Loading

அத்தியாயம் 22

 

தேவ் சத்யாவிற்கு நடுவில் அமர்ந்தாள் தீப்ஷீ .

 

 

 

கார் கிளம்பியதும் தீப்ஷீ , சத்யா தோளில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள் .

 

 

 

‘ இன்னைக்கு உனக்கு தாலி கட்டிய நான் இங்கு குத்துக்கல்லாக உன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கேன் . நீ செய்றதை பார்த்தால் எனக்கு கோபம் தான் வருது. ‘ என்று எரிமலையாக உள்ளுக்குள் எரிந்துக் கொண்டிருந்தான் தேவ் .

 

 

 

சத்யா அமைதியாக தான் இருந்தான் . தீப்ஷீ நல்லா தூங்குகிறாள் என்பது அவள் விடும் மெல்லிய குறட்டை சத்தத்தில் உணர்ந்த சத்யா , “ தேவ் , தீப்ஷீ வேணும்னு செய்யுறான்னு நினைக்காத . உனக்கும் எனக்கும் உள்ள பகையில்,  எங்கே என் மீது உள்ள நட்பை இழந்துடுவோமோனு பயத்தில் தான் இப்படி செய்றா . இல்லைன்னா இவள் எல்லோர் முன்னாடி இப்படி நடந்துக்க மாட்டா.”

 

 

 

“ எங்க நட்பை உன்னால பிரிக்க முடியாதுனு உனக்கு உணர்த்த நினைக்குறா. “ என்றான் சத்யா .

 

 

 

நிதானமாக யோசித்தான் தேவ் , ‘ ஆம் தீப்ஷீ , சத்யாவோடு இப்படி தான் இருப்பாள். ஆனாலும் அது அவங்க வீட்டளவில் தான் இருக்கும்  . காலேஜில் கூட அவனோடு போவா, வருவாளே தவிர வீட்டில் இருப்பது போல் பேசமாட்டாளே. ‘  என்று நினைத்தான் .

 

 

 

சரியாக அவளின் நிலையை புரிய வைத்தான் சத்யா .

 

 

 

‘ உண்மையிலே உங்க நட்பின் ஆழம் பெரிது தான் . உன் செயலின் காரணத்தைக் கூட சரியா புரிஞ்சி வெச்சிருக்கான். ‘  என்று தீப்ஷீயை பார்த்து மனதில் நினைத்தவன் சத்யாவிடம் , “ சரி , நான் உன் தோழிய எதுவும் செய்ய மாட்டேன் . எனக்கு அவ மேல கோபம் இல்லை. “ என்றான் தேவ் .

 

 

 

“ எனக்கு அவள நினச்சு கவலை இல்லை  . நீ எதாவது பேசினா உனக்கு தான் பாதிப்பு. அதுக்காக தான் சொன்னேன். “ என்றான் சத்யா .

 

சத்யா சொன்னவிதத்தில் சர்வேஷ் சிரிக்க

 

சத்யாவும் அவனுக்கு ஹை-பை(hi-fi) குடுக்க . தேவ் இருவரையும் முறைத்தவன் பின் அவர்களோடு இணைந்து சிரித்தான்.

 

‘ பாருடா இவளுக்கு இவ்வளவு ஸுனா. ‘  என்றது தேவ்வின் மைண்ட் வாய்ஸ் .

 

“தேவ் , தீப்ஷீ உன் காதலை ஏத்துக்குற வரைக்கும் நீ கஷ்டப்படணும் . அதுக்காக நீ அவளை கஷ்டப்படுத்தாத . அவளுக்காக வெயிட் பண்ணு. “ என்றான் சத்யா .

 

 

 

“சத்யா , லாஸ்ட் மினிட்ல கல்யாணத்த நிறுத்தி, நான் அவளை கல்யாணம் பண்ணிக்கும் போதே உனக்கு புரிஞ்சிருக்கும் நான் எவ்வளவு அவளை காதலிக்கிறேன் . அவ சந்தோஷம் உனக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு எனக்கும் முக்கியம். சும்மா என்ன மிரட்டாத . நான் வார்த்தையால் சொல்ல விரும்பலை. அவ சந்தோஷமா வாழ்றதை நீயே பார்ப்ப.” என்றான் தேவ்.

