Loading

அத்தியாயம் -28

நிரஞ்சன் அவளைப் பார்த்து “இந்த டிரெஸ் ரொம்ப அழகா இருக்கு சிற்பி இது அப்படியே போட்டுக்கோ சரியா” என்றான்.

அவளோ பதற்றமாய் “வேண்டாம் நிரஞ்சன் இந்த டிரெஸ் ரொம்ப காஸ்ட்லியா இருக்கு” என்றவளின் அருகில்  வந்தவன் அந்த உடையில் இருந்த விலை இருந்த அட்டையை கையால் எடுத்து விட்டவன் “இப்போ இதை கண்டிப்பா வாங்கித் தான் ஆகனும்” என்றான்.

அவளோ அவனை அதிர்ச்சியாகப் பார்த்தாள்.நிரஞ்சனின் பார்வை சிற்பியின் மீது நிலைத்து இருந்தது.இவர்கள் இருவருக்கும் இடையே  நடந்துக் கொண்ட விஷயங்களை கையில் சிற்பிக்காக ஒரு துணியோடு வந்த காந்தன் அப்படியே அதை அமைதியாக அங்கே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.

நிரஞ்சனின் விழிகளிலும் அவன் முகத்திலும் தெரிந்த புன்னகை காந்தனை ஆழமாக யோசிக்க வைத்தது.இத்தனை நாட்களாக அவன் முகத்தில் இல்லாத ஒருவித புன்னகை நிலைத்து இருப்பதற்கு சாம்பவி அன்று சொன்னது போல் இருக்குமோ? என்று நினைத்தவனுக்கு மனமோ லேசாக வலிக்க ஆரம்பித்தது.

நிரஞ்சனைப் பார்த்து சிற்பி “ஏன் இப்படி செய்தீங்க நிரஞ்சன்? இப்போ தேவையில்லாமல் செலவு செய்றீங்க?” என்று கொஞ்சம் கோபமாகக் கேட்டாள்.

அவனோ அவளிடம் “இது தேவையில்லாத செலவுன்னு யாரு சொன்னாங்க? நான் உனக்காக வாங்கித் தரேன்” என்று உரிமையாகச் சொன்னான்.

சிற்பி விடாமல் “என்ன எனக்காக எதுக்கு? அதுவும் இவ்வளவு விலை அதிகமா தேவையில்லாதது” என்று அவள் திரும்பவும் அதையே சொன்னாள்.

அதைக் கேட்டு நிரஞ்சன் “சிற்பி நான் உனக்கு வாங்கித் தருவது தேவையில்லாததுன்னு  எப்படி சொல்லுவே? நானாக  விரும்பித் தானே வாங்கித் தரேன்னு சொல்லுறேன் ஏன் உனக்கு பிடிக்கலை?” என்று திரும்பவும் அதே கேள்வியைக் கேட்டான்.

சிற்பி இப்போது இன்னும் அழுத்தமாய் “அதான் எதுக்காக எனக்கு வாங்கித் தர்றீங்கன்னு தான் நான் கேட்கிறேன். நீங்க சும்மா போடச் சொன்னீங்கன்னு தான் நான் போட்டேன். இப்படி நடக்கும்னு தெரிஞ்சு இருந்தால் இதை செய்து இருக்க மாட்டேன்” என்று  பிடிவாதமாகக் கேட்டாள்.

இருவருக்குமான பேச்சுகள் கொஞ்சம் சத்தமாக மாற ஆரம்பித்தது.நிரஞ்சனோ “ஆமாம் எனக்கு பிடிச்சிருக்கு உன்னை பிடிச்சிருக்கு ரொம்பவே பிடிக்கும் இன்னும் பிடிக்கும் அதுக்காகத் தான் நானே வாங்கித் தரேன்னு சொன்னேன்” என்று தன் மனதில் உள்ளதை அப்படியே அவனையும் அறியாமல் ஒரு வேகத்தில் பேசினான்.

நிரஞ்சன் சொன்னதைக் கேட்டு அப்படியே உறைந்து அதிர்ச்சியில் நின்றாள் சிற்பிகா.அவளுடைய அம்மா சொல்லி இருக்கிறார் எவ்வளவு தான் நெருக்கமானவராக இருந்தாலும் யாரிடமும் அதிக விலையுள்ள பரிசை வாங்கக் கூடாது என்று அப்படி வாங்கினால் அந்த உறவை இழக்க நேரிடும்.அந்த எண்ணத்தில் தான் அவள் இப்படி கொஞ்சம் கடுமையாக நிரஞ்சனிடம் பேசினாள்.

அதற்கு அவன்  சொன்ன பதிலைக் கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் சிற்பி அப்படியே நின்றாள்.

இவர்களின் பேச்சு சத்தம் கேட்டு பார்த்திபனும் சஹாவும் வந்தார்கள்.இருவரையும் பார்த்து “இங்கே என்னாச்சு ஏன் இப்படி சத்தம் போடுறீங்க?” என்று பார்த்தி  கேட்டவன் சிற்பியைப் பார்த்தான்.

சிற்பி அந்த மேற்கத்திய உடையில் இருப்பதைப் பார்த்து சஹா “வா…வாவ் சிற்பி இந்த டிரெஸ்ல ரொம்ப அழகா இருக்கே” என்று நிலைமை புரியாமல் பேசினான்.

நிரஞ்சன் கோபமாக “சகா வாயை மூடுறியா?” என்று கேட்கவும் காந்தன் கையில் வைத்திருந்த உடையை ஓரமாக வைத்து விட்டு உள்ளே வந்து சிற்பியின் கையைப் பிடித்தவன் “வா இங்கிருந்து போகலாம்” என்றான்.

உடனே நிரஞ்சன் இதை எதிர்பார்க்காததால் சட்டென்று சிற்பியின் இன்னொரு கையைப் பிடித்தவன் “அவ எங்கேயும் வர மாட்டாள் நீ இங்கே இரு சிற்பி” என்றான்.

இருவரின் கையையும் உதறி விட்டவள் வேகமாக அங்கிருந்து சென்றாள்.காந்தன் அப்படியே நிற்க நிரஞ்சன் அவள் பின்னாலேயே சென்றான்.பார்த்தியும் சஹாவும் என்ன நடக்கிறது? என்று புரியாமல் நின்றனர்.

சிற்பி வேகமாக அந்த கடையை விட்டு வெளியே வந்தவள் விரைவாக நடக்கத் தொடங்கினாள்.நிரஞ்சன் அவள் பின்னாலேயே “சிற்பி சிற்பி நில்லு சாரி சிற்பி” என்று சத்தமாகச் சொல்ல அவளோ காதில் வாங்கிக் கொள்ளாதது போல் வேகமாக நடந்து சென்றாள்.

எல்லோரும் அவர்களை பார்ப்பது போல் உணர்ந்தவள் இன்னும் கொஞ்சம் தூரம் நடந்தாள்.தன் பாக்கெட்டில் வைத்திருந்த முகக்கவசம் அணிந்து தலையில் தொப்பி போட்டுக் கொண்டு யாருக்கும் தெரியக் கூடாது நிரஞ்சன் எதுவும் பேசாமல் அவள் பின்னாலேயே நடந்தான்.

சிறிதுநேரம் சென்று இருக்க அங்கே ஓரமாக இருந்த ஒரு இருக்கையில் போய் அமர்ந்தாள்.கொஞ்சம் வேகமாக மூச்சு வாங்கியது.சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது.

சிற்பி எங்கே வந்து இருக்கிறோம்? என்று அவளுக்கு தெரியவில்லை.ஏற்கனவே இந்தக் கடை அவள் எப்போதும் வரும் வழியில் இல்லாமல் வேறுபக்கமாக இருந்தது.அதனாலயே வழி தெரியாததால் கொஞ்சம் யோசித்து இருந்தாள்.

அப்போது ஏதோ ஒரு கோபமும் வேகமும் சேர்ந்து வேகமாக வெளியே வந்து விட்டாள்.அதோடு வீட்டில் குடும்பத்தில் வளர்ந்தவளுக்கு இந்த வேலையே கொஞ்சம் திணறி இப்போது தான் சரியாக பார்ப்பதற்கு கற்றுக் கொண்டிருக்கிறாள்.

இதற்கிடையில் எல்லோருடைய கவனமும் இருப்பது ஒருவித சூழ்நிலையில் அவளை நிறுத்திக் கொண்டிருந்தது.

