Loading

நேரம் – 2 

 

 

 

 

பரத் நன்றாக உறங்கிக் கொண்டிருந்த வேளையில் அவன் வீட்டின் சுற்றி போடப்பட்டிருந்த கான்கிரீட் சுவரில் ஏறி குதித்த அந்த உருவம் , சுற்றிலும் முற்றிலும் தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று கவனித்தது ஆனால் யாருமே இல்லை அதனால் மெல்ல மெல்ல நடந்து அந்த உருவம் பரத்தின் மெயின் கதவை அடைந்தது ஆனால் மெயின் கதவு உள்பக்கமாய் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது….

 

 

 

எனவே ஜன்னல்கள் ஏதாவது திறந்து உள்ளதா என்று பார்த்து பக்கவாட்டில் இருந்த ஒரு ஜன்னல் திறந்திருப்பதை பார்த்து அந்த ஜன்னலினுள் அந்த உருவம் ஏறி குதித்தது மெதுமெதுவாய் நடந்து அடுத்தவர்களின் தூக்கம் கெடாமல் இருக்க அண்ணனடை போட்டுக்கொண்டு அந்த உருவம் பொறுமையாய் மாடிப்படிகளில் ஏறியது…..

 

 

 

அந்த உருவம் பரத்தின் அரைக்கதவை மெல்லமாய் திறந்து அவன் என்ன செய்கிறான் என்பதை உற்று நோக்கியது….

 

அவன் உறங்கி தான் கொண்டிருக்கிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட அந்த உருவம்  அந்த அறையில் எதையோ ஒன்றை செய்ய ஆரம்பித்தது …..

 

 

 

அதன் வேலை முடிந்ததும்  படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த 

டீ சர்ட்  போட்டிருந்தபரத்தின் பரந்த மார்பின் மீது  தனது கைகளை மேலே போட்டு அவனை இறுக்கி அணைத்து படுத்துக்கொண்டது…..

 

 

 

சிறிது நேரத்தில் பரத்  தன் மீது ஏதோ ஒரு பாரம் இருப்பது போல் உணர்ந்தான்.. தன்னுடைய கண் இமைகளைப் பிரித்து தன் மீது படுத்திருக்கும் அந்த உருவம் யார் என்று பார்த்தவனுக்கு அதிர்ச்சி மேலோகியது….

 

 

 

தன் மீது படுத்து கொண்டு இருந்த அந்த உருவத்தை எழுப்பியவன், 

 

 

“அர லூசு என் மேல வந்து படுத்துட்டு இருக்க எங்க வீட்டு அவங்க கண்ணுலையே சிக்கல் ஐயா நீ அவ்ளோ தைரியமா உனக்கு!!!! என்னோட நெஞ்சு மேலயே படுத்துட்டு இருக்க !!!! “

 

 

“இந்த ஊர்ல இருக்குறவங்க யாராவது பார்த்தா எங்க வீட்டுல இருக்குறவங்க மானம் என்ன ஆகும்???? எனக்கு பயமாக இல்லையா????

முதல்ல உன் மானம் என்ன ஆகும் அடி படுபாவி!!!!

இதெல்லாம் உனக்கு தெரியுதாடி!!!

நீ  பாட்டுக்கு ஹாயா வந்து என்னைய உன் பெட்டாக்கி படுத்துட்டு இருக்கே !!!!”

 

 

 

என்று அந்த உருவத்தை கண்ணா பின்னாவென்று பரத் தீர்த்து தொடங்கினான்

 

 

 

அவன் திட்டியதை அந்த உருவம் பெரிதாக எடுத்துக் கொள்ளவே இல்லை கெக்க பிக்கவென்று சிரித்தது….

 

 

 

“இங்க ஒருத்தன் சீரியஸா பேசிட்டு இருக்கேன் நீ என்னன்னா சிரிச்சிட்டு இருக்க ?????”

 

 

“விடுங்க பப்ளி பேபி நான் ஒன்னும் உங்களை பயமுறுத்தணும்னு இங்க வரல தெரியுதா நான் உங்களை மிஸ் பண்ண அதான் எங்க வீட்ல டூர் போறேன்னு போய் சொல்லிட்டு இங்க வந்துட்டேன் !!!!!”

