Loading

“யூ ஆர் ஜீனியஸ்” என்று ரூபிணி சந்தோசத்தோடு உதயாவை கட்டியணைக்க, உதயாவுக்கு அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. சில நொடிகளிலேயே ரூபிணி பிரிந்து விட்டாள்.

“இத விட அவன எதுவும் பண்ண முடியாது. போய் பிச்சை எடுக்கட்டும். ஆனா உதயா.. நீ இவ்வளவு பண்ணுவனு நினைக்கல” என்று ரூபிணி சந்தோசமாக பேச, உதயா அதிர்ச்சியிலிருந்து மெல்ல வெளி வந்தான்.

“பழி வாங்கனும்னா அவங்க வாழ்க்கைய தான் அழிக்கனும். அதுவும் அடுத்து எந்திரிக்க முடியாதபடி. நீ கொலை பத்தியே பேசிட்டு இருக்க”

“ஜஸ்ட் தோணுச்சு சொன்னேன். பட் இதான் நல்ல ஐடியா. பார்க்குற வேலையும் போய்.. இருந்த ஒரு சொத்தும் போய்.. கடன் தலைக்கு மேல இருக்கும் போது என்ன செய்யனு தெரியாம நிப்பான்ல? அது அதான் வேணும். நான் அன்னைக்கு மெடோனாவ அவன் வீட்டுல பார்த்தப்போ நின்னேனே.. அப்படி அவனும் நிக்கட்டும். பிச்சை எடுத்தாலும் சரி.. இல்ல ஊர விட்டே ஓடிப்போனாலும் சரி..”

“ரெண்டும் நடக்கலாம்.”

ரூபிணி சந்தோசமாக தலையாட்ட, “இப்ப என்ன சொல்லுற? கன்ஃபார்ம் பண்ணிடுவோமா?” என்று கேட்டான்.

“கண்டிப்பா பண்ணிடலாம். ஆனா மெடோனாவுக்கு என்ன பண்ண நீ?” என்று புரியாமல் கேட்டாள்.

“அவள இன்னும் விட்டு தான் வச்சுருக்கேன்.”

“உன் எக்ஸ மட்டும் விட்டு வச்சுருக்கியா?”

“நோ.. விஷால் வேற ஊருக்கு தப்பிச்சு போய், எதோ ஒரு வேலை பார்த்து இல்ல பிச்சை எடுத்துக்கூட பிழைச்சுடுவான். ஆனா மெடோனாவுக்கு அந்த வாய்ப்பு கூட இருக்க கூடாது. என்னோட லவ்வ மதிக்காம ஏமாத்துனாள்ல? அதோட வலிய ஒவ்வொரு நாளும் உணரனும். முக்கியமா எவ்வளவு பெரிய விசயத்த இழந்துருக்கானு தெரிஞ்சு கதறனும்.”

“ஆமா.. கண்டிப்பா.. உதயா.. தி கிரேட் உதயகுமார போய் இழக்கலாமா?” என்று ரூபிணி சிரிப்போடு பேச, உதயா புன்னகையுடன் காரை எடுத்தான்.

ரூபிணி விஷாலுக்கு நடந்ததை நினைத்து நினைத்து மகிழ்ந்தாள். காரை ஒரு மாலில் நிறுத்தி விட்டு இருவரும் ஒன்றாக உள்ளே சென்றனர்.

படிகளில் ஏறி மிகச்சிறந்த ஆடைகள் சோ ரூம் ஒன்றிற்குள் நுழைந்தனர்.

ரூபிணி தனக்கு வேண்டியதை பார்க்க ஆரம்பிக்க, உதயாவும் அவளோடு நடந்தான்.

“நீ என்ன கூட வர்ர?”

“செலக்ட் பண்ணு.. பார்க்கலாம் உன் டேஸ்ட்ட” என்றவன் அவளை விட்டு அசையவில்லை.

ரூபிணி ஆச்சரியமாக அவனை பார்த்து விட்டு ஆடைகளை எல்லாம் எடுத்து பார்த்தாள்.

