
அத்தியாயம் 24
‘ ஐயோ ! இவள் வேறு அழ ஆரம்பிப்பாளே ?’ என்று நினைத்த தேவ் திரும்பி பார்க்க அங்கு தீப்ஷீ தைரியமாக சண்டை போட தயாராக நின்றாள் .
” அமர் அங்கிள் , நீங்க எப்பவும் என்ன ஐ.பி.எஸ் ஆவதுக்கு என்கரேஜ் பண்ணுவீங்க இப்போ உங்க மருமகளான நான் ஐ.பி.எஸ் ஆகக்கூடாதா ? எனக்காக நீங்க தேடி வாங்கி தந்த ரெஃபரன்ஸ் புக்கை என்ன செய்றது? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” என் பையன் வாங்கி தந்தது தான. அதைத் தூக்கி போடு இனி உனக்கு அது தேவையில்லை. ” என்றார் இந்திராணி .
அமர் பாவமாக அம்மா மற்றும் மகள் போன்ற மருமகளிடம் மாட்டிக்கொண்டு முழித்தார் .
” நானி , அவளின் லட்சியம் மட்டும் இல்ல அவளின் உயிரே ஐ.பி.எஸ் ஆறது தான் தயவு செஞ்சி அத தடுக்காதீங்க . என் பொண்டாட்டியின் கனவை கலைக்காதீங்க. ” என்றான் தேவ் .
தேவ்வை இன்று இரண்டாவது முறையாக ஆச்சரியமாக பார்த்தாள் தீப்ஷீ , ‘ இவன் என் கனவை புரிஞ்சி வெச்சிருக்கானே? ‘ எனறு நினைத்தாள் .
” நேத்து வந்தவள் உனக்கு முக்கியமா போயிட்டா. இனி இந்த நானி உனக்கு தேவையில்லை அப்படி தான. ” என்ற இந்திராணி கண்ணீரை ஆயுதமாக எடுத்தார் .
அவர் அழுவதை பார்த்த தேவ் , ‘ பொண்ணுங்களுக்கு எப்படி தான் பைப்பை திறந்தா தண்ணீ வர மாதிரி ஒரு வார்த்தை சொன்னா போதும் கண்ணீர் வந்துடுது. ‘ என்று நினைத்தவன் இந்திராணி அருகே சென்றான் .
” நானி , நீங்க தான் எனக்கு ஃபர்ஸ்ட் எப்பவும் . இவளெல்லாம் எனக்கு கடைசிதான். ” என்ற தேவ் , தீப்ஷீயை காண்பித்தான் .
தீப்ஷீ கோபமாக அவனை பார்க்க , யாரும் அறியாமல் அவளை பார்த்து கண்ணடித்தான் தேவ் .
” ஆனா , நீ அவளுக்கு தான ஆதரவா பேசுற. ” என்றுக் கேட்டார் இந்திராணி .
” நானி , இவள் ஐ.பி.எஸ் ஆனா , நமக்கு தான பெருமை . அதுவும் இல்லாம நீங்க தான இப்போ சொன்னீங்க, தீப்ஷீ நம்ம வீட்டின் மகாலஷ்மி, அப்படி இருக்கும் போது நாம அவளை சந்தோஷமா தான பார்த்துக்கணும் . இவ கஷ்டப்பட்டா நம்ம குடும்பத்துக்கு நல்லதா? ” என்றான் தேவ் .
” இல்லை. ” என்றார் இந்திராணி .
” அம்மா , தீப்ஷீ திறமைசாலி. அவளின் திறமைய வீணாக்காதீங்க. தீப்ஷீ ஐ.பி.எஸ் ஆவதுக்கு தடையா இருக்காதீங்க.” என்றார் அமர் .
அக்ஷிதா , அமரை ஆச்சரியமாக பார்த்தாள் , ‘ இவர் இதுவரை எனக்காக கூட அத்தையை எதிர்த்துப் பேசுனதில்லை . ஆனா, மருமகளுக்காக பேசுறாரே பெரிய விஷயம் தான் .’என்று நினைத்தார் .