 

 

என்று ஐ கேன் டூ இட் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஒயிட் கலர் டி-ஷர்டையும் , பிளாக் கலர்  பேண்டையும் அணிந்து தன்னுடைய காதில் ஸ்மைலி சிம்பிள் இருந்த தோடை போட்டிருந்த தன்னுடைய அடர்த்தியான கூந்தலை கொத்தாக சேர்த்து ஒரு போனிடையலில் அடக்கியிருந்த பாரதி இப்படி சொல்லி சிரித்தாள்…

 

 

 

 

 

 

ஆனாலும் உனக்கு தைரியம் ஜாஸ்தி தான் பாரதி. ஆனா இப்படி திருட்டுத்தனமா அடுத்தவங்க வீட்டுக்குள்ள வரக்கூடாது உனக்கு தெரியும் தானே 

 

 

“சரி சரி அடிச்சுக்காத இது என்னோட வருங்கால புருஷன் வீடு தானே  ???? அதாவது என்னுடைய புகுந்த வீடு!!!! இந்த வீட்டுக்கு நான் சொல்லிட்டு வரலாம் சொல்லாமலும் வரலாம் !!!!”

 

 

” எனக்கும் தெரியும் அடுத்தவங்க வீட்டுக்குள்ள இந்த மாதிரி திருட்டுத்தனமா வரக்கூடாதுன்னு ஆனா எனக்கு உங்கள பாக்காம இருக்கிறது எப்படி தெரியுமா இருக்கு!!!!” 

 

“எப்படி இருக்கு ?????”

 

” சங்க இலக்கியத்தில் வருமே தலைவனை காணாமல் பசலை நோய் கண்ட தலைவின்னு அந்த மாதிரியான நிலைமை ஆகிட கூடாது அப்படி என்பதற்காக தான் உங்களை தேடி வந்தேன் !!!!!”

 

 

“நான் எதுக்கு இங்க வந்தேன்னு மறந்துட்டேன் பாருங்களேன் சரி முதல்ல உங்க கண்ண மூடுங்க !!!!”

 

 

 

“நான் ஏன் என் கண்ண மூடணும்!!!!”

 

” குறுக்கு கேள்வி கேட்காதப்பா சொன்னா செய்  அப்புறம் நான் கத்தி ஊரையே கூப்பிட்டு நீ என்னைய கடத்திட்டு வந்துட்டேன்னு சொல்லிடுவேன் !!!!!”

 

 

 

“அம்மா தாயே நீ அப்படி  செஞ்சாலும் செஞ்சிடுவ உன் பேச்சுக்கு மறு பேச்சு ஏது !!!!!”

 

“சரி நான் பண்றேன்” என்று சொன்னவன் தன்னுடைய கண்களை மூடிக்கொண்டான்…

 

 

பாரதி அவனுடைய கண்களை சுற்றி ஒரு கருப்பு நிற ரிப்பனைக் கொண்டு கட்டி விட்டாள்….

 

 

 

பிறகு அவன் கையைப் பிடித்து அவன் படுத்து இருந்த பெட்டில் இருந்து அவனை மென்மையாக எழுப்பி அவனுடைய டேபிளுக்கு அவனை அழைத்து வந்தாள்…

 

 

 

“இப்போ உங்க கண்ணுல கட்டி இருக்க ரிப்பனை எடுத்துடுங்க பரத்!!!!”

 

சொன்னதும் தன் கண்ணில் இருந்த அகற்றியவன் தன் முன்னிருந்த சப்ரைசை பார்த்து வியப்பு அடைந்தான்..

 

ஏனென்றால் அவனுடைய அறை முழுக்க கலர் ரிப்பன் களும் பலூன் களும் கட்டப்பட்டு இருந்தது அவனது ஸ்டடி டேபிளில் அவனுடைய பர்த்டே கேக் வைக்கப்பட்டிருந்தது… அந்த பர்த்டே கேக்கில் 

” ஹாப்பி பர்த்டே பப்ளி பேபி” 

என்று எழுதி இருந்தது….

 

 

 

 

 

இதை பார்த்து அவன் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது…

அவன் கண்களில் வடிந்த கண்ணீரை கண்டு துடித்து போன பாரதி அவன் கண்களில் வடிந்த கண்ணீர் முத்துக்களை துடைத்து விட்டாள்….

