
தேடல் 32:
இருள் விலகி கொஞ்சமாய் மரங்களின் வழியாக ஊடுருவிய கதிரவனின் ஒளிகதிர்கள் மிளிரின் முகத்தை தீண்டி எழுப்ப முயன்றுக் கொண்டிருந்தன. இரவு விடாது பெய்த மழையின் குழுமை இன்னும் கூட மிச்சமிருக்க, மயக்கத்திலிருந்த படியே உறக்கத்திற்கு சென்றாளா அல்லது இன்னுமே மிச்சமிருப்பது மயக்கம் தானா என்று பிரித்தரிய முடியாத தரையில் கிடந்தால் அவள். இடைவிடாது ஒலித்த அந்த சத்தம் மெல்ல இவளை விழிப்பு நிலைக்குக் கொண்டு வருகிறது.
இதுவரை எங்கோ தூரத்தில் கேட்பதாய் நினைத்த கதவு தட்டும் சத்தம் அவள் அறையின் வெளியில் இருந்து தான் கேட்கிறது. வசு வேறு பதற்றமும் பயமும் கலந்த குரலில் இவளை அழைத்த படிதான் விடாது கதவைத் தட்டிக் கொண்டிருந்தார். எப்போதும் கதவை தாழிடும் பழக்கம் இல்லாதவள், மகிக் கொடுத்த ஆதரத்தை பார்க்கும் போது தவறிக்கூட மற்றவர்கள் பார்த்துவிடக் கூடாதே என கதவை உள்புறம் தாழிட்டு இருந்தாள். அது வசுவை இன்னும் பயப்படுத்தி இருந்தது.
மெல்ல எழுந்து அமர்ந்தவள் தலையைப் பற்றியபடி சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்துவிட்டாள். எழுந்துச் சென்று கதவை திறக்க மூளை கட்டளை இட்டாலும் உடலும் மனமும் ஒத்துழைக்க வேண்டுமே? ஒன்றன்பின் ஒன்றாக இரவு நடந்த அத்தனையும் நினைவுக்கு வருகிறது. தவசீலனை இந்த நொடியே துண்டு துண்டாய் வெட்டிப் போட உடலின் ஒவ்வொரு செல்லும் துடிக்கிறது. எத்தனை பெரிய துரோகம். எப்படி தாங்கி இருப்பாள் இதை மகி என்று நினைக்கவே உடலே பற்றி எரிவதைப் போல ஒரு உணர்வு. பொங்கி வரும் கண்ணீருக்கு முயன்று தடை ஒன்றைப் போடுகிறாள் அவள். “கூடாது…! அவனை பழித் தீர்க்கும் வரை நிச்சயம் அழ கூடாது..!” என உள்ளுக்குள் உறுப்போட்டதை உடைத்தெறியும் வண்ணம் சட்டென்னு நினைவடுக்குகளில் வந்து விழுகிறது மாலையும் மலர்ந்த முகமுமாய் நிச்சயத்தன்று நின்றிருந்த மகிழினியின் உருவம். இவள் வெடித்து அழ நினைத்த நொடி, அழைத்து அழைத்துப் பார்த்த வசு பயத்தில் பெருங்குரலெடுத்து நாதரை அழைத்த வண்ணம் அழவே தொடங்கி விட்டார்.
இதற்கு மேலும் அமைதியாய் உள்ளிருப்பது அத்தனை உவப்பானது அல்ல என்று தோன்ற, “ம்மா… எனக்கு ஒன்னுமில்ல… இரு வரேன்…” என முடிந்த மட்டும் வேகமாய் குரல் கொடுத்தபடியே அருகிலிருந்த மேசையை பற்றி எழுந்து நின்றாள் அவள்.
நீண்ட நேரமாக ஒரே மாதிரி விழுந்துக் கிடந்ததாலோ என்னவோ கால்கள் மரத்து அவள் பேச்சை ஏற்க மறுத்தது. மெல்ல காலை உதறியபடியே உந்தி உந்திப் போய் கதவை திறந்தாள் அவள்.
