
ரூபிணி தன் கைபேசியை சலிப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள். உதயா தினமும் எதையாவது அனுப்பி அவளிடம் பேசிக் கொண்டே இருந்தான்.
அவளது வேலைகளை பற்றி நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டான். முதலில் அவளே சொன்னால் தான் அவள் எங்கே இருக்கிறாள்? என்ன வேலை செய்கிறாள்? என்று தெரியும். இப்போது அவளுக்கென இருக்கும் குழுவிடம் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்கிறான்.
இது வரை வீட்டுக்கு வரவில்லை. பெற்றோர்களிடம் இது வெறும் வேலை சம்பந்தமான விசயம். உண்மையாக உதயாவுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லி வைத்து சமாளித்திருந்தாள்.
அதனால் தான் அவளது புது காதலன் உதயா என்று நினைக்காமல் அவளது நிறுவன முதலாளி என்பதோடு நிறுத்தி வைக்க முடிந்தது.
ஆனால் உதயாவை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளது வேலைகளுக்கு நடுவே எதையாவது வாங்கிக் கொண்டு வந்தான். அவளது டயட் பட்டியலை அறிந்து வைத்திருந்தான்.
வேலை நள்ளிரவு வரை நீளும் போது, அவளுக்காக காத்திருந்தான். பல நேரம் அவள் மெலினாவின் காரில் வந்து, உதயாவின் காரில் வீடு திரும்புவதாக இருந்தது.
முன்பு போலில்லாமல் உதயா எல்லாவற்றுக்கும் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். ஆனாலும் அவனது குணம் தலைகீழாக மாறி விட்டது என்று சொல்ல முடியாது. அதே உதயா ஆனால் புதுவிதமாக மாறியிருந்தான்.
அவனது முயற்சிகளை எல்லாம் பார்த்த பின்பு தான், எதற்காக மெடோனா அவ்வளவு தூரம் கெஞ்சி பின்னால் அலைந்தாள் என்பதே புரிய ஆரம்பித்தது. பிடித்திருக்கும் பெண்ணுக்காக இவன் இவ்வளவு இறங்கி வருவானா?
ரூபிணிக்காக அவன் பணம் செலவு செய்தாலும் அதனால் அவள் பெரிதாக எதுவும் நினைக்கப்போவது இல்லை. அவளை படுத்திய பாட்டுக்கு செய்யட்டும் என்றே நினைத்தாள். ஆனால் மெடோனாவுக்காகவும் செலவு செய்திருக்கிறான். அதுவும் அளவுக்கு அதிகமாக.
அன்பையும் கொடுத்து, பணத்தையும் கொடுத்து, நம்பிக்கையும் கொடுக்கும் இந்த உதயாவை தான் மெடோனா ஏமாற்றியிருக்கிறாள். நினைக்கும் போதே சிரிப்பு வந்தது.
அதை உதயாவிடம் சொல்லி விட்டாள்.
“இதுக்கும் மேல அந்த மெடோனாவுக்காக பண்ணிருப்பல? அப்புறமும் எப்படி அவளுக்கு சீட் பண்ண மனசு வந்துச்சு? என்ன காரணமா இருக்கும்?” என்று கேட்டு வைத்தாள்.
“மிஸ்டேக்.. தெரியாம நடந்துருச்சு.. அன்னைக்கு குடிச்சுருந்தேன்.. என் மேல தப்பில்ல.. இந்த மாதிரி மொக்கையா ரீசன் சொல்லுவா.. அத நீ கேட்கனுமா?”
“இது எல்லாம் மொக்க.. ஆனா உண்மையான ரீசன் என்ன?”
“எனக்கு தெரியாது. கேட்கல. அதை தெரிஞ்சு மட்டும் என்ன மாறிடப்போகுது?”
“ஆமா.. ஒன்னும் மாறாது..” என்று ரூபிணியும் விட்டு விட்டாள்.
