Loading

அத்தியாயம் 2

” சத்யா ” .

” என்ன ஸ்டாண்டர்ட் படிக்கிற ? ” என்றாள்.

” ஃபிப்த் ஸ்டாண்டர்ட் ” .

” நான் செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன் . நான் உன்னை பெயர் சொல்லிக் கூப்பிட்டா என்னை தலையில் கொட்ட மாட்டல்ல ” .

 

இவன் முகத்தில் புன்னகை தோன்ற , ” இல்லை ” என்றுக் சொல்லிக் கொண்டே தலையை இட வலமாக ஆட்டினான்.

 

” நீ ரொம்ப குட் பாய் சத்யா . ஆனா இந்த சர்வேஷ் , தேவ் இரண்டு பேரும்  ரொம்ப பேட் பாய்ஸ் “என்றாள்.

 

” ஏன் ? ” என்றான்.

 

” அவங்க பெயர் சொல்லிக் கூப்பிட்டதற்கு என்ன கொட்டிட்டாங்க ” முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டுக் கூறினாள்.

 

சத்தமாக சிரித்துவிட்டான் சத்யா .

 

அவள் கோபமாக , ” அவங்க என்ன அடிச்சது உனக்கு சிரிப்பா இருக்கா . உன் கூடவும் நான் பேச மாட்டேன் போ ” என்று அவள் ஆடிக் கொண்டிருந்த ஊஞ்சலில் இருந்து இறங்க முற்படுகையில் கீழே விழுந்தாள்.

 

” ஹேய் ….. பார்த்து அம்மு ” என்றுக் கூறிக்கொண்டே அவளுக்கு உதவி செய்தான் .

 

அவளுக்கு உதவிச் செய்து அவளை மேலே ஊஞ்சலில் அமர்த்தினான் . அவளுக்கு காயம் எதுவும் உள்ளதா என்று பார்த்தான் . நல்ல வேளையாகக் காயம் எதுவும் இல்லை .

 

ஆனால் அவள் சத்யாவை பார்க்கவே இல்லை மற்றொரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

 

” சாரி…. அம்மு “என்றான்.

 

அவளிடம் அசைவில்லை .

 

” சரி நான் போறேன் ” என்று எழுந்தான் சத்யா .

 

” நில்லு சத்யா ” என்றாள்.

 

அவன் மீண்டும் ஊஞ்சலில் அமர்ந்தான்.

 

” எனக்கு ஃப்ரெண்டே இல்லை சத்யா . நீ எனக்கு ஃப்ரெண்டா இருப்பனு நினைச்சேன் . ஆனா நீயும் என்ன பார்த்து சிரிக்கிற … ” .

 

” நான் உன்னை கிண்டல் பண்ணி சிரிக்கவில்லை அம்மு …. ” .

 

” நிஜமாவா…. ” .

 

” நிஜமா அம்மு ” .

 

” என்னோட பெயர் அம்மு இல்லை சத்யா …. ” .

 

” நான் செல்லமா அம்முனு சொல்லுறேன் ” என்றான்.

 

” அப்போ  என்ன உனக்கு  பிடிக்குமா சத்யா ? ”

 

” ஸ்வீட் அம்முக் குட்டிய  எனக்கு பிடிக்கும் . உன்னோட நேம் என்ன ? ” .

 

” தீப்ஷீ ” .

 

” சரி . உங்க வீடு எது ? ” .

 

” உங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குல அதான் எங்க வீடு . எங்க வீட்டுக்கு இந்த பக்கம் இருக்குல அதான் எங்க அண்ணன் ஃப்ரெண்ட் வீடு ” .

 

” ஓ….  எப்படி எங்க வீட்டு படியில் நீ விழுகிற மாதிரி ஓடி வந்த ” .

 

” அது எங்க அண்ணா என்ன அடிக்க வந்தங்களா….. எப்பவும் போல உங்க வீட்டு படிக்கு வந்தேன் . அப்பறம் தான் ஞாபகம் வந்தது நீங்க அந்த வீட்டுக்கு வந்துட்டிங்கனு . முன்னாடி அங்க யாரும் இல்ல அதனால எப்பவும் அங்க தான் அண்ணாக்கிட்ட இருந்து தப்பிக்க ஓடி போவேன் ….. அப்போதான் நீ கீழ போக வந்தீங்களா . அதான் பயந்து திரும்ப போய்…… ” .

