
அத்தியாயம் 3
ஸ்டேஜ் ஏறியவனின் கண்களும் இவளை தான் பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை தீப்ஷீ அறியவில்லை .
” டைக்குவாண்டோ அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே நம்மில் பலபேருக்கு தெரியாது . ஆனால் அதில் இவர் இந்தியாவிற்காக பல தங்க மெடல் வாங்கியிருக்கார் . அது மட்டுமில்லை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தங்கம் வென்றவர் . ஆனால் இவர் யார் என்றே நமக்கு தெரியாது . கிரிக்கெட்டில் சுமாராக விளையாடுபவரைக் கூட நமக்கு தெரியும் ஆனால் மற்ற விளையாட்டில் சிறப்பாக விளையாடுபவரைக்கூட நமக்கு தெரியாது என்பதுதான் கசப்பான உண்மை . ” கலையரசி கூறியதை கேட்டு அவரை, மரியாதையாக , பெருமையாக பாரத்தாள் தீப்ஷீ .
” இவர் இப்போ எம்.பி.ஏ நம்ம காலேஜில் தான் படிக்க போகிறார் . ஐ கால் டைக்குவாண்டோ சாம்பியன் தேவ் அமர் டு ஷேர் ஃப்யூ வேட்ஸ் வித் அஸ் ” என்றார் கலையரசி .
தீப்ஷீயின் பார்வை ஒரு நொடியில் வெறுப்பாக மாறியதை தேவ் கண்டுக் கொண்டான் . அவன் உள்ளம் வருந்தியது, இருந்தும் கம்பீரமாக மைக் அருகே சென்றான் தேவ் .
” ஹாய் ஃப்ரெண்ட்ஸ் . எல்லாருக்கும் ஒரு திறமை இருக்கும் அதை கண்டுபிடித்தால் போதும் எல்லோருமே வெற்றியாளர் தான் . என்னோட திறமையை கண்டுபிடித்து, வளர்த்தது என் பள்ளி தான் . அதுபோல் உங்கள் திறமையை கண்டுபிடிக்க நம்ம கல்லூரி உதவும் . ஆல் த பெஸ்ட் மை டியர் ஃப்ரெண்ட்ஸ் . இதற்கு மேல் நான் மொக்க போட விரும்பவில்லை , தேங்க்யூ ” என்றான் தேவ் .
மீண்டும் பெண்களிடம் ஆரவாரம் மற்றும் கைதட்டல் ஆடிட்டோரியத்தை நிரப்பியது .
” ஓகே ஸ்டூடண்ட்ஸ் , இனி ஃபுல் டே என்ஜாய்மென்ட் தான் . நிறைய கேம்ஸ் , டான்ஸ் , சாங் என்று என்ஜாய் பண்ணுங்க ” என்ற கலையரசி ஸ்டேஜ்ஜிலிருந்து கீழே இறங்கி வர, அவர் பின்பு சத்யா நடந்து வந்தான் . கலையரசி முன்பு தேவ் நிற்க , ” தேவ் , இவன் தான் சத்யா , காலேஜ் ஆல் இன் ஆல் , காலேஜ் ஹீரோ என்றுக் கூட சொல்லலாம் ” என்று சத்யாவை காட்டினார் .
” நைஸ் டு மீட் யூ சத்யா ” என்ற தேவ் கையை நீட்டினான் சத்யாவை நோக்கி .
அவனை பார்த்துக் கொண்டே கையை நீட்டிய சத்யா , ” ஹலோ தேவ் ” என்றான் சத்யா .
தேவ் மீண்டும் கலையரசியிடம் , ” மேடம் நீங்கள் இதுவரை என்று சொல்ல மறந்துட்டீங்க ” என்றான் .
” புரியலை தேவ் ” என்றார் கலையரசி .
” இதுவரை சத்யா ஹீரோவா இருந்திருக்கலாம் . இனிமே நானும் ஹீரோவாகலாம் தான மேடம் ” என்றுக் கேட்டான் தேவ் .
” ஆமாம் வாய்ப்பு இருக்கு . சத்யாவிற்கு சரியான போட்டி நீ தான் தேவ் . சரி பா எனக்கு வேலையிருக்கு பாய் ” என்ற கலையரசி திரும்பி சத்யாவிடம் , ” எதற்கும் தேவ்விடம் ஜாக்கிரதையாக இரு சத்யா . பாய் ” என்றவர் சென்றுவிட்டார் .
சத்யா , தேவ் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க . என்ன நினைக்கிறார்கள் என்று புரியவில்லை . இருவரும் வேறு திசையில் சென்றுவிட்டனர் .
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தீப்ஷீக்கு கோபமாக வந்தது தேவ் மேல் .
‘ கண்டிப்பாக சத்யாவை சீண்டுவதுப் போல் எதாவது தான் இந்த தேவ் பேசியிருப்பான் . இவன் இங்கு இல்லாமல் நிம்மதியாக இருந்தேன் . இவனை யார் ரீ என்ட்ரி கொடுக்க சொன்னது ? ‘ , என்று மனதில் எரிமலையாக கொதித்தாள் தீப்ஷீ .
பின் எந்த நிகழ்ச்சியிலும் தீப்ஷீக்கு ஆர்வம் இல்லாமல் போனது . ஆனால் சந்தியா ஜாலியாக என்ஜாய் செய்தாள் காரணம் இந்த நிகழ்ச்சியை நடத்துவதே சத்யா மற்றும் அவன் நண்பர்கள் தான் . சத்யாவை பார்த்தாலே போதும் சந்தியாவிற்கு கொண்டாட்டம் தான் .
தன் கோபத்தில் இருந்து வெளியே வந்தவள் , திரும்பி சந்தியாவை பார்க்க . சந்தியாவோ சத்யாவை பார்த்துக் கொண்டு வேறு ஒரு உலகில் இருந்தாள் .
தொண்டையை செருமினாள் தீப்ஷீ . சந்தியா திரும்பி அவளை பார்க்க , ” என்ன சத்யாவை சைட் அடிக்கிறீயா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
முதலில் தயங்கியவள் பின் , ” ஆமாம் . நான் மட்டும் இல்லை , இங்கு இருக்கும் பெண்கள் எல்லோரும் சத்யாவை தான் சைட் அடிக்கிறார்கள் . ஏன் நீ கூட தான் தேவ்வை சைட் அடித்தாய். நான் ஏதாவதுக் கேட்டேனா? ” என்றாள் சந்தியா .
” சீ . இனி இந்த தேவ்வின் நிழலை கூட நான் பார்க்க மாட்டேன் . அவன் யார் என்று தெரியாமல் சைட் அடித்துவிட்டேன் . எல்லாம் அந்த மேடமை தான் திட்டணும் முதலில் அவன் பெயரை சொல்லி தானே ஸ்டேஜ்ஜிற்கு அழைக்கணும் , அதை விட்டுவிட்டு கடைசியாக பெயர் சொல்கிறார் . இனி நான் எப்படி என் கண்ணை கழுவி , இந்த பாவத்தை போக்குவது ” .
சத்தமாக சிரித்துவிட்டாள் சந்தியா , ஒன்று இரண்டு பேர் அவளை திரும்பி பார்க்க , தன் தவறை உணர்ந்தாள் சந்தியா .
” சரி விடு தீப்ஷீ . இதுக்கு போய் இவ்வளவு பீல் பண்ணுற ” என்றாள் சந்தியா . எப்படி ‘ங்க’ போட்டு மரியாதையாக தொடங்கிய பேச்சு ‘ங்க’ இல்லாமல் போனது என்று இருவருக்கும் தெரியவில்லை . இதுதான் நட்பின் மாயாஜாலம் போல் .
” எப்படியோ பேச்சு மாறிடுச்சு தப்பித்தோம் என்று நினைக்காதே சந்தியா . உனக்கு முன்பே சத்யாவை தெரியும் என்பது எனக்கு புரிகிறது . அந்த உண்மையை நீயே சொல்லுவ.. அதுவரை நானாக கேட்கமாட்டேன் ” என்றாள் தீப்ஷீ .
‘ அப்பாடா இப்போது இவளிடம் இருந்து தப்பியதே பெரிய விஷயம் ‘ என்று நினைத்து நிம்மதி அடைந்தாள் சந்தியா .
ஒருவழியாக நிகழ்ச்சி முடிய , ” அம்மு , பைக் கிட்ட வெயிட் பண்ணு டா . நான் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துடுவேன் ” என்றான் சத்யா .
” ஓகே சத்யா , நானும் கிளாஸ்ஸிற்கு போய் பேக் எடுத்துட்டு வரணும் . பாய் ” என்றாள் தீப்ஷீ .
தீப்ஷீ , சத்யா பைக் அருகே காத்திருந்தாள் . தேவ் , தீப்ஷீயை பார்த்துக் கொண்டிருந்தான் . அவன் இந்த கல்லூரி சேர்ந்தது அவளை பார்க்க தான் . ஆம் விதையாய் அவனுள் விழுந்த தீப்ஷீ என்னும் காதல் விதை , பாதியில் அழிந்து போகவும் வாய்ப்பிருக்கு என்று அவன் நினைத்திருக்க , அதற்கு மாறாக அது இன்று பெரிய விருட்சமாக வளர்ந்து அவனை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது .
” சாரி அம்மு , ரொம்ப நேரமா வெயிட் பண்றியா ” என்றான் சத்யா .
” இல்ல சத்யா , இப்போ தான் வந்தேன் ” .
” சரி வா , பைக்கில் ஏறு ” .
” இரு சத்யா ” என்று அவனின் மணிக்கட்டைப் பிடித்து கேன்டீனில் உள்ள வாஷ்பேஷன் அருகே அழைத்துச் சென்றாள் .
” இங்க எதுக்கு வந்தோம் அம்மு ? ”
” கையை பைப் அருகே நீட்டு சத்யா ”
ஒன்றும் புரியவில்லை என்றாலும் தீப்ஷீ சொன்னதுப் போல் செய்தான் சத்யா . அவன் கையில் ஹாண்ட் வாஷ்ஷை ஊற்றினால் .
“நல்லா கையை கழுவு சத்யா ”
எதற்கு என்று தெரியவில்லை இருந்தும் அவள் சொன்னதை செய்தான் சத்யா . இவர்களை பார்த்துக் கெண்டிருந்த தேவ்விற்கு புரிந்தது தீப்ஷீ ஏன் செய்ய சொல்கிறாள் .
பழைய தேவ்வாக இருந்திருந்தால் அவனுக்கு கோபம் தான் வரும் . ஆனால் இப்போது இருக்கும் தேவ்விற்கு கோபத்தை கண்ட்ரோல் செய்யத் தெரியும் அதனால் அவன் , ‘ உன் ஃப்ரெண்டு கையை பிடித்ததற்கே இப்படி கை கழுவ சொல்கிறாயே , நான் தான் இனி உன் வாழ்வின் கடைசிவரை உன் கையை பிடிக்க போகிறேன். அப்போது நீ என்ன செய்கிறாய் என்று நான் பார்க்கிறேன் ‘ என்று மனதில் நினைத்துக் கொண்டான் .
” எதுக்கு அம்மு கை கழுவ சொன்ன ? ”
” நீ ஏன் அந்த தேவ்விற்கு கை கொடுத்த . அதனால் தான் கை கழுவ சொன்னேன் ” .
” அம்மு ஏன் நீ பழசை மறக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்யுற . அவன் இப்போது எவ்வளவு பெரிய ஸ்போர்ட்ஸ் பெர்சன் என்று தெரியுமா . அதுவும் இல்லாம அவன் இப்போது மாறிவிட்டான் . இனிமே இப்படி சில்லியா பிகேவ் பண்ணாத அம்மு ” .
அம்முவின் இந்த பிடிவாதத்திற்கு அன்று தாம் தான் அஸ்திவாரம் போட்டோம் என்பது நினைவிற்கு வர ,
‘ நினைவுகள் …
பள்ளியில் ,
” நாளைக்கு உங்களுக்கு பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங் சோ இன்ஃபார்ம் யுவர் பேரன்ட்ஸ் ” என்றார் ஆசிரியர் .
சத்யாவின் கண்கள் கலங்கியது . அவர்கள் கண்டிப்பாக வரமாட்டார்கள் என்று அறிந்திருந்தான் . பெல் அடிக்க தன் பையை எடுத்துக் கொண்டு கிளாஸ் வெளியே வந்துக் கொண்டிருந்தான் .
அங்கு தேவ் மற்றும் சர்வேஷ் நண்பர்களோடு நின்றிருந்தார்கள் . சத்யா அவர்களை கடந்து செல்லும்போது .
” சத்யா ….” என்று அழைத்தான் தேவ் .
அவர்கள் தீப்ஷீயின் நண்பர்கள் தானே என்று சத்யா புன்னகை முகமாக தேவ் அருகே சென்றான் .
” நாளைக்கு பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்க்கு நீ யாரை கூப்பிட்டு வருவ . அதான் உனக்கு யாரும் இல்லையே. உன்னை பிடிக்காம உங்க அம்மா அப்பா தான் உன்னை விட்டு போய்ட்டாங்களே. நீ என்ன செய்ய போற ? ” என்று சொல்லி விட்டு நக்கலாக சிரித்தான் தேவ் .
