Loading

உயிர் – 4

அகிலன் ஆதவ்வை போல் கிடையாது. சற்று விளையாட்டுத்தனமாக இருப்பவன். எதையும் சீரியஸாக மண்டைக்குள் ஏற்றிக் கொள்ள மாட்டான்.

தற்பொழுது படிப்பை முடித்துவிட்டு அவனின் தந்தையுடன் சேர்ந்து அவர்களின் தொழிலை நடத்த துவங்கியிருக்கிறான்.

ருக்மணியையும் படிப்பை முடித்தவுடன் புண்ணிய கோடியின் சார்பாக அவர்களின் தொழிலை வழிநடத்த அழைத்திருந்தனர். ஆனால், அவரின் சார்பாக எதையும் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என மறுத்து விட்டாள்.

ஆனாலும் அவர்களின் வியாபாரத்தில் கிடைக்கும் புண்ணிய கோடியின் குடும்ப பங்கை இரண்டாக பிரித்து புண்ணியகோடிக்கும், விசித்ராவிற்கும் மாதா மாதம் வங்கி கணக்கில் போட்டு விடுவார் கணபதி.

இடையில் கோமதியை யாரும் கண்டு கொள்வது கிடையாது. அவர்கள் இவர்களின் வீட்டிலேயே இருப்பதால் அவர்களுக்கு என தனியாக பங்கு கொடுப்பதும் கிடையாது. அனைத்துமே புண்ணியகோடியிடம் இருந்து தான் அவருக்கு போய் சேரும்.

என்ன தான் அவரின் உறவு வேண்டாம் என்று எண்ணினாலும், அவரின் தயவு தேவைப்படாத அளவிற்கு இவரிடம் வசதி இருந்தாலும் கூட, அவரின் மனைவி என்ற அங்கீகாரத்திற்காகவே ஒவ்வொரு மாதமும் அந்த பணத்தை பெற்றுக் கொள்வார் விசித்ரா.

“சொல்லு அகில் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.. வந்த பொருட்களை இப்படித்தான் திருப்பி அனுப்புறதா.. இதான் நீ பிசினஸ் பண்ணி கிழிக்கிற லட்சணமா”.

“அண்ணா.. இல்லண்ணா.. அப்பா பிபி டேப்லெட் போடுறதுனால அவங்களால மிட் நைட்ல எழுந்திரிக்க முடியாது. நைட் 3’0 கிளாக் ஸ்டாக் வந்துடுச்சுன்னு கால் வந்துச்சு. நான் தான் தூக்க கலக்கத்துல ஏதோ உளறி இருக்கேன் போலருக்கு. சாரி அண்ணா”.

“என்ன தூக்க கலக்கத்துல உளறிட்டியா.. ஐ அக்ரி சித்தப்பா பிபி பேஷண்ட். அவங்களால கண் விழிக்க முடியாது. உனக்கு எங்க போச்சு அறிவு? சரக்கு வருதுன்னு தெரியும்ல.. அப்ப கண்ணு முழிச்சி இருக்கணும்ல.. எங்களுக்கும் நேத்து 1’0 கிளாக் தான் ஸ்டாக் வந்துச்சு. எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டு நான் வீட்டுக்கு போகவே மார்னிங் 4’0 கிளாக் ஆயிடுச்சு. எங்களுக்கெல்லாம் இல்லையா தூக்க கலக்கம்.. நாங்கெல்லாம் வொர்க் பண்ணல”.

எந்த பக்கம் திரும்பினாலும் சரியாக சிக்சர் அடிக்கும் தன் அண்ணனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி அமர்ந்திருந்தான் அகிலன்.

“இங்க பாரு அகில் நீ ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது. ஏற்கனவே மாமா பிசினஸை பொறுப்பா பார்த்துக்கிறது கிடையாது. சித்தப்பா மட்டும் தான் சரியா நடத்திட்டு இருக்காங்க. இப்ப அவங்களுக்கும் உடம்பு முடியாம போயிடுறதால நீ தான் இனி இந்த பிசினஸை கரெக்டா ரன் பண்ணனும். ஒரு விஷயத்தை நாம செய்யுறோம்னு கையில எடுத்துட்டா.. அதை முன்னேற்றத்துக்கு தான் கொண்டு போகணுமே தவிர, கீழே இறக்கி விடக்கூடாது” என்றவனோ தன் ஒற்றைப்புருவத்தை உயர்த்தி அவனை உறுத்து விழித்தவாறு, “நான் சொல்றது உனக்கு புரியுதுல” என்றான் கராரான குரலில்.

