
அக்குழந்தையின் அன்னை இறுதியாக தன்னிடம் கூறியதையும் அவளிடம் கூற, மேலும் இறுகியவள், ஒரு முறை உறங்கி கொண்டிருந்த குழந்தையை பார்த்துவிட்டு “ரே..” என்று அழைத்தாள்.
அவளின் பழைய அழைப்பில் துடித்த மனதை அடக்கியவன் ‘நோ ரேயா.. இது தப்பு உன்ன நம்பி வாகி இருக்கா..’ என்று தன்னை நம்பி வந்தவளை சிந்தித்து பழைய நினைவுகளில் தத்தளித்து கொண்டிருந்தவனை,
மறுபடியும் “ரே..” என்று வார்த்தைக்கே வலித்து விடாமல் பெண்ணவள் அழைக்க, இம்முறை முகம் இறுகியது அவன் முறையாகி போனது.
பின் தன்னை சமன்படுத்தியவன் “ம்ம் சொல்லு”
“ரே.. குழந்தைய என் கூட வச்சிக்கவா” என்றவளின் கண்கள் கலங்கி விட, அவனோ பெண்ணவளையே அழுத்தமாக பார்த்திருக்க
“பிளீஸ் ரே முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத.. என்ன பொறுத்தவரை இனி இந்த குழந்தை தான் எல்லாம்.. உன்னையே என்கிட்டயிருந்து பிடுங்கிட்ட போல இந்த குழந்தையயும் என்கிட்டயிருந்து பிடுங்கிட மாட்ட தான” என்றவளின் வார்த்தையில் புருவம் உயர்த்தியவன் “சோ உன் வாழ்க்கைய இப்படியே கொண்டு போயிடலாம்ன்னு நினைக்கியா”
“நான் வாழவ தகுதி இல்லன்னு நினைக்கிறேன் ரே.. ஆனா இப்போ குழந்தைக்காக வாழ ஆசையாயிருக்கு.. பிளீஸ் ரே.. நானே குழந்தைய வச்சிக்குறேன்” என்றவள் கதறி அழுது விட,
அதில் பதறி அவளை தோலோடு அணைத்தவன் “தியா அழுகாத.. சரி நீயே குழந்தைய வச்சிக்க.. ஆனா அந்த பொண்ணு குழந்தைக்கு ஆபத்துன்னு சொன்னா.. சோ டேக் கேர்”
“தேங்க்ஸ் ரே” என்று அவன் கைப்பற்றி நன்றி கூற, ரேயனோ “தியா உன்கிட்ட ஒன்னு கேக்கணும்”
“ம்ம் கேளு”
“உனக்கு என்ன தான் பிராப்ளம்.. அன்னைக்கு சார பாக்கும் போது கூட ஷிவராகி மயங்கி விழுந்திட்ட.. இன்னைக்கும் இப்படி தான்.. ஏன் இப்படி மாறிட்ட பழைய போல இல்ல”
“ஆமா ரே பழைய போல இல்ல தான்.. அப்போ உன்னோட யாழியா இருந்தேன்.. இப்போ உனக்கு தியாவா தெரியுறேன்” என்றவளுக்கு கடந்த காலத்தின் காதல் தந்த அழுத்தங்கள் வார்த்தைகளாக அதற்கு காரணமானவனிடமே விழ,
ஏற்கனவே அவளின் நிலைக்கு தானே காரணமென்று தத்தளித்து கொண்டிருந்தவன்,
இப்போது பெண்ணவளின் பேச்சில் ஏற்கனவே காயப்பட்டவளை தானும் பேசி காயப்படுத்தி விடுவோமோ என்று எண்ணி விறு விறுவென்று அங்கிருந்து வெளியே வந்து விட, போகும் அவனை பார்த்திருந்தவள் குழந்தை சிணுங்கும் சத்தம் கேட்டு தொட்டிலை ஆட்டினாள்.
