Loading

தேடல் 37:

 

காலை 11 மணி:

 

“மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற இருந்த நிலையில் பிரபல மருத்துவரும் ஆராய்சியாளருமான டாக்டர்.தேவ் பிரசாத் தீடிரென சென்னை கமிஸ்னரின் குழுவினரால் கைது செய்யப்பட்டார். அவர் தனது ஆராய்ச்சி கூடத்தில் செய்து வந்த சட்டத்துக்கு புறப்பான ஆராய்சிகளே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதைக் கண்டறிய பெரிதும் உதவிய மிளிர்மிகை என்னும் பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன…” தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்ட செய்தியை கவனித்துக் கொண்டே ஹேட்டல் ஒன்றில் காலை உணவை உண்டு முடித்திருந்தனர் இருவரும்.

 

“ஸ்ஸ்ஸ்… ஹப்பா… எல்லாம் நல்லபடியா முடிஞ்சுட்டு… இனிமே வீட்டுக்கு கிளம்ப வேண்டியது தான்… வீட்டுக்கு பேசிட்டீயா மிளிர்…”

 

“ம்ம்ம் பேசிட்டேன்… இனிமே என்னாகும்… அந்த தேவ்பிரசாத் தப்பிக்க முடியாது தானே!”

 

“கண்டிப்பா தப்பிக்க முடியாது! கஷ்டடியில எடுத்து விசாரிப்பாங்க! இப்ப வந்துருக்க தகவல் படியே அவர் தானே முன்வந்து எல்லாத்தையும் ஒத்துக்கிட்டதா தான் சொல்லறாங்க… அப்பறம் கமிஷ்னர் சாரும் ரொம்ப நேர்மையானவரு… கண்டிப்பா தப்பிக்க எல்லாம் விட்டுட மாட்டாரு…” என்றபடியே அவன் எழுந்துக் கொள்ள, அவளும் எழுந்துக் கொண்டாள்.

 

“ம்ம்ம்… அவன தூக்குல போட்டுடு வாங்களா..?”

 

“90% வாய்ப்பிருக்கு… பாக்கலாம்…”

 

“இப்ப அந்த பசங்கள எல்லாம் எங்க வச்சியிருக்காங்க… காப்பாத்திடுவாங்க தானே…”

 

“தெரியல… எல்லாருமே ரெக்வர் பண்ணி ஹாப்பிட்டல சேத்து இருக்கோம்… அதுல நிறைய பேருக்கு எஸ்ட்ஸோட ப்னைல் ஸ்டேஜ்… இவன் வேற கண்ட மருந்தையும் கொடுத்து இருப்பான் போல… உறுதியா காப்பாத்திட முடியும்னு எல்லாம் சொல்லிட முடியாது… இவன் கண்டுபிடிச்ச மருந்த தான் குடுக்கனும்… பாப்பும்…”

 

“ம்ம்ம்ம்….” என்றவள் அதோடு அமைதியாகி விட,

 

“ம்ம்ம்… அப்பறம்…” என்றான் அக்னி இழுத்து,

 

“அப்பறம் என்ன… வீட்டுக்கு போகனும்… அப்பா, அம்மா, இனியன், சூர்யாவ எல்லாம் பாக்கனும்… ரொம்ப மிஸ் பண்ணறேன்…”

 

“ரொம்ப முக்கியம் இப்போ…”

 

“என்னது…”

 

“வேற முக்கியமானது எதுவுயில்லையானு கேட்டேன்…”

 

“ம்ம்ம்ம்… கடைய மூனு நாள் மூடியாச்சு… போய் ஓப்பன் பண்ணனும்… கஸ்டமர் வேற கடைக்கு மாறிடாம இருக்கனும்…”

 

“நான் அந்த கருமத்த கேக்கல…”

 

“வேற என்ன…?”

 

“ஏன் வேற எதுவுமே இல்லையா..?”

 

“ஏன் வேற என்ன இருக்கு..?”