” தீப்ஷீ , என் பையன் இதுவரைக்கும் என்கிட்ட எதையும் கேட்டதில்ல உனக்காக கேட்கிறான் அதுக்காக சம்மதிக்கிறேன். ” என்று அரைமனதாக சம்மதித்தார் இந்திராணி .
” அமர் , நாளைக்கு போய் ரிசப்ஷனுக்கு வேற முகூர்த்த நாளை குறித்துட்டு வா. ” என்றார் இந்திராணி .
” சரிங்க மா. ”
” அக்ஷிதா , இவங்க டூர் போயிட்டு வந்ததும் இவங்களுக்கான டிரஸ் , நகை எல்லாம் வாங்கணும். ”
” நான் பார்த்திக்குறேன் அத்தை.”
” செலவு தான் செய்ய கூடாதுணு சொல்லிட்டீங்க. ரிசப்ஷனுக்கு உதவியாவது செய்யலாமா பாட்டி? ” என்றுக் கேட்டார் தினேஷ் .
” கண்டிப்பா செய்யலாம் .” என்ற இந்திராணி முகத்தில் சிறு புன்னகை .
” அமர் , தேதி குறிச்சதும் மத்ததெல்லாம் ஏற்பாடு பண்ணிக்கலாம் . நாங்க இப்போ கிளம்புறோம். ” என்ற தினேஷ் எழுந்தார் .
சரண்யாவும் சர்வேஷ்ஷூம் , தீப்ஷீயை பார்த்துக்கொண்டே எழுந்தனர். தீப்ஷீ , இவர்களை பார்க்கக்கூட திரும்பலை .
மூன்று பேரும் வெளியே செல்ல , அவர்கள் பின்னே வந்த தேவ் , ” நான் அவளை நல்லா பார்த்துக்குறேன் . நீங்க கவலைப்படாதீங்க. ” என்றான் .
” எனக்கு தெரியும் தேவ். ” என்றார் தினேஷ் .
” இப்போ கூட அவளுக்காக நீ பேசினீயே. எங்களுக்கு உன்மேல் முழு நம்பிக்கை இருக்கு. ” என்றார் சரண்யா .
” நாங்க வருத்தப்படுறது தீப்ஷீ எங்க கிட்ட பேசலைனு தான் தேவ். ” என்றான் சர்வேஷ் .
” எல்லாம் சரியாகிவிடும் , கவலை படாதீங்க. ” என்றான் தேவ் .
” போயிட்டு வரோம் தேவ். ” என்றார் தினேஷ் .
மூவரும் வீட்டிற்கு கிளம்ப , தேவ் வீட்டிற்குள் நுழைந்தான்.
” நான் கொஞ்ச நேரம் படுத்துட்டு வரேன். ” , என்ற இந்திராணி உள்ளே சென்றார் .
” தீப்ஷீ குட்டி , நீ எதுக்கும் கவலைப்படாதே உனக்கு பிடிச்ச மாதிரி இங்கு இருக்கலாம் . நாங்க உன்னை நல்ல பார்த்துப்போம் . அவசரமா நமக்கு கல்யாணம் பண்ணிட்டாங்கனு நீ கவலை படக்கூடாது .
உன்ன யார் வீட்டிற்கோ அனுப்பலை . அக்ஷிமா , அமர் அப்பா வீட்டிற்கு தான் அனுப்பியிருக்காங்க .
எனக்கு மகள் இல்லைனு கவலை எப்போவும் இருக்கும் , ஆனா குழந்தையா உன்ன பார்க்கும் போது எனக்கு அந்த கவலை போயிடும் .
இப்போ நீயே எனக்கு மகளா வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் .” என்றார் அமர் .
” சரிங்க மாமா. ” என்றாள் தீப்ஷீ.
” இனிமே எங்களை அம்மா , அப்பானே கூப்பிடு. ” என்றார் அக்ஷிதா .
” சரி அக்ஷிமா , ரூம் எங்க இருக்கு ? என்னோட திங்ஸ் எல்லாம் வைக்கணும். ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” வா டா. ” என்ற அக்ஷிதா , தேவ் அறைக்கு அவளை அழைத்துச் சென்றார் .
தீப்ஷீயை அறையில் விட்ட அக்ஷிதா வெளியே வந்தார் .
