Loading

இந்த கதையில வர ஊர் பெயர் மற்றும் கேரக்டர்கள் அனைத்தும் என்னோட கற்பனைதான்…. ஏன்னா விநாயகபுரம் என்ற பெயரில் நிஜமாகவே இரண்டு ஊர் இருக்கு !!!! அதனால்தான் இந்த டிஸ்க்ளைமர்.. இந்த கத்துக்குட்டி பொண்ணுக்கு நீங்க கொடுக்கிற  கொஞ்சம் ஆதரவுனால இந்த கதையை நான் எழுத ஆரம்பிச்சு இருக்கேன்…

வாங்க இப்போ நாம கதைக்குள்ள போகலாம்..

 

 

————————————–

 

 

 

நேரம் – 1

 

 

 

அது ஒரு அந்தி மாலை பொழுது அந்தி மாலைப் பொழுதில் விநாயகபுரத்தில் இருந்த சிறிய இரு மலைகள் போன்று இருந்த குன்றுகளுக்கு நடுவில் சூரியன் அஸ்தமனம் ஆகிக்கொண்டிருந்தது….

 

 

இந்த அழகிய காட்சியைதனது வீட்டின் மாடியில் இருந்து பரத் தனது கையில் இருந்த பிளாக் டீயை உறிஞ்சிய படி தனது கண்கள் கவினுற கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்…

 

 

 

 

அவனுக்கு எப்பொழுதும் தனது ஊர் விநாயகபுரம் என்றால் மிகவும் பிடிக்கும் ஏனென்றால் ஊட்டி போன்று காலையிலும் மாலையிலும் குளுகுளு என்று இருக்கும் காலநிலை அது மட்டுமின்றி சற்று தொலைவில் இருக்கும் மலைகளின் இயற்கை காட்சிகள் அதுமட்டுமின்றி அங்கு இருந்து வீசும் இளம் காற்று இவை அனைத்தும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்…..

 

 

 

 

 

அவனுடைய இந்த ஊர் திருவண்ணாமலையில் உள்ள வந்தவாசி எனும் வட்டாரத்தில் உள்ள ஒரு சிறிய குக்கிராமம்…. இந்த கிராமத்தைப் பற்றிய விவரங்கள் போதும் இப்பொழுது கதாநாயகனை பற்றி தெரிந்து கொள்வோம்….

 

 

 

 

நமது கதாநாயகன் பரத்திற்கு வயது 22  அவன் ஜிம்முக்கு ஏதும் சொல்லாமல் வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்து முறுக்கேறிய உடல்  தனது அடர்த்தியான சிகை மற்றும் அவனுடைய மின்னல் போன்ற பார்வை அனைவரையுமே கவரும்….

 

 

அதை பார்க்கும் அனைத்து பெண்களுக்கும் ஒரு முறையாவது அவளை நின்று பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்று தோன்றும் அந்த அளவிற்கு பாந்தமான மாநிற அழகன்….

 

 

 

தன்னுடைய கல்லூரியின் சட்டப்படிப்பின் இறுதித்தேர்வு அவனுக்கு முடிந்துவிட்டது….

எனவே விடுமுறை விட்டதனால் தனது விடுமுறையை கழிப்பதற்காக தன்னுடைய சொந்த கிராமமான விநாயகபுரத்திற்கு வந்துள்ளான்….

 

 

 

சூரிய அஸ்தமனத்தை ரசித்தவன் தன்னுடைய வீட்டில் இருந்து அறைக்கு சென்றான் அதே நேரம் அவனுடைய அம்மா சுதா 

 

 

“மேல போய் என்னதான் பண்ணிட்டு வர??? அவ்வளவு நேரம் நின்னுட்டு எத பார்த்துட்டு வர ????உன்ன எங்க எல்லாம் போய் தேடுவது பரத் ????”

