
அத்தியாயம் -32
அவன் வைத்திருந்த மருந்தை எடுத்து மெதுவாக அவளது பஞ்சுப் போன்ற விரல்களில் தடவிக் கொடுக்கவும் வலியினால் அவள் கைகள் துடித்தது.
அதைப் பார்த்து இதமாக ஊதி விட்டவன் “ஏன் இவ்வளவு நேரமா வேலை பார்க்கிறே? என்கிட்ட சொல்லி இருந்தால் நானும் ஹெல்ப் பண்ணுவேன்ல” என்று தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்து அவளிடம் பேசிக் கொண்டிருந்தான் நிரஞ்சன்.
சிற்பியின் விரல்களை அவன் பிடிக்கவும் அவளுக்கு விழிப்பு வந்திருந்தது.இருந்தாலும் கண்களை திறக்காமல் அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவளின் விரல்களை தடவிக் கொண்டிருந்தவன் “சிற்பி உன்கிட்ட இன்னும் நிறைய பேசணும் போல ஆசையா இருக்கு.ஆனால் எப்பவும் அவசரமா பேசிட்டு ஓடிப் போயிறே.நான் சொல்றதை நீ என்றைக்கு பொறுமையா கேட்பே?” என்று பேசிக் கொண்டே அவளை திரும்பிப் பார்க்கும் போது இமைகளை முழுவதும் திறந்து அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளை அப்படி பார்த்ததும் முகத்தில் புன்னகையை முழுவதுமாய் நிரப்பிக் கொண்டவன் அவளையே ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று அவளது சின்ன நாடியை தன் கரங்களால் பிடித்தவன் தன் விழிகளை மூடியபடி அவள் நெற்றியில் ஆழ்ந்த அழுத்தங்களால் தன் முத்திரையைப் பதித்தான்.
அந்த அழகான லேசான சில்லென்ற முத்தத்தை அவளும் விழிகளை மூடி உடல் சிலிர்க்க ஏற்றுக் கொண்டவளைப் பார்க்கும் பொழுது சொல்லாமல் தன் காதலை ஏற்றுக் கொண்ட பெண்ணவளின் அன்பிலே திகைக்க மனம் கோலாகலமானது.
இதுவரை எங்கிருந்தாய்
இதயமும் உன்னை கேட்கிறதே…
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்…
உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா?
இன்னும் என்னை புரியலையா…?
இருவருரிடமும் ஒரு அமைதி நிறைந்து இருந்தது.
அப்பொழுது படபடவென்று மழை பெய்ய ஆரம்பித்தது.அவனும் அவளும் எழுந்துக் கொள்ள ஓரமாக வைத்திருந்த அந்த பொருட்களை எல்லாம் நிரஞ்சன் எடுத்துக் கொண்டான்.
உடனே சிற்பி “கொடுங்க நிரஞ்சன் நான் தூக்கிட்டு வரேன்” என்றதும் “சீக்கிரமா போகலாம் மழையில் நனைஞ்சிட போற” என்று அவள் சொன்னதுக்கு பதில் சொல்லாமல் அவளை முன்னே போகச் சொல்லி இவன் பின்னாலேயே வந்தான்.
இருவருமாக விடுதிக்குள் வரவும் சிற்பி அதை வாங்கிக் கொள்ள போகவும் நிரஞ்சன் “எங்கே வைக்கனும்னு சொல்லு நான் எடுத்துட்டு வரேன்” என்றான்.
“இவ்வளவு தூரம் தூக்கிட்டு வந்துட்டீங்க போதும்” என்றதற்கு அவனோ எதுவும் சொல்லாமல் முன்னால் நடக்க ஆரம்பித்தான்.
சிற்பி வேறு வழியில்லாமல் பெண்கள் குழுவிற்கான ஒப்பனை அறையைக் காட்டவும் அங்கே வைத்தான்.
சிற்பியிடம் நிரஞ்சன் “சாப்டியா?”
“இல்லை வேலையே சரியா இருந்துச்சு.இனிமேல் தான் சாப்பிடனும்” என்றாள்.
“வா வெளியே போகலாம்” என்று அவன் அழைக்க சிற்பியோ “ரொம்ப லேட்டாயிடுச்சு நிரஞ்சன் வேண்டாம் நாளைக்கு பார்க்கலாம்” என்று சொல்லி விட்டு அவள் தன்னுடைய அறைக்குச் சென்றாள்.அவனால் மறுத்து பேச முடியவில்லை.
