Loading

 

புது வீட்டில் புது இடத்தில் ரூபிணி ஒன்றிப்போக போராடிக் கொண்டிருக்க, உதயாவின் மேனேஜர் அழைத்தார். இன்று புதிதாய் நிறுவனத்தில் பயிற்சி பெறச் சேர்ந்த ஆட்களை சந்திக்க அழைத்தார்.

வீட்டில் இருப்பதை விட அங்கு சென்று பார்ப்பது நலம் என்று கிளம்பி விட்டாள்.

புதிய ஆட்கள் நிறையவே இருந்தனர். அவரவர் தகுதிக்கு ஏற்ப தனித்தனி குழுவாக பிரித்துக் கொண்டிருந்தார்கள். சிலருக்கு ரூபிணியை அடையாளம் தெரிந்தது.

எல்லோரும் அடிப்படை பயிற்சியை முடித்து தான் இங்கே வந்திருந்தனர்.

அவர்களுக்கு எல்லாம் மேலும் சில பயிற்சிகள் நடக்க, ரூபிணி தான் பயிற்சி பெற்ற இடத்தை தேடிச் சென்றாள்.

அங்கு ஜோடியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். ஆண் பெண் இருவரும் கை கோர்த்துக் கொண்டு நடந்து கொண்டிருக்க, சத்தமில்லாமல் பின்னால் சென்று நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

இருவரும் ஒன்றாக ஒரே மாதிரியான காலடிகளை எடுத்து வைக்க வேண்டும். பெண்களுக்கு ஹீல்ஸ் கொடுத்திருக்க ஆண்கள் சூ வில் இருந்தனர்.

இருவரும் குறிப்பிட்ட தூரம் நடந்து விட்டு போஸ் கொடுத்து விட்டு திரும்பி வர, அவர்களிடம் இருந்த குறைகளை அடுக்கினார் பயிற்சியாளர்.

ஐந்து ஜோடிகளும் நடந்து காட்டிய பிறகும், ரூபிணிக்கு திருப்தியாக இல்லை.

‘ஏன் இப்படி கைய பிடிக்க யோசிக்குதுங்க? ஒரு கெமிஸ்ட்ரியே இல்ல’ என்று சலித்துக் கொண்டாள்.

ஆண் பெண் வித்தியாசமில்லாமல் அந்த தொழிலில் வேலை செய்ய வேண்டும். எப்போதும் தனியாக மட்டுமே வேலை செய்ய முடியாது.

பயிற்சி அளித்தவர் அவளை கவனித்து விட்டு, “ஹேய் ரூபிணி..” என்று புன்னகைத்தார்.

அவளிருக்கும் போதும் அவர் இங்கு வேலை செய்து கொண்டிருந்தார். மற்றவர்களும் அவளை கவனித்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

சமீபமாக அவளும் உதயாவும் தானே பேச்சுப் பொருளாக மாறி இருந்தனர்.

“ஹலோ சார்”

“எப்ப வந்த?”

“இப்ப தான்.. ட்ரைனிங் நல்லா போகுதா?”

“நீயே பார்க்குறியே”

ரூபிணி புன்னகைத்து விட்டு மற்றவர்களை பார்த்து கையாட்டினாள்.

“ஹாய்..”

“ஹாய் மேடம்”

“நல்லா பண்ணுங்க.. இன்னும் கொஞ்சம் கான்ஃபிடண்ட்டா பண்ணுங்க”

“மேடம்.. நீங்க ஒரு டெமோ காட்டுங்களேன்” என்று ஒருவன் கேட்க ரூபிணி யோசித்தாள்.

மற்றவர்களும் அதை ஆமோதிக்க, “ஓகே.. வெயிட்” என்றவள் கோட்டுக்கு முன்னால் வந்து நின்றாள்.

“என்னை‌ நல்லா வாட்ச் பண்ணுங்க” என்று விட்டு நடக்க ஆரம்பித்தாள். கேமரா முன்பு நடப்பது வேறு. இப்படி நடப்பது வேறு. ஆனாலும் அவளது நடையில் ஒரு கம்பீரம் இருந்தது.

அவள் நடக்கும் போது அவளது அங்க அசைவுகளை காட்டி எப்படி இருக்க வேண்டும் என்று மற்றவர்களுக்கு விளக்கினார் பயிற்சியாளர்.

எல்லோரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரூபிணி திரும்பி வந்து பழைய இடத்தில் நிற்க, எல்லோரும் கை தட்டினார்.

“இதுக்கு ஏன் கை தட்டல்?” என்று கேட்டவள் புன்னகையோடு தலையை குலுக்கினாள்.

“மேடம் எங்க கூட ஜோடியா நடக்கலாமே?” என்று இன்னொருவன் கேட்க, ரூபிணி உடனே தலையாட்டினாள்.

யாரை தேர்வு செய்வது? என்று அவள் பார்த்துக் கொண்டிருக்க, கதவை திறந்து கொண்டு வந்தான் உதயா.

பயிற்சியாளரை பார்க்க வந்தவன் ரூபிணியை எதிர்பார்க்கவில்லை.

“நீ இங்க என்ன பண்ணுற?”

“பர்ஃபெக்ட் டைமிங்.. இங்க வா.. என் கூட நட” என்று ரூபிணி அவனருகே சென்று கையைப்பிடிக்க, உதயா விழித்தான்.

இப்படி வந்து கையைப்பிடிப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

“நானா?” என்று கேட்டு கையை விலக்கப்பார்க்க, “நீ தான்.. சி. இ.ஓ னா நடக்க கூடாதா என்ன? வா” என்று முன்னால் இழுத்துச் சென்றாள்.

குழப்பத்தோடு அவன் இழுத்த இழுப்புக்குச் சென்றான்.

“இத கொடு” என்றவள் அவன் கையிலிருந்த ஃபைலை வாங்கி பயிற்சியாளரிடம் நீட்டினாள். உதயாவின் குழப்பத்தை அவள் கண்டு கொள்ளவில்லை.

அவன் கைக்குள் தன் கையை வளைத்துக் கொண்டாள்.

“கவனமா பாருங்க” என்று மற்றவர்களுக்கு சொல்லி விட்டு உதயாவை பார்க்க, அவனுக்கு நடப்பது ஓரளவு புரிந்தது.

“ரெடி?” என்று கேட்டதும் கண் மூடி திறந்தவன் அவனது பேன்ட்க்குள் கையை விட்டுக் கொண்டான்.

இருவரும் நேராக பார்த்தபடி நடந்தனர். எந்த தடுமாற்றமும் இல்லை. தயக்கமும் இல்லை. நேரான பார்வையில் நடந்து சென்று நின்றனர்.

ரூபிணி புன்னகையுடன் போஸ் கொடுக்க, உதயா எதுவும் செய்யாமல் நின்றான். இருவரும் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிறகு உதயா கை நீட்ட அதை பிடித்துக் கொண்டு இருவரும் திரும்பி நடந்தனர்.

உதயா இவ்வளவு சரியாக நடப்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

திரும்பி வந்ததும் பலமாக கை தட்ட, “கை தட்டுனா போதாது கத்துக்கனும்” என்றார் பயிற்சியாளர்.

உதயா திரும்பி வந்ததும் கையை விடப்பார்க்க, ரூபிணி விட வில்லை.

“இது வரை போதும்ல சார்? நான் கிளம்பட்டுமா?” என்று கேட்டு ரூபிணி தானாக உதயாவின் கையை விட்டு விட்டு, “ஆஃபிஸ்ல வெயிட் பண்ணுறேன்..” என்று சொல்லிச் சென்றாள்.

உதயா வந்த வேலையை முடித்து விட்டு தனது அலுவலகம் சென்றான்.

கதவை திறந்து உள்ளே நுழைந்ததும் ரூபிணி முறைத்தாள்.

“இங்க என்ன பண்ணுற நீ?”

“பைத்தியமா நீ?” என்று ரூபிணி வெடித்தாள்.

“வாட்? நீ தான் இப்ப பைத்தியம் மாதிரி கத்துற”

“உன் கூட டீல் பேசனேன்ல.. நான் பைத்தியம் தான் ஆகிட்டேன்..”

உதயா அவளை முறைக்க, “உன் கூட பழகுற பொண்ண பார்த்தா இப்படி தான் பிகேவ் பண்ணுவியா? காமன் சென்ஸ் இல்லையா உனக்கு?” என்று கேட்டு அவனது கோபத்தை அதிகரித்தாள்.

“என் கிட்ட நீ முன்னாடியே சொல்லிட்டு வந்துருக்கனும்”

“அப்ப மட்டும் என்னை பார்த்ததும் இஇஇ னு இளிச்சுருப்பியா?”

“உன்னை பார்த்து சிரிக்கிறதா? பெரிய கஷ்டம்”

“அப்புறம் எதுக்கு என் கூட டீல் பேசுன? வேற எவ கூடயாவது பேச வேண்டியது தான?”

“நீ தான் காண்ட்ராக்ட் கேட்ட”

“நீ தர முடியாதுனு சொல்லிருக்கனும்”

“நீ ரூமர கிளப்புவேன்னு மிரட்டுனது மறந்து போச்சா?”

“அதுக்கு நீ பயந்துட்ட.. அத நான் நம்பனுமா?”

ரூபிணி கையை கட்டிக் கொண்டு நக்கலாக கேட்க உதயா சலித்தான்.

“ஃபைன்.. இப்ப என்ன பண்ணனுங்குற?”

“முதல்ல ஒழுங்கா நடிக்க கத்துக்கோ..”

“நான் என்ன ஆக்டரா? படத்துல நடிக்குற மாதிரி நடிக்க”

“அது மாதிரி நடிச்சா அது பொய்னு ஊருக்கே தெரிஞ்சுடும்.. நேச்சுரலா நடி.. ஊருக்குள்ள நல்லவன் மாதிரி நடிக்கிறியே.. அது மட்டும் வருது?”

உதயா கோபத்தோடு இரண்டடி அவளை நெருங்கினான்.

“நான் நல்லன் தான்.. நடிக்கிறனா உனக்கு?”

“நீ எவ்வளவு பெரிய அரகன்ட்னு எனக்கு தான் தெரியும்”

“உன்னை மாதிரி இடியட் இல்லல?”

“நான் உன்னை மாதிரி அரகன்ட் இல்லங்குறத நினைச்சு சந்தோசப்பட்டுட்டு இருக்கேன்.. நீ வேற”

பேசிக் கொண்டே உதயா அருகே வந்திருந்தான். அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் ரூபிணி முறைத்துக் கொண்டிருந்தாள்.

சில நொடி அமைதிக்குப்பிறகு, “உனக்கு திமிரு அதிகம் அதிரூபிணி.. அது அடங்குற காலம் வரும்.. அப்ப தெரியும் நான் யாருனு” என்றான்.

“என் பேரு எப்படி உனக்கு தெரியும்?” என்று புருவம் சுருங்க கேட்டாள்.

யாருக்குமே தெரியாது. திடீரென இவனுக்கு எப்படி தெரிந்தது?

“உன் பேக்ரௌண்ட் செக் பண்ணப்ப கிடைச்சது..”

ரூபிணி முறைத்து வைத்தாள்.

“என்னை பத்தி நீ ஏன் தேடுற?”

“உன் பாய் ஃப்ரண்ட் பத்தி தேடுனப்ப உன்னை பத்தியும் தேடுனேன்.. ஒரு விசயம் தான் ஆச்சரியமா இருந்துச்சு அதுல”

ரூபிணி கேள்வியோடு புருவம் சுருக்கினாள்.

“உனக்கு அறிவே இல்லனு நினைச்சேன். ஆனா நல்லா படிச்சுருக்க.. எப்படி இந்த அதிசயம் நடந்துச்சு?”

“நீ முட்டாளா இருந்துட்டு உன்னை மாதிரியே நானும்னு நினைச்சுருக்க.. அது உன் தப்பு மிஸ்டர் உதயகுமார்”

“இதான் ஓவர் திமிருங்குறது” என்றவன் எதோ சொல்ல வர, கதவை தட்டும் சத்தம் கேட்டது.

அவர்கள் சுதாரிக்கும் முன்பே கதவை திறந்து கொண்டு வந்த அசிஸ்டன்ட், இருவரும் மிகவும் நெருக்கமாக நிற்பதை பார்த்து அதிர்ந்து வந்த வழியே ஓடி விட்டான்.

ரூபிணி அப்போது தான் உதயா இவ்வளவு அருகில் வந்து நிற்கிறான் என்பதை உணர்ந்தாள்.

“இடியட்.. தள்ளி நில்லு..” என்று அவசரமாக தள்ளி விட, அசையாமல் நின்றான் உதயா.

“இப்ப நீ தான் இடியட் மாதிரி பண்ணுற.. இந்த மாதிரி விசயம் தான் ரூமருக்கு ஹெல்ப் பண்ணும்?”

“அதுக்காக உன் கூட ரொமான்ஸ் பண்ணவா முடியும்?” என்று கேட்டவள் அவனது தோளில் கை வைத்து தள்ள, “தேவைப்பட்டா அதையும் செய்யனும்” என்றான் உதயா.

ஆச்சரியமாக பார்த்தாள். உதயாவா இப்படிப்பேசுகிறான்? அதுவும் அவளிடம்? சற்று முன்பு தானே சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

ரூபிணியின் ஆச்சரியத்தை கவனித்தப் பிறகே உதயாவுக்கு தான் சொன்ன விசயம் புரிந்தது. உள்ளே அதிர்ந்தாலும் வெளியே கெத்தை விடாமல் நகர்ந்து செல்ல ஒரு அடி எடுத்து வைக்க, ரூபிணியின் அடுத்த வார்த்தை அவனை அசையாமல் நிறுத்தியது.

“ஓகே.. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. ஃபேக் டேட்டிங்ல ரொமான்ஸ் இருக்க தான் செய்யும்” என்று தோளை குலுக்க, வேகமாக திரும்பி அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

திடீரென இவளுக்கு என்னவானது?

“ஓகே? அதுவும் உனக்கு?”

“கமான் மிஸ்டர்.. மூவீ டிராமல எல்லாம் நடிக்கிறவங்க இப்படித்தான் யோசிக்கிறாங்களா என்ன?”

“பட் இது மூவியும் இல்ல.. டிராமாவும் இல்ல”

“பட் இதுவும் ஆக்டிங் தானே?”

“அப்போ நான் கிஸ் பண்ணா உனக்கு பிரச்சனை இல்ல?” என்று அவனையும் மீறி கேட்டு விட்டான்.

கேட்ட பிறகு அவன் மனம் அதிர, ரூபிணி அவனை மேலும் அதிர வைத்தாள்.

“அவசியமா இருந்தா அதுலயும் எனக்கு பிரச்சனையில்ல” என்று விட்டாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
18
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இரண்டு பேரும் எலியும் பூனை மாதிரி நல்ல ஜோடி