Loading

இவ தான் இனிமே இந்த கடைக்கே ஓனர் … என் செல்ல மகள் என்று செந்தமிழின் கன்னம் கிள்ளி முத்தம் வைத்தார் புனிதவதி … ஊர்ல இல்லாத மருமகளை கொண்டுட்டு வந்து நம்ம புனிதாக்காவுக்கு சந்தோஷத்தை பாரு … அப்போ இனிமே செந்தமிழ் எங்க சின்ன முதலாளியம்மா வா என்று புனிதா டெய்லர் கடையில் வேலை செய்பவர்கள் அவரிடம் கிண்டலாக கேட்க …

இல்ல அவ தான் பெரிய முதலாளியம்மா … நானே இங்க உங்களை மாதிரி சம்பளம் வாங்குறவ தான் என்று அவர் சொல்ல … செந்தமிழ் கண் கலங்கி விட்டாள் … புனிதாம்மா அப்படிலாம் சொல்லாதீங்க நான் கடைக்கே வரமாட்டேன் என்று அவரிடம் செல்லம் கொஞ்சினாள் … அய்யோ அப்புறம் யார் எங்களை வேலை வாங்குறது … யார் எங்களுக்கு சம்பளம் தருவாங்க என்று புனிதா சொல்ல சிரித்து விட்டாள் செந்தமிழ்…

அன்று இரவு வேலை முடிய ரொம்ப நேரமானதால் … பஸ் பிடித்து வேக வேகமாக வீட்டிற்கு அருகில் இருக்கும் ஸ்டாப்பில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் ரேவதி … ஆள் அரவமற்ற வீதி … அவளுடைய தெரு தான் இருந்தாலும் பயமாக இருந்தது … ஏதோ நிழல் அவளை பின்தொடர திரும்பி பார்க்காமல் வேக எட்டுக்களை வைத்தாள் … அந்த நிழல் அருகில் வர வர இன்னும் வேகமாக நடந்தாள் …

ரேவதி உன்னோட ஐடி கார்டை கீழ போட்டுட்ட என்ற பரிச்சயமான குரல் கேட்டு திரும்பினால் இனியன் நின்றிருந்தான் … வேகமாக இனியன் அருகில் சென்றவள் அவனை அணைத்துக் கொண்டாள் … அதில் அவன் தடுமாறி நின்றிருக்க … மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவன் வாயை திறப்பதற்குள் என்னை மன்னிச்சிருங்க இனி என்றாள் ரேவதி …

அவள் இன்னும் அவனை கட்டிக் கொண்டு அவன் மார்பில் சாய்ந்திருந்தாள் … அன்னைக்கு ஒரு பிரச்சனை … கொஞ்சம் டென்ஷன் … அதான் உங்களை அறைஞ்சுட்டேன் என்றவள் … உங்க மேல எந்த தப்பும் இல்ல … என் மேல தான் தப்பு என்று அவன் கையை எடுத்து அவள் தன் கன்னத்தில் அறைந்து கொள்ள … அவள் கட்டி பிடித்ததில் ஏதோ மாய உலகத்திற்கு சென்றவன் அப்போது தான் சுயநினைவுக்கு வந்து அவள் அடிப்பதை தடுத்தான் …

அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து உங்களை பார்த்து எத்தனை நாள் ஆச்சு … என் மேல கோபமா இனி … நீங்க என்னை பார்க்க வர்றதுக்கு இவ்ளோ நாள் ஆச்சா என்று செல்லமாய் அவனிடம் கோபித்து கொண்டாள் … என்னது இனி யா ?? என்னை செல்லமாக அழைக்கிறாளா … கனவில் ஏதும் இருக்கிறேனா தன்னை ஓங்கி அறைந்து பார்த்தான் … அய்யோ என்று வலியில் கத்தினான் …

