Loading

 

அத்தியாயம் 38

 

பரந்தாமன் வீடு அருகே இருந்த பெட்டி கடையில் வண்டியை நிறுத்தினாள் தீப்ஷீ .

 

” அண்ணா தண்ணி பாட்டில் தாங்க.” என்றாள் தீப்ஷீ .

 

” இந்தமா. ” என்று அந்த கடைக்காரர் தந்தார் .

 

” அண்ணா பரந்தாமன் எப்படி ?” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” எதுக்கு கேட்குற? ” என்றுக் கேட்டார் கடைக்காரர் .

 

” என் தங்கையை அவர் பையனுக்கு கல்யாணம் பண்ணலாம்ணு இருக்கேன் . அதான் அவங்களை பற்றி தெரிஞ்சிக்க வந்தேன் .”

 

” ஓ ! அப்படியாமா . பரந்தாமன் ரொம்ப நல்லவர் , அவர் மனைவி இறந்த பின் தன் ஒரே மகனை யார் துணையும் இல்லாமல் வளர்த்தார் . அந்த பையனும் ரொம்ப நல்லவன் அவங்க அப்பா கம்பெனி வேண்டாம்னு சின்ன ஜெராக்ஸ் கடை வெச்சி சுயமா வேலை பாக்குறார் . பேசிக்கிட்டே இருக்கேன் அந்த தம்பியே போகுது. ” என்றார் கடைக்காரர் .

 

அவனை நன்றாக பார்த்தாள் தீப்ஷீ , ‘ கே எம் டி பைக்கில் பந்தாவ டிரஸ் பண்ணிக் கொண்டு போகிறான் . ஜெராக்ஸ் கடையில் வேலை பார்க்கவன் மாதிரியா போறான்? இவனை போய் நல்லவனு சொல்றார். ‘ என்று நினைத்த தீப்ஷீ அவரிடம் , ” அண்ணா அவர் ஜெராக்ஸ் கடை எங்கிருக்கு?” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” இங்கிருந்து நாலு தெரு தள்ளி லட்சுமி ஜெராக்ஸ் கடைனு எழுதி இருக்கும். ”

 

” ரொம்ப தேங்க்ஸ் அண்ணா. ” என்ற தீப்ஷீ நேராக சென்றது லட்சுமி ஜெராக்ஸ் கடைக்கு தான் .

 

கடைக்குள் சென்று , ஓட்டர் ஐடியை தந்தவள் , ” இதை ஸ்கேன் பண்ணுங்க. ” என்றாள்.

 

அதை வாங்கி ஸ்கேன் செய்வதற்குள் பல முறை தீப்ஷீயை அசிங்கமாக பார்த்தான் .

 

‘ டேய் பொறுக்கி நாயே . என் கிட்ட மாட்டிய பின் உனக்கு இருக்குடா. ‘ என்று நினைத்த தீப்ஷீ பென்டிரைவ்வை அவனிடம் நீட்டினாள் .

 

” மேடம் , சிஸ்டம் ஃபுல்லா வைரஸ் இருக்கு உங்க பென்டிரைவ் போட்டால் உங்களோட சிஸ்டத்திலும் வைரஸ் ஏறிவிடும் . உங்க மெயில் ஐடி சொல்லுறீங்களா? ” என்றுக் கேட்டான் .

 

‘ ஒன்னும் இல்லாத வைரஸை காரணம் காட்டி பெரிய ஆபத்தான வைரஸை அனுப்புறீயா ?’ என்று நினைத்தவள் அவனிடம் ஒரு மெயில் ஐடியை சொன்னாள் பின் பணம் தந்தவள் செல்லும் முன் , ” உங்க பேர் என்ன ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” சந்தரன். ” என்றவன் முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

 

அவனை பார்த்து சிரித்த தீப்ஷீ , ‘ சிரி டா சிரி எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். ‘ என்று நினைத்தவள் தன் வீட்டை நோக்கி சென்றாள் .

 

வீட்டு வாசலிலேயே உட்கார்ந்தவள் . ஶ்ரீதருக்கு அழைக்க,

 

” ஹலோ ஸ்ரீதர் உன்னோட நம்பருக்கு ஒரு மெயில் ஐடி அனுப்பியிருக்கேன் . அதுலையும் வைரஸ் இருக்கானு பார்த்துச் சொல்? ” என்றாள் தீப்ஷீ .