****
அதன் பின் குழந்தையின் அன்னைக்கு செய்ய வேண்டிய காரியங்களை மருத்துவமனையில் முடிக்க கூறியவன் குழந்தை மற்றும் தியாவின் நலன் கருதி மருத்துவமனையிலே இரண்டு நாட்கள் இருக்க வைத்து, அதன் பின்னே தியாவை குழந்தையுடன் அவளின் வீட்டிற்கு அழைத்து வந்தான்.
முந்தைய நாளே ருத்ரனை வீட்டியில் விஷயத்த கூற சொல்லிவிட்டு தானும் அழைப்பு மூலம் எடுத்து கூறிவிட, அவர்கள் வரவும் முதிவரும் சித்திரா தேவியுடன் ஆரத்தி எடுக்க தயாராக வாசல்யே நின்றார்.
குழந்தையுடன் மூவரும் காரில் வந்திறங்க, குழந்தை மற்றும் தியாவிற்கும் முதியவர் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் வரவேற்றார்.
****
இப்படியே அன்றைய பொழுது கழிந்து மறுநாள் பெண்ணவள் அழுவலகத்துக்கு செல்ல தயாராகிவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு கீழே வர, அதே நேரம் ரேயனும் வீட்டிற்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.
அதோடு குழந்தையை பாட்டி கையில் கொடுத்த தியா “கிழவி நான் அடிக்கடி வந்து குழந்தைய பாத்து போக வருவேன்.. அத தவிர்த்து விடாம அழுதா எனக்கு கால் பண்ணிடு..” என்று குழந்தையின் தலையில் முத்தமிட்டு “குட்டி.. பாட்டிகிட்ட அழாம இருக்கணும்.. அம்மா வந்துருவேன் சரியா” என்க,
முதியவரோ “சரிடிமா நான் பாத்துக்குறேன் கூட சித்துவும் இருக்காள சேந்து பாத்துக்குவோம்.. நீ பத்திரமா போயிட்டு வா” என்றதும் அங்கிருந்து விடை பெற்று வெளியே வர, அவனும் குழந்தையை கொஞ்சிவிட்டு அவர்களிடம் தலையசைத்து விட்டு வெளியே வந்து அவள் வண்டியில் ஏறினான்.
அதில் முறைத்தவள் “உன் வண்டில வர வேண்டி தான”
“உனக்கு இன்னும் கால் காயம் சரியாகல தான அதுவரை இப்படி தான்”
“கை நல்லா தான் இருக்கு.. எனக்கு வண்டி ஓட்டிக்க முடியும் தள்ளு”
“திருப்பி திருப்பி வாய் கொடுக்காம வண்டியில ஏறு” என்க, பெண்ணவளும் எரிச்சலுடன் வண்டியில் ஏறி கொண்டாள்.
சிறிது தூரம் சென்று கொண்டிருக்க பேச்சை கொடுத்த ரேயன் “தியா.. உன்கிட்ட ஒன்னு கேக்கவா”
“என்ன”
“இல்ல.. பாட்டியும் வயசானவங்க அதோட சித்திராவும் சின்ன பொண்ணு தான”
“அதுக்கு”
“ஒன்னும் இல்ல.. நீ ஆபீஸ் வருற நேரம் வாகிகிட்ட குழந்தைய கொடுத்தா பாத்துப்பாடி.. குழந்தைய சுத்தி ஆபத்து இருக்கு.. சோ அவங்க ரெண்டு பேரு எப்படி ஹேன்டியில் பண்ண முடியும்.. வாகி ஏற்கனவே பேபி எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு.. அதோடு அவளும் நம்ம டிபார்ட்மெண்ட் இருந்தவ தான என்ன பிராப்ளம் வந்தாலும்..” என்று கூறி கொண்டே போக, வாகி என்ற பெயரை கேட்டதுமே கண்கள் சிவந்தவள் “போதும் நிறுத்து என்கிட்டயிருக்கிற குழந்தைய.. அவகிட்ட தூக்கி கொடுக்கணும் அது தான உன் எண்ணம்”
“தியா.. நான் சொல்லுறத கேளு”
“நீ ஒன்னும் சொல்லி கிழிக்க வேண்டாம்.. எப்போவுமே என்கிட்ட இருக்கிறத அவளுக்கு தூக்கி கொடுக்கிற வேலைய பண்ண நினைக்காத எல்லா நேரமும் சும்மா வேடிக்க பாக்க மாட்டேன்.. இதுக்கு மேல இதபத்தி பேசிறாத” என்க, அவனும் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அமைதியாகி வரவேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
****
இருவரும் வந்ததும் ருத்ரன் “ரேயன் அந்த பொண்ணு இன்னும் கடத்தப்படல அண்ட் நீ சொன்ன போல அவள ஃபாலோ பண்ணினேன்.. நான் ஃபாலோ பண்ணின வரை அந்த பொண்ணு காலேஜ் போகவே இல்ல.. நான் ஃபாலோ பண்ணின மூணு நாள்ல முதல் நாள் மட்டும் ஹாஸ்பிட்டல் மட்டும் போனா.. நானும் பின்னாடியே போய் விசாரிச்சன்.. ஷீ ஸ் ப்ரெக்னன்ட்” என்றதும் இருவரும் ஒரு சேர “வாட்” என்று அதிர்ந்தனர்.
பின் ருத்ரன் “எஸ்.. ஷீ ஸ் ப்ரெக்னன்ட்.. அவளுக்கும் அப்போது தான் தெரிஞ்சிருக்கும் போல வெளிய வரும் போது அழுதுட்டே தான் வந்த” என்றதும் நெற்றியை நீவிய ரேயன் “எந்த ஹாஸ்பிட்டல்”
“******** ஹாஸ்பிட்டல்” என்க, அப்பெயரை கேட்டு தியாவின் உடல்கள் நடுங்க, கடினப்பட்டு கட்டுப்படுத்திருக்க, அது ரேயன் கண்ணிலும் பிடிப்பட்டது.
இப்போது ரேயன் “சரி மச்சி.. நீ அந்த பொண்ணு மேல எப்போவும் ஒரு கண்ணு வச்சிக்க.. நானும் உன் தோழியும் ஹாஸ்பிட்டல் போறோம்.. நீ உன் ப்ரெண்ட் நேம்ல அப்பாயின்ட்மென்ட் போட்டு வை” என்றதும் அவன் திரு திருவென விழிக்க,
“அடேய் டாக்டர்கிட்ட பெர்சனலா விசாரிக்கணும்டா.. சோ வெளிய யாருக்கும் தெரிய கூடாது.. அதுக்கு தான் இந்த அப்பாயின்ட்மென்ட்” என்றதை கேட்டு அசடு வழிந்தவனிடம் “டேய் மச்சி அடிக்கடி நினைவுப்படுத்த முடியாது.. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு” என்றவன் தியாவை பார்த்துவிட்டு,
“இனி அவ தான் என்னோட முதலும் முடிவும்.. அவயிருந்த மனசுல யாருக்குமே இடமேயில்ல அப்போவும் இப்போவும் எப்போவுமே” என்றவனின் முகம் அவனின் மனைவியை நினைத்து மலர, அதில் முகம் இறுகியவள் வெளியே வர துடிக்கும் உணர்ச்சிகளை அடக்கிவிட்டு “ரேயன் என்னால ஹாஸ்ப்பிட்டல் வர முடியாது.. நான் வீட்டுக்கு போகனும்”
“தியா புரிஞ்சி தான் பேசுறியா.. நான் எப்படி அங்க போக முடியும்.. காய்ச்சல் வயிறு வலின்னா நானே போயிடுவேன் இது பொண்ணுங்க சமாசாராம்மா”
“ம்ம்.. நீ லேடி கெட்அப் போட்டு கூட போ.. ஆனா நான் வர மாட்டேன்” என்றதில் ருத்ரன் சிந்தித்து பார்த்து கிலுக்கன சிரிக்க, அவனின் எண்ணம் ஓட்டம் புரிந்த தியாவின் இதழ்களும் புன்னகைத்தது.
