Loading

வேலை ஒன்றுமில்லாததால் ரூபிணி விடிந்தும் மெத்தையை விட்டு எழாமல் படுத்துக் கிடந்தாள்.

கைபேசியில் அவளது பழைய விளம்பரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க, உதயாவிடமிருந்து செய்தி வந்து சேர்ந்தது.

சலிப்போடு திறந்து பார்த்தவள் கண்கள் அகலமாக விரிந்தது.

“உன் வீட்டுக்கு வர்ரேன் வெயிட் பண்ணு” என்று இருக்க, “இவன் எதுக்கு இங்க வர்ரான்?” என்று அதிர்ந்தாள்.

“நீ எதுக்கு வர்ர? என் வீட்டுக்கு நீ வேண்டாத கெஸ்ட்னு சொன்னேன்ல?” என்று கோபமாக அனுப்பி வைத்தாள்.

அவன் அதை உடனே படித்தான். உடனே பதிலும் வந்தது.

“ஒரு மணி நேரத்துல இருப்பேன்” என்று பதில் வர, ரூபிணி பல்லைக் கடித்தாள்.

“கொழுப்ப பாரு.. அரகன்ட்” என்றவள் தன் உடையை பார்த்தாள்.

முதல் முறை வந்த போது இப்படித்தான் இருந்தாள். அன்று எதிர்பாராமல் நடந்தது. இன்று வரும் போதும் இப்படியே இருந்தால் மிகவும் கேவலமாக இருக்கும் என்று புரிய மெத்தையை விட்டு இறங்கினாள்.

குளித்து முடித்து உணவை ஆர்டர் போட்டு விட்டு, கூந்தலை உலர்த்திக் கொண்டிருக்க அழைப்பு மணி ஒலித்தது.

எழுந்து வந்து வெளியே பார்த்தவள் உதயாவை பார்த்து விட்டு சலிப்போடு கதவை திறந்தாள்.

உதயா உடனே வராமல் கீழே கண்ணை காட்டினான். அவள் ஆர்டர் செய்த உணவு வந்து விட்டது. அதை அவன் வாங்கி வைத்திருக்கிறான்.

“இத ஏன் நீ வாங்குன?” என்று கடுப்போடு குனிந்து எடுத்துக் கொண்டு உள்ளே செல்ல, உதயா பின்னால் வந்து கதவை அடைத்தான்.

“டெலிவரி பண்ண வந்தவன் வச்சுட்டு போயிட்டான். நான் வாங்கல” என்ற உதயா அவளை தெளிவாக பார்த்தான்.

முதல் முறை இங்கே வரும் போது கண்ணை மறைத்திருந்த கோபம் அவளை சரியாக கவனிக்கவிடவில்லை. இப்போது தான் கவனித்தான்.

மேக் அப் இல்லாமல், எந்த வித அலங்காரமும் இல்லாமல், முதல் முறை பார்த்தான். இப்படி பார்க்கும் போது மிகவும் சிறிய பெண்ணாக தெரிந்தாள்.

“என்ன விசயம்? ஒரு மணி நேரம் ட்ராவல் பண்ணி இங்க வந்துருக்க?”

அவளை கவனிப்பதை விட்டு விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான். அவனைப்பற்றி கொஞ்சமும் அக்கறைப்படாமல் அவள் உணவை பிரித்துக் கொண்டிருந்தாள்.

“நம்ம டீல முழுசா பேசி முடிச்சுடலாம்னு வந்தேன்.”

“நான் பிரேக் அப் பண்ணிட்டேன். நீ காண்ட்ராக்ட் கொடுத்துட்ட. அவ்வளவு தான டீல்?”

உதயா மறுப்பாக தலையசைக்க, “நினைச்சேன்.. நீயாவது இவ்வளவு நல்லவனா மாறுறதாவது.. இன்னும் என்ன இருக்கு? சொல்லித் தொலை” என்று எரிச்சலாக கேட்டாள்.

“அத சொல்லுறதுக்கு முன்னாடி உனக்குத் தெரியாத ஒரு விசயத்த சொல்லுறேன்.. விஷாலும் மெடோனாவும் ஸ்கூல் டைம்ல இருந்தே லவ்வர்ஸாம்”

ரூபிணி அசைவற்று நின்றாள்.