அவர் வெளியே வந்தாரோ இல்லையோ தேவ் உள்ளே சென்றான் .
பெட்டில் உட்கார்ந்தவன் தீப்ஷீயை சைட்டடித்துக் கொண்டிருந்தான் .
தீப்ஷீ தன் பொருட்களை பீரோவில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் .
தேவ் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .
‘ உன்னோடு எத்தனை நாள் இந்த அறையில் என் கனவில் வாழ்ந்திருப்பேன் . இன்னைக்கு உண்மையாவே நீ இங்க இருக்க. ‘ என்று மனதில் தீப்ஷீயோடு பேசிக்கொண்டிருந்தான் தேவ் .
திடீரென்று ஒரு பையில் துணி எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள் தீப்ஷீ .
முதலில் புரியாமல் பார்த்த தேவ் பின் தீப்ஷீ கொடைக்கானல் ட்ரிப்பிற்காக தான் எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறாள் என்பது புரிய , ” அப்படியே எனக்கு தேவையானதையும் எடுத்து வை. ” என்றான் .
” முடியாது. ” என்றாள் தீப்ஷீ .
” சரி அப்போ என்னாலும் நாளைக்கு ஹனிமூன் வர முடியாது . பாவம் உன் ஃப்ரெண்ட் , அவன் கஷ்டப்பட்டு அரேஞ்ச் பண்ண ட்ரிப் வீணாகிடும். ” என்றான் தேவ் .
திரும்பி அவனை கோபமாக முறைத்த தீப்ஷீ , ” எனக்கு உன்னோட ” என்று சொல்லவந்த தீப்ஷீ பின் , ” எனக்கு உங்களோட டிரஸ் எங்க இருக்குனு தெரியாது ?” என்றாள் தீப்ஷீ .
அவள் கஷ்டப்பட்டு மரியாதையாக பேசுகிறாள் என்பதை உணர்ந்த தேவின் முகத்தில் சிறு புன்னகை , ‘ நீயும் நானும் வேறல்ல பெண்ணே . நீ எல்லார் முன்னாடியும் மரியாதை இல்லாம பேசினா நானி உன்னை திட்டுவாங்க . அதான், நான் உன்னை நீ , வா , போனு பேச விடுறதில்லை. ‘ என்று நினைத்த தேவ் வெளியில் , ” நான் சொல்றேன் எடுத்து வை .” என்றான் .
ஒரு டிராவெல் சூட்கேஸை அவளிடம் தந்தவன் மீண்டும் பெட்டில் உட்கார்ந்துக்கொண்டான் .
” ரைட் சைட் செல்ப்பில் என்னோட டிரஸ் இருக்கும் . மூணு செட் டிரஸ்ஸை எடுத்து வை .” என்றான் தேவ் .
தீப்ஷீயும் அவன் சொன்ன இடத்திலிருந்து துணியை எடுத்து வைத்தாள் .
” கீழே நைட் டிரஸ் இருக்கும் ஒன்னு எடுத்து வை , பக்கத்தில் இருக்கும் டவல் , மேலே என்னோட இன்னர்ஸ் இருக்கு .” என்றான் தேவ் .
எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டிருந்தவள் கடைசியாக அவன் சொன்னதைக் கேட்டு திரும்பி அவனை முறைத்தாள் .
அவன் கண் மூடி படுத்திருந்தான் . ” சீக்கிரமா எடுத்து வை. ” என்றான் தேவ் .
அவள் என்ன செய்கிறாள் என்று ஓர கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான் தேவ் .
வேகமாக வெளியே போனாள் தீப்ஷீ .
” ஒருவேளை சத்யாவை சண்டை போட கூட்டிட்டு வராளோ? ” என்றான் தேவ் சத்தமாக .
ஸ்கூட்டியில் வெச்சிருந்த டிரைவிங் கிளவுஸை எடுத்து வந்தவள் . அதை மாட்டிக்கொண்டு தேவ்வின் இன்னர்ஸை எடுத்துவைத்தாள் .
அதைப் பார்த்த தேவ் சத்தமின்றி சிரித்தான் .
‘ துவைச்சதை எடுக்க பிடிக்கவில்லையா ? இரு டி ட்ரிப்பில் உன்னை நான் அழுக்கு துணியை துவைக்க வைக்கிறேன். ‘ என்று நினைத்தான் தேவ் .