“ஏன்டி அறிவுகெட்டவளே… இந்த கத்து கத்தறேன்… கதவ திறக்க என்னடி கஷ்டம் உனக்கு… ஆமான், கதவ எதுக்கு தாழ்ப்பாள் போட்ட நீ…” என்றார் வசு.
“இப்படி காலங்காத்தாலநிம்மதியா தூங்க கூட விடாம வந்து அண்டங்காக்கா மாதிரி கத்துவனு யார் கண்டா… ஏதோ மறந்தாப்புல தாழ்ப்பாள் போட்டு இருப்பேன்… இப்போ என்ன அதுக்கு…” என்றபடியே கலைந்திருந்த முடியை திருத்தி தூக்கி கொண்டையிட்டாள் அவள்.
“காலங்காத்தாலையா… மணி பத்தாகுது எரும… இன்னும் தூக்கம் ஒன்னுதான் கேடு…” என்றவர் முழுமையாய் இப்போதுதான் மிளிரை பார்க்கிறார்.
“ஐய்யையோ… என்னடி இது..?” என வசுப் பதறிக் கேட்பதற்குள் இறுக வாயைப் பொத்தி அறைக்குள் இழுத்து வந்திருந்தாள் மிளிர்.
“இப்போ எதுக்கும்மா கத்தி ஊர கூட்டற… என்ன எனக்கு நல்லா தான இருக்கேன்…”
“குட்டிம்மா… உண்மைய சொல்லுடா… நைட் உனக்கு மயக்கம் வந்துச்சா… இன்னும் தலைவலிக்குதா… டாக்டர்கிட்டனா போவமா…” என அழவே தொடங்கி இருந்தார் வசு.
“ஐய்யோ அம்மா அப்படியெல்லாம் எதுவுமில்ல… நான் நல்லாதான் இருக்கேன்…” கொஞ்சமே கொஞ்சமாய் எட்டிப் பார்க்கிறது எரிச்சல் மிளிரின் குரலில்.
“அப்பறம் ஏன்டி உனக்கு மூக்குல ரத்தம் வந்து இருக்கு… ரொம்ப ஸ்ட்ரஷ் ஆனா மட்டும் தான அப்படி வரும்னு டாக்டர் சொன்னாங்க… ஏதாவது பிரச்சனையா… எங்ககிட்ட அத மறைக்கறீயா… என்னனு சொல்லு மிளிர்…”
“ஐய்யையோ அம்மா… இப்போ எல்லாம் எனக்கு பழசு கொஞ்சம் கொஞ்சமா நியாபகம் வருதுல… அதனால அப்படி இருக்கலாம்… வேற ஒன்னும் இல்ல…” என அவரை சமாதானப் படுத்த முயன்றாள் மிளிர்.
“இல்ல… நீ ஏதோ மறைக்கற… எனக்கு பயமா இருக்கு… இப்பவே நான் அப்பாக்கிட்ட சொல்லி கூட்டிட்டு வரேன்…”
“ம்மா… இவ்வளவு சொல்லறேன்… புரிஞ்சுக்கோம்மா… எனக்கு ஒன்னுமில்ல… செமையா பசிக்குது வேற… நீ போய் சாப்பாடு எடுத்து வை… நான் இப்போ வந்துடறேன்… அவசரமா வெளிய போகனும் நானு…” என பலவிதமான அவரை சமாதானப் படுத்தி, யாரிடமும் இதை சொல்லக்கூடாது என்று சொல்லியே அனுப்பினாள் மிளிர். ஆனாலும் அவர் முழுதாய் சமாதானம் ஆனதுப் போல் தெரியவில்லை. வழியும் கண்ணீரை துடைத்தபடி திரும்பி திரும்பி இவளைப் பார்த்துக் கொண்டேதான் சென்றார் அவர்.
உள்ளே வந்து தனது கைப்பேசியை பார்க்கவும் தான் தெரிந்தது அக்னியும் இவளை இடைவிடாது அழைத்துக் கொண்டிருப்பது. உண்மையிலுமே இவளுக்கு அழைத்து அழைத்து சோர்ந்துப் போய் இனியனிடம் கேட்க, அவன் தான் தமக்கையை பார்த்துவர சொல்லி தாயை அனுப்பி இருந்தான். அழைப்பை ஏற்று காதில் வைக்கவுமே பொறிய தொடங்கிவிட்டான் அக்னி.