விஷாலுக்கு முன்பு ஒரு காதல் இருந்த விசயம் அவளுக்குத் தெரியாதே. அவள் தான் முதல் காதலி என்றானே..

ரூபிணியின் முகத்தை பார்த்த உதயா, “அண்ட்.. மெடோனாவுக்கு உன்னை பிடிக்காது” என்றான்.

அதிர்ச்சியிலிருந்து விலகி கேள்வியாக பார்த்தாள்.

“அவளுக்கு என்னை ஏன் பிடிக்கனும்? இல்ல ஏன் பிடிக்காம போகனும்?” என்று கையை விரித்தாள்.

“அவளோட எக்ஸோட புது கேர்ள் ஃப்ரண்ட் நீ.. அதுனால பிடிக்காம போயிருக்கலாம்”

“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? என்ன முட்டாள்தனமான காரணம் இது?” என்று ரூபிணி கோபமாக கேட்டாள்.

உண்மையான காரணம் உதயாவின் வாழ்வில் ரூபிணி பங்கு வகிப்பது தான். அதை புரிந்து கொண்ட உதயாவுக்கு சொல்ல மனம் இல்லை.

“அத நீ அவ கிட்ட கேட்டுக்கோ.. இப்ப நான் விசயத்துக்கு வர்ரேன்”

“சொல்லு”

“உன்னை பிடிக்கலங்குறதுக்காக உன் பாய் ஃப்ரண்ட் கூட சீட் பண்ணா அவ.. அதுனால நான் அவளுக்கு பிடிக்காத உன் கூட டேட்டிங் போகலாம்னு இருக்கேன்”

ரூபிணி அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு, “நைஸ் ஜோக்.. வேற சொல்லு” என்றாள் அலட்டாமல்.

“இது ஜோக் தான். உன் கூட டேட்டிங் போற ஐடியா எனக்கு இல்ல. ஆனா அப்படி ஒரு ரூமர கிளப்ப போறேன். நீ அத மறுக்காம இருந்தா போதும்.. அத சொல்ல தான் வந்தேன்”

இரண்டு நொடிக்கு பிறகு புரிய, “வாட்?” என்று அதிர்ந்து எழுந்து விட்டாள்.

“உனக்கென்ன பைத்தியமா? உன் கூட ரூமரா? நோ சான்ஸ்” என்று கத்தினாள்.

இப்படி கத்துவாள் என்று தெரிந்து தான் வீட்டில் வைத்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தான். அதனால் அவனுக்கு பெரிய அதிர்ச்சி இல்லை.

“ஜஸ்ட்ட ரூமர்…” என்று அவன் ஆரம்பிக்க, ரூபிணி வெண்ணெய் தடவும் கத்தியை கையில் எடுத்தாள்.

“அப்படியே குத்திடுவேன்.. உன் கூட ரூமர் வந்தா என்ன நடக்கும் தெரியுமா?” என்று எகிறினாள்.

“என்ன நடக்கும்?” என்று சாதாரணமாக கேட்டான்.

“உன் கூட அஃபயர் வச்சு தான் இந்த காண்ட்ராக்ட் வாங்குனேன்னு பேசுவாங்க.. முட்டாள்” என்றவளுக்கு ஆத்திரத்தில் எதையாவது போட்டு உடைக்க வேண்டும் போல் இருந்தது.

உதயா அலட்டிக் கொள்ளாமல், “ஆமா” என்றான்.

ரூபிணிக்கு தொண்டையில் வார்த்தை சிக்கிக் கொண்டது. கோபத்தில் அவனை கண்டபடி திட்டத்தோன்றியது. ஆனாலும் முடியவில்லை. கண்ணால் அவனை எரிக்க ஆரம்பித்தாள்.

“அது தான் டீல்.. இத நீ செஞ்சா தான் காண்ட்ராக்ட்.. ஜஸ்ட் உன் ஸ்டுப்பிட் எக்ஸ பிரியுறதுக்காக அவ்வளவு பெரிய காண்ட்ராக்ட தூக்கி கொடுத்துடுவனா?”

