
அத்தியாயம் 20
தீப்ஷீ திருமண நாள் அன்று காலையில் , சூரியன் உற்சாகமாக உதித்தது. ஆனால் , மாலையில் மறையும் போது தீப்ஷீயின் வாழ்வும் இருளாகுமோ ?
” தீப்ஷீ , இன்னைக்குக் கூட உன்னால சீக்கிரமா எழுந்திருக்க முடியாதா? ” என்றார் சரண்யா .
” எழுந்துட்டேன் மா , சும்மா கத்தாதீங்க.” என்றாள் தீப்ஷீ .
” போய் குளி தீபு நேரமாகுது .”
” சரி மா .”
மேக்கப் ஆர்டிஸ்ட்டிஸ்டின் கை வண்ணத்தில் தீப்ஷீ ரெடியானாள் .
” மாப்பிள்ளை ரெடியா ? இப்போ ஐயர் உங்களுக்கு முகூர்த்த வேஷ்டி தர கூப்பிடுவாங்க. ” என்றார் தினேஷ் .
” ரெடியா தான் இருக்கேன். ” என்ற தமிழன்பன் குரலில் பதட்டமிருந்தது .
ஐந்து நிமிடத்தில் வந்த சர்வேஷ் , ” வாங்க உங்களை கூப்பிடுகிறாங்க. ” என்றான் .
வெளியே வந்த தமிழன்பன் ஐயரிடம் தாம்பூல தட்டை வாங்கிக் கொண்டவன் ரூமிற்கு சென்றான் .
இப்போ மாஸாக மெரூன் கலர் சட்டையும் வேஷ்டியும் அணிந்துக் கொண்டு கெத்தாக மண்டபத்திற்குள் வந்தான் தேவ் .
தீப்ஷீ , ஐயரிடம் தாம்பூல தட்டை வாங்கிக் கொண்டிருக்க , அவளை ரே பன் சன் கிளாஸ் வழியாக சைட் அடித்தான் தேவ் .
” டேய் இங்கு என்ன செய்ய போறோம் என்பது தெரிந்தும் பதட்டமே இல்லாம என்னடா கூலா நிக்குற. ” என்றான் சர்வேஷ் தேவ்விடம் .
‘ கொஞ்ச நேரம் என் டார்லிங்கை சைட் அடிக்க விடுகிறாங்களா ச்சே .’ என்று நினைத்த தேவ் , ” வா டா மாப்பிள்ளை அறைக்கு போவோம். ” என்றான் .
” இவ்வளவு லேட்டா வர்றீங்க?” என்றான் தமிழ் .
” அதெல்லாம் டைம் இருக்கு . உங்க அம்மா , அப்பா சரியா நடிப்பாங்களா? ” என்றுக் கேட்டான் தேவ் .
” அதெல்லாம் பக்காவா செஞ்சிடுவாங்க. ” என்றான் தமிழ் .
” இந்த பேப்பருல , சாரினு மட்டும் எழுதி , அந்த தட்டில் வெச்சிடுங்க .” என்றான் தேவ் .
அதேப் போல் எழுதி வைத்த தமிழ் , ” இப்போ நான் எப்படி வெளியே போறது? ” என்றுக் கேட்டான் .
” சர்வேஷ் , இந்த கவரில் இருப்பதை அவருக்கு போட்டுவிடு. “என்றான் தேவ் .
அதில் மீசை , தாடி , பெரிய கண்ணாடி , தலைக்கு விக்கு , டிரஸ் இருந்தது .
அதையெல்லாம் போட்டதும் வேற ஆள் போல் இருந்தான் தமிழ் .
” இப்போ வாங்க நம்ம மூணு பேரும் பேசிக் கிட்ட வெளியே போவோம் . பெருசா யாரும் நம்மள பார்க்கமாட்டாங்க. ” என்றான் தேவ் .
அதுபோல் மூவரும் மண்டபத்துக்கு வெளியே வந்தனர் .
ஒரு காரில் தமிழை ஏற்றிவிட்டவன் , ” ரொம்ப தேங்க்ஸ் பாஸ் . இந்த கார் டிரைவர் நீங்க சொல்லும் இடத்துக்கு உங்களை கூட்டிட்டு போய் விடுவார். நான் மணமேடை ஏறிய மறு நிமிஷம் உங்க பெற்றோரை பத்திரமா உங்க வீட்டில் விடுவது என் பொறுப்பு . கவலை படாதீங்க. ” என்றான் தேவ் .