 

” சரி…..சரி மூச்ச விடு …. இப்படி கேப்பே இல்லாம பேசுற ” .

 

” என்ன செய்ற சத்யா …. ” என்றுக் கேட்டுக் கொண்டே அவர்கள் அருகில் வந்தார் கமலா.

 

” இவங்க …. யாரு ? உன்னோடு ஃப்ரெண்டா ? ” கேட்டார் கமலா.

 

” ஆமா…. இவ பெயர் தீப்ஷீ ” என்றான்.

 

” எங்க வீடு உங்க வீட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கு . உங்க பெயர் என்ன ? ” பெரியவள் போல் கேட்டாள் தீப்ஷீ .

 

” ஓ… சூப்பர் குட்டி. என் பெயர் கமலா ” .

 

” நீஙக தான் சத்யா அம்மாவா ? ” .

 

சத்யா ஊஞ்சலில் இருந்து கோபமாக எழுந்து செல்ல ஆரம்பித்தான் .

 

ஏதோ தவறு செய்து விட்டோம் என்று புரிந்தது . அதனால் சத்யா தன் மேல் கோபம் கொண்டான் என்பது வரை புரிந்தது தீப்ஷீக்கு.

 

” நில்லு ….  சத்யா ” என்றுக் சொல்லிக் கொண்டே அவன் பின்னால் ஓடினாள் .

 

” சத்யா…. ஏன் போற … நான் தப்பு செய்துட்டேனா ? ” .

 

சத்யாவிடம் பதிலில்லை .

 

” சாரி சத்யா ….. எனக்கு புது ஃப்ரெண்ட் கிடைச்சுட்டானு நான் எவ்வளவு ஹாப்பியா இருந்தேன் தெரியுமா ….. இனி நீயும் நானும் ஃப்ரெண்டு கிடையாதா சத்யா ? ” கண்ணில் இருந்த நீர் கீழே விழ தயாராக இருக்க கேட்டாள்.

 

என் கண்ணீரை துடைத்தவளின் கண்ணில் நீர் வர நானே காரணமாகிவிட்டேன் என்று வருந்தினான் சத்யா .

 

” இல்ல அம்மு …. நாம்ம எப்பவும் ஃப்ரெண்ட்ஸ் தான் … சரி வா ” என்று ஊஞ்சலருகே அழைத்து வந்தான்.

 

” இவங்க பெயர் கமலா …. என்ன பார்த்துக்குறாங்க …. எனக்கு அம்மா , அப்பா இல்லை ” என்றான் .

 

” சரி சத்யா ” என்றாள்.

 

” கமலாமா நீங்களும் என் ஃப்ரெண்ட் தான் சரியா ”  என்றாள் தீப்ஷீ .

 

கமலா உள்ளம் நிறைந்து போனது அவளின் அழைப்பில் . சத்யாவே ஆச்சரியப்பட்டான் நாம் எவ்வாறு அழைப்பது என்று தயங்கியதும் . இவள் எளிதாக அவரை அழைத்து விட்டாளே, யார் மனமும் புண்படாமல் .

 

” சரி டா குட்டி ” என்றார் கமலா மகிழ்வோடு.

 

” ஏய்…. தீ உன்னை அம்மா கூப்பிடறாங்க … “என்றான் சர்வேஷ் கையில் பாலிருந்தது . அவனருகில் ஒருவனிருந்தான் அவன் கையில் பேட் இருந்தது.

 

” என்ன தீ சொல்லாத அண்ணா ….. நான் போறேன் ” என்றாள் தீப்ஷீ.

 

” அப்படி தான் டீ கூப்பிடுவேன் …. சீக்கிரமா போ ” என்றான் .

