவனை தெரியும் என்று இனியன் கேட்க … அது ஒரு பெரிய கதை அப்புறம் சொல்றேன் என்ற ரேவதி … செந்தமிழ் பற்றி சரவணனிடம் சொன்னாள் …
நீங்க சொன்ன அடையாளங்களோட நானும் ஒரு பொண்ணை இங்க அட்மிட் பண்ணியிருக்கேன் என்று சரவணன் சொல்ல … நான்கு பேரும் சென்று அந்த பெண்ணை பார்த்தார்கள் … அது செந்தமிழ் தான் … அங்கங்கே ஆடைகள் கிழிந்து … சிராய்ப்பு காயங்களோடு குற்றுயிரும் குலையுருமாக கிடந்தாள் செந்தமிழ் … அவள் கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருக்க சலனமின்றி படுத்திருந்தாள் …
அய்யோ செந்தமிழ் … என்னாச்சு டி என்று ரேவதி அவளுக்கு அருகில் வேகமாக செல்ல … இளமாறனும் இனியனும் அவள் நிலையை பார்த்து கலங்கி போய் நின்றார்கள் … மாறா இவங்க உன்னோட ஒய்ஃபா … என்னாச்சு டா என்று சரவணன் கேட்க … நேத்து இரண்டு பேருக்கும் சண்டை கோச்சுக்கிட்டு போய்ட்டா என்றான் இளமாறன் …
என்ன பிரச்சனை உண்மையை சொல்லுடா என்று இனியன் கேட்க … நிரஞ்சனா பத்தி தெரிஞ்சு போச்சு … அவ கோபமா கேட்டா … நானும் கோபமா பேசிட்டேன் என்றான் இளமாறன் …
யார் டா நிரஞ்சனா என்று சரவணன் கேட்க … நிரஞ்சனா பற்றிய கதைகளை சொன்னார்கள் இருவரும் … உனக்கு அறிவு இல்லையா மாறா இன்னொரு பொண்ணு புருஷனோட வாழ்க்கையில இருக்கிறது தெரிஞ்சா எந்த பொண்ணும் கோபப்படுவா … கஷ்டப்படுவா … அப்போ நீ பொறுமையா பேசி அவங்கள சமாதானம் பண்றதை விட்டுட்டு … சண்டை போட்டிருக்க என்னடா இதெல்லாம் என்றான் சரவணன் …
புனிதாம்மா க்கு தெரிஞ்சா ருத்ர தாண்டவம் ஆடிடுவாங்க … செந்தமிழ் உன்னை டிவோர்ஸ் பண்ணுதோ இல்லையோ … இவனோட அம்மா இவனை டிவோர்ஸ் பண்ணிடுவாங்க என்று இனியன் சொல்ல … இளமாறன் பயந்து போய் அவர்களை பார்த்தான் …
செந்தமிழுக்கு என்னாச்சு ஏன் இப்படி இருக்கா ?? என்று இளமாறன் கேட்க … நேத்து ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க இங்க வந்திருந்தேன் … அது முடிஞ்சு வீட்டுக்கு போற வழியில தான் ஒரு பொண்ணை யாரோ 3 பேர் தூக்கிட்டு போறதை பார்த்தேன் … வண்டியை நிறுத்திட்டு போறதுக்குள்ள அவனுங்களை காணோம் … ஒருவழியா கண்டுபிடிச்சு போறதுக்குள்ள அந்த பொண்ணை இப்படி பண்ணிட்டாங்க என்று சொன்னான் சரவணன் …
என்னடா ஆச்சு என்று இளமாறன் திகிலாக கேட்க … ஒண்ணும் ஆகல … அந்த பொறுக்கிங்க அடிச்சதுல … அந்த பொண்ணு தப்பிக்க முயற்சி பண்ணதால உடம்புல காயமா இருக்கு … மருந்து போட்டு குளுக்கோஸ் போட்டிருக்காங்க … இன்னும் முழிக்கவே இல்ல … ட்ரெஸ்லாம் கிழிஞ்சு இருக்கு … நான் போய் அவங்களுக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு சரவணன் சென்று விட … இளமாறன் செந்தமிழை கண்ணீரோடு பார்த்தான் …
