Loading

தியா ரேயன் சென்றதும் அவள் கூறிய பணியை முடித்துவிட்டு ஆர்யனுடன் ஜோஸப்பையும் அனுப்பி யாழிசை வாகியை கூட்டி கொண்டு வர கூறினான் ருத்ரன்.

அவர்களும் தங்களின் பத்தினியை காண விரைய, ஜோஸப்பிற்கோ மாத கால இடைவெளிக்கு பின் அவளை பார்க்க போவதை நினைத்து உடல் சிலிர்த்து அடங்கியது.

 

பின் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த ஆர்யன் தன்னவளை காண ஓட, ஜோஸப்போ கால்கள் நடுங்க அவ்விடம் வந்து சேர்ந்தான்.

 

முதலில் உள்ளே நுழைந்த ஆர்யன் அழுது கொண்டிருந்த வாகியிடம் “வாகி பேபிஸ் எங்க” என்றதும் பெண்ணவள் உள்ளே கையை காட்ட,

 

அடுத்த நொடி தன்னவளை ஏந்தி கொண்டு அவ்வறைக்கு நுழைய, அவனை பே பேவென்று பார்த்திருந்த வாகி “இங்க ஒருத்தி அழுதுட்டு இருக்கேன்.. ஏன் கேட்க கூட துப்பில்லாம அவள தூக்கிட்டு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு , ஓடுற போல ஓடுறான்.. நல்லா இருங்கடா’ என்று அவர்களிருந்த அறைக்கு வாழ்க வளமுடன் என்பது போல் கைகளை காட்டி ஆசீர்வாதம் செய்து கொண்டிருந்தவள் “வானி..” என்று அழைப்பு கேட்டு இதயம் துடிக்க கைகள் ஆந்திரத்தில் நிற்க திகைத்த வாகி மெல்ல சத்தம் வந்த திசை நோக்கி திரும்பினாள்.

 

ஒருவரை ஒருவர் பார்த்து இருவருக்குள்ளும் கண்ணீர் வடிய, ஆடவனோ இரு கைகளை விரித்து வா என்று அழைத்ததும், அவ்வளவு தான் ஓடி சென்று அவனின் மார்பில் புதைந்து அழுதாள்.

 

பின் இருவருமே மாறி மாறி முகம் முழுவதும் முத்தமிட்டு கொள்ள, தயக்கமின்றி ஆடவனின் இதழில் நான்கு வருட காலம் சேர்த்து வைத்திருந்த காதலை இதழில் கவியாய் எழுதினாள்.

*******

 

பெண்ணவளை அள்ளிக்கொண்டு அறைக்குள் வந்த ஆர்யா தூங்கும் இரு குழந்தைகளை பார்த்துவிட்டு மயக்கத்திலிருந்த பெண்ணவளின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, மெல்ல மயக்கம் களைந்து எழுந்த யாழிசை எதிரேயிருந்த ஆர்யனை அணைத்து பயத்தை போக்கி கொண்டாள்.

 

தன்னவளின் முதுகை நீவியிட்டவன் “இசை.. நான் தான் இருக்கேன்ல ஒன்னும் இல்ல விடு”

 

“பயந்துட்டேன் ஆரி.. ஆமா உங்க தலைய அடிச்சாங்க தான காயம் எதுவும் இல்லையே” என்று தலையை ஆராய,

 

தன் தலையில் கைவைத்த பெண்ணவளின் கையில் இதழ் பதித்து “இல்ல” என்று தலையாட்டி கண்ணடிக்க,

 

அதில் பாவை நானி சிவந்து போய் “அத இப்படி தான் சொல்லுவீங்களா”

 

“ஏன்டி ஒரு மனுஷன் கதை முடியும் போது கூட ரொமான்ஸ் பண்ண கூடாதா.. எனக்கு க்ளைமேக்ஸ்லயும் ரொமான்ஸ் இல்ல எனக்கு வருத்தமப்பா ரொம்ப வருத்தமப்பா” என்று சிறிது சத்தமாக பேசியவனை கண்டு சிரித்த யாழிசை “ஆரி குழந்தைங்க தூங்குறாங்க.. நம்ம வெளிய போலாம்.. என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க”

 

“வெளிய போக முடியாது.. என் அக்காகாரி ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பா”

 

“தியா அண்ணி வந்திருக்காங்களா”

 

“எனக்கு அவ மட்டும் தான் அக்காவா”

 