“இதான் மேடம் கடை திறக்க முன்னாடி வர லட்சணமா… எத்தன தடவ கூப்பிடறது… எடுக்காம என்ன பண்ணற நீ…” பட்டாசாய் அவன் வெடிக்க, அனிச்சாய் தோன்றிவிட்ட முறுவலோடு அவன் திட்டி முடிக்க காத்திருந்தாள் அவள்.
ஒரு வழியாக அவன் சுவாசிப்பதற்காக எடுத்துக் கொண்ட இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டவள், “ஹப்பாடி… திட்டி முடிச்சாச்சா… இன்னும் அரை மணி நேரத்துல நான் என் ப்யூட்டி பார்லர்ல இருப்பேன்… அங்கையே வந்துடுங்க நீங்க… வரும்போது யாராவது ஶ்ரீயையும் அழைச்சுட்டு வாங்க… பார்தா போட்டு கூட்டிட்டு வாங்க… முக்கியமா உங்க வண்டி எடுத்துட்டு வராதீங்க…” கட்டளையாய் சொல்லிவிட்டு அவனின் பதிலை எதிர்பாராமலேயே வைத்தும் விட்டாள். பின்னே விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தான் என்றால் என் செய்வது. அங்கே அவனோ போனைக் கொண்டே தலையில் அடித்துக் கொள்கிறான்.
அவசர அவசரமாய் தயாரானவள் அத்தனை ஆதாரங்களையும் எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டாள். வேக வேகமாக கிழே இறங்கி வந்தவள் முதலில் சென்றுப் பார்த்தது இனியனை தான்.
“டேய் கொத்தவரங்கா… சுக வாழ்க்கையாடா… அரியரும் எழுத வேண்டாம்… கடைக்கும் போக வேண்டாம்… சாப்பாடு ஊட்ட ஒரு ஆள்… தண்ணீ குடுக்க ஒரு ஆளுனு… வாழறப் போ…” காலை நீட்டியபடி சோபாவில் அமர்ந்து டிவிப் பார்த்துக் கொண்டிருந்தவனை கிண்டலடித்தடியே இறங்கி வந்தாள் மிளிர்.
“நீ வரனுமுனு சாப்பிடாம கூட வெயிட் பண்ணா… இதுவும் சொல்லுவ… இதுக்கு மேலயும் சொல்லுவ… குட்ட வாத்து… குள்ள கத்திரிக்கா…” என்றான் அவனும் இவளை முறைத்தபடி.
“அறிவே இல்லடா உனக்கு… மாத்திர போடனுமா இல்லையா… நேரத்துக்கு சாப்பிட வேண்டியது தானே நீ…” என்றபடியே வேகமாய் சாப்பாட்டை எடுத்து வந்து ஊட்ட தொடங்கி இருந்தாள் அவனுக்கு. வலது கையிலிருந்த கட்டை பிரிக்க ஒரு மாதம் ஆகும் என்றிருந்தனர்.
“என் பொண்ணும் தான் சாப்பிடாம இருக்கா…” என்றபடியே மிளிருக்கு வசு ஊட்ட தொடங்க, “ம்மா…” என சிணுங்கினாலும் அதை மறுக்கவில்லை மிளிர். ஏனோ மிளிரை அப்படி பார்த்ததிலிருந்தே உள்ளுக்குள் உறுத்தியது வசுமதிக்கு.
ஒரு வழியாக கிண்டலும் சீண்டலுமாக சிரித்தபடியே உண்டு முடிக்க அந்த பாத்திரங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டார் வசுமதி. அவர் செல்வதற்காகவே காத்திருந்தவள் போல, இனியனின் அருகில் அமர்ந்துக் கொண்டவள் ஆதரவாக அவனின் இடதுக்கையைப் பற்றிக் கொண்டாள்.