உங்களுக்கு இப்போ சந்தோஷமா … உங்களை மனசார விரும்புனதை தவிர அவ வேற என்ன பாவம் பண்ணா … அவ வீட்ல தான் கொடுமையை அனுபவிச்சா … உங்களை கல்யாணம் பண்ணா சந்தோஷமா இருப்பான்னு நான் நினைச்சேன் … அவளும் உங்களை நம்பினா … அவளை இப்படி பண்ணி வச்சிருக்கீங்க என்று கோபமாக பேசினாள் ரேவதி …
எனக்கு உங்களை பத்தி எல்லாம் தெரியும் … நான் அவளை என் வீட்டுக்கு கூப்பிட்டு போறேன் … நான் குடிக்கிற ஒருவேளை கஞ்சியை அவளுக்கும் கொடுத்துட்டு போறேன் என்று சொல்லி அழுதவள் … செந்தமிழ் செந்தமிழ் எழுந்திரு டி என்று அவளை உலுக்க … செந்தமிழ் திடுக்கிட்டு கண் விழித்து பார்த்தாள்…
ரேவதியை பார்த்து ஆசுவாசமாக மூச்சு விட்டவள் … ரேவதி என்று அவளை எழுந்து அணைத்து கொண்டாள் …
ரேவதி கடைசியா எனக்கொரு உதவி பண்ணு … இங்க யார் கிட்டயாச்சும் சொல்லி எனக்கு ஊசி போட்டு கொல்ல சொல்லு … எனக்கு வாழவே பிடிக்கல … நான் யாருக்காக வாழணும் … எதுக்காக வாழணும் … வெறுப்பா இருக்கு … சாக போனா பயமா இருக்கு … நான் என்ன பண்ணட்டும் என்று செந்தமிழ் கதறி அழ அதை பார்த்த ஆண்களே கலங்கி விட்டார்கள் …
அவள் உடல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க … பயப்படாத டி … நான் இருக்கும் போது நீ ஏன் சாகனும் … நீ என் கூட வா என்று ரேவதி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க … சரவணன் உடையோடு வந்தான் …
இந்தா ம்மா ட்ரெஸ் மாத்திக்கோ என்று செந்தமிழிடம் அவன் அதை தர … எனக்கு இவர் வாங்கி குடுக்கிற எதுவும் வேணாம் என்று இளமாறனை கை காட்டி சொன்னாள் … அய்யோ அவன் வாங்கிட்டு வரல … உனக்கு அண்ணனா நான் தான் வாங்கிட்டு வந்தேன் … மாத்திக்கோ போ என்று சொல்ல அவள் ரேவதியுடன் மெல்ல எழுந்து உடை மாற்ற சென்றாள் …
என்னடா இவ்வளவு கோபமா இருக்கு தங்கச்சி … பாவம் நேத்து ரொம்ப பயந்துட்டாங்க … ஒருவேளை நான் அவங்களை பார்க்காம போயிருந்தா என்னெல்லாம் நடந்திருக்கும்னு சொல்ல முடியல … என்ன பிரச்சனையா இருந்தாலும் கோபத்தை கண்ட்ரோல் பண்ணி பொறுமையா பேசுடா … நமக்கும் அவங்களை விட்டா யார் இருப்பாங்க சொல்லு … கால்ல விழுந்தாச்சும் சமாதானம் பண்ணிடு என்று சொல்லி சிரித்தான் சரவணன் … அப்புறம் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா இனியா என்று சரவணன் கேட்க …
