
அத்தியாயம் 9
” எல்லாம் ஓகே சத்யா . ஆனால் நியூஸ் பேப்பர் படிக்க பிடிக்கலலை சத்யா . நியூஸ் பேப்பரை திறந்தாலே ரோடு ஆக்சிடென்டில் சம்பந்தம் இல்லாமல் ரோடு ஓரம் நின்றிருந்தவர் இறந்தாங்க , பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள். குழந்தைகளை கூட விடுவது இல்லை , மருத்துவம் , கல்வி எல்லாம் வியாபாரம் ஆனது, இது தான் இருக்கும் . இப்படி பட்ட செய்தி எல்லாம் கேட்டால் கஷ்டமா இருக்கு சத்யா , அதுவும் பெண்களுக்கு எதிரா நிகழும் குற்றங்களை படிக்கும் போது அழுகையா வருது. அதான் நியூஸ் பேப்பர் படிக்கவே பிடிக்க மாட்டேங்குது ” என்றாள் தீப்ஷீ .
” என்ன அம்மு இப்படி சொல்லுற . நீ எதிர்காலத்தில ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி . இந்த மாதிரியான செய்திகளை மட்டும் இல்லை இந்த மாதிரியான மக்களோடு தான் நீ போராட போகிற . இவ்வளவு நாள் வெறும் வார்த்தைக்காக தான் ஐ.பி.எஸ் ஆக போகிறேன்னு சொன்னீயா ” .
” இல்லை சத்யா , நான் கண்டிப்பா ஐ.பி.எஸ் ஆவேன் ” .
” முதல தைரியத்தை வளர்த்துக்கோ அம்மு . நீ ஐ.பி.எஸ் ஆனதும் ஒரு நாள் உனக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கும் அதுவும் நீ பெண் என்பதால் உன் எதிரிகளும் உன்னை எளிதாக தோக்கடிச்சிடுவாங்க . அப்போ நீ பயந்து , அழுதுக் கொண்டிருப்பாயா ? பெண்ணின் பயம் தான் அவளை துன்புறுத்தும் ஆணின் பலம் என்பதை ஒரு நாளும் மறக்காதே அம்மு . நாளை உனக்கு எதிராக குற்றம் நடந்தால் நீ தைரியமா எதிர்க்கொள்ள வேண்டும் ” என்றான் சத்யா .
” ஓகே சத்யா , இன்னைக்கே நியூஸ் பேப்பர் படிக்கிறேன் . பிரிலிமினரி எக்ஸாம் பற்றி நெட்டில் தேடுறேன் ” என்றாள் தீப்ஷீ .
” தட்ஸ் மை குட் கேர்ள் . அம்மு வீட்டிற்கு வா , முக்கியமான விஷயம் பற்றி பேசணும்” என்ற சத்யா , வண்டியை வீட்டிற்கு முன் நிறுத்தினான் .
” ஓகே சத்யா , ஐந்து நிமிடத்தில் வந்திடுவேன் ” என்றவள் வீட்டை நோக்கி ஓடினாள் .
” ஒன்னும் அவசரம் இல்லை அம்மு, பொறுமையா வா ” என்ற சத்யா , வண்டியை விட்டு இறங்கி திரும்பி பார்க்க தேவ் கார் காம்பவுண்டிற்குள் நுழைந்தது .
சாதாரணமாக பார்த்த சத்யாவின் பார்வை சந்தேகமாக மாறியது .
‘ ஒரு வேளை அம்மு சந்தேகப்படுவது உண்மை தானோ . அப்படி உண்மை என்றால் தேவ் ஏன் பாலோ செய்கிறான் . ஒருவேளை இவன் அம்முவை விரும்புகிறானா ? தேவ் விரும்புவது உண்மை என்றால் அவன் அம்முவை மறப்பதே நல்லது . அம்முவால் தேவ்வை காதலிக்கவே முடியாது , இந்த உலகத்தில் அவள் அதிகமாக வெறுப்பது தேவ்வை மட்டுமே ‘ என்று நினைத்து பெரும் மூச்சு விட்ட சத்யா தன் வீட்டை நோக்கி சென்றான் .
‘ மாற்றம் ஒன்றே மாறாதது சத்யா ‘ என்ற விதி அவனை பார்த்து சிரித்தது .
” பைக்கில் ஏறியதிலிருந்து இருவரும் பேசிக் கொண்டு தான் வர்றாங்க . இன்னும் என்ன இருக்கு இவன் பேச , வீட்டிற்கு வர சொல்கின்றான் . இவளும் ஓடுகிறாள் ” என்று சத்தமாகவே புலம்பினான் தேவ் .
சத்யா வீட்டிற்கு சென்று சரியாக ஐந்து நிமிடம் ஆவதற்கு முன்பே அங்கு வந்தாள் தீப்ஷீ , ” கமலாமா சூடா டீ எனக்கு போடுங்க ” என்று கத்திக் கொண்டே வந்தாள் .
சத்யாவும் முகம் கழுவி , உடை மாற்றி வெளியே வந்தவன் , தீப்ஷீ குரல் சமையலறையில் கேட்க அவனும் சமையலறை சென்றான் .
” கமலாமா , எப்படி நீங்க மட்டும் இன்னும் மாறாமல் யங்கா , அழகா இருக்கீங்க ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” நான் மட்டுமா மாறாமல் இருக்கேன் நீ கூட தான் மாறாமல் அதே வாயாடி குட்டி பாப்பாவா இருக்க ” என்றார் கமலா .
” கமலாமா நான் என்ன குட்டி பாப்பாவா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” ஆமாம் ” என்றுக் கூறிக் கொண்டே வந்தான் சத்யா .
திரும்பி சத்யாவிற்கு உதட்டை சுழித்து பழிப்பு காட்டியவள் , ” கமலாமா பசிக்குது டீ ரெடியா ” என்றுக் கேட்டாள் .
” இரண்டு பேரும் ஹாலுக்கு போங்க , நான் எடுத்துட்டு வரேன் ” என்றார் கமலா .
” உங்களுக்கும் சேர்த்து எடுத்துட்டு வாங்க கமலாமா ” என்றான் சத்யா .
” ஆமா கமலாமா , சார் ஏதோ முக்கியமான விஷயம் சொல்ல போகிறார் .ரொம்ப பில்டப் தர்றார் ” என்றாள் தீப்ஷீ .
கமலா சத்தமாக சிரிக்க , ” வாயாடி வா போவோம் ” என்று அவளின் காதை பிடித்து ஹாலிற்கு அழைத்துச் சென்றான் சத்யா .
” சத்யா வலிக்குது ” .
கையை எடுத்தான் சத்யா . இருவரும் சோபாவில் அமர்ந்தனர் . கமலா ட்ரே எடுத்துக் கொண்டு வந்தார் .
” கமலாமா உட்காருங்க ” என்றான் சத்யா .
சத்யா டீ குடித்துக் கொண்டே , ” எனக்கு ஒரு பெரிய பிராஜக்ட் கிடைத்திருக்கு கமலாமா . இந்த பிராஜக்ட சக்சஸ்ஃபுலாக முடித்தால் நமக்கு ஐம்பதாயிரம் கிட்ட பணம் வரும் . அது மட்டும் இல்லாமல் கிளையன்டிற்கு ப்ராஜக்ட் அவுட்புட் பிடித்திருந்தால் அவருக்கு தெரிந்தவரையும் நமக்கு ரெஃபர் செய்வதாக சொல்லியிருக்கிறார் ” என்றான் .
” வாவ் சத்யா . இது ரொம்ப பெரிய ஆப்பர்ச்சுனிட்டி . ஐ எம் சோ ஹாப்பி பார் யூ சத்யா ” என்றாள் தீப்ஷீ .
” சந்தோஷமா இருக்கு சத்யா , உன்னோட உழைப்பிற்கு கிடைத்த வெற்றி ” என்றார் கமலா .
” அது மட்டும் இல்ல கமலாமா , இதுவரை அவங்க நமக்கு செலவு செய்த பணம் பாதியை திருப்பி தர போகிறோம் . அதான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ” என்றான் சத்யா .
” யாருக்கு பணம் தர போவதாக சொல்லுற சத்யா ” என்று புரியாமல் கேட்டார் கமலா .
” மிஸ்டர் சசி அண்ட் மிஸஸ் அருணா இருவருக்கும் தான் ” .
” என்ன சத்யா அம்மா அப்பாவ பெயர் சொல்லி சொல்லுற . நீ அவர்களுக்கு பணம் தந்தால் அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க சத்யா ” என்றார் கமலா .
” நானும் தான் கமலாமா கஷ்டப்படுறேன் , பிள்ளையே வேண்டாம் என்று தூக்கி போட்டவங்க பணத்தில் உயிர் வாழ்வது நரக வேதனை கமலாமா . ஒரு வாய் சாப்பாடு கூட ஆசையாகவோ விருப்பப்பட்டோ நான் சாப்பிட்டதில்லை ஏதோ உயிர் வாழ வேண்டும் என்பதற்காக தான் நான் அவர்கள் தந்த பணத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் . ஏதோ என் நல்ல நேரம் நான் நல்லா படித்ததால் படிப்புக்கான
செலவை ஸ்காலர்ஷிப்பில் பெற்றுவிட்டேன் ” என்றான் சத்யா .
” சத்யா , அருணா முன்ன மாதிரி இல்லை . இப்போ மாறிட்டாங்க . உன் அன்பிற்காக ஏங்குறாங்க ” என்றார் கமலா .
” நானும் தான் கமலாமா , அவங்க அன்பிற்காக ஏங்குனேன் , அப்போ என்னை தேவையில்லா பொருளாக நினைத்து தூக்கி போட்டார்களே . கடவுள் கருணையால் எனக்கு நீங்களும் , அம்முவும் கிடைச்சீங்க . ஒருவேளை உங்க இடத்தில் வேறு ஒரு பணத்தாசை பிடித்தவர் இருந்திருந்தால் என் நிலை என்னவாகி இருக்கும் என்று நீங்களே யோசித்து பாருங்க கமலாமா . இதோ இவளால் தான் எனக்கு வாழவே ஆசை வந்தது . அன்பு , பாசம் , நட்பு எல்லாம் என்னவென்று சொல்லி தந்தாள் . எனக்கு அம்மா , அப்பா , அண்ணா , அக்கா , தம்பி எல்லாவுமாக எனக்கு கிடைத்தவள் அம்மு . எனக்கு நீங்க கடவுள் மாதிரி கமலாமா . என்னோட குடும்பத்திலிருப்பது நீங்க இரண்டு பேர் மட்டும் தான் . வேறு யாருக்கும் இடம் இல்லை ” என்ற சத்யா வேகமாக தன் அறைக்குச் சென்றுவிட்டான் .
” சத்யா , ஒரு நிமிடம் நில்லு பா ” என்ற கமலாவின் குரல் அழுகையில் வந்தது .
தன் கண்களை துடைத்தவள் ,” கமலாமா நீங்க அழாதீங்க ” என்றாள் தீப்ஷீ .
” சத்யா கோபமா ரூமிற்குள் போயிட்டானே ” என்றார் கமலா .
” என்ன கமலாமா , சத்யாவாவது கோபப்படுவதாவது . அவனே இரண்டு நிமிடத்தில் வந்துடுவான் ” .
தீப்ஷீ கூறியதுப் போல் உடனே வெளியே வந்தவன் , ” சாரி கமலாமா , சாரி அம்மு , இப்படி கோபமா போனதற்கு ” என்றான் சத்யா .
பெருமையாக கண் ஜாடை காட்டினாள் தீப்ஷீ நான் சொன்னேனே என்பது போல் .
அதை புரிந்துக் கொண்டார் கமலா .” நீ மன்னிப்பு கேட்க தேவை இல்லை டா கண்ணா ” என்றார் கமலா , ‘ என் வளர்ப்பு சரியாக இருக்கிறது ‘ , என்று பெருமிதம் கொண்டது அந்த தாய் உள்ளம் .
” கமலாமா நான் பணம் தர போவதில் மாற்றம் இல்லை ” என்றான் சத்யா .
” நீ இவ்வளவு வருத்தப்படும் போது நான் ஏன் தடுக்க போகிறேன் , உன் விருப்பம் சத்யா . ஆனால் அவர்கள் ஏற்கனவே வேதனையில் இருக்கிறார்கள் மீண்டும் காயப் படுத்தாதே , உனக்கு அந்த பாவம் வேண்டாம் . அவர்கள் செய்தார்கள் என்று நீயும் செய்தால் உனக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் ” என்றார் கமலா .
” ஏன் கமலாமா இப்படி சொல்றீங்க . இப்போ நான் என்ன செய்வது ? ” என்று தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான் சத்யா .
” எனக்கு ஒரு ஐடியா இருக்கு . சத்யா , உனக்கு அவங்க தந்த பணத்தை திருப்பி தரணும் . கமலாமா , உங்களுக்கு அவங்களை காயப்படுத்தக்கூடாது அப்படி தான ” என்று இருவரையும் கேட்டாள் தீப்ஷீ .
ஆமென்று இருவரும் தலை ஆட்டினர் .
” நான் சம்பாதித்த பணம் என்று மட்டும் சொல்லி சத்யாவை அவர்களிடம் பணம் கொடுக்க சொல்லலாம் . பணம் தந்த மாதிரியும் ஆகும் அவர்களை காயப்படுத்தாமல் தந்தது போல் ஆகிவிடும் . அதற்கு மேல் நீ எதுவும் அவங்க கிட்ட பேச கூடாது சத்யா ” என்றாள் தீப்ஷீ .
” சூப்பர் அம்மு எனக்கு ஓகே ” என்றான் சத்யா .
” எனக்கும் ஓகே ” என்றார் கமலா .
” சரி வா அம்மு , நாம் போய் ப்ராஜக்ட் வொர்க் ஸ்டார்ட் பண்ணலாம் ” என்றான் சத்யா .
ஆம் தீப்ஷீயும் சத்யாவோடு அவன் இதுவரை செய்த ப்ராஜெக்ட் அனைத்திற்கும் உதவி செய்து வருகிறாள் .
*****
” அப்பா … ” என்றாள் சந்தியா சத்தமாக .
படி இறங்கி வரும் மகளை ஆசையாக பார்த்தார் ராஜன் .
” என்ன டா கண்ணா… இன்று வழக்கத்தைவிட உற்சாகமாக இருக்கிற. ” என்றார் .
” ஆமாம் பா , நான் இன்னைக்கு என் காதலை தீப்ஷீயிடம் சொல்ல போகிறேன் ” என்றாள் சந்தியா .
” ஹா ஹா ஹா ” என்று சத்தமாக சிரித்துக் கொண்டு வந்த ஈஸ்வரி , ” நீ தீப்ஷீயிடம் தானே சொல்ல போகிற, ஏதோ சத்யாவிடமே சொல்ல போவதுப் போல் இவ்வளவு அழகா டிரஸ் பண்ணிட்டு வந்திருக்க. ” என்றார் சந்தியாவின் தாய் ஈஸ்வரி .
” அப்பா பாருங்க , அம்மா என்னை கேலி செய்றாங்க ” என்று தந்தையிடம் புகார் செய்தாள் சந்தியா .
” ஈஸ் சும்மா இரு , என் மகளுக்கு தீப்ஷீயிடம் சொல்ல தைரியம் வந்ததே பெரிய விஷயம் . நீ ஏன் அவளை கேலி செய்ற , போய் ஸ்வீட் எடுத்திட்டு வா , நாம் இதை செலிபரேட் செய்யலாம் ” என்றார் ராஜன் .
” அப்பா , இது தான் புகழ்வதுப் போல் பழிக்கும் வஞ்சப் புகழ்ச்சி அணி . நான் படித்திருக்கேன் ” என்றாள் சந்தியா .
” அது மட்டுமா சந்தியா , சந்தடி சாக்கில் உங்க அப்பா இனிப்பு கேட்கிறார் , இருக்குற சுகர் பத்தாதென்று ” என்றார் ஈஸ்வர் .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சத்யா பாவம் அவனுக்கு நல்ல துணை கிடைக்கணும் … விதி சத்யா தீப்ஷி சந்தியா தேவ் இவங்க வாழ்க்கையில எல்லாம் எப்படி விளையாட போகுதோ …
பெண்களின் பயம் தான் ஆண்களின் பலம் 👏🏼👏🏼
சத்யா நன்றாக படித்து, பொறுப்பாக வேலையில் சாதித்து, பெயருக்கு அம்மா, அப்பா என்று இருப்பவர்களிடம் அவர்கள் தனக்கு செய்த செலவு தொகையை திருப்பி அளிக்க நினைக்கின்றான்.
தன்னை அன்போடு பாதுகாப்பாக வளர்த்து ஆளாக்கிய கமலா அம்மாவின் எண்ணங்களுக்கும் மதிப்பளிக்கின்றான்.
அவன் கூறுவது 💯 உண்மை பணத்திற்கு ஆசைபடும் ஒருவர் அவனை பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டிருந்தால்? ஆதரவாக நட்பு கரம் நீட்ட தீ இல்லாமல் இருந்திருந்தால்? எவ்வளவு சிரமம்.
சந்தியாவின் அப்பா அம்மா மிக இயல்பாக பழகுகின்றனரே.