மெல்ல அவனின் தலையை வருடிக் கொடுத்தவள், “எனக்கு தெரியும்… சூரிய நீ எவ்வளவு லவ் பண்ணறனு… ஆனா, எதுக்காகவும் அவள கட்டாயப் படுத்தாத… நூத்துல ஒன்னா அவ உன்ன புடிக்கலனு சொன்னாக்கூட அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு குடுக்க வேண்டியது உன் பொருப்பு… எப்பவுமே அவ மனசு கஷ்டப்படற மாதிரி சின்னதா கூட எதுவும் பண்ணிடாத… சின்ன வயசுலையே வாழ்க்கையில ரொம்ப அடிபட்டுட்டா அவ… புரியுது தானே…” என்றால் கெஞ்சலாய் மிளிர்.
“புரியுதுக்கா… எந்த விதத்துலையும் நான் சூரிய கஷ்டப்படுத்த மாட்டேன்… ஆனா நீ இருக்கும் போது நான் ஏன் சூரிக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுக்கனும்… என்னை கல்யாணம் பண்ணலைனா நீதானே அவளுக்கு நல்ல பையனா பாக்கனும்…” என்றவன் அவளை கூர்பார்வை பார்க்க,
“நான் இருந்தா பாத்துப்பேன்… இல்லைனா நீ தான் பாத்துக்கனும்… அதான் சொல்லறேன்…”
“அக்கா…” அதிர்ந்து அழைத்தவன் கண்களில் நீரும் திரண்டு ஒரு துளி இமையும் தாண்டி இருந்தது.
வேகமாய் அவன் கண்ணீரை துடைத்தவள், “சில விசயங்கள என்னால சொல்ல முடியல இனியா… அதுவா நடக்கும் போது நீயே தெரிஞ்சுப்பா… எனக்கு எதுவும் ஆகக் கூடாதுனுதான் நானும் நினைக்கறேன்… ஆனா, எனக்கு தெரியல… எது வேணாலும் நடக்கலாம் இல்ல… அப்படி நடந்தா, அப்பாம்மாவ நீ கண்டிப்பா பாத்துப்பனு எனக்கு தெரியும்… ஆனா சூரி… அவளுமே உன் பொறுப்பு தான்…” அவள் சொல்ல சொல்ல பெருகும் கண்ணீரை கட்டிபடுத்த வழிதெரியாது தவித்துப் போனான் அவன். அவன் கண்ணீரைப் பார்த்து அவளுக்கும் தான் கண்ணீர் பெருகுகிறது. ஆனால் அவளாலும் தான் என்ன செய்துவிட முடியும்.
இனியும் எந்நேரம் எவருக்கு என்ன ஆகுமென்று உயிரை கையில் பிடித்தபடி உலாவ அவளால் முடியாது. சீக்கரமே இதற்கு ஒரு முடிவு கட்டியே தீர வேண்டும் என்ற உறுதி அவளிடம்.
வசு வருவதைப் போல தெரியவும் வேகமாய் கண்களை துடைத்துக் கொண்டவள் இனியனின் கண்ணீரையும் துடைத்துவிட்டு சாதரணம் போல் முகத்தை வைத்துக் கொண்டாள். அடுத்த கொஞ்ச நேரத்தில் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் மிளிர், அழகு நிலைத்திற்கு வந்திருக்க அக்னி இன்னும் வரவில்லை.
“ஹப்பாடி… ஒரு வழியா கடைக்கு வந்துட்டீங்களா… இனிமே நீங்களாச்சு உங்க கடைச்சு…” வாசலில் நின்றபடி இப்படிதான் மிளிரை வரவேற்றாள் சூர்யா. அவளுக்கு பதிலேதும் சொல்லாது சின்ன முறுவலை சிந்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் அவள்.
இனியனைப் பார்த்துக் கொள்வதாற்காக எப்படியும் இன்னும் கொஞ்ச நாள் மிளிர் கடைக்கு வர மாட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது போன் செய்து இன்றே வருகிறேன் என்றால் அவளுக்கும் ஆச்சரியம் தானே. தனியாய் இந்த கடையை சமாளிப்பது அவளுக்கு பெரிதாய் இருந்தாலும் மிளிர் இல்லாத வெறுமையும் அவளை தாக்கத்தானே செய்கிறது. இந்த இரண்டு வருடத்தில் அவள் தனித்து பணிப்புரிவது இந்த சில நாட்களாகதான்.