பொண்ணு பார்த்தாச்சு இனிமே தான் கல்யாணம் பண்ணனும் … இவங்க தான் பொண்ணு என்று உடை மாற்றி விட்டு … செந்தமிழை அழைத்து வந்த ரேவதியை கை காட்டினான் இனியன் … ஹே சூப்பர்டா என்று இனியனிடம் சொன்ன சரவணன் … என்னம்மா ரேவதி அண்ணன் கிட்ட சொல்லவே இல்ல பார்த்தியா என்று உரிமையாய் கேட்க … இளமாறனும் இனியனும் அதிர்ச்சியாய் அவர்களை பார்த்தார்கள் …
நீங்க தான் அண்ணியை கூப்பிட ஊருக்கு போயிட்டீங்களே அதான் சொல்ல முடியல … அண்ணி வந்துட்டாங்களாண்ணா .. இப்போ அவங்களுக்கு உடம்புக்கு பரவாயில்லையா … ரெண்டு குட்டீஸ் என்ன பண்றாங்க என்று ரேவதி கேட்க …
இப்போ பரவாயில்ல … உன் அண்ணிக்கு நான் பக்கத்துல இல்லைன்னு டென்ஷன்ல BP ஏறி போச்சு … நீயே சொல்லு பொழுதுக்கும் டிரான்ஸ்பர் போடுறாங்க … வீடு மாத்தி ஷிஃப்ட் ஆகுறதுக்குள்ள ஒருவழி ஆகிடுது … அதான் பாதுகாப்பா அவ அப்பா அம்மா கூட இருன்னு சொன்னா கோபப்படுறா என்று சொன்னான் சரவணன் …
ஹே பாசமலர்களா நிறுத்துங்க … நீங்க ரெண்டு பேரும் எப்படி இவ்ளோ பழக்கம் என்று இனியன் அதிர்ச்சியாக கேட்க … ப்ளாஷ்பேக் விரிந்தது …
கல்லூரி முடிந்து போலீஸ் பயிற்சிக்கு படித்த சரவணன் தேர்வுகளில் பாஸ் செய்து டெல்லிக்கு டிரெய்னிங் சென்றான் … அங்கேயே ஒரு வடமாநில பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டான் … போலீசில் வேலை கிடைத்து அடிக்கடி ஊர் மாறிக்கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலையால் டெல்லியில் அவள் அப்பா வீட்டிலேயே அவளை தங்க வைத்திருந்தான் …
சரவணனுக்கு 3 வயதில் அமுதினி … 1 வயதில் இதழினி என இரண்டு பெண் குழந்தைகள் … சென்னைக்கு குடும்பத்தோடு மாற்றலான பின்னர் ஒருநாள் மெரினா பீச்சுக்கு மனைவி குழந்தைகளோடு சென்றிருந்தான் … இன்ஸ்பெக்டர் சரவணன் மீது இருந்த கோபத்தில் ரவுடி கும்பல் ஒன்று அவர்களை சூழ்ந்து கொள்ள … அவன் மனைவி குழந்தைகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தான் … யாரும் அவனுக்கு உதவவில்லை …
கண்ணிமைக்கும் நேரத்தில் சரவணன் பெரிய மகளின் கழுத்தில் கத்தியை வைத்து ஒருவன் மிரட்ட … அங்கு வந்த ரேவதி அவள் கையில் கொண்டு வந்த மணலை அவன் கண்ணில் போட்டு குழந்தையை காப்பாற்ற … இன்னொருவன் ரேவதி கையில் கத்தியால் கீறி விட்டான் …
அப்போதும் அவள் விடாமல் அங்கு கையில் கிடைத்த கட்டைகளால் கற்களால் அவர்களை அடிக்க … ஏற்கனவே கொஞ்ச பேரை சரவணனும் அடித்துக் கொண்டிருக்க … அங்கிருந்த ஒருவர் போலீஸுக்கு தகவல் சொல்ல போலீஸ் வந்து விட்டார்கள் …