 

” ஒன் மினிட். ” என்றான் ஶ்ரீதர் .

 

” ஆமா தீப்ஷீ  , இதுலையும் வைரஸ் இருக்கு. ” என்றான் ஶ்ரீதர் .

 

” ஒரு புது ஃபோன் வாங்கி, அதில் இந்த மெயிலை ஓப்பன் செஞ்சு, பொண்ணு மாதிரி டிரஸ் மாத்து. ”  என்றாள் தீப்ஷீ .

 

” நான் எப்படி பெண்ணா நடிக்குறது? ” என்றுக் கேட்டான் .

 

” ப்ளீஸ் ஶ்ரீதர் எப்படியாவது செஞ்சுடு . இது பெண்கள் சம்பந்தமான கேஸ் அதான் எவ்வளவு சீக்கிரமா முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்கணும். ”

 

” சரி செய்றேன். ”

 

” உடனே உனக்கு ஃபோன் வரும் . அப்படியே அந்த டீட்டெயில்ஸ் வேணும். ”

 

” சரி நான் அனுப்புறேன். ”

 

” ஓகே . பாய் .”  என்ற தீப்ஷீ ஃபோனை வைக்க சரியாக தேவ்வின் கார் வீட்டிற்கு முன் வந்து நின்றது .

 

கமலா அதிலிருந்து இறங்கினார் . தேவ் காரை கார் செட்டில் விட போனான் .

 

” கமலாமா எங்க போனிங்க ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

அவள் அருகே அமர்ந்தவர் , ” தேவ் ஸ்போட்ஸ் அகாடமிக்கு தான் தீப்ஷீ .” என்றார் .

 

” அங்கு எதுக்கு போனீங்க ? ”

 

” அங்கு எல்லாமே சின்ன பசங்க தான் தீப்ஷீ . தேவ் தான் வந்து என் கிட்ட கேட்டாங்க , ‘ கமலாமா பசங்க ரொம்ப சேட்டை பண்றாங்க எனக்கு உதவியா அவங்களை பார்த்துக்குறீங்களானு? ‘ .

 

நானும் சரினு சொன்னேன் . அங்க இருக்கிற பசங்க எல்லாம் சூப்பரா விளையாடுறாங்க . என்ன பாட்டினு தான் கூப்பிடுவாங்க . என்ன அந்த பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் .

 

நீ , சத்யா சின்ன வயசுல இருந்த மாதிரியே இருக்காங்க அந்த பசங்க .” என்ற கமலாவின் முகத்தில் மகிழ்ச்சியும் , நிறைவும் தெரிந்தது .

 

” எப்போது இருந்து போறீங்க கமலாமா ? ”

 

” ஒரு வருஷமா போறேன் . நான் குளிச்சிட்டு வரேன் .” என்ற கமலா எழுந்துச் சென்றார்.

 

‘ நான் செய்ய வேண்டிய எல்லா வேலையும் நான் இல்லாத போது இவன் செய்து இருக்கிறான். ‘ என்று நினைத்தவள் .

 

தேவ் வீட்டின் உள்ளே சென்றதும் அவன் பின்னே சென்றாள் .

 

கை , கால் கழுவி வந்தவன் அக்ஷிதாவிடம் சென்றான் , ” அம்மா சாப்பிட்டியா? ” என்றுக் கேட்டான் .

 

” சாப்பிட்டேன் டா கண்ணா. ” என்றார் அக்ஷிதா .

 

” இன்னைக்கு என்ன பண்ணீங்க? ” என்றுக் கேட்டவன் அவரோடு இருபது நிமிடம் சமையலறையில் பேசிக் கொண்டிருந்தான் .

 

” நீ போய் உட்காருப்பா , நான் டீ எடுத்துட்டு வரேன். ” என்றார் அக்ஷிதா .

 

அவனையே பார்த்துக் கொண்டிருந்த தீப்ஷீ , தேவ் சமையலறையை விட்டு போனதும் , ” அக்ஷிமா , நான் தேவ்விற்கு டீ போடுறேன். ” என்றுக் கேட்டாள் .

 

” வாலு என் புள்ள பெயரை சொல்லாதேனு சொல்லி இருக்கேன் . நானிக்கு மட்டும் தெரிஞ்சது உனக்கு திட்டு கன்பார்ம். ”

 

” அக்ஷிமா என் கிட்ட கன் இருக்கு . அவங்களை சுட்டுடலாம். ”

 

” அடிப் பாவி! ”  என்று அக்ஷிதா தீப்ஷீயை பயத்தோடு பார்க்க .