கடையை ஒருமுறை அனைத்தும் சரியாக இருக்கிறதா என மிளிர் சுற்றி வர, அவள் பின்னோடே, “இனியன் எப்படிக்கா இருக்கான்… ஏந்திரிச்சுட்டானா… சாப்பிட்டானா… மாத்திர போட்டானா… யார் சாப்பாடு குடுத்தா… கட்டிலையேவா படுக்க வச்சு இருக்கீங்க… அவனுக்கு கஷ்டமா இருக்காது…” என இடைவிடாது கேட்டபடி வந்தாள் சூர்யா.
மிளிரோ அவளின் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாது தனது இருக்கையில் போய் அமர்ந்துவிட்டாள். கணினியை இயக்கி, அதில் பதிந்திருந்த வரவு செலவு கணக்குகளை சரிப்பார்க்க, “அக்கா… உங்கள தான கேக்கறேன்… எதுக்காவது பதில் சொல்லறீங்களா…” என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சூர்யா குறைக்கூற, இப்போதுதான் கணினி திரையிலிருந்து நிமிர்ந்து அவளைப் பார்கிறாள் மிளிர்.
“இனியன கல்யாணம் பண்ணிக்கறீயா சூரி…” அழுத்தம் திருத்தமாய் வந்து விழுகிறது மிளிரின் வார்த்தைகள். அதை சற்றும் எதிர் பார்க்காத சூர்வோ அதிர்ந்தாள் என்பதைவிட மொத்தமாய் உடைந்துப் போனாள் என்றே சொல்ல வேண்டும்.
“எல்லாம் தெரிஞ்சும் நீங்களே ஏன்க்கா இப்படி சொல்லறீங்க… என் லைப் முடிஞ்சுட்டு… அத இனிம எந்த வகையிலையும் சரிப்பண்ண முடியாது… என்னோட சேர்த்து இனியனோட வாழ்க்கையும் அழிச்சுடாதீங்க…” இப்போது மிளிரை விட அழுத்தம் திருத்தமாய் வருகிறது சூர்யாவின் பதில்.
அவளை ஒரு நிமிடம் ஆழ்ந்துப் பார்த்தவள், “நீ இனியன லவ் பண்ணற சூரி… ஆனா அத ஏன் நீயே ஏத்துக்க மாட்டற…” என்றாள் அவளை ஊடுருவி பார்த்தபடியே.
“காதல்… இந்த வார்த்தைய சொல்லகூட எனக்கு உரிமையில்ல… எந்த சந்தோஷத்த தர முடியுமுனு என்ன இனியன கல்யாணம் பண்ணிக்க சொல்லறேன்… என் கடந்த காலத்தை மறந்துடலானே வச்சுக்கலாம்… ஆனா இப்ப இருக்க பிரச்சனை… தெரிஞ்சும் இனியனோட வாழ்க்கைய அழிக்க சொல்லறீங்களா…”
“எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்வு இருக்கு… உன்னோடது மனசு சம்பந்தபட்டது மட்டும்தான்… இன்னொரு தடவ கல்யாணம் அந்த சூழ்நிலை அத ஏத்துக்க முடியல… சாந்தினி மேம பாரு… கண்டிப்பா இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்…”
“ஏன்க்கா எனக்கு இருக்கற பேர் போதாதா… இப்போ பைத்தியகாரி பட்டமும் சுமக்கனுமா…”
“அப்போ என்ன பைத்தியகாரினு சொல்லறீயா…”
“அக்கா… நான் அப்படி….” அடுத்து என்ன சொல்வது என தெரியாது தடுமாறி நின்றாள் அவள்.
