
அத்தியாயம் 10
” என்ன இரண்டு பேரும் வெட்டியா பேசிக்கிட்டு இருக்கீங்க . காலேஜிக்கு டைமாகலையா. வாங்க போய் சாப்பிடுவோம் ” என்றார் ராஜன் . மகள் , மனைவியிடம் எப்படியாவது தப்பித்தால் போதுமென்று .
பேக்கை எடுத்துக் கொண்ட சந்தியா ,” பாய் பா , பாய் மா ” என்றாள் .
” ஆல் தி பெஸ்ட் ” என்றார் ராஜன் .
” ஓகே பா ” என்ற சந்தியா முகமலர்ச்சியாக பஸ் ஸ்டாப்பிற்கு சென்றாள் .
ராஜன் , ஈஸ்வரி இருவரும் மன நிறைவாக அவளை பார்த்து நின்றனர் .
” என்னங்க சந்தியா இப்போ சந்தோஷமா இருக்க காரணம் சத்யா தான் . அவன் சந்தியா காதலை ஏத்துக்கலைனா என்ன செய்றது ” என்று கவலையாக கேட்டார் ஈஸ்வரி.
” அவன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டியாவது என் மகளின் கழுத்தில் தாலி கட்ட வைத்துவிடமாட்டேன் . நீ கவலைப் படாதே ஈஸ் , நம்ம சந்தியா எப்போதும் சந்தோஷமா இருக்க என்னால் முடிந்ததை நான் செய்வேன் ” என்றார் ராஜன்
‘ ஓஹோ ! பாரு டா . இனி உன் மகள் சிந்தும் கண்ணீரை நிறுத்த வழி தெரியாது நிற்க போகிறாய் ‘ என்ற விதி ராஜனை பார்த்து நக்கலாக சிரித்தது .
ஒரே படப்படப்பாக உணர்ந்தாள் சந்தியா . காலேஜ் பஸ்ஸில் ஏறி அமர்ந்தவள் , தீப்ஷீயிடம் என்னென்ன சொல்ல வேண்டும் என்று மனதில் முடிவெடுத்துக் கொண்டிருந்தாள் .
காலேஜ் வந்துவிட , ஒரு வித பயத்தில் நடந்துக் கொண்டுவந்தவள் , ஒரு இடத்தில் கல் இருக்க அதை கவனிக்காமல் சென்றவள் , கால் தடுக்கி விழப் பார்த்தாள் .
நல்ல வேளை அங்கே வந்த பாலா , அதாங்க முதல் நாள் சந்தியாவை கலாய்த்த ஐவரில் ஒருவன் , நம்ம சத்யாவின் நண்பன் , சந்தியா கீழே விழாதது போல் அவள் கையை பிடித்துக் கொண்டான் .
தன்னை நிலை படுத்துக் கொண்ட சந்தியா , வேகமாக தன் கையை அவனிடம் இருந்து எடுத்தவள் , ” தேங்க்ஸ் அண்ணா , நல்ல வேளை நீங்க கீழே விழாமல் பிடிச்சிட்டீங்க , இல்லை என்றால் என் மானமே போய் இருக்கும் ” என்றாள் சந்தியா .
” பராவாயில்லை . ஏன் சிங்கம் ஏதாவது நம்ம காலேஜிற்குள் வந்துவிட்டதா ” என்றுக் கேட்டான் பாலா .
ஒன்னும் புரியாமல் திரு திருவென முழித்துக் கொண்டே நின்றாள் சந்தியா .
” இல்லை ஏதோ பயந்துக் கொண்டே வந்ததுப் போல் இருந்தது அதான் கேட்டேன் ” என்றான் பாலா .
” நான் பயந்துட்டு வரல , டென்ஷனா வந்தேன் . பாய் அண்ணா ” என்றவள் தன் கிளாஸ்ஸை நோக்கி சென்றாள் .
‘ ஓஹோ ! இதற்கு பெயர் டென்ஷனா . சரி தான் ‘ என்று நினைத்த பாலா சென்றுவிட்டான் .
தன் இடத்தில் சென்று அமர்ந்தவள் , தீப்ஷீ வருகிறாளா என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் .
அவள் நல்ல நேரம் , சரியாக பத்து நிமிடத்தில் கிளாஸ் உள்ளே வந்தாள் தீப்ஷீ .
” ஹாய் தீப்ஷீ , குட் மார்னிங் ” என்றாள் சந்தியா .
‘ என்னடா பக்கத்தில் வருவதற்குள் இவள் ஹாய் சொல்கிறாள் . நமக்காக தான் காத்திருக்காளோ ? ‘ என்று மனதில் நினைத்தவள் வெளியில் , ” குட் மார்னிங் சந்தியா ” என்ற தீப்ஷீ , அவள் அருகில் சென்று உட்கார்ந்தாள் .
ரொம்ப நேரம் தயங்கிய சந்தியா , ‘ தீப்ஷீயிடம் சொல்லவில்லை என்றால் அவள் சத்யாவிற்கு வேறு பெண்ணை தேர்ந்தெடுத்தாள் என்ன செய்வது ? சந்தியா தைரியமா அவ கிட்ட சொல்லிடு ‘ என்று மனம் சந்தியாவிற்கு தைரியம் கொடுக்க , ” தீப்ஷீ , உன்கிட்ட ஒன்னு சொல்லணும் ” என்றாள் சந்தியா .
‘ ஒருவழியாக வாயை திறந்துட்டாள் ‘ என்று மனதில் நினைத்த தீப்ஷீ , ” சொல்லு சந்தியா ” என்றாள் ஒன்றும் அறியாத குழந்தை போல் .
” என்னை தப்பாக நினைக்க மாட்டாயே ” .
” உன்னை போய் தப்பாக நினைப்பேனா . எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லு சந்தியா ” .
” தீப்ஷீ , நான் சத்யாவை லவ் பண்ணுறேன் ” என்றாள் சந்தியா .
ஏற்கனவே தீப்ஷீ அறிந்த விஷயம் தான் என்றாலும் முகத்தில் ஆச்சர்யமும் , அதிர்ச்சியும் காட்டியவள் , ” எப்படி சந்தியா , பார்த்த மூன்று நாளில் காதலிக்க முடியும் ” என்றுக் கேட்டாள் .
” தீப்ஷீ , எனக்கு சத்யாவை இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரியும் ” என்றாள் சந்தியா .
” ஆனா, சத்யா உன்னை மூன்று நாள் முன்பு தானே பார்த்தான் ” .
” ஆம் , சத்யாவிற்கு என்னை தெரியாது தான். ஆனா, எனக்கு சத்யாவை நல்லா தெரியும் ” என்றாள் சந்தியா .
” என்ன பார்த்ததும் லவ்வா ? பார்க்கவும் அழகாக இருக்கிறான் , நல்லா படிக்கிறான் , யாரிடமும் கோபமாக பேசமாட்டான் . அதான் உனக்கு பிடித்துவிட்டதா ” என்று கேட்டாள் தீப்ஷீ , சந்தியாவின் காதல் உண்மையா, இல்லை வெறும் ஈர்ப்பினால் வந்த காதலா என்று தெரிந்துக்கொள்ள அவளிடம் கொக்கி போட்டாள் .
” இல்லை தீப்ஷீ , நீ சொன்ன இயல்புகள் கொண்டு நிறைய பேர் இருக்காங்க. ஏன் தேவ் கூட நீ சொல்ற இயல்போட தான் இருக்கார். ஆனா எனக்கு அவங்க மேல் காதல் வரல்லையே, சத்யா மேல் தான் வந்திருக்கு . எனக்கு சத்யாவை ரொம்ப பிடிக்கும் தீப்ஷீ . என்னுடையது ஆத்மார்த்தமான காதல் தான் ” என்று தெளிவாக சொன்னாள் தீப்ஷீ .
” சத்யாவை அந்த தேவ்வோடு சேர்த்து பேசாதே . சரி உன்னுடையது ஆத்மார்த்தமான காதல் தான் . ஆனா சத்யாவை பற்றி உனக்கு எந்த அளவு தெரியும் என்று எனக்கு தெரியாது . அவனை பற்றி சில உண்மைகள் சொன்னால் , அப்பவும் நீ சத்யாவை காதலிப்பாயா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை ” என்றாள் தீப்ஷீ .
” ஓ ! நீ சத்யா அம்மா , அப்பாவை பற்றி சொல்லுறீயா ” என்றுக் கேட்டாள் சந்தியா .
இதுவரை இயல்பாக பேசிக் கொண்டிருந்த தீப்ஷீ , இப்போ ஒருவித கோபத்தோடு , ” ஆமா , உனக்கு எப்படி அவங்களப் பற்றி தெரியும் ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” இரு தீப்ஷீ சொல்லுறேன் . உனக்கு ஆர்.ஈ.எஸ் ஜுவல்ஸ் தெரியுமா ? “.
” ஏன் தெரியாது அந்த நகை கடைக்கு தான் இந்தியா முழுவதும் கிளைகள் இருக்கே . பெரிய பெரிய ஸ்டார்ஸ் வைத்து விளம்பரம் செய்றாங்க . அதான் டிவியை போட்டாலே அவங்க விளம்பரம் தான் வருதே . அப்படி இருக்க தெரியாமல் இருக்குமா ” என்றாள் தீப்ஷீ .
” அந்த கடைக்கு ஒரே வாரிசு நான் தான் ” என்றாள் சந்தியா .
இப்போது உண்மையாகவே அதிர்ந்து போனாள் தீப்ஷீ .
” எனக்கு ஒன்னும் புரியல சந்தியா ” .
” உனக்கு நான் முதலில் இருந்து சொன்னா தான் புரியும் . நீ அவசியம் இன்னைக்கு கிளாஸ் அட்டன் பண்ணனுமா ? ” என்றுக் கேட்டாள் சந்தியா .
” இல்லை , ஆஃப்டர்நூன் கிளாஸ்ஸை அட்டன் செய்யலாம் . இப்போ நாம் கேன்டீன் போவோம் , எனக்கு தலை வலிக்குது , டீ குடித்தால் தான் சரியாகும் ” என்றாள் தீப்ஷீ .
இருவரும் கேன்டீன் சென்று , தங்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்தவர்கள் அங்கிருந்து டேபிளில் உட்கார்ந்தனர் .
” இப்போ சொல்லு சந்தியா ” .
” சத்யாவை நான் முதல் தடவ பார்த்தது பஸ்ஸில் தான் . நான் அன்னைக்கு லேட்டா தான் கம்ப்யூட்டர் கிளாஸ்ஸிற்கு கிளம்பினேன் அதான் வேறு வழியில்லாமல் கூட்டமான பஸ்ஸில் ஏறிவிட்டேன் . ஒருவன் கூட்டத்தில் என்னை உரசிக் கொண்டே, கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த முயற்சி செய்தான் . பயத்தில் எனக்கு அழுகையே வந்தது ஆனா , எப்படி என்னை காப்பாற்றிக் கொள்வதுனு தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தேன் . அப்போ சத்யா வந்து எனக்கும் அந்த பொறுக்கிக்கும் நடுவில் நின்றுக் கொண்டான் ” .
” என்னோட ஸ்டாப் வர நான் , சத்யா , அந்த பொறுக்கி மற்றும் சிலர் இறங்கினோம் . நான் முதலில் சத்யா சாதாரணமாக தான் வந்து நின்றான் என்று நினைத்தேன் . ஆனால் ஸ்டாப்பில் இறங்கியதும் சத்யா அந்த பொறுக்கியை அடி வெளுத்தினான் ” .
” ஏதோ ஒரு பெண்ணை காப்பாற்ற தான் நினைத்தானே தவிர அந்த பெண்ணிடம் இதை வைத்து நட்போ , காதலோ பெற அவன் நினைக்கவில்லை . அன்னைக்கு அவன் என் முகத்தை கூட பார்க்கவில்லை. அதிலே அவனை எனக்கு பிடித்துவிட்டது . நான் அன்னைக்கு அவனை பாலோ செய்தேன் ” .
” அப்போ தான் எனக்கு தெரிந்தது அவனும் நானும் ஒரே கம்ப்யூட்டர் கிளாஸ்ஸில் தான் படிக்கிறோம் என்று . ஆனா, அவன் வேறு கம்ப்யூட்டர் லாங்குவேஜ் படித்தான் நான் வேறு கம்ப்யூட்டர் லாங்குவேஜ் படித்தேன் அதனால் எங்களுக்கு வேறு வேறு ப்ளோரில் தான் வகுப்பே நடந்தது ” .
” முதலில் தற்செயலாக அவனை பஸ்ஸில் மற்றும் கம்ப்யூட்டர் கிளாஸ்ஸில் பார்த்தேன் . நாளடைவில் எனக்கு சத்யாவை பிடிக்க ஆரம்பித்தது, பின் அவனை பார்ப்பதற்காகவே அவன் போகும் பஸ்ஸில் நானும் போக ஆரம்பித்தேன் . அவனை பார்க்க அடிக்கடி அவன் படிக்கும் ப்ளோரிற்கு போவேன் ” .
” அப்படி போகும் போது அவன் அடிக்கடி அம்மு என்று உன்னை பற்றி அவனின் நண்பனிடம் பேசுவான் . முதலில் சத்யா உன்னை காதலிப்பதாக தான் நினைத்தேன் . ஏனென்றால் அவன் மூச்சுக்கு முன்னூறு தடவை உன்னை பற்றியோ , உன் பெயரையோ தான் சொல்வான் ” .
” ஆனா, ஒரு தடவை சத்யா பிரெண்ட் சத்யாவிடம் , ‘ அம்மு கிட்ட எப்போ உன் காதலை சொல்ல போற? ‘ என்றுக் கேட்டான் . சத்யா ஓங்கி விட்ட அறையில் அவன் அதற்கு மேல் உன்னைப் பற்றி பேசுவதையே நிறுத்திவிட்டான் ” என்றாள் சந்தியா .
” அப்படி தான் எனக்கு உன்னை பத்தி தெரிந்தது தீப்ஷீ . நான் சத்யா கம்ப்யூட்டர் கிளாஸ் நிற்கும் வரை அவனை பார்த்துக் கொண்டிருப்பேன் . ஆனா, அவன் என்னை பார்த்ததுக் கூட கிடையாது . அவ்வளவு தான் என் காதல் கதை”
” எப்படி உனக்கு சத்யா பேரன்ட்ஸ் பற்றி தெரிந்தது ? உங்க வீட்டில் எப்படி உன் காதலுக்கு சம்மதம் சொல்வார்கள் ? சத்யா உன் காதலை ஏற்றுக்கொள்வானா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” முதலில் மூச்சை விடு தீப்ஷீ , இத்தனை கேள்வியா ? எல்லாத்தையும் சொல்கிறேன் ” என்றாள் சந்தியா .
” எங்க வீட்டில் உடனே சம்மதம் தந்துட்டாங்க . அதுக்கு காரணம் இருக்கு. ” என்றாள் சந்தியா .
” என்னோட வாழ்வில் மறக்க முடியாத கருப்பு நாட்கள். ” என்றவள் அந்த நாட்களுக்குள் சென்றாள் .
” அப்போ நான் ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தேன் . பாதி விபரம் தெரிந்தும் பாதி தெரியாமலும் இருந்த வயது . எனக்கு எல்லாமே அப்பா தான் . நான் டாடி லிட்டில் பிரின்சஸ்ஸாக தான் இருந்தேன் ” . என்றவள் அந்த நாளுக்கே சென்றாள்
” அப்பா எனக்கு குளித்துவிடுங்க ? ”
” இதோ வந்துட்டேன் பாப்பா. ”
” அப்பா என்னை இன்னைக்கு மாலு கூட்டிட்டு போறீங்களா ? ”
” சரி பாப்பா . இப்போ டான்ஸ் கிளாஸ் போவிங்களாம் . அப்பா உங்களை ஈவ்னிங் கூட்டிட்டு போவேனான். ”
” அப்பா , எனக்கு அங்க போக பிடிக்கல நான் போகமாட்டேன். ” என்று நான் அழுதேன் .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடேங்கப்பா சந்தியா நீதான் கதைல மெயின் கேரக்டர் போல … இன்னும் நிறைய பிளாஷ்பேக் இருக்கும் போல … வெயிட்டிங்
சந்தியாவின் பெற்றோர்கள் சத்யா மீதான அவளது காதலுக்கு ஆதரவாக உள்ளனர்.
சந்தியாவின் காதலுக்கு இரண்டு வயதா? ஹ்ம்ம். தீ அவளது காதல் பார்வை தெரிந்தும் கூட அவளாகவே சொல்லட்டும் என மெளனம் சாதிக்கிறாளே!
சந்தியாவிற்கு சத்யாவின் பெற்றோரை பற்றி எவ்வாறு தெரியும்?