“அதுக்காக என் கேர்க்டர ஸ்பாயில் பண்ண பார்ப்பியா?”

“ரூமர் பெருசா அஃபக்ட் ஆகாது”

“இந்த வார்த்தைய உன்னாலயே நம்ப முடியாது.. என் கிட்ட சொல்லாத” என்று பாய்ந்தாள்.

அவனால் கூட அதை நம்ப முடியாது தான். ஒரு முறை பெயர் கெட்டு விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் அவனது நிறுவனத்திற்குள் அந்த மாதிரி எதையும் அவன் அனுமதிப்பதில்லை.

ஆனால் இப்போது அவனை ஏமாற்றிய மெடோனாவை பழிவாங்கியே தீர வேண்டும். அவளது கண்ணில் ரூபிணிக்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பது போல் விழ வேண்டும். அது தான் அவனது முதல் வெற்றி. அவளை மனதளவில் அடிக்கக் கூடிய ஒரே வழி.

“இந்த பேர நான் வாங்கிட்டா.. அடுத்து நான் எங்க போனாலும் எல்லாரும் என்னை கூப்பிடுவானுங்க. அங்கலாம் வந்து நீ சமாளிப்பியா? இல்ல நீ இது பொய்னு பேசுவியா? என்ன நினைச்சு இந்த முடிவுக்கு வந்த நீ?”

“ரூபிணி…”

“சட் அப்..”

“யூ சட் அப்.. என்னனு புரிஞ்சுக்காம கத்துறதே உன் வேலையா போச்சு”

“எத புரிஞ்சுக்கல? நீ பேசுறது உனக்கே அபத்தமா இல்ல?”

“இல்ல”

“யூ… அன்னோயிங் அரகன்ட்… எவ்வளவு நாள் ஆசை என் பேர இப்படி கெடுக்கனும்னு?”

“உன் பேர கெடுக்கல.. டேட்டிங் ரூமர் தான்.. அஃபயர் ரூமர் ஆகாது”

“அப்படினு யாரு சொன்னா? ஆச்சுனா என்ன செய்வ?”

“ஆகாம பார்த்துக்கலாம்”

“எப்படி? எப்படினு சொல்லு பார்க்கலாம்” என்று அவனை நோக்கி வேகமாக வந்து நின்றாள்.

“கொஞ்சம் ரிஸ்க் தான்.. ஆனா நிஜம்மாவே நாம டேட் பண்ணுறதா காட்டிக்கலாம். அப்போ அஃபயர்னு தோனாது”

“ஓ.. ஃபேக் டேட்டிங்? சீரியஸ்லி? எப்ப இருந்து இப்படி பைத்தியம் ஆன நீ? போய் நல்ல டாக்டரா பாரு.. என்னால இது முடியாது”

“அப்ப காண்ட்ராக்ட் கிடையாது”

கத்தியை அவன் மீது தூக்கி எறிந்தாள். மடியில் விழுந்த போதும் அவன் கொஞ்சமும் அசையவில்லை.

“தேவையில்ல.. உன் காண்ட்ராக்ட்டும் தேவையில்ல.. உன் கூட வர்ர பேரும் எனக்கு வேணாம். இந்த வழில தான் நான் போகனும்னா.. என்னைக்கோ போயிருப்பேன். எவ்வளவோ பண்ணிருப்பேன். எனக்குனு இருக்க நல்ல பேர கெடுத்துட்டு உன் கம்பெனியில நான் வளர வேணாம். உன் கம்பெனி மேல இருந்த மரியாதைய நீயே கெடுத்துட்ட.. கெட் அவுட்”

கத்தி விட்டு ரூபிணி வாசலை கை காட்ட, உதயா எதோ படம் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்தான்.

“உன்னை தான் சொல்லுறேன்.. கெட் அவுட்..” என்று மீண்டும் கத்த, உதயா சலிப்போடு பெருமூச்சு விட்டான்.

