Loading

 

அத்தியாயம் 36

 

 

” உன் போன் என் கிட்ட இருக்கட்டும் , வேறு பேசிக் மாடல் போனும் புது சிம்மும் வாங்கிக்கோ. உடனே புது நம்பரில் இருந்து எனக்கு போன் பண்ணு. ” என்றாள் தீப்ஷீ .

 

” மேடம் இந்த விஷயம் வெளிய தெரியாம… ” என்றாள் இலக்கியா தயங்கிக் கொண்டே.

 

” தப்பு செய்றவங்களே தைரியமா இருக்காங்க . எந்த தப்பும் செய்யாமல் எதுக்கு பயப்படுற ? இன்னைக்கே இந்த வீடியோ நெட்டில் இருக்கானு பார்க்க சொல்றேன் . இருந்தால் உடனே டெலிட் செஞ்சிடலாம் . கவலைப்படாம போ தேவைப்பட்டால் ஃபோன் செய்றேன் அப்போ என்ன வந்து பார்த்தா போதும் . கொஞ்ச நாளைக்கு தேவை இல்லாம வெளியே போகாதே. “என்றாள் தீப்ஷீ .

 

” தேங்க்ஸ் மேடம். ” என்ற இலக்கியா வெளியே சென்றாள்.

 

ஶ்ரீதருக்கு போன் செய்தாள் தீப்ஷீ . ஶ்ரீதர், தீப்ஷீயோடு ஐ.பி.எஸ் ட்ரைனிங் போனவன் . முதலில் சிரித்து பேசி அவனோட நட்பு கரம் நீட்டினாள் தீப்ஷீ . சத்யா இறந்த பின் யாரோடும் பேச விரும்பாமல் தள்ளியே இருந்தாள் .

 

ஆனால் , ஶ்ரீதர் அவளை தனியே விடாமல் எப்போதும் போல் அவளோடு நட்பாக இருந்தான் .

 

தேவ் மாதம் ஒருமுறை தீப்ஷீயை பார்க்க ஹைதராபாத் போவான் அப்போது ஒருமுறை தேவ்விடம் தான் தீப்ஷீ மாற்றத்திற்கான காரணத்தை கேட்டு தெரிந்துக் கொண்டான் ஶ்ரீதர் .

 

அதன்பின் அவள் விரும்பவில்லை என்றாலும் அவளோடான நட்பை கெட்டியாக பிடித்து உறுதியாக்கிக் கொண்டான் ஶ்ரீதர் .

 

” ஹலோ ஶ்ரீதர். ”

 

” சொல்லுங்க மேடம் , முதல் நாளே கடமையை செய்ய ஆரம்பிச்சிட்டீங்களா? “என்றான் ஶ்ரீதர் .

 

” ஆமா , பின்ன அதுக்கு நல்ல நாளா பார்த்துட்டு இருப்பாங்க . எங்க இருக்க? ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணும். ” என்றாள் .

 

” உன் ஸ்டேஷன் பக்கம் தான் வந்துட்டு இருக்கேன் . நானே உன்ன வந்து பார்க்கிறேன். ” என்றான் ஶ்ரீதர் .

 

ஸ்டேஷன் உள்ளே வந்த ஶ்ரீதருக்கு எல்லாரும் சல்யூட் அடித்தனர் . ஆம் ஶ்ரீதர் சைபர்  க்ரைம்  பிரான்ஞ்சின் டிஎஸ்பியாக இன்று பதவி ஏற்றான் . அனுமதிக் கேட்காமல் தீப்ஷீ அறைக்குள் நுழைந்தான்  .

 

அவனை கோபமாக முறைத்தாள் தீப்ஷீ . அதைப் பற்றி கவலைப்படாமல் அங்கிருந்த சேரில் உட்கார்ந்தான் ஶ்ரீதர் .

 

” என்ன விஷயம் தீப்ஷீ? ”

 

‘ உன்னை எல்லாம் திருத்தவே முடியாது. ‘ என்பது போல் பார்த்தவள் , ” ஒரு பொண்ணு போன்ல வைரஸ் மூலமா அவளின் போனை யூஸ் பண்ணி. அவ டிரஸ் மாற்றுவதை வீடியோ எடுத்து. பணம் கேட்டு மிரட்டுறாங்க . எப்படி இந்த ஃபோனுக்கு வைரஸ் வந்ததுனு? எனக்குத் தெரியணும். தென் வீடியோ அனுப்பிய ஃபோன் நம்பர் பற்றிய தகவல் வேணும். அப்புறம் அந்த பெண்ணின் வீடியோ நெட்டிலிருந்து அழிச்சிடு. ” என்றாள் தீப்ஷீ .