” தேங்க்ஸ் நண்பா , என் பெற்றோரின் பாதுகாப்பு பத்தியும் யோசிச்சதற்கு . ஓகே பாய்.” என்ற தமிழன்பன் காரில் சென்றுவிட்டான் .
” சர்வேஷ் , இப்போ நீ மாப்பிள்ளைய கூட்டிட்டு வரதுக்கு உள்ள போற மாதிரி போ . வெளியே பதட்டமா வந்து அங்கிள் கிட்ட மாப்பிள்ளைய காணும்னு சொல்லிடு. ”
” நீ சரியான கேடிடா . சரி நான் எப்படி பர்ஃபாம் பண்ணுறேனு பார். ” என்றான் சர்வேஷ் .
” டேய் ! இது ஷார்ட் பிலிம் இல்லடா என் வாழ்க்கை. விளையாடாம போய் சொன்னதை செய் டா .”
” சரி டா .”என்ற சர்வேஷ் மாப்பிள்ளை அறைக்கு சென்றான் .
தேவ் சொன்னதுப் போல் வெளியே பதட்டமாக வந்தவன் தினேஷ் அருகே சென்றான் .
” அப்பா , மாப்பிள்ளைய காணும் . சாரினு எழுதி வெச்சிருக்கார்.” என்றான் சர்வேஷ் .
சத்யாவோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தார் தினேஷ் . சர்வேஷ் சொல்லியதைக் கேட்டு இருவரும் பதட்டமாக மாப்பிள்ளை அறைக்கு சென்று பார்த்தனர் .
அந்த கடிதத்தை பார்த்து அதிர்ந்தனர் இருவரும்.
” ரொம்ப நல்ல பையன்னு நினைச்சேன். இப்படி கடைசி நிமிஷத்துல ஓடிட்டானே.” என்றார் தினேஷ் .
” உண்மையாவே தமிழ் நல்ல பையன் தான் . இதுக்கு வேறு ஒரு காரணம் இருக்கும்ணு தோனுது. ” என்ற சத்யா சந்தேகமாக சர்வேஷை பார்க்க .
சர்வேஷ் வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான் .
” இப்போ நான் என்ன செய்றது? ” என்று ஒன்னும் புரியாமல் தினேஷ் நின்றிருந்தார் .
அவரின் நிலை பார்த்து சர்வேஷ் வருந்தினான் , ‘ நான் ஏன் இப்படி செய்தேன் ?’ என்று மனதில் நினைத்தான் மறுநமிடமே ,’ தேவ் என் தங்கைக்கு கிடைத்தால் அவ வாழ்க்கை நல்லா இருக்கும் . இப்போ அப்பா கஷ்டப்பட்டாலும் அப்புறம் அவரு சந்தோஷமா இருப்பார்’ என்று நினைத்தான் .
” வாங்க பா , முதல்ல தமிழ் அப்பா கிட்ட பேசலாம்.” , என்றான் சத்யா .
மூவரும் வெளியே வந்தனர் .
” முரளி என்ன நம்பவைத்து இப்படி ஏமாத்துட்டீங்களே. ” என்றார் தினேஷ் .
” என்ன சொல்ற தினேஷ் ? ”
” உன் பையன் ஓடிட்டான்.”
” என்ன சொல்ற ? ”
” உள்ள போய் பார் லெட்டர் எழுதி வெச்சிட்டு போய்ட்டான். ” என்றார் தினேஷ் .
உள்ள போய் பார்த்து முரளி , அதிர்ச்சியாக வெளியே வந்தார் , ” அவன் இப்படி செய்வானு எனக்கு தெரியாது தினேஷ் . உனக்கு மட்டும் வருத்தம் இல்லை எங்களுக்கும் தான் வருத்தம் , அவமானம் எல்லாம் . அவன் என் பிள்ளையே இல்லை . என்னை மன்னிச்சிடு தினேஷ். ” என்றார் முரளி .
” உன்ன மன்னிச்சி என் பொண்ணு கல்யாணம் நடந்துடுமா ? ”
” அப்பா , அவங்க மேல் தப்பில்ல . அவங்க கிட்ட கோபப்படாதீங்க . இனி என்ன செய்றதுனு யோசிங்க ?” என்றான் சத்யா .
சத்தம் கேட்டு தீப்ஷீ வெளியே வந்தாள் , சரண்யா அழுதுக்கொண்டிருந்தார் , கமலா மற்றும் அக்ஷிதா ஆறுதலாக பிடித்திருந்தனர் .
கல்யாண அலங்காரத்தில் தேவதையாக நின்றிருந்த தீப்ஷீயை திரும்பி பார்த்த தினேஷ் ஒரு முடிவோடு , ” சத்யா , நீயே என் பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறீயா ? ” என்றுக் கேட்டார் .
இதை யாருமே எதிர்ப்பார்க்காததால் , அனைவரும் அதிர்ச்சியாக நின்றனர் .
தீப்ஷீயை பார்த்தான் சத்யா , ” என்னைவிட யாராலும் அம்முவை அதிகமா புரிஞ்சிக்க முடியாது தான் . என்ன போல் அவளை யாராலும் நல்லா பார்த்துக்க முடியாது தான். ” என்ற சத்யா திரும்பி சந்தியாவை பார்த்தான் .
‘ இவ்வளவு நேரம் நான் இங்கு உன்னையே தான் பார்த்திட்டிருந்தேன் . அதை உணர்ந்தும் நீ என்ன பார்க்கலை . இப்போ நீ ஏன் என்ன பார்க்குற? ‘ என்று பயத்தில் சத்யாவை பார்த்தாள் சந்தியா .
சத்யா , தேவ்வை பார்க்க அவன் கண்ணில் முதன் முதலாக தோல்வியின் வேதனையை பார்த்தான் .
” ஆனா , அதுக்காக என்னால அம்முவை கல்யாணம் பண்ணிக்க முடியாது . நான் அவளுக்கு நண்பனாக இருக்கலாம் ஆனா என்ன பொருத்தவரை அவ எனக்கு மகள் போல் தான் . அவள் மேல் உண்மையான நட்பை வெச்ச என்னால் அவளை தப்பா ஒரு பார்வை கூட பார்க்க முடியாது . எங்களோடது தூய்மையான நட்பு அதை கொச்சைப் படுத்தாதீங்க. ” என்றான் சத்யா . அவனின் பதில் பலரின் இதயத்துடிப்பை சீர் ஆக்கியது .
” அப்பா , தேவ்வை நம்ம தீப்ஷீக்கு கேட்கலாமே பா ?” என்றான் சர்வேஷ் .
சற்று தயங்கினார் தினேஷ் .
“என்னப்பா யோசிக்கிறீங்க ? எந்தவிதத்தில் தேவ் உங்களுக்கு குறைவா தெரியுறான். “என்றுக் கேட்டான் சர்வேஷ் .
” தேவ் எல்லாவிதத்திலும் சிறந்தவன் தான் ஆனா , அவன் பாட்டி இதுக்கு ஒத்துக்க மாட்டாங்க. ” என்றார் தினேஷ் .
தேவ் திரும்பி இந்திராணியை பார்க்க .
” தீப்ஷீ போல் ஒரு பெண் எங்க வீட்டுக்கு மருமகளாக வர நாங்க குடுத்து வெச்சிருக்கணும். ” என்றார் .
அவரை அதிர்ச்சியாக பார்த்தனர் அமர் , தினேஷ் , அக்ஷிதா .
” நீங்க இப்படி நினைப்பீங்கனு தெரிஞ்சிருந்தா . நான் ஏன் வெண்ணையை வெச்சுக்கிட்டு நெய்க்கு அலைறேன் . முன்னாடியே தேவ்வை மாப்பிள்ளை ஆக்கியிருப்பேன் . உங்களுக்கும் சம்மதமா ? ” என்று அமர் அக்ஷிதாவிடம் கேட்டார் தினேஷ் .
” எங்களுக்கு சம்மதம். ” என்றுக் சொன்னவர்கள் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.
” தேவ் , உனக்கு சம்மதமா ? இப்படி சப்ஸ்டியூட்டா உன்ன மாப்பிள்ளை ஆக்குறாங்களேனு நினைக்குறியா ? ” என்றுக் கேட்டார் தினேஷ் .
” அப்படி எல்லாம் நான் நினைக்கலை அங்கிள். தீப்ஷீயை கல்யாணம் செய்துக்க எனக்கு முழு சம்மதம்.” என்று ஒன்னும் தெரியாத அப்பாவி பிள்ளையாக சொன்னான் தேவ்.
” ஆனா , எனக்கு சம்மதம் இல்லை . நீங்க பார்த்த மாப்பிள்ளை ஓடிட்டா, எனக்கு அதே மேடையில் அதே நேரத்தில் கல்யாணம் நடக்கணும்னு சட்டமில்லை . நீங்க எனக்கு வேறு மாப்பிள்ளையை பொறுமையா பாருங்க . அப்புறமா கல்யாணத்தை நடத்திக்கலாம்.” என்றாள் தீப்ஷீ.
‘ எல்லாம் சரியா நடக்குதேனு பார்த்தேன் . எல்லோரையும் சரி செய்துவிடலாம் . ஆனா , உன்னை எப்படி சரி செய்றது தான் தெரியலை. ‘ என்று நினைத்தான் தேவ் .
” உன்னோட ஜாதகப்படி இன்னைக்கு தான் நாள் நல்லா இருக்கு . இதைவிட்டால் இனி அமையவே அமையாது . தயவு செஞ்சு எங்களுக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கோ தீபு. ” என்றார் தினேஷ் .
” முடியாது பா. ” என்ற தீப்ஷீ , தன் அறைக்கு சென்றாள் .
” நீங்க எல்லா ஏற்பாடையும் செய்யுங்க . நான் அவளை சமாதானம் பண்ணி கூட்டிட்டு வரேன். ” என்ற சத்யா , தீப்ஷீ சென்ற அறைக்குச் சென்றான் .
” என்ன அம்மு , இப்படி தான் எல்லார் முன்னாடியும் பேசுவியா ? ”
” சத்யா , அவங்க செய்றது மட்டும் சரியா ? ”
” அவங்களோட சூழ்நிலை அப்படி . இப்போ நீ தான் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கணும் .” என்றான் சத்யா .
” எல்லாம் தெரிஞ்சும் நீ எப்படி சத்யா இப்படி பேசுற. தேவ்வை என்னால் பக்கத்து வீட்டு பையனா கூட ஏத்துக்க முடியலை அவனை போய் என் கணவனா ஏத்துக்க சொல்ற.”
” நாங்க எல்லாம் சொல்றோம் . நாங்க உனக்கு கெடுதலா செய்வோம் . உனக்காக இல்லைனாலும், எங்களுக்காக நீ சம்மதிச்சி தான் ஆகணும். ” என்றான் சத்யா .
” சத்யா , என் வாழ்க்கையே நரகமாகிவிடும். ”
” அப்படியெல்லாம் ஆக நான் விடமாட்டேன் . எல்லார் முன்னாடியும் எங்கள அவமானப்படுத்த போறீயா இல்ல தேவ்வை கல்யாணம் பண்ணிக்க போறீயா ? நீயே முடிவெடு. “என்ற சத்யா , வெளியே போக ,
” அன்னைக்கு சொன்னாயே சத்யா , உன்ன கட்டாயப்படுத்தி எதுவும் செய்ய விடமாட்டேனு . ஆனா , இன்னைக்கு நீயே என்ன கட்டாயப்படுத்துற? ” என்று அழுகையோடுக் கேட்டாள் தீப்ஷீ .
அவளை அணைத்துக்கொண்ட சத்யா ,” என்ன மன்னிச்சிடு தீப்ஷீ சூழ்நிலை என்ன இப்படி செய்ய வைக்குது. ” என்றான் சத்யா .
அவனை விட்டு விலகிய தீப்ஷீ தன் கண்களை துடைத்தவள் , ” உங்களுக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் . அதுவும் நீ சொல்லி நான் எதாவது செய்யாம இருந்திருக்கேனா? ஆனா , கல்யாணத்துக்கு பின்னாடி நான் சந்தோஷமா இருக்கணும்னு மட்டும் எதிர்ப்பார்க்காதீங்க. வா சத்யா வெளியே போகலாம். ” என்றாள் தீப்ஷீ .