 

 

 

“உன் பர்த்டேக்கு கூட மறந்து போயிட்ட இல்ல ஆனா நீ உன் பர்த்டேவ மறந்தாலும்  நான் மறக்க மாட்டேன் !!!!

சோ அதனால தான் இந்த கேக்கை வாங்கி எடுத்துட்டு வந்தேன்!!!!

மணி 12:00 மணி ஆக போகுது முதல்ல காட் கிட்ட பிரே பண்ணிட்டு அப்புறம் கேக்க கட் பண்ணு பரத் !!!!!!”

 

 

என்று சொன்னவள் பரத் பிரே பண்ணுவதை பார்த்து அவளும் கடவுளிடம் வேண்டுதலை செலுத்த ஆரம்பித்தாள்…

 

 

“கடவுளே எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது !!!!ஆனாலும் நான் உங்களை வேண்டுகிறேன் ஏன்னா அதற்கு என்னோட பப்ளி பேபி மட்டும் தான் காரணம் !!!!!!”

 

 

“அவரோட இந்த பர்த்டேக்கு நான் என்ன  உங்ககிட்ட கேட்க போறேன்னா அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாம எந்த ஒரு நோய்  நொடியும் இல்லாம எல்லா காலத்துக்கும் அவர் சந்தோஷமா வாழனும்!!!!!”

 

 

“இதுதான் என்னோட ஆசை கடவுளே !!!!! அவருக்கு நீ சந்தோஷத்த மட்டும் கொடு அவரோட கஷ்டங்களை எனக்கு கொடுத்திரு !!!!!!”

 

 

 

என்று அவள் வேண்டி முடித்தார் அதே நேரம் , பரத்தோ !!!!

 

 

“விநாயகபுரத்து மாரியம்மா என்னோட குல தெய்வமே !!!!! எனக்கு உங்க ரூபத்திலேயே ஒரு தேவதையே எனக்கு அனுப்பி வச்சிருக்கீங்க இந்த தேவதை இன்னைக்கு மேல் கைய விட்டு போயிட கூடாதுமா !!!!!

அது மட்டும் இல்லாம என்னோட பார்பிக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது நான் வரவும் விட மாட்டேன் !!!!!”

 

 

“அவ அவளோட இந்த நல்ல மனசுக்கு நல்லா வாழனும்!!!! அவள நான் மேரேஜ் பண்ணி கண் கலங்காம பார்த்துக்கணும் !!!!!இதுதான் என்னோட ஆசை !!!இதுக்கு என் அப்பா அம்மா ஒத்துக்கணும் எப்படியாச்சும் அப்பா அம்மா ஒத்துக்க வச்சுடு தாயே !!!!!”

 

 

 

 

என்று அவன் வேண்டி முடித்ததும் கண்களை திறந்து பார்த்தான் பாரதி பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்…..

 

 

 

“என்னப்பா சாமி கிட்ட ரொம்ப பெரிய லிஸ்ட் போட்டு வேண்டிட்டு இருக்க போலையே !!!!டைம் போகுது இல்ல கேக்க கட் பண்ணிட்டு படுத்து தூங்கனும்ல !!!!

இல்லனா உனக்கு டார்க் சர்க்கல்ஸ் வந்துரும் !!!!”

 

 

என்று சொன்னவள் அந்த கேக்கின் மீது இருந்த கேண்டில்களை ஏற்றினால் ஏற்றிவிட்டு ஹாப்பி பர்த்டே டூ யூ என்று பாடாமல் , நம்முடைய தமிழிலேயே அழகாக அமைந்துள்ள பிறந்தநாள் பாடலை பாட ஆரம்பித்தாள்..

 

 

 

“நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் !!!!

 

வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும்!!!!

 

அன்பு வேண்டும் அறிவு வேண்டும்!!!!

 

 

அன்பு வேண்டும் பணிவு வேண்டும்!!!!

 

எட்டத்திக்கும் புகழ வேண்டும்!!!!

 

எடுத்துக்காட்டு ஆக வேண்டும்!!! உலகம் பார்க்க உனது பெயரை நிலவு தாளில் எழுத வேண்டும் !!!!

