Loading

அத்தியாயம் -18

இவர்கள் எல்லாம் முடித்து திரும்ப வீட்டிற்கு  செல்வதற்காக மகிழுந்தில் ஏறும் பொழுது இரவு எட்டு மணியாகி இருந்தது.மகிழுந்தில் உடைமாற்றி வருவதற்காக இவர்களுக்காக அரைமணி நேரம் முன்னரே காத்திருந்தவள் அசதியில் அப்படியே தூங்கிப் போனாள்.

மகிழுந்தின் ஒருபுறம் நிரஞ்சன் ஏறிக் கொள்ள மறுபக்கம் காந்தன் ஏறிக் கொண்டான்.நடுவில் சிற்பி தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட நிரஞ்சன் எழுந்துக் கொள்ள எண்ணும் போது பார்த்தியும்,சஹாவும் பின்னால் அமர்ந்து சோர்வில் கண்களை மூடி அமர்ந்திருந்தனர்.

ஓட்டுனரின் முன்னால் இவர்களின் சில பொருட்களும்,கோப்புகளும்  இருந்தது.நிரஞ்சன் சிற்பியின் அருகினில் உட்கார்ந்துக் கொண்டான்.மகிழுந்து வேகமாகச்  சென்றது.தூங்கிக் கொண்டிருந்த சிற்பியின் தலை தூக்காத்தில் அங்கும் இங்கும் ஆட காந்தன் மெதுவாக அவள் தலையை தன் தோளின் மேல் வாகாக சாய்த்துக் கொண்டான்.

அவனது செய்கையை பார்த்துக் கொணௌடிருந்த நிரஞ்சனிடம் காந்தன் “பாவம்டா இன்னைக்கு சிற்பிக்கு நிறைய வேலை ரொம்ப சோர்வாகி தூங்கிட்டா இப்போ நல்லா தூங்குவால்ல” என்று தன் செயலுக்கான காரணத்தையும் சொன்னான்.நிரஞ்சன் சரி என்பது போல் தலையாட்டிக் கொண்டான்.

சிறிது நேரத்தில் காந்தனும் கண்ணை மூடி தூங்கிப் போனான்.காந்தன் சிற்பியிடம் நடந்துக் கொள்ளும் உரிமையானது நிரஞ்சனை யோசிக்க வைத்தது.அவன் யோசனையில் இருக்கும் போது சிற்பியின் கை அவனின் ஒரு கைமீது விழ சிற்பி தூக்கத்தில் அவனின் கையோடு தன் விரல்களை கோர்த்து அழுத்தமாக  பிடித்துக் கொண்டாள்.

அவளின் இந்தச் செய்கையில் சட்டென்று தடுமாறியவன் சிற்பியைப் பார்த்தான்.அவளோ நல்ல அசந்து போய் தூங்கி இருந்தாள்.தூக்கத்திலேயே தலையை திருப்பி இவன் தோள்களில் மேல் வாகாக சாய்ந்துக் கொண்டு கைகளை இறுக்க பற்றிக் கொண்டு தூங்கினாள்.

அவளின் இந்தச் செய்கையை அவனால் தடுக்க முடியவில்லை.ஏதோ வெற்றிடமாக இருந்த அவன் மனதில் நிறைந்து போய் இருந்தது.அவளின் மெல்லிய மூச்சுக்காற்று அவனின் இதயத்திற்கு நேராக பட்டுச் சென்றது.

அவள் பிடித்திருந்த கரங்களின்  மேல் இன்னொரு கையை வைத்து அணைத்தவனுக்கு அத்தனை நாட்களாக அழுத்தியிருந்த வலி சட்டென்று காணாமல் போன உணர்வு.உடனே தன் கைப்பேசியில் இருவரின் கைகள் கோர்த்து இருப்பதை புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டான் யாரும் அறியாதவாறு செய்தான்.

அவள் தலைமீதே தன் தலையை லேசாக சாய்த்தவன் மனம் லேசானதில் அவனும் தூங்கிப் போனான்.எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு பயணத்தில் அவனையும் அறியாமல் தூங்கிப் போனது இந்த முறை தான்.



நீண்ட பயணத்தில் கண்களை திறந்துப் பார்த்தாள் சிற்பி.நாசியில் நுழைந்த வாசனை திரவியத்தின் வாடையை நுகர்ந்தவள் ‘ம்ஹீம்… இந்த வாசனை நல்லா இருக்கே’ என்று எண்ணும் போதே யார் மீதோ சாய்ந்திருப்பதாக எண்ணி நிமிர்ந்துப் பார்த்தால் நிரஞ்சன் தோளோடு சாய்ந்து  கையோடு தன் கையும் கோர்த்து இருப்பதைப் பார்த்தவள் திடுக்கிட்டு வெடுக்கென்று தலையை நிமிர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதை உறுதி செய்து ‘நல்லவேளை இந்த உம்முனா மூஞ்சு நான் சாய்ந்து தூங்கியதை பார்க்கலை பார்த்து இருந்தால் இந்நேரம் கதகளி ஆடியிருக்கும்’ என்று மனதில் நினைத்தவள் மெதுவாக தன் கையை அவனிடமிருந்து விலக்கிக் கொண்டாள்.

அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது.சிற்பி ஒன்னும் தெரியாதது போல் திரும்பவும் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.வாகன ஓட்டுநர் மெதுவாக  “சார் இடம் வந்திடுச்சு” என்றார்.

அவரின் சத்தத்தில் கண்விழித்தனர் இருவரும்.ஓட்டுநர் “சார் உங்க ப்ளாட் வந்துடுச்சு”

காந்தன் “நீங்க முதல்ல சிற்பியை அவங்க வீட்ல இறக்கி விடுங்க”

“சார் அவங்க கம்பெனிக்கு திரும்ப போகனும் அதனால உங்களை இறக்கி விட்டுட்டு தான் மேடம் வரச் சொன்னாங்க” என்றான்.

மெதுவாக அப்பொழுது தான் விழிப்பது போல் கண்களை திறந்தவள் “என்னாச்சு?”

காந்தன் நடந்ததைச் சொன்னான்.”ஆமாம் நான் ஆபிஸ் போகனும் நீங்க போங்க” என்று சொல்வதற்கு முன்னதாகவே நிரஞ்சன் மகிழுந்தில் இருந்து இறங்கினான்.

காந்தன் மற்ற இருவரையும் எழுப்பி விட்டு அவர்கள் சிற்பியிடம் சொல்லிக் கொண்டு தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றனர்.

சிற்பி நீண்ட பெருமூச்சு விட்டவள் “எப்பா இந்த சிடுமூஞ்சி மேல சாய்ந்து தூங்கினதை  நல்ல வேளை யாரும் பார்க்கலை பார்த்து இருந்தால் நான் அவ்வளவுதான் ” என்று வாய்விட்டுச் சொல்லும் போது நிரஞ்சன் கார் கதவை திறந்தான்.இவளோ பயந்து போய் அவனைப் பார்த்தாள்.

அவனோ அவர்கள் வைத்திருந்த பொருட்களை வந்து எடுத்து விட்டு அவளை திரும்பி  முறைத்து பார்த்தான்.அவன் போனதும் “ஐயோ இவன்  நாம பேசினதை கேட்டுட்டானோ? எல்லாத்துக்கும் ஒரே ரியாக்ஷன் கொடுத்தால் நான் என்னன்னு புரிஞ்சுக்கிறது? ” என்று தன்னை நொந்துக் கொண்டாள்.

சங்கீத மேளாவுடைய அலுவலகத்திற்கு சென்று சாம்பவியிடம் அன்று நடந்த எல்லாவற்றையும் சொன்னாள்.அவர்கள் எடுத்த புகைப்படத்திற்கான நகலையும் காட்டினாள்.சாம்பவி எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டு விட்டு சிற்பியையும் அனுப்பி வைத்தாள்.

அன்றைய இரவு முழுவதும் நிரஞ்சனுக்கு அவளின் இந்த இறுக கையணைப்பே நினைவில்  வந்துக் கொண்டிருந்தது.

மறுநாள் எப்போதும் போல் சிற்பி வேலைக்குச் சென்றாள்.நிரஞ்சனின் அருகிலோ அவன் இருக்கும் இடத்திற்கு சிற்பி செல்லவே இல்லை.இரண்டு விஷயங்களால் அவனிடமிருந்து விலகியே இருந்தாள்.மற்ற மூவரிடமும் எப்போதும் போல் நட்புடனே பழகினாள்.

மாலை நேரத்தில் சாம்பவி இவர்களை சந்திக்க அவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்குள் வந்தாள்.நிரஞ்சனை நேரில் சந்தித்து நடந்த விஷயங்களைப் பற்றி பேசினாள்.அப்பொழுது தான் நால்வருக்கும் முக்கியமான விஷயம் ஒன்று தெரிய வந்தது.அந்தப் பெண்களின் குழுவின் தலைவர் சாம்பவியின் சித்தப்பா.

இவர்கள் நிறுவனத்திற்கு எதிராக நிறுவனத்தை நிறுவியர் இவர்களிடம் சரியான தலைமை இல்லாமல் திணறிப் போகவும் அந்த வாய்ப்பை பயன்படுத்தியவர் இன்று முதலிடத்தில் இருக்கிறார்.

இப்பொழுது சங்கீத மேளா நல்ல திறமை வாய்ந்தவர்களை களம் இறக்கவும் அதைப் பற்றி  யோசித்தவர் தன் அணியினர் மூலமாக மிரட்டவும் செய்திருக்கிறார் என்று எல்லா விவரங்களைப்  பற்றியும் சிற்பியையும் அருகில் வைத்து சொன்னாள் சாம்பவி.

எல்லாவற்றையும் கேட்ட நிரஞ்சன் “சாம்பவி நீங்க பயப்படுற மாதிரி எதுவும் இல்லை நாங்க எந்த  மிரட்டலுக்கும் பயப்படவும் இல்லை. அதோடு இந்த போட்டியில் கலந்துக் கொண்டு உங்க பெயரை நிச்சயமாக  மீட்டுத் தருவோம்” என்றான்.

அதைக் கேட்டு நிம்மதியடைந்தவளாக புன்னகை ஒன்றை சிந்தினாள்.அவன் பேசியதைக் கேட்ட சிற்பி ‘பரவாயில்லை இதுக்காகவாது திமிர் இல்லாமல் பேசினானே’ என்று நினைக்கும் போது சிற்பியை நிரஞ்சன் முறைத்துப் பார்த்தான்.

அவன் முறைப்பைக் கண்டவள் ‘நம்ம மைண்ட் அவ்வளவு கேவலமாக இருக்கு நாம இந்த சிடுமூஞ்சியை நினைச்சா அவனுக்கு எப்படித் தெரியுது’ என்று அவள் ஆழமாய் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது சாம்பவி செல்லவும் அவளருகில் மெதுவாய் வந்தவன் “ஏன் உன் மைண்ட் வாய்ஸ் இவ்வளவு கேவலமா இருக்கு நீ நினைச்சது எனக்கு வரைக்கும் கேட்குது பட்டிக்காடு” என்று மெதுவாய் சொல்லி விட்டு போனான்.அவன் பேசியதில் இவளுக்கு தான் தொண்டையே வறண்டு போனது.

அவன் கொடுத்த அதிர்ச்சியில் அப்படியே நின்று யோசித்தவள் ‘அப்போ இத்தனை நாளா நாம இவனை கழுவி ஊத்துனோமே  எல்லாம் தெரிஞ்சு போச்சோ’ என்று நினைக்கும் போதே அவன் திரும்பவும் வந்து “ஆமாம் இது வேற நீ சொல்லித் தான் எனக்கு புரியனுமா?” என்றதும் மொத்தமாய் ஆடிப் போனாள் சிற்பி.

“ஐய்யய்யோ இனிமேல் இவனை பார்க்கவே கூடாது” என்று சத்தமாய் பேசியவள் அதற்குப் பிறகு அவன் முன்னால் வரவே இல்லை.ஆனால் சிற்பியின் நெஞ்சம் தான் அவனைப் பற்றி நினைப்பதை விடவில்லை.

‘ஒருவேளை இவன் சிடுமூஞ்சியா இருக்க மாட்டான்,மந்திரவாதியாகத் தான் இருப்பான்’ என்று விதவிதமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவளின் முகமே பயந்தில் உறைந்து போய் இருப்பதைப் பார்த்த காந்தன் “சிற்பி ஏன் ஒருமாதிரி இருக்கே? என்னாச்சு?”

“ஒன்னுமில்லை”

“இல்லை ஏதோ பயந்தது போல் இருக்கே”

“அப்படி எல்லாம் ஒன்னுமில்லை நான் எப்பவும் போலத் தான் இருக்கேன்” என்று சொல்லும் போது நிரஞ்சன் அருகில் வரவும் வாயை மூடிக் கொண்டாள்.அவளிள் செய்கையைப் பார்த்து நிரஞ்சனுக்கு சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்டான்.

இப்படியே நாட்கள் வேகமாய் கடந்தது.மியூசிக் லவ்வர்ஸ் குழுவினருக்கு பயிற்சி ஒரு பக்கமும்,நிகழ்ச்சிகள்,போட்டியில் அவர்கள் கடைநிலை போட்டியாளர்களிடமிருந்து தங்களின் வெற்றியை பரிசாக்க ஆரம்பித்தனர்.

இதுவரை இணையதள மக்களுக்கு மட்டும் தெரிந்து வந்தவர்கள் இப்பொழுது பாமர மக்களுக்கு மத்தியில் இவர்களின் குழு பிரபலமடையத் துவங்கியது.இந்தப் போட்டியை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று  ஒளிப்பரப்புவதால் மக்களின் மத்தியிலும் மியூசிக் லவ்வர்ஸ் குழுவைப் பற்றி தெரிய ஆரம்பித்தது.