“நீ எப்பவும் ஒரு முன்கோபக்காரினு எனக்கு நல்லா தெரியும். இவ்வளவு பேசுவனு இன்னைக்கு தான் பார்க்குறேன்”

“உதயா.. என் பொறுமைய சோதிக்காத.. போயிடு” என்று பல்லைக் கடித்தாள்.

“ஆனா நான் எவ்வளவு பெரிய ஆளுங்குறத நீ அடிக்கடி மறந்துடுற” என்று ஒரே நிலையில் பேசினான்.

ரூபிணிக்கு தான் நிமிடத்திற்கு நிமிடம் இரத்த அழுத்தம் ஏறியது.

“இப்ப போறியா? போலீச கூப்பிடவா?”

“கூப்பிட்டா.. நான் கிளப்ப வேண்டிய ரூமர் தன்னால கிளம்பிடும்.. கூப்பிடு” என்றான் அமைதியாக.

ரூபிணி பல்லைக் கடித்துக் கொண்டு அருகே வந்து அவனது தோளைப்பிடித்து தள்ளினாள்.

“எந்திரிச்சு வெளிய போ” என்று கத்தியவளின் கையைப்பிடித்த உதயா அருகே இருந்த மற்றொரு சோபாவில் தள்ளி விட்டான்.

அவ்வளவு சுலபமாக அவளை தள்ளி விடுவான் என்று எதிர்பார்க்காமல் அதிர்ந்து பார்த்தாள் ரூபிணி.

“கத்தி முடிச்சுட்டனா நான் சொல்லுறத கேளு.. உன் சம்மதம் இருந்தாலும் இல்லனாலும் ரூமர் வரத்தான் செய்யும். நீ காண்ட்ராக்ட் சைன் பண்ணாலும் இல்லனாலும், இந்த விசயத்த எப்படி மீடியால கொடுக்குறதுனு எனக்கு தெரியும். நான் பேச வந்தது நீயும் சேர்ந்து ஒத்துழைச்சா சுமூகமா போயிடுமேனு தான். மத்தபடி நீ சம்மதிச்சே ஆகனும்னு இல்ல.. புரியுதா?”

ரூபிணி இமைக்க மறந்தாள். அவள் சம்மதம் இருந்தாலும் இல்லா விட்டாலும் செய்வானா? அவனது பதவிக்கு அவன் பேச்சு ஊர் முழுவதும் எடுபடும். அவள் இருக்கும் இடத்திற்கு யாருமே அவளை நம்ப மாட்டார்கள்.

உண்மை நிலை நெத்தியில் அறைய, உதயாவை வெறுப்போடு பார்த்தாள்.

“ஹவ் சீப்” என்று வெறுப்பை உமிழ, அவன் கண்டு கொள்ளவில்லை.

“இப்ப கொஞ்சம் புரிஞ்சுருச்சுனு நினைக்கிறேன். சோ.. நீ காண்ட்ராக்ட் சைன் பண்ணி.. என் கூட டேட்டிங் போற மாதிரி நடிச்சா.. காண்ட்ராக்ட் பீரியட் முடியும் போது நாம பிரேக் அப் பண்ணிட்டோம்னு விசயம் முடிஞ்சுடும். இல்லனா… நீ என் கூட அஃபயர்ல இருக்க.. இன்னும் இருக்க.. வாழ் நாள் முழுக்க இருக்கனு சொல்லிடுவேன். நீ வேற யாரு கூட டேட்டிங் போனாலும், கல்யாணமே பண்ணாலும் உன் பேர் என் பேரோட இணைஞ்சது மாறவே மாறாது. இன்னாரோட பொண்டாட்டினு சொல்லாம.. உதயாவோட அஃபயர்ல இருந்தவ ரூபிணி.. அவளுக்கு கல்யாணமாம்னு பேசுவாங்க. எப்படி வசதி?”

ரூபிணியின் தோள்கள் துவண்டது. ஒப்பந்தம் கேட்கும் போது இப்படி ஒரு இடி வரும் என்று நினைக்கவில்லையே. தெரிந்திருந்தால் கேட்டிருக்கவே மாட்டாளே. அவளது மனதில் உதயாவின் மீதிருந்த வெறுப்பு பல மடங்கு அதிகரித்தது.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment