Loading

அத்தியாயம் -29

சிற்பி சொன்ன  எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டவன் கடைசியில் “முதல்ல நீ என்ன முடிவு பண்ணி இருக்கன்னு சொல்லு சிற்பி?” என்று கேட்டான்.

அவன் கேட்ட கேள்வியில்  சிற்பி திருதிருவென்று விழித்தாள்.அவளைப் பார்த்து “முதல்ல பதில் சொல்லு நீ என்ன நினைச்சு இருக்கே”

அவளோ “தெரியலை நீ தான் எனக்கு  முடிவு சொல்லனும்?” என்று ஒரே வார்தையில் முடித்தாள்.அவனோ அவளைப் பார்த்து “இப்படி சொன்னால் நான் என்னன்னு பதில் சொல்ல முடியும் சிற்பி? உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையான்னு எனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.

அவளோ தலையை கவிழ்த்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.செழியன் அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது அமைதியைப் பார்த்து சிற்பி “செழியன் எதுவும் பேசாமல் ஏன் இப்படி அமைதியாக இருக்கே?எனக்கு ஒரு பதில சொல்லு” என்று சிறு பிள்ளை போல் அவனை தான் கேட்டாள்.

செழியன் “பிடிச்சிருக்குன்னு சொல்லு” என்றான்.அதைக்கேட்டு அதிர்ச்சியானவள் “என்ன இப்படி சொல்றே? நிரஞ்சன் என்னை தப்பா நினைக்க மாட்டானா?” என்று வேகமாகக் கேட்டாள்.

அவனோ “உன் மனசுல உள்ளதைத் தான் சொன்னேன்” என்றான்.சிற்பி செழியனைப் பார்க்க “உனக்கு பிடிக்கலைன்னா உன்கிட்டே நிரஞ்சன்  பேச ஆரம்பித்திருக்கும் பொழுதே நீ அதை அவாய்ட் பண்ணி இருப்பே சிற்பி இல்லைன்னா முகத்திற்கு நேராக பேசி இருப்பே.அவனை பிடிச்சிருக்க போய் தானே அவன் பேசிய பொழுதெல்லாம் மணிக்கணக்கில் அவன்கிட்டே பேசி இருக்க மாட்டே சிற்பி உனக்கு ஒரு விஷயம் தேவையில்லை  பிடிக்கலைன்னா அதை எப்படியாவது தடுத்து இருப்பே  எல்லாத்தையும் நீயே முடிவு செய்துட்டு  இப்போ நான் சொன்னால் தான்னு  சொல்லாதே இதெல்லாம் உன்னை நீயே ஏமாத்துறக்கான வழி” என்று அவள் மனதில் உள்ள விஷயகளை சொன்னவன்  “உன்னை பிறந்ததில் இருந்து பார்க்கிறேன் சிற்பி நீ எப்படி இருப்பேன்னு எனக்குத் தெரியாதா?” என்று கேட்டான்.

செழியன் கேட்ட கேள்வியினால்

சிற்பியால் ஒன்றும் பேச முடியவில்லை.செழியன்  “சீக்கிரம் சாப்பிட்டு விட்டு  வீட்டுக்கு போகலாம்” என்றான்.சாப்பிட்டு முடிக்கும் வரை அவள் யோசனையில் இருந்தாள்.இருவரும் வீட்டிற்கு வந்தனர்.அவளது அறையில் போய் படுத்த சிற்பி நிதானமாக யோசிக்க ஆரம்பித்தாள்.

நிரஞ்சன் அவளை கொஞ்சம் தள்ளி வைக்கவும் அவன் மீதான ஈடுபாடு கொஞ்சம் அதிகமானது.அதோடு அவன் மற்ற மூவரைப் போல் இல்லாமல் எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி,அக்கறையாக இருப்பான்.

அவனோடு இருக்க ஆரம்பித்ததில் இருந்து நிறைய விஷயங்களை அவள்  கற்றுக் கொண்டிருக்கிறாள்.

அதனாலயே அவன் என்ன செய்துக் கொண்டிருக்கிறான்? என்று அவளுடைய எண்ணங்கள் அவனைச் சுற்றி தான் இருந்திருக்கிறது என்று புரிந்தது.இருந்தாலும் நிரஞ்சன் தன் காதலைச் சொல்லவும் ஒருவிதமான படபடப்பு, கவலை,வருத்தம் எல்லாம் சேரவும் என்னச் செய்கிறோம்? என்று தெரியாமல் செய்ததது என்று அப்பொழுது தான் அவளுக்கே புரிந்தது.