பின் அவன் முறைத்ததில் ருத்ரன் வாயை பொத்தி கொள்ள, பார்வையை அவளின் புறம் திருப்பியவன் “நீ வரலைன்னா என்ன.. என் செல்லத்த கூப்பிட்டா வருவா” என்று அழைப்பு சித்திராவிற்கு அழைப்பு விடுக்க,
அவன் யாரை சொல்கிறான் என்று உணர்ந்து அவனை முறைத்தவள், அழைப்பு ஏற்கப்படவும் “செல்லமே நான் மாமு பேசுறேன்” என்றதும் தான் தாமதம் அவனின் திறன்பேசியை பிடுங்கி அழைப்பை துண்டித்த தியா “நானே வரேன்.. ருத்ரன் அப்பாயின்ட் போடு”
“தட்ஸ் சவுண்ட்ஸ் குட்” என்றவன் யோசனையாக இருக்கும் ருத்ரனிடம் பார்வையால் என்னவென்று வினவ,
அவனோ “அது ஒன்னும் இல்ல ரேயா.. இப்போ தான் பொண்டாட்டி பத்தி காதல்ல உருகினீங்க அதுக்குள்ள ஒரு பிள்ளைக்கு ரூட் போடுறீங்களே” என்றதை அவன் தோலில் தட்டிய ரேயன் சிரிக்க, பற்களை கடித்த தியா “மிஸ்டர் மச்சி.. அவன் செல்லமேன்னு சொன்னது உன் பொண்டாட்டி” என்றதை கேட்டு
“அட சண்டாளா” என்று அவனை முறைக்க, அதை பொருட்ப்படுத்தாமல் விசில் அடித்தவாறே வெளியே சென்று விட்டான்.
*****
மாலை போல் பெண்ணவளுடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தவன் மருத்துவரின் அழைப்புக்காக காத்திருக்க,
அவளோ அந்த மருத்துவமனையை உணவற்று வெரித்திருந்தால், அப்போது ரேயனிடம் படிவத்தை கொடுத்த தாதியர் “சார் உங்க ஒய்ஃப் டீட்டைல்ஸ் ஃபீல் பண்ணி கொடுங்க” என்றதும் அவனிடமிருந்ததை வெடுக்கென்று பிடுங்கிய தியா “அவர் என்னோட ஹஸ்பன்ட் இல்ல.. நானே ஃபில் பண்றேன்” என்று வாங்கி எழுதி கொடுக்க,
அவள் கணவர் பெயர் எழுதாமல் விட்டதில் தாதியரோ பெண்ணவளை ஏற இறங்க பார்த்து சென்றாள்.
அதன் பின் மருத்துவரும் அழைத்திருக்க டாக்டர் சர்வேந்திரன் மகப்பேறு மருத்துவர் என்ற பலகை நோட்டமிட்டு இருவரும் உள்ளே நுழைந்திருக்க, அங்கிருந்த தாதியர் “ரெண்டு பேரும் உக்காருங்க சார் ரவுண்ட்ஸ் போயிருக்காங்க.. இப்போ வந்துடுவார்” என்று அவர் வெளியே சென்று விட,
ரேயன் சுற்றி அறையை நோட்டமிட்டு கொண்டிருக்க, பெண்ணவளோ உயிருந்தும் இல்லா நிலையில் அமர்ந்திருக்க, அவளின் கையை பற்றியவன் “என்னடி உனக்கு” என்று கேட்டு கொண்டிருக்கவும் கதவு திறக்கப்படவும் சரியாகயிருந்தது, உள்ளே வந்தவனும் “எக்ஸுஸ் மீ” என்று கைகளை கழுவிவிட்டு வர,
அவனின் குரலைகேட்டு நிமிர்ந்த தியா “சர்வா” என்று பெண்ணவள் அதிர்ந்து எழுந்து விட்டாள்.
அவளை கண்ட சந்தோசத்தில் கழுவிய கையை கூட தொடக்க மறந்து பெண்ணவளை அணைத்து விடுவித்தவன் “ஏய் பம்பர கண்ணு எப்படிடி இருக்க.. உன்ன எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா.. ஆனா நீ கொஞ்சம் கூட நான் பிரிஞ்ச கவலை இல்லாமல் குண்டாகி உண்டாகி வந்திருக்க” என்று நக்கலடித்துவிட்டு ரேயனின் முறைப்பை கண்டு “தப்பா நினைக்க வேண்டாம் டூயூட் உங்க ஒய்ஃப் என்னோட காலேஜ் மேட்” என்றதும் தலையில் தட்டியவள்
“டேய் நான் ஒன்னும் ப்ரெக்னன்ட் இல்ல.. அவனும் என் ஹஸ்பன்ட் இல்ல” என்றதில் முழித்தவன் “என்னடி சொல்லுற.. அப்புறம் எதுக்கு என்ன பாக்க வந்த”
“ஆசை தான் உன்ன தேடி ஒன்னும் வரல.. ஒரு விசாரணையா வந்தேன் நீ இருப்பன்னு நான் என்னத்த கண்டன்”
“விசாரணையா..”
“உக்காந்து பேசலாமா” என்றதும் இருவரும் அவரவர் இடத்தில் அமர்ந்து கொள்ள, இவர்களின் பேச்சில் ரேயன் தான் கையை மடக்கி மேஜை அடியில் மறைத்து எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தான்.
பின் ரேயனிடம் கண்ணை காட்ட, அவனோ பெண்ணவளை முறைத்து கொண்டிருக்க, சர்வாவோ “சொல்லுடி”
“சர்வா ரெண்டு நாள் முன்னாடி, உன்கிட்ட யாழிசைன்னு யாரும் செக்அப் வந்தாங்களா” என்றதை கேட்டு நெற்றியை நீவி யோசித்தவன் “வெயிட்..” என்று மடிக்கணினியில் ஆராய்ந்துவிட்டு “ஆமாடி அந்த பொண்ணு ப்ரெக்னன்ட்.. அந்த பொண்ண பத்தி என்ன விசாரணை”
“சொல்லுறேன்டா.. நீ அந்த பொண்ணு பத்தி தெரிஞ்சத சொல்லு”
“எனக்கு பெருசா எதுவும் தெரியாது அவ காலேஜ் லாஸ்ட் இயர் படிக்கிறா.. அண்ட் அவளுக்கு கல்யாணம் ஆகல.. நான் கூட லவ் ஆர் ரிலேஷன்ஷிப்பான்னு கேட்டேன் அந்த பிள்ளை அழுதுட்டே குழந்தைய அபார்ட் பண்ண சொல்லி கதறிட்டா.. எனக்கு என்ன பண்ண தெரியல சில டேப்லெட்ஸ் எழுதி கொடுத்து ஒன் வீக் கழிச்சி பாத்துக்கலாம்ன்னு சொல்லி அனுப்பி வச்சிருக்கேன்” என்று வருந்திய கூறினான்.
அவற்றை இருவரும் தங்களுக்குள் உள்வாங்கி கொள்ள, சர்வாவோ “நீங்க தான மூணு நாள் முன்ன பிரசவ வலில ஒரு பொண்ண அட்மிட் பண்ணீங்க ******** இந்த ஹாஸ்பிட்டல்ல” என்க,
ரேயனோ “உங்களுக்கு எப்படி தெரியும்”
“அந்த டெலிவரி அப்போ நானும் அந்த டாக்டரோட அசிஸ்டன்ட்டா அங்க தான் இருந்தேன்.. அடுத்து எமர்ஜென்ஸி வந்ததுல உங்கள பாக்க முடியல.. அந்த பொண்ணு டெத்ன்னு தெரியும் பேபி எப்படியிருக்கு” என்க,
தியாவோ “என்கிட்ட தான் பேபி இருக்கு” என்று அந்த பெண் ரேயனிடம் சொன்னத சர்வாவிடம் கூற, அவனோ “ஓஓ.. சூப்பர்டி.. டேக் கேர்” என்று தன்னுடைய அட்டையை அவளிடம் நீட்ட “இது தான் என்னோட ஓன் கிளினிக்.. இந்த ரெண்டு ஹாஸ்பிட்டலிருக்கும் கெஸ்ட் டாக்டர் தான் நான்.. சோ இங்க டூ ஹார்ஸ் அங்க டூ ஹார்ஸ் டூட்டி போக மீதி என்னோட கிளினிக்ல தான் இருப்பேன்..” என்க, பெண்ணவளும் புன்னகைத்து அதை பெற்று கொண்டாள்.
பின் இருவரும் எழுந்து கொள்ள, ரேயனோ “அந்த பொண்ணு செக்அப் வந்து போனதும்.. எனக்கு இன்பார்ம் பண்ணுங்க” என்று தியாவிற்கு கண்ணை காட்ட, அவளும் புரிந்து கொண்டு தங்கள் இருவரின் எண்ணையும் அவனிடம் கொடுக்க,
அதை பதிந்து கொண்ட சர்வா “சரி ஓகே.. எதுக்கு இந்த விசாரண அந்த பொண்ணு உங்களுக்கு வேண்டப்பட்டவளா தியா”
“இல்ல சர்வா.. நாங்க ரெண்டு பேரும் சிஐடி ஆபீஸர் ஒரு சீக்ரெட் இன்வெஸ்டிகேஷன் ஒன்னு போயிட்டு இருக்கு.. சோ என்னன்னு இப்போதைக்கு இன்பார்ம் பண்ண முடியாது புரிஞ்சிக்க” என்று நிறுத்தியவள் “அது சரி நீ என்ன எப்படி இருக்க” என்க,
அதில் விரக்தியாக சிரிப்பை வீசியவன் “டாக்டர் ஆயிட்டேன் தான்.. மத்தப்படி நம்ம பிரியும் போது எப்படி இருந்தேனோ அப்படியே தான் இருக்கேன்” என்றதும் அவனை யோசனையாக ரேயன் பார்த்திருக்க, தியாவோ தோலோடு அணைத்து “சர்வா..”
“இட்ஸ் ஓகேடி.. நீ எப்படியிருக்க உன் ஹஸ்பண்ட் பத்தி சொல்லு.. உன் வீடு எங்க”
“எப்பா நிறுத்து சாமி.. ஐ அம் சிங்கிள்..”
“தியா” என்று அவன் அடுத்து கேட்க வரும் புரிந்ததில்
“பிளீஸ் சர்வா.. என்ன எதுவும் கேட்காத”
“நான் எதுவும் கேட்கல.. ஆனா உனக்கு ஓகேன்னா சிங்கிள் சிங்கிள் டபிள் ஆகிக்கலாம்ல” என்று கண்ணடிக்க, அவனின் வாயில் அடிப்போட்டு “இன்னும் இந்த நினைப்பு வேற இன்னும் உனக்கு இருக்கா ராஸ்கல்..” என்று ரேயனை பார்த்துவிட்டு “இங்க தான இருக்க போற யோசிக்கிறேன்” என்க,
அதில் கடுகடுத்த ரேயன் “உனக்கு மாப்பிளை தேடுற படலத்த கேஸ் முடிஞ்சதும் வச்சிக்க கம்” என்று அங்கிருந்து சென்று விட, தோலை உலுக்கிய தியாவோ “சரி சர்வா.. நான் கிளம்புறேன்.. சும்மா தான் சொன்னேன்.. கடைசி வரை சிங்கிளாவே இருந்துக்குறேன்..” என்று முன்ன சென்று திரும்பி,
அவனிடம் வந்தவள் “சாரி சர்வா” என்றுவிட்டு அவன் முகம் பாராமல் சென்று விட, அவள் மன்னிப்பு கேட்டதிலே இன்னும் பழசை மறக்கவில்லை என்பதை உணர்ந்த சர்வா பெருமூச்சு விட்டு கொண்டு வேலையில் கவனத்தை செலுத்தினான்.
தொடரும்..
-ஆனந்த மீரா 😍😍
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ரொம்ப சஸ்பென்ஸ் வக்கிறீங்க…கதைய guess பண்ணவே முடியல…👍
Thank u sis 😍😍