 

 

 

தேவ்வின் பதில் சத்யாவுக்கும் சர்வேஷ்ஷுக்கு நிம்மதியை தந்தது .

 

 

 

வீடு வர, தேவ் , சர்வேஷ் எழுந்து சென்றுவிட ,

 

 

 

“ அம்மு , எழுந்திரி டா வீடு வந்துடுச்சி. “ என்றான் சத்யா .

 

 

 

கெத்தா , ஸ்டைலா தீப்ஷீ வீட்டு வாசலில் நின்றான் தேவ் . தூக்க கலக்கத்தில் வந்து அவன் அருகில் நின்றாள் தீப்ஷீ .

 

 

 

அவர்கள் ஜோடி பொருத்தம் சூப்பராக இருந்தது . சரண்யா வந்து ஆரத்தி சுற்றி உள்ளே அழைத்தார் .

 

 

 

“ இப்போ எப்படி போய் அவக்கிட்ட தரது? “ என்றார் கமலா .

 

 

 

“ எனக்கும் பயமா தான் இருக்கு கமலா. “ என்றார் சரண்யா.

 

 

 

அவர்கள் தயங்கிக் கொண்டிருப்பதை பார்த்த இந்திராணி , “ என்ன இரண்டு பேரும் இங்கே தயங்கி நின்னுட்டிருக்கீங்க? “ என்று தன் கம்பீர குரலால் கேட்டார் .

 

 

 

“ பால் , பழம் தரணும் . முன்னாடி மண்டபம்னு  சொல்லுற சடங்க அமைதியா செஞ்சா  . இப்போ எப்படி சாப்பிட வெக்குறது தான் தெரியல்லை. “ என்றார் சரண்யா .

 

 

 

“ அந்த பாத்திரத்தை தாங்க . நான் தர்றேன். “  என்றார் இந்திராணி .

 

 

 

இந்திராணி ஹாலுக்கு சென்றார் .

 

 

 

“ தீப்ஷீ .”என்றார் .

 

 

 

“ கல்யாணம் ஆகி வீட்டிற்குள் வந்ததும் விளக்கு ஏத்தணும்னு தெரியாதா . போய் விளக்கு ஏத்தி சாமி கும்பிடு. “  என்றார் .

 

சரண்யாவை முறைத்த தீப்ஷீ , அமைதியாக இந்திராணி சொன்னதை செய்தாள் .

 

“ தம்பி , நீயும் போய் சாமி கும்பிடுப்பா. “ என்றார் இந்திராணி .

 

 

 

தேவ்வும், தீப்ஷீ அருகில் சென்று நின்றான் . இருவரும் சாமி கும்பிட்டு வருவதை பார்த்த இந்திராணி , “ அங்கே நில்லுங்க .” என்றார் .

 

 

 

“ கண்ணா , இந்த பாலை பாதி குடிச்சிட்டு உன் பொண்டாட்டிக்கு தா .” என்றவர் பால் தம்ளரை தேவ்விடம் நீட்டினார் .

 

 

 

“ ஏன் நானி , பால் இல்லையா . அப்போ எனக்கு வேண்டாம். அவளுக்கே தாங்க. “ என்றான் தேவ் .

 

 

 

பதட்டத்தில் நின்றிருந்த அனைவரின் முகத்திலும் புன்னகை தேவ்வின் பதிலால் .

 

 

 

இந்திராணி தேவ் சொல்லியதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்டார்.

 

 

 

“ தேவ் , இதுவும் ஒரு சடங்கு தான் . நீ குடிச்ச பாலை இவள் குடிக்கணும்.” என்றார் .

 

 

 

இதெல்லாம் வேண்டாம் என்று சொல்ல வந்த தேவ் பின் , ‘கல்லூரியில் படிக்கும் போது ஒரு நாள் சத்யா , என்ன தொட்டதுக்கு கை கழுவ சொன்ன தான . இப்போ உனக்கு இந்த தண்டனை வேண்டும் தான் . நான் உனக்காக இந்த முறை எதுவும் பேச போவதில்லை.’ என்று நினைத்த தேவ் .

