Loading

“சரி இத ஏன் என் கிட்ட கொண்டு வந்து காட்டுற? என் மேல திடீர் அக்கறையா?” என்று ரூபிணி கேட்டாள்.

“சீட்டிங் பத்தி நேரா வீட்டுக்கே வந்து எக்ஸ்போஸ் பண்ணுறியே.. அக்கறை பலம்மா இருக்கே?”

“அக்கறையாவது மண்ணாங்கட்டியாவது? எனக்கு உன்னை இப்பவும் பிடிக்காது இனிமேலும் பிடிக்காது. உன் மேல அக்கறைப்பட்டு நான் என்ன செய்ய போறேன்?” என்று உதயா எரிச்சலாக பேசினான்.

“அப்புறம் எதுக்கு வந்த?” என்று கேட்டவள் அவன் பதில் சொல்லும் முன்பே, “ஒரு வேளை நான் தான் இவன் கிட்ட சொல்லி உன் கேர்ள் ஃப்ரண்ட பிரிக்க சொன்னேனு நினைச்சியோ?” என்று கேட்டு வைத்தாள்.

“ஆமா” என்று மறைக்காமல் ஒப்புக் கொண்டான்.

“ஹவ் சீப்?” என்று கேவலமாக ஒரு பார்வை பார்த்தாள்.

“ரியலி? நான் தான் மெடோனா கிட்ட சொல்லி உன் பாய்ஃப்ரண்ட பிரிச்சேன்னு நீ நினைக்கவே இல்லனு சொல்லு பார்ப்போம்” என்று கேட்டு உதயா முறைக்க, ரூபிணி சலிப்பாக வேறு பக்கம் பார்த்தாள்.

அப்படி நினைத்தாள் தான். கோபத்தில் ஒரு வேளை அவனது காதலியை பற்றி பேசியதற்கு அவளையே அனுப்பி தன் காதலனை பிரித்து விட்டானோ? என்று நினைத்தாள். ஆனால் அப்படி இருக்க முடியாது என்றும் புரிந்தது. உதயா நிச்சயமாக மெடோனாவை காதலிக்கிறான். இல்லா விட்டால் அன்று பார்ட்டியில் அவளுக்காக அவ்வளவு பேச மாட்டான் என்று மனதை மாற்றிக் கொண்டாள்.

“வெல்…? யா.. முதல்ல அப்படி தான் நினைச்சேன்” என்று கையை விரித்தாள்.

“அப்ப நான் நினைச்சத மட்டும் பெரிய தப்பு மாதிரி பேசுற?” என்று முறைத்தான்.

“ஏன்னா நீ செய்வ.. என்னை பழிவாங்குறதுக்காக என் காண்ட்ராக்ட கேன்சல் பண்ண வச்சல?” என்று சமாளித்தாள்.

“அது ரிவேன்ஜ். நீ என் கார உடைச்சதுக்கு”

“அதுவும் ரிவேன்ஜ் தான். ஆல்மோஸ்ட் உன்னால என் கரியர் போயிருக்கும்”

“அதுக்கு முன்னாடி நீ என்னை கொல்ல பார்த்த”

“அது ஆக்ஸிடெண்ட்”

“நான் நம்ப மாட்டேன்”

“நீ…”

“ஓகே சட் அப்”

“யூ சட் அப்” என்று ரூபிணி எகிறினாள்.

அவள் பதிலுக்கு பதில் பேசிய கோபத்தில் உதயா நாற்காலியை உதைத்தான்.

“ஏய் என் வீட்டு பொருள உடைச்ச? அவ்வளவு தான்” என்று விரல் நீட்டி எச்சரித்தாள்‌

“ச்சே.. சரியான இரிட்டேட்டிங் இடியட்”

“நீ சரியான அன்னோயிங் அரகண்ட்”

“ஜஸ்ட் சட் அப்… வந்த விசயத்த பேச விடு”

“பேசித்தொலை.. எதுக்கு வந்தனு தான் நானும் கேட்குறேன்”

அவளும் கோபமாக பேச, உதயா நீண்ட மூச்செடுத்தான்.

“ஃபைன். இவங்க ரெண்டு பேரும் நம்மல ஏமாத்திருக்காங்க. நீ பண்ணியா இல்லையானு கண்ஃபார்ம் பண்ணிக்க தான் வந்தேன். நீயும் ஏமாந்துருக்க.. சோ.. நான் இவங்கள சும்மா விட மாட்டேன்.”

“என்ன பண்ண போற?”