 

” உன்னை அப்பாக்கிட்ட மாட்டி விடுறேன் ” என்றவள்  சத்யாவிடம் திரும்பி , ” சத்யா… இவன் தான் என் அண்ணன் சர்வேஷ் . அவன் பக்கத்திலிருக்கானே அவன் தான் தேவ் அண்ணனோட ஃபரெண்ட் . இரண்டு பேரும் எப்பவும் என்னை சீண்டிட்டே இருப்பாங்க . விளையாட்டுல எப்பவும் என்னை ஒப்புக்கு சப்பாணியா தான் வைச்சுப்பாங்க …. ” என்றாள்.

 

சத்தமாக சிரித்தான் சத்யா . அதை இருவரும் ரசித்தனர்.

 

தீப்ஷீ முன்பு கோபமானது ஞாபகம் வர , ” சாரி அம்மு … ” என்றான் சத்யா .

 

” நீ சிரிக்கறப்ப அழகா இருக்கு ….. சத்யா நீ என்னோட விளையாடுவியா ?  ” .

 

” கண்டிப்பாக ” .

 

” நான் ஒப்புக்கு சப்பாணி இல்லைதானே அந்த விளையாட்டுல …. ” .

 

” நிச்சயமா இல்லை ” .

 

தீப்ஷீ முகத்தில் அப்படி ஒரு புன்னகை , ” எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்ஸா இருப்போமா ? ” என்று கையை நீட்டினாள் .

 

” கடைசி வரைக்கும் ஃப்ரெண்ட்ஸ்ஸா இருப்போம் ” என்று அவள் கை மேல் கை வைத்து வாக்குறுதி தந்தான் சத்யா . ‘

 

#####

 

இன்றுவரை அதை நிரூபித்துக் கொண்டிருப்பவளை பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்தவன் நண்பனின் குரலில் நினைவுக்கு வந்தான் .

 

” ஹே ஒயிட் டாப் ” .

 

அவள் திரும்பாமல் போக .

 

” ஹே போனி டெயில் ” , என்றான் வேறு ஒருவன் .

 

நின்று திரும்பியவள் , அவர்கள் அருகில் வந்தாள் .

 

” நீ ஃபர்ஸ்ட் இயர் தான  ? ” என்றுக் கேட்டான் ஒருவன் .

 

” ஆமாம் . நீங்களும் தான ஃபர்ஸ்ட் இயர் ” என்று பயம் இல்லாமல் கேட்டாள் .

 

” ஆமாம் . ஆனால் , பி.ஜி ஃபர்ஸ்ட் இயர் ” என்றான் ஒருவன் .

 

” என்ன சீனியர்ஸை கேள்வி கேட்டுட்டு இருக்க ? என்ன லந்தா ? உன் பெயர் என்ன ? ”  என்றான் வேறொருவன் .

 

” சொல்ல முடியாது ” என்றவள் . அங்கு அழுதுக் கொண்டிருந்த பெண்ணை பார்த்து , ” ஏன் நீங்க அழறீங்க ? ”  என்றுக் கேட்டாள் .

 

அந்த பெண் எதுவும் சொல்லாமல் , சீனியர்ஸை பார்த்துக் கொண்டே அழுதாள் .

 

” நாங்க தான் அவளை அழ சொன்னோம் . இப்போ உன்னையும் அதைத்தான் செய்ய சொல்கிறோம் . நாங்கள் போதும் என்று சொல்லும் வரை நீ அழ வேண்டும் . ஓகே யுவர் டைம் ஸ்டார்ட் நவ் ”  என்றான் ஒருவன் .

“நீங்க அழுவதை நிறுத்துங்க . நாம போய் மேனேஜ்மென்ட்டில் இப்போ கம்ப்ளைண்ட் செய்தால் போதும் , உடனே இவங்களுக்கு டி.சி கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவிடுவாங்க ” என்றாள்  போனி டெயில் பெண் .

அவ்வளவு தான் அங்கு  உட்கார்ந்திருந்த ஐவரில் நான்கு பேர் பயத்தில் எழுந்துவிட்டனர் . அழுதுக் கொண்டிருந்தவள் இவளை ஆச்சரியமாக பார்க்க . உட்கார்ந்திருந்தவன் , ” அம்மு போதும் நிறுத்து , பசங்க பயப்படுறாங்க ” என்றான் .