 

 

 

பாலை வேண்டுமென்றே வாய் வைத்து குடித்தான் . பின் தீப்ஷீயிடம் தந்தான் . அவள் வாங்காமல் நின்றிருந்தாள் .

 

 

 

“ அவன் தந்திட்டிருக்கான். அதை வாங்காம என்ன யோச்சிட்டிருக்க?  “  என்று இந்திராணி சத்தம் போட .

 

 

 

அதை வாங்கிக் கொண்டாள் தீப்ஷீ , பாவமாக வீட்டில் உள்ள அனைவரையும் திரும்பி பார்த்தாள் .

 

 

 

யாரும் அவளுக்காக பேச போறதில்லை என்பது புரிய . சத்யா அங்கு இல்லை என்பதை உணர்ந்த தீப்ஷீயின் கண்கள் கலங்கியது .

 

 

 

“ பாட்டி , அவளுக்கு பிடிக்கலைனா விடுங்களேன். “ என்றான் சர்வேஷ் .

 

 

 

“ சர்வேஷ் , நீ சும்மா இரு உனக்கு இதெல்லாம் புரியாது. “ என்று அவனின் வாயை மூடினார் சரண்யா .

 

 

 

அவளின் அழுகையை பார்த்த தேவ்வால் தாங்க முடியல்லை.

 

 

 

“ நானி , நானே அதை குடித்துச்சிடுறேன் ப்ளீஸ். “ , என்றான் தேவ் .

 

 

 

“ தேவ் , இன்னைக்கு ஒரு நாள் நீ குடிச்ச பாலை குடிக்குறதுனால அவ ஒன்னும் குறைந்துவிட மாட்டா . நான் தினமும் உன் தாத்தா சாப்பிட்ட தட்டில் தான் சாப்பிடுவேன். அப்படியா உன் பொண்டாட்டிய செய்ய சொல்றேன் ‌.”  என்றார் .

 

 

 

“ இன்னும் நீ , குடிக்கலையா? “  என்று மீண்டும் இந்திராணி தீப்ஷீயிடம் சத்தமாக பேச .

 

 

 

வேகமாக தம்ளர் வாயில் படாதவாறு அன்னாந்து பாலை குடித்தாள் தீப்ஷீ .

 

 

 

வாழைபழத்தை தேவ்விடம் தந்தார் இந்திராணி . இந்த முறை பாதியை கையால் பிட்டு உண்டவன் மீதியை தீப்ஷீயிடம் தந்தான் . அமைதியாக பழத்தை உண்டாள் தீப்ஷீ .

 

 

 

இந்திராணி தன் வீட்டிற்கு சென்றாரோ, இல்லையோ, தீப்ஷீ யாரிடமும் பேசாமல் தன் அறைக்கு சென்று வேகமாக கதவை சாத்தி , கதவிலே சாய்ந்து அழுதாள் .

 

 

 

‘ இனி என் வாழ்க்கை ? ‘  என்ற கேள்வி தான் அவளின் மனதில் ஓடியது .

 

 

 

வெளிவேலை முடித்து வீட்டிக்கு வந்த சத்யா ஹால் சோபாவில் உட்கார்ந்திருந்த சர்வேஷ்ஷையும் தேவ்வையும் பார்த்தான் .

 

 

 

“ சரண்யாமா , அம்மு எங்க?” என்றுக் கேட்டான் .

 

 

 

“ அவ கோபமா ரூமுக்கு போய்ட்டா. “என்றார் சரண்யா .

 

 

 

“ சும்மாலாம் அவ அப்படி போக மாட்டா . நீங்க என்ன செஞ்சீங்க?” என்றுக் கேட்டான் சத்யா .

 

 

 

சரண்யா தயங்கிக் கொண்டே நடந்ததை சொன்னாள் .

 

 

 

“ என்ன சரண்யாமா , கல்யாணமே விருப்பமில்லாம செஞ்சுக்கிட்டா இதில் அந்த சடங்கு இந்த சடங்குனு அவளை அழவைக்கிறீங்க அவளுக்கு உடம்பு சரியில்லாம போய்விடும். “ என்றான் சத்யா கோபமாக .

 

 

 

“ சத்யா , எதுக்கு கத்துற ? நீ போய் அவளை சமாதானம் பண்ணு. “ என்றார் கமலா .

 

 

 

“ செய்றதை எல்லாம் செஞ்சிடுங்க . அப்புறம் என்ன சமாதானம் பண்ண  அனுப்புங்க.” என்றவன் தீப்ஷீ அறைக்கு சென்றான் .

 

 

 

கதவை திறக்கும் போதே ஏதோ இடிப்பட , பொறுமையாக திறந்தவன் கீழே தூங்கிக் கொண்டிருந்த தீப்ஷீயை பார்த்தான் .

 

 

 

அவளை தூக்கியவன்  பெட்டில் படுக்க வைத்தான் . அவள் அழுதுக் கொண்டே தூங்கியிருக்கிறாள் என்பது அவளின் கன்னத்தில் காய்ந்திருந்த கண்ணீர் உணர்த்த , டவல் எடுத்து துடைத்த சத்யா , அவளின் நெற்றியில் தைலம் தடவினான் . ஓடிக்கொண்டிருந்த ஏ.சியை நிறுத்தினான் . திறந்திருந்த கதவின் வழியாக அவனின் செயலை அனைவருமே பார்த்தனர் . கதவை சாத்திய சத்யா , “ அவ மன அழுத்தத்துல தூங்குறா . நீங்களா எழுப்பும் வரை அவ எழுந்திருக்க மாட்டா , இரண்டு மணி நேரத்துக்கு அப்புறம் எழுப்புங்க சரண்யாமா . நான் வீட்டிக்கு போறேன் .”  என்ற சத்யா சென்றுவிட்டான் .

 

 

 

சத்யா கோபமாக செல்கிறான் என்பது அனைவருக்கும் புரிந்தது .

 

 

 

“  சரண்யா , அவன் ஏதோ கோபத்தில் பேசிட்டு போறான் . நீ வருத்தப்படாத.” என்றார் கமலா .

 

 

 

“ எனக்கு மட்டும் தீபுவை அழவைக்க ஆசையா . பால் , பழம் சாப்பிட்டதுக்கு இந்த ஆர்ப்பாட்டம் செய்றா . இவளை எப்படி நைட் ரெடி பண்ணுறதுனே புரியலை. “ என்றார் சரண்யா .

 

 

 

“ அதெல்லாம் அவ ரெடியாகிடுவா அவ என்ன குழந்தையா ? கவலைப்படாதீங்க. “ என்றார் அக்ஷிதா .

 

 

 

சத்யா சொன்னது போல் இரண்டு மணி நேரம் கழித்து எழுப்பினார் சரண்யா  .

 

 

 

“ தீபு , அம்மா ரூமுக்கு வா.” என்றார் சரண்யா .

 

 

 

தூக்கத்தில் எழுந்ததில் சட்டென அவளுக்கு இன்னைக்கு நடந்த கல்யாணம் நினைவுக்கு வரலை .

 

 

 

எழுந்து சரண்யா அறைக்கு சென்றாள் தீப்ஷீ .

 

 

 

“ போய் குளிச்சிட்டு ரெடியாகு. “ என்றார் சரண்யா .

 

 

 

தூக்க கலக்கத்திலேயே , “ இப்போ எந்த ஊருக்கு போறோம்? “ என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

 

 

“ இன்னைக்கு தான் உனக்கு கல்யாணமாச்சு நினைவிருக்கா ? “ என்றுக் கேட்டார் சரண்யா .

 

 

 

வேகமாக குனிந்து பார்த்தாள் தீப்ஷீ . அவள் கழுத்தில் தேவ் கட்டிய தாலி இருந்தது .

 

 

 

‘ இதெல்லாம் ஒரு கெட்ட கனவாக முடிந்திருக்க கூடாதா? ‘ , என்று நினைத்தது தீப்ஷீயின் உள்ளம் .

 

 

 

அவள் எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள் .

 

 

 

சரண்யா ஏதோ சொல்ல வர கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பி பார்த்தார் .

 

 

 

“ சரண்யாமா , நான் பார்த்துக்குறேன். “  என்றான் சத்யா.

 

 

 

சத்யா வந்ததில் நிம்மதி அடைந்த சரண்யா தன் வேலைகளை பார்க்க சென்றார்.

 

 

 

“ அம்மு , எல்லாத்தையும் உனக்கு விளக்கமா சொல்ல, நீ ஒன்னும் குழந்தை இல்லை. அம்மா , அப்பா எல்லோரும் பாவம் . அவங்களுக்கும் தான் மனவேதனை அவங்களை மேலும் கஷ்டப்படுத்தாதே . இந்திராணி பாட்டி முன்னாடி அவங்களை அவமானப்படுத்தாம நீயே புரிஞ்சி நடந்துப்பனு  நினைக்கிறேன். “  என்ற சத்யா வெளியே சென்றுவிட .

 

 

 

சத்யாவின் வார்த்தையில் உள்ள உண்மை புரிய அமைதியாக எழுந்துச் சென்றாள் தீப்ஷீ .

 

 

 

தூங்கி எழுந்ததாலோ , என் வாழ்க்கை என் கையில் இல்லை என்ற நிதர்சனம் புரிய , யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்தாள் தீப்ஷீ.

 

 

 

அமைதியாக சாப்பிட்டவள் , அவர்கள் தந்த பால் சொம்பை எடுத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றாள் தீப்ஷீ .

 

 

 

உள்ளே சென்று கதவை தாழ்போட்டவள், பாலை தேவ்விடம் தந்தாள்.அவன் பெட்டில் உட்கார்ந்திருந்தான் .

 

 

 

அவளின் முகத்தில் இருந்த வேதனையை அவனால் தாங்கவே முடியல்லை . அதனால் அவளிடம் எதுவும் வம்பு செய்யாமல் அவள் தந்ததை வாங்கிக் கொண்டான் .

 

 

 

தீப்ஷீ மறுபுறம் சென்று உட்கார்ந்துக் கொண்டாள் .

 

 

 

பாலை ஒரு வாய் குடித்தவன் , டேபிள் மேல் அதை வைத்தான் . லைட்டை நிறுத்தியவன் அமைதியாக வந்து பெட்டில் படுத்துக்கொண்டான் . படுத்த வேகத்திற்கு தூங்கிவிட்டான் .

 

 

 

பத்து நாட்களாக தீப்ஷீயை எப்படியாவது கல்யாணம் பண்ண வேண்டுமே என்றிருந்த கவலையில் தூக்கத்தை தொலைத்தவன் இன்று தான் நிம்மதியாக தூங்குறான் .

 

 

 

சாயங்காலம் தூங்கியதால் தீப்ஷீ தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தாள் .

 

 

 

திரும்பி தேவ்வை பார்த்தாள் , ‘ இவனை என்னால் கணவனாக ஏத்துக்க முடியுமா ? ‘  என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .

 

 

 

நேரமானதும் தீப்ஷீக்கு தூக்கம் வர , எழுந்தவள் தலையனையை எடுத்துக்கொண்டு கீழே படுத்தாள் .

 

 

 

அவள் தூங்கி ஒரு மணி நேரத்தில் .

 

 

 

“ மேம் , என்ன அடிக்காதீங்க நான் ஹோம் வொர்க் முடிச்சிட்டேன் . தேவ் தான் என் நோட்டை எடுத்துக்கிட்டான் . என்ன அடிக்காதீங்க , அடிக்காதீங்க. “  என்று மீண்டும் மீண்டும் அதையே தூக்கத்தில் சொல்லிக்கொண்டிருந்தாள் தீப்ஷீ .

 

 

 

அவளின் சத்தத்தில் பெட்டிலிருந்து எழுந்தவன் தீப்ஷீயை தேடினான் .

 

 

 

கீழிருந்து சத்தம் வர அந்த பக்கம் சென்றான் தேவ் .

 

 

 

முதலில் ஏதோ தூக்கத்தில் உளறுகிறாள் என்று நினைத்தான் தேவ் .

 

 

 

இரண்டாவது முறை தெளிவாக கேட்டவனுக்கு எல்லாம் புரிய, சிலையாக நின்றுவிட்டான் .

 

 

 

“ சின்ன வயசுல நான் விளையாட்டா செஞ்சது . உன் மனச இன்றளவும் பாதிக்கும்னு தெரியாம செஞ்சுட்டேன் . என்ன மன்னிச்சிடு தீப்ஷீ . உன் மன காயத்துக்கு என் காதலால் மருந்திடுவேன் செல்லம். “ என்றுச் சொல்லியவன் அவளை தூக்கி பெட்டில் படுக்க வைத்தான் .

 

 

 

அப்போது தான் அவள் உடல் சூட்டை உணர்ந்தவன் , அவள் நெற்றி மற்றும் கழுத்தில் கை வைத்து பார்த்தான் தீப்ஷீயின் உடல் அனலாக கொதித்தது .

 

 

 

என்ன செய்வதென்றே புரியாமல் தேவ் நின்றுக் கொண்டிருந்தான் .

 

 

 

‘ இப்போ நான் எப்படி வெளிய போறது. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.’ என்று தேவ் யோசிட்டுக்கிட்டே ரூமில் ஏதாவது மெடிக்கல் கிட் இருக்கா என்று பார்த்தான் .

 

 

 

அவன் ஃபோன் அடிக்க , ‘ இப்போ யார் ஃபோன் பண்றது?’ என்று யோசித்தவன் , வேகமாக ஃபோனை ஆன் செய்தான் .

 

 

 

“ ஹலோ தேவ் சாரி டூ டிஸ்டர்ப் . தீப்ஷீக்கு எதாவது செய்யுதா ?”  என்றுக் கேட்டான் சத்யா .

 

 

 

“ என்னது? “ என்றான் தேவ் .

 

 

 

“ தப்பா நினைக்காத தேவ் . அவளுக்கு இப்போ கண்டிப்பா ஃபீவர் வந்திருக்கும் அவள் இன்னைக்கு அழுதுக்கிட்டே இருந்தா அதான் கேட்குறேன்?”

 

 

 

“ ஆமா, அவளுக்கு ஃபீவரா தான் இருக்கு . என்ன செய்றதுனே தெரியாம நான் முழிச்சிட்டிருக்கேன். “  என்றான் தேவ் .

 

 

 

“ தப்பா நினைக்கலைணா ஒரு நிமிஷம் ரூமுக்கு வெளியே வா . நான் அவளுக்கான பாலும் மாத்திரையும் வெச்சிருக்கேன். “ என்றான் சத்யா .

 

 

 

“ நான் வெளியே வரேன். “ என்ற தேவ் .

 

 

 

“ அவ தூக்கத்துல தந்தா சாப்பிடுவா . இந்த பாலைத் தந்து மாத்திரையும் தந்துடு . காலைல அவளுக்கு சரியாகிடும். “ என்ற சத்யா சென்றுவிட்டான் .

 

 

 

சத்யா சொல்லியது போல் தூக்கத்தில் பால் குடித்தாள் தீப்ஷீ . அவளுக்கு மாத்திரையும் தந்தான் தேவ் .

 

 

 

“ உன்ன பத்தி எல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்கான் . உன் உடல் நிலைய கூட சரியா கண்டுப்பிடிக்குறான் . உண்மையிலே நீ லக்கி தான் தீப்ஷீ , சத்யாவின் நட்பு கிடைத்ததில் . உங்க இரண்டு பேரின் நட்பை பார்க்கும் போது எனக்கு வியப்பா இருக்கு. “ என்றுச் சொன்னான் தேவ்  .

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. தேவ் இப்படியே இருந்தா பரவாயில்ல …