Loading

நேரம் – 6 

 

 

 

பாரத் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அவளுடைய உடன்பிறந்த சகோதரி லதா பரத் உடைய தந்தை சரவணன் உடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள் டிவியில் வடிவேலு காமெடி போட்டனரோ என்னவோ விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்….

 

 

 

டிவியில் வடிவேலு மாப்பு வெச்சுட்டாண்டா ஆப்பு என்று கத்த அதை பார்த்து லதாவும் சிரித்துக் கொண்டிருக்க அதை பார்த்து பரத்திற்கு சந்திரமுகி ஜோதிகா அவன் நினைவு அடுக்குகளில் வந்து செல்ல அவனுக்கும் சிரிப்பாக போயிற்று….

 

 

 

 

எக்ஸ்ட்ராவா ஒரு சிரிப்பு சத்தம் வருகிறதே என்று அவனுடைய அக்கா லதா டிவியில் இருந்த தனது கண்ணை எடுத்து திருப்பி அவனைப் பார்க்க 

 

 

“வாப்பா என் கூட பிறந்த தம்பி லீவு விட்டதும் ஊரை சுத்துறது ஊருல தான் இது கொலை நடந்து போச்சுன்னு சொல்றாங்களே இந்த நேரத்துல எங்கடா போய் சுத்திட்டு வர ?????”

 

 

 

 

போர் அடிச்சது ஊர சுத்த போன ஆனாலும் அக்கா நீ கேள்வி கேக்கறதுல அம்மாவை அப்படியே ஜெராக்ஸ் அடிச்சு வச்சிருக்கேன் நீ அச்சு அசலா அம்மாவோட ஜெராக்ஸ்சே தான் 

 

 

 

 

“ஆமா  உன்ன கட்டின என்னோட தெய்வம்???? எங்க அவர அடிச்சு போட்டுட்டு இங்க வந்து உட்கார்ந்து இருக்கியா? இல்ல அவரு கொஞ்ச நாள் உங்க வீட்ல இருந்துட்டு வாம்மா அப்படின்னு உன்ன அனுப்பிவிட்டாரா சாரி பத்தி விட்டாரா ?????”

 

 

“போதும்டா டேய் நம்ம அம்மா அப்பாவை பார்த்துட்டு போலாம்னு ஆசை வந்தா நீ என்னம்மா கமெண்ட் அடிக்கிற அது சரி சார் யாரையாவது லவ் பண்றீங்களா என்ன????” 

 

 

 

என்று அவள் அப்படி கேட்டதும் அவனுக்கு அதிர்ச்சி வராத குறை தான் 

 

 

“இந்த அம்மாவும் சரி இந்த லதா அக்காவும் சரி ரெண்டு பேருக்கும் ஜேம்ஸ் பாண்ட் என்று நினைப்பு !!!! கடவுளே இவங்க ரெண்டு பேரும் பாரதி பட்டிடக் கூடாது!!!! அவ பட்டா இவங்க ரெண்டு பேரும் அவளை கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் பிரிச்சு மேய்ந்துவிடுவாங்க இவளுக்கு ஒரு நல்ல பதிலா சொல்லுவோம் !!!!”

 

 

 

என்று நினைத்தவனை

 

 

” என்னடா நான் கேள்வி கேட்டுட்டு இருக்கேன் நீ இந்த தானா அமைதியா இருக்க ?????”

 

 

” அது ஒன்னும் இல்லக்கா இப்ப நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனுமா வேணாமா அப்படின்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் !!!!”

 

 

 

“அடேய் என்ன பாத்தா எப்படி தெரியுது உனக்கு? நான் உன்னை என்ன கேட்டேன் நீ யாராவது லவ் பண்றியா இல்லையான்னு தானே கேட்டேன் பண்றேன் நான் பண்றேன்னு சொல்லு பண்ணலன்னா பண்ணலைன்னு சொல்லணும் அதை விட்டுட்டு உனக்கு பதில் சொல்றத வேணாமா அப்படின்னு என்கிட்ட கேக்குற ?????”

 

 

 

 

 

“பின்ன என்ன என்ன பாத்தா லவ் பண்ற மூஞ்சி மாதிரியா இருக்கு ????”

