Loading

அத்தியாயம் 6

” சரி வா அம்மு வீட்டிற்கு போகலாம் நேரமாகுது அப்போ தான் நாளைக்கு சீக்கிரமா வர்மக் கலை பயிற்சி எடுக்கலாம் ”  என்றான் சத்யா .

” சத்யா இதே இடத்தில் தான நீ ஃபர்ஸ்ட் டைம் வர்மக் கலை பத்தி சொன்ன ? ” என்ற தீப்ஷீயின் நினைவு அந்த நாட்களுக்கே சென்றது .

‘ நினைவுகள்…

“சத்யா … என்னை டான்ஸ் , மியூசிக் , அபாகஸ், ஹிந்தி கிளாஸ் தான் அனுப்புவாங்களாம் . என்னை கராத்தே கிளாஸ் அனுப்பமாட்டாங்களாம் ” என்றாள் தீப்ஷீ உடற்பயிற்சி செய்துக் கொண்டே .

ஆம் அவளும் சத்யாவும் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்கின்றனர். முன்பு அவளுக்கு வேகமாக ஓட பயிற்சி தந்தான் சத்யா . இப்பொழுது அவளை ரன்னிங் ரேஸ்ஸில் முந்துவது சத்யாவிற்கே கொஞ்சம் கஷ்டமான ஒன்றானது .

உடற்பயிற்சியின் விளைவு முன்பு சப்பி கொழுக், மொழுக் தீப்ஷீ தற்போது உயரத்திற்கு ஏற்ற எடையில் இருந்தாள் .

” எல்லாத்தையும் கற்றுக் கொள்வது நல்லது தானே அம்மு . நீ ஏன் கராத்தே மட்டும் கத்துக்கணும்னு நினைக்கிற” கேட்டான் சத்யா .

” நான் போலீஸ் ஆகணும்னா நல்லா சண்டைபோடணும் அதற்கு தான் கராத்தே சத்யா . மற்றதில் எனக்கு ஆர்வம் இல்லை சத்யா ” என்றாள் தீப்ஷீ .

“அதற்கு எதற்கு கராத்தே அம்மு நீ வர்மக் கலை கற்றுக்கொள் ” என்றான் சத்யா .

“அப்படி என்றால் என்ன ” கேட்டாள் .

” கராத்தே தெரியுது. ஆனால் நம் தமிழ் மரபில் தோன்றிய வர்மக் கலை என்றால் என்ன என்று உனக்கு மட்டும் இல்லை பலருக்கும் தெரியாது ” என்றான் சத்யா .

” சத்யா அப்படி என்றால் என்ன ? உனக்கு யார் சொன்னது ? ” என்று நச்சரித்தாள் தீப்ஷீ .

இருவருக்கும் ஜாகிங் போனதால் மூச்சு வாங்க . ” வா அங்கு உட்கார்ந்து பேசலாம் ” என்று ஊஞ்சலை காட்டினான் சத்யா .

” வர்மக் கலையும் ஒரு தற்காப்பு கலை தான். ஆனால் ஒருவரின் உயிரை கூட எளிதாக எடுக்க முடியும் வர்மக் கலையில் . அதனால் , தான் நம் முன்னோர்கள் அதை மிகவும் நம்பதகுந்த நல்லவர்களிடம் மட்டுமே அதை கற்பித்து வந்தனர் . அதான் நாளடைவில்  அதைப் பற்றிய அறிவு நம்மிடம் இல்லாமல் போனது ” என்றான் சத்யா .

” வாவ் இன்ட்ரஸ்டிங் . இதைப் பற்றி வேற ஏதாவது சொல்லு சத்யா ” என்றாள் தீப்ஷீ .

” நான் சொல்ல ரெடி தான் ஆனா நீ தூங்கமாட்ட தானே ? ” கேட்டான் சத்யா .

” தூங்கமாட்டேன் , சொல்லு சத்யா ” என்றாள் .

” உனக்கு தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் ஏழாம் அறிவு படத்தில் வருவது தான் உண்மை நம் கலையை தான் சீனாவில் குங்பூ என்கின்றனர் . இன்னும் பல நாடுகளுக்கு வர்மக் கலை வேறு பெயரில் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது . ஆனால் நாம் மறந்துவிட்டோம் என்பது தான் மிகவும் கசப்பான உண்மை . ஆனா ஒன்னு அம்மு இப்போது தான் நமக்கு ஞானம் வந்திருக்கு திரும்ப வர்மக் கலை மற்றும் பல நம் மரபுவிளையாட்டுகள் மீண்டும் உயிர் பெற்று வருகிறது பீனிக்ஸ் பறவை போல் . வர்மக் கலை , தற்காப்பு மட்டும் இல்லை அது அக்குபஞ்சர் போன்ற மருத்துவக் கலையும் தான் . உனக்கு விருப்பம் இருந்தால் சொல் . இங்கு சென்னையில் எங்கு வர்மக் கலை கற்று தருகிறார்கள் என்று தேடி சொல்கின்றேன் . ஆனால் தெருவுக்கு தெரு கராத்தே கிளாஸ் இருக்கு பட் வர்மக் கலை வகுப்பு அவ்வளவு எளிதாக கிடைக்காது ” என்றான் சத்யா.

” எனக்கு வர்மக் கலை கத்துக்க ஆசையா இருக்கு சத்யா ” என்றாள் தீப்ஷீ .

” கண்டிப்பா நான் தேடி சொல்கிறேன் அம்மு எங்கு வர்மக் கலை கற்று தருகிறார்கள் என்று ” என்றான் சத்யா .

” வேறு ஏதாவது வர்மக் கலைப் பற்றி தெரியுமா சத்யா ” கேட்டாள் தீப்ஷீ .

” தெரியும் அம்மு . இப்போ உனக்கு சொன்னால் மொக்கையா இருக்கும் . நீ அந்த கலையை கற்றுக்கொள்ளும் போது படிப்படியாக கத்துக்கோ.
”  என்றான் சத்யா . ‘

#####

” அம்மு ” .

நினைவிலிருந்து வெளிவந்த தீப்ஷீ சத்யாவோட வீட்டை நோக்கி சென்றாள்.

” குட் நைட் அம்மு ”  என்றான் .

” பாய் . குட் நைட் சத்யா ”  என்றாள் தீப்ஷீ .

*****

அடுத்த நாள் காலையில் ஐந்து மணி அளவில் எழுந்த தேவ் உடற்பயிற்சி செய்ய பார்க் சென்றான் . அங்கு அவனுக்கு முன்பு சத்யா மற்றும் தீப்ஷீ வர்மக் கலை பயிற்சி செய்துக் கொண்டிருந்தனர் .

‘ பரவாலையே நம்ம டார்லிங்கும் ஹெல்த் கான்சியஸ்ஸா இருக்கா . நம்ம கல்யாணத்துக்கு பின் இரண்டு பேரும் சேர்ந்து ஜாலியா உடற்பயிற்சி செய்யலாம் . இப்போலாம் கப்புல் பிஷாப் , உடற்பயிற்சி வீடியோ தான் இன்ஸ்டாவில் ட்ரெண்டாகுது ‘  என்று மனதில் அவளோடு பேசிய தேவ் அவனின் உடற்பயிற்சியை ஆரம்பித்தான் .

தீப்ஷீ மற்றும் சத்யா அவனைக் கண்டுக் கொள்ளாது முழு கவனத்துடன் வர்மக் கலை செய்தனர் .

எல்லா பயிற்சி செய்ததும், ” சத்யா இங்கு நில் . நான் நோக்கு வர்மம் பயிற்சி எடுக்கணும் ”  என்றாள் தீப்ஷீ .

” முடியாது அம்மு , ஏற்கனவே நீ சொல்வதை தான் நான் தலையாட்டி பொம்மை போல செய்துட்டு இருக்கேன். இதில் நோக்கு வர்மம் முறையில் என் மனதை கட்டுபடுத்துவதா ? முடியாது ”  என்றான் சத்யா .

” சத்யா , ப்ளீஸ் ” என்று அவள் தன் ஆயுதமான அழுகுரலில் கேட்க .

வேறு ஏதும் பேசாமல் அவள் அருகில் சென்று நின்றான் சத்யா . அவனின் கண்களை ஆழமாக பார்த்து , தன் வசம் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தாள் . அவள் விரைவாகவே சத்யாவை வசப்படுத்தினாள் . பின் அவனை விடுவித்தாள்  .

தீப்ஷீ அடிக்கடி சத்யாவை நோக்கு வர்மத்தால் கட்டுபடுத்துவாள் . அதற்கு காரணம் நோக்கு வர்மம் எதிரியை தாக்க மட்டுமே பயன்படுத்துவது இல்லை ஒருவரின் மனதில் ஆழமாக பதிந்த தீய எண்ணங்கள் , காயங்களையும் மறக்க செய்ய முடியும் .

தீப்ஷீ , சத்யாவின் ஆழ் மனதில் பதிந்த திருமணம் மேல் உள்ள வெறுப்பு மற்றும் அவனின் அம்மா , அப்பா மேல் வைத்துள்ள கோபத்தை மறக்க வைக்க தீப்ஷீ நோக்கு வர்மத்தால் முயற்சி செய்கிறாள் . இது சத்யாவே அறியாத ஒன்று .

இருவரும் அருகில் நிற்பதை பார்த்தும் தேவ் எதுவும் நினைக்காமல் அவனின் வேலையை செய்தான் .

நினைவுக்கு வந்த சத்யா , ” முடிந்ததா அம்மு . டென் மினிட்ஸ் வாக்கிங் போயிட்டு போகலாம் ”  என்றான் சத்யா .

” ஓகே சத்யா ” .

அப்போது உடற்பயிற்சி , ஓட்டம் எல்லாம் முடித்த தேவ் , அவனின் ஸ்லீவ்லெஸ் டி ஷர்ட் வேர்வையில் முழுவதுமாக நனைந்திருக்க அதை கழட்டி , கையால் புழிந்தான் .

அப்போ திடீரென்று அங்கு பார்த்த தீப்ஷீ , அவனின் சிக்ஸ் பேக்கை ஒரு நிமிடம் தன்னை மறந்து பார்த்தவள் , நினைவு வந்ததும் வேகமாக திரும்பிக் கொண்டாள்.

ஒரு நிமிடம் அவள் தன்னை பார்த்ததையும் பின் வெறுப்பாக திரும்பியதையும் பார்த்த தேவ்வின் இதழ் சிரிப்பில் விரிந்தது . ‘ மாமா , சிக்ஸ் பேக் பிடிச்சிருக்கா செல்ல குட்டி ? ‘ என்று மனதில் அவளோடு கொஞ்சியவன் , டி ஷர்ட்டை உதறி மீண்டும் போட்டான் தேவ் .

வீட்டிற்கு சென்றனர் சத்யா மற்றும் தீப்ஷீ . காலேஜிற்கு வேகமாக கிளம்பிய தீப்ஷீ , வேகமாக உண்டாள் . ” பொறுமையா சாப்பிடு தீப்ஷீ . இன்னும் நேரம் இருக்குல ” என்றார் சரண்யா .

” இல்ல மா , ஒன்னு செக் பண்ணனும் அதான் ” என்றாள் தீப்ஷீ .

வேகமாக பையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள் .

சத்யா ரெடியாக பைக் அருகே நின்றுக் கொண்டிருந்தான் . ” நானே வந்து உன்னை கூப்பிடணும்னு நினைச்சேன் . ஆனா நீயே வந்துட்ட , கிரேட் சத்யா . சரி வா போகலாம் ”  என்றாள் தீப்ஷீ .

” என்ன டிரஸ் இது அம்மு . பைக்கில் டபுள் சைட் போட்டு வரும்போது இப்படி ஷாட் டாப் போடக்கூடாதுனு சொல்லியிருக்கேனே . நீ போய் கொஞ்சம் ஹிப்க்கு கீழ வரமாதிரி டிரஸ் போட்டுட்டு வா ” .

” சத்யா சீக்கரமா போணும் . நான் பாத்து உட்கார்ந்துக்கிறேன் ” என்றாள் .

” இன்னும் டைம் நிறைய இருக்கு அம்மு . நீ போய் பொறுமையா மாத்திட்டு வா ” .

” இல்ல சத்யா ”  என்றவள் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தவள் சத்யா அருகே சென்று , ” சத்யா , அந்த தேவ் நம்மை பாலோ செய்வதுப் போல் இருக்கு அதான் இன்னைக்கு சீக்கிரமா போகலாம்னு சொல்லுறேன் ” .

” ஒரே காலேஜ் , ஒரே இடத்தில் வீடு பின் ஒன்றாக தான் அம்மு வருவோம் , போவோம் . இதை எப்படி நீ பாலோ என்று நினைக்க முடியும் ? ” .

” எனக்கு தோணுது சத்யா ” .

” சரி . அப்படியே வைத்துக் கொள்வோம் . இப்போ நீ போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்தினா தேவ் வருவதற்குள் நாம போயிடலாம் . நீ மாற்றவில்லை என்றால் இன்று காலேஜ்ஜிற்கே போக வேண்டாம் ” .

” சத்யா காலேஜ் இரண்டாவது நாளே கட் அடிச்சா அப்பா திட்டுவார் . என்னோடு சேர்ந்து நீயும் வர வர அடம் பிடிக்கிற சத்யா நான் போய் டிரஸ் மாத்திட்டு வரேன் . ஐ ஹேட் யூ ” என்றாள் தீப்ஷீ .

” பட் ஐ லவ் யூ அம்மு ” என்றான் சத்யா .

சத்யா சொல்லியதைக் கேட்ட தேவ்வின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது . பின் நிதானமாக யோசித்தவன் , ‘ அம்மா , அப்பாவிடம் சொல்லும்  அன்பின் வெளிப்பாடு மட்டுமே இது ‘  என்று நினைத்தவன், பெருமூச்சுவிட்டான் . பின் இயல்பாக சர்வேஷைப் பார்க்க அவன் கார் அருகே காத்திருந்தான் .

சர்வேஷ் , தீப்ஷீ இருவரும் ஒன்றாக வெளியே வர , தீப்ஷீ நேராக சென்று பைக்கில் ஏறினாள் .

” நான் உனக்காக தான் வெயிட் பண்ணுறேன் சர்வேஷ் ” என்றான் தேவ் .

” வரேன் தேவ் ”  என்றவன் தீப்ஷீயிடம்  ” பாய் தீபு ” , என்றான் .

தீப்ஷீ , தேவ்வை கண்டுக் கொள்ளாது சத்யாவோடு சென்றாள் .

” பார்த்தியா சத்யா , அந்த தேவ் நாம போகும் வரை போகாமல் நிற்கிறான்  ” .

” அம்மு , அவன் தான் சர்வேஷ்ஷை பார்க்க நிற்பதாக சொன்னானே . நீ இயல்பாக நடப்பதை பெரியதாக நினைக்கிறாய் . உன்னோட பாயிண்ட் ஆப் வியூவுக்கே வரேன் , அவனுக்கு தான் நம்ம இரண்டு பேரையும் பிடிக்காதே பின் ஏன் அவன் நம்மை பாலோ செய்ய போகிறான் ” .

” ஆமாம் சத்யா , நீ சொல்வதும் சரியே ”  என்றாள் தீப்ஷீ .

‘ அடி லூசு பெண்ணே உனக்காக தான் ‘ என்று கத்திக் கொண்டே அதாவது லூசு பெண்ணே பாட்டை கேட்டுக் கொண்டு வந்தான் தேவ் .

“ வா சர்வேஷ் . நான் உன்னை காலேஜ்ஜில ட்ராப் பண்ணுறேன் “ என்றான் தேவ் .

 

 

 

“ என் காலேஜ் வேற ஏரியா. உன் காலேஜ் வேற ஏரியா தேவ் . நான் பஸ்ஸிலே போறேன் “ என்றான் சர்வேஷ் .

 

 

 

“ ஏன் டா ? காலேஜ் பஸ்ஸில் யாரையாவது சைட் அடிக்கிறியா ? “

 

 

 

“ டேய் நீ வேற ஏன் டா கிளப்பிவிடுற . எங்க அப்பா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு , நான் அரியர் எல்லாம் கிளியர் பண்ணி , கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆனால் தான் இனி எனக்கு எங்க வீட்டில் சோறு போடுவாராம். இல்லை என்றால் வீட்டை விட்டு அனுப்பிடுவாராம் . அதான் தேவ் , நானே என் முழு கவனத்தையும் படிப்பில் செலுத்திக் கொண்டிருக்கிறேன் இப்போ போய் பொண்ணு அது இதுனு கடுப்பேத்துற.  “

 

 

 

அவன் சொல்லிய விதத்தில் சத்தமாக சிரித்த தேவ் , “ நான் உனக்கு சொல்லி தரேன்.”

 

 

 

“ ஐயோ ! வேண்டாம் டா சாமி . எனக்கு தெரிந்ததும் மறந்துப் போய்விடும்.”

 

 

 

“  காலையிலே சத்யாவும் , தீப்ஷீயும் பார்க்கில் என்ன செய்தாங்க ? “

 

 

 

“ அதுவா வர்மக் கலை டா . அவங்க இரண்டு பேரும் சேர்ந்து தான் கத்துக்கிட்டாங்க. தினமும் காலையில் பயிற்சி செய்வாங்க. “

 

 

 

“ ஓஹோ ! சரி டா மச்சான் வா பஸ் ஸ்டாப்பில் ட்ராப் செய்யுறேன். “  என்றான் தேவ் .

 

 

 

சர்வேஷ்ஷை பஸ் ஸ்டாப்பில் இறக்கிய தேவ் , வண்டியை வேகமாக செலுத்தினான் தீப்ஷீயை பாலோ செய்வதற்காக .

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நல்லா போயிட்டிருக்கு கதை … சத்யா அம்முன்னு கூப்பிடுறது நல்லா இருக்கு … அந்த வர்மம் விஷயமும் சூப்பர் … தேவ் காதலுக்கும் சத்யா நட்புக்கும் இடையில் இருக்கிறாள் தீப்ஷி …

  2. வர்ம கலை பற்றிய அறிவு மிக குறைவு தான். அதை பயில்வதற்கான வாய்ப்புகளும் மிக குறைவு.

    ஏற்கனவே சத்யா தீ சொல்வதை தான் செய்கின்றான். இதில் நோக்கு வர்மம் மூலம் அவனை கட்டுப்படுத்த என்ன அவசியம் வந்தது. 😂

    தீ தேவ்வ பிடிக்காது பிடிக்காதுனு சொல்லிட்டு அவனையே பார்த்திட்டு இருக்கா.

    காவல் அதிகாரி ஆக வேண்டும் என்பது அவள் கனவா? Interesting ❤️