அவள் சென்ற இருபது நிமிடங்கள் கழித்து சிற்பியின் அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.கையில் கைப்பேசியை வைத்துக் கொண்டு சிற்பி பயந்தவாறு கதவின் அருகில் வரவும் நிரஞ்சன் அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான்.
“உனக்கு சாப்பாடு ஆர்டர் பண்ணி இருக்கேன் அதை வாங்கி சாப்பிட்டுட்டு தூங்கு” என்று அனுப்பி இருந்தான்.
இவள் லேசாக கதவை திறக்கவும் அங்கே யாரும் இல்லை.கதவு ஓரமாக சாப்பாடு பொட்டலம் இருந்தது.அதை எடுத்தவள் முகர்ந்துப் பார்த்தாள்.வாசனையாக இருந்தது.
முகம் முழுக்க புன்னகையோடு அதை எடுத்தவள் தன் அறையில் வந்து அதை பிரித்துப் பார்த்தாள்.வித்தியாசமாக இருந்தது.
உடனே அவனை கைப்பேசியில் அழைத்தவள் “ஹலோ”
“ம்ம்… சொல்லு சிற்பி”
“இது என்ன சாப்பாடு வெறும் உப்புமாவா இருக்கு இதையா இந்நேரம் ஆர்டர் செய்து கொடுத்தீங்க?” என்று கவலையாகக் கேட்டாள்.
அவனோ சிரித்துக் கொண்டே “சாப்பிட்டியா இல்லையா?”
அவளோ “எனக்கு உப்புமா பிடிக்காது அதை வாங்கிட்டு போய் நீங்களே சாப்பிடுங்க” என்று கவலையாகச் சொன்னாள்.
அவனோ பெரிதாக சிரித்தவன் “இது உப்புமா இல்லை கோவா ஸ்பெஷல் உணவு ரா ப்ரையில் ரவை மற்றும் ரொம்ப மிருதுவான மீனால் செய்யப்பட்டது.நல்லா இருக்கும் சாப்பிட்டு பாரு எனக்காக” என்று அவன் சொன்னதும் ஒரு கவளம் சாப்பிட்டவள் அதனுடைய ருசியில் அவனிடம் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவனோ சிரித்தப்படி “பிடிச்சிருக்கா?”
“ம்ம்…” என்று மட்டும் பதில் தந்தாள்.
“ம்ம்… சரி சாப்பிட்டுட்டு நல்லா தூங்கி ரெஸ்ட் எடு” என்று கைப்பேசியை வைத்தான்.
நிரஞ்சன் அவள் மீதான அன்பும் அக்கறையுமாகக் கொண்ட அவனது காதலை எண்ணி மனமும் வயிறும் நிரம்ப அப்படியே தூங்கிப் போனாள்.
இங்கே அன்பு என்பது எதிர்பாராமல் வருவது தான்.
அதை ஆயிரத்தில் கொட்டித் தீர்க்கும் பரிசுகளை விட சின்னச் சின்ன தேவையான தேவைகளில் நம் அன்பை நிரப்புவதில் இந்தக் காதல் கொட்டிக் கிடக்குது.
மறுநாள் காலையில் எல்லோரும் பயிற்சிக்காக வந்து இருந்தார்கள்.ஆனால் சிற்பி வந்து இருக்கவில்லை.
பெண்கள் குழுவில் உள்ளவள் சிற்பியின் கைப்பேசி எண்ணிற்கு அழைக்க அதுவோ “தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது”
இங்கே நால்வரில் சஹா “இ…இன்னும் சிற்பியைக் காணுமே என்னன்னு போய் பார்க்கலாமா?” என்று கேட்டதற்கு நிரஞ்சன் வேண்டாம் என்பது போல் தலையசைத்தான்.
பெண்கள் குழுவில் உள்ள சுபா இவர்களிடம் “உங்க அசிஸ்டன்ட் எங்கே? ஆளைக் காணோம் வேலை சொல்லிடுவோம்னு பயந்துட்டாங்களா? ”என்று கேலியாகக் கேட்டாள்.
