Loading

அன்று வேலை எல்லாம் முடிந்து விட்டதால், ரூபிணி சமூக வலைதளங்களுக்குள் நுழைந்தாள். அதில் பரவிக் கொண்டிருந்த படத்தை பார்த்து விட்டு துள்ளி எழுந்து அமர்ந்தாள்.

அவளும் உதயாவும் சாப்பிங் சென்ற போது, யாரோ படமெடுத்திருக்கின்றனர். அதுவும் சாக்லேட் வாங்கப்போன இடத்தில் ரூபிணி சிரித்துக் கொண்டிருந்ததும், உதயா அவளை முறைத்துக் கொண்டிருந்ததும் இருந்தது.

“சோ க்யூட் கப்பில்..” என்று பலர் சொல்ல, சிலர் அந்த படங்கள் உண்மை தானா? என்று சந்தேகப்பட்டனர்.

ரூபிணி உடனே யோசித்து விட்டு உதயாவுக்கு செய்தி ஒன்றை அனுப்பினாள்.

“எல்லாருகிட்டயும் சொல்ல சூப்பர் சான்ஸ் கிடைச்சுருக்கு.. இன்னைக்கே பண்ணுறேன்” என்று அனுப்ப உதயா பார்க்கவில்லை.

அவன் பார்க்கும் போது பார்க்கட்டும் என்று விட்டு “லைவ்” ஆப்ஷனை தட்டி விட்டாள்.

அவளது விசிறிகள் அனைவரும் நிமிடத்தில் கூடி விட்டனர்.

இன்று வாங்கிய சாக்லேட் ஒன்றை சாப்பிட்டுக் கொண்டே, “ஹாய்.. ரொம்ப நாளாச்சுல லைவ் வந்து? ரொம்ப பிசியா இருந்துட்டேன்” என்று ஆரம்பித்தாள்.

சில கமெண்ட்களை படித்தாள். சிலருக்கு பதில் சொன்னாள். திடீரென ஒருவன் அவள் சாப்பிடும் சாக்லேட்டை பற்றி கேட்க, “இந்த பிராண்ட் எனக்கு பிடிக்கும். இன்னைக்கு தான் வாங்கிட்டு வந்தேன்” என்றாள்.

உடனே கமெண்ட் பக்கத்தில் உதயாவின் பெயர் வரிசையாக வர ஆரம்பித்தது. ரூபிணிக்கு சிரிப்பு வந்தது.

“எஸ் எஸ்.. உதயா கூட தான் போய் வாங்குனேன்” என்று உடைத்து விட்டாள்.

மறுபடியும் கமெண்ட்களை பார்த்திருந்து விட்டு, “நானும் அந்த ஃபோட்டோஸ் பார்த்தேன்.. அந்த சிரிப்புக்கு பின்னாடி இருக்க காரணம் வேணுமா?” என்று கேட்டு வைத்தாள்.

அதன் பிறகு சில நிமிடங்களை வரை அமைதியாக கமெண்ட்ஸை பார்த்துக் கொண்டிருக்க, உதயா அவளது செய்தியை பார்த்து விட்டான்.

“என்ன பண்ண போற?” என்று செய்தி வர, உடனே அதற்கு பதில் அனுப்பி வைத்தாள்.

“லைவ் பாரு” என்றதும் உதயா புருவம் சுருங்க எடுத்துப் பார்த்தான்.

“அந்த ஃபோட்டோஸ்ல நான் ரொம்ப சிரிச்சுட்டு இருந்தேன்ல? ஏன் சிரிச்சேன்னு தெரியுமா?” என்று ரூபிணி சிரிப்போடு கேட்க, உதயா அதிர்ந்தான்.

அவசரமா அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.

“சொன்ன.. உன்னை கொன்னுடுவேன்” என்று வர, ரூபிணி அதை கண்டு கொள்ளவில்லை.

உதயா கமெண்ட்டில், “யாரும் கேட்கல.. நீயும் சொல்லாத” என்று போட்டு வைத்தான்.