இங்கே வீட்டுக்கு வந்ததும் நால்வரும்  நிரஞ்சனிடம் பார்த்தியும் சஹாவும் “உனக்கு சிற்பிக்கும்  என்ன பிரச்சனை? ஏன் அவள்   கடையில் இருந்து போயிட்டா? இப்ப எங்க இருக்காள்?” என்று அடுத்தடுத்து கேள்வியைக்  கேட்டனர்.

நிரஞ்சன் இருவரையும் பார்த்து “எனக்கும் சிற்பிக்கும் சின்னதா ஒரு மிஸ்அண்டர் ஸ்டான்டிங் அதான் அவ கோபத்துல அங்கிருந்து போயிட்டா, நான்  அவளை சமதானம்   செய்து சாரி சொல்லி வீட்டுல விட்டுட்டேன். இனிமேல் இந்த மாதிரி                               நடக்காமல் பார்த்துக்கிறேன்.

அதோடு இதைப் பத்தி சிற்பிகிட்ட கேட்டு அவளை மறுபடி வருத்தப்ட வைக்காதீங்க” என்று சொல்லி விட்டு தன் அறையில் போய் அடைந்துக் கொண்டான்.காந்தனும் அங்கேத் தான் நின்றுக் கொண்டிருந்தான்.

மூவரும் அவர்களுடைய அறைக்குச் சென்று இருந்தனர்.இரவு உணவுக்கும் நிரஞ்சன் வெளியே வரவில்லை.அதனால் காந்தன் கையில் ஒரு பழச்சாற்றை எடுத்துக் கொண்டு நிரஞ்சனின் அறைக்குச் சென்றான்.

எப்போதும் உடை மாற்றி படுத்துக் கொண்டிருப்பவன் இப்போது அப்படியே படுத்து இருந்தான்.அவனைப் பார்த்து காந்தன் “நிரஞ்சா இந்த ஜீஸை குடிச்சிட்டு தூங்கு”

“எனக்கு ஒன்னும் வேண்டாம்”

“ஏன் உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டாளா?” என்று கேட்கவும் அதுவரை விழிகளை மூடி படுத்து இருந்தவன் அவன் கேட்ட கேள்வியில் எழுந்து உட்கார்ந்தவன் அதிர்ச்சியாக “ஹேய் நான்  பேசினதை எல்லாம் கேட்டுட்டியா?” என்று கேட்க அவனும் ஆமாம் என்பது போல் மேலும் கீழுமாக தலையசைத்தான்.

அதைப் பார்த்து நிரஞ்சன் தலையை குனிந்துக் கொண்டு “ரொம்ப வலிக்குதுடா என்னை பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னோ நேரா சொல்லலாம்ல அதை விட்டுட்டு நான் ஏதோ கொலை குற்றம் பண்ண மாதிரி முறைச்சுகிட்டே இருக்கா” என்று தன் நண்பன் மேல் சாய்ந்துக் கொண்டான்.

அவனோ சிரித்துக் கொண்டே “உனக்கு இன்னும் வாய்ப்பு நிரஞ்சா வெயிட் பண்ணு” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

அதைக்கேட்டு நிரஞ்சன் “என்னச் சொல்ற காந்தா? வாய்ப்பு இருக்கா அதான் சிற்பி மாமன் பையை கையைப் பிடிச்சு இழுத்துட்டு உள்ளே போனாள். நான் அதை நேரிலேயே பார்த்தேன்” என்று அவன் நடந்ததை எல்லாம் சொன்னான்.

அதைக் கேட்டு காந்தன் “அப்படின்னா செழியனை பிடிக்கும்னு உன்கிட்ட சொல்ல வேண்டியது தானே” என்றதும் நிரஞ்சன் “அதானே” என்று சொல்லி சிரித்தான்.

காந்தன் “சிற்பி ரொம்ப சின்னப் பொண்ணு அதோடு கிராமத்துல வளர்ந்தவ என்னத் தான் அவ படபடன்னு பேசினாலும் பொண்ணுல்ல சட்டுன்னு பதில் வராது கொஞ்சம் வெயிட் பண்ணு பார்க்கலாம்” என்று நிரஞ்சனுக்கு நம்பிக்கை தந்தான்.

