Loading

செந்தமிழ் குளித்து விட்டு வெளியே சென்றாள் … அவள் முகமே அவள் அழுதிருந்ததை அவனுக்கு காட்டியது … இளமாறன் இன்னும் அப்படியே அமர்ந்திருந்தான் … நகத்தை கடித்துக் கொண்டே மெத்தையில் சிந்தியிருந்த அவள் உதிரத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் … கொஞ்ச நேரம் இருங்க டிபன் பண்றேன் சாப்பிட்டு போங்க … இதெல்லாம் நான் க்ளீன் பண்ணிடுவேன் என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்றவள் … வேகமாக உப்புமா செய்து சட்னியும் செய்து அவனுக்கு பரிமாறினாள் …

அவளும் சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்றாள் … கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க மெத்தையை சுத்தம் செய்து … பெட்ஷீட்டை அவர்கள் துணிகளை எல்லாம் துவைத்து காயப்போட்டு விட்டு மதியத்திற்கு சமைத்தாள் …

இளமாறன் அன்று வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்தான் … அவனுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை … பெண் துணையே வேண்டாம் என்று முடிவு செய்திருந்தவன் … 28 வயது வரை தன் ஆண்மையின் கண்ணியத்தை காப்பாற்றி வந்தவன் … தன் ஆண்மையை இழந்து அடக்கி வைத்திருந்த அத்தனையும் அவளிடம் காட்டியிருக்கிறேன் … அவள் கோபப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை … அவள் மன்னித்து விட்டாள் என்பது அவனுக்கு இன்னும் அதிகமாக வலித்தது …

நாம போய் இனியனை பார்த்துட்டு வரலாம் கிளம்பு என்று அவன் சொல்ல … அவளும் கிளம்பி அவனுடன் சென்றாள் … அவள் ஏதாவது செய்து கொள்வாளோ என்ற பயம் வேறு அவனுக்கு … அதனால் அவளையும் கூடவே அழைத்து சென்றான் … நண்பனிடம் ஒப்பந்த திருமணத்தை பற்றியும் … நேற்று நடந்ததை பற்றியும் சொல்லி என்ன செய்யலாம் என்று கேட்க தோன்றியது …

வா டா … வா மா … வாங்க என்ன திடீர்னு வந்திருக்கீங்க என்று இருவரையும் உள்ளே அழைத்தான் … டேய் வண்டி ஓட்ட தெரியாத மாதிரி இப்படியா ஓட்டி விழுந்து தொலைப்ப என்று செல்ல கோபத்துடன் இளமாறன் கேட்க … இல்லடா ஒரு வயசான பெரியவர் இடையில வந்துட்டார் … அவரை இடிக்க கூடாதுன்னு சைடா போனா அங்க மணல் இருந்தது போல சரிஞ்சு விழுந்துட்டேன் என்றான் இனியன் …

இனியன் தனியாக தான் அந்த வீட்டில் தங்கியிருக்கிறான் … ஒரு கிச்சன் … ஒரு ஹால் … ஒரு டைனிங் ஹால் … ஒரு படுக்கையறை … அறைக்குள்ளும் … ஹாலிலும் இரண்டு பாத்ரூம்கள் இருந்தன … உள்ளே நுழைந்ததும் ஹாலும் கிச்சனும் இருக்க அடுத்து டைனிங் ஹால் உள்ளே தான் படுக்கை அறை இருந்தது …

இளமாறனும் செந்தமிழும் போகும்போதே பால் … பழங்கள் … அவர்களுக்கு சாப்பிட பிரியாணி எல்லாம் வாங்கி கொண்டு சென்றிருந்தார்கள் …

செந்தமிழ் எல்லாவற்றையும் பாத்திரங்களில் மாற்றி எடுத்து வைத்து … இருவருக்கும் சாப்பாடு பரிமாறி விட்டு அவளும் சாப்பிட்டாள்… சாப்பிட்டு முடித்து அந்த பாத்திரங்களை கழுவி வைத்து கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருந்தாள் …