“ஓ.. வாகி அண்ணியா” என்றவளுக்கு அப்போது தான் புரிய தொடங்க கண்களை விரித்து “ஆரி உண்மையாவா.. ஜோ அண்ணா சரியாயிட்டாரா” என்றதுக்கு கண்கள் கலங்கி ஆமென்று ஆடவன் தலையாட்ட,

 

அதில் மகிழ்ந்த யாழிசை *ஹே ஆரி.. என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க” என்று மறுப்பாக மாட்டேன் என்பது போல் தலையசைத்து “நம்ம ஃபர்ஸ்ட் நைட் அப்போ சர்ப்ரைஸா சொல்லுறேன்” என்று கண்ணடித்தான்.

 

அதில் சிவந்த பாவை “அது சரி.. அப்போ துரைக்கு பேசலாம் டைம் இருக்குமா என்ன”

 

“ஏன் இருக்காது ஃபர்ஸ்ட் ரவுண்ட் முடிச்சி ப்ரேக் விடணும்ல.. அந்த டைம் நான் சொல்லுறேன்” என்று கூறி கொண்டிருக்கவும் குழைந்தகள் சிணுங்க, அதில் வாயில் கைவைத்து யாழிசை சிரிக்க,

 

அவளை பார்த்து இதழ் குவித்து ஊதி காற்றில் முத்தத்தை பறக்கவிட்டவன் குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே வந்தான்.

****

இருவரும் இதழில் பாடம் எழுதி கொண்டிருப்பதை கண்டு கண்களை மூடிய ஆர்யன் “யோவ் அக்கா மாம்ஸ்.. ஓவர் ஸ்பீட்ல ரொமான்ஸ் பண்றீங்க.. வயசு பிள்ளைங்க இருக்கிற வீட்டுல பேட் காய்ஸ்” என்று அவர்களின் அருகில் சென்று நிஷாவை கையில் கொடுத்து “உங்க பொண்ண பிடிங்க என்ன ரொமான்ஸ் பண்ண விடல கரடி” என்று செல்லமாக கன்னத்தை தட்டினான்.

அவனிடமிருந்து குழந்தை வாங்கிய ஜோஸப் தன்னவளை காண, அவளும் நம் குழந்தை என்பது போல் கண்களை மூடி திறக்க, அதில் ஆனந்த கண்ணீருடன் குழந்தைக்கு முத்தமழை பொழிந்துவிட்டு ஒருவழியாக அங்கிருந்து கிளம்பியிருந்தார்கள்.

****

 

ராகவை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு வந்த ருத்ரன், அவனை சிகிச்சைக்கு அனுப்பி வைத்து நேரே தன்னவளை தேடி சென்றவன் சுற்றம் மறந்து அவளை அணைத்து கொண்டான்.

 

அதில் அதிர்ந்து நெளிந்த பாவை அவனின் அமைதியில் ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்து ஆடவனின் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றில் இதழ் ஒற்றி எடுத்து “என்னாச்சி என் மாமாக்கு” என்றதும் அங்கு நடந்ததை ஒன்று விடாமல் கூறி முடித்த ஆடவனின் கண்கள் கலங்கி விட,

 

அதில் தானும் கலங்கி “மாமா.. அப்போ அக்காக்கு உண்மை தெரிஞ்சி போச்சா” என்றதுக்கு ஆமென்று தலையாட்ட, தியாவிடம் மறைத்த நடக்கிறோம் என்ற குற்றயுணர்வு நீங்கி, அடுத்த நொடி அவனை இறுக்கி அணைத்து கொண்டு “லவ் யூ மாமா” என்று காதலை அணைப்பில் பொழிந்து கொண்டிருக்க, சுற்றி செல்பவர்கள் ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு செல்வதை உணராமல் ஒருவர் அணைப்பை ஒருவர் ரசித்து தொலைந்திருந்தார்கள்.

 

அந்நேரம் வந்த ஆர்யன், அவர்களின் நிலை கண்டு தலையிலடித்து விட்டு அவர்கள் இருவரையும் பிரித்து “சித்திரா பாட்டி எப்படி இருக்கு” என்க,

 

‘அத பிரிச்சி தான் கேப்பியாடா கொய்யால’ என்பது போல் இருவரும் முறைக்க,

அதில் அசடு வழிந்த ஆர்யன் “யோவ் மாம்ஸ் இது மருத்துவமனை புனிதமான இடம்.. இங்க வந்து கட்டி புடிச்சி காதல் பண்ணிட்டுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்.. பார்க் பீச் தான் லவ்வர்ஸ் தொல்ல தாங்கலன்னா இங்கையும் விட்டு வைக்க மாட்டீங்களா” என்று மேலும் ருத்ரனின் முறைப்பிற்கு ஆளாக, சித்திராவோ இதழ் கடித்து வெட்கத்தை அடக்கி நின்றாள்.