சிற்பி இவர்கள் குழுவின் முதல் இரசிகையாகிப் போனாள்.அவள் பயிற்சியில்  பாடல்களைப் பற்றி அறிந்து இருந்தாலும் அதை அவர்கள் மேடையில் பாடும் பொழுது அந்த மேடைக்குப் பின்னால் ஒலிக்கும் ஆதரவுக்குரல் இவளுடையதாகத் தான் இருக்கும்.

சிற்பி நிரஞ்சனை விட்டு கொஞ்சம் விலகியே இருந்தாள்.மற்ற மூவரிடம் நட்புப் பாராட்டினாள்.ஆனால் அவனை கவனிக்க மட்டும் தவறுவதில்லை. நிரஞ்சன் அவளின் பேச்சு,சிரிப்பு,சேட்டைகள் என எல்லாவற்றிலும் மற்றவர்களோடு அவள் சேர்ந்து இருந்தாலும் நிரஞ்சன் மட்டும் கொஞ்சம் தள்ளியே இருந்தான்.

ஒருநாள்…

காந்தனும்,சஹாவும்  அவர்களின் பாடலை பயிற்சி செய்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் எழுதி வைத்திருந்த சில குறிப்புகள் அடங்கிய புத்தகம் ஒன்று நிரஞ்சனின் அறையில் இருந்தது.

காந்தன் சிற்பியிடம் “சிற்பி நிரஞ்சன் அறையில குறிப்பு எழுதி வைச்சி இருக்கிற

நோட் ஒன்னு அவன் புக்கெல்லாம் வைச்ச இடத்துல இருக்குது போய் எடுத்துட்டு வா” என்று சொன்னான்.

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிற்பி “என்ன நானா? ஐய்யய்யோ நான் போக மாட்டேன்” என்று பதறியபடி சொல்லவும் அவளின் செய்கையைப் பார்த்து சிரித்தான் சஹா.

சஹா  “சி…சிப்பி அங்கே ஏதோ அரியவகை உயிரினம் இருக்கிற மாதிரி பயப்படுறே?” என்று கிண்டலடித்தான்.

அவளோ எதுவும் சொல்லாமல் மனதினுள் ‘அரியவகை உயிரினமா? அதைவிட மோசமான ஒரு ஜந்துல இருக்கு அதை எப்போ என்னை கடிச்சி திங்கும்னு எனக்கே தெரியாதே’ என்று நினைத்துக் கொண்டே சஹாவைப் பார்த்தாள்.

சஹா “ரெண்டுபேர்ல யாரை மனசுல திட்டுறேன்னு தெரியலை கண்டுபிடிக்கிறேன்” என்றான்.

காந்தன் “போ எடுத்துட்டு வா சிற்பி”

“காந்தன் சஹாவை போகச் சொல்லுங்க”

“முடியாது நேத்து அவன் ரூம்ல போய் ஏதோ ஒரு பொருளை எடுத்து மாத்தி வைச்சுட்டான் போல அதனால  உள்ளே வரக் கூடாதுன்னு சொல்லிட்டான் அதான் உன்னை போகச் சொல்லுறேன் சிற்பி.நிரஞ்சன் குளிச்சிட்டு தான் இருக்கான் நீ போ அங்கே யாரும் இல்லை” என்று சிற்பியிடம் காரணம் சொன்னான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

5 Comments

  1. என்னது குளிச்சுட்டு இருக்கானா அப்போ அடுத்து ஒரு ரொமான்ஸ் சீன் கன்பார்ம் … காந்தன் அவ கிட்ட பழகுறதுக்கும் நிரஞ்சன் அவகிட்ட பழகுறதுக்கும் நல்லா வித்தியாசம் தெரியுது … காந்தன் மனசுல காதல் இல்லவே இல்ல …

    திட்டிக்கிட்டே நல்லா லவ் பண்றான் நிரஞ்சன் … இதெல்லாம் எங்க போய் முடியுமோ …

    1. Author

      அப்படியா காந்தன் இப்படியா தெரியுறான் பார்க்கலாம் சிஸ் நன்றிகள்

  2. அதான் இப்ப துண்டோடு வருவான்.

    நீ பறந்தோடி போவே

    சூப்பர் எபிசோட்

  3. சும்மா இருந்த பெண்ணை எல்லாருமா சேர்ந்து படுக்க வச்சிடாங்க.

    பாவம் சிற்பி

    இன்னும் அவள் சபரியின் மருமகள்னு யாருக்கும் தெரியாது. தெரிஞ்சா இவனுக என்ன செய்வானுக.

    எப்பா நிரஞ்சா, அவளுக்கு இப்படி ஆனால் தான் அவள் மீது உனக்குப் பாசம் வருமோ?