 

டீயை கப்பில் ஊற்றியவள் திரும்ப , அங்கு அக்ஷிதா பயத்தோடு நிற்க , ட்ரேவை கீழே வைத்தவள் , அக்ஷிதாவை அணைத்து அவர் காதில் , ” சும்மா அக்ஷிமா. ” என்றவள் ட்ரேவை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள்   .

 

” வாலு. ”  என்ற அக்ஷிதாவிற்கு மனம் நிறைந்தது தீப்ஷீயிடம் தெரிந்த மாற்றத்தல் .

 

தேவ்வை தேடி போனாள் தீப்ஷீ .

 

தேவ் , நானியின் கால்களை பிடித்தி அமுக்கிக் கொண்டே அவரிடம் பேசிக் கொண்டிருந்தான் .

 

அவனை வியப்பாக பார்த்துக் கொண்டே ட்ரேவை அவனிடம் நீட்டினாள் தீப்ஷீ .

 

அம்மா தான் என்று நினைத்து திரும்பிய தேவ்வும் , தீப்ஷீயை அதிர்ச்சியாக பார்த்தான் .

 

இருவரையும் பார்த்தும், பார்க்காதது போல் பார்த்துக் கொண்டிருந்தார் இந்திராணி .

 

பின் தீப்ஷீ வெளியே சென்றுவிட்டாள் .

 

நானி ரூமிலிருந்து வெளியே வந்து தேவ்வையே யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தீப்ஷீ .

 

‘ என்ன நடந்தது என் செல்லத்திற்கு . வீட்டிற்கு நான் வந்ததில் இருந்து என்னையே சைட் அடிக்கிறாள் . இதெல்லாம் சரி இல்லையே. ‘  என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே வெளியே அமைதியாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான் தேவ் .

 

வழக்கத்தைவிட தாமதமாகவே அறைக்கு சென்றான் தேவ் .

 

அவன் பெட்டில் படுத்ததும் தூக்கத்தில் அவன் மேல் கை போட்டாள் தீப்ஷீ .

 

‘ நீ முழிச்சு தான் இருக்குன்னு எனக்கு தெரியாதா . நான் உன்னோடு எத்தனை நாள் இதே பெட்டில் படுத்து இருக்கேன் எனக்கு தெரியும். உனக்கு தூக்கத்தில் கை , கால் போடும் பழக்கம் இல்லைனு. ‘ என்று நினைத்தான் தேவ் .

 

ஐந்து நிமிடம் பொறுமையாக இருந்தவன் அவளாக கையை எடுக்க போவதில்லை என்று உணர்ந்தவன் அவளின் கையை எடுத்து அவள் மேல் வைத்தவன் மனதில் , ‘ நான் இன்னும் காதலைப் பற்றி பேசவில்லை . உனக்கு என்ன பிடிக்குமா என்று தெரியலை ? அது தெரியும் வரை நான் இந்த பார்டரை தாண்ட மாட்டேன் . நீயும் தாண்டக் கூடாது .’ என்றவன் திரும்பி படுத்துக் கொண்டான் .

 

காலையில் அவன் கண் விழித்த போது தீப்ஷீ அவன் மேல் தான் படுத்திருந்தாள்.

 

‘ ராட்சசி என்ன உயிரோடு கொல்லுவதற்காகவே பிறவி எடுத்து வந்து இருப்பா போல்.’ என்று நினைத்தவன் வெளியில், ” பார்க்க ஒல்லியா தொடப்ப குச்சி மாதிரி இருக்கா இந்த கனம் கனக்குற ,எழுந்திரி டி .” என்றான் தேவ் .

 

” யாரு தொடப்பக் குச்சி ? ” தூக்கத்திலே கேட்டாள் தீப்ஷீ .

 

” உன்ன தான். நகர்ந்து படு. ” என்றான் தேவ் .

 

தீப்ஷீ நகர்ந்துப் படுத்தாள் .

 

” ச்ச ! காலங்காத்தால மனுஷன் பீலிங்ஸோடு விளையாடிட்டு இருக்காள். ”  என்று சத்தமாக புலம்பியவன் ரெஸ்ட் ரூம் செல்ல .

 

தீப்ஷீ சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டாள் .

 

மூன்று நாட்களுக்கு பின் ,

 

” ஹலோ தீப்ஷீ , ஃபோன் வந்த இடம் லட்சுமி ஜெராக்ஸ் கடைலிருந்து தான். ” என்றான் ஶ்ரீதர் .

 

” எப்படி ஶ்ரீதர் கண்டுபிடிச்ச? ”

 

” ரொம்ப கஷ்டப்பட்டு, என்னை பொண்ணு மாதிரி காண்பிச்சேன் . இரண்டு நாள் கழிச்சி அவனே எனக்கு ஒரு நம்பரிலிருந்து வீடியோ அனுப்பினான். அப்புறம் ஃபோன் செய்தான் . அவன் ஃபோன் செஞ்ச நொடி, அவனப் பத்திய தகவல் என் கையில் . ஆனா, தீப்ஷி இப்போ அவன் ஃபோன் பண்ண நம்பர் அன்னைக்கு உன் மெயில்லிற்கு வந்த ஓட்டர் ஐடி வெச்சி வாங்கினது தான் . அவன் டிஆக்டிவேட் பண்ணறதுக்கு முன்னாடி தேடியதால் அவன் இருக்கும் இடம் கிடைச்சது. ”

 

” தேங்க்ஸ் ஶ்ரீதர். ”

 

” ஹலோ மேடம் நீங்க உங்க வேலைய செஞ்ச மாதிரி நானும் என் வேலைய தான் செஞ்சேன் தேங்க்ஸ்லாம் வேண்டாம். ”

 

” நீ உன் வேலைய தான் செஞ்ச . ஆனா, எனக்காக தான பெண் வேஷம் போட்ட ? மத்தவங்களுக்காக போட்டு இருக்கமாட்ட தான ? ” என்றாள் தீப்ஷீ .

 

” ஆமா, உனக்காக தான் அதை செஞ்சேன். ஏனா நீ என் ஃப்ரெண்ட் . நண்பர்களுக்குள்ள தேங்க்ஸ் தேவை இல்ல. ”

 

” ஓகே தேங்க்ஸ் வாபஸ் . ஶ்ரீதர் நமக்கு இன்னைக்கு நைட் டியூட்டி லட்சுமி ஜெராக்ஸ் கடையில் தான் . இன்னும் ஸ்டேஷனில் யாரை நம்புவது என்று தெரியலை . அதனால் , நீ தான் என்னோடு வரணும். ” என்றாள் தீப்ஷீ .

 

” நான் வரேன் தீப்ஷீ . நைட் சாப்பாட்டிற்கே உங்க வீட்டிற்கு வந்துடுறேன் . அங்கிருந்தே ஸ்பாட்டிற்கு போயிடலாம். ”

 

” ஓகே ஶ்ரீதர் . பாய். ” என்றவள் ஃபோனை வைத்தாள் .

 

பேப்பரில் முன்பு எழுதியிருந்த எக்ஸ் நேராக சந்தரன் என்று எழுதினாள் .

 

‘ அப்பாவும் மகனும் சேர்ந்து செய்ற வேலையாடா இது . ஆதாரம் மட்டும் கிடைக்கட்டும் நீங்க சத்யாவோட தீப்ஷீயை பார்ப்பீங்க. அவன் என்னோட உயிர். அவன் இல்லாமல் நான் படும் துன்பத்தை பல மடங்காக உங்களுக்கு திருப்பி தருவேன்’ என்று நினைத்தாள் தீப்ஷீ .

 

மீண்டும் தீப்ஷீ ஃபோன் அடித்தது.

 

” ஹலோ மேடம் , நான் வசந்தி பேசுறேன் .”

 

” சொல்லுங்க . யாருனு கண்டுபிடிச்சிட்டீங்களா ? ”

 

” எனக்கு சரியா தெரியலை மேடம் . எம்.டியை நிறைய டைம் பார்க்க சென்றது ரெக்ரூட்மெண்ட் டீமின் ஹேட்  சரவணன் தான் . ஆனா, அவர் ரொம்ப நல்லவர் மேடம் . அவருக்கு கூட ஒரு பெண் குழந்தை இருக்கு . அந்த பொண்ணு என்றால் அவருக்கு உயிர் . என்னால ஒரு முடிவுக்கு வர முடியலை. ” என்றாள் வசந்தி .

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்