“இவங்கள மொத்தமா உடைக்கனும்.”

“என்னை உடைக்க பார்த்தியே.. அப்படியா?”

“உன்னை உடைக்க எனக்கு ஒரு நாள் போதும் ரூபிணி. ஆனாலும் என் என்டர்டெயின்மண்ட் போயிடக்கூடாதுனு உன்னை விட்டு வச்சுருக்கேன்.” என்று உதயா சொல்ல, ரூபிணிக்கு சுள்ளென ஏறியது.

“யூ…”

“கமான்.. என்ன பண்ணிடுவ?” என்று நக்கலாக கேட்டான்.

ரூபிணியின் கண்ணில் சிதறிக்கிடந்த படங்கள் விழுந்தது.

“இதே ஃபோட்டோஸ காட்டி, உன் கேர்ள் ஃப்ரண்ட வச்சு என் வாழ்க்கைய அழிச்சுட்டனு நியூஸ் கொடுத்தா உன் மொத்த பிஸ்னஸும் க்ளோஸ் பார்க்குறியா?” என்று கேட்டு வைத்தாள்.

“சில்லி கேர்ள்.. அதையே நானும் சொல்லலாம். உன் பாய் ஃப்ரண்ட விட்டு, நீ என் காதல பிரிச்சனு பேச ஆயிரம் பேர நான் இறக்குவேன். யாரு ஜெயிக்கிறானு பார்க்கலாமா? எனக்கு மாடலிங்ல கேமரா முன்னாடி நிக்கிற வேலை இல்ல. உனக்கு? உன் கரியர் என்னாகும் தெரியுமா?”

அவளது கோபம் உட்சந்தலையை தொட்டாலும், அறிவும் வேலை செய்தது. அவனது பலத்திற்கு அவளால் போராட முடியாது தான். அவளது வாழ்வு ஒரே ஒரு பிரச்சனையில் கேள்விக்குறியாகலாம்.

இரண்டு நொடி அவள் அமைதியாக இருக்க, அதுவே அவனுக்கு திருப்தியாக இருந்தது.

“இப்ப என்னை பேச விடுவ தான?”

“சொல்லு அதுக்கு தான வந்த?”

“இவங்கள அழிக்கனும். நீயும் நானும் இவங்க வாழ்க்கையில இல்லனா இவங்க ரெண்டு பேருமே ஒரு செல்லாக்காசு”

“சோ?”

“இவன பிரேக் அப் பண்ணு”

“நீ?”

“நான் எந்த பொண்ணு கூட டேட்டிங்ல இருக்கேன்னு மீடியாவுக்கு தெரியாது. இவள நானே என் காதலினு யாருக்கும் அறிமுகம் கூட பண்ணது இல்ல.”

“அப்ப பார்ட்டில என்ன சொன்ன?”

“ஜஸ்ட் அவளுக்கும் மாடலிங் ஆசை இருந்ததுனு கூட்டிட்டு வந்தேன். நான் பிரேக் அப் பண்ணாலும் இல்லனாலும் மீடியா பெருசா கண்டுக்காது”

“அப்ப அவள நீ லவ்வே பண்ணலயா?”

“இப்ப அது முக்கியமில்ல. நான் அவள கண்டு பிடிச்ச மாதிரி காட்டிக்க மாட்டேன். நீ அவன பிரேக் அப் பண்ணு”

“பண்ணிட்டு?”

“அவன தனியாளாக்கு ரெண்டு பேருக்கும் சேர்த்து சமாதி கட்டுறேன்”

“டேய்… கொல்ல போறியா?” என்று பதறினாள்.

“இடியட்னு இதுக்கு தான் உன்னை சொல்லுறது” என்று சலித்தான்.

“நீ தான சமாதின?”

“என்னால முடியல ரூபிணி.. இவங்க ரெண்டு பேரும் அடுத்து நம்ம கண்ணுல படமுடியாத தூரம் அனுப்பிடுவேன்.”

“இப்பவும் நீ அப்படித்தான் பேசுற”

“இவளோட…”

அவன் தலையில் அடித்துக் கொள்ள, ரூபிணி உதட்டை சுளித்தாள்

“சரி சரி.. என்னமோ பண்ணித்தொலை.. கொலை கேஸாகாம இருந்தா சரி” என்று இறங்கி வந்தாள்.

“நான் ஜெயிலுக்கு போனா நீ சந்தோசப்பட மாட்டியாக்கும்?” என்று நக்கலாக கேட்டு வைத்தான்.