காந்தன் சொன்னதைக் கேட்டு கட்டிக் கொண்ட நிரஞ்சன் “ரொம்ப தாங்ஸ் மச்சான் எனக்கு சிற்பியை முதல் தடவை பார்த்த உடனே ரொம்ப பிடிச்சிருச்சு.என்னன்னு தெரியலை  இருந்தாலும் மனசுக்குள்ளே ஒரு பயம் திரும்ப ஏமாந்துடுவேன் ஆனால் எல்லா விஷயத்தையும் அவ ஹேண்ட்டில் பண்ற விதம் சிரிப்பா இருந்தாலும் பெஸ்ட்டா பண்ணுவா அன்னைக்கு அந்த ராக் என் மேல விழக்கூடாதுன்னு பண்ணப் பாரு மொத்தமா அப்படியே விழுந்துட்டேன்” என்றான்.

நிரஞ்சனின் பேச்சைக் கேட்டு சிரித்தான் காந்தன். “ஏன்டா என்னை பார்த்து சிரிக்கிறே?” என்று கேட்கவும் காந்தன் “அப்படியே! ஐந்து வருஷம் பின்னாலே போய் என் பழைய நிரஞ்சனை பார்க்கிற பீல் ஆகுது எப்படியோ இனிமேலாவது நீ சந்தோஷமா இரு நிரஞ்சா எனக்கு அது போதும்” என்று உண்மையான அன்போடு சொன்னான்.

நிரஞ்சனுக்கு  பெற்றவர்கள் என்று யாரும் இல்லை.காந்தனின் அப்பாத் தான் நிரஞ்சனை தன் தோழனின் மகன் என்று வீட்டுக்கு அழைத்து வந்தார்.அதிலிருந்து இருவரும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உடன்பிறவாத சகோதரர்கள் ஒன்றாகத் தான் இருந்தார்கள்.

காந்தனுக்கு எல்லாம் கிடைத்தது.ஆனால் நிரஞ்சனுக்கு அப்படி இல்லை. எல்லாமே ஒருவித தனிமையில் தான் இருப்பான்.அவர்களோடு இருந்தாலும் ஒரு ஒதுக்கம் இருக்கும்.அதில் அவனைப் பற்றி எல்லாம் தெரிந்து விரும்பிய யாழினியை அவன் உண்மையாகவே நேசித்தான்.

ஆனால் அவள் வந்த மாறுதலுக்கு பிறகு இவர்கள் மூன்று பேர் இனி இவனின் குடும்பம்,அன்பு,துக்கம் எல்லாமே என இருந்தவனுக்கு இப்போது சிற்பியின் மீதான காதலை காந்தனால் மறுக்க முடியவில்லை.

காரணம் வாழ்க்கை அவனுக்கு இன்னொரு வாய்ப்பை வழங்க காத்திருக்கும் தருணத்தை கெடுக்க விரும்பாத காந்தன்.தனக்கான காதலை அப்படியே தனக்குள்ளே ஒளித்து வைத்தான்.

சிற்பியை தோழியாக பார்த்து பழக ஆரம்பித்தவனுக்கு பழகப் பழக அவளை பிடிக்க ஆரம்பித்து இருந்தது.ஆனால் அதை வெளிக்காட்டாதவன் தன்னுடைய பேச்சுக்களாலும் செயல்களாலும் அவளிடம் நல்லமுறையில் நடந்துக் கொண்டான்.

சிற்பியிடம் போட்டி முடிந்து பேசலாம் என்று நினைத்து இருந்தவனுக்கு நிரஞ்சன் கொஞ்சம் முன்னாடியே தன் விருப்பத்தைச் சொல்லி இருந்தான்.காந்தன் அமைதியாக இருந்தான்.

மறுநாள் காலையில் சாம்பவியின் அலுவலகத்தில் இருந்து சிற்பிக்கு கைப்பேசியில் அழைப்பு வந்தது.இன்னும் ஒரு வாரத்தில் அவர்கள் கோவாவிற்கு செல்ல வேண்டி இருந்தது.

அங்கே தான்  சங்கீத மேளாவுடைய குழுவினரும் மற்ற வேறு சில போட்டியாளர்களின் நேரடி பாடல் கச்சேரியும் பின்பும் போட்டியும் இருப்பதால் அதற்கான வேலைகள் முன்னேற்பாடுகள் அவர்களோடு மற்ற குழுக்களோடு சேர்ந்து பாட வேண்டிய விவரங்கள் எல்லாம் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு சிற்பிகாவிற்கு இருந்தது.