எதுக்குடா நிரஞ்சனாவுக்கு வாங்கின மோதிரத்தை செந்தமிழுக்கு கொடுத்த என்று இனியன் கேட்க … அதான் அவ இல்லைன்னு ஆகிருச்சே… அவளுக்கு தரல … சும்மா தான இருக்குன்னு செந்தமிழ் கிட்ட கொடுத்தேன் என்றான் இளமாறன் … லூசு மாதிரி பேசாதடா இது அந்த பொண்ணுக்கு தெரிஞ்சா எவ்வளவு மனசு கஷ்டப்படும் … அதை மாத்தி வேற ஏதாவது அவளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாம்ல என்று இனியன் கேட்க … எதுவா இருந்தா என்ன என் சம்பளத்துல தான வாங்கியிருக்கேன் … புதுசு தான … நிரஞ்சனா போட்டதை ஒண்ணும் தரலையே என்றான் இளமாறன் …

அப்போ அந்த போனும் நிரஞ்சனாக்காக வாங்கினது தானா என்று இனியன் கேட்க … ஆமா அவளுக்காக தான் ஆர்டர் பண்ணேன் … அவ தான் இல்லையே அதை வச்சுட்டு நான் என்ன பண்றது … அதான் செந்தமிழுக்கு கொடுத்தேன் என்று சொன்னான் இளமாறன் … வர வர நீ பண்றது எதும் சரியில்ல … அம்மாவையும் நீ தேவையில்லாம பேசுற … இங்க பாரு நிரஞ்சனாவை மனசுல வச்சுட்டு நீ அம்மா … செந்தமிழ் ரெண்டு பேரையும் இழந்துராத … ரெண்டு பேரும் உனக்கு வாழ்க்கையில கிடைச்ச பொக்கிஷம் என்று இனியன் சொல்லிக் கொண்டிருக்க அங்கு செந்தமிழ் வந்தாள் …

இருவருக்கும் சிரித்த முகமாய் அவள் காபி தர அவள் எதையும் கேட்கவில்லை என்று நினைத்துக் கொண்டார்கள் … ஆனால் செந்தமிழ் அவர்கள் பேசிய அத்தனையும் கேட்டு விட்டாள் … அமைதியாக இருந்த அவள் மனதிற்குள் எரிமலை வெடித்து கொண்டிருந்தது …

இளமாறன் நண்பனிடம் ஏதோ பேச வந்தால் … இனியன் வேறு ஏதோ பேசி விட்டான் … என்ன செய்வது என்று தெரியாமல் அவனும் செந்தமிழும் வீட்டிற்கு கிளம்பினார்கள் … இருந்த அலுப்பிற்கு இருவரும் தூங்கியும் போனார்கள் …

மறுநாள் காலையில் இருவரும் சாப்பிட்டு முடிக்க … அவன் பீரோவில் துணிகளை அடுக்கி கொண்டிருந்தாள் செந்தமிழ் … பீரோவின் லாக்கர் திறந்திருக்க … எதேச்சையாக அவள் கண்ணில் பட்டது ஒரு கிரீட்டிங் கார்டு … ஒரு வாடிய ரோஜாப்பூ … அந்த கிரீட்டிங் கார்டை பிரித்து படித்தாள் …

என் வாழ்வை 

இனிமையாக்க வந்த 

முதல் தேவதையும் நீ …

கடைசி தேவதையும் நீ … 

என் அன்பு காதலி நிரஞ்சனாவுக்காக … 

உன் இளமாறன் … 

இதை பார்த்ததும் அவள் மனதில் பொங்கி கொண்டிருந்த எரிமலை வெடித்து சிதறியது … ஏனோ அவன் அவளுக்கு சொந்தமானவன் இல்லை என்று தெரிந்தாலும் யாரோ ஒருத்திக்கு அவன் சொந்தம் என்று நினைத்து மனம் வலித்தது …

அவள் அப்படியே உறைந்து போய் நின்றிருக்க … அங்கு வந்த இளமாறன் வேகமாக வந்து வெடுக்கென அவள் கையில் இருந்ததை பிடுங்கி உள்ளே வைத்தான் … நிரஞ்சனா யாரு ?? என்று செந்தமிழ் கேட்க … யாரா இருந்தா உனக்கென்ன என்றான் …