 

 

 

 

“சரி விடு நீ அந்த ஐடியாவுல இல்லனா உன் பிரண்டு லட்சுமி கிட்ட பேசி லட்சுமியே உனக்கு மேரேஜ் பண்ணி வைத்து விடுவோம் லஷ்மிக்கு தான் உன்ன பத்தி ஆதி முதல் அந்தம் வரைக்கும் தெரியுமே !!!!!” 

 

 

 

“என்னப்பா சொல்றீங்க”

 

என்று லதா தனது தந்தையை பார்த்து கேட்கவும் , 

 

 

 

“நீ முடிவெடுத்தா கரெக்டா தான் இருக்கும் அதுல எந்த வித மாற்றமும் இல்லை  !!!!!”

 

 

 

 

அப்பா நான் ஓகே சொல்றதுக்கு இருக்கட்டும் ஆனா உங்க முடிவுக்கு லட்சுமி ஓகே சொல்லனுமே 

 

 

“ஏம்பா லட்சுமி இதுக்கு ஒத்துக்க மாட்டாளா ..?”

 

 

“அது இல்லப்பா லட்சுமி ஏற்கனவே வேற ஒருத்தரை காதலிக்கிறா !!!!”

 

 

 

என்று அவன் சொன்னதும் 

 

 

“என்ன சொல்ற நீ ????”

 

 

என்று லதா பரத்தை பார்த்து கேட்டாள்….

 

 

 

 

 

“ஆமா அவ ஏற்கனவே 11வது படிக்கும்போது அவங்க ஊர்ல பைனான்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துட்டு இருந்த ஒருத்தரை லவ் பண்ணிட்டு இருந்தா!!!!

அது இப்போ வரைக்கும் கண்டினியூ ஆகுது!!!!

ஏன் உங்களுக்கு தெரியாதா அவங்க வீட்டுல இருக்குற உங்களுக்கே தெரியாத போது உங்களுக்கு மட்டும் தெரிஞ்சி இருக்கவா போகுது ??? “

 

 

 

“பை த வே  எனக்குன்னு ஏற்கனவே ஒருத்தி பொறந்துட்டா அவ என்ன தேடி வருவா நான் அவளே கல்யாணம் பண்ணிக்கிறேன் எனக்கு என்ன வயசு ஆயிடுச்சு கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு இன்னொரு தடவை இந்த கல்யாணம் கருமாரி அப்படிலாம் பேசிட்டு இருக்காதீங்க இத கேட்டா எனக்கு எரிச்சலா இருக்கு!!!!!”

 

 

என்று சொன்னவன் அங்கிருந்து தன்னுடைய அறைக்கு செல்லும் மாடிப்படிகளுக்கு ஏறி சிட்டாய் ஓடிவிட்டான்….

 

 

 

லதாவோ சோகமாக சோபாவில் அமர்ந்திருந்தால் அவளுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த அவளது தந்தை சரவணன் 

 

 

“இப்ப என்ன ஆச்சுன்னு மூஞ்ச தூக்கி வெச்சிட்டு உக்காந்துட்டு இருக்க!!!! அந்த பொண்ணு தான் வேற யாரையும் லவ் பண்றால மா அதுக்கு அப்புறம் என்ன உன் தம்பியே சொல்லிட்டு போய்ட்டான்!!!!

அந்த பொண்ணு வேற ஒருத்தன லவ் பண்றானு விடுமா நம்ம அவனுக்கு வேற எங்கேயாவது நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சிரலாம்!!! அவனே அதை பத்தி ஃபீல் பண்ணல நீயாமா பீல் பண்ணிட்டு இருக்க !!!!!”

 

 

 

 

 

“இல்லப்பா நானும் பத்தாவதுல இருந்து பார்த்தேன் அந்த பொண்ணையே நம்ப தம்பிக்கு கல்யாணம் பண்ணி வச்சு விடலாம் என்று என அந்த பொண்ணு வாரத்துக்கு ஈகுவலா படிச்சிருக்கா அதுவும் இல்லாம நம்ம கோத்திரம் அதனால தான்….”