 

ஜோஸப் தான் “பாட்டி எப்படி இருக்காங்க” என்க,

 

சித்திரா “அவங்க ஓகே சின்ன சின்ன டெஸ்ட் மட்டும் எடுக்கணுமாம் அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றவள் ஜோஸப்பையும் நலம் விசாரிக்க தவறவில்லை.

****

ராகவ்வை நீதி மன்றத்தில் கொண்டு வந்து தூக்கு தண்டனையும் அளித்திருக்க, அவனுக்கு துணை புரிந்த மந்தாகினிக்கும் தண்டனை வாங்கி கொடுத்திருக்க, ராகவ் உடலில் காயத்தை ஏற்படுத்திய தியாழினியை ஒரு மாதம் சஸ்பன்ஸ் செய்ய உத்தரவிட்டார் நீதிபதி.

 

அப்படியே ஒரு வாரம் கழிந்திருக்க, யாழியின் ரே பெண்ணவளை பார்ப்பதே தவிர்த்து விட, தானே களத்தில் இறங்க அவனிடம் சில்மிஷங்கள் செய்தால் “உன் ஸ்ட்ரெஸ்க்கு இப்போ நான் தேவைப்படுறேனா” என்று கேட்டே பெண்ணவளின் மனதில் ஈட்டியை இறக்கிய போல் வார்த்தையால் கொள்வான்.

 

ஒரு கட்டத்திற்கு மேல், அவனுக்கு இடைவெளி கொடுத்து விலகி நிற்க தொடங்கிவிட்டாள்.

 

அதோடு வீட்டியில் இருப்பதால் பட்டாம்மாளுடன் கதை பேசியப்படி சமைக்க உதவுவாள்.

 

இப்போது முன்னை போல் தியா இறுக்கமாக சுற்றி திரிவதில்லை ஆனாலும் சித்திராவிடம் பேச ஏதோ தயக்கமாக இருந்தது.

 

அதோடு இன்னும் ரெண்டு வாரம் கழித்து யாழிசை மற்றும் சித்திரா இருவருக்கும் கூட தேர்வு முடிந்திருக்க,

 

விடுமுறை தினம் என்பதால் மதிய உணர்விற்கு ஜோடியாக ஜோடியாக அமர்ந்து வேலைகளை செய்து கலகலப்புடன் சமயலுக்கான வேலையை செய்து கொண்டிருந்தார்கள்.

 

தியா மட்டும் மற்றவர்களை ஏக்கமாக பார்த்தப்படி தன்னைவிட்டு தள்ளி அமர்ந்திருந்த ரேயனை ஏக்கமாக பார்த்து கண்ணீர் வடித்தால், அதாவது வெங்காயம் வெட்டியதில் வந்த கண்ணீர்.

 

ஆர்யா, அவளின் கண்ணை துடைத்துவிட்டு “இப்படியே ஃபீலிங் இந்தியாவா சுத்திட்டு இருந்தா எப்படிடி கரெண்ட் வரும்.. நீ தான் அதிரடிக்காரியாச்சே பின்ன எப்படி” என்று காதை கடிக்க,

 

அவன் கொடுத்த துணியில் கண்ணை துடைத்த தியா “அந்த கொடுமை ஏன்டா கேக்குற.. நானே எனக்கு செல்ஃப் ஆப்பு வச்சிக்கிட்டேன்”

 

“பின்ன நீ கொஞ்ச நஞ்சமா படுத்தின அனுபவி மகளே” என்று வாரி அவனுக்கும் சேத்து செல்ஃப் ஆப்பு வச்சிக்கிட்டான்.

 

தம்பியை பார்த்து இதழை வளைத்து சிரித்த தியா வெங்காயத்தை ஓரம் வைத்துவிட்டு “காய்ஸ் லிஸன்.. ருத்ரன் சித்திரா.. அண்ட் யாழிசை ஆர்யன் ரெண்டு ஜோடிக்கும் முறைப்படி கல்யாணம் நெக்ஸ்ட் மந்த்ல வைக்கலாம்” என்றதும் ஆர்யன் “அக்கான்னா அக்கா தான்” என்று அவள் கன்னம் கொஞ்ச,

 

ஜோஸப்போ “அப்போ எங்களுக்கு” என்றதும் மொத்த பார்வையும் அவனை மொய்க்க,

 

“அம்புட்டு ஃபோகஸ் நம்ம மேல திரும்புதே கண்டுக்காத மாதிரி இருப்போம்” என்று முணுமுணுக்க, அதில் சிரித்த தியா “அப்புறம் காய்ஸ் குட்டி பேபிக்கு நேம் வைக்கல.. கிழவி நல்ல நாள் பார்த்து சொல்லு” என்றதும் நாட்காட்டியை ஆராய்ந்த பட்டம்மாள் “அடுத்த வாரம் இதே கிழமை நல்ல நாள்”

 

“சூப்பர் கிழவி அடுத்த வாரம் எல்லாரையும் அழைச்சிடுங்க ஒருத்தரும் மிஸ் ஆக கூடாது” என்று மற்றவர்கள் கட்டயளையிட்டவள் “அப்புறம் சித்திரா ஆர்யன் வாகி நீங்க மூணு பேரும் இங்கேயும்.. மீதி பீஸ்ங்க என் புருசன் கூட அவன் வீட்டுல இருக்கணும் கல்யாணம் முடியுற வரை” என்றதும் இடை புகுந்த ஜோஸப் “மிஸ் சைட் டவுட் க்ளியர் பிளீஸ்”

 

“எஸ் டெல் மீ”

 

“ரெண்டு ஜோடிக்கு அடுத்த மாசம் கல்யாணம் வொய் யூ எங்கள பிரிச்சிபையிங்” என்று பாவமாக கேட்டு வைக்க,

அவள் முன் ருத்ரன் “மச்சி வயசு பசங்க நாங்க.. நீங்க ஒன்னா இருக்கிறது பாத்து ஏங்குவோம்ல.. இல்லடா மாப்பிளை” என்று ஆர்யனையும் கூட்டு சேர்க்க, “கண்டிப்பா கண்டிப்பா” என்று அவனுடன் கையடித்து கொண்டான்.

 

அதில் முகம் வாடி ஜோஸப்  “லிஸ்ட்ல ஒரு நேம் மிஸ் ஆகுதே.. அப்போ சைட் எங்க விசிட்”

 

“வேற எங்க என் சைட் இருக்கிற வீட்டுல தான்” என்று அவனை பார்த்து கண்ணடிக்க,

 

வாயில் கைவைத்த ஜோஸப் “அடிப்பாவி.. எங்கள மட்டும் பிரிச்சிட்டு நீ டூயட் பாட பாக்குறியா.. அதெல்லாம் முடியாது எல்லாருக்கும் ஒரே சட்டம் தான்”

 

“டேய் பரதேசி.. எதாவது வண்ணமா கேட்டுட போறேன் பாத்துக்க.. ஏற்கனவே புன்பட்ட நெஞ்சம் மேலும் மேலும் புண்படுத்தாதீங்கடா பரமாஸ்” என்று மூக்கை உறிஞ்ச,

 

பின் குட்டி குழந்தையின் பெயர் வைப்பிற்காக யார் எந்த வேலை செய்யலாம் என்று பிரித்தெடுத்து விட்டு இரவு போல் தனியாக பிரிந்து கொள்ள, ஆர்யனை பார்த்து கண்ணடித்து விட்டு வேண்டுமென்றே ரேயனை இடித்து சென்றாள்.

****

 

ரேயன் வீட்டிற்கு வந்தாயிற்று மூன்று பேரும் திறன்பேசியுடன் தனி தனி அறையில் தங்களின் இணைகளுடன் கடலை வறுக்க தொடங்கியிருந்தார்கள்.

 

இரவு உடையை மாற்றிவிட்டு வெளியே வந்த தியா, கண் மூடி படுத்திருந்த கணவனை கண்டு பெருமூச்சு விட்டு அவனுக்கு மறுபக்கம் படுத்துக்கொண்டாள்.

 

ஐந்தாம் நிமிடம் கழிந்து தூக்கத்தில் பெண்ணவளை இழுத்த ரேயன் பெண்ணவளின் மார்பில் தலை சாய்க்க,

அதில் மெல்ல இதழ் பிரித்த தியாவோ அவனை அணைத்தப்படி தலையை கோதிவிட, தூக்கத்தில் அப்படியே முன்னேறியவன் பெண்ணவளின் இதழை சிறை பிடித்தான்.

பெண்ணவளும் தன்னவனுக்கு மெல்ல இசைந்து கொடுக்க, யாழியின் ரேவோ அவர்கள் இடையில் நிகழும் ஊடலை முடிக்கமால் இருவரும் கூடலில் மூழ்கினார்கள்.

*****

 

அதன் பின் ஐந்து நாட்கள் ரேயனை பார்ப்பதே பெண்ணவளுக்கு அரிதாகி போக, வலித்தாலும் தான் செய்ததிற்கான தண்டனை என்று அவனுக்காக காத்திருந்தாள்.

 

அதன் பின் பெயர் வைக்கும் நாளும் வந்துவிட, பெண்கள் ஒரு நிறத்தில் பட்டுபுடவையும் ஆண்கள் பட்டு வேஷ்டி சட்டையில் காட்சியளித்தார்கள்.

 

மொத்தமாக கோவிலில் வந்து இறங்கிருக்க, விழாவிற்கு அழைத்த அனைவரும் கோவிலில் ஆஜராகியிருந்தனர்.

 

மற்றவர்களை வரவேற்றது போல் தந்தையையும் “வாங்க” என்றவள் தன் மாமியார் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியை பிடித்திருந்த மாமனாரின் அருகே வந்து “வாங்க மாமா.. வாங்க அத்தை” என்றுவிட்டு செல்ல போனவளின் கையை, தன் இழுத்து கொண்டிருந்த கையை விட்டு மற்றொரு கையால் கஷ்டப்பட்டு பிடித்து இழுத்து அவளை முட்டி போட வைத்து தலையை வாஞ்சையாக தடவி விட, அதில் பெண்ணவள் சிரித்துவிட்டு அவர்களை கண்டு கொள்ளாமல் நின்ற ரேயனை பார்த்துவிட்டு கடந்து சென்றாள்.

****

 

ரேயன் வீட்டை விட்டு வாகினியுடன் வெளியேறியதும் கொஞ்ச நாட்களில் தமக்கை செய்ததை மறக்க முடியாமல் விஜயனும் வெளியே வந்து தமக்கையின் கணவனுடன் தங்கி கொண்டார்.

 

அதன் பின் வேலைகாரியுடன் தனிமையில் நாட்களை கழித்து பழைய கம்பீரத்தை இழந்த ரங்கநாயகி,

 

ஒருநாள் மாடிபடியிருந்து உருண்டு விழுந்து விட, அப்போது கை கால்கள் இழுக்கப்பட்டு நாற்காலியில் அமர்ந்தவர் இன்னும் எழும்பவில்லை.

 

அதிலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கவுமே மாப்பிளையுடன் ரேயனின் தந்தையும் வந்திருக்க, அப்போது பிடித்த சக்கர நாற்காலியை இப்போதும் பிடித்திருந்தவர்,

 

இனி எப்போதும் அவரே பிடித்திருப்பார் என்றவரின் அன்பை புரிந்து கொள்ளாமல் காலத்தை கழித்ததை நினைத்து கதற, கணவனாக அணைத்து ஆதரவு கொடுத்தார்.

 

தியாவிற்கு அவரின் மேல் கோவம் இருந்தாலும் உடம்பு சரியில்லாதவரை விலக்கி வைப்பது தவறென்று மாமியாராக ஏற்று கொள்ள, ரேயன் பட்டும்படாமல் பேசி வைப்பான்.

 

பின் ரேயன் அருகில் குழந்தையுடன் அமர்ந்தாள் தியா.

“குழந்தை காதில் பெயரை சொல்லுங்கோ” என்று அய்யரின் கூற்றில் என்ன பெயராக இருக்கும் என்று அனைவரும் ஆர்வமாக பார்த்திருந்தார்கள்.

 

யாரிடமும் பெயரை கூறாதவள், தன்னை ஆர்வமாக பார்த்திருப்பதை கண்டு புன்னகையுடன் வினிதீஸ்மி என்று தன் அன்னை வாகி அன்னை பெயர் இணைத்து வைத்திருந்தாள்

(அன்னம் லக்ஷ்மி வினிதா, வினி + தீ+ லக்ஷ்மி) மூன்று முறை குழந்தை காதில் சொல்ல,

 

சில கண்கள் அதிர்ச்சியாக, சில கண்கள் மகிழ்வாக பார்த்திருக்க, தந்தை பார்த்துவிட்டு வாகி பார்த்து கண்சிமிட்டியவள் ரேயன் கூறி முடித்ததும், அருகில் நின்று கொண்டிருந்த தந்தையின் கையை பற்றி “அப்பா.. நீங்களும் உங்க பேத்தி காதுல சொல்லுங்க” என்று கூறியவள் தவறு செய்யாமல் தந்தையிடம் மரியாதை இல்லாமல் பேசியதை நினைத்து வெளியே வர துடிக்கும் அழுகை அடக்கி கொண்டாள்.

 

மகள் அழைத்ததும் சந்தோசத்தில் பேச்சில்லாமல் வானத்தில் பறக்க,

 

பின் மகளின் அருகில்அமர்ந்து குழந்தையை வாங்கி மூன்று முறை பெயரை கூறியவபருக்கு மகிழ்வில் வார்த்தை பதில் காற்றே வந்தது.

 

கண்களில் வரும் கண்ணீரை துடைத்துவிட்டு பேத்தியை கொஞ்சிய தந்தையிடம் தியாவோ “சாரிப்பா” என்று அவரின் தோலில் சாய்ந்து கொள்ள,

 

தமக்கை முதல் பேசட்டுமென்று காத்திருந்த இருவரும் இப்போது ஓடி சென்று இருவரையும் அணைத்து கொள்ள, வாகி மற்றும் ஆர்யன் “சாரிப்பா” என்று மன்னிப்பு வேண்ட, மூவரின் உச்சந்தலையில் முத்த்மிட்ட தந்தையின் மனம் நிறைந்ததுவிட்டது.

 

பின் அனைவரும் குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்திருக்க, ரேயனிடம் கண்ணை காட்டிவிட்டு வாகினியுடன் சாமி சன்னதி சென்று நிற்க, ஜோஸப்பையும் ரேயன் நிற்க வைத்தான்.

 

பின் வாகி கழுத்தில் தியா மாலை போட ஜோஸப் கழுத்தில் ரேயன் அணிவித்தான்.

 

அதில் ஜோஸப் மற்றும் வாகினி திகைக்க, வாகியோ கலங்கியப்படி தியாவை பார்த்தாள்.

 

பின் கெட்டிமேளம் சத்தம் முழங்க ஜோஸப் அனைவரின் முன்னிலையிலும், அவனின் வானியின் கழுத்தில் மகிழ்வுடன் மூன்று முடிச்சிட்டான்.

 

பின் “அடுத்த ஜோடி வாங்கோ” என்று அய்யர் அழைத்ததும் மாலையுடன் தன் முன் வந்த ரேயனை கண்டு பெண்ணவள் விழி விரித்து நின்றாள்.

 

அவளின் அதிர்வை கண்டு கொள்ளாமல் கழுத்தில் மாலை அணிவித்து தனக்கு போடும் படி தலை குனிந்து நிற்க, அவளும் நிறைவாக அவனின் கழுத்தில் மாலை பின் கெட்டிமேள சத்ததுடன் பெண்ணவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு உச்சந்தலையில் அழுத்தமாக இதழ் முத்திரையிட்டான்.

 

அனைவரும் நிறைவாக மாலை போல் வீட்டிற்கு வந்திருக்க ஆரத்தி எடுத்து இரு ஜோடிகளையும் வரவேற்றார்கள் பெரியவர்கள்.

அதில் உள்ளே நுழைந்ததும் பெண்ணவளை குண்டு கட்டாக தூக்கி கொண்டு தன் அறைக்குள் நுழைந்தான்.

 

அவனின் அதிரடியில் திகைத்து பின் வெட்கித்தவள் “எல்லார் முன்னாடியும் என்ன பண்ற” என்று தலையை கவிழ்த்து விட,

 

பெண்ணவளின் நாடியை நிமிர்த்தி அவளிடம் ஒரு பரிசை கொடுத்தான்.

அதனை வியப்பாக பார்த்தப்படி கையில் வாங்கி பிரித்தவள் நிஷா பிறப்பு சான்றிதலில் இருந்த தந்தை தாய், தன் மற்றும் ரே பெயர் இருப்பதில் அதிர்ந்து கண்கள் கலங்கி கால்கள் தடுமாறினாள்.

 

அவளை தன்னோடு அணைத்து பிடித்து படுக்கையில் அமர்ந்தவன் “இன்னைக்கு என்ன தேதி தெரியுமா” என்றதும் நிமிர்ந்து நாட்காட்டியில் காட்டிய தேதி,

 

ஆம் இன்று தான் நிஷா, அவளின் கருவை விட்டு வெளியே வந்த நாள், அந்த நாளில் எதை இழந்தாளோ, அதை நாளில் அல்லவா திருப்பி கொடுத்திருக்கிறான்.

 

அவனை கலங்கிய விழிகளுடன் பார்த்திருந்தவளின் கண்ணீர் கன்னம் நனைக்க “ரே இது உண்மையா நிஷா.. நிஷா” என்றவளுக்கு வார்த்தைகள் தண்டியடிக்க,

 

“ஆமா தியா நிஷா தான் நம்ம ஃபர்ஸ்ட் பேபி.. இதபத்தி தெரிஞ்சிக்க தான் அஞ்சு நாள் உன்ன பாக்க கூட முடியாம பிஸியாயிட்டன்.. அன்னைக்கு குழந்தை கொல்ல சொல்லி சர்வா டாக்டரோட பொண்ண கடத்தி மிரட்டியிருக்கான்.. அப்போ தான் வாகி டெலிவரிக்காக வந்திருந்தா..

 

நான் கேஸ் விஷயமா வெளியே மாட்டிக்கிட்டன்.. அவளுக்கும் கேர்ள் பேபி தான் பிறந்துச்சு ஆனா இறந்து போச்சு.. டாக்டர் அப்போ தான் வாகி இறந்த குழந்தை உனக்கும் உன்கிட்ட இருந்த நிஷாவ வாகிக்கும் மாத்தி வச்சி சர்வா முன்ன இறந்து போன பேபிய காட்டிட்டாங்க..

 

எனக்கு சர்வா பேபி கொன்னத பத்தி சொன்னதும் எப்படி ஒரு டாக்டர் இத பண்ணுறாங்க கோவம் வந்துச்சு ஆக்சன் எடுக்க போனேன்.. அப்போ தான் நடந்த உண்மைய சொன்னாங்க” என்றதும் நிறைவுடன் ரேயனை அணைத்தவளின் முகம் நொடியில் இறுகி *இது வாகிக்கு தெரிய கூடாது” என்க,

 

“டேய் அத்தை மகனே.. என்கிட்ட சொல்லிடாத” என்றப்படி மற்ற வானரபடைகளுடன் வந்தவளை கண்டு தியா திகைக்க,

 

அவளின் திகைப்பில் புன்னகைத்த ரேயன் “பேபி பத்தி கண்டுபிடிக்க நானும் ஜோஸப் தான் போனும்.. ஆனாலும் உன்கிட்ட மட்டும் சொல்லிட்டு ரகசியமா வைக்க நினைச்சா.. இவன் போய் பொண்டாட்டிகிட்ட சொல்ல வாகி தான் உனக்கு இப்படி கிஃப்ட் கொடுக்க சொல்லி சொன்னா” என்றதும் நிஷாவை தூக்கி கொண்டு, அவளின் அருகில் வந்த வாகியிடமிருந்து குழந்தையை பாதி வாங்கி மீதி அவளிடம் கொடுத்தவள் “குழந்தை பெத்தது நான் தான் வாகி.. ஆனா தாய்பால் கொடுத்து வளத்தது நீ தான் சோ ரெண்டு பேருமே நிஷாக்கு அம்மா தான்” என்றதும், அவளை மகிழ்வாக பார்த்த வாகி குழந்தையில் இடது கன்னத்தில் முத்தம் பதிக்க, வலது கன்னத்தில் தியா முத்தமிட, இது ஆர்யனின் திறன்பேசியில் அழகாக பதிந்து கொண்டது.

 

இழந்த அனைத்தும் தன்னவனால் மீட்டதில் அவனையே காதலாக பாவையவள் பார்க்க, ஆடவனோ கண்ணடித்து இதழ் குவித்து ஊதினான்.

 

அதில் சிரித்தவளின் தலை சுற்ற வாகியின் கைக்கு அழுத்தம் கொடுத்து பிடித்து நின்றாள்.

 

அதில் ரேயன் பதறி “என்னடி ஆச்சு” என்க,

 

அப்போது தான் நிதர்சனம் புரிந்து தியாவின் கண்கள் மின்மின்ன வெட்கத்தில் பெண்ணவள் தலை கவிழ்த்து நின்றாள்.

 

அவளின் செயலில் எல்லாரும் ஒரு மார்க்கமாக பார்த்து வைக்க, தியாவின் நாடியை பற்றி பார்த்த பட்டம்மா அவளின் கன்னத்தை கிள்ளி “வீட்டுக்கு வாரிசு வர போவது” என்று பெண்ணவளின் முகத்தில் நெற்றி முறிக்க,

 

துள்ளி குதித்த ரேயன் பொண்டாட்டியை தூக்கி சுற்ற, அனைவரின் கூச்சலில் இறக்கிவிட்டு அசடு வழிந்தான்.

 

அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்த ஜோஸப் “டேய் மச்சி.. இதுங்க ஒன்னா போகும் போதே நினைச்சேன் போன வாரம் சம்பவத்த பண்ணியிருக்குங்க” என்று ருத்ரன் காதை கடிக்க,

 

அவனோ கைகளால் கணக்கு போட்டப்படி “மச்சி கூட்டி கழிச்சி பாத்தா ஒரு வாரம் தான் வரும் கணக்கு இடிக்குது.. அப்போ அதுக்கு முன்னமே நடந்த சம்பம் மச்சி” என்றவனின் கணிப்பில் “எப்புட்ரா” என்று வியந்து பார்க்க, அவனோ கெத்து காட்ட, பின் ஆண்கள் அணி சேர்ந்து ரேயனை ஓட்டி ஒரு வழி செய்துவிட்டனர்.

 

அதோடு வாகி ஜோஸப்பிற்கு நண்பர்கள் பட்டாளம் முதலிரவு அறை ஏற்பாடு செய்ய, ஜோஸப்போ நான்கு வருடம் பிறகு தொடங்கும் வாழ்க்கை நினைத்து பெண்ணவளின் வருக்கைகாக எதிர் பார்த்திருந்தான்.

 

வாகியிடம் பால் செம்பை நீட்டிய தியா அவளிடம் கொடுத்து உள்ளே அனுப்பி வைக்க, நான்கு வருடம் பிரிந்த காதல் இணையும் தருணம்.

 

பெண்ணவளோ இப்போது தான் முதல் முதலிரவு போல் தலை கவிழ்த்து சென்றாள்.

 

அதில் ஜோஸப்பிற்கு சிரிப்பாக வந்தது பின்னே கடந்த காலத்தில் திருமணம் முடியவும் அடாவடியாக முதலிரவுக்குள் தன்னை இழுத்ததே, அவள் தானே அப்படி இருக்கவும் அவளின் தயக்கம் புதிதாக இருக்க உள்ளுக்குள் ரசித்து கொண்டு பெண்ணவளை சீண்டினான்.

 

அவளிடம் பால் செம்பை வாங்கி கீழே வைத்தவன் “என்னடி நீ ஆல்ரெடி இந்த முரட்டு காலை கிட்ட கன்னி கழிஞ்ட்ட நினைவு இருக்கா.. என்னடி பேசிட்டே இருக்கேன் கீழே பாத்தா என்ன அர்த்தம்” என்று பெண்ணவளின் நாடியை நிறுத்த கண்களோ கலங்கி ஆடவனிடம் மன்னிப்பு யாசிக்க,

 

*இப்போ எதுக்குடி அழுகுற”

 

*சாரி ஜோ.. நான் சொல்லிருக்கணும் ரே பத்தியும் அவன தான் நிச்சயம் பண்ணியிருக்கேன்னு” என்றவளின் இதழில் கைவைத்து தடுத்தவன்

 

“நீ இந்த மாதிரி தான் டைம் வேஸ்ட் பண்ணுவன்னு எல்லா கதையும் ஆர்யன் மாப்பிள்ளை தெளிவா சொல்லிட்டாப்படி.. எனக்கு உன் மேல எந்த வருத்தமும் இல்ல..

 

உண்மைய சொல்லணும்ன்னா அந்த டைம் இருந்துச்சு ஃபிளாஷ்பேக் தெரியவும்.. உன் மேல இருந்த வருத்தமும் போயிடுச்சு.. ஏற்கனவே நாலு வருஷமா காஞ்சி போயிருக்கேன்.. சோ” என்று மஞ்சத்தை காட்ட, சம்மதமாக வாகி அணைத்து கொள்ள, அவளுடன் மஞ்சத்தில் சரிந்தவன் நான்கு வருடம் விட்ட கணக்கை எல்லாம் இன்று பிடித்து விட்டான்.

தொடரும்..

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்