என்னாச்சு இனி … என்று அவள் பதறி போய் கேட்க … நான் கனவுல இருக்கேனானு செக் பண்ணி பார்த்தேன் என்று சொல்லி சிரித்தான் … அப்போது தான் காதல் பித்து தெளிந்து அவளும் அவனிடம் இருந்து கொஞ்சம் விலகி நின்றாள் … வாங்க இனி … நம்ம வீட்டுக்கு போகலாம் என்று அவள் அழைக்க அவள் பின்னாடியே சென்றான் …

அவள் அங்கு தகரத்தில் சொருகியிருந்த சாவியை எடுத்து பூட்டியிருந்த வீட்டை திறந்தாள் … இரண்டு பத்துக்கு பத்து அறைகள் …

அதில் முன்னால் கிச்சனும் சின்ன இடமும் … உள்ளே ஒரு அறையும் அதோடு பாத்ரூமும் இருந்தது … இரண்டு அறைகளுக்கு நடுவே ஒரு பழைய சேலை திரையாக இருந்தது …

ஒரு நிமிஷம் இங்க உட்காருங்க இதோ வரேன் என்று ஒரு சேரில் அவனை கிச்சன் அருகே அமர சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் …

ஏன் டா இனியா ஒரு பொண்ணு கூப்பிட்டுச்சுன்னு இப்படி பல்லை இளிச்சுட்டு வந்து உட்கார்ந்திருக்கியே … அவ கூட தனியா இந்த வீட்டுக்குள்ள இருக்க உனக்கு வெட்கமா இல்ல … நான் கிளம்புறேன்னு சொல்லி கிளம்புவியா அதை விட்டுட்டு கீ கொடுத்த பொம்மை மாதிரி சுத்திட்டு இருக்க என்று அவன் மூளை அவனை கேள்வி கேட்க …

அவ என் குட்டிமா டா … அவ சொன்னா எங்க வேணும்னாலும் போவேன் … எங்க வேணும்னாலும் உட்காருவேன் … என்ன வேணும்னாலும் பண்ணுவேன் … அய்யோ இனி யாம் இனி … என் பேர் இவ்ளோ இனிமையா இருக்குன்னு எனக்கு இன்னைக்கு தான் டா தெரியும் என்று அவன் இதயம் சொல்லிக் கொண்டிருந்தது …

இப்படி மூளையும் இதயமும் பேசிக் கொண்டிருக்க … சோர்ந்து போய் கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தான் ஆணவன் … பத்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்தவள் … வாங்க இனி … உள்ள வாங்க என்று அந்த திரையை விலக்கி … அவனை அந்த அறைக்கு உள்ளே அழைத்து செல்ல … அவன் லேசாக திடுக்கிட்டான் …

இனி … இவங்க என்னோட அம்மா பாக்கியம் என்று ரேவதி அவரை அறிமுகப்படுத்த … பக்கவாதம் வந்து செயல்படாமல் இருக்கும் கையையும் … நன்றாக இருக்கும் கையையும் சேர்த்து வைத்து வணக்கம் பா என்று சொன்னார் அவர் … அய்யோ அம்மா எதுக்கு கஷ்டப்படுறீங்க என்று வேகமாக சென்று அவர் கையை பிடித்தவன் அங்கே ஒரு சேரை இழுத்து அமர்ந்து கொண்டான் …

நீங்க இங்க இருங்க நான் காபி போட்டு வரேன் என்று ரேவதி சென்று விட … அம்மா நான் இனியன் என்று அவன் சொல்ல … அவங்களுக்கு தெரியும் இனி … என்று கிச்சனில் இருந்து சொன்னாள் ரேவதி …

என்ன தெரியும் என்று மனதில் நினைத்து அதிர்ச்சியாக அவரை பார்த்தான் … தெரியும்… பா … நீங்…க இள… மாறன்… ஃப்ரெ…ண்ட் … ரேவதி…க்கு … உதவி பண்ணீங்…களாம் … செந்…தமிழ்… நல்…லா இருக்…காளா … என்று திக்கி திணறி அவர் பேச …

அம்மா அவரை பயமுறுத்தாத என்று ரெண்டு டம்ளர்களோடு வந்தாள் ரேவதி … இனி … பால் இல்ல வரக்காபி தான் போட்டிருக்கேன் என்று சொன்னவள் … அவனிடம் ஒரு டம்ளரை தந்து விட்டு அவள் அம்மாவை தூக்கி அவருக்கு காபி கொடுத்தாள் …

அவரை படுக்க வைத்து விட்டு அவள் சென்று இன்னொரு டம்ளர் காபியோடு வந்தாள் … உட்கார்ந்து பொறுமையாக குடித்தவள் என்ன இனி … காபி எப்படி இருக்குன்னு சொல்லவே இல்ல என்று கேட்க … என் பெயரை மாதிரியே இனிப்பா இருக்கு என்றான் இனியன் …

அம்மா டயாப்பர்ல பாத்ரூம் போயிருப்பாங்க … அதான் அவங்களை வாஷ் பண்ணி டயாப்பர் மாத்திட்டு உங்களை கூப்பிட்டேன் என்று அவள் சொல்ல … அவன் ஒன்றும் பேசாமல் அவள் கண்களையே பார்த்தான் … முட்டைக் கண்ணி கண்ணை உருட்டுறா என்று மனதிற்குள் நினைத்தான் …

சாப்பிட்டீங்களா இனி … ஏதாச்சும் சமைக்கட்டுமா என்று அவள் கேட்க… அப்போது தான் நேரம் போவது தெரியாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்து… சரி ரேவதி நான் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு… அம்மா நான் போயிட்டு வரேன் என்று அவரிடமும் சொல்லி விட்டு கிளம்பினான் …

கொஞ்ச நேரம் கழித்து யாரோ கதவை தட்ட திகிலோடு கதவை திறந்தவள் … என்ன இனி … நீங்களா நான் பயந்தே போயிட்டேன் என்றாள் … ரேவதி நீ சமைக்க வேணாம் … இந்தா அம்மாவை சாப்பிட வச்சுட்டு நீயும் சாப்பிடு என்று ஹோட்டலில் வாங்கிய பார்சலை அவளிடம் தந்தான் …

கதவை நல்லா பூட்டிக்கோ … இந்த ஏரியாவே ஒரு மாதிரி இருக்கு … உன் போன் நம்பர் குடு … என் நம்பர் நோட் பண்ணிக்கோ … ஏதாவது எமர்ஜென்சினா போன் போடு என்று இனியன் சொல்ல … உங்க நம்பர் என்கிட்ட இருக்கு … நீங்க தான் அன்னைக்கு தந்தீங்களே இனி … நான் கண்டிப்பா உங்களுக்கு தான் கூப்பிடுவேன் என்று ரேவதி சொல்லி விட்டு கதவை மூட …

அப்படியே படபடத்து கொண்டிருந்த தன் இதயத்தை தொட்டு தடவினான் இனியன் … அய்யோ என்னடா இது … லவ்வா என்னன்னு தெரியாமலே அவளை பார்க்க சுத்திட்டு இருந்தேன்… அவ என்னை லவ் பண்றா தான் போல … குட்டிமா ஐ லவ் யூ டி என்று காற்றில் அவள் வீட்டை பார்த்து பறக்கும் முத்தம் இட்டுக் கொண்டே நடந்தான் இனியன் …

இனியன் ரேவதி இருவரும் செல்போன் நம்பர்களை ஏற்கனவே பரிமாறிக் கொண்டிருந்தாலும் … ஏதோ தயக்கத்தில் இருவரும் அழைத்து பேசிக் கொள்ளவில்லை… செல்லமாய் மோதலில் ஆரம்பித்த…  இருவருக்குள்ளும் சொல்லாமல் இருந்த காதல் … அவர்கள் மீண்டும் சந்தித்து கொண்டதும் தங்களை மீறி வெளிப்பட ஆரம்பித்து விட்டது …