ஒன்றை எடுத்து மேலே வைத்து பார்த்து விட்டு நடக்க, உதயா அவள் கையிலிருந்து அதை வாங்கிக் கொண்டான்.

ரூபிணி தனக்குப் பிடித்த உடைகளை எல்லாம் பார்த்து எடுக்க, அங்கே வேலை செய்யும் பெண் அருகே வந்து புன்னகைத்தாள்.

“நான் வச்சுக்கிறேன் சார்” என்று கேட்டதும் உதயா அவள் கையில் கொடுத்து விட்டு, ரூபிணிக்கு அருகே இருந்த ஒரு உடையை எடுத்து அவள் மீது வைத்து பார்த்தான்.

“இதையும் ட்ரை பண்ணு..” என்றவன் மற்ற உடைகளோடு வைத்து விட்டான்.

“ஓகே.. வேற எதுவும் பிடிக்கல.. நான் ட்ரை பண்ணிட்டு வர்ரேன். வெயிட் பண்ணு” என்று விட்டு ரூபிணி சென்று விட்டாள்.

அவள் வரும் வரை உதயா கதவை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

முதலில் ஒரு உடையை அணிந்து வந்து காட்டினாள்.

“எப்படி இருக்கு?”

“கலர் செட்டாகல”

“இந்த கலருக்கு என்ன குறைச்சல்?”

“ஆர்கியூ பண்ணாம போய் அடுத்தத போடு”

“வேற கலர் இருக்கானு பார்க்கவா மேடம்?” என்று சேல்ஸ் கேர்ள் கேட்க, “வேணாம்.. நீ போ..” என்று உதயா சொல்லி விட்டான்.

ரூபிணி அவனை முறைத்து விட்டுச் சென்று வேறு ஒரு உடையை அணிந்து வந்தாள்.

எழுந்து அவள் அருகே சென்று பார்த்தவன், “இந்த இடத்துல சரி இல்ல” என்று அவளது இடையை காட்டினான்.

ரூபிணியும் ஏற்றுக் கொண்டு தலையாட்டினாள்.

“வேற பார்க்கலாம்” என்று விட்டு மீண்டும் சென்றாள்.

மூன்றாவது உடையும் உதயா மறுத்தான்.

“இதுக்கு என்ன குறைச்சல்?”

“நல்லா இருக்கு. ஆனா இது பார்ட்டிக்கு செட் ஆகாது. வேணும்னா இதையும் சேர்த்து வாங்கிக்கோ” என்றதும் ரூபிணி கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்தாள்.

பிறகு, “நீ பே பண்ணு வாங்கிக்கிறேன்” என்றாள் நக்கல் சிரிப்போடு.

“வேற எதுக்கு சாப்பிங் வந்தேன்னு நினைக்கிற?” என்று சிரித்த உதயா அதிர்ந்தவள் தோளை பிடித்து உள்ளே தள்ளி விட்டான்.

“வேற போட்டுட்டு வா” என்று துரத்தி விட்டான்.

கடைசியாக அவன் எடுத்த உடையை அணிந்து வர, உதயா சில நொடிகள் யோசித்தான்.

“நீ செலக்ட் பண்ணதே உனக்கு பிடிக்கலயா?” என்று ரூபிணி முறைக்க, “இதுல வேற கலர் இருக்கா?” என்று சேல்ஸ் கேர்ள் பக்கம் திரும்பிக் கேட்டான்.

“லிமிடட் எடிசன் சார். மூணு கலர்ல தான் இருக்கு. மிச்ச ரெண்டையும் கொண்டு வர்ரேன்” என்று விட்டு சேல்ஸ் கேர்ள் சென்று விட்டாள்.

“இது கொஞ்சம் ஓகே தான்” என்று ரூபிணி சொல்ல, “உன் டேஸ்ட்டே சரியில்ல” என்று உதயா சிரித்தான்.