 

” ஃபோன் எங்க? ” என்றுக் கேட்டான் ஶ்ரீதர் .

 

ஃபோனை தந்தவள் , ” ஃபோன் இங்கு வந்த பின் தான் ஸ்விட்ச் ஆஃப் செய்தேன் . குற்றவாளி உஷாராகும் முன் நீ தகவலை எடுத்துடு. ” என்றாள் .

 

” சரி நான் உடனே என்னனு பார்க்குறேன்.  நாளைக்கு காலைல எல்லா தகவலும் உனக்கு கிடைக்கும். நீ சாப்பிட்டியா ?  ” என்றுக் கேட்டான் ஶ்ரீதர்.

 

” இல்ல. ”

 

” மணி ஐந்தாகுது இன்னும் சாப்பிடாம இருக்க? ”

 

” முக்கியமான வேலை வந்துடுச்சு . இப்போ நான் வீட்டுக்கு தான் போறேன் . அங்கு போய் சாப்பிடுறேன். ” என்றாள் தீப்ஷீ .

 

” ஏன் தான் நீ இப்படி இருக்கியோ . உன் வீட்டுக்காரரை மிரட்டுனாதான் நீ சரி பட்டு வரவ . சரி சீக்கிரம் வீட்டிற்கு போய் சாப்பிடு . நான் போய் வேலையை ஆரம்பிக்கிறேன். ”

 

” என் வீட்டுக்காரர் டைக்குவாண்டோ ப்ளேயர் . அவர் பக்கத்துல நீ தூசி . நீ அவர மிரட்ட போறீயா?” என்றாள் தீப்ஷீ . அவள் கொஞ்சம் இயல்பாக இருப்பது ஸ்ரீதரோட மட்டுமே. காரணம் அவன் நட்பு.

 

” சரிங்க மேடம்.”

 

தீப்ஷீ இப்படி எல்லாம் பேசுவது அரிது . அதுலையும் தேவ்வை பற்றி பேசியதை ஆச்சரியமாக பார்த்தவன் மனதில் , ‘ இப்போ தான் தீப்ஷீக்கு பல்பு எரிய ஸ்டார்ட்டாகுது . இனியாவது தேவ்வை புரிந்துக் கொண்டால் சரி .’ என்று நினைத்தவன் வெளியே சென்றான் .

 

மீதி வேலைகளை முடித்த தீப்ஷீ தன் வீட்டிற்கு சென்றாள் .

 

போனதும் சாப்பிட்டவள் , ரூமிற்கு சென்றாள் .

 

கேஸ் சம்பந்தமாக நிறைய தகவல்கள் நெட்டில் தேட வேண்டி இருந்தது தீப்ஷீக்கு .

 

பாதுகாப்பு கருதி தீப்ஷீ பேசிக் மாடல் போன் தான் பயன்படுத்துகிறாள் .

 

என்ன செய்வது என்று அவள் யோசிக்க , தேவ் லேப்டாப் நினைவிற்கு வர . அதை எடுத்து ஆன் செய்தாள் .

 

டெஸ்க்டாப் இமேஜாக இவளின் படம் இருக்க இவள் ஆச்சரியமாக பார்த்தாள் .

 

உள்ளே சென்று எல்லா போல்டரையும் திறந்து பார்த்தாள் தீப்ஷி சிறுவயது ஃபோட்டோ , வீடியோ என்று இருந்தது . அவள் கல்லூரி செல்லும் போது எடுத்த ஃபோட்டோஸ் என்று பல ஃபோட்டோஸ் அவளுக்கே தெரியாமல் எடுத்து வைத்திருந்தான் தேவ் .

 

‘ இவன் திருமணத்திற்கு முன்பே என்னை காதலித்தானா? ‘  என்று யோசித்தாள் தீப்ஷீ .

 

பின் தேவ்வின் பீரோவில் தேடினாள் ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்தாள்.

 

அவளுக்கு பல டைரி கிடைத்தது . எல்லாமே அவன் தீப்ஷீக்காக எழுதிய கடிதம் , கவிதைகள் .