” என்ன சத்யா , நீ இதெல்லாம் கேட்கமாட்டாயா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

” நீ வேற அம்மு , இந்த பாப்பா பயந்துக் கிட்டே வந்துச்சா . அதான் ஒரு ஆடு மாட்டிக்கிச்சினு இதை வைத்து மட்டன் பிரியாணி செய்ய நினைத்து வம்பு பண்ணாங்க . அவளை வைத்து உனக்கு பயம் காட்ட நினைத்தாங்க , கடைசியில் உன்னிடம் பண்ணு வாங்கிட்டாங்க ” , என்றான் சத்யா .

அழுதுக் கொண்டிருந்த பெண்ணிடம் , ” நீங்க கிளாஸிற்கு போங்க . இவனுங்க சரியான டம்மி பீஸ் ” என்றாள் (அம்மு) தீப்ஷீ .

சத்தமாக சிரித்துவிட்டாள் அந்த பெண் , பின் அமைதியாக சென்றுவிட்டாள் . அந்த நால்வரும் மீண்டும் பல்பு வாங்கி ஜகத் ஜோதியாக நின்றுக் கொண்டிருந்தனர் .

” நீ வா அம்மு . நாம உன் கிளாஸிற்கு போவோம் ” என்ற சத்யா , தீப்ஷீயோடு போனான் .

‘ அட பக்கி . நீ இவதான் அம்மு என்று முன்னாடியே சொல்லியிருக்க வேண்டியதுதானே ‘ , என்று விதம் விதமாக சத்யாவை நால்வரும் மனதில் திட்டினர் .

சத்யாவோ இவர்களை கண்டுக் கொள்ளாமல் , தீப்ஷீயோடு சென்றவன் , ” அம்மு எதற்கு பிளாக் ஜீன்ஸ் போட்டு வந்த ? முதல் நாள் பிளாக் போட வேண்டாம் என்று சொன்னேனே ” என்றான் சத்யா .

” வேற ஜீன்ஸ் எதுவும் இல்ல சத்யா . காலையில் லேட்டா தான் எழுந்தேன் அதான் ஏதோ கைக்கு வந்ததை போட்டேன் ” என்றாள் தீப்ஷீ .

” சத்யா , உனக்கு ஒரு விஷயம் தெரியுமா . அக்ஷிதாமா , அமர் அங்கிள் இன்று நம்ம காலனிக்கு வந்துடுவாங்க . இனிமே இங்கே தானாம் ” என்றாள் தீப்ஷீ .

” ரொம்ப சந்தோஷம் அம்மு . அவங்களை பார்த்தே நான்கு வருடம் ஆகுது ” என்றான் சத்யா .

” ஆமாம் சத்யா , அமர் அங்கிளுக்கு ஊட்டிக்கு டிரான்ஸ்பர்  கிடைத்ததும் ஃபேமிலியோடு ஊட்டிக்கே போய்ட்டாங்க ”  என்றாள் தீப்ஷீ

” அதான் வந்துட்டாங்களே அம்மு . இனி நோ வொரீஸ் ” என்றான் சத்யா .

” அக்ஷிதாமா , அமர் அங்கிளை மீண்டும் பார்க்க போவது மகிழ்ச்சியாக இருந்தாலும் . இந்த தேவ்வை பார்க்க வேண்டும் என்று நினைத்தாலே கடுப்பாக இருக்கு சத்யா ” என்றாள் தீப்ஷீ .

” என்ன அம்மு , இன்னும் சின்ன வயதில் நடந்ததை நினைத்துக் கொண்டே இருக்கிற . கொஞ்சமாவது பெரியவளா யோசி . இனியெல்லாம் தேவ்வோடு போய் சண்டைக்கு நிற்காதே . நீ ஃப்யூச்சர்ல ஒரு  பொறுப்பான ஐ.பி.எஸ் ஆக போவதை மறக்காதே ” என்றான் .

” நான் மறக்க மாட்டேன் சத்யா . ஆனால் தேவ்வை மட்டும் என்னால் என்றுமே நெய்பராகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாது ” ,

என்றாள் தீப்ஷீ . இருவரும் பேசிக் கொண்டே அவள் கிளாஸ் முன்பு நின்றனர் . அப்போது அங்கு வந்தாள் முன்பு அழுதுக் கொண்டிருந்த பெண் .