சஹா “தெ…தெரியலை நாங்களும் அவங்களைத் தான் தேடிட்டு இருக்கோம்” என்றான்.
இங்கே பயிற்சி எப்போதும் போல் நடந்துக் கொண்டிருந்தது.அவர்களுக்கு தேவையானவை எல்லாம் சரியான நேரத்தில் வந்து இருந்தன.அதனால் அவர்கள் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தனர்.
காந்தன் மெதுவாக நிரஞ்சனிடம் “சிற்பி எங்கே போய் இருக்கான்னு தெரியுமா?”
“தூங்கிட்டு இருப்பான்னு நினைக்கிறேன் நேத்து அவ தூங்கப் போகும் போது எப்படியும் இரண்டு மணி ஆகி இருக்கும் தொல்லை பண்ண வேண்டாமேன்னு தான் உங்களை அமைதியா இருக்கச் சொல்லிட்டேன்” என்றான்.
இதை கேட்ட பார்த்தி “உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.நிரஞ்சன் அவர்களுக்குள் நடந்த விஷயத்தை தவிர்த்து மற்ற எல்லாவற்றையும் சொன்னான்.
அதைக் கேட்டு சஹா “பாவம் சி…சிற்பி நமக்காக ரெண்டு குரூப்பையும் பார்க்க வேண்டியதாக போச்சு” என்ற பொழுது உள்ளே நுழைந்தாள் சிற்பி.
அவளைப் பார்க்கவே அழகாக இருந்தாள்.எப்போதும் தலையில் எண்ணெய் வைத்து தலைமுடியை பின்னலிட்டு வைத்திருப்பவள் தன்னை விட பெரிதாக சுடிதார் உடை அணிந்து இருப்பாள்.
ஆனால் இன்று குளித்து தலைமுடியை விரித்து விட்டு கச்சிதமான உடையில் பாதி சுடிதாரின் மேல் உடையும் கீழே பாவாடை அணிந்து கழுத்தில் தாவணியை சுற்றிக் கொண்டு வந்து நிற்பவளைப் பார்க்கவும் நிரஞ்சனும் ஒருநொடி அப்படியே அசந்து போனான்.
அவளைப் பார்த்து நிறையவே கோபப்பட்ட பெண்கள் குழு அவளருகில் வந்து “ஹேய் என்ன இவ்வளவு லேட்டா வர்றே? நீ ரெடியாகி லேட்டா வர்ற வரைக்கும் நாங்க உனக்காக வெயிட் பண்ணனுமா?” என்று கேட்டாள் ரேவதி.
அவள் அப்படிக் கேட்கவும் “நீங்க சிற்பியை கேள்விக் கேட்க எந்த உரிமையும் இல்லை” என்று சத்தம் வந்த திசையை பார்க்க அப்பொழுது உள்ளே வந்தாள் சாம்பவி.
அவளைப் பார்த்ததும் எல்லோரும் அமைதியாக இருந்தனர்.ஆண்கள் எல்லோரும் அருகில் வரவும் சாம்பவி சிரித்துக் கொண்டே “சிற்பி என்னோட கம்பெனில தான் வொர்க் பண்றாளே தவிர உங்களுக்காக இல்லை அதனால அவளை தேவையில்லாமல் பேசாதீங்க முதல்ல அவகிட்ட சாரி கேளுங்க”
சுப்ரியா “எதுக்கு?”
“நேத்து சிற்பியை அதுவும் தெரியாத ஊர்ல மிட்நைட் வரைக்கும் உங்களுக்கு தேவையான பொருளை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கீங்க இதெல்லாம் தப்பு நீங்க சாரி கேட்கலைன்னா என்னாகும்னு தெரியும்னு நினைக்கிறேன்” என்றாள்.
உடனே சுபா மற்ற மூவரிடமும் “காம்படிஷன் போயிட்டு இருக்கிற இந்த நேரத்தில் இது சரியா வராதுன்னு நினைக்கிறேன் அதனால சாரி சொல்லி இதோட இதை முடிச்சுக்கலாம்” என்று அவர்களை கொஞ்சம் தள்ளி அழைத்து பேசினாள்.