 

“என்ன இருக்கா..? அடியே கழட்டி விட எதுவும் பிளான் பண்ணறீயா..? இனிமே தான் நம்ம லவ் மேட்டர வீட்டுல சொல்லனும்… இரண்டு வீட்டையும் ஒத்துக்க வைக்கனும்… கல்யாணம் பண்ணனும்… எவ்வளவு இருக்கு…”

 

“ஹலோ… ஹலோ… போதும் நிறுத்துங்க… நம்ம லவ் மேட்டரா… என்ன விளையாடுறீங்களா… நீங்க எப்ப லவ் சொன்னீங்க… இல்ல நான் எப்ப உங்ககிட்ட லவ் சொன்னேன்…”

 

“ரொம்ப பண்ணாதடீ… இதுக்கு மேல என்னத்தடீ லவ்வ சொல்லறது…”

 

“என்னமோ தொர ஆயிரம் தடவ சொன்ன மாதிரி சலிச்சுக்கறீக்க… இன்னும் ஒரு தடவ கூட சொல்லல… என்ன இம்ப்ரஸ் பண்ணற மாதிரி சொல்லுங்க… உங்களுக்கு வாழ்க்க குடுக்கலாமா வேண்டாமானு யோசிக்கறேன்…”

 

“எல்லாம என் நேரம்டி…”

 

“எதே…”

 

“இல்லம்மா… இதோ சொல்லறேனு சொன்னேன்…”

 

“சீக்கரம்… லேட்டா சொன்னா எனக்கு கேக்கற மூட் போய்டும்…”

 

“இவ ஒருத்தி…” என வாய்க்குள் முணங்கிக் கொண்டவன், “ஐ லவ் யூ மிளிர்ம்மா…” என்றான்.

 

“இதென்னா செத்தவன் கையில வெத்தல குடுத்தவன் மாதிரி… மிளிர்ம்மா… சவர்ம்மானுட்டு… நீ போய்ட்டு அந்த நிவியவே கட்டுக்க… உனக்கெல்லாம் அவ தான் லாயக்கி…” என முறுக்கிக் கொண்டு முன்னே சென்றவளை இழுத்து பிடித்து நிறுத்தியவன், “இம்சடி உங்கூட… உன் லவ் பண்ணா உங்ககிட்ட சொல்லியே ஆகனுமா… சொல்ல முடியாது போடீ… எங்க வீட்டுல சம்மதம் வாங்க நாப்பது பிளான் போட்டா உங்க வீட்டுல சம்மதம் வாங்க நாலு பிளான் சேத்து போட்டுட்டு போறேன்… என்ன வந்துது இப்ப…” என்றவன் அவளை முந்திக்கொண்டு வேகமா முன்னே செல்ல, “அப்ப கூட என்ன இம்ப்ரஸ் பண்ணற மாதிரி லவ்வ சொல்ல மாட்ட தானே நீ…” என்றபடியே அவன் முதுகில் இரண்டு அடி வைத்து பின்னோடே அணைத்துக் கொண்டாள் அவள்.

 

“அடியே இது பப்ளிக் ப்ளேஸ்டி…”

 

“யோவ்… போலீஸ்காரரே… எந்த இடமா இருந்தா எனக்கென்ன…” என்றவள் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினாள் கேலியாக.

 

இன்னும் அவன் முதுகோடு ஒன்றிக் கொண்டவளை, வேகமாக தன் இழுத்து கை வளைவிற்குள் நிறுத்திக் கொண்டவன், “படுத்தறடி…” என்றான் மெல்லிய குரலில் சிறு சிணுங்களாய்.

 

“இனிமே காலத்துக்கும் இப்படி படுத்திக்கிட்டே தான் இருப்பேன்… என்ன செய்யதறதா உத்தேசம் போலீஸ்கார்…” என்றாள் கண்கள் சிமிட்டி கேலிப்புன்னகை தவழ.

 

“வேற என்ன பண்ணுவேன்… இப்படி இன்னும் இறுக்கமா கட்டிப்பேன்…” என்றபடியே அவளின் தோளில் பதிந்திருந்த தன் கரத்தில் இன்னும் அழுத்தம் கூட்டி தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனின் புன்னகையும் விரிந்தது.

 

சில வருடங்களுக்கு பிறகு:

 

அந்த வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீட்டின் அலங்காரமும், நிறைந்த மனிதர்களும், அவர்களின் முகத்தில் வழிந்த புன்னகையும் விசேஷ வீடென்பதை சொல்லாமல் சொல்லியது.

 

அந்த வீட்டின் கடைக் கோடியில் ஒரு மூலையில் இருந்த அறையில் மிளிரை அமர்த்தி ஜடை அலங்காரம் செய்துக் கொண்டிருந்தாள் சூர்யா. மற்றவர்களின் இடையீடு இருக்க கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு. ஏற்கனவே உடுத்திருந்த பட்டுபுடவை உடலை உறுத்த, பசித்த வயிறு வேறு களைப்பைக் கூட்டியது.

 

“அடியே… ஒரு மணி நேரமாவா தலைய பின்னுவ… முடியலடி என்னால…” அப்பட்டமாக மிளிரின் முகத்தில் சோர்வு எட்டிப் பார்க்க,

 

“நான் என்ன தி கிரேட் பியூடிஷியன் மிளிரா… சொடக்கு போடற நேரத்துல மேக்கப்ப முடிக்க… பேசாம இருங்கக்கா… இப்ப தான் ஹேர் ஸ்டைலே போய்ட்டு இருக்கு… இன்னும் மூஞ்சுக்கு வேற பட்டி டிங்கரிங் பாக்கனும்…” என்றாள் அவள் நீட்டி முழக்கி.

 

“அடியே ஆத்தா… நீ பத்த வரைக்கும் போதும்… மத்ததெல்லாம் நானே பாத்துக்கறேன்… கிளம்பு நீ முதல…” என்றாள் மிளிர் பெரிய கும்பிடாய் போட்டு.

 

“அதெப்படி போக முடியும்… நீங்களே பாவம் கன்சீவா இருக்கீங்க… இப்ப உங்கள வேல வாங்குனா டயர் ஆகிட மாட்டீங்க… அதுவும் இல்லாம…” என்றவள் இழுத்து நிறுத்த,

 

“இந்தாருடீ… இத்தோட உன் வாய மூடிக்க… நான் மேக்கப் போட்டு டயர் ஆகறேனோ இல்லையோ… உன்கிட்ட பேச்சு குடுத்தே டயர் ஆகிடுவேன் போல…” என்றாள் மிளிர் இன்னும் தளர்வாக சாய்ந்தமர்ந்து.

 

“இதோ இன்னும் ஐஞ்சே நிமிஷம்… அவ்வளவு தான் முடிஞ்சுடும்… அதுக்குப் போய் ரொம்ப பண்ணட்டு…” என்றபடியே சூர்யா அவளின் நீண்ட பின்னலில் அழகாக பின்னப்பட மல்லிகைப்பூக்களை தைத்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன ம்மா சூரி… இன்னுமா மேக்கப் முடியல…” என்றபடியே கையில் தட்டுடன் உள்ளே நுழைந்த அக்னியை அவள் முறைக்க, அவனோ அசட்டு புன்னகை ஒன்றை உதித்து நின்றான்.

 

“அண்ணா… என்ன சூரினு கூப்பிடாதீங்கனு எத்தன தடவ சொல்லறது…” என்றாள் அவள் கடுப்பாய்.

 

“ஒன்னு என்ன மாமானு கூப்பிடு… இல்ல மிளிர அண்ணினு கூப்பினு நானும் எத்தன தடவ சொல்லறது…” என அவளைப் போலவே சொல்லிக் காட்டியவன் மிளிருக்கு அருகில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்துக் கொண்டு உணவை ஊட்ட தொடங்கி இருந்தான்.

 

“உங்களுக்கு வேற வேலையே இல்லையா அண்ணா… பொண்டாட்டி வளைகாப்புக்கு வந்தவங்கள வரவேற்போம்… சாப்பிட சொல்லுவோம்… இருக்க வேலைய இழுத்துப் போட்டு செய்வோனு இல்லாம இங்கையே சுத்திட்டு இருக்கீங்க…” என்றாள் கடுப்பாய் சூர்யா, அவளின் வேலைக்கு இடையூராய் வந்தவனை முறைத்துக் கொண்டே.

 

“அதென்னடா இது பெரிய கொடுமையா இருக்கு… கற்பமா இருக்க பொண்டாட்டிக்கு ஒரு புருஷன்காரன் சாப்பாடு குடுக்க வந்ததென்ன அவ்வளவு பெரிய குத்தமா…” என்றான் சிரிப்புடன்.