அவளும் தீப்ஷீ கிளாஸிற்கு தான் வருகிறாள் என்பது புரிய .

” அம்மு அந்த பாப்பாவும் உன் கிளாஸ் தான் போல் ” என்றான் சத்யா .

சத்யா கூறியது , அந்த பெண்ணின் காதிலும் கேட்க , அவளாகவே இருவர் அருகிலும் வந்து , ” என் பெயர் சந்தியா சார் . பாப்பா என்று சொல்லாதீங்க ” என்றவளின் குரல் மென்மையாக இருந்தது .

” ஓகே சந்தியா . இனிமேல் பாப்பா என்று கூப்பிட மாட்டேன் அதுபோல் நீயும் என்னை சார் என்று கூப்பிடாமல் அண்ணா என்று கூப்பிடு . முன்பு சும்மா கலாய்த்தோமே தவிர நாங்க ரொம்ப நல்ல பசங்க , உனக்கு எப்போ எந்த உதவி வேண்டும் என்றாலும் எங்களை கேள் , முடிந்த உதவியை செய்கிறோம் ” என்றான் சத்யா .

” ஓகே . ஆனால் அண்ணா என்று கூப்பிட முடியாது ”  என்றவள் உள்ளே சென்றுவிட்டாள் .

சந்தியாவை ஆராய்ச்சியாக பார்த்தாள் தீப்ஷீ . ஆனால் சந்தியா சென்றதை பெரியதாக கூட சத்யா எடுத்துக்கொள்ளவில்லை .

” ஓகே அம்மு . இனிமே என்னோடு தான காலேஜ்க்கு வர்றது , போறது எல்லாம் ” என்றுக் கேட்டான் சத்யா .

” ஆமாம் சத்யா . உனக்கே தெரியுமே , இன்று ரொம்ப ஸ்டொமக் பெயின் அதான் அப்பாவோடு காரில் வந்தேன் . நீ இல்லாம டிராவல் செய்வது கஷ்டமா இருந்தது சத்யா  ”  என்றாள் தீப்ஷீ .

” என் அம்முவிற்காக நான் அடுத்து வாங்க போவது கார் . ஈவினிங் பைகில் வருவதில் எந்த கஷ்டமும் இல்லையே அம்மு . என் ஃப்ரெண்ட் கார் கூட எடுத்துக்கலாம் ” என்றுக் கேட்டான் சத்யா .

” ஈவினிங் பிராப்ளம் இல்லை சத்யா பைக்லே போகலாம் . எப்போ கார் வாங்க போறோம் ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

” கூடிய சீக்கிரம் வாங்கலாம். இப்போ  நீ கிளாஸிற்கு போ. ஈவினிங் பார்க்கலாம் பாய் டா ”  என்ற சத்யா தன் வகுப்பிற்கு சென்றான்  .

உள்ளே சென்ற தீப்ஷீ , சந்தியா அருகில் இருந்த இடத்தில் அமர்ந்தாள் . சந்தியா , தீப்ஷீயை பார்த்து புன்னகை செய்ய .

” ஹாய் சந்தியா , ஐ எம் தீப்ஷீ ” , என்று அறிமுகம் செய்துக் கொண்டாள் .

” நைஸ் டு மீட் யூ தீப்ஷீ ” என்றாள் சந்தியா .

” ஃபிரண்ட்ஸ் ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

” ஷ்யூர் தீப்ஷீ ” என்றாள் சந்தியா .

கிளாஸ் ரூம் ஸ்பீக்கரில் , ” ஆல் ஃபர்ஸ்ட் இயர் யூஜி பிஜி ஸ்டூடெண்ட்ஸ் கம் டு த ஆடிட்டோரியம் ” என்று அறிவிப்பு வந்தது.

” வாங்க சந்தியா போவோம் ” என்றாள் தீப்ஷீ .

” ஃப்ரஷ்ஷர்ஸ் டே பார்ட்டி போல. “என்றாள் சந்தியா .