அவர்களும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ளவும் நால்வரும் சிற்பியிடம் மன்னிப்பு கேட்டு சென்றார்கள்.இதைப் பார்த்து ஆண்கள் நால்வருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
சாம்பவியைப் பார்த்து பார்த்தி “செம என்ட்ரி மேம் சூப்பரா இருந்துச்சு” என்ற போது அங்கே புன்னகை நிரம்பி இருந்தது.
சஹா சிற்பியைப் பார்த்து “புது கெட்டப்பா இருக்கு”
“ம்ம்… நல்லா இருக்கா? சாம்பவி மேம் தான் டிரெஸ் வாங்கி கொடுத்தாங்க” என்று சிறு பிள்ளையைப் போல் பாவாடையைப் பிடித்து ஒரு சுற்றிக் காட்டினாள்.
நிரஞ்சனைப் பார்த்து பார்த்தியும் சஹாவும் சிரிக்க அவனோ முறைத்தான்.
சாம்பவி சிற்பியைப் பார்த்து “ப்ச்… இவங்களை கண்டால் பயமே இல்லை ஏதோ வீட்டில இருக்கிறவங்ககிட்டே போல ரியாக்ஷன் காட்டுறே இன்னைக்கு சபரி வந்துவாங்க” என்றாள்.
சிற்பியோ திருதிருவென்று விழித்தாள்.அவளைப் பார்த்து சிரித்த சாம்பவி “நாளைக்கு ப்ரோகிராம் முடியும் வரை ரொம்ப கவனமா இருக்கனும்” என்றாள்.சிற்பி சரியென்பது போல் தலையசைத்தாள்.
ஆண்கள் குழுவைப் பார்த்து “நிரஞ்சன் பெஸ்ட்டா உங்க ப்ராமன்ஸ் இருக்கும் இருந்தாலும் அதுக்கு மேல இருக்கனும் அப்போத் தான் நமக்கு நல்ல மார்க்ஸ் கிடைக்கும்” என்றாள்.
சிற்பி சாம்பவியுடன் சென்று இருந்தாள்.பயிற்சி இன்னும் மும்மூரமாகச் சென்றுக் கொண்டிருந்தது.கொஞ்ச இடைவேளை நேரத்தில் சிற்பி தன் அம்மாவை வீடியோ அழைப்பில் அழைத்தாள்.
தாமரையும் ஆவலாய் அவளது அழைப்பினை எடுத்தார்.சிற்பி தன் அம்மாவிடம் “அம்மா நான் பார்க்க எப்புடி இருக்கேன்? அழகா இருக்கேனா?” என்று தன்னை மேலும் கீழுமாகக் காட்டினாள்.
அதைப் பார்த்து தாமரை “சிற்பி என்னது இது? டிரெஸ் ஏன் இவ்வளவு இறுக்கமா போட்டு இருக்கே? நல்லாவே இல்லை முடியை ஒழுங்கா பின்னல் போடு ஏன் இப்படி விரிச்சு போட்டு இருக்கே?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
சிற்பியோ திணறிப் போனவளாக “அம்மா இங்கே எல்லோரும் எப்படி இருக்காங்கன்னு பாருங்க” என்று அங்கே சுற்றி வேலையில் இருந்த சில பெண்களையும் பெண்கள் குழுவையும் அதோடு ஆண்கள் குழுவையும் காட்டினாள்.
எல்லோரும் விதவிதமான நவீன உடையில் வித்தியாசமாக இருந்தார்கள்.அவர்களை காட்டி விட்டு சிற்பி “அம்மா பார்த்தீங்கல்ல நான் இதுல ஊர்ல போடுற டிரெஸ்ஸை போட்டால் எல்லோரும் என்னை கிண்டல் பண்ணுறாங்கன்னு எம்.டி மேம் தான் இந்த மாதிரி டிரெஸ் உடலை முழுதாக மறைக்கிற மாதிரி அதே போல கொஞ்சம் மாடலா போடச் சொன்னாங்க” என்று முகம் முழுவதும் கவலையோடு சொன்னாள்.
தாமரையால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
அடுத்து அவர் பேச வருவதற்குள் சிற்பி “அம்மா மேம் கூப்பிடுறாங்க நான் இனிமேல் நாளைக்கு மறுநாள் தான் பேசுவேன் எதாவது அவசரம்னா வாய்ஸ் மெஸேஜ் அனுப்புங்க” என்று அழைப்பை துண்டித்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
+1
+1