 

 

 

 

என்று அவள் இழுக்க 

 

 

“அட விடுமா இந்த காலத்துல பசங்களையும் புரிஞ்சுக்க முடியல பொண்ணுங்களையும் புரிஞ்சிக்க முடியல ஒருவேளை உன் தம்பி வேற யாராவது பொண்ண லவ் பண்றானா என்னமோ ?????”

 

 

 

“இல்லப்பா என் தம்பி ரொம்ப நல்லவன் !!!!

அவனுக்கு மூணு அத்தை பொண்ணுங்க இருக்காங்க!!!

  அந்த மூணு பேரும் என் தம்பியை சுத்தி சுத்தி வந்தாங்க ஆனா அந்த மூணு பேரையுமே வேணான்னு சொன்னவன் வேற ஒரு பொண்ணு கிட்ட பார்த்து மதி மயங்கி அவனோட மனசு கொடுத்திருக்கவா போறான் …?”

 

 

 

 

“அது கடவுளுக்கே வெளிச்சம் மா சரி வா உங்க அம்மா உனக்காக சமைச்சு வச்சிருப்பா நீயும் அங்க இருந்து வந்ததுல இருந்து ஒன்னும் சாப்பிடல போய் முதல்ல சாப்பிடு!!!!”

 

 

என்று சொன்னவர் அவளை உணவு உண்பதற்காக அனுப்பி வைத்து விட்டார்….

 

 

மாடி படிகளுக்கு வந்து தன்னுடைய அறையை அடைந்த பரத் தன்னுடைய காதலி பாரதிக்கு அழைப்பு விடுத்தான்…

 

 

 

அதே நேரம் அனக்காவூரில்….

 

 

 

தனது தோழி லட்சுமியின் வீட்டில் இருந்த பாரதி” துணிந்து செயலாற்று” என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள்….

 

 

 

அவளுடைய கைபேசி அவளை அழைத்தது…. யார் தன்னை அழைத்துள்ளார்கள் என்று அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை அங்கிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு தன்னுடைய மொபைல் போனை எடுத்து பார்த்தபோதுதான் அவளுக்கு தெரிந்தது….

 

 

 

“MY BUBBLY BABY 🥰”

 

என்று அலைபேசியில் மின்னிய எழுத்துக்களை பார்த்து பரத் தான் தனக்கு அழைத்திருக்கிறான் என்று தன்னுடைய அலைபேசியை எடுத்து அந்த அழைப்பை ஏற்றாள்…

 

 

 

“சொல்லுப்பா என்ன விஷயம் நீ காரணம் காரியமில்லாம கால் பண்ண மாட்டியே ?????”

 

 

 

“பாரதி எங்க அக்கா வீட்டுக்கு வந்து இருக்காங்க !!!”

 

 

“சரி வரட்டும் அவங்களுக்கும் புகுந்தவீட்டு லைஃப் போர் அடிச்சிருக்கும் இல்ல அதனால பொறந்த வீட்டுக்கு வந்திருப்பாங்க !!!!”

 

 

 

 

“வந்ததும் வராததுமா எனக்கு கல்யாணம் பேச்சு பேச ஆரம்பிச்சுட்டாங்க டி !!!!”

 

 

” பொண்ணு யாரு????”

 

 

“நானே எங்க அக்கா கல்யாணம் பேச்சு பேசுறாளேனு உனக்கு கால் பண்ணா நீ கல்யாணம் பொண்ணே யாருன்னு கேக்குற ????”

 

 

 

“பின்ன என்ன பரத் உங்க அக்கா நீ யாரையாவது லவ் பண்றியா அப்படின்னு கேட்டு இருப்பாங்க நீ அதை சமாளிக்க தெரியாம திருத்திருன்னு முழிச்சிருப்ப!!!! அதனால தான் உங்க அக்கா உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடலாம் அப்படின்னு பேசி இருப்பாங்க !!!!!”

 

 

 

 

“எங்க அப்பா கிட்ட உன் பிரண்ட் லட்சுமி வீட்ல பேசலாமான்னு கேட்டுட்டா !!!!”

 

 

 

“நீங்க சொல்லி இருக்க வேண்டியதுதானே? லக்ஷ்மி ஏற்கனவே கமிட்டட்னு !!!!”