அங்கிருந்த அனைவரும் சத்யாவை பார்த்து சிரித்தனர் . சத்யாவிற்கு கோபம் வந்துவிட்டது . தன் பலம் கொண்டு தேவ்வை அடிக்க ஆரம்பித்தான் . அவனும் சத்யாவை அடித்தான் .
அங்கு கலவரமே உண்டானது . பின் அங்கு வந்த ஆசிரியர் , ” ஹே …. நிறுத்துங்க . என்ன பொறுக்கி மாதிரி சண்டை போட்டுட்டு இருக்கிங்க . பிரின்ஸ்பல் ரூமுக்கு போனால் ரெண்டு பேருக்கும் டிசி தான் . ஒழுங்கு மரியாதையா ரெண்டு பேரும் போயி உங்க பஸ்ஸில் ஏறுங்க ” என்று அவர்களை அந்த இடத்திலிருந்து அனுப்பினார் .
தன் கோபத்தை குறைக்க கிரவுண்ட்க்கு சென்ற சத்யா , இங்கு ஃபுட் பாலை தன் காலால் உதைத்து கோலாக மாற்றிக் கொண்டிருந்தான் .
நேரம் ஆவதை உணர்ந்து பஸ்ஸை நோக்கி நடந்தான் சத்யா . பஸ் ஏறினான் , அங்கு தீபு சிரித்துக் கொண்டே , ” சத்யா…. ஏன் லேட் . வந்து உட்காரு ” என்றாள்.
சத்யா பதிலேதும் கூறாமல் அவளின் சீட்டை கடந்து சென்றான் . அவன் செல்வதை பார்த்த தீபுவிற்கு கண்கள் கலங்கியது .
சத்யாவை பார்த்தவன் பின் சோகமாக இருக்கும் தீபுவை பார்த்து நக்கலாக சிரித்தான் தேவ் .
எப்போதும் தங்களை சுற்றும் தீபு .இப்போது வேறு நண்பனோடு மகிழ்ச்சியாக இருப்பதா என்று தேவ்விற்கு கோபம் . சத்யா தீபுவை தவிர்ப்பதை பார்த்து தேவ்விற்கு மகிழ்ச்சி .
வீட்டிற்கு வந்ததும் , தன் அன்னையை கட்டிக்கொண்டு அழுதாள் தீபு . ” ஏன் டி அழற ? சொன்னா தான தெரியும் ” என்றாள் சரண்யா .
” அம்மா ….. ” என்று மீண்டும் விசும்பல் தீபுவிடம் .
” இங்க உட்காரு ….. அமைதியாகு ….. பிறகு சொல்லு ” .
” அம்மா …. சத்யா என் கூட பேச மாட்டேன்றான் . நான் எதுவுமே செய்யல்ல “.
” இது தான் விசயமா . நான் பயந்துட்டேன் ” .
” அம்மா …. அவன் மட்டும் தான் என் ஃப்ரெண்டே . அவனும் பேசலனா நான் யார் கூட விளையாடுறது ” .
” சரி டி …ஏன் கோபம்…னு சத்யாக்கிட்ட போய் கேளு ” .
” சரி மா ” என்றவள் வெளியே ஓடினான் .
” ஹே… நில்லு டி…. ஃபிரஷ்ஷாகிவிட்டு போ டி ” .
” இருமா நான் போய்ட்டு வரேன் ” என்று ஓடியேவிட்டாள் தீப்ஷீ.
” இவளை …. என்ன செய்றது …. சரியான வாலு ” .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன ஜோடி மாறிடுமா ?? கல்லூரி காதல் … பள்ளி நட்பு கதை அருமையாக நகர்கிறது …
தீகாகவே அதே கல்லூரியில் காதலோடு அவள் கைபிடிக்கவே அடியெடுத்து வைத்திருக்கின்றான் தேவ்.
தீயோ, “சைட் அடித்த பாவத்தை கண்ணை கழுவி போக்கிகணும்”, “அவன் பிடித்த நண்பனோட கையை sanitizer போட்டு கழுவனும்” என்ற அளவுக்கு வெறுப்போடு இருக்கா.
சந்தியாவிற்கு சத்யாவின் அறிமுகம் முன்பே உண்டோ?
மரியாதையான விளிப்புகள் எப்பொழுது உரிமையாக மாறும் என்று கணிக்கவே முடியாது நட்புகளில்.
தீயின் வெறுப்பின் தீவிரமும், தேவின் காதலின் தீவிரமும் எவ்வகை என்று பார்ப்போம்