Loading

“என்ன கல்யாணமா…. சாரி மேம் நீங்க எதோ தப்பா புரிஞ்சிட்டு பேசறீங்க” என்ன நடக்கிறது என்று தெரியாமல்  விழித்து கொண்டே கேட்க,

 

“புரியாமல் இல்ல எல்லாமே தெரிஞ்சு தான் கேட்கறேன்.  ரொம்ப எல்லாம் இல்ல இரண்டு வருடம் எனக்கு ஹஸ்பெண்ட்டா இருந்தா போதும்” என்று சாதாரணமாக சொல்ல

 

“என்னால முடியாது மேடம். எதோ படம் சம்மந்தமா பேச கூப்பிடுறீங்கனு தான் வந்தேன். எனக்கு உங்களை கல்யாணம் பண்ற ஐடியா எல்லாம் இல்லை. எனக்கு உங்க படமே வேண்டாம். நான் கிளம்பறேன்” என்று எழுந்து கொள்ள, 

 

“உட்காருங்க மிஸ்டர்…  படம் தான் வேண்டாம்னு சொல்றீங்க…  அம்மாவும் வேண்டாமா. இன்றைக்கு ஷூட் போகும் காதலி ஜெனியும் வேண்டாமா” என்று மோகித்ரா நேத்ரனை பார்க்க, 

 

அவன் போனில் விபியின் அம்மா மற்றும் ஜெனி இருவர் பின்னும் நிற்கும் தங்கள் ஆட்களை காட்ட, 

 

ஒரு நிமிடம் பயந்தாலும் பின் “என்ன மேடம் பயமுறுத்தி என்னை கல்யாணம் பண்ணி என்ன சாதிக்க போறீங்க.  இதுக்கு முன்ன நம்ம இரண்டு பேரும் சந்தித்தது கூட இல்ல. என்னால எதாவது காரியம் ஆக வேண்டியது இருக்கா” நிதானமாக கேட்க,

 

“ம்ம்ம்… அதை சொல்ற அளவுக்கு நீீ எனக்கு வேண்டியவன் இல்லை.  இப்ப கல்யாணம் நடக்கலைனா உன்னோட லவ்வர் உயிருக்கு நான் பொறுப்பு இல்ல.  அதோட உன்னோட அம்மா பாவம் ஏற்கனவே உடம்பு முடியாமல் இருக்காங்க பார்த்துக்கோ” என்று அவனையே கூர்மையாக பார்த்துக்கொண்டே சொல்ல,

 

என்ன செய்வது என்றே புரியவில்லை. பிரச்சனைகளை கையாளுவது ஒரு தனி திறமை.  சிலர் பெரிய பெரிய பிரச்சினையை கூட அசால்ட்டாக சமாளிப்பார்கள். ஆனால் சிலர் சிறிய பிரச்சினையை கூட பெரிதாக மாற்றி கொள்வர். 

 

விபிக்கு பிரச்சினையை சாமளிக்க சுத்தமாக தெரியவில்லை. என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு கண் முன்னே இரு பெண்களின் உயிர் தான் வந்தது. 

 

“சரி மேடம் நீங்க சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனால் இது யாருக்கும் தெரிய கூடாது.  முக்கியமா மீடியாவிற்கு. ஜெனிக்கோ இல்ல அம்மாக்கோ இந்த விசயம் தெரிந்தா ரொம்ப பெரிய பிரச்சினை தான் ஆகும். கண்டிப்பா இரண்டு வருஷத்தில் என்னை விட்டுடுவீங்க தானே” என என்று பாவமாக கேட்க, அவனை பார்த்த நேத்ரன் மனதில் ‘பாவமா தான் இருக்கு. ஆனா மேடம் நிலைமையும் நினைச்சு பார்த்த அவங்களும் பாவம்’ என்று மாறி மாறி பார்த்துக்கொண்டு இருக்க,

 

இவன் சம்மதித்து சிறிய மனநிறைவுடன் மோகித்ரா  “தட்ஸ் குட்.  எனக்கும் இப்படி பண்ணுவதில் உடன்பாடி இல்லை தான் பட் என் நிலைமை இப்ப இப்படி  இருக்கு.  இதனால் உங்களுக்கும்  உங்களை  சார்ந்தவங்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது. நானே உங்களுக்கும் உங்கள் லவ்வர் ஜெனிக்கும் மேரேஜ் பண்ணி வைக்கிறேன். ஆனால் இன்றைக்கே கல்யாணம் நடக்கனும்” என

 

“மேடம் இது டிராமா கல்யாணம் தானே அதுக்கு எதுக்கு உண்மையா கல்யாணம் பண்ணிட்டு.  என்னால  என் ஜெனிக்கு துரோகம் பண்ண முடியாது” என்றவன் இரண்டு மனநிலையில் தான் இருக்கிறான். அவனின் வளர்ப்பு என்ன நடந்தாலும் எதற்கும் துரோகம் செய்ய முடியாது. கல்யாணம் நடந்தால் இவளுக்கு உண்மையாக இருக்க தான் இவனின் மனம் என்னும்.

 

“இங்க பாருங்க நம்ம உண்மையான கல்யாணம் எல்லாம் பண்ணல பட் எனக்கு கொஞ்சம் லீகல் வேலை இருக்கு. உங்க சிக்னேச்சர்  மட்டும் போதும்.  கூடவே நம்ம ஒன்றாக நிற்கிற மாதிரி ஒரு ஃபோட்டோ அவ்வளவு தான்.  இதுக்கும் நீங்க நடிக்க போகிற படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் அப்பா போட்ட டம்ஸ்யே போதும்.  ஈவினிங் ரெடியாக  இருங்க.  உங்களுக்கு ஹோட்டல் ரூம் புக் பண்ணிருக்கு” என்று அத்துடன் பேச்சு முடிந்தது என்று அவள் அவளது வேலையை பார்க்க தொடங்கினாள். 

 

நேத்ரன் உதவியுடன் ஹோட்டல் ரூமிற்கு வந்தவனது மனமோ ‘தப்பு பண்றோமோ…. அவங்க சொன்னதுக்கு எப்படி நான் ஒத்துக்கிட்டேன். முடியாதுனு நான் ஸ்டாங்கா சொல்லி இருந்தா அவங்களால என்ன பண்ணி இருக்க முடியும்… இப்படி  பைத்தியம் மாதிரி ஒத்துக்கிட்டேனே’ என்று புலம்பி கொண்டு பையை திறக்க அதில் இருந்த பொருள் அவனை பார்த்து சிரித்தது.  எவ்வளவு ஆசையாக அதை அவன் பையில் எடுத்து வைத்தான் என்று அவன் மட்டுமே அறிந்த உண்மை.

 

‘சிறிது நேரம் தூங்கலாம்னு பார்த்தா தூக்ககம் கூட வர மாட்டேன்னு அடம்பிடிக்குதே’  என்று கதறிக் கொண்டு மாலை வெயிலின் வெப்பத்தை ஹோட்டல் பால்கனியில் இருந்து அனுபவிக்க, ரூம் தட்டப்படும் ஒலி கேட்டு

 

‘நம்மல நிம்மதியா கஷ்டப்பட கூட விட மாட்டாங்க போல’ என்று கதவை திறக்க எதிரே மோகித்ராவை கண்டு முதலில் தடுமாறினாலும் பின்,   “வாங்க மேம்” என்று ஒருவாறாக அவளை அழைக்க,

 

“இன்னும் ரெடியாகலையா.  அப்பவே சொன்னேன் தானே” என்ற மோகித்ராவை பார்த்த விபி, 

 

“எனக்கு சில கண்டிஷன் இருக்கு மேம் அதை சொல்ல தான் காத்திருக்கேன்” என்று அவளின் பதிலுக்காக காத்திருக்க,

 

“கண்டிஷனா…… என்ன” என்று முறைத்து கொண்டு கேட்க, 

 

சொல்ல போற விசயத்தால் என்ன பின் விளைவு வரும் என்ற பயத்தோடு  “நீங்க சொன்னா மாதிரி இது அக்ரிமெண்ட் மேரேஜ் தான். பட் என்ன தான் அக்ரிமெண்டா இருந்தாலும் நீங்க என் வொய்ஃப் ஆகிடுவீங்க…” என்று இழுக்க

 

“ஸோ” என்று மேலும் முறைத்து கொண்டு மோகித்ரா பார்க்க, 

 

“நான் என்ன சொல்ல வந்தேன்னா. இரண்டு வருசமோ மூன்று வருசமோ இந்த அக்ரிமெண்ட் வெல்லிடா இருக்கிற வரை நான் உங்களுக்கு லாயலா இருப்பேன். அதே மாதிரி நீங்களும் இருந்தா நல்லா இருக்கும். தென்….” என்று தயக்கமாக தன் கையில் இருப்பதை காட்ட, 

 

முதலில் எதோ வில்லங்கமாக சொல்ல போகிறான் என்ற கோபத்தில் இருந்தவள் ‘இது தானா’ என்று நினைக்கும் போதே எதையோ காட்ட, 

 

“என்ன இது” என்று மோகி கேட்க, 

எச்சில் முழுங்கி விட்டு “மெட்டி மேம்…. எங்க வழக்கப்படி கல்யாணம் ஆன பெண்கள் போடுவாங்க” என

 

“அதுக்கு நான் என்ன பண்றது… என்னால இதை எல்லாம் போட முடியாது” என

 

“நான் உங்களை போட சொல்லலை மேம். இது என் அம்மாவோடது. உன்னை கட்டிக்க போகிற பொண்ணு கிட்ட கொடுக்க சொல்லி என் கிட்ட கொடுத்தாங்க.  எப்படி பார்த்தாலும் இப்ப நீங்க தானே நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு. நமக்கு லீகலா டிவோர்ஸ் ஆகிற வரை இதை நீங்களே வெச்சிக்கோங்க.  அதுக்கு அப்புறமா என் கிட்ட தாங்க. என் அம்மாக்கு நான் கொடுத்த வாக்கு.  ப்ளீஸ் மேடம்” என்றான். இதை ஜெனியிடம் கொடுக்க அவ்வளவு ஆசையாக எடுத்து வைத்தான். 

 

“சரி கொடுங்க பேக் லாக்கரில் வைக்க சொல்றேன். எல்லா நேரமும் இப்படியே அம்மா சொன்னாங்க தாத்தா சொன்னாங்கனு இருக்காதீங்க  உங்க வாழ்க்கையும் பாருங்க” என்று மெட்டியை வாங்கி கொண்டாள். 

 

கொடுத்தவனுக்கும் தெரியாது வாங்கியவளுக்கும் தெரியாது இந்த மெட்டி தான் இருவரது உறவை இணைக்கும் பாலம் என்று.

 

எவ்வளவு அழகாக, ஆழமான பந்தமாக இருந்தாலும் காதல் இல்லாமல் போனால் ஒன்றாக இருந்தாலும் அவர்களுக்காக வாழ மாட்டார்கள். காதல் ஒருவரை  அவர்களாக வாழ கற்றுக்கொடுக்கும். சுயநலமாக முடிவு எடுக்க வைக்கும். சுயநலத்திலும் பொதுநலத்தை கற்று கொடுக்கும்.

தொடரட்டும் 

நிலானி 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்