 

 

 

“நான்தான் சொல்லிட்டேனே எங்க அக்கா கிட்ட லட்சுமிக்கு ஏற்கனவே ஒரு லவ் இருக்குனு!!!! அதை கேட்ட உடனே எங்க அக்கா முகம் போன போக்கு இருக்கே சிரிப்பா வந்துடுச்சு எனக்கு !!!!!”

 

 

 

“சரி விடுங்க நம்ம விஷயத்தை எப்போ உங்க வீட்ல இருக்கவங்களுக்கு சொல்ல போறீங்க ????”

 

 

 

“தெரியல பாரதி ஏற்கனவே ஊர்ல பிரச்சனையா இருக்கு !!!கொலை குத்தம் நடக்காத ஊர்ல முதல் முறையா ஒரு கொலை நடந்திருக்கு!!! அதை பத்தின இன்வெஸ்டிகேஷன் முடியட்டும் அப்பா கிட்ட நானே பொறுமையா பேசி புரிய வைத்து… எல்லாத்தையும் பண்ணுறேன் எனக்கு கொஞ்சம் டைம் மட்டும் கொடு…”

 

 

 

“சரி அந்த பிளட் சாம்பிள்ஸ் எல்லாம் நீ பத்திரமா தானே வச்சிருக்க!!!!” 

 

“ஆமாம் பாரதி பத்திரமா தான் இருக்கு !!!!”

 

 

“நந்தினி ஓட அம்மா பிளட் குரூப் என்னன்றத கண்டுபிடிச்சிட்டியா ????”

 

 

 

“நீ வேற அந்த வீட்டு கிட்ட போனா ஒரே அழுக்காச்சு சவுண்டாவே இருக்கு எனக்கே மனசு கொஞ்சம் கஷ்டமாயிடுச்சு இளைச்ச பசங்க சாவு வீட்டுக்கு போக கூடாதுன்னு சொல்லுவாங்க அதனால நானும் போகல !!!”

 

 

 

“சரி விடு சாப்டியா இப்ப என்ன பண்ணிட்டு இருக்க ????”

 

 

இல்ல நான் இன்னும் சாப்பிடல 

 

 

“சாப்பிடாம சோ காமிச்சுட்டு இருக்கியா !!!!பைத்தியம் போய் சாப்பிடு சாப்பிட்டு  ரெஸ்ட் எடு !!!!”

 

 

 

“நீ சாப்டியா ???”

 

 

“இல்லடா செல்லக்குட்டி அப்புறம் சாப்பிட்டுக்கலாம்னு இருக்கேன்!!!

நீ முதல்ல போய் சாப்பிட்டு ரெஸ்ட் எடு மார்னிங் மீட் பண்ணலாம் ஓகே !!!!”

 

 

 

“குட் நைட் டா பப்லி பேபி !!!!”

 

 

“குட் நைட் டி !!!!”

 

 

என்று சொல்லிவிட்டு இருவரும் அவரவர் படுக்கையில் விழுந்தனர்…. அவர்கள் இருவரையும் நித்ராதேவி அரவணைத்துக் கொண்டாள்…

 

 

இப்பொழுது நிம்மதியாக உறங்கிக் கொண்டிருப்பவர்களின் நிம்மதியை கெடுப்பதற்காக அடுத்த நாள் விடியல் வந்தது….

 

 

 

ஆனால் அந்த விடியலில் விநாயகபுரத்தில் இன்னொரு அசம்பாவிதமும் நடந்தது ?????

 

 

 

அப்படி என்ன அங்கு நடந்தது ??? இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில் ….

 

 

 

 

தொடர்ந்து வாசியுங்கள்…

.

 

ஹரிணியின் …..

 

 

“உண்மை வெளிப்படும் நேரம்”

 

 

 

என்னுடைய மற்ற படைப்புகளையும் வாசிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்….

 

 

 

கதை பற்றிய அப்டேட்ஸ் தெரிந்து கொள்ள என்னுடைய ஐடியை பாலோ செய்யுங்கள்….

 

 

 

வாசித்ததற்கு நன்றி….

 

 

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்….

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்