 

சர்க்கரை தமிழ் அள்ளி தாலாட்டு நான் சொல்லி வாழ்த்துகிறோம்!!!!!

 

இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை பப்ளி பேபி !!!!!”

 

 

 

என்று கூறி மெதுவாக தனது கைகளை தட்டினான் 

 

அவள் பிறந்தநாள் வாழ்த்து பாடி முடித்ததும் பரத் கேக்கில் இருந்து கேண்டில்களை தனது இதழால் ஊதி 

அனைத்து விட்டு கேக்கை சிறிய பிளாஸ்டிக் கத்தியால் வெட்டினான்…. வெட்டிய முதல் பீசை பாரதிக்கு ஊட்டி விட்டான் பாரதியும் கேக்கில இருந்து ஒரு பீசை வெட்டி பரத்திற்கு ஊட்டி விட்டாள்….

 

 

 

 

ஆனால் தனக்கு இவ்வாறெல்லாம் நடக்கும் என்று பரத் தனது கனவில் கூட எதிர்பார்த்ததில்லை ஏனென்றால் சிறு வயதிலிருந்து தன்னுடைய பிறந்தநாளுக்கு யாராவது இப்படி சர்ப்ரைஸ் செய்ய மாட்டார்களா என்று அவன் ஏங்கிய காலங்கள் உண்டு. ஆனால் தன்னுடைய காதலி தனக்கு சொல்லாமலேயே தன்னை தேடி வந்து தனக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது அவன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது 

 

 

 

அது மட்டும் இன்றி தன் அவளின் குரலில் ஒரு பாடல் அவளோடு தன்னுடைய 22 வது பிறந்தநாள் கொண்டாட்டம் அவனுக்கு கேட்கவா வேண்டும் சர்க்கரைப் பொங்கலை சாப்பிட்டது போல் உணர்ந்தான் அவன் மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன….

 

 

 

ஹலோ சார் இதுக்கே நீங்க எப்படி சார் பேசினா என்ன அர்த்தம் கொஞ்சம் கையை நீட்டுங்க என்று வரக்கூடிய வலது கையை பிடித்துக் கொண்டவள் தன்னுடைய பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தாள் அதில் ஒரு சிறிய மோதிரம் இருந்தது அந்த மோதிரத்தை பரத்தின் கையில் மாட்டி விட்டாள்….

 

 

 

அந்த மோதிரத்தை பார்த்த பிறகு, அதிர்ச்சி அடைந்து போனான் 

 

 

“ஏய் இது பாக்க கோல்ட் மாதிரி இருக்கே எவ்ளோ சவரம் எப்படி உனக்கு காசு இருந்து கிடைச்சுச்சு கோல்ட் மோதிரம் போடுற அளவுக்கு ?????”

 

 

“ஐயோ உனக்கு கிப்ட் பண்ணதுக்கு கேள்வி கேட்டே சாவடிக்கிறியே!!!

என் சேவிங்ஸ்ல இருந்து இத நான் உனக்காக வாங்கினேன் !!!!!! இந்த மோதிரம் ஒரு அரை பவுன் தான் இருக்கும் அதுவே நான் கம்மின்னு நினைக்கிறேன்!!!! அடுத்த பர்த்டேக்கு ஒரு சவரமா வாங்கி போட்டு விடுறேன் ஓகே !!!!!”

 

 

 

தன்னுடைய ஒரு காலை கீழே மடக்கிய பாரதி பரத்தின் கையை பிடித்து அந்த மோதிரத்தை போட்டுவிட்டு “ஐ லவ் யூ பரத்” என்று கூறி அவனுடைய கையில் முத்தமிட்டாள்…

 

 

“ஒன்னு சொல்லட்டுமா !!!!

உங்க மனச விட இந்த கோல்ட் எனக்கு கால் தூசி தான் !!!!

என்னோட தங்கத்தை விட விலை மதிப்புள்ள ஒரு உறவு எனக்கு இருக்கே அந்த உறவுக்காக இந்த தங்கத்தை கூட நான் போட மாட்டேன் !!!!”