“வேணாம்.. தேவையில்லாம இங்க சண்டை போடுற மாதிரி ஆகிடும். வாய மூடிட்டு நில்லு”

“உண்மைய அக்சப்ட் பண்ணிக்கவே மாட்டல?”

“மெடோனாவ லவ் பண்ண நீயெல்லாம் டேஸ்ட் பத்தி பேசக்கூடாது.”

“விஷாலும் சேம் சீப் ஐயிட்டம் தான்”

“கடுப்பாக்காத.. காலம் முழுக்க நீயெல்லாம் சிங்கிளா தான் சாவனு சாபம் விட்டுருவேன் பார்த்துக்க”

“சாரி டு சே.. இந்த நிமிஷம் ரூபிணினு ஒரு கேர்ள் ஃப்ரண்ட் இருக்கா.. நான் சிங்கிள் இல்ல” என்று உதயா கண்ணடிக்க, ஒரு நொடி ஆச்சரியபட்டவள் உடனே சிரித்து விட்டாள்.

“இருக்கட்டும் இருக்கட்டும்” என்றவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு திரும்பி கண்ணாடியில் உடையை பார்த்துக் கொண்டாள்.

சேல்ஸ் கேர்ள் மற்ற இரண்டு ஆடையோடு வந்து நின்றாள்.

“இது நல்லா இருக்கு” என்று ரூபிணி ஒன்றைத் தொட அதையே உதயாவும் தொட இருவர் முகத்திலும் புன்னகை வந்தது.

உடனே அதை எடுத்துக் கொண்டு சென்று மாற்றினாள். வெளியே வந்து காட்டிய போது அவளுக்காகவே தைக்கப்பட்டது போல் பொருந்தியிருந்தது.

“பர்ஃபெக்ட்..” என்றதும் கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டு, “இதையே வாங்கிக்கலாம்” என்றாள்.

சேல்ஸ் கேர்ள் உடனே பில் போட தயாராக, ரூபிணி உடையை மாற்ற உள்ளே சென்றாள். உதயா அவளுக்காக காத்திருக்க, “உதயா..” என்று குரல் கேட்டது.

திரும்பாமலே யார் என்று தெரிந்து விட்டதால், உதயாவிற்கு கோபத்தில் உடல் இறுகியது.

“உதயா.. என் கிட்ட பேச மாட்டியா?” என்று கேட்டுக் கொண்டு மெடோனா அவன் முன்பு வந்து நிற்க, உதயாவுக்கு பொறுமையை இழுத்துப் பிடிக்க வேண்டியிருந்தது.

மெடோனா பாவமாக பார்த்தாலும் உதயா அசராமல் வேறு பக்கம் பார்த்தான்.

“எக்ஸ்ப்ளைன் பண்ண ஒரு சான்ஸ் கொடு ப்ளீஸ்..” என்று மெடோனா அவன் கையைப்பிடிக்க, சட்டென உதறி விட்டான்.

கைக்குட்டையை எடுத்து மெடோனா தொட்ட இடத்தை துடைத்துக் கொள்ள, ரூபிணி வெளியே வந்து விட்டாள்.

மெடோனாவை பார்த்ததும் அவள் முகத்தில் நக்கல் சிரிப்பு ஒன்று வந்தது.

‘அவனுக்கே அந்த நிலைமைனா.. உன்னலாம் என்ன செய்ய போறானோ தெரியல’ என்று நினைத்தவள், “ஹேய்.. இது அந்த சீட்டர் தான?” என்று கேட்டுக் கொண்டே உதயாவிடம் வந்து நின்றாள்.

ரூபிணியின் குரலில் வேகமாக திரும்பிய மெடோனா அவளை தீயாக முறைத்தாள்.

“இவள யாருனே எனக்கு தெரியாது.. பில் கட்டிட்டு கிளம்பலாம் வா” என்ற உதயா, ரூபிணியின் கையை பிடித்துக் கொண்டு நடந்தான்.