“ம்ம்.. புரியுது ப்ரோ.. இனி இதுபோல நடக்காம பார்த்துக்குறேன்”.

“குட்.. இப்போ ஸ்டாக் எல்லாம் உங்ககிட்ட டிமாண்ட் ஆகி இருக்குமே வந்த சரக்கையும் ரிட்டன் போட்டாச்சு. இப்போ எப்படி மேனுஃபாக்சரிங் யூனிட்டை ரன் பண்ணுவீங்க”.

“திரும்ப அவங்க கிட்ட பொருளை கொண்டு வர சொல்லலாம்னு இருக்கேன் ப்ரோ”

“கிழிச்ச.. அது வரைக்கும் உன்கிட்ட ஆர்டர் கொடுத்த கஸ்டமர்ஸ், ஹோல்சேல் ஆர்டர் கொடுத்த ஷாப் ஓனர்ஸ்க்கு என்ன பதில் சொல்லுவ.. இங்க பாரு அகில், பீ சீரியஸ்” என்றவனோ சற்று நேரம் தன் விழிகளை மூடி நெற்றியை நீவி சிந்தித்தவாறு, “ஓகே, நான் உனக்கு கொஞ்சம் ஸ்டாக்ஸ் கொடுக்குறேன். அதை வச்சு மேனுஃபாக்சரிங் ஸ்டார்ட் பண்ணு.. உங்களுக்கு பொருள் வந்ததும் நான் உனக்கு கொடுத்ததை சரியா எனக்கு திரும்ப கொடுக்கணும்”.

“நமக்குள்ள என்ன ப்ரோ..” என்று அவன் சிரித்துக் கொண்டே கூறவும்.

“சொந்தம் வேற.. தொழில் வேற அகில்.. இது தான் நான் உன்கிட்ட முன்னாடியே சொன்னேன். பிசினஸ் விஷயத்துல எதையும் ஈஸியா எடுத்துக்க கூடாது. எல்லாத்தையும் சரியா செய்யணும். பிசினஸால குடும்பத்துக்குள்ள எந்த ஒரு சின்ன பிரச்சனையும் வந்துட கூடாது” என்றான் திடமான குரலில்.

அவன் கூறியதை கேட்ட அகில் உடனே சம்மதித்து விட. அதன்படி யாருக்கோ தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்ட ஆதவ் இவர்களிடமிருந்து சில பொருட்களை எல்லாம் அவர்களின் குடோனிற்கு அனுப்பும் படி உத்தரவிட்டான்.

“சித்தப்பாவும், மாமாவும் மேனுஃபாக்சரிங் யூனிட் மட்டும் போதும்னு அதையே மெயின்டெயின் பண்ணிக்கிட்டாங்க. இப்போ நீ பிசினஸை கையில எடுத்த பிறகு இதை ஒரு ஸ்டெப் மேல கொண்டு போகணும் இல்ல அகில்”.

“ஆமாம் ப்ரோ, எனக்கும் சேல்ஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு ஒரு ஐடியா இருக்கு”.

“வெரி குட். உன்னுடைய ஐடியாஸை நீ சொல்லு. அதை மேற்கொண்டு எப்படி கொண்டு போகணும்னு நான் உனக்கு சொல்றேன். ஏதாவது டவுட்ஸ் இருந்தா தயங்காம என்கிட்ட கேளு.. எந்த ஹெல்பா இருந்தாலும் நான் உனக்கு பண்றேன்”.

இப்பொழுது தான் ஆதவ்வின் முகம் பளிச்சென்ற புன்னகையை உதிர்த்தது.

“தேங்க்யூ சோ மச் அண்ணா. கண்டிப்பா உங்களுடைய ஹெல்ப் இல்லாம என்னால நெக்ஸ்ட் ஸ்டெப் மூவ் ஆன் ஆக முடியாது. நான் நாளைக்கு உங்களுக்கு என்னுடைய பிளான்ஸ் என்னன்னு டீடைல்ஸ் சொல்றேன்”.