 

“ஏன் அதுக்கு உங்க வீட்டுல வேற ஆளே இல்லையாமாம்…” இன்னும் அவள் அவனை முறைத்துக் கொண்டே கேட்க,

 

“இருக்காங்க தான்… ஆனா வேற வேலையா இருக்காங்க…” என்றான் அவன் இன்னும் புன்னகையை விரித்து.

 

“அப்போ உங்களுக்கு வேலையே இல்லங்கறீங்க… அப்படி தானே…”

 

“அவ்வளவு ஓப்பனா சொல்ல முடியாது… ஆனா என் பொண்டாட்டிய பாத்துக்கறத விட பெருசா எனக்கு வேற எந்த வேலையும் இல்லனு சொல்லலாம்…” என்றான் விரிந்த முழு நகையுடன்.

 

“சொல்லலாம்… சொல்லலாம்…” என்றவள், பேசியபடியே தனது வேலையை முடித்து, இரண்டடி தள்ளி நின்று திருத்தமாக இருக்கிறதா என சரிபார்த்தாள்.

 

“பர்பெக்ட் க்கா… அப்படியே அள்ளுது போங்க…” என்றபடியே பின்னலை சுற்றி நெட்டி முறிக்க, மடமடவென்று முறிந்தது.

 

“ரொம்ப ஹெவியா இருக்கு சூரி… சிம்பிளா பண்ணிக்கலானு சொன்னா எங்க கேக்கற நீ…”

 

“வாயில அடிங்க… வாயில அடிங்க… ரெண்டு பீயூட்டி பார்லர் ஓனர் இப்படி பேசலாமா…” என்றாள் அவள், ஏதோ தெய்வ குத்தம் போல தன் வாயில் அடித்துக் கொண்டு.

 

அவளின் விருப்பமிது. வேண்டாம் வேண்டாம் என்றவளை வலுக்கட்டாயமாக அமர்த்தி வைத்து தான் மட்டுமே அவளுக்கான அலங்காரங்களை செய்துக் கொண்டிருந்தாள்.

 

“அதான் முடிச்சிட்டீல… கிளம்பறது…” என்றான் அக்னி அவசரமாக.

 

“நானும் பாக்கறேன் ஒரு மணி நேரமா என்ன தொறத்துலதுலேயே இருக்கீங்க… நான் என்ன உங்க பொண்டாட்டிய கடிச்சா திங்கவா போறேன்… இன்னும் பேஸ்க்கு மேக்கப் போடல… போட்டுட்டு போய்டுவேன்…” என்றாள் கடுப்பாக.

 

அக்னி மிளிரை இறைஞ்சுதலாய் பார்க்க, “நீ போய் சாப்பிட்டு வா சூர்யா… அதுக்குள்ள நானும் சாப்பிட்டு முடிச்சுடுவேன்… அதான் இன்னும் டைம் இருக்கே… பொறுமையா முகத்துக்கு போட்டுக்கலாம்…” என்றாள் மிளிர் சமாதானமாய்.

 

“ஏதோ நீங்க சொல்லறீங்களேனு போறேன்… ஆனா அண்ணா அப்படியே போய்டுவேனு மட்டும் நினைக்காதீங்க… கற்பகம் பாட்டிய கூப்பிட்டு சொல்லிட்டு தான் போவேன்… ஏன்னா உங்கள இந்த ரூம்குள்ள விடக்கூடாதுங்கறது மேலிடத்து உத்தரவு…” என மிரட்டியபடியே அவள் சென்றுவிட, நீண்டதொரு பெருமூச்சை வெளியிட்டான் அக்னி.

 

“சரியான பிசாசு… போகும் போதும் நிம்மதியா இருக்க விடுதா பாரு… மொதல கதவ அடைச்சு சாத்திட்டு வரேன்… அப்ப தான் யாரும் வர மாட்டாங்க…”

 

“அதெப்படி வராம இருப்பாங்க… அவ கண்டிப்பா பாட்டிய கூப்பிட்டு வாச கதவ தட்டி உள்ள தள்ளி விட்டுட்டு தான் போவா…” என்றாள் மிளிர் சிரித்துக் கொண்டே.

 

“அதெல்லாம் யாரும் வர மாட்டாங்க…”

 

“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லறீங்க…” என்றாள் மிளிர் லேசாய் புருவங்களை ஏற்றி இறக்கி.

 

“அதெல்லாம் மாமன் செட்டப்பா சித்தப்பா காவலுக்கு வாசல நிறுத்திட்டு தான் வந்திருக்கேன்…” என்றான் மிடுக்காய் சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டு.

 

“ஏன் நானே வந்து சாப்பிட்டுக்க மாட்டேனா…” என்றாள் அவள் புன்னகையுடன்.

 

“ஏன் நா எடுத்துட்டு வந்து ஊட்டுனா இறங்காதா… பேசாம சாப்பிடுடி…” என்றான் அவனும்.

 

“ரொம்ப தான் பண்ணறீங்க போலீஸ்கார்… என்னமோ நா ஊர விட்டு ஓடிப் போற மாதிரி…”

 

“சொன்னாலும் சொல்லாட்டியும் ஓடி தானே போக போற… வளைகாப்பு முடிஞ்சு பொண்ணு அம்மா வீட்டுக்கு தான் போகனுமுனு சட்டமா என்ன… இங்கையே தான் இரேன்… படுத்தறடி என்ன…” என்றவனை அவள் முறைக்க.

 

“ப்ளீடா… நீ இல்லாமா எனக்கு என்னவோனு இருக்கும்…” என்றான் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு.

 

“பிச்சுடுவேன் பிச்சு… ஒரு வாரமா இதே வேலையா போச்சு உங்களுக்கு… இத என் வந்து என்னட்ட சொல்லறீங்க.. போய் உங்க அப்பாட்ட சொல்ல தானா…”

 

“அதுக்கு பேசாம நானும் பொட்டிய தூக்கிட்டு உங்க வீட்டுக்கே வந்துடலாம்…” என்றான் அவன் சலிப்பாய்.

 

“அப்ப அத செய்யுங்க மொதல…” என்றாள் அவள் கேலிப் புன்னகையுடன்.

 

“முடியாதுனு நினைக்கற இல்ல… முடிஞ்சுக் காட்டறேன் பாரு…”

 

“இப்படியே பேசி பேசி நீங்க சின்ன மாமாவ தான் முடிக்க போறீங்கனு நினைக்கறேன்… போதும் எனக்கு… யாராவது வர முன்ன சீக்கரம் கிளம்புங்க நீங்க…”

 

“என்ன விரட்டுறதுலேயே இரு… பசிக்குதுன்னுட்டு ஒழுங்கா நாலு வாய் கூட சாப்பிடல…” என்றான் முறைத்துக் கொண்டே.

 

“இதுக்கு மேல முடியல… வேணுமுனா நா கொஞ்ச நேரம் கழிச்சு ஜுஸ் எதாவது சாப்பிட்டுக்கறேன்…” என்றாள் மிளிர்.

 

“ம்ம்ம்…” என தட்டை ஓரமாக வைத்தவன், அவளின் காலடியில் அமர்ந்து மடியில் சாய்ந்துக் கொண்டு, மெல்ல அடிவயிற்றை தடவிக் கொடுத்தான்.

 

“என்ன பண்ணறீங்க நீங்க… யாராவது வரப் போறாங்க… ஏந்திரிங்க மொதல…”

 

“பச்… இங்கையே இரேன்டி…” என்றவன் அவளின் அடிவயிற்றில் தனது இதழ்களை அழுந்த பதிக்க,

 

“ரொம்ப படுத்தறடா போலீஸ்கார்…” என்றவள் குனித்து அவனை முத்தமிட முடியாததால் அவன் கன்னத்தை வருடி தன் இதழ்களில் ஒற்றிக் கொண்டாள்.

 

“ரொம்ப கஷ்டம்டா… நீயும் பாப்பாவும் இல்லாம எப்படி இருப்பேன் நானு…”

 

“அஞ்சு கிலோமீட்டர் குள்ள இருக்க எங்க வீட்டுக்கு போறதுக்கு இவ்வளவு பில்டப்பு… இப்படி சொல்லி சொல்லியே ஏழாம் மாசம் நடக்க வேண்டிய வளைகாப்ப ஒன்போதாம் மாசத்துக்கு கொண்டு வந்துட்டீங்க… இன்னும் பத்து நாளோ பதினைஞ்சு நாளோ… பாப்பா பொறந்ததும் தூக்கிட்டு இங்க வந்துட போறேன்…” என்றாள் அவள் அவன் தலையை கோதி ஆதுரமாய்.

 

“இப்ப இப்படி தான் சொல்லுவ… அப்பறம் பாப்பா பொறந்ததும், பதினாறு குடும்பிடனும்… அந்த சடங்கு இந்த சடங்குனு டிலே பண்ணுவீங்க…” என்றான் கடுப்பாய்.

 

“டேய்… படுத்தாதடா என்ன… இப்பவே டயர்டா இருக்கு எனக்கு… நாங்க சொன்னாலும் அப்படியே இவரு கேட்டுக்கற மாதிரி தான்…” என்றவள் நன்றாய் சாய்ந்து அமர்ந்துக் கொள்ள, வாஞ்சையாய் இதழ்களில் தவழும் புன்னகையோடு அவளையே பார்த்திருந்தான் அக்னி.

 

“டேய் இங்க என்ன பண்ணிட்டு இருக்க நீ… வூடு முழுக்க மனுஷமக்க நிறைஞ்சு நிக்குது… வந்தவங்கள வானு சொல்லாம… இங்கென்ன கதவுக்கு முட்டு குடுத்துட்டு… மெதல நகரு நீ…” தானாவைத் தான் கேள்வி மேல் கேள்விக் கேட்டு துளைத்துக் கொண்டிருந்தார் ஜெயா.

 

“அது அது வந்துண்ணா…” அவர் தடுமாற,

 

“ஒ முழியும் சரியில்ல… பேச்சும் சரியில்ல… எங்கடா அவன்…”

 

“எவன்னா….”

 

“அதான் உன் செல்ல மவென்…” என்றார் அவர் கடுப்புடன்.

 

“அவென் மேல பந்தி பரிமாறிட்டு இருக்கான் ண்ணா…”

 

“மேலேருந்து தான் வரேன் அவன் அங்க இல்லையே…” அவர் தானாவை சந்தேகமாய் பார்த்துக் கொண்டே வினவ,

 

“இல்லயே… இப்ப தான சாப்பிட்டு வரேன்… கதிரு அங்க தானே இருந்தான்…” என தனா யோசனையாய் வினவ,

 

“அப்படியே ஒரு அப்பு அப்புனா யாரு எங்க இருக்கானு தெரிஞ்சுடும்… அக்னி எங்கடா…” என்றார் கடுப்பாய் அவர்.

 

“அவன எதுக்குனா நீங்க தேடறீங்க…”

 

“ம்ம்ம்… நழுங்கு வச்சு மேடையில அமத்தி வளையல் அடுக்க… யாருடா இவன்… எங்கனு கேட்டா… அத சொல்லாம நீ எதுக்கு தேவையிவ்லாம பேசிட்டு நிக்கற…”

 

“அது அவன் இங்க வரலையே…”

 

“இந்த பக்கம் தான் வந்தானு அந்த மேக்கப் போடற புள்ள சொல்லிட்டு போச்சு…”

 

“அது அது… இங்க தான் வந்தான்… ஆனா இப்ப தான் கமிஷ்னர்கிட்ட இருந்து போன் வந்துச்சுனு வெளிய போய்ட்டான்…”

 

“இவெனுக்கு இதே பொழப்பு… எப்ப பாரு வேல வேலனு… இன்னைக்கு வரட்டும் இருக்கு… சரி நவுரு…” என்றார் அவரை தள்ளிக்கொண்டு.

 

“அண்ணா… ண்ணா.. எங்க போறீங்க…” என்றார் தனா கதவை அடைத்துக் கொண்டு.

 

“டேய்… நவுரு நீ மொதல…”

 

“இல்லண்ணா… அது உள்ளுக்க மிளிரு தான் இருக்கா… வேற யாரும் இல்ல…” என்றார் தனா அவசரமாய்.

 

“அது தெரியாதா எனக்கு… அந்த புள்ளைய தான் பாக்கனும் நவுரு நீ மொதல…”என்றார் அவர் மீசையை திருகிக் கொண்டு தனாவை முறைத்தபடியே.