‘ உன்னை யாருக்கும் விட்டு தர மாட்டான் அந்த தேவ் . அதான் இந்த கல்யாணத்த நடத்துறேன். கண்டிப்பா அவன் உன்ன நல்லா பார்த்துப்பான் . இல்லனா நான் அவன சும்மா விட்டுடுவேனு நீ நினைக்குறியா ? அவன உண்டில்லனு ஆக்கிடுவேன் .’ என்று மனதில் நினைத்த சத்யா , தீப்ஷீயை மணமேடைக்கு அழைத்து வந்தான் .
அதுவரை அனைவரும் தீப்ஷீ சம்மதிப்பாளா ? என்று அந்த அறையின் கதவையே பார்த்துக் கொண்டிருந்தனர் . தேவ் , ஐயர் சொல்கின்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே தீப்ஷீ வருகிறாளா என்று தான் பார்த்துக் கொண்டிருந்தான் .
” வா தீப்ஷீ. ” என்றார் தினேஷ் மகிழ்ச்சியாக .
” அப்பா , நான் உங்களுக்காக தான் சம்மதித்தேன் . என் சத்யா சொன்னதால் தான் செய்றேன்.” என்றாள் தீப்ஷீ .
தேவ் , சத்யாவை பார்க்க , தேவ்வை திரும்பி பார்த்த சத்யாவின் முகத்தில் நக்கல் சிரிப்பு இருந்தது . தேவ் சிரிப்பது போல் சிரித்தான் சத்யா . முதல் முறையாக சத்யாவின் செயலைக் கண்டு தேவ்வின் முகத்தில் புன்னகை . அதை சத்யாவும் ஆச்சரியமாக தான் பார்த்தான் .
” போய் உட்காரு தீபு. ” என்றார் சரண்யா .
தீப்ஷீ போய் தேவ்வின் அருகில் உட்கார்ந்தாள் . தேவ்விற்கு வானில் பறப்பதுப் போல் இருந்தது .
தேவ் தீப்ஷீயின் கையை பிடிக்க , அவள் தேவ்வின் கையை தள்ளிவிட்டாள் . விடாப்பிடியாக அவளின் கையை பிடித்தான் தேவ் . தீப்ஷீ அவனை திரும்பி பார்க்க . அவளின் விரலில் அன்று தமிழன்பன் அணிவித்த மோதிரத்தை கழட்டியவன் சர்வேஷ் இடம் தந்தான் .
” மோதிரம் மட்டும் இல்லை அவனின் நினைவுகளையும் தூக்கிப் போட்டுடு . இனி நான் தான் உன் நினைவிலும் கூட இருக்கணும். நீ இனிமே தீப்ஷீ தேவ் என்பதை மறக்காதே. ” என்றான் தேவ் .
எல்லோரிடமும் ஆசீர்வாதம் பெற்று மாங்கல்யம் வர . ஐயர் எடுத்து தேவ் கையில் தந்தார் . தீப்ஷீயின் கண்களை பார்த்துக் கொண்டே அவளின் கழுத்தில் கட்டினான் தேவ் .
தேவ் கட்டிய தாலியை வாங்கியவள் சத்யாவை திரும்பி கண்களில் நீரோடு பார்த்தாள் , ‘ இனி என் வாழ்க்கை என்னவாகும் என்பதுப் போல். ‘
‘ உன் வாழ்வு சிறப்பாக இருக்கும் . அப்படி மாத்திக் காட்டுவேன். ‘ என்று உறுதியாக பார்த்தான் சத்யா .
‘ உன்னை என் கண்ணில் வைத்து பார்த்துக்கொள்வேன் . இதுவே உன் கடைசி அழுகையாக இருக்கும். ‘ என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டான் தேவ் .
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஒருவழியா தேவ் தீப்ஷி கழுத்துல தாலி கட்டிட்டான்… எனக்கு தெரியும் சத்யா ஒத்துக்க மாட்டான் அப்படின்னு … உண்மை எல்லாம் தீப்ஷிக்கு தெரிஞ்சா அவ தேவ் வை மன்னிக்க மாட்டா … இனிமே தான் சத்யா தீப்ஷி நட்புக்கு பிரச்சனையே