எல்லாம் எடுத்து வைத்தவள் டிராலி சூட்கேஸை ஓரமாக வைத்தாள் . அந்த கிளவுஸை துவைக்க எடுத்து போனாள் தீப்ஷீ .
தேவ் வேகமாக சூட்கேஸ்ஸ்லிருந்து இன்னர்ஸை எடுத்து செல்ப்பில் வைத்தான். அப்போ தான் அவளை கையில் துவைக்க வைக்க முடியும்.
அவள் வந்ததும் ,” தீப்ஷீ , எல்லார் முன்னாடியும் அன்பா இருப்பது போல் நடி என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன் . அது உன் விருப்பம் . ஆனா என்னோட வேலை எல்லாம் நீ தான் செய்யணும் . இல்லணா நானி உன்ன தான் திட்டுவாங்க . பின் உனக்காக நானோ , அப்பாவோ பேசுனா பிரச்சனை இன்னும் பெருசாகும் . வீட்டில் சண்டை இல்லாமல் பார்த்துக்குறது உன் பொறுப்பு . அதனால் , எங்க அம்மா எப்படி அப்பாவை பார்த்துக்குறாங்கனு பார்த்து தெரிஞ்சிக்க. அப்புறம் என்ன அதே மாதிரி கவனிச்சிக்கிட்டா, நானி உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க. நான் இப்போ வெளியே ஸ்போர்ட்ஸ் அகடமி வரை போயிட்டு வரேன்.” ,என்ற தேவ் வெளியே சென்றுவிட்டான்.
ஏதோ மழை பெய்து ஓய்ந்ததுப் போல் உணர்ந்த தீப்ஷீ அமைதியாக பெட்டில் படுத்துக்கொண்டாள் .
*****
விடிந்தும் விடியாத காலை வேளையில் கேஷுவல் பிளாக் டி ஷர்டும், த்ரீ போர்த் பிளாக் ஷார்ட்ஸும் அணிந்து ட்ராலியை தள்ளிக்கொண்டு கெத்தாக வெளியே வந்து நின்றான் தேவ் .
அவன் பின்னே ரெட் டி ஷர்ட், பிளாக் ஜீன்ஸ் அணிந்து , தேவ் உடனான பயணத்தை நினைத்து கவலையாக வந்தாள் தீப்ஷீ .
மஸ்டா கார் இருவருக்காக காத்து நின்றது .
“ சத்யா , கார் எப்போ வந்தது ? “ என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
“ நேத்து தான் அம்மு .”
“ வர ஒன் மந்த் ஆகும்னு சொன்ன? “
“ நீங்க ட்ரிப் போறதுக்காக சீக்கிரமா வரவெச்சேன் . உனக்காக நான் வாங்கிய கார் . நீ தான் காருல முதல்ல போகணும்னு நினைச்சேன் . கார் நல்லா இருக்கா ? “
“ நான் தேர்ந்தெடுத்தது நல்லா தான் இருக்கும் சத்யா . ஆனா , நீ தேர்ந்தெடுத்துல தான் எனக்கு சந்தேகமா இருக்கு? “ என்ற தீப்ஷீ தேவ்வை பார்த்தாள் .
“ என்னோட தேர்வும் சரியா தான் இருக்கும் அம்மு. “ என்றான் சத்யா .
“ தேவ் , எல்லாமே நான் ஏற்பாடு செஞ்சுட்டேன் . நேச்சர்ஸ் லவ் ரெசார்ட் அங்கு தான் நீங்க தங்க போறீங்க . அங்கு உங்களுக்கு கைடு தயாரா இருப்பார் . அவன் பெயர் அசோக் , என் நண்பன் தான் . போனதும் ஓய்வு எடுக்கணும்னா ஓய்வு எடுங்க இல்லனா எங்கு போகணும்னு அவன் கிட்ட கேட்டுக்கோங்க. டிரைவர் மற்றும் அசோக் நம்பர உனக்கு வாட்ஸ்அப் பண்ணுறேன் . ரெசார்ட் பிடிக்கவில்லணா வேற ஏற்பாடு பண்றேன். “ என்றான் சத்யா .
