Loading

இரவு உணவு முடிந்ததும் அனைவரும் தங்கள் அறைக்குச் செல்ல, இருவரும் எதிர் பார்த்த தனிமைக் கிடைத்தது.

பிரணவ் எப்பொழுதும் போல் இருக்க, ப்ரணீதா தான் பதட்டமாக இருந்தாள். அவனுடன் பல நாட்கள் இருந்து இருக்கிறாள். ஆனால் இது புதிய உணர்வைக் கொடுத்தது. இவளின் பதட்டத்தை உணர்ந்து, 

“ஒய் செல்லக்குட்டி என்ன வாய் சும்மா இருக்கு. எப்பவும் எதாவது பேசிட்டே இருக்குமே. என்ன பயமா இருக்க” என 

“பயமா எனக்காக நெவெர். லைட்டா பயமா தான் இருக்கு” என்று சிரிக்க, அவனும் சிரித்துக் கொண்டே அவளை நெருங்க, கண்ணை இறுக்கி மூடிக்  கொண்டாள்.

அவனோ அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ்ப் பதித்து விட்டு “தூங்கு செல்லம்மா” என அவளோ அவனை ஏமாற்றமாகப் பார்க்க, அதைப் புரிந்து “உனக்குள் நம்ம குட்டி பாப்பா வேற இருக்கு. எனக்குக் கண்ட்ரோல் எல்லாம் இருக்காது. நீ வேற ஸ்ட்ரோங்கா வேண்டும் எல்லாம் சொல்லி இருக்க. முதலில் என் பாப்பா என் கையில் வரட்டும் அப்பறமா இந்தப் பெரிய பாப்பா வைப் பார்த்துகிறேன்” என 

“உண்மையாவே  வருத்தமா இல்லையா” என்று கேட்டாள். அவளுக்கு இவனோடு இருக்க ஆசை இருந்தாலும் உடல் அடித்துப் போட்டது போல் இருக்க எப்படா  தூக்கலாம் என்று தான்  நினைத்தாள். அதை அறிந்தே இப்படிச் சொன்னான்.

“வருத்தமா ஹா ஹா ஹா நமக்கு இன்னும் நிறையே காலம் நீண்டு இருக்கு. உன் கூட இருந்த முதல்  தான் எதுவுமே நியாபகம் இல்லை. செகண்ட் டைம் சூப்பரா செலிப்ரேட் பண்ணிடலாம். இப்ப தூங்கலாம்” என்று அவளை அணைத்துக் கொண்டு உறங்கினான். பல மாதம் கழித்து நிம்மதியான உறக்கம்.

ஆறு மாதம் பிறகு,

“அடியே இன்னுமா கிளம்பலை” என்று புடவையைக் கட்ட சொன்னால் எதோ செய்து கொண்டு இருக்கும் தன் தேவதையைப் பார்த்துக் கேட்க, 

“இருடா இந்தப் பெரிய வயிற்றை வெச்சிட்டு நான் புடவைக் கட்ட வேண்டாமா. சொல்கிறதைக் கேட்டா தானே. ஒழுங்கா பாப்பா பிறந்த பிறகு உன் அண்ணா கல்யாணத்தை வைக்கச் சொன்னால் என்னை பார்த்துக்க ஜான்வி கூட இருந்தால்  ஹெல்ப்பா இருக்கும் என்று எதேதோ சொல்லி  இப்படி பண்ணிட்டீங்களே” என்று புலம்பி கொண்டே கட்ட, அவளுக்கு உதவி செய்தான் அவள் கணவன்.

இன்று மாதவ் ஜான்வி கல்யாணம். கடைசியாக ஜான்வி ஒற்றுக்கொண்டு ‘ஒரு வருடம் பிறகு கல்யாணத்தை வெச்சுக்கலாம்’ என்று மாதவ் ப்ரணீதா சொன்னதை மனதில் வைத்துச் சொல்ல, எல்லாத்தையும் மாற்றிய  ஜான்வி, தான்  இருந்தால் இவளுக்கு உதவியாக இருக்கும் என்று மனதைக் கரைத்து எதோ கல்யாண நாளும் வந்துவிட்டது.

“சீக்கிரமா எழுந்து இருந்தால்  இந்தப் பிரச்சனை எல்லாம் இருக்காதே. இப்ப பாரு நேரம் வேற ஆகுது” என  “அதற்குச்  சார் என்னைச்  சீக்கிரமா தூங்க விட்டு இருக்கணும். எதோ ரொம்ப நல்லவன் மாதிரி பாப்பா பிறக்கட்டும் எல்லாமேனு சொல்லிட்டு ஒரே மாசம் கூட நீங்க வெயிட் பண்ணல” என்று வாயை மூடிக்கொண்டு சிரிக்க,

“அதுக்கு என்ன காரணம் தெரியுமா நீ இவ்வளவு அழகா இருக்கிறது தான். அதுவும் என் பொண்ணு உள்ள இருக்கா. அது வேற எக்ஸ்ட்ரா அழகு. நான் என்னடி பண்றது” என்று பாவமாகக் கேட்க,

“உங்க மேல எந்தத் தப்பும் இல்லை. நேற்று அத்தை அத்தனை முறை ஆகவே இருக்கச் சொல்லியும் உங்க பேச்சைக் கேட்டு வீட்டுக்கு வந்தேன்ல என் தப்பு தான்” என 

“ரொம்ப பேசாதே இல்லைப் பேசவே முடியாதபடி பண்ணிவிடுவேன்” என்று அவளை நெருங்க “எப்ப என்னால முடியாது கிளம்புங்க நான் காரில் மேக்கப் பண்ணிக்கிறேன்” என்று அவனைக் கிளம்பிக்கொண்டு சென்றாள்.

மாதவ் ஜான்வி கல்யாணம் நல்லபடியாக நடந்தது. குடும்பமாகப் போட்டோ எடுத்துக் கொண்டனர். எது இவர்கள் கல்யாணத்தில் தவறியதோ அதை எல்லாம் இங்கே நிறைவாகச் செய்தனர். 

வாழ்க்கை நெளித்த நீரோடைப் போல் சென்றது. பெரும் புயலுக்குப் பின் இவர்கள் வாழ்வில் வசந்தம் வீசியது.

இரண்டு மாதம் கழித்து மருத்துவமனையில், “எப்ப எனக்கு ஒரு குழந்தையே போதும். இவ படுற கஷ்டம் எல்லாம் திரும்பப் பார்க்க முடியாது” என்று கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பிரணவ் சொல்ல,

மாதவ் “இன்னும் எட்டு மாசத்தில் என்னோட நிலைமையும் இப்படித் தான் இருக்கும் போல” என “என்னடா சொல்ற” என்று சந்தோசமாக அவனைப் பார்க்க,

“காலையில் தான் கன்போர்ம் பண்ணோம். சொல்றதுக்குள்ள ப்ரீக்கு வலி வந்திடுச்சு” என்று சிரிக்க 

“வாவ்… வாழ்த்துக்கள் ப்ரோ…. உனக்கும் தான் அண்ணி” என்று சொல்லும் போதே உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்டது.

பரபரக்க அங்கே செல்ல, ஒரு நர்ஸ் வந்து “வாழ்த்துகள் சார் பெண் குழந்தைப் பிறந்து இருக்கு” என  “அவ எப்படி இருக்கா” என்றதும்  “அம்மா பாப்பா இரண்டு பெரும் நலமாக இருக்காங்க. கொஞ்ச நேரத்தில் நார்மல் வார்டு மாற்றிடுவோம் அங்க பார்த்துக்கலாம்” என, குட்டி குழந்தையைப் பார்க்க ஆர்வமாக இருந்தனர்.

உள்ளே போனதும் அவனின் முதல் தேடல் பெரிய குழந்தையைத்  தான். “ரொம்ப வலிச்சுதா டி” என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க, தலையை இடம் வலமாக ஆட்டி  சிரித்துக் கொண்டே  “பாப்பாவைப் பாரு” என்றாள் ப்ரணீதா.

“ஸோ ஸ்வீட் உன்னை மாதிரியே இருக்க டி. என்ன பெயர் வைக்கலாம்” என 

சிறிய யோசனைக்குப் பின் “வசந்த நிலா” என அனைவரும் சிரித்துக் கொண்டனர்.  வசந்த நிலா பெயரைப் போலவே இவர்கள் வாழ்வில் வசந்தம் வீச வந்தவள். இனி இவர்கள் வாழ்வில் என்றும் வசந்தமே…….

முற்றும்.       

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
21
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. Nice story… Rendu perum love panirukaga senthutaga… Super.. 💖