 

தேவ்வை தீப்ஷீ வெறுத்த முதல் சம்பவத்திற்கான அவனின் விளக்கத்தை எழுதியிருந்தான் ,

 

‘ பெண்ணே உன் மேல் நான் கொண்ட பெயர் தெரியாத அன்பு , நீ சத்யாவோடு சிரித்து பேசும்போது பொறாமை தீயாக மாறி உன்னை மேடமிடம் அடிவாங்க வைக்க தூண்டியது . நான் தவறு செய்தேன். ஆனால், உன் கண்ணீர் என் இதயத்தின் அடியில் புதைந்த என் அன்பை மீண்டும் உயிர்த்து எழ வைத்தது , உன் நோட்டை திரும்பி தந்தேனே . என் தவறை உணர்ந்த நீ , ஏன் திருப்பி தந்த என் அன்பை புரிந்துகொள்ளவில்லை? ‘ என்று இருந்தது .

 

அவளின் கண்களில் கண்ணீர் . பின் ஒவ்வொன்றாக எடுத்து படித்தாள் . ஊட்டியில் உணர்ந்த காதலை பற்றி அங்கிருந்த போதே டைரியில் எழுத தொடங்கியிருந்தான் தேவ் . பின் அவளிடம் பேச தோன்றும் விஷயங்களை எழுதினான் .

 

அனைத்தையும் படித்தவள் எடுத்ததை எல்லாம் மீண்டும் அதே இடத்தில் வைத்தாள் .

 

‘ சத்யாவை கொன்றவனை தேடி கண்டுபிடித்ததும் . தேவ்விடம் இதைப் பற்றிக் கேட்கலாம்.  ‘ என்று முடிவெடுத்தாள் தீப்ஷீ .

 

அவன் வருவது போல் தெரிய வேகமாக லாப்டாப்பை ஷட் டவுன் செய்தவள் அதை எடுத்த இடத்தில் வைத்தாள் .

 

உள்ளே வந்த தேவ் , ” சத்யா கேஸ் என்ன ஆனது ? ”  என்றுக் கேட்டான் .

 

” சத்யாவை யாரோ கொலை பண்ணிருக்காங்க. ” என்றாள் தீப்ஷீ .

 

” சத்யாவை எதுக்கு கொல்லணும்? ”

 

” தெரியலை. இனிமே தான் கண்டுபிடிக்கணும் . எனக்கு லேப்டாப்பில் வேலை இருக்கு உங்க லேப்டாப் எடுத்துக்கவா ?” என்றாள் தீப்ஷீ .

 

” முக்கியமான வேலை எனக்கு இருக்கு . அத முடிச்சிட்டு உனக்கு தரேன். ” என்றவன்.

 

வேகமாக தீப்ஷீக்கு லேப்டாப் தெரியாதது போல் திருப்பி வைத்து . அவள் போட்டோவை டெஸ்க்டாப்பில் இருந்து மாற்றினான் . அவள் போடோஸ் உள்ள டிரைவ்வை லாக் செய்தான். லேப்டாப்பை தீப்ஷீயிடம் தந்தான்.

 

அவன் என்ன செய்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்த தீப்ஷீ மௌனமாக சிரித்துக் கொண்டாள் . அவன் லேப்டாப் தந்ததும் அதை வாங்கியவள் தன் வேலையை தொடங்கினாள் .

 

தீப்ஷீ  மெயில் கிரியேட் பண்ணதோடு சரி. அதற்கு பின்  அவள் அதை  திறந்துப் பார்க்கவே இல்லை. இன்று ஏதோ தோன்ற மெயில் செக் செய்தால்.

 

சத்யா இறப்பதற்கு முதல் நாள் அவன் அனுப்பியிருந்த மெயிலைப் பார்த்ததும். வேகமாக அதை கிளிக் செய்தாள் .

 

‘ அம்மு , முக்கியமான … நமக்கு பிடித்த புத்தகத்தில் வரும் ஹீரோவின் முதல் காதலி. ‘

 

என்று தெளிவு இல்லாத மெஸேஜை அனுப்பியிருந்தான் சத்யா .

 

பொறுமையாக யோசித்து பார்த்தாள் தீப்ஷீ .

 

‘ எங்களுக்கு பிடித்த புக் என்றாள் அது வத்சலா ராகவன் அவர்கள் எழுதிய விவேக் ஶ்ரீனிவாசன் புத்தகம் தான் . அதில் விவேக்கின் காதலி மேகம். ‘ என்று யோசித்தாள் தீப்ஷீ .

 

‘ மேகம் … மேகம் சத்யா என்ன சொல்ல வரான் ? ‘ என்று நினைத்தாள் .

 

‘ மேகம் … கிளவுட் . ஓ ! எஸ் கிளவுடில் முக்கியமான தகவலை வெச்சிருக்கான் போல். ‘ என்று கண்டுபிடித்த தீப்ஷீ . வேகமாக சத்யாவின் கிளவுட் அக்கவுண்ட்டை பாஸ்வேர்ட் போட்டு திறந்தாள் .

 

அதில் நிறைய மெயிலும் வைரஸ் சம்பந்தமான இமேஜ் , வெப் லிங்க் இருந்தது கடைசியாக இருந்த வேர்ட் ஃபைலை ஓப்பன் செய்தாள் தீப்ஷீ

 

அதில் , ‘ அம்மு , எங்க ஆபீஸ்ல வேலைக்கு ஆள் எடுக்குற மாதிரி நிறைய ஏமாற்று வேலை செய்றாங்க . வேலையில் சேர மெயில் மூலம் ரெஸ்யூம் அனுப்பும் அப்பாவி மாணவர்களின் இமெயிலுக்கு பதில் அனுப்புவது மாதிரி அனுப்பும் மெயிலில் வெளியே தெரியாத வைரஸையும் சேர்த்து அனுப்புறாங்க . அப்புறம் என்ன செய்கிறாங்கனு தெரியல்லை. அதை கண்டுபிடிக்கணும். ‘ என்று எழுதியிருந்தான் சத்யா .

 

சரியாக அந்த நேரத்திற்கு தீப்ஷீ போன் அடிக்க . அதை அட்டெண்ட் செய்தவள் , ” ஹலோ .” என்றாள் .

 

” தீப்ஷீ , அந்த பொண்ணு ஃபோனுக்கு இமெயில் மூலமா தான் வைரஸ் அனுப்பியிருக்காங்க . இமெயில்  டெக் பார்க் என்ற சாஃப்ட்வேர் கம்பெனியில் இருந்து வந்து இருக்கு . வீடியோ அனுப்பிய ஃபோன் நம்பர் பற்றிய தகவலை தான் தேடிட்ருக்கேன் . கிடைச்சதும் ஃபோன் செய்கிறேன் பாய் .” என்றான் ஶ்ரீதர் .

 

” ஓகே பாய். ” என்றாள் தீப்ஷீ .

 

ஶ்ரீதர் சொல்லிய கம்பெனியில் தான் சத்யா வேலை செய்துக் கொண்டிருந்தான் .

 

” என் அனைத்து கேள்விக்கான விடை இந்த டெக் பார்க் சாஃப்ட்வேர் கம்பெனியில் தான் கிடைக்கும் போல். ” என்றாள் தீப்ஷீ .

 

அடுத்த நாள் காலையில் ,

 

டெக் பார்க் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தினாள் தீப்ஷீ.

 

போலீஸ் உடையில் வந்த தீப்ஷீயை பார்த்து வேகமாக அவள் அருகே ஓடி வந்தார் செக்யூரிட்டி .

 

” மேடம் ?” என்றார் அவர் தயங்கிக் கொண்டே .

 

” உங்க எம்.டி வந்துட்டாரா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” இல்ல மேடம். ”

 

” சரி ஃபோன் பண்ணி நான் வந்திருக்கிறதை சொல்லுங்க. ”

 

ஃபோன் செய்துவிட்டு வந்தவர் .

 

” வாங்க மேடம் , எம்.டி சார் வந்துட்டே இருக்காராம் . உங்களை உள்ளே வெயிட் பண்ண சொன்னார் .”

 

உள்ளே சென்றாள் தீப்ஷீ .

 

இப்போது தான் ஒருவர் ஒருவராக வேலை செய்பவர்கள் வந்துக் கொண்டிருந்தனர்.

 

பத்து நிமிடத்திலே அறைக்கு வந்த பரந்தாமன் , ” வாங்க மேடம் . என்ன விஷயமா வந்திருக்கீங்க? ” என்றுக் கேட்டார் .

 

” வணக்கம் . நான் தீப்ஷீ டிஎஸ்பியாக புதுசா ஜாயின் பண்ணியிருக்கேன் . சத்யாவை ஞாபகம் இருக்கா ? ”

 

” சத்யாவை மறக்க முடியுமா ?”

 

அவரை ஒரு பார்வை பார்த்தாள் தீப்ஷீ .

 

” இல்ல , சத்யா திறமைசாலி . அவன் இல்லாதது நினைச்சி நான் வருத்தப்படாத நாளே இல்லை. ”

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்