சரவணனின் மனைவி தீபா ரேவதியை அணைத்துக் கொண்டாள் … இருவரும் அவளுக்கு நன்றி சொல்லி ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார்கள் … அன்றிலிருந்து ரேவதி சரவணனின் தங்கையாக அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு சென்றாள் …
அன்று ரேவதியிடம் வம்பு செய்து கொண்டிருந்த அந்த வயதானவன் அவள் தகப்பன் தான் … ச்சீ … தகப்பன் மாதிரி … ரேவதியின் அம்மாவை காதலித்து திருமணம் செய்து செந்தமிழ் இருந்த கிராமத்திற்கு அழைத்து வந்தான் … குழந்தை பிறக்கும் வரை நன்கு மனைவியை அனுபவித்தவன் … குழந்தையை வைத்தே ரேவதி அம்மாவை மிரட்டி பெரிய பெரிய பண்ணையாட்களிடம் விலை பேசி … மனைவியை விலைமாது ஆக்கினான் … அவனை தட்டிக் கேட்ட அவனுடைய அம்மாவையும் அடக்கினான் …
சின்ன குழந்தையாய் இருந்த ரேவதியை அவன் அம்மாவின் பொறுப்பில் விட்டு விட்டு … மனைவியை அழைத்துக் கொண்டு நிறைய சம்பாதிக்கும் எண்ணத்தில் சென்னை கிளம்பினான் ரேவதியின் அப்பா …
ரேவதிக்கு படிப்பு ஏறவில்லை … ஆனால் சுறுசுறுப்பானவள் … நல்ல உழைப்பாளி … ரேவதியின் அம்மா பற்றி ஊருக்குள் அரசல் புரசலாக பேசிக் கொண்டாலும் அவள் கண்டு கொள்ள மாட்டாள் … நம்பவும் மாட்டாள் … ரேவதிக்கு இருக்கும் ஒரே தோழி செந்தமிழ் தான் …
காதலாய் வருவாள் 💞
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அப்பாடா, நல்ல வேளை அவளுக்கு எதுவும் ஆகல. கடவுளா பார்த்து சரவணனை அனுப்பி வச்சிட்டாங்க
ரேவதி, இனியன், சரவணன் பாண்ட் சூப்பர்…
அப்ப தமிழ் இனி ரேவதி வீட்டுல தான் வசிக்க போறாளா
சில சமயம் உறவுகள் தராத அன்பை ஆறுதலை உதவியை கூட நல்ல நண்பர்கள் தருவாங்க … இனியன் ரேவதி சரவணன் எல்லாரும் அப்படிதான் … தங்கள் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி சகி …
இப்பொழுது கூட அம்மா வந்தால் என்ன சொல்வது என்ற பயம் தான் அதிகம் உள்ளது மாறனிடம்.
அவள் வீட்டை விட்டு சென்று விட்டாலே, என்ன ஆயிற்றோ? தனது சொல்லினால் எத்தனை மன வேதனை பட்டிருப்பாளோ என்ற பதற்றம் சிறிதும் இல்லை.
எப்படியோ நல்ல நேரத்தினில் காப்பாற்றப்பட்டால் சரவணனால். இல்லையென்றால் என்ன விபரீதம் ஆகியிருக்கும்.
இந்த நிலையிலும் கூட தெளிவாக அழுத்தமாக அவன் பணத்தில் வந்தது வேண்டாம் என்று இருக்கும் தமிழின் செயல் அருமை.
ரேவதி போன்ற ஒரு நல்ல தோழியாவது அவள் வாழ்வில் கிடைத்தாலே.
ரேவதி செந்தமிழுக்கு கிடைத்த வரம் தான் … இளமாறனுக்கு செந்தமிழ் மேல் சொல்ல எந்த குறையும் இல்லை … அவன் எப்போதும் பணத்தை பற்றியே சொல்லி அவள் தன்மானத்தை தான் அதிகம் காயம் ஆக்குகிறான் …
தங்கள் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி சகி