இதில் இருவரும் ஒன்றாக  பிடித்து இழுக்கவும் ஏதோ ஒரு அழுத்தத்தில் ஓடி வந்து விட்டாள். இப்போது எங்கே இருக்கிறோம்? என்று யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.கொஞ்சம் பயமும் பதற்றமும் வந்தது.

கையில் கைப்பேசியை இல்லாதது நினைவுக்கு வரவும் அடுத்து என்னச் செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கிடையில் சஹா சிற்பியை நினைத்து பதறியபடி அவளுடைய கைப்பேசி எண்ணிற்கு அழைத்தான்.அவளின் கைப்பேசியோ அங்கே தான் இருந்தது.பின்னால் சென்ற நிரஞ்சனுக்கு அழைத்து பார்த்தால் அவனுடைய கைப்பேசியும் அங்கே தான் இருந்தது.

சஹா இந்த விஷயத்தை மற்ற இருவரிடமும் சொன்னான்.காந்தன் யோசனையோடு “வெயிட் பண்ணலாம் சிற்பியோடு நிரஞ்சன் இருந்தால் அவனே பார்த்துக்குவான்” என்றான்.

உடனே பார்த்தி “சிற்பி ஏன் கோபமாக போனாள்னு தெரியலை உனக்கு இதைப் பற்றி எதாவது தெரியுமா?” என்று காந்தனைப் பார்த்து கேட்டான்.அதற்கு காந்தன் “நீங்க ரெண்டுபேரும் வந்த பிறகு தானே நானும் வந்தேன் தெரியலை அவங்களாக சொன்னால் தான் தெரியும்” என்றான்.

சிற்பி பலவிதமான யோசனையில் நின்றாள்.அப்பொழுது அங்கே ஓரமாக நின்றுக் கொண்டிருந்த நிரஞ்சன் அவளுக்கு அருகில் வந்து “சிற்பி சிற்பி” என்று அழைத்தான்.

தலையை குனிந்துக் கொண்டு இருந்தவள் நிமிர்ந்து பார்க்க கொஞ்சம் தள்ளி நின்றபடி ஒருவனை யோசனையாகப் பார்த்தாள்.

நிரஞ்சனோ முகக்கவசத்தை விலக்கி “சிற்பி நான் தான் என்னை மன்னிச்சிடு வா வீட்டுக்கு போகலாம்” என்று சொன்னதும் அவனை அங்கே பார்த்ததும் மனதில் ஒரு பெரிய நிம்மதி வந்து பிறக்கவும் அவனைப் பார்த்து எழுந்து நின்றாள்.

கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளது கையில் கொடுத்தவன் “முதல்ல தண்ணீரைக் குடி” என்றதும் அந்த தண்ணீரை வாங்கி மடக் மடக்கென்று குடித்தாள்.

அந்த  பாட்டிலை திரும்ப  வாங்கிக் கொண்டவன் அவள் அமர்ந்து இருக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி அமர்ந்தவன் “சிற்பி நான் சொல்றதை நீ கேட்பல்ல” என்றதும் அவளிடம் “ம்ம்…”.என்று மட்டும்  பதில் தந்தாள்.

“முதல்ல என்னை மன்னிச்சிடு சிற்பி ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டேன்.எல்லாத்துக்கும் நேரம் கொடுக்கனும்ல ஆனால் ஒன்னு இந்த எண்ணம் இப்போ வந்தது இல்லை அது மட்டும் உண்மை யார்கிட்டயும் இதைப் பத்தி சொல்ல மாட்டேன்” என்று எழுந்தவன் “சீக்கிரம் இருட்டிடும் வா வீட்டுக்கு போகலாம்” என்று எழுந்தவன் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஒரு ஆட்டோவை கைக்காட்டி நிறுத்தியவன் அவர்கள் செல்ல வேண்டிய இடத்தின் பெயரைச் சொன்னவன் முதலில் உள்ளே ஏறி அமர்ந்தவன் “சீக்கிரம் ஏறு” என்றதும் பதில் ஏதும் பேசாமல் அவளும் ஏறிக் கொண்டாள்.

இருவருரிடமும் எந்த பேச்சும் இல்லை.அமைதி மட்டுமே இருந்தது.சிற்பியின் வீட்டின் அருகில் வரவும் சிற்பி  இறங்கி கொண்டவள் “தாங்ஸ்” என்று சென்று விட்டாள்.

வீட்டின் வாசலில் செழியன் நின்றுக் கொண்டிருந்தான்.சிற்பியைக் கண்டதும் வேகமாக அவளருகில் வந்தவன் “எங்கே போயிட்டே சிற்பி உன் போனுக்கு கால் பண்ணால் காந்தன் பேசினான் நீ எங்கே போயிட்டேன்னு தெரியலை சொன்னான். ஆனால் வீட்டுக்கு வந்திடுவேன்னு சொல்றான் என்ன நடந்துச்சு?” என்று பதறியபடியே கேட்டான்.

சிற்பி திரும்பி பார்த்தாள்.நிரஞ்சன் ஆட்டோவிலிருந்து இறங்கி இவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.அதை செழியனும் பார்த்தவன் சிற்பியிடம் “அவன் தான் உன்கிட்ட பிரச்சினை பண்ணானா? பதில் சொல்லு ஏன் அமைதியா இருக்கே” என்று கேட்டான்.

அவளோ “இல்லை செழியன் நீ கொஞ்சம் அமைதியா இரு” என்றவள் திரும்பி பார்க்க நிரஞ்சன் அப்படியே நின்றுக் கொண்டிருந்தான்.இவளோ செழியன் கையைப் பிடித்து “நீ முதல்ல உள்ளே வா” என்று சொன்னதும் “எதுக்காக நீ இப்படி பண்ணுறே? நாம இங்கேயே பேசலாம்” என்று சொல்பவனின் பேச்சை கேட்காமல் அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள்.

நிரஞ்சன் அவள் உள்ளே செல்கிறாளா? என்று தான் இறங்கிப் பார்த்தான்.அங்கே செழியனைக் கண்டதும் அப்படியே நின்றவன் அவள் கையைப் பிடித்து அழைத்து சென்றதைப் பார்க்கும் போது நிரஞ்சனுக்கு மனதினுள் ‘சிற்பிக்கு செழியனை தான்  பிடிச்சு இருக்கும் போல’ என்று எண்ணியவன் மெலிதாக புன்னகைத்து அவள் உள்ளே செல்வதைப் பார்த்து அவன் ஆட்டோவில் ஏறி சென்று விட்டான்.

வாசல் கதவை திறந்து உள்ளே சென்றவள் அவனை அங்கேயே விட்டுட்டு திரும்ப வந்து பார்த்தாள் சிற்பி.இப்போது அங்கே நிரஞ்சன் இல்லாததைப் பார்த்து அப்படியே நின்றாள் சிற்பிகா.

பின்னால் வந்த செழியன் அவளை கேள்வியாகப் பார்த்தான்.சிற்பி “நான் உன்கிட்ட தனியாக  பேசனும் வெளியே போகலாமா?”

செழியன் யோசனையோடு “ரொம்ப நேரமாகுது இப்போதே போகனுமா?” என்று கேள்வியாகக் கேட்டான்.

ஆமாம் என்பது போல் தலையசைக்கவும் அவளை தன் வண்டியில் ஏற்றிக் கொண்டவன் தன் அன்னையின்  கைப்பேசி எண்ணை அழைத்து இருவரும் தாமதமாக வீட்டிற்கு வருவோம் என்று சொல்லி விட்டான் செழியன்.

பதினைந்து நிமிட பயணத்தில் இருவரும் ஒரு சாப்பாடு கடையில் வந்து உட்கார்ந்தார்கள்.தங்களுக்கு தேவையான உணவை ஆர்டர் செய்தார்கள்.

செழியன் “இப்ப சொல்லு என்ன பேசணும்? அதை விட முக்கியமா இன்னைக்கு என்ன  நடந்துச்சுன்னு சொல்லு?” என்றான்.

நீண்ட பெருமூச்சு விட்டவள் “செழியன் நான் சொல்றத கொஞ்சம் பொறுமையா கேளு” என்று ஆரம்பத்தில் நிரஞ்சன் பேச ஆரம்பித்தது முதல் இப்போது வரை  நடந்த எல்லாவற்றையும் அவனிடம் மறைக்காமல் உண்மையை மட்டும் சொன்னாள் சிற்பி.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

    1. Author

      மனமார்ந்த நன்றிகள்