
உதயா ரூபிணியை அழைத்துக் கொண்டு கார் இருக்கும் பகுதிக்கு வர, ராஜ் இன்னமும் அங்கே தான் யாரிடமோ பேசிக் கொண்டு நின்றிருந்தான்.
உதயா ரூபிணியை காருக்குள் அமரச் சொல்லி விட்டு, ராஜிடம் சென்றான். அவனை பார்த்ததும் ராஜ் திரும்பிப் பார்த்தான்.
“நீ என்ன பண்ணிட்டு இருக்கனு எனக்குத் தெரியும். ஆனா பண்ணாத.. அவ்வளவு தான் சொல்லுவேன்” என்று உதயா மிரட்ட, ராஜ் புன்னகையுடன் தூரமாக நின்றிருந்த ரூபிணியை பார்த்து விட்டு, “பண்ணா?” என்று கேட்டு வைத்தான்.
“உன் வேலைய பறிப்பேன்.. உன்னை நடுத்தெருவுக்கு கொண்டு வருவேன்னு மிரட்டிட்டு போயிட முடியும். ஆனா அத விட ஒன்னிருக்கு. அவ மனசுல நீ தரையிறங்கிடுவ. உன் மேல இருக்க மரியாதையால அவ எதையும் கவனிக்கல. கவனிச்சா உன்னை கால் தூசிக்கு மதிக்க மாட்டா”
ராஜ் உதயாவை ஒரு நொடி முறைத்து விட்டு, “வெறும் டேட்டிங்க்கே இவ்வளவு கோபம் வரக்கூடாது.. கல்யாணம் ஆகுற வரை நிறைய வாய்ப்பு இருக்கு.. பார்த்துடலாம்” என்று சவால் விட்டான்.
உதயா நக்கலாக சிரித்தான்.
“அந்த ஒரு வாய்ப்பு உனக்கு கிடைக்காது. கிடைக்கவும் நான் விட மாட்டேன்.. ப்ராமிஸ்” என்ற உதயா நக்கல் பார்வையோடு திரும்பிச் சென்றான்.
அவன் வந்ததும் ரூபிணி காரில் அமர்ந்து கொண்டாள்.
“இது உன் காரா? இந்த நாட்டுலயுமா கார் வச்சுருக்க?”
“எல்லாம் என் கம்பெனி கார்.” என்று விட்டு உதயாவும் அருகே அமர்ந்தான்.
“ராஜ் கூட என்ன பிரச்சனை உனக்கு? எப்ப பார்த்தாலும் முட்டிட்டே இருக்க?”
“அவன் அவ்வளவு முக்கியமில்ல” என்றவன் காரை ஓட்ட ஆரம்பித்து விட்டான்.
“முக்கியமில்லையா? ஹலோ? அவரு என்னோட ஃபேவரட் ஆக்டர். எவ்வளவு கேசுவலா சொல்லுற?”
“அதுக்கு நான் என்ன செய்யுறது? அவன் எனக்கு முக்கியமில்ல.. அவ்வளவு தான்”
ரூபிணி அவனை முறைத்து விட்டு, “ஒழுங்கா ஹோட்டலுக்கு போ.. எனக்கு வேற வேலை இருக்கு” என்றாள்.
“ஹோட்டலுக்கு அப்புறம் போகலாம். இப்ப வேற இடத்துக்கு போகனும்”
“உன் கூட நான் எங்கயும் வர்ரதா இல்ல”
“ஏன்?”
“அதான் எல்லாத்தையும் முடிச்சுக்கலாம்னு சொல்லிட்டியே.. அப்புறம் ஏன் இப்படி திடீர்னு மாத்தி பேசுற?”
“முடிச்சுக்கலாம்னு அப்ப தோணுச்சு. இப்ப வேணாம்னு தோணுது”
“லூசா நீ? உளறிட்டே இருக்க?”
“நான் தெளிவா பேசுறேன். எனக்கு முடிக்க விருப்பமில்ல”
“உதயா.. திஸ் இஸ் டூ மச்”
“நோ.. இப்ப தான் சரியா போயிட்டு இருக்கேன்”
“இப்ப என்ன சொல்ல வர்ர?”
“உனக்கு என்னை பிடிக்க காரணமே கிடைக்கலனு சொன்னல? இனிமே காரணத்த நான் கொடுக்குறேன்.. அதாவது உன்னை இம்ப்ரஸ் பண்ண ட்ரை பண்ண போறேன்” என்றவன் அவள் பக்கம் திரும்பி கண்ணடித்து வைத்தான்.
ரூபிணி அதிர்ந்து போய் பார்த்தாள்.
“வாட்? இம்ப்ரஸ்ஸா?”
“ஆமா.. இம்ப்ரஸ் பண்ணி உனக்கும் என்னை பிடிக்க வைக்க போறேன்.”
“பைத்தியக்காரத்தனம். எனக்கு உன்னை பிடிக்காது”
“இனிமே பிடிக்கலாம் இல்லையா? ட்ரை பண்ணாம பேசக்கூடாது சுகர்”
“சுகர்?” என்றவள் நக்கலாக சிரித்தாள்.
“நீ எதையும் ட்ரை பண்ண வேணாம். எனக்கு பிடிக்கல அவ்வளவு தான்”
“அதையும் மாத்தி பார்க்கலாம்னு தான் ஆசைப்படுறேன்”
“சீரியஸ்லி? ஒரு பொண்ணு பிடிக்கலனு சொல்லிட்டா டீசண்ட்டா விலகிடனும். தெரியுமா? தெரியாதா?”
“ஒரு பொண்ண பிடிச்சுருந்தா அவ மனசுல இடம்பிடிக்க முயற்சியே பண்ணாம விலகி ஓடுறது முட்டாள்தனம். அது நல்லா தெரியும்”
“இது முயற்சி இல்ல..”
“லுக்.. உன்னை நான் ஃபோர்ஸ் பண்ண போறது இல்ல. இன்னும் முழுசா ரெண்டு வருசம் நம்ம கிட்ட இருக்கு. ஒரு வருசத்த வேஸ்ட் பண்ணிட்டேன். இனி வேஸ்ட் பண்ண மாட்டேன். உனக்கு என்னை பிடிக்கிறதுக்கான காரணத்த கண்டிப்பா கொடுப்பேன். அப்படியும் உனக்கு என்னை பிடிக்கலனா.. ரெண்டு வருசம் கழிச்சு உன் முடிவ நான் ஏத்துக்கிறேன்”
“ரெண்டு வருசம்? அவ்வளவு நாள் உன் தொல்லைய நான் தாங்கனுமா?”
“தொல்லைனு நீயா நினைக்காம இருக்கலாமே?” என்று உதயா சிரிக்க, ரூபிணிக்கு கோபமாக வந்தது.
“மரியாதையா கார நிறுத்து”
“நோ.. நிறுத்துனா நீ ஓடிருவ.. ரெண்டு தடவையும் அதான பண்ண? என்னை பேசவே விடாம நீயே பேசி.. என்னை யோசிக்க கூட விடாம எந்திரிச்சு போயிடுற. அதுக்கு தான் இந்த தடவ கார்ல வச்சு பேசுறேன்” என்றதும் ரூபிணி அதிர்ந்து போனாள்.
‘அடப்பாவி!’ என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அழகா இருக்கனா? இந்த ட்ரஸ் ஒரு ஸ்டைலிஷ்ட் செலக்ட் பண்ணது” என்று உதயா கேட்க, “இல்ல..” என்று வேகமாக திரும்பிக் கொண்டாள்.
“பரவாயில்ல.. இப்ப போற இடத்துல மேட்சிங் அவுட் ஃபிட் வச்சுருக்காங்க. போட்டுக்கலாம்”
“வாட்?”
“நீ நைட் பார்ட்டிய அட்டன் பண்ண போறதா சொன்னாங்க.. அதுக்கு நானும் வருவேன். அப்போ மேட்சிங்கா போட்டுக்கலாம்னு டிரஸ் ரெடி பண்ண சொல்லிருக்கேன்”
“யாரு சொன்னா?”
“உன் டீம் தான்”
“அவங்க கிட்ட நீ ஏன் கேட்குற?”
“உன் வொர்க் ஸ்கெடியூல் எல்லாத்தையும் வாங்கி வச்சுட்டேன். இம்ப்ரஸ் பண்ணனும்னு முடிவு பண்ணா முழுசா பண்ணனும்ல?”
ரூபிணிக்கு கலை வலி வந்துவிடும் போல் இருந்தது. சில நிமிடங்கள் அவளுக்கு அமைதி தேவை. அப்போது தான் நன்றாக யோசிக்க முடியும். அதனால் கண்ணாடியை இறக்கி விட்டு காற்றில் முகத்தை காட்டிக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
உதயா ஒரு இடத்தில் காரை நிறுத்தினான்.
“உள்ள போகலாம் வா” என்று அவளை அழைத்துச் சென்றான்.
அங்கே அத்தனை வசதிகளும் இருந்தது. தலை முதல் கால் வரை மொத்தமாக அலங்கரிக்க ஆட்கள் இருந்தனர். பெண்களிடம் ரூபிணியை ஒப்படைத்து விட்டு உதயா வேறு பக்கம் சென்று விட்டான்.
அவளது பழைய மேக் அப்பை கலைத்து, புதிய மேக் அப் போட்டு விட்டனர். உடைக்கு தகுந்தது போல் சிகை அலங்காரம் செய்து முடித்தனர். உடையை மாற்றிக் கொண்டு கண்ணாடியில் பார்த்த ரூபிணிக்கு திருப்தியாக இருந்தது.
“குட்..” என்று அந்த பெண்களை பார்த்து பாராட்ட, அவர்கள் புன்னகைத்து வைத்தனர்.
அவள் தயாராகி வரும் போதே, உதயா தயாராகி அமர்ந்திருந்தான். அவளை பார்த்ததும் எழுந்து வந்து நின்றான்.
உதயா அவளை ரசிக்க, அதே நேரம் ரூபிணியும் அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
மேட்சிங் என்றதும் ஒரே நிற உடையாக இருக்குமோ? என்று நினைத்தாள். ஆனால் அப்படி இல்லை. பிரபல பிராண்ட் ஒன்று தம்பதிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடையை இருவரும் அணிந்திருந்தனர்.
ஒரே நிறமல்ல. ஆனால் ஒரே விதமான அமைப்பில் இருந்தது.
“கிரேட்” என்றவன் அவளருகே சென்று கையை நீட்டினான்.
“போகலாமா?”
“பணம் கட்டிட்டியா?”
“எப்போவோ.. போகலாம் வா” என்றவன் அவள் கையைப்பிடித்துக் கொண்டு வெளியே வந்தான்.
காரில் வந்து அமர்ந்ததும் ரூபிணி அவனை ஒரு நொடி பார்த்து விட்டு, யோசனையோடு திரும்பிக் கொண்டாள்.
“நான் எப்படி இருக்கேன்னு நீ சொல்லல?”
உதயா சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டே கேட்க, “இது கப்பில் கலெக்ஷன்.. நாம ஏன் போட்டுருக்கோம்னு எனக்கே தெரியல” என்றாள்.
“கப்பிலாக போறோம்னு நினைச்சுக்கோ” என்றதற்கு முறைப்பு தான் பதிலாக கிடைத்தது.
வந்த பாதையில் மீண்டும் கிளம்பினர். இப்போது சூரியன் மெல்ல மறைய ஆரம்பித்திருக்க, உதயா ஒரு இடத்தில் காரை நிறுத்தினான்.
ரூபிணி கேள்வியாக திரும்பிப் பார்க்க, “இன்னும் நேரமிருக்கு. வா ஃபோட்டோ எடுத்துட்டு போகலாம்” என்றவன் அவளை கீழே இறக்கி காரின் மீது சாய்ந்து கொண்டான்.
வானில் சூரியன் தங்க நிற ஜொலிப்போடு இறங்கிக் கொண்டிருக்க, காரில் சாய்ந்து நின்று இருவரையும் உதயா படம் எடுத்துக் கொண்டான்.
“நைஸ்” என்று விட்டு, “நீ நில்லு..” என்று ரூபிணியை நிற்க வைத்து படம் எடுத்தான்.
”உன்னோட ரெண்டாவது படம் இது”
“புரியல..”
“என் ஃபோன்ல இது உன்னோட ரெண்டாவது படம்”
“இதுக்கு முன்னாடி எப்போ எடுத்த?”
உதயா புன்னகைத்து வைக்க, “எப்ப எடுத்த? காட்டு” என்று கேட்டாள்.
“பார்த்தா சாக் ஆகிடுவ. இருந்தாலும் பாரு” என்றவன் அவளை முதன் முதலாக ஹோட்டலில் எடுத்த படத்தை காட்டினான்.
இரவு நேரத்தில் விளக்குகளுக்கு நடுவே சாதாரணமாக சிரித்துக் கொண்டிருந்தாள் ரூபிணி.
அந்த படத்தையும் அதில் இருந்த உடையையும் கவனித்தவள், அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“ஓகே சாக் ஆகாத.. நீ அப்போலாம் கேமரா முன்னாடி கேசுவலா இல்ல.. அது எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். இந்த ஃபோட்டோல கேசுவலா இருக்கல.. அதான் எடுத்துப் பார்த்தேன்.” என்று அவசரமாக விளக்கம் கொடுத்தான்.
“எனக்கே தெரியாம எடுத்து வச்சுருக்க? கொழுப்பு தான உனக்கு? டெலிட் பண்ணு”
“நோ.. ஏன் பண்ணனும்? இதான் உன் காண்டாக்ட்க்கு வச்சுருக்கேன்.. பார்க்குறியா?”
“ஒன்னும் தேவையில்ல..”
“இங்க பாரு..” என்று காட்ட, அதில் இருந்த பெயரை படித்து விட்டு முறைக்க ஆரம்பித்தாள்.
“இடியட்?” என்றவள் பல்லைக்கடிக்க, “அப்போ சேவ் பண்ணது” என்றான் சிரிப்போடு.
“எல்லாத்தையும் டெலிட் பண்ணிட்டு ஓடிப்போயிடு” என்று ரூபிணி கோபமா திரும்ப, அவளது தோளில் கைபோட்டுக் கொண்டவன் கைபேசியில் செல்ஃபி எடுத்துக் கொண்டான்.
அவளது கோப முகம் பதிவானதில் அத்தனை சந்தோசம் அவனுக்கு.
“என் பேர நீயும் எதாவது வில்லங்கமா தான சேவ் பண்ணிருப்ப? அப்புறம் என்ன கோபம்? சில் சுகர்” என்று அவளை அணைக்க, கோபமாக தள்ளி விட்டாள்.
“ச்சீ பே.. ஆமா.. அரகண்ட்னு சேவ் பண்ணிருக்கேன்” என்றவள் கேட்டு கோபப்படப்போகிறான் என்று எதிர்பார்த்தாள்.
அவனோ சலிப்பாக தலையாட்டி விட்டு, “நாம மேட் ஃபார் ஈச் அதர்..” என்றான்.
“அப்படியா சார்? யாரு சொன்னா?”
“நான் தான்”
“உன்னை…” என்றவளை பிடித்து இழுத்து காரில் சாய்ந்தவன், அவள் அதிர்ந்ததும் புன்னகைத்தான்.
“ரொம்ப கோபப்படாத ரூபிணி.. நாம நிறைய சண்டை போட்டு முடிச்சுட்டோம். இனிமே கொஞ்சமா சந்தோசமா இருப்போமே.. உனக்கு என்னை பிடிக்குறதுக்கான காரணத்த கண்டிப்பா கொடுப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. அதையும் மீறி நீ என்னை வெறுத்தா நிச்சயமா விலகிடுவேன். வார்த்தை மாற மாட்டேன். ஓகே?”
ரூபிணிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. திடீரென இப்படி வந்து நின்று பேசுவான் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் அவளிடம் பதிலும் இல்லை.
“கிளம்பலாம்.. டைமாகிடும்.. அண்ட் நிறைய குடிக்காத.. ஓகே” என்று விட்டு காரை திறந்து உள்ளே கை காட்டினான்.
ரூபிணி அமர்ந்து கொண்டாள். உதயாவும் வேறு எதுவும் பேசாமல் காரை எடுத்தான். இருவரும் பார்ட்டிக்கு செல்ல, அங்கே பல விதமான ஆட்கள் இருந்தனர்.
ஆனால் இருவரும் இப்படி ஜோடியாக ஒரு உடையில் வந்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. பலவிதமான படங்கள் அவர்களை வளைத்து வளைத்து எடுத்து விட்டுக் கிளம்பி விட்டனர்.
தொடரும்.

