Loading

அத்தியாயம் -3

பதற்றமும் அழுகையுமாக வீட்டை நோக்கி தன் மிதிவண்டியை வேகமாகச் செலுத்தினாள்.

வீட்டிற்கு அருகில் வந்ததும் மிதிவண்டியை ஒழுங்காக நிறுத்தாமல் அப்படியே போட்டு விட்டு வீட்டின்

உள்ளே ஓடிச் சென்றாள்.

வீட்டின் வரவேற்பறையில்  உட்கார்ந்து கனிகா அழுதுக் கொண்டிருந்தாள்.

கனிகாவின் அருகில் சிற்பிகா சென்றதும் தங்கையை கட்டியணைத்து அழுதாள் கனிகா.

சிற்பி மூச்சு வாங்கியபடி “அக்கா என்னவாம் அப்பாக்கு நல்லாத் தானே இருந்தாவோ,அழுவாமல் நடந்ததைச் சொல்லு” என்று பதறியபடி கேட்டாள்.

“ஏலே சிற்பி நான் என்னத்த சொல்ல? அப்பா வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு இருந்துச்சு.அம்மா சாப்பிட்டுட்டு போகச் சொல்லவும் சரின்னு சாப்பிட உட்கார்ந்தாங்களா நெஞ்சுல கை  வைச்சு தாமரை நெஞ்சு லேசா எரியுது எதாவது கொடுன்னு சொன்னாங்க அம்மா வாயுவா இருக்கும்னு எங்கிட்ட பூண்டுப்பால் காய்ச்ச சொல்லிச்சு நானும் அதை காய்ச்சத்  தான்  போனேன் அதுக்குள்ள அப்பா அப்படியே மயங்கிட்டு சிற்பி” என்று அழத் தொடங்கினாள்.

“சரி அக்கா அடுத்து அம்மா இப்போ எந்த ஆஸ்பிட்டல் கூடிட்டு போய் இருக்கு?”

“தெரியலையே அம்மா என்னச் செய்யன்னு தெரியாமல் பக்கத்து வீட்டு அக்காவும் அந்த அண்ணணும் வந்து தான் உடனே துணைக்கு போய் இருக்காங்க”

“அப்படியா! சித்தப்பாக்கு போன் போட்டு சொன்னியா?” என்று யோசனையாகக் கேட்டாள்.

இல்லை என்று தலையசைத்தாள் கனிகா.

கனிகாவின் கைப்பேசியிலிருந்து முதலில் பக்கத்து வீட்டு அக்காவிற்கு அழைத்தாள்  சிற்பி.

கனிகாவின் எண் என்றதும் அழைப்பை எடுத்தவர் “ஹலோ”என்றார்.

“ஹலோ அக்கா நான் சிற்பி பேசுறேன்.அப்பாவை ஆஸ்பிட்டல் கூடிட்டு போய்ட்டீங்களா? இப்போ எப்படி இருக்காவோ? கண்ணை திறந்து எதாவது பேசினாங்களா?” என்று இவள் அடுத்தடுத்த கேள்வியைக் கேட்டாள்.

பக்கத்தில் வீட்டு அக்கா “எலே சிற்பி நிப்பாட்டு என்ன இத்தனை கேள்வியை ஒரே நேரத்துல கேட்கிற? அப்பாவை நம்ம ஊர் டவுண் நாகர்கோவில் ஆஸ்பிட்டல்ல சேர்த்து இருக்கு என்னன்னு டாக்டரு உள்ளே பார்த்துட்டு இருக்காவோ வந்து நேர்ல சொன்னால் தான் எங்களுக்கே தெரியும்” என்றார்.

அதைக் கேட்டதும் சிற்பிக்கு இன்னும் கவலையாகி விட்டது. “அம்மா” என்று இடை நிறுத்தினாள்.

“அம்மா என்ன அழுதுகிட்டே கண்ணீரை துடைச்சு நிக்கிறாங்க.அடுத்து என்னப் பண்ணனும்னு உங்கிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லைன்னு நினைக்கேன்”

“ம்ம்ம்… புரியுது அக்கா நான் பார்த்துக்கிறேன்”என்று கைப்பேசியை வைத்தாள் சிற்பி.

அவள் பேசி முடித்ததும் கனிகா “என்னச் சொன்னாங்க?”

“அப்பாவை இன்னும் செக் பண்ணிட்டு தான் இருக்காங்க.அடுத்து எதாவது பணம் கட்டச் சொல்வாங்க போல இருக்கு அதைத் தான் அக்கா மறைச்சு சொல்றாப்புல வாலே அக்கா ஆஸ்பிட்டல் போலாம்”

“என்ன நானா?நான் இப்போ வந்தால் ஏதும் பிரச்சினை ஆவாதா?” என்று கனிகா பயந்து போய் கேட்டாள்.