ஆனாலும் ஆச்சரியமாக இருந்தது. பிடிக்கவே பிடிக்காத ரூபிணியின் மனதை மாற்ற இவ்வளவு செய்யும் உதயா, மெடோனாவின் மீது கண்டிப்பாக காதலை கொட்டிருப்பான்.
“வாட் அன் இடியட்..” என்று ரூபிணி மெடோனாவை திட்ட, “சிலர் பொக்கிஷத்த கையில கொடுத்து பார்த்துக்கனு சொன்னா.. கையில தான இருக்கு.. எங்க போயிட போகுதுனு அத தூக்கி போட்டுட்டு குப்பை பின்னாடி போவாங்க. எங்கயும் போகாதுனு நினைச்சது மொத்தமா கைய விட்டு போனப்புறம் தான் வருத்தமும் படுவாங்க. அந்த டைப் மெடோனாவும் விஷாலும்” என்றார் மெலினா.
ரூபிணிக்கு நாளுக்கு நாள் உதயா அவளை நெருங்கி வருவது போல் தோன்ற, மூச்சு முட்ட ஆரம்பித்தது. அவளுக்கு அவனை ஏற்க பிடிக்கவில்லை. இந்த மாற்றம் உண்மையா? பொய்யா? என்றும் தெரியவில்லை.
இரண்டு மாதங்கள் வரை பொறுத்துப் பார்த்தாள். முடியவில்லை. உதயாவை துரத்தி விட வேண்டும் என்று முடிவு செய்ய, அது மெலினாவுக்குப் பிடிக்கவில்லை.
“இங்க பாரு.. முதல்ல நீ வேணாம்னு சொன்ன.. ஓகே அவன் மேல தப்பிருந்துச்சு. இப்ப அவனே மாறிட்டு உன்னை அப்ரோச் பண்ணுறான். இப்பவும் இப்படி பேசாத”
“அவன் மாறுனா? நானும் மாறனுமா? நோ சான்ஸ்.. எனக்கு மூச்சு முட்டுது. அவன் மேல நம்பிக்கையே வர மாட்டேங்குது”
“என்னை மாதிரி நீயும் தனியா நிக்க கூடாதுனு நினைக்கிறேன் ரூபிணி”
“நீங்க தனியா இருக்கதால வருத்தப்படுறீங்களா?”
“இல்லவே இல்ல.. ரொம்ப சந்தோசமா இருக்கேன். ஏன் தெரியுமா? எனக்கு பொண்ணா நீ இருக்க. ஆனா நீ தனியா நின்னா உனக்கு யாரும் கிடைக்க மாட்டாங்க. உன் ஃப்ரண்ட்ஸ் யாரும் நல்லவங்க கிடையாது. அந்த ராஜையும் சேர்த்து தான் சொல்லுறேன். நீ காதலிச்சவனும் பொறம்போக்காகிட்டான். நீ எதிரியா நினைச்ச ஒருத்தன் தான் இப்ப உண்மையா இருக்கான். நான் முடிச்சுக்கிறேன்… விஷால் மாதிரி நூத்துல தொன்னூறு பேர் இருப்பாங்க. ஆனா உதயா மாதிரி நூறுல ஒரே ஒருத்தன் தான் இருப்பான். அவன மெடோனா ஏமாத்துனா.. அவன் ஏமாத்தல.. அவனோட பழிவாங்குற குணத்துக்கு அவங்கள அழிச்சுட்டான். அவன சீண்டாத வரை அவனும் நல்லவன் தான்.. அவன் பணத்துக்கும் திமிருக்கும் எப்படி எப்படியோ வாழ முடியும்.. ஏன் உன் கூட ஃபேக் டேட்டிங் டீல் பேசுனானே.. என்னைக்காச்சும் அவன் உன்னை தப்பா பார்த்துருக்கானா? இல்ல தப்பா நடந்துருக்கானா? உன்னை பிடிக்கலனா கூட, உன்னை மரியாதை இல்லாம நடத்த மாட்டான். உதயா மேல உனக்கு இருக்க கோபத்தையும் பழியையும் நீ எப்பவோ தீர்த்துட்ட. இதுக்கும் மேல அதையே பிடிச்சுட்டு நிக்காத. விலகி வந்து பாரு.. புதுசா யோசி. பழைய கணக்கு முடிஞ்சது. புரியுதா?”
மெலினா அறிவுரையில் ஆரம்பித்து கோபமாக முடித்தார்.
ரூபிணிக்கு நிறைய சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் எதையும் சொல்லாமல் அமைதியானாள்.
அந்த உதயா நல்லவனா? இல்லையா? என்ற பேச்சுக்கு முன்பு அவளுக்கு அவன் வேண்டுமா? வேண்டாமா? என்பது தானே வர வேண்டும்? அவளுக்கு அவன் வேண்டாமே. சொன்னால் மேலும் அறிவுரை தான் கிடைக்கும் என்று அமைதியாகி விட்டாள்.
சில நாட்கள் வரை தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.
அதைப்பற்றி அவள் மெலினாவிடம் கூட சொல்லவில்லை. நேரடியாக உதயாவிடம் பேசி விட்டு, எல்லாம் முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று காத்திருந்தாள்.
அதற்கு தகுந்த நேரத்திற்காக காத்திருக்க, உலக காதலர்கள் தினம் வந்து சேர்ந்தது.
உதயா ரூபிணியை சந்திக்க அவள் இருந்த நாட்டுக்கே வந்து சேர்ந்தான். அன்று வேலையை மாலையிலேயே முடித்து விட்டு அன்றைய நாளை கொண்டாட அனைவரும் கிளம்பி விட, ரூபிணியோடு உதயாவும் கிளம்பினான்.
“எங்க போறோம்?”
“டின்னர் சாப்பிட்டு ஒரு டிரைவ்.. நிறைய வெளிய சுத்த வேணாம். உனக்கு நாளைக்கும் சூட் இருக்குல?” என்று கேட்க, தலையாட்டி வைத்தாள்.
அவனுக்கு தான் அனைத்தும் தெரிந்து விடுகிறதே.
சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, நினைத்ததை இன்றே செய்து முடிக்க பார்த்தாள்.
மீண்டும் காரில் ஏறி அமர்ந்து சில தூரம் சென்ற பிறகு, ஒரு இடத்தில் காரை நிறுத்தினான்.
“நல்ல வியூ பாயிண்ட்.. இறங்கி வா” என்று அழைக்க, ரூபிணி பெருமூச்சோடு இறங்கிச் சென்றாள்.
உண்மையில் அழகான இடம் தான்.
“கேமரா இருக்கு.. வெயிட்” என்றவன் காரை நோக்கித் திரும்ப, ரூபிணி தூரமாய் தெரிந்த அழகிய காட்சியை மனதினுள் நிறைத்தாள்.
“சுகர்”
கேள்வியாக திரும்பிப் பார்க்க, உதயா சாக்லேட்டால் செய்த பொக்கேவை நீட்டினான்.
“ஆக்ட்சுவலி ரோஸ் தான் வாங்கியிருக்கனும். ஆனா உனக்கு சாக்லேட் தான் ரொம்ப பிடிக்கும்னு இப்படி வாங்கிட்டேன். ஹாப்பி வேலன்டைன்ஸ் டே” என்று நீட்டினான்.
அதை சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவளுக்கு சிரிப்பு வந்தது. கூடவே அடுத்து செய்யப்போகும் காரியத்தை நினைத்து வருத்தமாகவும் இருந்தது.
“தாங்க்ஸ்.. பட்…” என்று இழுத்தாள்.
உதயா தோளை குலுக்கினான்.
“ரோஸ இப்படி ரிஜக்ட் பண்ணுவனு தான் சாக்லேட்ட மாத்துனேன்.. இதுவும் ரிஜக்ட்னா.. வேற என்ன மாத்துறது?” என்று கேட்டு வைத்தான்.
ரூபிணி ஒரு நொடி தரையை பார்த்து விட்டு, “நான் முக்கியமான விசயம் பேசனும்” என்றாள்.
அவளது முகத்தில் இருந்த தீவிரத்தை பார்த்து விட்டு, பொக்கேவை காரின் மீது வைத்து விட்டு வந்தான்.
“என்ன?”
“நீ.. இவ்வளவு பண்ணுற.. பட்…”
“லுக்.. பூசி மொழுகாத. நேரா சொல்லு”
“ஓகே.. நான் வேணும்னு தான் பண்ணேன்..”
“எத?”
“நீ என் மேல… உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட் வரனும்னு ஆசைப்பட்டேன். அப்படி வந்தப்புறம் உன்னை ரிஜக்ட் பண்ணி உன்னை உடைக்கனும்னு நினைச்சேன்”
உதயா அசையாமல் நின்றான்.
“நீ என்னை அசிங்கப்படுத்துவனு சொல்லிட்ட.. அதுல எனக்கு கோபம்.. உன்னை பணத்தால அடிக்க முடியாது. உன்னை எதிர்த்தும் என்னால போக முடியாது. நானும் ஒரு விக்டிம் உதயா.. என் பாய் ஃப்ரண்டும் தான் சீட் பண்ணான். உனக்கு இருக்க அதே வலி எனக்கும் இருந்துச்சு. நீ பழி வாங்கி தீர்த்த. நான் அத கூட செய்யல. என் பிரச்சனையோட போராடும் போது நீ புது பிரச்சனைய கொண்டு வந்து.. என்னால முடியல.. அப்போ தான் உனக்கு என் வலிய கொடுக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். யாருக்கும் சொல்லாம.. எப்படி தப்பிக்கனு தெரியாம ஒரு வலிய உள்ள நீயும் சுமந்தா தான் என் கஷ்டம் புரியும்னு தோணுச்சு.. அத மனசுல வச்சுட்டு தான் நான் சம்மதிச்சேன்”
பாதியில் நிறுத்தி மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்.
“நான் நினைச்ச மாதிரி உனக்கு என்னை பிடிச்சது. உன் வாயல சொல்ல வச்சு, எனக்கு பிடிக்கலனு சொல்லி நீ கஷ்டப்படுறத பார்த்து சந்தோசப்பட்டேன். எல்லாமே வேணும்னு பண்ணது தான்.. அந்த கிஸ்ஸும் வேணும்னு பண்ணது தான். மத்தவங்க கிட்ட நம்ம நாடகம் வெளிய வரக்கூடாதுனு நினைச்சாலும், நீ என் கிட்ட விழுந்தியா இல்லையானு தெரிஞ்சுக்க தான் கிஸ் பண்ணேன். எல்லாமே.. எல்லாமே ப்ளான்.. உன்னை உடைக்கனும்னு போட்ட ப்ளான். அதுல நான் ஜெயிச்சுட்டேன்.”
முடித்து விட்டு சில நொடிகள் அமைதியாக இருந்து விட்டு, மீண்டும் உதயாவின் பக்கம் திரும்பினாள்.
“இதுக்காக நீ பழிவாங்கனுமா? செஞ்சுக்கோ.. உனக்கும் எனக்கும் சண்டை போடுறது புதுசில்ல.. ஆனா.. இப்படி சம்பந்தமே இல்லாம என்னை லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட.. இதுக்கு நான் என்ன பதில் சொல்லுறதுனு எனக்கே தெரியல”
அவள் சலிப்பாகவும் வருத்தத்தோடும் பேச, உதயா சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
“நீ…”
“நீ பண்ணதுக்கு வருத்தப்படுறியா?” என்று உதயா வாயைத்திறந்தான்.
ரூபிணி திடமாக தலையசைத்தாள்.
“நோ.. கண்டிப்பா இனிமேலும் வருத்தப்பட மாட்டேன்”
உதயாவின் இதழ்கள் புன்னகைக்கப்பார்க்க, அவசரமாக கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு அடி முன்னால் வைத்து அவளை நெருங்கினான்.
“அப்புறம் ஏன் இத சொல்லுற?”
“நீ இப்படி பிகேவ் பண்ணுறது வித்தியாசமா இருக்கு. உன்னை சண்டை போடுற உதயாவா பார்த்துட்டேன். இப்போ நீ நடிக்கிறியா? உண்மையா இருக்கியானு தெரியல”
“நீ நடிச்சியா?”
“நானா?”
“ம்ம்.. நீ நடிச்சியா? நல்லவ மாதிரி.. என்னை இம்ப்ரஸ் பண்ணுற மாதிரி நடிச்சியா?”
ரூபிணி சில நொடிகள் இமைக்காமல் பார்த்துவிட்டு மறுப்பாக தலையசைத்தாள்.
“நான் நடிச்சுருந்தா நீ கண்டு பிடிச்சுருப்ப”
“கரெக்ட்”
“நான் சாதாரணமா பழகுனாலே உனக்கு என்னை பிடிச்சுடும்னு நினைச்சேன். அதான் நடந்துச்சு”
“அப்போ நீ நீயா இருந்த.. நம்ம கோபம், சண்டை, பழிக்குப்பழி எதையும் நினைக்காம நார்மலா இருந்த. நானா உன் கிட்ட விழுந்தா ரிஜக்ட் பண்ணனும்னு மட்டும் நினைச்ச.. ரைட்?”
“ம்ம்”
“அப்ப நான் லவ் பண்ணதுல தப்பில்லல? நீ நடிச்சு ஒரு ஃபேக்கான ரூபிணிய நான் லவ் பண்ணல.. என் கிட்ட உண்மையா பழகுன ரூபிணிய லவ் பண்ணிருக்கேன்.”
“சோ? என்ன சொல்ல வர்ர?”
உதயா மேலும் அருகே வந்து, ரூபிணியின் கன்னத்தை இரண்டு கையாலும் தாங்கினான். ரூபிணி அதிர்ந்து போனாள்.
“ஐம் சாரி..” என்றதும் அவளது கண்கள் அகலமாக விரிந்தது.
“நீயும் விக்டிம்ங்குறத நான் அப்போ யோசிக்கல. என் வலிய மட்டுமே நினைச்சேன். அதுக்கு நீ பதிலுக்கு கொடுத்துட்ட.. நிஜம்மாவே ரொம்ப வலிச்சது. என்னை போல யாருமே இல்லனு அவ்வளவு ஈகோ எனக்கு. ஆனா என் முகத்துக்கு நேர உன்னை பிடிக்கிறதுக்கு காரணமே இல்லடானு சொன்ன பாரு.. அங்க ரொம்ப வலிச்சது.
மெடோனாவ நான் லவ் பண்ணேன். ஆனா அவ சீட் பண்ணப்புறம் என் லவ் மொத்தமும் வெறுப்பாகிடுச்சு. அவள கஷ்டப்படுத்தினப்புறம், அந்த வெறுப்பும் காணாம போயிடுச்சு. ஆனா நீ… உன்னை லவ் பண்ணுறேன்னே முதல்ல நான் உணரல.. நீ போனப்போ உன் மேல கோபமே வரல. வெறுக்க முடியல. என் மேல தான் குறைனு தோணுச்சு. சத்தியமா ரொம்ப வலிச்சது.
எதுவும் பண்ணி அந்த வலிய வெளிய துரத்த முடியல. உள்ளயே தங்கிடுச்சு. நீ எனக்கு இல்லவே இல்லனு அந்த வலி சொல்ல சொல்ல தான் உன்னை எவ்வளவு லவ் பண்ணுறேன்னே எனக்கு புரிஞ்சது. ரூபிணி.. நீ கொடுத்தது வலி இல்ல.. பாடம்.. அத ரொம்ப நல்லா புரிஞ்சுக்கிட்டு தான் உன்னை தேடி வந்துருக்கேன்..
நீ இப்ப இத சொன்னது, என்னோட பழைய பழி வெறிய தூண்டி விடத்தான்னு எனக்கு நல்லாவே புரியுது. நான் கோபப்பட்டுருந்தா, இதோ.. இவ்வளவு தான்னு நீனு சொல்லிட்டு போயிருப்பல? ஆனா எனக்கு கோபம் வரல.. நான் பண்ண தப்பு தான் புரிஞ்சது.. இதுக்கும் மேல நீ என்னை துரத்த முடியாது. நான் எப்பாடு பட்டாவது உன் மனச மாத்தியே தீருவேன்…”
ரூபிணிக்கு உலகமே மறந்து போனது. இவ்வளவு தூரம் உதயா மாறியிருப்பான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவள் உண்மையை சொன்னதும் கோபப்பட்டு சண்டை போடுவான் என்று தான் நினைத்தாள். இது பேரதிர்ச்சியை கொடுக்க, உலகை மறந்து அவன் பேசுவதை கேட்டுக் கொண்டே நின்று விட்டாள்.
“ஆனா இதுல சில நல்ல பாய்ண்ட் நான் யூஸ் பண்ண கிடைச்சுருக்கு” என்று உதயா கண் சிமிட்ட, ரூபிணி புருவம் சுருக்கினாள்.
மர்மமாக சிரித்தவன் உடனே குனிந்து அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட, அதிர்ந்து இரண்டு நொடிக்குப் பிறகு தள்ளி விட்டாள்.
“ஓகே.. ரெண்டு செகண்ட்க்கு அப்புறம் தான் தள்ளி விட்டுருக்க.. எனக்கு சான்ஸ் இருக்கு”
“வாட்?”
“அதான். கிஸ் பண்ணி லவ் இருக்கானு செக் பண்ணலாம்னு ஐடியா கொடுத்தியே.. செம்ம ஐடியா தெரியுமா?”
“யூ.. இடியட்..”
“அது உன் பேருல?”
ரூபிணி உதட்டை புறங்கையால் துடைத்து விட்டு அவனை அடிக்க, கையை உடனே பிடித்து மறு கையால் அவளை அணைத்துக் கொண்டு முகத்தை பார்த்தான்.
“நாம மேட் ஃபார் ஈச் அதர்னு சொன்னேன்ல.. நீ தான் நம்பல”
“என்ன உளறுர?”
“ஆமா.. பாரு.. என்னைக்காச்சும் யாரையாச்சும் பழிவாங்கியிருக்கியா? என்னை பழிவாங்குறல? அப்ப நாம மேட்ச் தான?”
ரூபிணி பல்லைக்கடித்து எதோ சொல்ல வர, உடனே அந்த வார்த்தையை அவன் விழுங்கினான். அதிர்ச்சியில் உறைந்தவள் நினைவு வந்து தள்ளி விட்டாள்.
“பத்து செகண்ட்க்கு அப்புறம் தள்ளி விட்டுருக்க.. ஒரே நாள்ல இவ்வளவு இம்ப்ரூவ்மண்ட்டா? இன்ட்ரஸ்டிங் இடியட்..”
“அன்னோயிங் அரகண்ட்.. இன்னொரு தடவ என்னை கிஸ் பண்ண.. சும்மா விட மாட்டேன்”
“என்ன செய்வ?”
“போலீஸ் கிட்ட போவேன்?”
“என்ன சொல்லுவ? என் பாய் ஃப்ரண்ட் என்னை கிஸ் பண்ணிட்டான்னா?”
“நீ என் பாய் ஃப்ரண்ட்டா?”
“ஊருக்கே தெரியும் நான் உன் பாய் ஃப்ரண்ட்னு..” என்று கண் சிமிட்டியவன், அந்த பக்கமாக சென்ற வயதான தம்பதிகளை பார்த்து கத்தினான்.
“எக்ஸ்கியூஸ்மீ… நான் இவளோட பாய் ஃப்ரண்ட்…” என்று கத்த, “என்ஜாய் மேன்” என்று பதிலுக்கு சொன்னார் அந்த ஆண்.
ரூபிணி அவசரமாக உதயாவின் வாயில் கைவைத்து அடைத்துக் கொண்டு இழுத்துக் கொண்டு சென்றாள்.
“இப்ப ஏன்டா கத்துற?”
“கத்த கூடாதுனா.. கிஸ் பண்ணு..”
ரூபிணி கடுப்பில் அவன் காலை மிதிக்க, “அய்யோ..” என்று காலை பிடித்தான்.
“அப்படியே தூக்கி கீழே போட்டுருவேன்” என்று மிரட்ட, காலை பிடிப்பதற்காக குனிந்தவன் ரூபிணியின் கன்னத்தில் முத்தமிட்டு அவளை அதிரச் செய்தான்.
“இப்ப வலி போயிடுச்சு” என்றதும் அவள் முறைக்க, “சாக்லேட் இப்படியே இருந்தா உருகிடும்.. சாப்பிடேன்” என்று காட்டினான்.
“எனக்கு ஒன்னும் வேணாம்”
“அப்ப இந்த சாக்கோ வேணுமா?” என்று காட்ட, ரூபிணி தலையில் கை வைத்தாள்.
“சுகர்..” என்று காதருகே குனிந்தான்.
“என்ன?”
“பீ மை கேர்ள் ஃப்ரண்ட்…”
திடீரென ஒரு பரவசம் ரூபிணியின் உடல் முழுவதும் பரவியது. அது ஏனென்று அவள் புரிந்து கொள்ளும் முன்பே, உதயா அவளை தன் பக்கம் திருப்பி நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.
இந்த முறை அவள் தள்ளி விடவில்லை.
“எப்பவும் சந்தோசமா இருக்கலாம்னு சொல்ல மாட்டேன். இனிமேலும் சண்டை போடலாம்.. ஒரே வீட்டுல இருந்துட்டே சண்டை போடலாம். ஒரே உறவா இருந்துட்டே சண்டை போடலாம்.. உன்னோட உயிரா நான் இருக்கனும். என்னோட ஒரே ஒரு உறவா நீ வரனும். கடைசி வர வருவியா?”
அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மிக அருகில் நின்று அவன் பேச, அவளுக்கு தொண்டையிலிருந்து வார்த்தை வெளிவரவில்லை. அவனுக்குப்பின்னால் சாக்லேட் இருக்க, அதில் ஒன்றை உருவி எடுத்தவள் பிரித்து, “ஹாப்பி வேலண்டைன்ஸ் டே” என்று நீட்டினாள்.
உதயா தீடீரென பொங்கிய சந்தோசத்தில் அவளை தூக்கிச் சுற்ற ஆரம்பிக்க, “ஏய் ஏய்.. நான் இன்னும் ஓகே சொல்லல… கீழ இறக்கு” என்று கத்தினாள்.
“பரவாயில்ல.. நான் அத கிஸ் பண்ணியே தெரிஞ்சுக்கிறேன்..” என்றவன் முத்தமிடப்போக, அவசரமாக சாக்லேட்டை உடைத்து அவன் வாயில் திணித்து விட்டு ஓட ஆரம்பித்தாள்.
“நோ வே.. சுகர்.. நில்லு.. எனக்கு தெரியனும்..” என்றவன் அவளை துரத்திக் கொண்டு சென்றான்.
நிறைவு.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Super story sis.. but sikiram mutinja mathiri iruku sis.. எபிலாக் unta sis…