 

 

 

 

தன்னுடைய அம்மா பேச்சை கேட்டவனுக்கு 

 

 

“என்னமா நான் என்ன சின்ன குழந்தையா இங்கிருந்து எங்கேயாவது போய்டவா போறேன்!!!! அதுவும் இல்லாம இது நம்ம ஊரு தானே நம்ம வீட்ல தானே இருக்கேன் என்னமோ நான் ஊர் போய் சுத்திட்டு வர மாதிரி இப்படி அட்வைஸ் குடுக்குறியேமா !!!!”

 

 

என்று தன் தாயிடம் அலுத்து கொண்டான்….

 

“சொல்லுடா சொல்லுவ ஊர் சுத்துவேன் யாரையாவது பொண்ணு கிடைச்சா கரெக்ட் பண்ணுவேன் ???? இப்படி எல்லாம் பண்ணுவேன்னு சொல்லாம சொல்றியா !!!!!”

 

 

 

என்று அவனுடைய தாய் புருவத்தை உயர்த்தி அவனை கேள்வி கேட்கவும்

 

அவனுடைய மைண்ட் வாய்ஸ்

 

 

” இந்த வீட்ல நான் லா படிக்கிறனா ??? இல்ல எங்க அம்மா லா படிக்கிறாங்களா ???? கோர்ட்ல வாதாடுற லாயர் கூட இந்த அளவுக்கு அதிகமா கேள்வி கேட்க மாட்டாங்கப்பா ????”

 

 

“ஆமாமா நீ கேள்வி கேட்டு கிழிச்சிட்டாலும்!!!!”

 

 

என்று அவனின் மனசாட்சி அவனே கிழித்து தொங்க விட்டது…..

 

 

“ஏய் மனசாட்சி அந்த பக்கம் ஓடிப் போயிடு  !!!!

நானே வெறியில இருக்கேன் !!!!”

 

 

 

அவன் மனசாட்சியை துரத்தி  விட்ட நேரத்தில் அவனின் தாயார் அவன் அருகே வந்து ,

 

 

” எவள நெனச்சி பா கனவு கண்டிட்டு இருக்க !!!! எந்த கனவு கன்னியோட கனவுல டான்ஸ் ஆடிட்டு இருக்கே!!!! கனவு கண்டுட்டு இருக்காம வந்து முதல்ல சாப்பிடு!!!!

உனக்கு தனியா வெத்தலை பாக்கு வச்சு அழைச்சு உன்ன சாப்பிட சொல்லனுமா ????”

 

 

 

 

என்று அவர் சொல்லவும் , தன்னுடைய தாயின் பேச்சை தட்டாதவன் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு தன்னுடைய அறைக்கு சென்றான்….

 

 

 

தன்னுடைய அறையில் இருந்த கட்டிலில் படுத்தவன் யோசிக்க ஆரம்பித்தான் அவன் தாயார் சொல்லிய ,

 

 

“எந்த கனவு கன்னியோட கனவுல டான்ஸ் ஆடிட்டு இருக்க !!!!! “

 

என்ற வாக்கியம் அவனது மனதில் திரும்பத் திரும்ப சுற்றி வந்தது…

 

 

 

 

“எனக்கு எங்கம்மா கனவுக்கன்னி இருக்காங்க !!!!

எனக்கு ஒரே ஒரு ஆக்ஷன் கன்னி தான் இருக்கா !!!! என்னோட ஆக்ஷன் கன்னியை  பிரிஞ்சிட்டு நான் இங்க தனியா அல்லாடுறேன் !!!!!”

 

 

என்று மனதில் புலம்பி கொண்டிருந்தான்….

 

 

அவனுடைய ஆக்ஷன் கன்னி, வேறு யாருமில்லை நம்முடைய கதாநாயகி பாரதி தான் ….. பாரதி நம் கதாநாயகன் பரத்துடன் கல்லூரி படித்த தோழி…. அவள் சிறுவயதில் இருந்து பரத்தை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்தாள்… புகையா இருந்தாலும் காதலாய் இருந்தாலும் உண்மையாக இருந்தாலும் அதை  வெகு நாட்களுக்குமறைக்க முடியாது அல்லவா !!!!!!

 

 

அதனால் தன்னுடைய எண்ண ஓட்டத்தில் இருந்ததை கல்லூரி வயதில் அவனிடம் சொல்லி விட்டாள் முதலில் அவளின் காதலை ஏற்க மறுத்தவன்…. பின்பு மனம் மாறி அவளை ஏற்றுக் கொண்டான்…

 

 

 

பரத் தன்னுடைய பள்ளிக்காலத்தில் இருந்து கல்லூரி காலம் வரை நடந்த அனைத்து தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்றவன்….

 

தன்னுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் பள்ளி அளவில் 463 மதிப்பெண்களையும் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது 573 மதிப்பெண்களையும் பெற்று முதலிடத்தை பிடித்தான்….

 

 

பாரதியும்  அவனுக்கு சளைத்தவல்ல!!!!! அவளும் நன்றாக படிக்க கூடியவள் தான் ஆனால் அவளுக்கு கணிதம் என்றால் பிடிக்காது அதனால்தான் சட்டப்படிப்பு விரும்பி தேர்வு செய்தால் அதில் தங்க பதக்கத்தையும் வென்றாள் அவளுக்கு கணிதம் என்றால் பிடிக்காது அது மட்டுமே அவளுக்கு இருக்கும் ஒரு சிறிய குறை இது பலருக்கும் இருக்கும் குறை தானே அதனால் இதை பெரிதாக கண்டு கொள்ளாமல் விட்டு விடுவோம்!!!!

 

 

முக்கியமாக இந்த காலத்து பெண்கள் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய தற்காப்பு கலையான  கராத்தேவை அவள் கற்று வைத்திருந்தாள்…. 

 

அதுமட்டுமின்றி வாய் துடுக்கான பெண்ணும் கூட!!!!!

அவள் படப்படவென்று பேசினாலும் அதில் அர்த்தம் இருக்கும்!!!!!

 

ஆனால் நம் நாயகன் அதற்கு அப்படியே நேர் எதிர் சைலன்ட் டைப் என்று சொல்வார்கள் அல்லவா அப்படி இருப்பான் நம் நாயகன் ஆனால் மூளை மிகவும் ஷார்ப் படிப்பிலும் கெட்டி….

 

பாரதி இப்படி வாய் துடுக்கான பெண்ணாக இருந்தது தான் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது…. அது மட்டும் இன்றி அவள் அன்பானவளும் கூட தம்மிடம் உதவி என்று கேட்டால் தயங்காமல் உதவி செய்வாள்…

 

 

 

 

அது மட்டும் இன்றி யாருக்காவது ஏதாவது பிரச்சனை இருந்தால் அது தனது நண்பர்களாய் இருந்தால் அவர்களின் சார்பாக அவர்களுக்கு உறுதுணையாய் நிற்பது முதலாளாய் அவளாகத்தான் இருக்கும்!!!!

 

 

 

அதுமட்டுமின்றி யாரேனும் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தாலோ இல்லை எனில் தமக்கு பிடித்தவர்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தாலோ!!!!

 

 

சற்றும் யோசிக்காமல்  அவர்களிடம் கையை நீட்டி விடுவாள்!!!!!!

அதனால்தான் நம் நாயகன் அவளை ஆக்ஷன் கன்னி என்று சொல்கிறான்…

 

 

 

அவளுக்கு இனிமையான வசீகரிக்கும் குரலும் உண்டு அந்த குரலின் மூலம் அவள் பாடும் பாடல்கள் பரத்திற்கு மிகவும் பிடிக்கும்!!!!

ஆனால்

அது அவனுக்கு மட்டுமே உரித்தானது !!!!!! அவள் பாடும் சினிமா பாடல்களை அவன் விரும்பி கேட்பான்….

 

 

 

 

 

அவளின் குணநலன்கள் மொத்தமா அவனுக்கு பிடித்து போய் இருந்தது விடுமுறைக்கு தனது வீட்டிற்கு வந்தாலும் அவளை அதிகமாகவே மிஸ் செய்தான்…..

 

 

அவள் இல்லாத நேரம் அவனுக்கு மழை பெய்யாத பாலைவனத்தில் இருக்கும் நிலை போன்று இருந்தது….

 

 

 

இரவு உணவிற்கு அவன் தாய் பாரத்தை அழைத்தும் அவன் இரவு உணவு உண்பதற்கு செல்லவில்லை தனக்கு பசிக்கவில்லை என்று சொல்லிவிட்டு படுக்கையறைக்கு சென்றவன் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு அப்படியே படுத்து விட்டான் 

 

படுத்த பின்பும் உறக்கம் வந்த பாடில்லை எனவே எனக்கு பிடித்த எஸ்பிபி யின் ஒரு பாட்டை மொபைலில் இருந்து தனது ப்ளூடூத்திற்கு கனெக்ட் செய்து ஒலிக்க விட்டான்…..

 

 

 

 

🎶உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே

உம் மேலே ஆசைப்பட்டு

காத்து காத்து நின்னேனே !!!!!

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே!!!!

உம் மேலே ஆசைப்பட்டு

காத்து காத்து நின்னேனெ!!!

உன் முகம் பார்த்து நிம்மதியாச்சு!!!!

என் மனம் தான பாடிடலாச்சு!!

என்னோட பாட்டு சத்தம் தேடும்உன்ன பின்னாலே!!!

எப்போதும்உன்னைதொட்டுபாடபோறேன்தன்னாலே!!!!🎶

 

 

 

🎶சென்பகமே சென்பகமே

தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

சென்பகமே சென்பகமே

தென்பொதிகை சந்தனமே🎶

…..

 

 

 

என்று இளையராஜாவின் மெலோடி பபாடல் கேட்ட ஒரு சில நிமிடங்களிலேயே ப்ளூடூத்தை ஆப் செய்து விட்டு உறக்கத்தை தழுவி இருந்தான் பரத் …

 

 

 

 

அதே நேரம் அந்த ஊரின் எல்லையில் ஒரு மர்மமான உருவம் கருப்பு நிற ஜெருக்கு நீ போட்டுக்கொண்டு அதற்கு மேல் ஒரு போர்வையை போர்த்திக் கொண்டு கையில் ஒரு சுத்தியலுடன் நின்று கொண்டிருந்தது…..

 

 

 

அதேநேரம் ஒரு மர்மமான ஆள் பரத்தின் வீட்டு சுற்றுசுவரின் மேலே ஏறி அவனின் வீட்டிற்குள் குதித்தான்…

 

 

 

 

 

இதற்கு மேல் என்ன நடக்கும் என்பதை அறிய நாம் அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம் 

 

இதன் தொடர்ச்சி அடுத்த அத்தியாயத்தில்….

 

 

 

தொடர்ந்து வாசியுங்கள்….

 

ஹரிணியின்……

 

 

“உண்மை வெளிப்படும் நேரம் “

 

 

 

இந்த அத்தியாயத்தை வாசித்ததற்கு நன்றி !!!!!!!

 

மேலும் எனது மற்ற படைப்புகளை வாசிக்குமாறு தாழ்மையுடன் கே

ட்டுக்கொள்கின்றேன் இது கிரைம் லவ் ட்ரில்லர் இது மூன்றும் கலந்த ஸ்டோரி அதனால மறக்காம படிச்சிட்டு உங்களோட கமெண்ட குடுங்க உங்க ஆதரவையும் எனக்கு குடுங்க இந்த அத்தியாயம் எப்படி இருந்துச்சுன்னு மறக்காம எனக்கு கமெண்ட்ல சொல்லுங்க !!!!

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment