
இங்க பாரும்மா கல்யாணமாகி ரெண்டு வருஷமா குழந்தை இல்ல… உன் மாமியாரும் புருஷனும் வேற கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்க … உன் புருஷன் உன்கிட்ட அன்யோன்யமா இருக்கிறதில்ல அப்படின்னு உன் ஃப்ரெண்ட் சொன்னதால தான் நான் உனக்கு இந்த மருந்து தரேன் … நாளைக்கு பிரச்சினைன்னு வந்தா என்னை நீ மாட்டி விடக்கூடாது என்றார் நர்ஸ் …
இது என்ன பண்ணும் … இதை சாப்பிடுறதனால அவருக்கு ஒண்ணும் பிரச்சனை ஆகாதே என்று செந்தமிழ் கேட்க … புருஷன் மேல அவ்ளோ பாசமா என்று சொல்லி சிரித்தவர் … இது போதை மருந்து இல்ல … இது ஆண்மையை வீரியமாக்குற மருந்து … இதனால ஒரு பிரச்சனையும் வராது என்று சொன்னவர் …
மென்சஸ்க்கு பிறகு எத்தனாவது நாள் ஒன்றாக இருக்க வேண்டும் … எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று சில அறிவுரைகளையும் அவர்களிடம் சொன்னார் …
இதெல்லாம் பண்ணா நீ ப்ரெக்னன்ட் ஆகிருவன்னு உறுதியா சொல்ல முடியாது … கடவுளை நம்பிக்கோ … அவர்தான் உன் வாழ்க்கையை காப்பாத்தனும் என்று சொல்லி இருவரையும் அனுப்பி விட்டார் …
பஸ்ஸில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்க செந்தமிழ் ஒருமாதிரியாக இருந்தாள் … என்னாச்சு என்று ரேவதி கேட்க … இதெல்லாம் பண்ணி தான் நான் அவர் கூட வாழணுமா … காதல் அன்பு இதெல்லாம் எனக்கு கிடைக்காதா … நான் என்ன தப்பு பண்ணினேன் … அவர் குழந்தைய ஏத்துப்பாரா தெரியல … எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு என்றாள்…
இப்போ கொஞ்சம் உன்கிட்ட நல்லா தான நடந்துக்கிறார் … சீக்கிரமே நீயும் கணவன் குழந்தைங்கன்னு சந்தோஷமா வாழ போற என்று ரேவதி சொல்ல … செந்தமிழ் விரக்தியாய் புன்னகைத்தாள் …
ஆமா நீ இனியன் அண்ணா கிட்ட உன் காதலை சொல்லிட்டியா என்று செந்தமிழ் கேட்க … அன்னைக்கு அம்மா பத்தி சொன்னேன் … அப்படியே ஓடிட்டான் … அவன் கொடுத்து வச்சது அவ்ளோதான் என்று சொல்லி சிரித்தாள் ரேவதி …
இனியன் அண்ணாவுக்கு ஏதோ ஆக்சிடென்ட் ஆகிடுச்சாம் இளா சொன்னாரு … அவரு வீட்ல ரெஸ்ட்ல தான் இருக்கார் போல என்று செந்தமிழ் சொன்னதும் ரேவதிக்கு மனம் பதறியது … சரி நான் போய் இனி யை பார்க்குறேன் … நீ குழந்தை பெத்துக்குற வழிய பாரு என்றாள் ரேவதி …
செந்தமிழ் வீட்டிற்கு சென்றாள் … இளமாறன் ஹாலில் லேப் டாப்புடன் அமர்ந்திருந்தான் … எங்க போயிருந்த என்று அவன் கேட்க … அதான் ரேவதி கூட ஹாஸ்பிடல் போறேன்னு சொல்லிட்டு போனேன்ல என்றாள் …
எதுக்கு ஹாஸ்பிடலுக்கு என்று அவன் கேட்க … என்ன சொல்லி சமாளிப்பது என்று யோசித்தவள் ரேவதிக்கு உடம்பு சரியில்ல … அவ துணைக்கு கூப்பிட்டா போனேன் என்றாள் …
அவள் கையில் போட்டிருந்த மோதிரத்தை பார்த்தவன் … உனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லல … மோதிரம் சைஸ் கரெக்ட்டா இருக்கா என்று கேட்க … முதலில் கேட்ட கேள்வியை கவனிக்காதவள் … அடுத்த கேள்விக்கு மட்டும் ஹ்ம்ம் கரெக்டா இருக்கு … எப்படி கரெக்டா வாங்கினீங்க என்று கேட்டாள் … அவளுக்கு பதில் சொல்ல தடுமாறியவன் எனக்கு ஒரு காபி போட்டு கொடு செந்தமிழ் என்று பேச்சை மாற்ற … அவள் கிச்சனுக்கு சென்றாள் …
ரேவதி இனியன் வீட்டிற்கு சென்று காலிங்பெல் அடித்தாள் … மூன்று முறை அடித்த பின்னரே கதவு திறந்தது … காலில் அடிபட்டு கட்டு போட்டிருக்க அவன் தாவி தாவி நடந்து வந்து கதவை திறக்க இவ்ளோ நேரமாகி விட்டது …
அவளை பார்த்து அதிர்ச்சியானவன் வா ரேவதி என்று அவளை உள்ளே அழைத்தான் … அவன் ஒரு காலை தூக்கி மெல்ல தாவி தாவி நடக்க … அவன் கையை எடுத்து அவள் தோளில் போட்டு கொண்டு அவனை தாங்கிக் கொண்டே நடந்தாள் …
அவனை மெத்தையில் அமர சொல்லி விட்டு அருகில் அமர்ந்து கொண்டாள் … என்னாச்சு என்று ரேவதி அவன் விழிகளை பார்த்து கேட்க … ஒரு சின்ன பைக் ஆக்சிடென்ட் என்றான் …
என்னது சின்ன ஆக்சிடென்ட் டா … இப்படி ஒரு கையையும் காலையும் உடைச்சு வச்சிருக்கீங்க … என்கிட்ட சொல்லணும்னு உங்களுக்கு தோணலைல … நான் உங்களுக்கு அவ்வளவு பிடிக்காதவளா போயிட்டேன்ல என்று அவள் குண்டு கண்களில் இருந்து நீர் சிந்திக் கொண்டிருக்க … அவன் ரேவதியையே பார்த்தான் …
அவன் பார்வைக்கு அர்த்தம் புரியாதவள் தலையை குனிந்து கொண்டாள் … என் அம்மா மாதிரி நானும் அப்படிதான்னு நினைச்சுட்டீங்களா இனி ?? ஏன் என்னை பார்க்க வரல … எனக்கு தெரியும் உங்களை காதலிக்கிறதுக்கு எனக்கு தகுதி இல்லன்னு என்று அவள் சொல்லி முடிக்க … இனியன் வேகமாக ரேவதியை அணைத்து அவள் இதழில் தன் இதழை பதித்திருந்தான் …
இதை எதிர்பார்க்காத பெண்ணவளோ தன் முட்டைக் கண்களை உருட்டி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் … அவளை விடுவித்தவன் குட்டிமா ஐ லவ் யூ டி … எனக்கு ஒண்ணுனா இவ்ளோ பதட்டப்படுற இதை விட என்னை காதலிக்க உனக்கு என்ன தகுதி வேணும் … அன்னைக்கு ஏதோ பதட்டத்துல … குழப்பத்துல அப்படியே வந்துட்டேன் … கொஞ்சம் நேரம் கழிச்சு உடனே உன்னை பார்க்க வரணும்னு கிளம்பி வரும் போது பைக் ஆக்சிடென்ட் ஆகிடுச்சு…
எனக்கு நீ யாரு … உன் வாழ்க்கை என்ன எதுவும் தெரிய வேணாம் … அன்னைக்கு கல்யாணத்துல பார்த்தேன்ல அந்த ரேவதி அவளை தான் நான் காதலிக்கிறேன் … நீ என்னோட குட்டிமா … இப்போ மட்டுமில்ல இந்த ஜென்மத்துல நான் உன்னை எப்பவும் சந்தேகப்பட மாட்டேன் என்றான் …