“அது உண்மை தான்.ஆனால் அப்பாவை பார்க்க நினைப்பில்லையோ”

“இருக்கு இருக்கு”

“அப்போ வாலே போலாம்.போவதுக்கு முன்னால சித்தப்பாக்கு போன் போட்டு சொல்லிட்டு போகலாம்,எதாவது பேசனும்னா அம்மாவால முடியாது சித்தப்பா எதும் யோசனைக் கொடுப்பாங்க” என்று அப்பாவின் தமையனுக்கு கைப்பேசியில் அழைத்து அவரையும் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்து விட்டுச் சென்றாள்.

அலமாரியில் இருந்த பணத்தில் தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர் இருவரும்.

மருத்துவமனையின் உள்ளே வரவேற்பறையில்  அம்மாவும் அவர்களோடு வந்தவர்களும் உட்கார்ந்து இருந்தனர்.

இவர்கள் இருவரும் உள்ளே நுழையவும் மருத்துவர் ஒருவர் அம்மாவின் அருகில் வந்து நின்றார்.

இதைக் கண்டதும் சிற்பி கொஞ்சம் வேகமாய் சென்று அம்மாவின் அருகில் போய் நின்றுக் கொண்டாள்.

சிற்பி வந்ததை எல்லாம் அவர் கவனிக்கவில்லை.மருத்துவர் வரவும் அவருக்கு அருகில் சென்று என்னவென்று அறிவதற்காக வேகமாய் சென்றாள்.

வந்த மருத்துவர் “நீங்க தான் அருள்மணியோட சொந்தக்காரங்களா?”

“ஆமாம் நான் தான் டாக்டர்”

“நீங்க என்ன உறவு?”

“நான் அவங்களோட மனைவி”

“வேற யாரும் வரலையா?”

“நாங்க வந்து இருக்கோம் டாக்டர் எங்க அப்பா தான் அவங்க” என்று பதிலுரைத்தாள் சிற்பி.

“அப்படியா! சரி அப்போ நான் உங்ககிட்டயே விஷயத்தை சொல்லிடுறேன்.அருள்மணிக்கு இது முதல் ஹார்ட் அட்டாக்” என்று அவர் பேசி முடிக்கும் முன்னே தாமரை வாயை பொத்தி அழத் தொடங்கினார்.

சிற்பி அம்மாவின் தோளை இறுக்க பிடித்தவாறு விழிகளில் கண்ணீரோடு  நின்றுக் கொண்டு மருத்துவரைப் பார்த்தாள்.

அவர் பேசுவதை தொடர்ந்தார்.”அதோட இதயத்துல லேசா அடைப்பு இருக்கு அதனால ஆஞ்சியோ பண்ணி ஆகனும் ஆனால் இப்போ இல்லை ஒரு இரண்டு வாரம் கழிச்சு தான் ஆப்ரேசன் பண்ண முடியும் ஏன்னா இப்போ தானே அட்டாக் வந்து இருக்கு.அதனால இதயம் ரொம்ப பலகீனமாக இருக்கு ப்ளட் ப்ரஷர் அதிகமா காட்டுது ஒரு ரெண்டு நாள் முழு ரெஸ்ட்ல தான் இருக்கனும் அப்புறம் அடுத்த

டிரீட்மெண்ட் ஆஞ்சியோ பண்ண பிறகு ஹெவி வொர்க் எதுவும் இருக்கக் கூடாது” என்று அருள்மணியின் உடல்நிலையைப் பற்றி முழுமையாக விளக்கமாக சொன்னார் மருத்துவர்.

அதைக் கேட்டு ஒன்றும் புரியாமல் எல்லாவற்றிருக்கும் ஒரு சிறு தலையசைப்பை மட்டும் பதிலாகத் தந்தனர் தாயும் மகளும்.

மருத்துவர் சென்றதும் தாமரை அப்படியே உடைந்து போய் உட்கார்ந்து விட்டார்.அப்பொழுது சித்தப்பா அங்கே வந்தார்.

அவரைக் கண்டதும் பக்கத்து வீட்டு அக்காவும் அவருடைய கணவரும் இரண்டு வார்த்தை ஆறுதலாய் பேசி விட்டு நகரும் பொழுது சிற்பி பக்கத்து வீட்டு அக்காவின் கையைப் பிடித்து “ரொம்ப நன்றிக்கா நீங்க மட்டும் இந்த உதவியை செய்யலைன்னா எங்க அப்பாவோட நிலைமை என்னவாகி இருக்கும்னே தெரியாது திரும்பவும் நன்றிக்கா” என்று அவள் நன்றியோடு பேசினாள்.