“கண்டிப்பா சந்தோசப்படுவேன் ஆனா என் சம்பந்தப்பட்ட விசயம் இல்லாம நீ போகனும். நான் இதுல மாட்ட கூடாது பாரு?” என்று தோளை குலுக்கினாள்.

“விவரமா பேசுற.. சொன்னத செய்” என்றவன் திரும்ப, “ஏய் நில்லு” என்று நிறுத்தினாள்.

“என்ன?”

“இவன நான் பிரேக் அப் பண்ணுறதால எனக்கென்ன லாபம்?”

“வாட்?”

“என்ன வாட்? நீ கேட்டத நான் செய்யனும்னா எனக்கு எதாவது வேணும்ல?”

“ரியலி?” என்றவன் அவளை நம்ப முடியாத பார்வை பார்த்தான். ஏமாற்றிய காதலனை பிரிவதற்கு என்ன வேண்டுமாம் இவளுக்கு?

“ஆமா.. இல்லனா என் அருமை பாய் ஃப்ரண்ட்ட நீ என்னமோ பண்ணிட்டனு பின்னாடி கேஸ் கொடுத்துடுவேன்” என்று நல்ல பிள்ளையாக மிரட்ட, அவனுக்கு அவள் மீது கோபம் தான் வந்தது.

அங்கிருந்த பூஜாடியை எடுத்து அவளது தலையில் போட்டு உடைக்கலாமா? என்று ஆத்திரம் வந்தது. அடக்கிக் கொண்டான்.

“பேசு..” என்பது போல் தலையசைத்தான்.

“எனக்கு எதாவது கொடு.. உன் ப்ளானுக்கு ஹெல்ப் பண்ணுறேன்ல? என் பக்க லாபம் இல்லனா எப்படி?”

“என்ன வேணும்?”

அவனை நோக்கி விரலை நீட்டினாள். அவனது புருவம் சுருங்கியது. அவன் வேண்டுமா? ஒரு நொடி அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

“உன் கம்பெனில காண்ட்ராக்ட்” என்று விளக்கினாள்.

“உன் கனவுல கூட நடக்காது” என்று கடுப்பாக சொன்னான்.

“அப்ப நான் பிரேக் அப் பண்ண மாட்டேன்” என்று வைத்தாள்‌

“ஃபைன்.. அவன காணோம்னு கம்ப்ளைண்ட் கொடு நான் கேஸ பார்த்துக்கிறேன்” என்றவன் குரலில் குரோதம் மட்டும் தான் மிஞ்சியிருந்தது.

“இல்ல இல்ல இல்ல.. நான் மனச மாத்திக்கிட்டேன்” என்று அவசரமாக சொன்னாள் ரூபிணி.

அவன் உள்ளே சிரித்தான். ‘அப்படி வா வழிக்கு.. காண்ட்ராக்ட் வேணுமாம்ல?’ என்று நினைத்தான்.

அவனது எண்ணத்தை உடைக்கும் படி அவள் தலை சாய்த்து சிரித்துக் கொண்டே, “அந்த ஐடியாவ விட உனக்கும் எனக்கும் அஃபயர் இருக்குனு ரூமர் கிளப்பி விட்டுருவேன். அது பத்திட்டு எரியும்ல? அதுனால என் கரியர் க்ளோஸ்லாம் ஆகாது.. வளர வேணா செய்யும்.. நல்லா இருக்கா?” என்று கேட்டாள்.

உதயா பொங்கி வந்த கோபத்தோடு பார்வையில் அவளை எரிக்கப் பார்க்க, அவள் தன் கைபேசியை எடுத்து திரும்பி அவனோடு படம் எடுத்துக் கொண்டாள். அவன் நடப்பது புரிந்து விலகும் முன்பே எடுத்து முடித்து விட்டாள்.

இருவரும் அருகே இல்லை. தூரமாக தான் நின்றிருந்தனர். ஆனால் இரவு உடையில் அவளும், அவன் ஓய்ந்த தோற்றத்தில் அவள் வீட்டிலும் இருக்கும் கோலம் ஓரளவு போதுமானது தான்.

“இந்த படத்த லீக் பண்ணா என்னாகும் உதயா?” என்று நல்ல பிள்ளை போல் கேட்டு வைத்தாள்.

அவனது ஈகோ பலமாக தாக்கியது. ‘ஹவ் டேர்? என்னையவே மிரட்டுவாளா?’ என்று பொங்கியது.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment