Loading

அத்தியாயம் 5

” தீப்ஷீ … ” என்றுக் கூப்பிட்டார் சரண்யா .

 

அவளிடம் பதிலில்லை பின் சரண்யாவே சாப்பாட்டை டைனிங் டேபிளில் அடுக்கினார் .

 

தீப்ஷீ அறைக்குச் சென்ற சரண்யா , ” தீப்ஷீ , சாப்பிடாமல் ஏன் தூங்குகிறாய் . எழுந்திரி ” என்றார் .

 

” எனக்கு சாப்பாடு வேண்டாம் . எனக்கு தூக்கம் வருது . ப்ளீஸ் டிஸ்டப் பண்ணாதீங்க ” என்றவள் போர்வையை முகம் வரை போர்த்திக் கொண்டு மீண்டும் தூங்கினாள் தீப்ஷீ .

 

பின் வெளியே வந்த சரண்யா , ” வா பா தேவ் சாப்பிட . நீங்களும் வாங்க ” என்றார் .

 

மூவரும் கை கழுவி வந்து , டைனிங் டேபிளில் அமர்ந்தனர் . சரண்யா மூவருக்கும் உணவை பறிமாரினாள் .

 

” தீப்ஷீ எங்கே ? ” என்றுக் கேட்டார் தினேஷ் .

 

‘ நல்லவேளை அங்கிள் நீங்களே கேட்டிங்க . அவளை பார்க்க தான் வந்தேன் . அவள் ஜாலியாக ரூமில் போய் உட்கார்ந்திருக்கிறாள் ‘ என்று மனதில் பொங்கினான் தேவ் .

 

” அவள் தூங்கிட்டா . சாப்பாடு வேண்டாமாம்   ” என்றார் சரண்யா .

 

” ஏன் அவளை சாப்பிடும் முன் தூங்க விடுற. ”  என்றார் தினேஷ் .

 

” ஆமாம் உங்க பொண்ணு என்னை கேட்டு தான் தினமும் தூங்குகிறா . இல்ல நான் போய் தாலாட்டு பாடி உங்க பொண்ணை தூங்க வெச்சேனா ”  என்றார் சரண்யா .

 

பின் எதுவும் பேசாமல் அமைதியாக உண்டார் தினேஷ் . இருவரின் செயலை பார்த்து தேவ் மற்றும் சர்வேஷிற்கு சிரிப்பு வர , கஷ்டப்பட்டு வாய்க்குள் அடக்கினர் .

 

வேகமாக கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் சத்யா . அனைவரும் சாப்பிடுவதை பார்த்து அங்கே சென்றான் சத்யா .

 

” சரண்யாமா எங்க தீப்ஷீ ? ” , என்றான் சத்யா .

 

” அவள் தூங்குகிறா . நீ வந்து சாப்பிடு சத்யா ”  என்றார் சரண்யா .

 

” தீப்ஷீ சாப்பிட்டாளா ? ”

 

” இல்லை . நீ வந்து ” , என்று சரண்யா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சத்யா , தீப்ஷீ அறைக்கு சென்றான் .

 

” அவனுக்கு தான் தீப்ஷீ தவிர வேற யாரும் கண்ணுக்கு தெரிய மாட்டோம் என்று உனக்கு தெரியாதா . எனக்கு சாம்பார் ஊற்று ” என்றார் தினேஷ் .

 

” உங்க பொண்ணு தூங்கிட்டா எழுப்புறது கஷ்டம் . நான் பார்க்கிறேன் சத்யா எப்படி அவளை எழுப்பி , சாப்பிட வைக்கிறான் என்று  ”  என்றார் சரண்யா .

 

உள்ளே சென்ற சத்யா , ” அம்மு எழுந்திரி , சாப்பிட்டு தூங்கலாம் வா ”  என்றான் .

 

” எனக்கு வேண்டாம் சத்யா ” .

 

” மருந்து சாப்பிடணும் ஞாபகம் இருக்கா ? இல்லையா ? ” .

 

” சத்யா , அப்படியே மருந்தை ஊட்டிவிடு ” .

 

” சாப்பிடாமல் மருந்து சாப்பிட கூடாது அம்மு . இப்போ நீ சாப்பிட வரலை என்றால் நீ இனி குல்பியை மறந்திட வேண்டியது தான் . நான் உனக்கு எப்போதும் வாங்கி தரமாட்டேன் ”  என்றான் சத்யா .

 

வேகமாக எழுந்தவள் , ” நீ தான் எனக்கு ஊட்டிவிடணும் ” என்றாள்  .

 

” நானே ஊட்டிவிடுறேன் நீ வந்து டைனிங் டேபிளில் உட்கார்ந்தால் போதும் ” என்றான் சத்யா .

 

இருவரும் வெளியே வந்தனர் , அனைவரும் அவர்களை ஆச்சரியமாக பார்க்க , அதைக் கண்டுக்கொள்ளாமல் அவளை உட்கார வைத்தவன் . கை கழுவி தட்டு எடுத்து அவளுக்கு பிடித்ததை நிரப்பி , அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தான் சத்யா .

 

அவளும் அமைதியாக உண்டாள் . தீப்ஷீ சாப்பிட்டதும் , அவள் அறைக்கு சென்றவன் , மாலையில் அவளுக்கு வாங்கி தந்த மருந்தை எடுத்து வந்து , அதையும் அவளுக்கு தந்தான் சத்யா .

 

” போய் வாய் கழுவிட்டு  படு அம்மு ”  என்றான் சத்யா .

 

” என்ன சத்யா அவளுக்கு குல்பி வாங்கி தந்தியா ? ” என்றுக் கேட்டார் தினேஷ் .

 

” ஆமாம் பா ”  என்றான் சத்யா .

 

” வர வர இரண்டு பேரும் சொல் பேச்சை கேட்பதே இல்லை ”  என்றார் தினேஷ் .

 

” சாரி பா ” .

 

” நீ சாப்பிட்டியா சத்யா ? ” என்றுக் கேட்டார் தினேஷ் .

 

” சாப்பிட்டு தான் வந்தேன் ” என்றான் சத்யா .

 

” அப்பாடி ஒரு வழியா பதில் சொல்லிட்டியா சத்யா ”  என்றார் சரண்யா சிரித்துக் கொண்டே .

 

” என்ன சரண்யாமா , நீங்களும் என்னை கேலி செய்றீங்க ”  என்றான் சத்யா .

 

” பாருடா எங்க சத்யாவிற்கு வெக்கம் வருது ” என்று சத்யாவின் தாடையை பிடித்து கொஞ்சினார் சரண்யா .

 

‘ அங்கிள் போய் அப்பா ஆகிட்டார் . முன்பு முகம் கொடுத்து பேசாதவர் இன்று உரிமையாக திட்டுகிறார் . நான் இல்லாத போது இங்கே நிறைய மாறிவிட்டது போல் ‘ என்று நினைத்த தேவ் , இந்த வீட்டிற்கு சத்யா முதல்முறை வந்த நாள் நினைவுக்கு வந்தது.

 

‘ நினைவுகள்…

 

தயங்கிக் கொண்டே தீப்ஷீ வீட்டிற்குள் வந்த சத்யா , அங்கு சோபாவில் அமர்ந்திருந்த தேவ்வை பார்த்து கோபம் வந்தது . தான் இப்போது இங்கு வந்தது தப்போ என்று எண்ணியது சத்யாவின் உள்ளம் .

 

அவன் பின்பு வந்த தீபு , ” அப்பா ….. இவன் தான் சத்யா , என்னோட ஃப்ரெண்டு , நம்ம நெய்பர் ” என்றாள் மகிழ்ச்சியோடு .

 

அவர் முகத்தில் எந்த ஆர்வமுமில்லை மகிழ்ச்சியுமில்லை .

 

” வா ….. உட்காரு சத்யா ” என்றார் தினேஷ் .

 

” சத்யா தான் ரெப் , அவங்க ஸ்கூல் டீச்சர் ஒரே பாராட்டு ” என்று சொல்லிக் கொண்டே கையில் ஸ்நாக்ஸ் எடுத்து வந்தார் சரண்யா. அங்குள்ள அனைவருக்கும் .

 

” ஓ ….. ” என்றார் தினேஷ் . சத்யாவை அவர் பாராட்டவுமில்லை. பின் பேசவுமில்லை . சத்யாவிற்கு மனதில் தோன்றியது , ‘அம்மு அப்பாவிற்கு தன்னை பிடிக்கவில்லை போல் ‘ . என்ன செய்வதென்று தெரியாமல் முள் மேல் அமர்ந்திருப்பதுப் போல் உணர்ந்தான் .

 

சர்வேஷோடு விளையாடிக் கொண்டிருந்தாலும் கவனத்தை அவர்கள் மேலே வைத்திருந்தான் தேவ் .

 

” தேவ்  …. ” என்று கூப்பிட்டார் தினேஷ் .

 

” என்ன அங்கிள் ? ” என்றான் தேவ் .

 

” நீ ஸ்போர்ட்ஸ் நல்லா விளையாடுறதா உங்க ஸ்கூல்ல சொன்னாங்களாமே ,  வாக்கிங் போனப்ப உங்க அப்பா சொன்னாரு . ரொம்ப சந்தோஷம். ஸ்போர்ட்ஸ்ஸை விட்டுடாதே, ஸ்போர்ட்ஸ் நம்மள பிசிகலாவும் , மெண்டலாவும் ஸ்ட்ராங்காக வைத்துக்கொள்ள உதவும் ” .