“நானும் தானே சாந்தினி மேம்கிட்ட ட்ரிட்மெண்ட் போறேன்… மனசுதான் முக்கியம் சூர்யா… இதெல்லாம் தான்டி வரனுமுனு நீ நினைக்கனும்… அப்போதான் உன்னால தான்டி வர முடியும்… இன்னும் உன் வாழ்க்கை நீ வாழவே ஆரம்பிக்கல… அதுக்குள்ள முடிச்சுடிச்சுனு ஏன் முடிவு பண்ணற… நீண்டு கிடக்கற வாழ்க்கைய துணையில்லாம வாழ முடியாது சூரி… நீ இனியனதான் கல்யாணம் பண்ணிக்கனுமுனு சொல்ல மாட்டேன்… ஆனா உன் மனசுக்கு புடிச்ச ஒருத்தர கல்யாணம் பண்ணிதான் ஆகனும்…” என்றவள் சூர்யாவையே பார்க்க, அவளோ பதிலெதுவும் சொல்லாது தலையை கவிழ்த்தபடி நின்றிருந்தாள்.
“இதுதான் நான் உன்கிட்ட கடைசியா கேக்கறதுனு கூட நினைச்சுக்கோ சூர்யா… அதுக்காகவாது நீ உனக்குனு ஒரு வாழ்க்கைய அமைச்சுக்க தான் வேணும்…”
“அக்கா… ஏன் இப்படியெல்லாம் பேசறீங்க… நான் கண்டிப்பா என்ன மாத்திக்க ட்ரை பண்ணறேன்…” என சூர்யா சொல்லவும் அக்னி வரவும் சரியாக இருந்தது.
“மேடம்… பெரிய மகாராணி… நீ வானு சொன்னா… நான் வந்திடனுமா…”
“அதான் வந்துட்டீங்களே… இனிமே என்ன…”
“அது… இனிமே இப்படி எல்லாம் கூப்பிடாதனு சொல்ல வந்தேன்…”
“அத போன்லையே சொல்லி இருக்கலாம் தானே…”
“ஹான்… சொல்லி இருக்கலாம் தான்… ஆனா…” என்ன சொல்வதென சில நொடிகள் யோசித்தவன், “நான் உன்கிட்ட முக்கியமா பேசனுமுனு சொன்னேனே… அதான் வந்தேன்…” என்றான் காரணத்தை கண்டுவிட்டேன் என்ற தொனியில்.
‘ஆஹான்… அப்படியா… நம்பிட்டேன்…’என்ற ரீதியில் மிளிர் அவனை பார்த்து வைக்க, பாதி பர்தாவை கழட்டியபடியே வந்த ஶ்ரீ அவளைக் கட்டிக் கொண்டாள்.
“ஹப்பா… இத வேற ஏன்டீ போட்டுட்டு வர சொன்ன… கழட்ட கூட தெரியல எனக்கு…” என்றவளுக்கு, “ம்ம்ம்… உன் அழக பாத்து யாரும் கண்ணு வச்சுட கூடாதுனு தான்…” என்றாள் மிளிர் குறும்பு மின்ன கண்சிமிட்டி.
இப்படியாக சில நிமிடங்கள் அவர்களின் உரையாடல் தொடர, சூர்யாவிடம் ஶ்ரீயை விட்டுவிட்டு, அக்னியுடன் அருகிலிருக்கும் வரவேற்பரையில் தனித்து வந்து அமர்ந்தாள் மிளிர்.
“என்ன யாரோ ப்ளோ பண்ணறாங்கனு தோனுச்சு… அதான் வெளிய எங்கையும் சந்திக்கறது பாதுகாப்பா இருக்காதுனு இங்க வர சொன்னேன்… ஏதோ முக்கியமா பேசனுமுனு சொன்னீங்க… சொல்லுக்க… .” என நேரடியாகவே மிளர் ஆரம்பித்துவிட,
“ரொம்பவே முக்கியமானது தான்… மகி அன்னைக்கு இன்டர்வீயூ எடுக்கப் போனது தேவ்பிரசாத் ங்கறவர…” என்றவன் தொடர்ந்து கவியை சந்தித்தது அவர்களின் உரையாடல் என அத்தனையும் சொல்லி முடித்தான்.
“தெரியும் மித்து… அந்த தேவ் தான் குற்றவாளி… அவனுக்கு துணையா இருந்தது சீலன்…” என தனக்கு கிடைத்த ஆதரம், தேவ் செய்த குற்றம், அதற்கு தவசீலன் அதற்கு உதவியது என அத்தனையும் சொல்லி முடித்தாள் மிளிர்.