அதைக் கேட்ட இருவரும் “இருக்கட்டும்மா அக்கம் பக்கம் எதுக்கு இருக்கோம்? ஒருத்தருக்கு எதாவது கஷ்டம் என்றால் இன்னொருத்தவங்க உதவத் தானே அதனால நன்றி அவசியமே இல்லை தைரியமாக இருங்க” என்று அவரும் சொல்லி விட்டு சென்றனர்.

கனிகாவை அம்மாவின் அருகில் உட்கார வைத்து விட்டு சித்தப்பா தனியாக அழைத்து நடந்த விவரங்கள் அனைத்தையும் சொன்னாள் சிற்பி.

இதைக் கேட்ட சிற்பியின் சித்தப்பா  மருத்துவரை சந்தித்து எல்லாவற்றையும் முழுவதுமாய் கேட்டறியலாம் என்று இருவரும் மருத்துவரை பார்க்க திரும்பச் சென்றனர்.

அவரைக் கண்டபிறகு அருள்மணியின் நிலைமையைப் பற்றி  இன்னும் விளக்கமாகச் சொன்னார் மருத்துவர்.

அதாவது இனிமேல் தன் வாழ்நாள் முழுவதும் அவர் உடல்நிலையை பாதுகாக்கவும்,ஓய்விலேயே தன் வாழ்வை கழிக்க வேண்டும். அப்பொழுது தான் இனி அடுத்த ஹார்ட் அட்டாக் வராது என்று சொன்னார்.

எல்லாவற்றையும் கேட்டு விட்டு ஒன்றும் பேச முடியாமல் அமைதியாக இருந்தனர் இருவரும்.

அருள்மணியின் தம்பி தான் நம்பி.அவர் தன் அண்ணனை விட பொருளாதார வசதியில் பின் தங்கி உள்ளவர்.அதனால் அவராலும் எந்த விதமான முடிவும் தன்னிச்சையாய் எடுக்க முடியாது.அதனால் அவர் சிற்பியைப் பார்த்தார். சிற்பி மருத்துவரிடம் தயக்கத்தோடு “டாக்டர் அக்காவுக்கு அடுத்த வாரம் கல்யாணம் அதனால இன்னும் ஒரு வாரம் கழிச்சு ஆப்ரேசன் பண்ணலாமா?” என்று தயக்கத்தோடு கேட்டாள்.

அவள் கேட்டதிலேயே நிலைமயைப் புரிந்துக் கொண்ட மருத்துவர் “சரி இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணலாம். அதுக்கு அப்புறம் இன்னும் டைம் கேட்கக் கூடாது, ஏன்னா இது உடல்நிலை சம்பந்தப்பட்ட விஷயம் கவனம் இல்லாமல் இருக்க வேண்டாம்” என்று அவர் தன்னுடைய அறிவுரையை அவர்களுக்கு வழங்கினார்.

மருத்துவரிடம் பேசி விட்டு வெளியே வந்ததும் நம்பி சிற்பியிடம் “என்னம்மா செய்யப் போறீங்க? எனக்கு ஒன்னுமே புரியலை நான் ஒரு தம்பியா இருந்தும் அண்ணனுக்கு என்னால உடம்பால தவிர்த்து பணத்தால எந்த உதவியும் செய்ய முடியலைன்னு நினைக்கும் போது ரொம்ப கவலையாகவும் வெட்கமாகவும்  இருக்கு” என்று அவர் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார்.

சித்தப்பாவின் கைகளைப் பிடித்து ஆறுதலாய் பற்றிக் கொண்டவள் “சித்தப்பா ஏன் இப்படி பேசுறீங்க? நீங்க எங்களுக்கு உதவி செய்யனும்னு தான் கட்டாயம் கிடையாது உறுதுணையாக இருக்கீங்கல்ல அதுவே போதும்” என்று அன்பாய் சொன்னாள்.

“எல்லாம் சரிதான் ஆனால் அண்ணன் கனிகா கல்யாணத்துக்காக வாங்கின ஐந்து லட்சம் பணத்தை எப்படி திரும்ப கொடுக்கப் போறோம்? அதோட… என்று அவர் பேச்சை நிறுத்தினார்.

“புரியுது சித்தப்பா கவலைப்படாதீங்க நான் இருக்கேன்ல அப்பாக்கூட இருந்து பார்த்துக்கிறேன்”என்று அவள் நம்பிக்கையாய் சொன்னாள்.

நம்பி “என்னம்மா சொல்ற உன்னால எப்படி பணத்தை திரும்ப கொடுக்க உதவி செய்ய முடியும்?” என்று யோசனையாகக் கேட்டார்.

“சித்தப்பா நான் படிச்சு இருக்கேன்ல என்னால ஒரு வேலைக்கு போக முடியும் அந்த பணத்தை வைச்சுக் கூட அப்பாக்கு உதவி பண்ண முடியும்ல” என்று உறுதியாகச் சொன்னாள்.

“ஆனால் எல்லாம் பிறவு பார்த்துக்கலாம்.முதல்ல அண்ணியை  பார்த்து விஷயத்தை பேசலாம்” என்று அவர் தாமரை இருக்குமிடம் சென்றனர் இருவரும்

தாமரையைப் பார்த்து மருத்துவரிடம் பேசியதைச் சொன்னார்.எல்லாவற்றிருக்கும் தாமரை சிறு தலையசைப்பை மட்டுமே பதிலாகத் தந்தார்.

நம்பி அதோடு “அண்ணி அண்ணன்கிட்ட இப்பொதைக்கு எதுவும் சொல்ல வேண்டாம் நாளைக்கு வீட்டுக்கு போன பிறகு பொறுமையா பேசலாம்” என்றார்.

அதுக்கும் தாமரை தலையசைப்பை மட்டும் பதிலாய் தந்தார்.மருத்துவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தவருக்கு எதுவும் பேச முடியாமல் போனது.

இதுவரை சிறிதும் சிரமம் இல்லாமல் சென்ற வாழ்வில் கனிகாவின் கல்யாண செலவிற்காகத் தான் முதன்முதலாக கடன் வாங்கவே செய்தார்கள்.

இதில் கல்யாணம் முடிவதற்கு முன்னே இப்படி உடல்நிலை முடியாமல் போக அதுவும் அடுத்த பொறுப்புகளைப் பார்க்க ஆண் பிள்ளையும் இல்லை.இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து எதுவும் செய்ய முடியாது என்ற பல யோசனைகளின் விளைவே இப்பொழுது தாமரையின் மனதை போட்டு குழப்ப பதில் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

சிற்பி மருத்துவனையின் வரவேற்பறைக்குச் சென்று கட்ட வேண்டிய பணத்தைக் கட்டச் சென்றாள்.

பெங்களூரில் பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் அவர்கள் நால்வரின் விடியலும் இனிமையாய் எப்பொழுதும் போல் குதூகலமாய் விடிந்தது.தினமும்  எழுந்துக் கொள்ளும் நேரத்தை விட இன்று இன்னும் தாமதமான நேரம் சென்று எழுந்தனர்.

அவர்கள் நிகழ்ச்சி  எல்லாம் முடித்து நால்வரும்  பிளாட்டிற்கு வரவே நள்ளிரவை தாண்டி விட்டதால் நேரமாகி விட்டது.

முதலில் எப்பொழுதும் எழுந்துக் கொள்வது நிரஞ்சன் தான்.அவன் எழுந்துக் கொண்டு அவர்கள் நால்வருக்கும் தேவையான காலை உணவை தயார் செய்துக் கொண்டிருந்தான்.

அடுத்து வந்த காந்தன் அவர்கள் சாப்பிடும் மேசையில் நின்று எல்லாவற்றையும் முறையாய் அடுக்கி நிரஞ்சன் செய்த பிரெட் டோஸ்ட்டை டேபிளில் வைத்து விட்டு ஆரஞ்சு பழச்சாற்றை  மிக்ஸரில் அரைத்துக் கொண்டிருந்தான்.


தொடரும்…

Click on a star to rate it!

Rating 4 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

6 Comments

  1. இதுல 5 ஸ்டார் போடுமுன் மூச்சு முட்டிடும் போலிருக்கு

    ஏம்மா ரைட்டரே, அந்த பெண்ணை சந்தோசமா காண்பித்து இப்படி மருத்துவமனையில் கொண்டு வந்து அமர வைத்து இருக்கிறீர்களே, இது உங்களுக்கே நல்லா இருக்கா…

    ஒவ்வொரு எபியிலும் ஒவ்வொரு விதமான கேள்விகள்.
    யூகங்கள்….

    கனிகாவின் திருமணம் குறித்த தேதியில் நடக்குமா?

    குடும்பத்தை காக்க அவள் தங்கை என்ன செய்ய போகிறாள் ?

    ஐந்து ஆண்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள ஆவல்.

    1. Author

      ஏன் ஸ்டார் போட முடியலைன்னு தெரியலையே வாழ்க்கைன்னா இன்பம் துன்பம் ரெண்டும் இருக்கும்ல அதான் நன்றிகள் 😍

  2. ரெண்டு பேரும் வேற வேற இடத்துல இருக்காங்க … எப்போ சந்திக்க போறாங்க … சேர போறாங்களோ

    1. Author

      அங்கே தானே கதையே இருக்கு மனமார்ந்த நன்றிகள் 😇😍😍😍