அப்படியே அவன் காதல் வார்த்தைகளில் பெண்ணவள் சொக்கிப் போனாள் … இனியன் அன்பானவன் என்று அவளுக்கு தெரியும் … இருந்தாலும் அவன் காதல் அவளை மெய்சிலிர்க்க வைத்தது … எதிர்பாராத முதல்முத்தம் ஏனோ தானோவென்று நிகழ்ந்து விட … இருவரும் காதலோடு தாபத்தோடு … பொறுமையாய் இருவரின் இதழை கவ்விக் கொண்டார்கள் … அவர்கள் இத்தனை நாட்களும் மனதில் மறைத்து வைத்திருந்த மொத்த காதலையும் முத்தமாக மாற்ற முயற்சி செய்தார்கள் …
சரி நான் கிளம்புறேன் என்று ரேவதி கிளம்ப … நீ என்னை பத்தி … என் குடும்பத்தை பத்தி எதுவுமே கேட்கலையே … ஏன் என்று இனியன் கேட்க … எனக்கு உங்களை பத்தி எல்லாம் தெரியும் என்றாள் … ஓ … இளமாறன் மூலமாக தெரிஞ்சுகிட்டியா என்று அவன் சிரிக்க … இல்ல எனக்கு அதுக்கு முன்னாடியே உங்களை பத்தி தெரியும் என்று … அவள் ஒரு கதை சொல்ல அவன் ஆச்சரியத்தில் விழிகள் விரித்தான் …
இளமாறனுக்கு அந்த மருந்தை தரலாமா வேண்டாமா ?? இதன் பின்விளைவுகள் என்ன ?? அவனுக்கு தெரிந்தால் என்னெல்லாம் பேசுவான்?? ஒருவேளை குழந்தை உண்டானால் என்னை ஏற்றுக் கொள்வானா ?? இப்படி பல சிந்தனைகளில் இருந்தால் செந்தமிழ்…
புனிதா தினமும் மருமகளுக்கு போன் செய்து நலம் விசாரித்தார் … அவர் காட்டும் அன்பினில் உருகி தான் போகிறாள் பாவையவள் … அவர் அன்புக்கு ஏதாவது செய்து விட வேண்டும் என்று மனது துடிக்க … இளமாறனை நினைத்தால் ஒரு பக்கம் பயம் … இன்னொரு பக்கம் தன் மேல் விருப்பமே இல்லாத ஆணவனுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வதா என்று யோசனை வேறு …
இத்தனை வருடங்களும் மகள் என்ற பெயரில் மட்டும் உறவிருக்க … அன்பு கிடைக்காமல் ஒரு வீட்டில் வாழ்ந்தேன் … இன்று மனைவி என்ற பெயரில் மட்டும் உறவிருக்க காதல் கிடைக்காமல் இந்த வீட்டில் வாழ்கிறேன் … இந்த வாழ்க்கை ஏன் எனக்கு மட்டும் கொடூரமாக இருக்கிறது என்று தினமும் அழுது அழுது தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தாள் …
ஒருவேளை இளமாறனுக்கு என்னை பிடிக்குமோ … ரேவதி சொன்ன மாதிரி அதை வெளிக்காட்ட தெரியவில்லையோ … என்னை பிடிக்கவில்லை என்றால் ஏன் எனக்கு போனும் … மோதிரமும் வாங்கி வந்து தர வேண்டும் … கொஞ்சமாய் என் மீது அவனுக்கும் அன்பு உள்ளது என்று யோசித்தாள்…
அந்த அன்பு போதும் நான் அவனுடன் வாழா விட்டாலும் பரவாயில்லை … அம்மாவின் சந்தோஷத்திற்காக … என் இளமாறனை சுற்றி இருக்கும் கேலிப்பார்வைகளை உடைப்பதற்காக என்று மனதில் நினைத்து ஒரு முடிவெடுத்தாள் … அந்த முடிவு அவள் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று அறியாமல் போனாள் …
செந்தமிழ் யோசனையிலேயே நாட்கள் கடந்திருக்க … ரேவதி அவளுக்கு அறிவுறுத்த அன்று இளமாறனுக்கு அந்த மருந்தை தரலாம் என்று முடிவு செய்திருந்தாள் … அவனுக்காக அவள் தயாராகி காத்திருந்தால் … அவனோ என்றைக்கும் இல்லாமல் அன்று மூக்கு முட்ட குடித்து விட்டு போதையோடு வீட்டிற்கு வந்தான் …
செந்தமிழ் அவனை சாப்பிட அழைக்க எனக்கு ஒண்ணும் வேணாம் … நீ சாப்பிட்டியா ?? நீ இன்னைக்கு அம்மா ரூம்ல தூங்கிக்கோ என்று சொல்லி விட்டு அறைக்கு தூங்க சென்றான் …
அவள் ரேவதியிடம் இதை சொல்ல … பரவாயில்ல ரொம்ப வசதியா போச்சு… நான் சொல்ற மாதிரி செய் என்றாள் ரேவதி …
ரேவதி சொன்னதால் ஏற்கனவே ஒரு ஜார்ஜெட் புடவையை லோ ஹிப்பில் கட்டி தலை நிறைய பூ வைத்து தன் கணவனுக்காக காத்திருந்தாள் செந்தமிழ் … ரேவதியும் தன்னுடன் வேலை செய்யும் திருமணமான பெண்களிடம் கேட்டு வந்து தான் செந்தமிழுக்கு எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள் … அவர்கள் சொல்லி தான் அவளுக்கும் அந்த நர்ஸ் மருந்து இதை பற்றி எல்லாம் தெரியும் …
இளமாறன் குடித்து விட்டு வர செய்வதறியாமல் திகைத்து போயிருந்தாள் செந்தமிழ் … பாலில் அந்த மருந்தை கலக்கி அவன் அறைக்கு எடுத்து சென்றாள் … ஏங்க … ஏங்க … என்று அவள் கொஞ்சம் சத்தமாய் அழைக்க கண் விழித்து பார்த்தவன் என்ன என்றான் …
நீங்க வெறும் வயித்துல படுத்தா அம்மா என்னை தான் திட்டுவாங்க … இந்த பாலை மட்டும் குடிச்சுட்டு தூங்குங்க என்று அவள் சொல்ல … அம்மா பேரை சொன்னதால் எழுந்து ஒரே மடக்கில் அதை குடித்து விட்டு படுத்துக் கொண்டான் …
என்ன ஒரு ரியாக்ஷனும் காணோம் என்று யோசித்துக் கொண்டே அங்கே நின்றிருந்தவள் அவன் அருகில் சென்று படுத்தாள் … அவன் அசந்து தூங்கிக் கொண்டிருக்க நேரம் தான் கழிந்தது … செய்த அத்தனை முயற்சிகளும் வீணாகி போனதே என்று பெருமூச்சு விட்டவள் நைட்டியை மாற்றலாம் என்று மெத்தையில் இருந்து இறங்கினாள்…
அவன் தூங்குகிறான் … அதனால் இங்கேயே மாற்றலாம் என்று அவள் சேலையை கழற்றி விட்டு பிளவுஸில் கை வைக்க … அவன் எழுந்து உட்கார்ந்து அவள் வெற்று இடையில் கைகளை வைத்திருந்தான் … திடுக்கிட்டு விழித்தவள் சிலிர்த்து போய் நின்றாள் …
அய்யோ இளா வலிக்குது என்னை விடுங்க என்று கம்பீரமான ஆணுக்குள் சிக்கிக் கொண்ட பெண்ணவள் … அவன் தந்த அழுத்தமும் வலிகளும் தாங்காது அவனை தள்ளி விட முடியாமல் கத்திக் கொண்டிருந்தாள் … அவனோ முழு மூச்சாக அவள் பெண்மையை எடுத்துக் கொண்டிருந்தான் …
காதலாய் வருவாள் 💞