 

“அது… அது… இப்ப தான் அந்த புள்ள சாப்பிட்டு கொஞ்சம் தூங்குது…. எழுந்ததும் நானே சொல்லிவிடறேன்…”

 

“ஏன்டா டேய்… இப்ப தான் கொஞ்ச முன்னாடி சோத்து தட்ட தூக்கிட்டு அந்த பய உள்ள போறத பாத்துட்டு வரேன் நானு… என்கிட்டையே சப்பகட்டு கட்டறல நீ… வூடு பூரா மனுஷமக்கள வச்சுட்டு என்னடா ரவுசு உங்களுக்கு… அந்த தடிபய செய்யற திருட்டு வேலைக்கெல்லாம் சொம்பு தூக்கறதே நீதான்… இரு விசேஷம் முடியட்டும்… பேசிக்கறேன் உங்கள… இப்ப நா போய் ரெண்டு நிமிஷத்துல அவன் வெளிய வரல… அதுக்கு அப்பறம் இருக்கு உனக்கு…” என்றவர் தனாவை முறைத்துக் கொண்டே சென்று விட்டார்.

 

கதவு படபடவென தட்டப்படும் சத்தத்தில் வேகமாக எழுந்து வந்து கதவை திறந்தவன், “வோவ் சித்தப்பு… இப்ப என்னையா உனக்கு… மனுஷனா ஒரு மேனார்ஸ் வேணும்… புருஷன் பொண்டாட்டி இருக்க ரூம இந்த தட்டு தட்டற… இது என்ன கதவுனு நினைச்சீயா இல்ல தபேலானு நினைச்சுயா…” என்றான் கடுப்பாய்.

 

“நீ சொன்னனு கதவுக்கு காவ இருந்தேன் பாரு… இதுவும் வேணும்… எனக்கு இன்னமும் வேணும்…”

 

“இப்படியே தேவையில்லாம தொனதொனனு பேசிட்டு இருந்த சித்தப்புனு கூட பாக்க மாட்டேன்…”

 

“ஏன்டா டேய்… உனக்கு கல்யாணம் நடக்கனுமுனு உங்க அப்பன் கால வுழுந்து கெஞ்சுன இந்த சித்தப்பன பாத்தாடா இப்படி பேசற…” என அவர் நெஞ்சை பிடிக்க,

 

“நீ என்ன சும்மாவா சித்தப்பு பண்ண… நா உனக்காக லவ் லட்டர் குடுத்தேன்… நீ எனக்காக காலுல விழுந்த… அதுக்கும் இதுக்கும் சரியா போச்சுல…”

 

“ஏன்டா டேய்… பொண்ணுக்கு குடுக்க சொன்ன லட்டர அது அம்மாட்ட குடுத்து எனக்கு நீ செறுப்படி வாங்கி குடுத்ததும் நா உங்கப்பன் கால விழுந்து உனக்கு கல்யாணத்த முடிச்சு வச்சதும் ஒன்னடா…”

 

“அப்போ இல்லம்பியா நீ…”

 

“எல்லாம் என் நேரம்டா… புள்ளைய பெக்க சொன்னா உங்கப்பன் ரெண்டு தொல்லைய பெத்துட்டுருக்கான்…”

 

“சரி சரி… நீ அப்படி ஓரமா போய் நின்னு பொழம்பு… நா இன்னும் என் பொண்டாட்டிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு…” என்றபடியே கதவடைக்க போனவனை, சாற்றவிடாமல் அழுத்தி புடித்துக் கொண்டு நின்றிருந்தார் தனா.

 

“திரும்ப உள்ள போன செறுப்பு பிஞ்சுடும்டா மவெனே… இப்ப தான் நீ உள்ள போனத பாத்துட்டு உங்கப்பன் வந்து எங்கிட்ட ஏறுஏறுனு ஏறிட்டு போறான்…இ னிமே உங்க குடும்பத்த சமாளிக்க எனக்கு தெம்பில்லடா டேய்… ஒரு குடும்பஸ்தன வாழ விடுங்கடா டேய்…” என்றபடியே அவனின் சட்டை காலரைப் பற்றி இழுத்துச் சென்றவரின் இழுப்பிற்கேற்ப இசைந்தவன் கண்களாலேயே தன்னவளிடம் விடைப்பெற்றுக் கொண்டான்.

– தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்