அவங்களுக்கு வாங்கினதை எல்லாம் ஏன் என்கிட்ட கொடுக்கிறீங்க … அவங்க கிட்டயே கொடுக்க வேண்டியது தான என்று அவள் கோபமாக கேட்க … அவ வாங்கலைன்னு தான் உனக்கு குடுத்தேன் என்று அவனும் கோபமாக சொன்னான் …

அவன் கண்களில் நான் பார்த்த காதல் அத்தனையும் பொய்யா என்று நினைக்கையில் அவளுக்கு மூச்சு முட்டியது … அவள் வாழ்க்கை இவ்வளவு கேவலமாக இருக்கும் என்று அவள் நினைத்து பார்க்கவில்லை … அவள் கண் முன்னாடியே தன் காதல் சிதைந்து போகும் என்று அவள் நினைத்திருக்கவில்லை … என் வாழ்வில் நான் இளமாறனை பார்த்திருக்கவே கூடாது என்று நினைத்தாள் …

அப்போ அவங்க கிட்ட இருக்க முடியலைன்னு தான் என்கிட்ட இருந்தீங்களா … என்று தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டே விட்டாள் … ஆமா அவளை நினைச்சுட்டு தான் நான் உன்கூட படுத்தேன் போதுமா … ஏதோ நீ ஒழுங்கு மாதிரி பேசுற … நீயும் என்கிட்ட இருக்கிற காசுக்காக தான என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச என்று அவன் பேச அப்படியே மொத்தமாக நொறுங்கி போனாள் …

அவள் மீது அவனுக்கு காதல் இல்லை என்று சொன்னது கூட அவளுக்கு வலிக்கவில்லை … அவள் அவன் மீது வைத்த காதலை கொச்சைப்படுத்துகிறான் என்று நினைக்கையில் மனம் துடித்தது … இப்படியே நெஞ்சு வெடித்து செத்து விடமாட்டோமா என்று தோன்றியது…

நீ இங்க பொண்டாட்டியா நடிக்க வந்திருக்க … நீ ஒண்ணும் என் பொண்டாட்டி இல்ல … ஏதோ பொண்டாட்டி மாதிரி என்னை கேள்வியெல்லாம் கேட்டுட்டு இருக்க என்று அவன் இன்னும் கோபத்தில் கத்திக் கொண்டிருக்க … அவள் காதில் அதெல்லாம் விழவில்லை …

அப்படியே முகம் பொத்தி கதறி அழுதாள் … அவள் அழுகையில் அவன் மனமுடைந்து போனான் … தமிழ் என்று அவன் அவள் தோளை தொட … அவன் கையை தட்டி விட்டவள் பேசாமல் மெத்தையில் போய் படுத்துக் கொண்டாள் …

அவன் ஹாலில் அமர்ந்து லேப்டாப்பில் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான் … கொஞ்ச நேரம் கழித்து தமிழ் சாப்பிடுறதுக்கு ஏதாவது ஆர்டர் பண்ணட்டுமா என்று அறை வாசலில் நின்று கொண்டு இளமாறன் கேட்க … அவள் ஒன்றும் பேசாமல் எழுந்து கிச்சனுக்கு சென்றாள் … சமைத்தாள் … அவனுக்கு பரிமாறினாள் … ஆனால் அவள் சாப்பிடவில்லை…

மதியமும் அதே மாதிரி செய்தாள் … தமிழ் நீ ஏன் சாப்பிடல … நீயும் சாப்பிடு என்று அவன் சொல்ல … நீங்க எனக்கு புருஷனா நடிக்க தான் என்னை கூப்பிட்டு வந்தீங்க … இப்போ எதுக்கு புருஷன் மாதிரி அக்கறை காட்டுறீங்க என்று அவன் சொன்னதையே அவனுக்கு திரும்ப சொல்ல … அவன் அப்படியே அதிர்ந்து போனான் …

இரவு அவன் தூங்கி விட எழுந்தாள் … கண்ணாடியில் நின்று அவளை பார்த்தாள் … உள்ளாடைகள் உட்பட அவள் உடலில் இருந்த அத்தனையும் அவன் வாங்கி தந்தது … அவனுக்கு சொந்தமானது … அவன் மட்டும் எனக்கு சொந்தமில்லை என்று நினைத்தாள் … அவன் தீண்டிய இந்த உடலை எரித்து கொள்ளலாமா என்று கூட யோசித்தாள் …