ரேவதி அவனை இனி என்று அழைத்ததும் … அவனை பார்த்து அணைத்து கொண்டதும் … செல்லம் கொஞ்சி பேசியதும் … வீட்டிற்கு அழைத்து சென்றதும் ஆச்சரியம் என்றால் … இனியன் அவள் என்ன சொன்னாலும் கேட்டு அதன்படி நடப்பதும் … அவளுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பதும் … அவள் பாதுகாப்பிற்காக யோசிப்பதும் இன்னும் அதிர்ச்சி தான் … இவர்கள் வாழ்வில் இன்னும் நிறைய இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கிறது … நாம போய் அந்த ஜோடியை பார்க்கலாம் …

என்ன சின்ன முதலாளி ஒரு வாரமா கடை பக்கமே காணோம் என்று புனிதா டெய்லர் கடையில் வேலை செய்யும் ஒரு அக்கா கேட்க … எனக்கு வயித்து வலி … அதான் வரல என்றாள் செந்தமிழ் … வீட்டுக்கு தூரமா ஆகிட்டியா என்று அவர் கேட்க … ஹ்ம்ம் ஆமா க்கா என்றாள் …

கல்யாணம் ஆகி எத்தனை மாசம் ஆகுது உங்களுக்கு என்று அவர் அருகில் இருந்த இன்னொரு அக்கா கேட்க … 3 மாசம் ஆகுது என்றாள் … உனக்கு கரெக்ட்டா தூரம் ஆகுதா இல்ல லேட்டா தூரம் ஆகுதா என்று அவர் கேட்க … புரியாமல் விழித்தவள்… அப்புறம் புரிய … அக்கா எனக்கு கரெக்ட்டா மென்ஸஸ் வந்திடும் … நான் என்னோட வீட்ல இருக்கும் போது கூட ஒவ்வொரு மாசமும் கரெக்ட்டா அதே தேதியில் தான் மென்சஸ் ஆவேன் என்று குழந்தையாய் அவள் சிரித்துக் கொண்டே சொல்ல …

என்ன புனிதாக்கா உன் மருமக இப்படி சொல்லுது … பாவம் ஒண்ணும் தெரியாத பிள்ள போல … இன்னும் கர்ப்பம் ஆகலைன்னா நாள் கடத்தாம ஹாஸ்பிடல் கூப்பிட்டு போக்கா … நம்ம இளமாறனையும் கூப்பிட்டு போ … ஒருவேளை பிரச்சனை நம்ம தம்பி கிட்ட கூட இருக்கலாம்ல என்று சொல்ல புனிதாவுக்கும் செந்தமிழுக்கும் இதயத்தில் சுருக் என்றது …

பதறி போன செந்தமிழ் … அக்கா இளா மாமா எனக்கு சின்ன வயசா இருக்கதால என் உடம்பு தாங்காது … அதனால குழந்தை மெதுவா பெத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க … அதுக்குள்ள நீங்க ஹாஸ்பிடல் வியாதின்னு என் மாமாவை ஒன்னும் சொல்லாதீங்க என்று அவள் கொஞ்சம் கோபமாய் அதே சமயம் செல்லமாய் சொல்ல …

இதென்னாடி உன் வயசுல நான்லாம் 3 பிள்ளை பெத்துட்டேன் … புதுசா சொல்றவ … என்று அங்கலாய்த்தார் அவர் … அப்படி இருக்காதால தான் நீங்க குண்டா ஆகிட்டீங்க … உங்க உடம்புல அங்கங்க சதையா இருக்கு…

தமிழ் நீ இதே மாதிரியே எப்பவும் அழகா இருக்கணும் … நம்ம ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கலாம் … ஆனா குழந்தை மட்டும் லேட்டா பெத்துக்கலாம் அப்படின்னு என் இளா மாமா சொன்னாங்க … என் தங்கத்தை அப்படி எல்லாம் பேசாதீங்க என்று செந்தமிழ் சொல்ல எல்லா பெண்களும் வாயை பொத்தி கொண்டார்கள் …

எதை பேசினால் பெண்கள் வாயை மூடுவார்கள் என்று தெரிந்து சாமர்த்தியமாக செந்தமிழ் பேசி எல்லோர் வாயையும் அடைத்து விட புனிதவதி நெகிழ்ந்து போனார் …

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்