மெடோனா இணைந்திருந்த கைகளை பார்த்து வயிறு எரிந்தாள்.

“ரெண்டையும் பேக் பண்ணிடுங்க” என்றதும் ரூபிணி ஆச்சரியமாக பார்த்தாள்.

உதயா தன் கார்டை எடுத்து கொடுக்க, பணத்தை கட்டி முடித்தனர்.

பையை வாங்கிக் கொண்டு இருவரும் வெளியேறியதும், மெடோனா பின்னால் வந்தாள்.

“உதயா ப்ளீஸ்…”

“ஹேய்.. என் பாய் ஃப்ரண்ட் பின்னாடி வராத.. சீட்டர்” என்று ரூபிணி திட்டி விட, மற்றவர்கள் திரும்பிப் பார்த்து விட்டுச் சென்றனர்.

“ஏய்.. நீ பேசாத.. உன்னை இவனுக்கு பிடிக்காது.. அது தெரியுமா உனக்கு?”

“அத பத்தி நீ ஏன் கவலைப்படுற? ஒருத்தன் கூட சீட் பண்ணியே அவன் கிட்ட போய் பேசு.. எங்களுக்கு வேலை இருக்கு” என்றவள் மெடோனாவை இடித்துக் கொண்டு நடந்தாள்.

அருகே இருந்த மற்றொரு கடைக்குள் நுழைந்ததும் மெடோனா பின்னால் வர, “இந்த நியூசன்ஸ கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க” என்று அங்கிருந்த சேல்ஸ் மேனிடம் சொல்லி வைத்தாள்.

உடனே மெடோனாவின் பாதையை மறைத்தான் அவன். மற்ற பெண்ணுக்கு ரூபிணியை தெரிந்திருக்க அவள் ஓடி வந்து, “என்ன வேண்டும்?” என்று விசாரித்தாள்.

வாங்கியிருந்த உடையோடு அணிவதற்காக அணிகலன்கள் பார்த்தனர். மோதிரம், தோடு எல்லாம் பார்த்து வாங்கி விட்டு கிளம்ப, மெடோனா வாசலிலேயே நின்றிருந்தாள்.

“இவ போக மாட்டா போல… இரு போலீஸ்க்கு ஃபோன் பண்ணுறேன்னு சொல்லுறேன்” என்று விட்டு ரூபிணி வேகமாக அவளிடம் வந்தாள்.

“மரியாதையா எங்கள விட்டு போறியா? இல்ல போலீஸ்க்கு கால் பண்ணவா?”

“நான் உன் கிட்ட பேச வரல.. உன் திமிர என் கிட்ட காட்டாத..”

“அப்படியா? செக்யூரிட்டிய கூப்பிட்டு இந்த பொண்ண மாலுக்கு வெளிய அனுப்புங்க. டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கா” என்று விட்டு ரூபிணி திரும்பி நடக்க, ஒரு பெண் மெடோனாவை அசையவிடாமல் பிடித்துக் கொண்டாள்.

ரூபிணி வேகமாக உதயாவின் கையைப்பிடித்துக் கொண்டு அடுத்த இடத்திற்குச் சென்று விட்டாள்.

மெடோனாவை சில நிமிடங்களில் செக்யூரிட்டி வந்து அழைக்க, மெடோனாவின் மனதில் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது.

ரூபிணியின் பிரபலம் நன்றாக வேலை செய்ததால் தான் யாரென்று தெரியாத அவளை கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது மற்றவர்களுக்கு சுலபமாக உள்ளது. அது மட்டுமா? அவள் வாழ ஆசைப்பட்ட வாழ்வை இப்போது ரூபிணி வாழ்ந்து கொண்டிருக்கிறாளே? அவளது கனவில் மண்ணள்ளி போட்டு விட்டு ரூபிணி சந்தோசமாக வாழ்வதா?

எப்படியாவது ரூபிணியை பழி வாங்க வேண்டும் என்ற வஞ்சத்தோடு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
12
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உதயா ரூபிணி கியூட்