 

 

 

அவள் சொன்ன பதிலை கேட்டதும் பரத் பாரதியை பாய்ந்து அணைத்துக் கொண்டான் அவனுக்கு அந்த அணைப்பு தேவைப்பட்டது போலும் பாரதியும் அவன் அணைத்த இசைந்தாள்….

 

 

 

“நான் உனக்கு என்ன பண்ணிட்டேன்டி !!!!!

நீ ஏன் என்னை இவ்வளவு லவ் பண்ற நீ பண்ற லவ்வால எனக்கு மூச்சு முட்டுது!!!!! ஐ கேன் நாட் கண்ட்ரோல் மை செல்ஃப் என்ன என் கண்ணு முன்னாடி  நல்லா படிக்கிற பையன் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வாங்குறேன் அப்படின்னு என்னை நல்லா புகழ்வாங்க !!!!!

ஆனா அவங்க முதுகு பின்னாடி என் கேரக்டரை கழுவி ஊத்துனவங்க தான் அதிகம் !!!!!”

 

 

 

“என் கேரக்டரை பத்தி உன்கிட்ட தப்பா சொல்லி இருக்காங்க நீயே என்கிட்ட சொல்லி இருக்க பஸ்ட் நான் உன்னை வேணாம் எனக்கு நீ என்னை விட்டு விலகிப் போய்டுவ என்று நினைத்தேன் ஆனா என்ன விட்டு விலகி போகாம என்ன சுத்தி சுத்தி வந்துட்டு இருந்த என் மனசையும் நீ களவாடிட்ட !!!!!”

 

“உனக்கு நான் இந்த வார்த்தையை என்னைக்குமே சொன்னதே இல்ல அப்போ சொன்ன இப்ப மறுபடியும் சொல்றேன் ஐ லவ் யூ சோ மச் மை பாரதி!!!!”

 

 

என்று அவளை அணைத்துக் கொண்டே அவளின் காதோரத்தில் இந்த வார்த்தையை சொன்னான் இவ்வாறு‌ அவளிடம் தன் மனதில் உள்ளவற்றை கொட்டி தீர்த்தான் 

 

 

“பாரதி அவனின் முதுகை மென்மையாய் வருடியபடி பேசுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க !!!!

அவங்களுக்கு உங்க மேல பொறாமை அவ்வளவுதான் !!!!

மத்தவங்க என்ன ஆச்சு நமக்கு கவலை பட கூடாது நம்ப அடுத்தவங்க பேசறது காதுல போட்டு வாங்கிக்காம நம்ம வாழ்க்கையோட வெற்றியை நோக்கி ஓடிட்டே இருக்கணும் !!!!”

 

 

 

 

“நீங்க கேட்டீங்கல  அதான் நீங்க எனக்கு என்ன செஞ்சீங்கன்னு காதல்ல லாபத்தையும் பலனையோ எதிர்பார்க்க கூடாது !!!!!

நம்ம துணையோட நலத்தை மட்டுமே பார்த்து அவங்க சந்தோஷமா இருக்காங்களான்னு பார்த்து அத பார்த்து நம்ப சந்தோஷப்படுறது நம்மளோட சோல் மேட்டுக்கு பக்கபலமா இருக்கிறது, அவங்கள அப்ரிசியேட் பண்றது !!!!

இதுதான் உண்மையான காதல்!!!! நான் அத உங்க கிட்ட எதிர்பார்த்தேன்!!! நீங்களும் என்னை லவ் பண்றீங்கல எனக்கு சப்போர்ட்டா இருக்கீங்கல எனக்கு இது போதும் !!!!!”

 

 

 

 

என்று சொன்னவள் அவனது இரு கன்னங்களிலும் இதழ் பதித்துவிட்டு அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்…

 

 

பரத்தும் பாரதியின் பிறை நெற்றியில் தனது இதழை ஒற்றி எடுத்தவன், அவளை தன்னுடைய நெஞ்சத்தில் தஞ்சம் ஆக்கினான் !!!!!!

 

 

இருவரும் தங்களின் அந்த அணைப்பு என்ற உலகத்தில் இருந்து வெளியே வரவே இல்லை அப்படியே அதனுள் ஆழமாய் மூழ்கி போயிருந்தனர்….

 

 

 

“முதலில் பரத்தின் அழைப்பில் இருந்து வெளியே வந்த பாரதி மணி ஒன்னாக போகுது!!!!!

இது பேய் உலா வருகின்ற நேரம் ஆச்சே!!!!

சரி சரி நீ படுத்து தூங்கு உங்க அம்மாவும் அப்பாவும் கண்டுபிடிச்சாங்கனு வை அவ்வளவுதான் நீ கைமா தான்!!!!!”

 

என்று சொன்னவள் அந்த அறையில் தான் அலங்கரித்து வைத்து டெக்கரேஷன்களை எடுத்து ஒரு அட்டை பெட்டியில் வைத்துக் கொண்டிருந்தாள் அது அனைத்தையும் எடுத்து முடித்தவள்,

 

 

” கேக்க மட்டும் நீ எப்படியாச்சும் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிடு இல்லன்னா பக்கத்து வீட்ல யாராவது பசங்க இருந்தா கொடுத்துடு நான் போயிட்டு வரேன்!!!!!”

 

 

என்று சொல்லிவிட்டு செல்ல முற்பட்ட அவளின் கையைப் பிடித்தவன்,

 

 

“ஆமா என்ன தூங்க வச்சுட்டு நீ எங்க தனியா போக போற????? இந்த நைட்ல நீ தனியா போக வேணாம்!!!!

உனக்கு இந்த ஊர்ல யாரை தெரியும்னு நைட் நேரத்துல புறப்பட்டு வந்த எனக்கு பயமா இருக்கு!!!!

உன்னோட சேப்டிய நெனச்சு!!!!”

 

“என் மேல உனக்கு இவ்ளோ அக்கறை சக்கரையா ஹாப்பியா இருக்கு எனக்கு!!!!”

 

என்று சொன்னால் தடுக்கும் விதமாக

 

” நீ பேசாம இங்கே தங்கிக்கோ!!!”

 

என்று பரத் சொல்ல ,

 

” அப்புறம் உங்க அப்பா அம்மாவுக்கு யார் பதில் சொல்றது?????”

 

 

என்று பாரதி பதில் கேள்வி கேட்டாள்.

 

“நான் மார்னிங் அவங்க எல்லாம் எழுந்துக்கறதுக்கு முன்னாடி உன்ன எழுப்பி விடுறேன் அப்ப நீ  கிளம்பிடு!!!!!”

 

 

 

அது சரி என்று சொன்னவள் பரத் படுத்திருந்த கட்டிலின் மேலே படுத்துக்கொண்டாள்….

 

 

அவன் அவளிடம் ஏதோ பேச முற்பட்டான்….

 

“பெட்ஷீட் எடுத்துக்கலையா பாரதி???”

 

என்று கேட்டுக் கொண்டே அவள் படுத்து இருந்த பெட்டை நோக்கி திரும்பி பார்த்தபோது அவள் உறங்கிப் போயிருந்தாள்….

 

 

அவளை ஒரு புன் சிரிப்புடன் நோக்கியவன்,

 

 

“இவை எல்லா விஷயத்திலும்  நம்ம மெச்சூர்டா நடந்துக்குறோம்னு நினைக்கிறா!!!!  ஆனா கடா வயசானாலும் குழந்தை மாதிரி தான் நடந்துக்கிறா!!!!!”

 

 

 

என்று அவள் தூங்கி விட்டதை உணர்ந்தவன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு  அந்த பெட்டுக்கு பக்கத்தில் இருந்த சோபாவின் மீது படுத்து உறங்கி விட்டான்…..

 

 

 

இவர்கள் அமைதியாக உறங்கி

க் கொண்டிருந்த வேளையில் விநாயகபுரத்து ஊரின் எல்லையில் ஒரு மர்ம  உருவம் ஒரு பெண்ணை கொன்று அந்தப் பெண் துடி துடித்து தன் உயிரை விடுவதை ரசித்து கொண்டு இருந்தது…..

 

 

 

 

விநாயகபுரத்தில் முதல் பிரளயம் ஆரம்பம்…..

 

 

 

இதன் தொடர்ச்சி அடுத்த பகுதியில்….

 

ஹரிணியின்…..

 

“உண்மை வெளிப்படும் நேரம்”

 

 

வாசித்ததற்கு நன்றி!!!!

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்