அதனால் சபரியுடன் அவள் வெளியே செல்ல வேண்டி இருந்தது.சாம்பவி ஏதோ முக்கியமான வேலைக்காக அவள் வெளிநாட்டிற்கு கிளம்பி இருந்தாள்.அதனால் இவை எல்லாவற்றையும் இப்போது இவர்களின் பொறுப்பாக மாறியது.

அதனால் சிற்பி தன்னுடைய கைப்பேசி, கைப்பை போன்றவற்றை செழியன் மூலமாக வாங்கிக் கொண்டாள்.அவள் வரமாட்டாள் என்ற விவரத்தை நிரஞ்சனை அழைப்பில் அழைத்து பேசி இருந்தார் சபரி.

இன்னும் ஒருவாரம் இருப்பதால் இங்கே நால்வரும் பயிற்சியில் மும்மூரமாக இருந்தனர்.நிரஞ்சன் ஒவ்வொரு இரவும் தன் கையில் கைப்பேசியை வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் சிற்பி கைப்பேசியில் அழைக்கவில்லை.மற்ற மூவரும் பொதுவாக அவளிடம் எப்போதும் போல் பேசி நலம் விசாரித்துக் கொண்டனர்.

சிற்பியின் எண்ணமோ ‘மத்தவங்க எல்லாம் போன் போட்டு பேசுறாங்க? இவனுக்கு மட்டும் என்னவாம் போன் போட்டு பேசுறதுக்கு  திமிர் பிடிச்ச சிடுமூஞ்சி’என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள். இப்படியே மூன்று நாட்கள் சென்று இருந்தது.

அன்றைய இரவு சிற்பி பாடிய அந்த இரண்டு பாடல்களையும் நிரஞ்சன் தன்னுடைய கைப்பேசியில் பாதுகாத்து வைத்திருந்தவன் தன்னுடைய அறையில் இருந்த ஒலிபெருக்கியில் போட்டு கேட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது ஏதேச்சையாக உள்ளே வந்த பார்த்திபன் அந்த குரலின் இனிமையைக் கேட்டு “நிரஞ்சன் இது யாருடைய குரல் ரொம்ப ப்ரெஷ்ஷா இருக்கு” என்று கேட்டான்.

உடனே நிரஞ்சன் “உனக்கு இந்த வாய்ஸ் பிடிச்சு இருக்கா பார்த்தி” என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.

“ஆமாம் நல்லா இருக்கு நிரஞ்சன் யாரு அது?” என்று ஆர்வமாகக் கேட்டான்.

“தெரியலை நானும் அந்த குரலுக்கு சொந்தக்காரியைத் தான் தேடிட்டு இருக்கேன் பார்க்கலாம்”

“அப்போ யாரு உனக்கு இந்த ஆடியோவை அனுப்புனாங்க?”

“நானே கண்டுபிடிச்சேன்”

“எங்கே?”

“ரீல்ஸ்ல சீக்கிரம் ஆளை கொண்டு வந்துடலாம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

பார்த்தி “சரி இந்த ஆடியோவை எனக்கு அனுப்பி விடு வேற சாங் இருக்கா?”

“இருக்கு ஆனால் உனக்கு எதுக்கு இந்த ஆடியோ?”

“நிரஞ்சா நம்ம இந்த சங்கீத மேளாவுடைய கான்ட்ரெக்ட் முடிஞ்சதும் நம்மளுடைய புது ஆல்பம் ரீலிஸ் பண்ணனும்.அப்போ வித்தியாசமா ஒரு பெண்ணோட குரலையும் சேர்த்து வெளியிட்டால்  வித்தியாசமா இருக்கும்ல அதுக்கு இந்தக் குரல் ரொம்ப பொருத்தமா இருக்கும். எனக்கு அந்த கேர்ள்ஸ் க்ரூப் பார்த்ததும் இந்த எண்ணம் வந்துட்டே இருந்தது.இப்போ இந்தக் குரல் கேட்கவும் செட் ஆகும்னு முடிவாகிட்டேன்” என்று முடிவாகச் சொன்னான் பார்த்திபன்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஓ.. அப்படின்னா சிற்பியும் இவங்க குழுவில சேர்ந்து பாடப்போறாளா? சூப்பர் அருமையான நகர்வு 👏👏