இருவரும் ஆடிட்டோரியத்தில் முன் இருக்கையில் அமர்ந்தனர் .

அப்போது ஸ்டேஜ் ஏறினான் சத்யா . க்ரே ஜீன்ஸ் பேண்ட் ,  கிரீன் ஷர்ட் , வைட் ஷு என்று ஜி.வி.எம் படத்தில் வரும் ஹீரோ போல் ஸ்டைலாக , கம்பீரமாக மைக்கை அட்ஜஸ்ட் செய்த சத்யாவை , பெண்கள் அனைவரும் சைட் அடித்துக் கொண்டிருந்தனர் .

” ஃபிரண்ட்ஸ் ப்ளீஸ் பீ சீட்டடு . பிரின்ஸ்பால் வில் அரைவ் சூன் ” என்றான் சத்யா .

” ஓகே லவ்வர் பாய் ”  என்று அனைவரும் கோரசாக கூறினார்கள் .

அதுவே சத்யாவின் பட்ட பெயர் . ஆனால் இது எப்படி இவர்களுக்கு தெரிந்தது என்று தெரியாமல் சத்யா அழகாக வெட்கப்பட .

” ஓஹோ ” என்று கேர்ள்ஸ் கத்த . பாய்ஸ் காதிலிருந்து புகையாக தள்ளியது .

பிரின்ஸ்பால் மற்றும் சில ஆசிரியர்கள்  ஸ்டேஜ் ஏறினார்கள் .

” குட் மார்னிங் டூ எவரிஒன் கேதர்டு ஹியர் . நானும் ஃபர்ஸ்ட் இயர் தான் . ஆனாலும் நான் தான் வெல்கம் ஸ்பீச் கொடுக்கணும் என்று ஏற்றிவிட்டார்கள் . நான் என்ன சீனியரா , ஏஜ்ஜிடா தெரியுறேனா ?  ”  என்றுக் கேட்டான் சத்யா .

” இல்லை ”  என்று பதில் வந்தது .

” இப்படி எல்லாம் பேசினால் தான் உங்களுக்கு பிடிக்கும் என்று என் நண்பர்கள் தான் சொன்னாங்க ” என்ற சத்யா  திரும்பி  அங்கு நின்றுக் கொண்டிருந்த தன் நான்கு நண்பர்களை பார்த்தான் .

‘ இது எப்படா நடந்தது ? ‘ , ‘ இது உலக மகா நடிப்பு டா சாமி ‘ , ‘ நீ ஹீரோவாக எதுக்கு டா எங்களை வில்லன் ஆக்குற ‘ , என்று அவர்கள் இவனை மனதில் திட்டிக் கொண்டே திரு திருவென முழித்தனர் . மாணவர்களின் சிரிப்பு சத்தம் ஆடிட்டோரியத்தை நிரப்பியது .

” ஜோக்ஸ் அபார்ட் . எல்லோரும் பல கனவுகள் , பல ஆசைகளோடு இங்கு வந்திருப்பிங்கனு தெரியும் . எல்லாரோட வாழ்க்கையிலும் காலேஜ் லைஃப் மறக்க முடியாத நினைவாக இருக்கும் . அந்த நினைவின் முதல் பக்கத்தில் இருக்கும் மாணவர்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று அவன் பேசிக் கொண்டிருக்கும் போது .

” சத்யா உங்களை பற்றி இன்ட்ரோ கொடுங்க ” என்று மாணவிகள் கூற .

” என்ன பத்திச் சொல்ல பெருசா ஒன்னும் இல்லை . நான் இங்கு தான் பி.பி.ஏ படித்தேன் , இப்போது எம்.பி.ஏ ஃபர்ஸ்ட் இயர் ” என்றான் சத்யா .

பின் காலேஜ் பெருமையை கூறியவன் கடைசியாக பிரின்ஸ்பல் மேடமை பேச வருமாறு அழைத்தான் சத்யா .