உதயா வந்ததும் அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டனர். ரூபிணி அந்த கமெண்ட்டை பார்த்து விட்டு மர்மமாக சிரித்தாள்.

“எல்லாரும் கேட்குறாங்க சாக்கோ.. அவங்களும் தெரிஞ்சுக்கட்டுமே” என்றவள் உதயாவை கண்டு கொள்ளாமல் அங்கு நடந்ததை சொல்லி விட்டாள்.

“அந்த லேடி பார்த்த பார்வையில.. பாவம் அழுதுட்டான்” என்று ரூபிணி வாய் விட்டு சிரிக்க, கமெண்ட்டில் அத்தனை பேரும் சிரிக்க உதயாவுக்கு எங்காவது ஓடி விட வேண்டும் போல் இருந்தது.

“நான்னு நினைச்சு அடுத்தவன் கிட்ட பேசி.. அசிங்கபட்டுட்டான்.. பாவம்..” என்ற ரூபிணிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

“இரு உன்னை நேர்ல வந்து பேசிக்கிறேன்” என்று உதயா அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தான். அதையும் ரூபிணி கண்டு கொள்ளவில்லை.

சில நிமிடங்கள் கழித்து உதயாவிடமிருந்து, “கதவ திற” என்ற கமெண்ட் வந்தது.

கமெண்ட்டை படித்து பார்த்தவள், “கதவ திற.. ஏன்? உன் கிட்ட தான் சாவி இருக்கே” என்றவள் சாக்லேட்டை விழுங்க, கதவு பக்கம் சத்தம் கேட்டது.

சட்டென கதவை திரும்பிப் பார்த்தவள் அதிர்ந்து விட்டு, “வந்துட்டான்னு நினைக்கிறேன்.. பை” என்று அவசரமாக லைவ்வை அணைத்து விட்டாள்.

உடனே சாக்லேட்டை போட்டு விட்டு வாசலுக்கு ஓடி கதவை திறந்தாள்.

“இங்க என்ன பண்ணுற நீ?”

“என் கிட்ட சாவி இருக்கா?”

“நான் கார் சாவிய சொன்னேன்.. வீட்டு சாவிய சொல்லல” என்று கண்ணடித்தவள் உள்ளே நகர உதயா உள்ளே வந்தான்.

“இப்ப எதுக்கு எல்லாத்தையும் லைவ்ல சொன்ன?”

“நம்ம சாப்பிங் ஃபோட்டோஸ் லீக் ஆகியிருக்கு. சோ சான்ஸ யூஸ் பண்ணிக்கனும்ல?”

“அதுக்காக இதையும் சொல்லுவியா?”

“எல்லாரும் நூறு சதவீதம் இப்ப நம்பிருப்பாங்க. இனிமே நாம எதுவும் செய்ய வேணாம். முக்கியமா இத மெடோனா பார்த்துருந்தா அவளும் நம்பிருப்பா. கவலையே படாத.. இப்ப என்ன இங்க?”

“உன் கார விட வந்தேன்” என்றவன் சாவியை நீட்ட, உடனே வாங்கிக் கொண்டாள்.

“திரும்பி எப்படி போவ?”

“டாக்ஸில போயிப்பேன்..” என்றவன் அவள் போட்டு வைத்த சாக்லேட்டை எடுத்தான்.

“ஒரே நாள்ல சாப்பிட்டு காலி பண்ண போறியா?”

“லைவ்காக எடுத்தது தான்.. பாதி கூட சாப்பிடல..”

“நல்லா ப்ளான் பண்ணுற… அப்புறம் டிக்கெட் புக் பண்ணியாச்சு. மெலினா கிட்ட டீடைல் கொடுத்துருப்பாங்க. பேக் பண்ணி கிளம்பு.. நானும் கிளம்புறேன்”

“நில்லு”

“என்ன?”

“சாக்லேட்ட கொடுத்துட்டு போ” என்று பிடுங்க வர, கையை மேலே தூக்கிக் கொண்டான்.

“நிறைய சாப்பிட்டா பல்லு கொட்டிரும்.”

“நீ ஒன்னும் அக்கறைப்படாத..” என்றவள் அவன் கையை பார்த்து முறைக்க, “நீ தான் என் கேர்ள் ஃப்ரண்டாச்சே. அக்கறைப்படலனா எப்படி?” என்று கேட்டு வைத்தான்.

“மரியாதையா கொடுத்துடு.. இல்லனா நடக்குறதே வேற”

“என்ன நடக்கும்?”

“வயித்துல ஓங்கி குத்துவேன் பார்க்குறியா?”

“குத்து பார்ப்போம்” என்றதும் உண்மையிலேயே குத்தி விட்டான்.

அதிர்ந்து போய் வயிற்றை பிடித்தவன் கை தன்னால் இறங்க, அதை எட்டிப் பிடித்துக் கொண்டாள்.

“இத முன்னாடியே செஞ்சுருக்கலாம்” என்று சாக்லேட்டை பறிக்க பார்க்க, அவன் விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

“உதயா…” என்று ரூபிணி முறைக்க உதயா வலியை பொருத்துக் கொண்டு சாக்லேட்டை ஒரே நொடியில் பிடுங்கிக் கொண்டான்.

“ஏய்…” என்றவள் அதை பறிக்கப்போக அவன் மீது மோதிக் கொண்டாள்.

“வயித்துலயா குத்துற? தைரியம் தான் உனக்கு” என்றவன் கை தானாக தன் மீது மோதியவளை வளைத்தது.

“உதயா கொடுத்துடு.. அது என்னோடது..” என்று ரூபிணி முறைக்க, “இத நான் தரனும்னா வேற எதாவது நீ தரனும்” என்று பேரம் பேசினான்.

“என்னோடத வாங்கிட்டு பேரம் பேசாத”

“இப்ப அது என் கையில இருக்கு”

ரூபிணி முறைத்துப்பார்த்தாள்.

“இப்ப என்ன பண்ணனும்ங்குற?”

“ஒரு சாரி சொல்லு”

“எதுக்கு?”

“லைவ்ல என்னை டேமேஜ் பண்ணியே அதுக்கு”

“அது டேமேஜா? உண்மைய சொன்னேன்”

“நான் சொல்லாதனு சொல்லியும் சொன்ன”

“நீ எப்ப சொல்லாதனு சொன்ன?” என்று அப்பாவி போல் அவள் கண்ணை விரித்து கேட்க, “என் கிட்டயே நடிக்காத.. மெஸேஜ பார்த்துட்டும் பார்க்காத மாதிரி இருந்துட்டு எல்லாத்தையும் சொல்லிட்ட.. எவ்வளவு தைரியம் உனக்கு?” என்று முறைத்தான்.

“சரி சரி.. சாரி.. போதுமா?” என்று போனால் போகட்டும் என்று சொல்ல, “இப்படி தெனாவெட்டா சொல்லாத” என்றான்.

“என்னடா உன் பிரச்சனை? அதான் சாரினு சொல்லிட்டேன்ல? அத கொடு..”

“ப்ராப்பரா சொல்லு..”

“நீயே வச்சுக்க போ” என்றவள் நகரப்பார்க்க, அவனது பிடி இறுகியது.

“சொல்லிட்டு போ” என்றான் ரூபிணியின் அதிர்ந்த முகத்தை பார்த்து.

அதிர்ச்சியிலிருந்து மெல்ல வெளிவந்தவள், “சாரி” என்றாள் அமைதியாக.

“இனிமே இப்படி விளையாண்டனு வை.. விளைவு ரொம்ப மோசமா இருக்கும்” என்று விட்டு சாக்லேட்டை நீட்ட, உடனே பறித்துக் கொண்டாள்.

வந்த கோபத்திற்கு அவள் காலில் உதைத்து விட்டு, அவனை தள்ளி விட்டு நகர்ந்து நின்றாள்.

“பெரிய இவரு.. போ வெளிய” என்று வாசலைக்காட்டினாள்.

காலை வலியில் தேய்த்துக் கொண்டு முறைத்தவன், “நான் ஏன் போகனும்? இது என் கேர்ள் ஃப்ரண்ட் வீடு.. இன்னைக்கு இங்க தான் தங்க போறேன்” என்று விட்டு சென்று சோபாவில் அமர்ந்து கொண்டான்.

“வாட்?”

“என்ன? நீ தான் ஊர் முன்னாடி கன்ஃபார்ம் பண்ணிட்டியே… அப்புறம் என்ன?”

“உதயா விளையாடாத.. கிளம்பு”

“எனக்கு தனியா போக பயமா இருக்கு ரூபிணி.. பாரு நைட் ஆகிடுச்சு”

ரூபிணிக்கு கோபத்தில் எதையாவது எடுத்து அவன் தலையில் போட்டு உடைக்கலாமா? என்று தோன்றியது.

“என்னடா உன் பிரச்சனை? சொல்லித்தொலையேன்” என்று ரூபிணி நொந்து போனாள்.

“இங்க வந்து உட்காரு சொல்லுறேன்” என்று அருகே இருந்த இடத்தை காட்ட, அவனை முறைத்து விட்டு பொத்தென அங்கே விழுந்தாள்.

“இன்னைக்கு நைட் நான் இங்க தான் தங்க போறேன்..”

“உன்னை கொல்லுவேன்”

“முழுசா கேளு.. காலையில விஷால் பத்தி சொன்னேன்ல? இப்ப தான் நியூஸ் வந்துச்சு.. அவனுக்கு உன் அட்ரஸ் கிடைச்சுருக்கு. இங்க வந்துருப்பான்னு சொல்லுறாங்க”

ரூபிணி ஆச்சரியமாக பார்த்தாள்.

“என் அட்ரஸ் எப்படி கிடைச்சது?”

“தெரியல.‌ ஆனா கண்டு பிடிச்சுட்டான். நீ வேற லைவ்ல என் பேர சொல்லி வச்சுட்ட.. இல்லனா மெடோனா மூலமா அவனுக்கு விசயம் போயிருக்கும். என்னனு தெரியல.. வந்துருக்கான்னு நியூஸ் வரவும் தான் உன் கார எடுத்துட்டு வேகமா கிளம்புனேன். நீ லைவ்ல இருந்ததால கால் பண்ணி சொல்ல முடியல”

“அப்படியே அவன் வந்தாலும் எனக்கென்ன பயம்? போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன். அண்ட் இங்க செக்யூரிட்டிக்கு எந்த குறையும் இல்லையே”

“இப்போதைக்கு பிரச்சனை இல்ல. ஆனா எதோ ஒரு பிரச்சனை வரத்தான் போகுதுனு என் மனசு சொல்லுது. காலையில மெடோனாவ பார்த்ததே எனக்கு பிடிக்கல. அவ விஷால் கிட்ட நம்மல பத்தி சொல்லிருந்தா.. அவன் அவ்வளவு கஷ்டப்படும் போது நீ இங்க சந்தோசமா இருக்கது அவன கோபப்படுத்திருக்கும். அதான் கிளம்பி வந்துருப்பான்.”

“அதுக்கு ஏன் நீ இங்க தங்கனும்ங்குற?”

“உன்னை ஒன்னும் பண்ணிட மாட்டேன். உன் கையால சாகுற ஆசை எனக்கில்ல. ஒரு சேஃப்டிக்கு தான் இருக்கேன். அவன் எங்க இருக்கான்னு லொகேட் பண்ணிட்டா அடுத்த மூவ் பார்த்துக்கலாம். கிளம்பி வந்தவன் எங்க போனான்னு இன்னும் சரியா தெரியல. அதுனால நான் ஹால்ல தூங்குறேன். நீ உள்ள போ. இன்னைக்கு நைட் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்”

உதயா பொறுமையாக விளக்க, ரூபிணி யோசனையோடு அமர்ந்தாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 22

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
17
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உதயா ரூபிணி கியூட்