“நினைச்சேன்… அப்பவே அந்த சீலன் இதுல எங்கையோ கண்டிப்பா சம்பந்த பட்டிருக்கானு…” கோபத்தில் விழிந்தது வார்த்தைகள்.
“என்னால இப்பவுமே இத நம்ப முடியல மித்து… அவங்க இரண்டு பேரும் எப்படி லவ் பண்ணாங்க தெரியுமா… சீலன்த்தா மகியோட சாவுக்கு முக்கிய காரணமுனே மனசுக்கு ஏத்துக்க முடியல… அப்படி வருவான் மகிய சுத்தி சுத்தி… ஒரு நாள் வீட்டில இருந்தாலும் ஐம்பது போன் பண்ணுவான்… ஏழுந்துட்டியா… சாப்பிட்டீயா… வீட்டுக்கு போன் பண்ணியானு… அவன் போய் மகியோட சாவுக்கு காரணமுனா… சத்தியமா ஏத்துக்க மாட்டேங்குது மனசு…” என்றவளின் கண்களில் கண்ணீர் முத்துக்கள்.
“உங்களுக்கு தெரியுமா ஒரு வருஷம் வரைக்கும் அவனோட லவ்வ மகி அக்சப்டே பண்ணல… அப்படி அழைஞ்சான் அவ பின்னாடி… மகி சரினு சொன்னதும் அவதான் அவனுக்கு எல்லாமே மாதிரி ஏன் ஒரு மகாராணி மாதிரி தான் தாங்குவான்… அவன் போய் மகிய ஏமாத்திட்டான்… மகிக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிட்டானு வேற யார் சொன்னாலுமே நான் நம்பி இருக்கவே மாட்டேன்… ஆனா சொல்லறது என் மகியாவே இருக்கும் போது… நான் எப்படி நம்பாம இருக்கது… என் மகி முதுகுல குத்திட்டான் இல்ல… அவன சும்மாவே விடக்கூடாது…” என்றவள் கண்ணீர் இப்போது கட்டுக்கடங்காமல் அவளையும் மீறி வழிய, தன்னோடு இழுத்து அணைத்து சமாதானப் படுத்ததான் தோன்றுகிறது அவனுக்கும். ஆனால் பார்வையிலேயே தள்ளி நில் என்று எச்சரிப்பவளை எப்படி சமாதானப் படுத்தவாம்…
“ப்ளீஸ் மிளிர்ம்மா… அழாதா…” மேலே சொல்லவந்தவனை தடுப்பதைப் போல வேகமாக கண்களை துடைத்துக் கொண்டவள், “இல்ல… நான் அழ மாட்டேன்… என் மகி சாவுக்கு நியாயம் கிடைக்காம நான் ஆழ மாட்டேன்… அதுக்கு நீங்க தான் எனக்கு ஹேல்ப் பண்ணனும்…” என்றவள் தனது திட்டத்தை சொல்லி முடிக்க, அதிர்ந்துப் போய் அமர்ந்திருந்தான் அவன்.
“இதுல நிறைய ரிஸ்க் இருக்கு மிளிர்… கண்டிப்பா இது வேண்டாம்… நாம இதுக்கு வேற நல்ல சொலியூசன் கண்டு பிடிப்போம்….”
“என்ன தீர்வு கண்டு புடிக்க போறீங்க… இதெல்லாம் ஒரு ஆதராமுனு கொண்டுப்போன… அஞ்சே நிமிஷத்துல அம்புட்டும் பேக்னு எல்லாரையும் நம்ப வச்சுட்டு போய்ட்டே இருப்பான்… அவ்வளவு ஏன் இது அவன் குடோனே இல்லனு சொல்லிடுவான்… அதுக்கு அப்புறமும் நீங்களும் நானும் உயிரோட இருக்க முடியாது…
அதுக்கு நான் சொல்லறத ட்ரை பண்ணி பாக்கலாமே…” என்றவளின் குரலில் இருந்த உறுதி அப்படிதான் செய்ய போகிறேன் தீர்மானமாய் அறிவித்தது.
– தேடல் தொடரும்…