” குட் மார்னிங் ஸ்டூடெண்ட்ஸ் . என்ன காலேஜ் பெருமையை கேட்டதும் எல்லாருக்கும் தூக்கம் வந்துடுச்சா…  முன்பு இருந்த ஆரவாரம் இல்லை . இன்ட்ரஸ்டிங்காக நான் ஒன்று சொல்லவா… அதுவும் சத்யாவை பற்றி… ” என்றதும் மாணவிகளிடம் மீண்டும் ஆரவாரம் எழுந்தது .

” தன்னடக்கம் இது தான் போல் . தன்னை பற்றிக் கூற பெருசாக ஒன்றுமில்லை என்கிறான் . சத்யா கோல்டு மெடலிஸ்ட் இன் டூ கோர்ஸ் . எப்படி என்று தானே கேட்கிறீர்கள் . அவன் பி.பி.ஏ ரெகுலர்ஸ்ஸாகவும் பி.சி.ஏ கரஸ்லையும் முடித்தான் . அதுமட்டும் இல்லை அவனுக்கு ப்ரோக்ராமிங் என்பது விளையாடுவதுப் போல் . மூன்று அப்ளிகேஷன் சத்யா தனியாக உருவாக்கியிருக்கிறான் . நம்ம காலேஜ் வெப்சைட் கிரியேட் பண்ணது சத்யா தான் . இன்னும் அவனை பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம். ஆனால் பாய்ஸ் கொஞ்சம் காண்டாகுறாங்க . அதனால் நான் நிறுத்திக் கொள்கிறேன் . இப்போ நான் ஏன் சத்யாவைப் பற்றி சொன்னேன் என்று தெரியுமா ? அவனால் இரண்டு டிகிரி படிக்க முடியுமென்றால் உங்களால் ஒன்றை தெளிவாக படிக்கமுடியாமலா போகும் . நீங்கள் வாழ்க்கையில் வெற்றிப் பெற எல்லா வாய்ப்பையும் நாங்க உருவாக்கி தருவோம் , அதை வீணடிக்காமல் பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றிப் பெறுவது உங்கள் கையில் தான் இருக்கிறது ” , என்றார் மேடம் கலையரசி .

” கடைசியாக உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றிப் பெற்ற இன்னொருவரையும் அறிமுகம் செய்து விட்டு , என் பேச்சை முடிக்கிறேன் . ப்ளீஸ் கம் டு த ஸ்டேஜ் ” என்றார் கலையரசி .

ஒருவன் ப்ளூ ஜீன்ஸ் , பிளாக் ஷர்ட் , ஒயிட் ஷூ போட்டுக் கொண்டு கெத்தாக ஏறினான். ‌ அவன் படி ஏறும் அழகை ரசித்தாள் தீப்ஷீ . அவன் பார்க்கவும் அழகாக இருக்க . தீப்ஷீ அவனை ஆர்வமாக பார்த்தாள் .

ஆனால் அவன் யாரென்று தெரிந்தால் தீப்ஷீயின் நிலை ?

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அவன் யாரா இருக்கும் … நல்ல பிரண்ட்ஷிப் கதை … லவ்வர் பாய் சத்யா சூப்பர் … சந்தியா வந்ததும் ஒரு பிட்டை போட்டு வச்சுட்டா … அப்படியே என்னோட காலேஜ் டேஸ்க்கு திரும்ப போயிட்டு வந்த மாதிரி இருந்தது …

  2. குழந்தையில் இணைந்த நட்பின் கரங்கள் கல்லூரியிலும் இணைபிரியாமல் தொடர்கிறது.

    கல்லூரி நாட்களின் ஆரவாரமான ஆரம்பம் அருமை.

    சத்யா திறமையான, பொறுப்பான மாணவனாக வாழ்வில் வெற்றி பெற்றுவிட்டான்.

    College Lover Boy 😍😍

    அவனுக்கு இணையான புகழுறையோடு மேடை ஏறுவது தேவ் ஆக தானே இருக்க முடியும்.

    சந்தியாவின் கண்கள் சத்தியாவின் மேல் ஆர்வமாக படிகிறது.

    மேடை ஏறுபவன் யார் என்று அறியாமல் ரசிக்கும் தீப்ஷி, அறிந்ததும் தீ யாக மாறிவிடுவாளே.