
அத்தியாயம் 8
“ அவள் லேசாக அழுத்தியதற்கு ஏன் இப்படி சின்ன பிள்ளை மாதிரி அழுற சைலு ? “ என்றுக் கேட்டாள் சைலஜாவின் தோழி .
“ என்னது லேசாகவா ? வா உன்னையும் அதே போல் அழுத்த சொல்கிறேன் அவளை , அப்போது தான் வலி எப்படி இருக்கும் என்று உனக்கு புரியும் “ என்றாள் சைலஜா .
“ உனக்கு வலி அதிகம் என்றால் வா சைலு நாம் போய் பிரின்ஸ்பால் மேமிடம் கிட்ட அவளை பற்றி கம்ப்ளைன்ட் செய்யலாம் “ என்றாள் சைலஜாவின் மற்றொரு தோழி .
இவர்கள் இப்படி ஏதாவது செய்துவிடக் கூடாது என்று அவர்களை பின் தொடர்ந்துக் கொண்டிருந்த தேவ் , “ ஹாய் லேடிஸ் . கீழே பார்க்கிங்கில் நடந்ததை பார்த்தேன் . இப்போது நீங்க பேசியதும் என் காதில் விழுந்தது . நீங்க எப்படி மேடம் கிட்ட கம்ப்ளைன்ட் செய்ய போறீங்க “ என்றுக் கேட்டான் .
“ அவள் என்னை தாக்கினா என்று கம்ப்ளைன்ட் செய்வேன் “ என்றாள் சைலஜா .
“ மேடம் உங்க கிட்ட ஏன் தாக்கினா என்றுக் கேட்டாலோ அல்லது அந்த பெண் வந்து நடந்ததை சொன்னாலோ பின் பிரச்சனை என்பது உங்களுக்கு தான் சைலு . நான் சொல்வது உண்மைதானே “ என்றுக் கேட்டான் தேவ் .
சிறிது நேரம் யோசித்தவள் , “ ஆம் , நீங்க சொல்வது உண்மைதான் பின் எனக்கு தான் பிரச்சனை ,அவளை விட்டுவிடுவாங்க“ என்றாள் சைலஜா .
“ எஸ் “ என்றான் தேவ் .
“ ஆனா, அவளை ஏதாவது செய்ய வேண்டுமே ? இல்லை என்றால் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது “ என்றாள் சைலஜா .
‘ என் காதலியை காயப்படுத்த என்னிடமே உதவி கேட்கின்றாயா . ஆனாலும் உனக்கு அவளிடம் அடி வாங்கியும் இன்னும் புத்தி வரவில்லை பார் ‘ என்று மனதில் நினைத்தான் தேவ் .
“ என்னைக் கேட்டா நீங்க இன்னைக்கு நடந்ததை மறப்பதே நல்லது . நீங்க பதிலுக்கு ஏதாவது செய்ய, மீண்டும் அவ உங்களை தாக்க இதெல்லாம் தேவையா உங்களுக்கு . அவளை எனக்கு நல்லா தெரியும் , அவ சரியான ரவுடி . ஜூனியரிடம் சீனியர் அடிவாங்கியது இப்போது பத்து பேருக்கு தான் தெரியும் , நீங்க பிரச்சனையை பெரிசாக்கினால் நீங்களே எல்லோருக்கும் சொல்லியது போல் ஆகிவிடும் . சைலு நீங்களே யோசிச்சி நல்ல முடிவாக எடுங்க “ என்றவன் கிளாஸ்ஸிற்கு நுழைய போக , சத்யாவும் எதிர் திசையில் இருந்து வர , இருவரும் இடித்துக் கொண்டனர் .
சத்யா , தேவ்வையும் அவனுக்கு பின் வந்துக் கொண்டிருந்த சைலஜா மற்றும் அவள் கேங்கையும் சந்தேகமாக பார்தான் .
‘ ஒரு வேலை இது தேவ்வின் பிளானாக இருக்குமோ ‘ என்று யோசித்த சத்யா பின் , ‘ தேவ் போய் இவளிடம் உதவி கேட்பதா . அவனுக்கு எப்போதுமே நேருக்கு நேராக மோதி தான் பழக்கம் ‘ என்று நினைத்தவன் , தேவ்வை கண்டுக் கொள்ளாமல் அவனுக்கு பின்னால் வந்த சைலஜாவை முறைத்தான் சத்யா .
அவ்வளவு தான் அதற்கு மேல் வேறு எதைப் பற்றியும் யோசிக்க தைரியம் இல்லாமல் அமைதியாக சென்றனர் சைலஜா மற்றும் அவளின் தோழிகள் . சத்யா , தேவ் மற்றும் சைலஜா மூவரும் ஒரே வகுப்பில் தான் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருக்கின்றனர் .
சைலஜாவிடம் போய் பேசக் கூட சத்யா தயாராக இல்லை .
‘ நீ பிரின்ஸ்பாலிடம் , தீப்ஷீயை பற்றி கம்ப்ளைன்ட் செய்தால் கூட , என்னால் அவர்களிடம் உண்மையை சொல்லி உனக்கு தண்டனை வாங்கி தர முடியும் ‘ என்று நினைத்தான் சத்யா .
சத்யாவும் தேவ்வும் , தீப்ஷீயை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்க தீப்ஷீயோ எந்த கவலையும் இல்லாமல் ஜாலியாக வகுப்பை கவனித்துக் கொண்டிருந்தாள் .
ஒருவழியாக அன்றைய நாள் முடிய . மாலையில் சத்யா , தீப்ஷீ வகுப்பிற்கே வந்தான் .
“ வாங்க சத்யா . தீப்ஷீ ரெஸ்ட் ரூம் போயிருக்கா “ என்றாள் சந்தியா முகம் மலர்ச்சியாக சத்யாவை மீண்டும் ஒருமுறை இன்று பார்த்ததே அதற்கு காரணம் .
தீப்ஷீ நேற்று கூறியது நினைவுக்கு வர , சந்தியாவிடம் எதுவும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டியவன் , அமைதியாக வெளியே நின்றுக் கொண்டான் .
சத்யா நேற்று போல் பேசவில்லை , தன்னை தவிர்க்கிறான் என்பது சந்தியாவிற்கு நன்கு புரிந்தது . கண்கள் லேசாக கலங்கியது .
“ என்ன சத்யா கிளாஸ்ஸிற்கே வந்துட்ட ? “ என்றுக் கேட்டுக் கொண்டே வந்தாள் தீப்ஷீ .
“ சும்மா தான் அம்மு , போய் பேக் எடுத்துட்டு வா “ என்றான் சத்யா .
கிளாஸ் உள்ளே சென்றவள் , அங்கு அழுதுக் கொண்டிருந்த சந்தியாவை பார்த்து அதிர்ந்தாள் தீப்ஷீ .
“ சந்தியா “ என்றாள் தீப்ஷீ .
“ தீப்ஷீ , நீ வந்துட்டியா . சரி நான் போறேன் பாய் “ என்ற சந்தியா வேறு எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள் .
‘ இருவரும் ஒன்றாக போக தான் காத்திருந்தாள் . ஏன் சத்யா வந்ததும் தனியாக செல்கிறாள் . ஏன் அழுதுக் கொண்டிருந்தாள் ஒன்றும் புரியலையே ‘ என்று நினைத்துக் கொண்டே , தன் பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் தீப்ஷீ .
“ சத்யா , நீ எதுவும் சந்தியாவை சொன்னாயா ? “ .
“ இல்ல அம்மு , நான் உன்னை தேடி வந்தேன் , நீ எங்கே போன என்று அவளே வந்து சொன்னா , அப்புறம் நான் வெளியே வந்துட்டேன். அவ்வளவு தான் . நான் அவ கிட்ட பேசவே இல்ல “ என்றான் சத்யா .
“ நேற்று அவளோடு பேசினாயே ? ஏன் இன்னைக்கு பேசல “ .
“ நீ தான் சொன்னியே அம்மு , அவ என்னை காதலிப்பது போல இருக்கு . அதான் நான் அவ கிட்ட பேசலை “ என்றான் சத்யா பெருமையாக .
மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் தீப்ஷீ .
‘ ஓஹோ சத்யா பேசவில்லை என்று தான் மேடம் அழுதார்கள் போல் ‘ என்று நினைத்துக் கொண்டாள் தீப்ஷீ .
“ சத்யா வா , லைப்ரரிக்கு போயிட்டு வீட்டிற்கு போவோம் “ என்றாள் தீப்ஷீ .
“ ஏன் அம்மு “ .
“ ரெஃப்ரன்ஸ் புக் எடுக்கணும் . அதே சமயம் தேவ் நம்மை பாலோ செய்கின்றானா? இல்லையா? என்று எனக்கு முடிவு தெரிந்தாகணும் “ என்றாள் தீப்ஷீ .
“ நீ ஏன் அம்மு இப்படி கற்பனை செய்ற . நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேனே , ஒரே இடத்தில் வீடு ஒரே இடத்தில் காலேஜ் என்றால் ஒன்றாக தான் செல்வோம் . பின் என்ன தேவ்விற்கு மட்டும் வானத்தில் ரோடா இருக்கிறது அவன் வேறு வழியில் செல்ல “ .
“ நீ சொல்வது சரிதான் . அது உண்மையா பொய்யா என்று இன்று பார்த்துவிடுவோம் . இப்போ நாம லைப்ரரி போகிறோம் . எப்படியும் நாம வெளியே வர ஹாஃப் ஆன் ஹவர் ஆகும் . காலேஜ் முடிந்தே ஹாஃப் ஆன் ஹவர் ஆகுது சோ டோட்டலி ஒன் ஹவர் . இந்த நேரத்திற்கு நம்மால் நம் வீட்டிற்கே போக முடியும் . நாம இனி காலேஜ் விட்டு போகும் போது தேவ் காலேஜில் இருந்தால் நான் சொல்வது உண்மை என்று அர்த்தம். ஓகேவா சத்யா “ .
“ ஓகே அம்மு “ என்றான் சத்யா .
இருவரும் லைப்ரரி சென்றனர் , தீப்ஷீ அவள் படிப்பு சம்பந்தமான புத்தகத்தை தேட , சத்யா அவனுக்கு பிடித்த நாவலை எடுத்தவன் அங்கு இருந்த சேரில் அமர்ந்து , படிக்க தொடங்கினான் .
தன் வேலையை முடித்த தீப்ஷீ , “ சத்யா … “ அவனிடம் அசைவு இல்லை மீண்டும் , “ சத்யா “ என்றவள் அவனை உலுக்கினாள் .
“ என்ன அம்மு “ என்றான் சத்யா , ஏதோ கனவு உலகத்தில் இருந்து வெளிவந்தது போல் .
“ புக் தேடி எடுத்துட்டேன் சத்யா . வா போகலாம் “ .
“ டென் மினிட்ஸ் அம்மு , புக் முடிச்சிட்டு போகலாம் “ .
“ ஓகே சத்யா “ என்றவள் தான் எடுத்த புத்தகத்தை பார்க்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்தில் சத்யா , “ அம்மு வா போகலாம் “ என்றான் . இருவரும் லைப்ரரியில் இருந்து வெளியே வந்தனர் . கிரவுண்ட் அருகே வரும்போது “ டேய் மச்சான் ஐ.பி.எஸ் ஆகணும் என்றால் வெறும் உடல் வலிமை இருந்தால் போதாது கொஞ்சம் ஜென்ரல் நாலேஜ்ஜும் வேண்டும் அப்போ தான் ரிட்டன் எக்ஸாமில் பாஸாக முடியும் “ என்று சத்தமாக சொன்னான் தேவ் .
“ ஓகே , புரியுதுடா மாப்பள இப்போ பால் பாஸ் பண்ணு “ என்றான் தேவ்வின் நண்பன் ரவி .
ஐ.பி.எஸ் என்ற வார்த்தையை கேட்டு நின்ற தீப்ஷீ திரும்பி பார்க்க அங்கு தேவ்வும் அவனின் நண்பனும் பாஸ்கெட் பால் விளையாடிக் கொண்டிருந்தனர் . அவன் சொல்லியதை கேட்ட தீப்ஷீக்கு கோபம் வர , அந்த இடத்தில் நிற்காமல் வேகமாக பைக் அருகே சென்றாள் .
சத்யா , தேவ்வை சந்தேகமாக பார்த்தான் .
‘ இவன் விளையாடுவதற்காக இங்கு இருக்கானா இல்லை நாங்கள் இங்கு இருப்பதால் இருக்கானா ஒன்னும் புரியவில்லையே . தெளிவாக குழப்புகிறான் ‘ என்று நினைத்தான் சத்யா .
இருவரையும் பார்த்த தேவ் தன் நக்கல் சிரிப்பை சிரித்தான் .
‘ எனக்கா டெஸ்ட் வைக்கிறீங்க . உங்களால் நான் உங்களை பாலோ செய்கின்றேனா இல்லையா என்று ஒரு முடிவிற்கு வரமுடியாது அதுபோல தான் என் செயல் இருக்கும் ‘ என்று நினைத்துக் கொண்டான் தேவ் .
பைக் அருகே வந்ததும் , “ பார்த்தியா சத்யா . நான் சொல்லியதுப் போல் அந்த தேவ் இங்கே தான் இருக்கிறான் “ என்றாள் தீப்ஷீ .
“ இப்போதும் அவன் விளையாடுவதற்காக இருந்திருக்கலாமே அம்மு “ .
“ இல்ல சத்யா . அவன் நமக்காக தான் வெயிட் பண்ணுறான் . விளையாடுவதுப் போல நம்மை குழப்பப் பார்க்கிறான் “ .
“ அவன் ஏன் நம்மை ஃபாலோ செய்ய போகிறான் அம்மு ? “ .
“ தெரியல சத்யா , ஆனால் கண்டுபிடிக்க வேண்டும் “ என்றாள் தீப்ஷீ .
“ சரி வந்து பைக்கில் ஏறு அம்மு , நேரமாகுது “ என்றான் சத்யா . இருவரும் பைக்கில் காலேஜ் கேட்டை தாண்ட . அவர்களை பின்தொடர்வதற்காக தன் காரை எடுத்தான் தேவ் .
“சத்யா ” என்று பல்லை கடித்த தீப்ஷீ , சத்யாவை அடிக்கத் தொடங்கினாள் .
” அம்மு அடிக்காதே , வண்டி ஓட்டிட்டு இருக்கேன் ” .
” சத்யா , எனக்கு அறிவில்லை என்று சொல்றீயா ” .
” நான் சொல்லவில்லை அம்மு. அந்த தேவ் தான் சொன்னான் ” .
” சத்யா ” என்று மீண்டும் அடிக்க போனாள் தீப்ஷீ .
” அம்மு நீ பேசிக்கலி ஃபிட்டாக தான் இருக்குற ஆனால் பிரிலிமினரி எக்ஸாம் இருக்கு . அதுக்கு நீ தயாராகவில்லை அம்மு . அதுக்காக நீ எந்த முயற்சியும் எடுக்கவில்லையே . அதை தான் தேவ் சொன்னதில் இருக்க உண்மை என்று சொன்னேன் ” .
” பிரிலிமினரி எக்ஸாமிற்கு தயாராக நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல் சத்யா ? “.
” நிறைய செய்யணும் அம்மு . முதலில் எக்ஸாம் எவ்வளவு மார்கிற்கு எழுதணும் என்று தெரிந்துக்கொள் . ஒவ்வொரு எக்ஸாமிற்கும் ஒவ்வொரு பேட்டன் இருக்கும் அது என்னனு பார் . எவ்வளவு மார்க் எடுத்தால் பாஸ் என்பதை தெரிந்துக்கொள் . ஒவ்வொரு முறையும் எவ்வளவு நபர் ஐ.பி.எஸ் எக்ஸாம் எழுதுறாங்க , அதில் எவ்வளவு பேர் செலக்ட் ஆகுறாங்கனு பார் . முக்கியமாக ஜெனரல் நாலேஜ் வளர்த்துக் கொள்ளணும் , அதிகமாக நியூஸ் பார்க்கணும் , நியூஸ் பேப்பர் படிக்கணும் ” என்றான் சத்யா .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சைலஜா பிரச்சனை செய்யாம பேசியே அவள குழப்பி விட்டுட்டானே தேவ்.
சத்யா சாதாரணமா பேசாததுக்கே அழுகையா சந்தியா?
அவ பின்னாடி சுத்தரது தெரியாத அளவுக்கு அவள சுத்தல்ல விட போறானா தேவ்.
நல்ல நட்பு கதை … அடுத்து என்ன நடக்க போகுதுன்னு பார்க்கலாம் …