அவள் போட்டிருந்த அத்தனையும் தாலியோடு சேர்த்து கழற்றி அங்கே வைத்து விட்டு அப்பா வீட்டில் இருந்து அவள் கொண்டு வந்த அவளுடைய உள்ளாடைகளையும் ஒரு பாவாடை தாவணியையும் எடுத்து போட்டு கொண்டாள் … என்றோ ஒருநாள் இந்த நிலை தனக்கு வரும் என்று நினைத்து அதை பத்திரமாக வைத்திருந்தாள்…

திரும்பி ஒருமுறை அவனை பார்த்தாள் … ஐ லவ் யூ இளா என்று மனதிற்குள் சொல்லி விட்டு … அவள் கட்டப் பையோடு வெளியே சென்றவள் தெருவில் இறங்கி நடந்தாள் … எங்கே போகிறோம் … வாழலாமா … சாகலாமா … யாரை தேடி போவது எதுவும் தெரியவில்லை… திக்கு தெரியாமல் நடந்தாள் … நடந்து கொண்டே இருந்தாள் …

செல்லும் பாதையோ … அவளின் பயணமோ அவளுக்கே தெரியவில்லை … அர்த்த ராத்திரியில் கண்களில் கண்ணீருடன் நடந்து செல்பவள் பெண்ணிற்காக அலையும் சில மனித மிருகங்களின் கண்ணில் பட்டு விட்டாள் … அவளை பின் தொடர்ந்தன அந்த மிருகங்கள் …

அவள் ஏதோ பிரச்சனையில் இருக்கிறாள் … தன்னிலையில் இல்லை என்பதை அவள் முகத்தை வைத்து … அவள் நடையை வைத்து கண்டு கொண்டார்கள் … ஆள் அரவமற்ற இருட்டு பகுதி வர அவளை அப்படியே வாயை பொத்தி தூக்கி கொண்டனர் மூவர்…

சட்டென சுயநினைவுக்கு வந்தவள் திமிறினாள் … அவளை ஏதோ ஓர் பாழடைந்த கட்டிடத்திற்குள் தூக்கி சென்றவர்கள் … கொஞ்சமும் தாமதிக்காமல் அவள் உடையில் கை வைத்தார்கள் … அவள் எழுந்து ஓட போக பிளவுஸ் அங்கங்கே கிழிந்தது … காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாமல் உடலில் கொஞ்சம் கூட தெம்பில்லை … இருந்தாலும் மானத்தை காப்பாற்ற போராடினாள் … எழுந்தாள் … ஓடினாள் … விழுந்தாள் … எழுந்து மறுபடியும் ஓடினாள் …

ஏதோ ஒரு கரம் அவள் தலைமுடியை பற்றி இழுத்து அவள் கன்னத்தில் ஓங்கி அறைய … அப்படியே சுருண்டு விழுந்தாள் … இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கிருக்கும் மனித மிருகங்களுக்கு இரையாக போகிறாள் …

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. நிரஞ்சனாவிற்கென வாங்கியவற்றை “சும்மா தானே இருக்கு” என்ற எண்ணத்தினில் தான் அவளுக்கு தந்தாயா மாறா?

    அவள் முதலும் கடைசியுமான தேவதையா?

    நிழல் தேவதையை எண்ணி, உன் வாழ்வின் நிஜமான இரு தேவதைகளையும் இழக்க போகின்றாய்.

    இனியன் நண்பனாக நல்ல அறிவுரை கூறுகின்றான், ஆனால் அதை கேட்க தான் அவன் நண்பனிற்கு மனதில்லை.

    தன் மீது காதல் இல்லையென்பதை கூட தாங்கி கொண்டால். ஆனால், தன் காதலையும் கொச்சைப்படுத்தியதை தாங்க இயலாமல் நீங்கி செல்கின்றாள்.

    என்றோ ஒருநாள் இந்த நிலைமை வரும் என எண்ணி அதனை பத்திரமாக வைத்து இருக்கின்றாளே! ♥️