“ நான் பார்த்துக்குறேன் சத்யா. “ என்ற தேவ் , காரில் ஏறி உட்கார்ந்தான் .
“ அம்மு , எங்கு போனாலும் போன் எடுத்துக்கோ . தனியா எங்கேயும் போகாதே . பீ கேர் ஃபுல் அண்ட் டேக் கேர். “ என்றான் சத்யா .
“ ஓகே சத்யா . நீயும் ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு. வேலை வேலைனு ஓடாதே . பாய் .” என்ற தீப்ஷீ , காரில் ஏறினாள் .
இருவருக்கும் கை அசைத்த சத்யா , தன் வீட்டை நோக்கிச் சென்றான் .
தேவ்வை கண்டுக்கொள்ளாமல் ஜன்னல் வழியாக சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டிருந்தாள் தீப்ஷீ .
‘ சூரிய உதயத்தை நீ வீட்டிலேயே பார்க்கலாம் . என்னோடு டைம் ஸ்பென் பண்ண தான உன் நண்பன் இந்த ட்ரிப்பே ஏற்பாடு பண்ணது . இது எங்க உனக்கு புரிய போகுது? ‘ என்று நினைத்துக் கொண்டான் தேவ் .
புது இடம் என்பதால் இரவும் தூங்க நேரமானது , காலையிலும் சீக்கிரமாக எழுந்ததால் தீப்ஷீ கொஞ்ச நேரத்தில் தூங்கிவிட, அவளை நன்றாக தன் மடியில் படுக்க வைத்துக்கொண்டான் தேவ் .
தூங்கும் தீப்ஷீயையே கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ் . ‘ எப்போ இது மாதிரி விழித்திருக்கும் போது என் மடியில் படுப்பாய் பெண்ணே ! ‘ என்றது தேவ்வின் உள்ளம் .
பயணம் தொடர்ந்துக்கொண்டே இருந்தது . கொஞ்ச நேரத்தில் டிரைவர் வண்டியை நிறுத்தினார் .
தேவ் டிரைவரை கேள்வியாக பார்க்க . “ சார் பிரேக் ஃபாஸ்ட் , டைம் ஒன்பது .” என்றார் .
வேகமாக தன் வாட்ச்சை பார்த்தவன் , ‘ இவளை பார்த்துக் கொண்டிருந்தால் , நேரம் போவதுக் கூட தெரியாது எனக்கு. ‘ என்று நினைத்தவன் வெளியே , “ சரி நீங்க போங்க , நாங்க வரோம் .” என்றான் தேவ் .
‘ இவளை எப்படி எழுப்புவது . நான் இவளை என் மடியில் படுக்க வைத்தேனு தெரிஞ்சா என் நிலை அவ்வளவு தான். ‘ என்று யோசித்துக் கொண்டிருந்தான் தேவ் .
வண்டி நின்றதில் அவளிடம் அசைவு தெரிய வேகமாக தூங்குவதுப் போல் நடித்தான் தேவ் .
கண் திறந்துப் பார்த்தவள் , வண்டி நிற்கிறது என்பது புரிந்து மெதுவாக திரும்பி பார்க்க அப்பொழுது தான் உணர்ந்தாள் தேவ் மடியில் படுத்திருப்பதை . வேகமாக எழுந்துக் கொண்டாள் .
இரண்டு நிமிடம் கழித்து எழுவதுப் போல் எழுந்தான் தேவ் . “ எதுக்கு நிறுத்தினார் ? “ என்று எதுவும் தெரியாது போல் கேட்டவன் பின் வெளியே பார்த்து , “ சாப்பிடுறதுக்கா ? ஏன் நீ ஒரு மாதிரி இருக்க ? “ என்றுக் கேட்டான் .
“ ஒன்னும் இல்லை. “ என்றாள் தீப்ஷீ , அவள் அறியாமல் தேவ்வின் உதடுகள் புன்னகை புரிந்தது .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


தீப்ஷி எப்போ தேவ் காதலை புரிஞ்சுப்பா .. தேவ் லவ் பண்றான் .. ஆனா சில சமயம் அடாவடியா நடந்துக்கிறான் ..