 

”  ஷுயூர் அங்கிள் ” . சத்யாவை பாராட்டாமல் தன்னை பாராட்டும் அங்கிளை அவனுக்கு அதிகம் பிடித்தது .

 

‘ அம்முவின் அப்பாவிற்கு தன்னை பிடிக்கவில்லை ‘  என்று எண்ணியது சத்யாவின் உள்ளம் . என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்திருந்தான் சத்யா .

 

அப்பொழுது , ” சத்யா ….. வா நான் உனக்கு வீட்டை சுற்றி காண்பிக்கிறேன் ”  என்றாள் தீபு .

 

இங்கு இருந்து தப்பித்தால் போதும் என்று எண்ணி வேகமாக எழுந்தான் சத்யா .

 

” தீபு … நம்ம மூன்று வீடுகளும் ஒரேமாதிரி தான் இருக்கும். அதனால் காண்பிக்க வேண்டிய தேவை இல்லை ” என்றார் தினேஷ் .

 

” அப்பா … வீடு தான் ஒரேமாதிரி ஆனால் பொருட்கள் வேறு ”  என்றவள் சத்யாவை அழைத்துக் கொண்டு சமையலறை சென்றாள் .

 

அங்கு சென்றதும் சத்யாவை பார்த்த சரண்யா, தீபு அறியாமல் , ” தீபு அப்பா எப்பவும் இப்படிதான் எங்க கிட்டக் கூட .  தப்பா எடுத்துக்காதே சத்யா “.

 

” அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை சரண்யாமா ” என்று சிரித்த முகமாகவே கூறினான் சத்யா .

 

‘ இவ்வளவு நல்ல பையனை கஷ்டபடுத்துறாரே இந்த மனுஷன் . நல்ல படிப்பு , நல்ல வேலை இருந்து என்ன பயன்  ? அப்பா , அம்மா செய்த தவறுக்கு பிள்ளையை ஒதுக்குறார் ‘ , என்று தன் கணவனை மனதில் திட்டினாள் சரண்யா . ‘

 

#####

 

தீப்ஷீயின் பேச்சில் நிஜத்திற்கு வந்தான் தேவ் .

 

கை கழுவிட்டு வந்த தீப்ஷீ , ” அப்பா ஒரு வாக் சத்யாவோடு போயிட்டு வரேன் பா . அப்போதான் தூக்கம் வரும் ” என்றாள் .

 

” பின்ன காலேஜில் இருந்து வந்ததிலிருந்து தூங்கினா எப்படி நைட் தூக்கம் வரும் . உன்னால் அவனின் தூக்கமும் கெடுது . சீக்கிரம்  போயிட்டு வீட்டிற்கு வா  ” என்றார் தினேஷ் .

 

” அப்பா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை . எனக்காக அவளை திட்டாதீங்க ” என்றான் சத்யா .

 

” அதான நீயாவது அவளை திட்டு வாங்க விடுவதாவது . இரண்டு பேரும் ஒழுங்கா ஓடிடுங்க ”  என்றார் தினேஷ் .

 

தீப்ஷீ மற்றும் சத்யா பார்க்கை நோக்கி ஓடினர் .

 

” என்ன தேவ் , ஒருத்தன்  வீட்டிற்கு வரான் , பொண்ணு ரூமிற்கு போகிறான் , பொண்ணுக்கு ஊட்டி விடுகிறான் . நைட் பத்து மணிக்கு தனியா அவனோடு அனுப்பிவிடுறாங்க என்ன அம்மா , அப்பா இவங்க அப்படி தான யோசிக்குற ? ” என்றுக் கேட்டார் தினேஷ் .

 

முதலில் ஆம் என்று தலை ஆட்டவந்தவன் ,  ” இல்லை அங்கிள் ”  என்று சொன்னான் .

 

” உண்மையான அன்பு கொண்டவர்கள் , மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிக்கமாட்டார்கள் . சத்யா எண்ணம் நல்லதாக இருப்பதால் எங்களை நினைத்து பயந்து எந்த செயலையும் மறைக்காமல் எங்கள் முன்பே தைரியமாக செய்கிறான் . அவனிடம் தப்பான எண்ணம் இருந்திருந்தால் ஒரு நாள் கூட அவனால் எங்கள் முன்பு தீப்ஷீயோடு இயல்பாக இருக்க முடியாது ” என்றார் தினேஷ் .

 

வாழ்வின் அனுபவம் கற்றுத்தந்த பாடம் இது என்பது தேவ்விற்கு புரிய , ” ஆமாம் அங்கிள் . நீங்க சொல்வது உண்மைதான் . நேரமாகுது நான் போயிட்டு வரேன் ” என்றான் தேவ் .

 

” போயிட்டு வரேன் ஆன்ட்டி . பாய் டா சர்வேஷ் ” என்ற தேவ் வெளியே வந்தான் .

 

‘ உன்னை பார்க்க நான் வந்தால் . நீ ஜாலியாக தூங்குகிற , பின் சத்யாவோடு பார்க்கிற்கு போயிட்ட. இப்போ நான் உன்னை பார்க்க பார்க் வர வேண்டுமா ? முடியாது போ டி ‘ என்று மனதில் தீப்ஷீயோடு பேசியவன் கால் முன்னே இரண்டு அடி எடுத்து வைக்க , அவன் மனமோ பின்னோக்கி தீப்ஷீ இருக்கும் இடத்திற்கு ஓடியது . வேறுவழி இல்லாமல் தேவ் பார்க்கை நோக்கி நடந்தான் .

 

இருவரும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தனர் . தெளிவு இல்லாத விளக்கு வெளிச்சத்திலும் , இருளான நிலவு வெளிச்சத்திலும் தேவதையாக தெரியும் தீப்ஷீயை , கண் சிமிட்டாமல் பார்த்தான் .

 

போனை சைலன்ட்டில் போட்டவன் , மரத்திற்கு பின் மறைவாக நின்றுக் கொண்டே தீப்ஷீயை போட்டோ எடுத்தான் . ‌பின் அமைதியாக வீட்டை நோக்கி சென்றான் தேவ் .

 

தேவ் வந்ததே தெரியாமல் இருவரும் தங்கள் உலகில் இருக்க , தீப்ஷீ  சென்னதைக் கேட்டு அதிர்ந்தான் சத்யா .

சத்யா , சந்தியா உன்னை லவ் பண்ணுறானு நினைக்கிறேன் ” என்று ஊஞ்சலில் முன்னும் , பின்னும் விளையாடிக் கொண்டே கூறினாள் தீப்ஷீ .

 

” அம்மு இதை எல்லாம் ஆரம்பத்திலே சரி செய்ய வேண்டும் . இல்லை என்றால் கஷ்டமாகிடும் . நீ போய் லவ் எல்லாம் தப்பு வேண்டாம் என்று அவளிடம் சொல்லிடு ” ,

என்றான் சத்யா .

 

” இரு சத்யா . எனக்கு அப்படி சந்தேகம் இருக்கு என்று தான் சொன்னேனே தவிர . இன்னும் உறுதியாக தெரியவில்லை . அவ என் கிட்ட லவ் என்று சொல்லாதபோது நான் என்னன்னு அவ கிட்ட போய் பேச ” .

 

” ஆமா அம்மு நீ சொல்வதும் சரி தான் . ஒருவேளை அவளுக்கு அந்த எண்ணம் இல்லாமல்,  நீ போய் அவ கிட்ட சத்யாவை லவ் பண்ணாதேனு சொல்ல, அதைவைத்தே அவள் லவ் பண்ணா பெரிய தலைவலிதான் ” என்றான் சத்யா .

 

ஆமாம் என்று தீப்ஷீ தலையை ஆட்டினாள் .

 

” இருந்தாலும் இனிமேல் அவளிடம் கொஞ்சம் தள்ளியே இருக்க வேண்டும் ” ,என்றான் சத்யா .

 

‘ இப்போ மட்டும் அவளோடு ஒட்டிக்கிட்டா இருக்க . உன்னிடம் சொன்னால் உனக்கும் அவள் மேல் காதல் வரும் என்று நினைத்து சொன்னேன் பார் . என்னை தான் முதலில் அடிக்க வேண்டும் . நீ சரியான அம்பிடா சத்யா ‘  என்று மனதில் சத்யாவை கழுவி ஊத்தினாள் தீப்ஷீ .

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. பரவாயில்ல தினேஷ் புரிஞ்சுகிட்டார் … தேவ் கனவு கண்டுட்டே இருக்க வேண்டியது தான் … சத்யா தீப்ஷி ஃப்ரெண்ட்ஷிப் ரொம்ப பிடிச்சிருக்கு

  2. தேவ் இவளை காண வேண்டி ஓடி வந்தாள் இவளோ அறைக்குள் ஓடிசென்று முடங்கிவிட்டாள்.

    உண்மை தான், “உண்மையான அன்பு எதையும் வெளிப்படையாக செய்ய வைக்கும். சூழ்நிலை காரணமாகவோ நபர்கள் காரணமாகவோ தயங்கி நிற்காது”.

    சத்யாவின் அம்மா, அப்பா மேல் இருக்கும் தவறான எண்ணத்தோடு அவனை முதலில் அணுகியவர் இப்பொழுது உரிமையோடு அணுகுகிறார்.

    கடந்துசென்ற காலங்களில் எத்தனையோ மாற்றங்கள். தீயின் சத்யா மீதான அன்பும், தேவ் மீதான வெறுப்பு மட்டும் அப்படியே.