அவனுக்கு மன நிறைவான புன்னகையோடு ஒரு தலையசைப்பை கொடுத்தவன். தன் கையில் ஏதோ ஒரு பைலை வைத்து பார்த்துக் கொண்டே, “ஸ்வீட் ரொம்ப நல்லா இருந்ததோ?” என்றான் மீண்டும்.

“அதான் சொன்னேனே அண்ணா.. இன்னைக்கு ருக்மணிக்கு பர்த்டே. அதனால அக்காவுக்காக ஸ்பெஷலா மேடம் ஸ்வீட் பண்ணி இருந்தாங்க ரொம்பவே நல்லா இருந்தது”.

“நல்லா இருந்ததுன்னு நீயே சாப்பிட்டு சொன்னா மட்டும் போதாது. எல்லாருக்கும் கொண்டு வந்து தரணும்”.

அவனின் வார்த்தையில் அவனை நம்ப முடியாத பார்வை பார்த்த அகிலன், “அண்ணா உங்களுக்கு எங்க பிடிக்காதோன்னு தான்..”.

“நம்ம மாமா பண்ண தப்புக்கு அவங்களையும் அவங்க பொண்ணையும் குத்தம் சொல்லி என்ன ஆகப்போகுது. ஆரம்பத்துல அவங்க மேல நிறையவே கோபம் இருந்துச்சு. விவரம் தெரியாத வயசுல நம்ம வீட்ல இருக்கிறவங்க பேசுறது எல்லாம் உண்மைனு நம்பி ரொம்பவே கோபப்பட்டேன். வளர வளர தான் எது தப்பு எது சரின்னு புரிஞ்சுக்க முடிஞ்சது”.

“ஆமாண்ணா நான் கூட சின்ன வயசுல அவங்க மேல தப்புன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். அனுகிட்ட கூட நிறைய தடவ சண்டை போட்டு இருக்கேன். ஆனா, அவங்க மேல எந்த தப்பும் இல்லைனு தெரிந்த பிறகு மாமா மேல தான் கோபம் கோபமா வருது. இப்படியா ஏமாத்துவாரு”.

“ஆனா, அவங்களும் கொஞ்சம் சுதாரித்து இருந்திருக்கணும் இல்ல.. இப்படி ஏமாந்துட்டு பின்னாடி பீல் பண்ணி என்ன பண்ண முடியும்?”.

ஆதவ்வின் மனநிலையை அகிலனால் சற்றும் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்படி பேசினால் அப்படி பேசுகிறான். அப்படி பேசினால் இப்படி பேசுகிறான் என்ற மனநிலையோடு அவனின் வார்த்தைக்கு நாலா புறமும் தன் தலையை உருட்டி வைத்தான்.

*****

“ஏய் போதும் டி.. எவ்வளவு தான் சாப்பிடுவ” என்ற ருக்மணியின் வார்த்தைகளுக்கு எல்லாம் செவி சாய்க்காத அனுராதா தன் வாய்க்குள் பானிபூரிகளை அடுக்கிக் கொண்டே இருந்தாள். இடையே பல திட்டுகள் வேறு.

“எனக்கு வர கோபத்துக்கு நீங்களாவது உங்க பணமாவதுனு இப்பவே அந்த வீட்டை விட்டு வெளியில் வந்துடனும் போல இருக்குக்கா” என்றாள் தன் வாய்க்குள் திணித்திருந்த பானிபூரியோடு  வார்த்தைகள் குழறியபடி.

“ஏய் பார்த்து டி.. முதல்ல வாயில இருக்குற பானிபூரிய முழுங்கிட்டு பேசு. தொண்டையில அடைச்சுக்க போகுது” என்றவாறு அவளிடம் தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டி இருந்தாள் ருக்மணி.

அதை வாங்கி வேகமாக பருகியவள் கோபத்தில் மூச்சு வாங்க, “அவங்க பேச்சும் சரியில்ல, பார்வையும் சரி இல்ல என்னை பார்த்தா அவங்களுக்கு எப்படி இருக்குதாம்”.

“சரி, சரி போதும். நீ கேட்டன்னு தான் உன்னை இங்க கூப்பிட்டு வந்தேன். ஆனா இன்னைக்கு ரொம்ப அதிகமாயிடுச்சு. கோபம் வந்தா எவ்வளவு சாப்பிடுறோம்னு கூட கணக்கில்லாம இப்படியா சாப்பிடுவ. உடம்பு என்னத்துக்கு ஆகுறது? கிளம்பு” என்றவாறு கடைக்காரருக்கு பணத்தை கொடுத்த ருக்மணி அனுராதாவை அங்கிருந்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

அனுராதா தன் கோபம் மொத்தத்தையும் எப்பொழுதும் உணவில் தான் காட்டுவாள். இங்கே வந்துவிட்டால் போதும் தன் குடும்பத்தினர் மீது காட்ட முடியாத கோபம் மொத்தமும் தீரும் மட்டும் பானிபூரியை கணக்கின்றி உண்டு கொண்டே இருப்பாள்.

வண்டியில் ஏறிய பின்னரும், “ஏன்கா அதுக்குள்ள அழைச்சிட்டு வந்துட்டீங்க. இன்னும் இரண்டு பிளேட் சாப்பிட்டு வந்து இருக்கலாம்ல”.

“அடிப்பாவி, சரியான பானி பூரி சைக்கோவா இருக்க.. எவ்வளவு சாப்பிட்டாலும் உனக்கு உடம்பு போட மாட்டேங்குதுன்ற திமிர்ல ஆடுறியா” என்று ருக்மணி எடுத்துக் கொடுக்கவும் தான் நினைவு வந்த அனுராதா, “ஆமாக்கா, அன்னைக்கு அந்த மிஸ்ஸான இந்தியா என்னை என்ன சொன்னாங்க தெரியுமா.. இவ்வளவு சாப்பிடுறியே உனக்கு கொஞ்சமாவது உடம்பு வைக்குதா பாரு.. உடம்பு முழுக்க வினை இருந்தா எப்படி உடம்பு வைக்கும்னு ஒரு மாதிரி பேசிட்டாங்க”.

“அனு நான் உன்கிட்ட பலமுறை சொல்லி இருக்கேன். அவங்க பேசுறது எல்லாம் காதுல வாங்காத. அப்படி உன்னால அங்க இருக்க முடியலைன்னா எங்களோட வந்துடுங்க”.

“சரி சரி இனி நான் எதுவும் பேசல” என்றவள் சொன்னது போலவே சற்று நேரம் அமைதியாக வரவும்.

அவளின் அமைதி ருக்மணிக்கு தான் என்னவோ போல இருந்தது. எப்பொழுதும் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே வருபவள் இன்று அமைதியாகிவிடவும் அவளின் மௌனமும் இவளுக்குள் வருத்தத்தை கொடுக்க.

“அப்புறம் காலையில ஏதோ கல்யாணம் செஞ்சுக்க போறேன்னு சொன்னியே மாப்பிள்ளையை நீயே பாத்துட்டியா இல்ல நாங்க பாக்கணுமா” என்று பேச்சு கொடுத்தாள்.

“ஏன்க்கா நீ வேற.. கல்யாணம்னாலே வெறுப்பா இருக்கு”.

“என்னடி என்னை போலவே சொல்ற”.

“ஆமா, உன்னோட சேர்ந்து சேர்ந்து நானும் உன்ன போலவே ஆகிட்டேன் போலருக்கு”.

தன் தந்தையின் தவறான முன்னுதாரணம் திருமணத்தை பற்றிய பயத்தை பெண்கள் இருவருக்குள்ளும் விதைத்திருந்தது.

ருக்மணிக்கு சிறு வயது முதலே திருமண வாழ்க்கையின் மேல் அப்படி ஒரு வெறுப்பு.

யாரையும் சார்ந்து இருக்க கூடாது.

எதற்காக திருமணம் செய்ய வேண்டும்?

திருமணம் செய்து தான் ஆக வேண்டுமா?

ஏன், ஒரு‌ பெண் தனியாக தன் வாழ்க்கையை வழிநடத்த முடியாதா என்று ஏதேதோ எண்ணங்கள் அதன் விளைவு, திருமணமே செய்து கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துவிட்டாள்.

ருக்மணி கொஞ்சமாக அவளின் வாயை கிளறி விட்டதும் வழக்கம் போல் வளவளக்க தொடங்கி விட்டாள் அனுராதா. இப்பொழுது தான் ருக்மணிக்குமே மன நிறைவாக இருந்தது.

******

கதையை படித்து விட்டு உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்