
காதலை கட்டயாப்படுத்தி எடுத்து சொன்னதால் கடுப்பில் தியா, சர்வாவிற்கு குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை என்று உண்மை கூறிய பிறகு கோவத்தில் தியாவை போக சொல்லிய சர்வா அப்படியே அதே இடத்தில் சிலையாக நின்றான்.
பின் தன்னுடைய இடத்திற்கு வந்து அன்று முழுவதும் குடித்தே கழித்தான்.
இப்படியே மூன்று நாட்கள் தொடர, போதையின் பிடியில் யாருக்காக வேண்டாமென்று தூக்கி வீசியவன், அவனையே இப்போது போதையால் உளரியப்படி அழைத்து ஆறுதல் தேட நினைத்தான்.
அழைப்பு துண்டிப்புக்கு போகவும் தான், அவன் பேச்சே தலை நிறைய குடித்துக்கிறான் என்று உண்மை விளங்கி பதறியடித்து வீட்டிற்கு வந்தான் ராகவ்.
தன் ரெட்டையன் தோலை தொட்டதும் தான் தாமதம் தியா கூறிய உண்மையை அவனிடம் கூறி கதறி அழுது ராகவிடம் ஆறுதல் தேடினான்.
மறுநாள் அவனை கூட்டி கொண்டு ஒரு பெரிய மருத்துவமனைக்கு வந்து மருத்தவரிடம் விசாரித்து வெளியே வந்தவர்களுக்கு அவனின் பிரச்சனை நன்றாகவே புரிந்தது.
அன்றைய வாரம் தன்னையே தானே வெறுத்தது போல் குடியில் கிடந்தவனிடம்,
மறுநாள் போதை தெளிந்ததும் ராகவ் “என்ன எழவுக்கு நீ இப்படி இருக்க.. உன்ன அவ வேண்டாம்ன்னு சொன்னதுக்கா இல்ல உன்னால ஒன்னுமே புடுங்க முடியாதுன்னு தான் இப்படி சாகுறீயா.. வாய் திறந்து பேசி தொலை”
“ரெண்டும் தான்.. என்னால அவள மறக்க முடியல”
“அதுக்காக இப்படியே அழிஞ்சு போக போறியா.. ஒன்னும் அவள முழுசா மறந்து தொல இல்ல உன்ன அவ வெறுத்ததுக்கு நீ அவளுக்கு தண்டனை கொடு.. அத விட்டுட்டு தருதலை மாதிரி குடிச்சி அவளுக்காக செத்து போயிடாத”
“என்னால எப்படிடா அவள பழி வாங்க முடியும்.. அவ நல்லா இருந்தா போதும்டா” என்று பேசியவனை,
ஒரு மாதிரி பார்த்து வைத்த ராகவ் “இந்த இழவு மட்டும் வக்கனையா பேசு.. இங்க பாரு சர்வா நீ இப்படியே கரியர் பாக்காம குடிச்சி சீரழிஞ்சனா.. நான் பாவம் பாக்காம அவள போட்டுட்டு போயிட்டே இருப்பேன் யோசிச்சிக்க” என்று எழுந்து சென்று விட்டான்.
அவனின் பேச்சில் அதிர்ந்த சர்வாவுக்கு எங்கே அவளை எதாவது செய்து விடுவானோ என்ற பயம், அதுக்காவே ஒரு முடிவெடுத்துவிட்டு ராகவிற்கு தெரியப்படுத்திவிட்டு கல்லூரிக்கு சென்று அவளிடமும் கூறிவிட்டே பறந்து சென்றான்.
மருத்துவ கல்லூரியில் இணைந்த சர்வாவோ இரவு நேரம் மட்டும் பைத்தியம் பிடித்தது போல் திகழ்பான் அதாவது தூக்கம் தொலைத்து ஜிம்மியில் ஈடுப்படுவான்,
ஏனென்றால் கண்களை மூடினாளே பெண்ணவள் அன்று பேசி சென்றது மட்டுமே நினைவில் வந்து ஆடவனை பித்து பிடிக்க வைத்தது.
இதுவே வாடிக்கையாகியதில், ஒரு கட்டத்தில் இரவு தன்னையே காயப்படுத்தி கொள்பவன், காலையில் அவன் தானா அது என்பது போல் மென்மையாக பேசி மருத்துவ கல்லூரியிலும் சில நண்பர்களை இணைத்து கொண்டான்.
அங்கே கிடைத்த நட்பு தர்மராஜ் உடன் இணைந்திருக்க, அவனிடம் தன்னுடைய காதல் பத்தி பகிர்ந்து கொண்டவன், இரவு தனக்குள் நடக்கும் போரை பற்றி சொல்லாமல் மறைத்து விட்டான்.
காலையில் நட்பு கல்லூரி படிப்பு என்று மென்மையாக கழிப்பவன் இரவு வேலையில் சைக்கோ போல் தன் உருவத்தை மாற்றிக் கொண்டான்.
இந்த போராட்டத்துடனே எம்பிபிஎஸ் பட்டத்தை மற்றும் பெற்று மறுபடியும் சென்னை வந்திருக்க, ராகவோ செமிக்கல் படிப்பு முடித்து அதில் நிறைய ஆய்வுகளை கண்டுபிடிக்கும் வேலையில் கவனத்தை செலுத்தி, சிலவற்றை கண்டு பிடித்து பாராட்டு பெற்றிருந்தான்.
***
சர்வா வந்தது தெரிந்து தன் ரெட்டையை பார்க்க வந்தவன் அவனை அணைத்து விடுவித்து “என்ன டாக்டர் ஜிம்லாம் போய் ஆள் ஹேண்ட்சம்மா இருக்க”
“நீயும் தான் அழகாயிருக்க”
“அது சரி.. அடுத்து என்ன ஸ்பெசலிஸ்ட் எடுக்க போற எப்போயிருந்து ஜாயின்”
“கைனோ படிக்க போறேன்..” என்றவனின் வலிகள் புரிந்து அவனின் தொலை தட்டி கொடுத்த ராகவ் “சூப்பர்டா.. எப்போ ஜாயின்”
“அதுக்கு ஜாயின் பண்ற முன்ன அவளுக்கு எதாவது பண்ணனும்” என்றவனின் குரலில் அவளை பலி வாங்கும் எண்ணம் அபாட்டமாக புரிய,
புரியாதது போல் ராகவ் “எனக்கு புரியல என்ன பண்ணனும்.. யார பண்ணனும்”
“அந்த தியாவுக்கு எதாவது பண்ணனும்.. வலின்னா என்னன்னு தெரியணும் அவளுக்கு..” என்றவன் இரவு தான் படும் போராட்டத்தை அவனிடம் கூறியிருக்க,
அதில் அவனின் ரெட்டையனின் மனது அவனின் வேதனை உணர்ந்து அவனை சரி செய்ய நினைத்து “உனக்கு தான் நீ விடுபட ஆப்ஷன்னா.. கண்டிப்பா அவள கதற விடலாம்.. நான் துணையா இருக்கேன்” என்று இருவரும் அவளின் வாழ்வில் பாடம் கற்பித்து கொடுக்க எண்ணி ஒன்று இணைந்தனர்.
சென்னை வந்த ஒரு வாரத்தில் அவளை பற்றியும் அவளை சம்பந்தவர்கள் பற்றியும் தகவல்களை சேகரித்துருந்தான்.
அப்போது தான் ரேயன் கோவில் கொடை போனது, அதோடு அவள் கணவன் இல்லாத நேரம் எவ்வழியில் வருவாள் என்பதை கூட ஆராய்ந்து தெரிந்து கொண்டிருந்தான்.
அன்று தன் ரெட்டையருடன் பெண்ணவளை தூக்க அவளை பின் தொடர, அவளுக்கு அழைப்பு வந்தது அவர்களுக்கு ஏதுவாகி போக, முடியும் வேலையில் பின் நின்று அவளின் மூக்கில் துணியை வைத்து அழுத்தி தூக்கிட்டு வந்திருந்தார்கள்.
மயக்கத்தில் இருந்த பெண்ணவளை பார்க்க பார்க்க, அவள் பேசியது நினைவு வந்து தலையை பிடித்து கொண்டு ஆவென்று கத்த, ராகவோ “சர்வா ஆர் யூ ஓகே”
“நாட் ஓகே.. நீ இஞ்செக்சன் போடு” என்றதும் அவனும் தான் கண்டு பிடித்த மருந்தை ஊசியில் சேர்த்து போட்டுவிட்டு, அவளை கற்பழிக்கப்பட்டது போலவே எண்ணுமளவு மாற்றிவிட்டவன் செயற்கை பற்கள் வைத்து,
அவள் உடம்பில் கடித்த காயம் ஏற்படுத்திவிட்டு “என்னோட தூக்கத்த தொலைச்ச உன்ன நிம்மதியா விட்ருவேனா.. நான் அனுபவிக்கிற மொத்த வலியும் உன்ன அனுபபிக்க வைக்கிறேன்” என்று அவளை பார்த்து குரூரமாக சிரித்துவிட்டு, அவளை விட்டு சென்றான்.
அதன் பின் அவளை நிழல் போல் பின் தொடர தொடங்கியிருக்க, எப்போதும் இருக்கும் அவளின் முகத்தில் யாரும் கண்டு கொள்ள முடியா இறுக்கம் அவனுக்கு மட்டுமே தெரிஞ்சது, அதை பார்க்கும் போது சர்வாவிற்கு இதமாக இருக்கும்.
அதன் பின் பெண்ணவளுக்கு குழந்தை பிறந்தது, அதுவும் பிரசவத்தில் யாருமில்லா அனாதை போல் வலியில் துடித்ததை பார்த்து ஆடவனின் காட்டியில் பெய்தது போன்ற உணர்வில் மருத்துவமனைக்கு விரைந்தான்.
குழந்தையும் பிறந்து விட, மருத்துவமனை உரிமையாளர் சர்வா தந்தைக்கு மிக நெருக்கம் என்பதால் எல்லாம் முடிந்து அறைக்குள் சென்ற மருத்துவரின் முன் போய் நின்று
“அந்த குழந்தைய கொன்றுங்க.. அதுவும் என்னோட கண் முன்னாடி” என்றதில் மறுத்து கதறியும் குழந்தையை கொல்ல சொல்லி கட்டாயப்படுத்த இறுதியில், அவரின் பொண்ணையே தூக்கி மிரட்டி குழந்தையை அவனின் கண் முன்னாலயே எரிக்க வேண்டிய பெட்டிற்குள் அனுப்பி வைத்தார்கள்.
அதில் இடமே அதிரும் வண்ணம் ஆடவன் சிரித்து மகிழ, அங்கிருந்த மற்றவர்கள் குழந்தையின் இறப்பிற்கு சிரிக்கும் அவனை சைக்கோ போல தான் பார்த்து வைத்தனர்.
அதனை கதை கூறி கொண்டிருந்த ராகவ் கூறியதை கேட்டு, இப்போது கூட சர்வா இதழில் புன்னகை தவழ,
ஒருபுறம் தான் கற்பழிக்கப்படவில்லை என்று சந்தோசப்பட்டவள், தங்கள் குழந்தையின் இழப்பில் கண்கள் சிவந்து கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் காளியாக மாறிய தியா கையிலிருந்த துப்பாக்கியை தூக்கி போட்டு திருப்பி பிடித்து சர்வாவின் மண்டையை இரத்தம் வருமளவு பொலைந்து விட்டாள்.
அதற்கு மேல் அடித்தே கொன்று விடுவாள் என்று ரேயன், அவள் கையை தடுத்து பிடித்து “சோ நான் நினைச்சப்படி.. உங்க சைக்கோ தொழில என்னோட பொண்டாட்டி தான் ஃபர்ஸ்ட் புராஜக்ட் ரைட்” என்றதுக்கு ஆமென்று தலையாட்டிய ராகவ் “நாங்க தியாவ மட்டும் பழி வாங்கிட்டு விடுற எண்ணத்துல தான் இருந்தோம்..” என்று அடுத்து ஏதோ கூற வரும் முன் அவனின் மண்டையில் துப்பாக்கியால் அடித்த தியா “டேய் எனக்கு போட்ட இஞ்செக்சன் என்ன..”
“நீ சர்வாகிட்ட கேஸ் விசாரணை பண்ணியே.. அந்த இன்ஜெக்சன் தான்.. எல்லாருக்குமே ஓவர் டோஸ் தான் கொடுப்பேன் உனக்கு அத விட ஓவர் டோஸ் ரெடி பண்ணியிருந்தேன்.. அது உன்னோட நெகடிவ் மைண்ட் பிரேகன்ஸி மூட் ஸ்விங்ஸ் அப்போலாம் உன்ன குழப்பமான மனநிலையில் இருக்க வச்சி சரியான சிந்தனைய உன்ன யோசிக்க முடியாது.. அதுனால தான் அந்த டைம் கூட நீயும் சராசரி பொண்ணு போல பிஹேவ் பண்ணின.. குழந்தை செத்து போனா அதுலிருந்து உன்னால வெளிய வர முடியாது.. சோ உன்ன ரேப் பண்ணினவங்க கண்டுபிடிக்கணும் மைண்ட் கூட உனக்கு தோணாது..
ரிசன்ட்டா கூட சத்யா டெலிவரி டைம் நீயும் ஹாஸ்பிட்டல் அட்மிட்டாகி இருந்த அப்போ உனக்கு கொஞ்சம் ஹை டோஸ் சலின்ல கலந்துட்டன்.. எப்படியும் இந்த கேஸ்ல கிடைக்கிற லீட்ல.. நீ மறந்தும் கூட அதபத்தி சொல்ல கூடாதுன்னு தான் அன்னைக்கு டோஸ் கொடுக்க வேண்டி போச்சு.. இப்போவரை உனக்கு நிறைய குழப்பம் இருக்கும்..
அது தான் எங்களுக்கு வெற்றி” என்று சாதித்த போல் பெருமை பேச்ச, ஆர்யன் ருத்ரன் தான் ‘மேய்கிறது எருமை இதுல நாய்க்கு பெருமை வேற’ என்று ஒரு சேர சிந்தித்து கொண்டனர்.
தியாவிற்கோ மனமெங்கும் வலி அவனை இப்படியே அடித்து கொன்று விட்டாள் என்னவென்று தான் தோணியது, அதுவும் தன்னிடம் நடித்து ஏமாத்திருக்கிறான் மற்ற பெண்களின் நிலை என்று அனைத்தும் நினைத்த பெண்ணவளின் நெஞ்சம் அனலாக தகித்தது.
பின் அடக்கிவிட்டு ராகவ்யிடம் “சரி எனக்கு தான் ஏதோ காரணம் இழவுன்னு பாவம் பாக்காம செஞ்சீங்க.. மத்த பொண்ணுங்க என்னடா பாவம் பண்ணுச்சு” என்க,
ஆர்யாவிற்கும் தன்னவள் கற்பழிக்கப்படவளை என்ற நிம்மதி எழ, மடிக்கணினியில் மயக்க நிலையிலிருந்த தன்னவளை பார்த்துவிட்டு சைக்கோ கூறும் பதிலை எதிர்பார்த்தான்.
ராகவ் தான் “உன்ன வாழ்க்க முழுக்க கதறவிட்டது நினைச்சி ரொம்ப சந்தோசமா அடுத்து படிக்க போனான்.. ஆனா இரவு போராட்டம்.. அவனுக்கு மாறவேயில்ல ஒருவழியா அந்த போரட்டத்தோடவே கைனோ பட்டம் வாங்கி வேற ஒருத்தங்க ஹஸ்பிட்டல மகப்பேறு மருத்துவரா தன்னுடைய பணி ஸ்டார்ட் பண்ணிட்டான்..
கொஞ்ச காலத்துல தனக்குன்னு கிளினிக் வச்சிட்டான்.. ஆனா மார்னிங் நல்லா இருக்குறவன் நைட் கோரமாயிருப்பான்.. எனக்கே அவன நினைச்சி பயம் வந்துருச்சு.. அந்த டைம்ல தர்மாவும் மகப்பேறு மருத்துவரா சென்னைல தனியா கிளினிக் வச்சியிருந்தான்
அதோட ரேப்புல ப்ரெக்னன்ட்டாகி கலைக்க வருர பொண்ணுங்கள பேசி தான் கூடவே வச்சி பாத்துகிட்டு குழந்தை பிறந்ததும் தாய்க்கு வேண்டாம் தோணுச்சுன்னா.. அவங்க அகிரீமென்ட் சைன் பண்ணி குழந்தைய இல்லாதவங்களுக்கு அடாப்ட் பண்றார்..” என்று அதன் பின் நிகழ்ந்த இருவரின் வாதத்தை பற்றி கூறினான்.
நண்பன் தர்மாவை பார்த்துவிட்டு வருர வழியில் ஒரு பெண்ணையும் தியா நினைவில் அவளையும் கதற வைக்க நினைத்தவன்,
அப்போதைக்கு தன்னுடைய எண்ணத்தை ராகவ்யிடம் கூறியிருக்க, அது தவறு என்று வேண்டாமென்று நினைத்தாலும் அவன் படும் வேதனைக்காகவே, அந்த பெண் பற்றின தகவலுடன் அவன் முன் நின்ற ராகவ் “டேய் பொண்ணு பேரு தியா அன்பு இல்லத்துல இருக்கிற அனாதைல.. அவளும் ஒருத்தி பேரு திவ்யா” என்றதை கேட்ட சர்வாவிற்கோ தியா என்று விழுக,
குரூரமாக சிரித்த சர்வா “டேய் ராகவ் நம்ம எதுக்கு தர்மா போல.. இந்த சேவை பண்ண கூடாது” என்க,
அதில் குழம்பி விழித்த ராகவ் “எனக்கு புரியல.. நீ சேவை பண்ண போறியா”
“உனக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா எனக்கு பொண்ணுங்க வேணும் அவங்க கதறல் வேணும்.. ஆனா அதுல பிராபிட்டா பேபி யூஸ் பண்ணிக்கலாம்..” என்று இன்னும் கேள்வியாக பார்ப்பவனிடம் “பச் ராகவ் இப்போ சிலருக்கு குழந்தை பெத்துக்க முடியல..
ஏன் சிலருக்கு விருப்பம் இல்ல.. அது போக பணங்காரங்க சினிமாக்கராங்க சில பேர் வாடகை தாய் தேடி தான போறாங்க.. சோ நம்ம கடத்துற பொண்ண இதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்.. தர்மா செய்றத நம்ம இல்லீகளா செய்ய போறோம்.. அதுவும் கடத்த போற பொண்ணுங்கள ரேப் பண்ணப்பட்டது போல..
அவங்கள நம்ப வச்சி குழந்தை தேவைன்னு சொல்லுற ஆண்களோட விந்தணுவ.. நம்ம கடத்தின பெண்களுக்குள்ள செலுத்தி குழந்தை பிறந்ததும்
அந்த குழந்தை கொடுத்து காசு வாங்கிட்டு பிரசவம் முடிஞ்ச கையோட அவங்கள ஆசை தீர கதறவிட்டு க்ளோஸ் பண்ணிடலாம்.. லாபத்துக்கு லாபமும் ஆச்சு.. என் பிரச்சனைக்கும் தீர்வு கிடைச்ச போல” என்று ஒரு வழியாக பேசி சமாதித்து குழந்தைக்காக சீக்ரெட் வெப் உருவாக்கிட்டு,
முதல அன்பு ஹோம்ல டொனேஷன் அப்படி இப்படின்னு கொடுக்கிற போல மந்தாகினியை கைக்குள் போட்டு கொண்டு அங்கிருந்த மேனேஜர் சதீஷியிடம் தன் முகம் தெரியாமலே மிரட்டி தன் காரியத்திற்கு உபோயகப்படுத்தி எந்த பெண் என்று கூறி மறுமாத குறிப்பேட்டுல பெயர எடுத்துவிட சொல்லி, மந்தாகினியிடம் மறுமாத பெயர் குறிபேட்டுல நீக்கியதும் அந்த பெண்ணை அந்த இறுதியிலே அனுப்பியும் வைத்துவிடுவார்.
அதாவது கடத்திய பெண்களை தன் இடத்தில் வைத்து தியாவிற்கு போட்ட, அதை மருந்து ஏற்றிய ஊசியை போட்டுவிட்டு பெண்ணவளின் விந்தணுவை செலுத்தி கற்பழிக்கப்பட்டது போல் நம்ப வைத்திருக்க,
அந்நேரம் மந்தாகினி அன்பாக பேசியது போல் பேசி மனதை மாற்றி சத்யாவை போல், அவன் கூறும் பெண்களை அவன் இடத்திற்கு வழியனுப்பி வைத்துவிட்டு எந்த தடையமின்றி மூளையாகவே செயல்பட்ட சர்வா மற்றவர்களையும் செய்ல்பட வைத்தான்.
பிரசவம் முன் கையில் வைத்து தாங்குவது போல் தாங்கி குழந்தை பிறந்ததும் தாய் அவளை வலியில் துடிக்க வைத்து அக்கதறலை ரசித்து தன் சைக்கோ கதாப்பாத்திரத்துக்கு தீனி போட்டு இவ்வித போதையில் வாழ்ந்தான்.
ராகவ் கூறியதை கேட்டு அங்கிருந்தவர்களுக்கு கோவத்தில் கைகளில் நரம்புகள் புடைத்து கிளம்பியது வணங்க வேண்டிய பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்து, தாய் என்ற ஸானத்தை கூட பார்க்காமல் கதறவிட்டு கொள்கிறார்களே என்று அவர்கள் மேல் அறுவெறுப்பும் வர, தன் சந்தேகத்தை முன் வைத்த ருத்ரன் “சரி தர்மா என்ன பண்ணிங்க”
“அன்பு இல்லத்துல பண்ணின இந்த வேலைய வேற ஒரு ஹோம்லயும் அங்குள்ள ஆட்கள் பணம் கொடுத்து அமுக்கிட்டோம் மோஸ்ட்டிலி ..சர்வா அன்பு இல்லத்த தான் நிறைய டார்கேட் பண்ணுவான்
சில நேரம் இன்னொரு ஹோம்.. நாங்க பண்றது எப்படியோ தர்மாக்கு தெரிஞ்சி உங்க பெரிய அதிகாரிக்கு யாரு என்னன்னு சொல்லாம மேலோட்டமா எழுதி அனுப்பி விட்டுருக்கான்.. எங்களுக்கு ஒன்ஸ் அவன் ஹாஸ்பிட்டல் போகும் போது இன்ஃபோ அணுப்புற முன்னாடி அவன் டேபிள்ல இருந்த எல்லா ஆதாரமும் பாத்துட்டோம்..
அதுல ஈஸ்யா மாட்டிக்குற மாதிரி ஒன்னும் இல்ல.. அப்போ தான் ரேயன் தியா வச்சி ஒரு கேம் விளையாட நினைச்சி அவன் அனுப்புற வர ஒன்னுமே செய்யல..
அப்புறம் அவன் கதைய முடிச்சி சாம்பல் கூட தெரியாதபடி பக்கவா பிளான் பண்ணி சர்வா அதுல என்ன இறக்கினான்.. அண்ட் இதுல சத்யா மட்டும் லாஸ்ட் மந்த்ஸ்ல நாங்க பேசிட்டு இருக்கும் போது கேட்டுட்டு தப்பிக்க டிரை பண்ணி வந்தவ தான் கீழ விழுந்து உங்ககிட்ட சிக்கினது..
அப்போவும் கூட சர்வா தான் அசிஸ்டன்ட் டாக்டர் வேறயா குழந்தைய விட்டு வச்சிட்டு சத்யாவ வலிப்பு வர வச்சி சாக வைத்து கண்குளிர ஆனந்தமாக இருந்துச்சு.. அண்ட் சத்யா பத்தி நீங்க விசாரிக்க ஸ்டார்ட் பண்ணும் போது தான் சத்யா போலவே இருக்கிற இன்னொரு பொண்ணு எங்ககிட்ட மாட்ட..
அவ பேரு சத்யாவதி பிளட் க்ரூப் கூட ரெண்டு பேருக்கும் ஒத்து போக.. அவள வச்சி பிளே பண்ண நினைச்சேன் அப்போ தியா பர்தாவோட வெளியே வந்தத.. அப்போ அந்த வழியா போகும் போது பாத்தேன் ஏதோ தப்பு தெரிஞ்சது அதான் சத்யாவுக்கு எடுக்க வேண்டிய டெஸ்ட் வேற ஒருத்தருக்கு எடுத்தேன்.. அத தான் தியா கொண்டு போய் ரிசல்ட் உங்களுக்கு தப்பாகிடுச்சு” என்று முடித்திருந்தான்.
இம்முறை தியாவிற்குள் ஒரு குற்றயுணர்சி தன் ஒருத்தியால் இத்தனை பெண்களுக்கு, இவன் கொடுக்கும் தண்டனை சரியாக எப்படி இருக்கும் என்று ஏதோ சிந்தித்து கொண்டிருந்த பெண்ணவளின் சிந்தையை கலைத்தது வாகினி “ஜோ” என்று உணர்ச்சி குரல் தான்.
இப்போது மெல்ல திரும்பி, அவன் புறம் பார்வையை படரவிட்டவருக்கு அவன் மெல்ல கண் திறந்தில் அதிர்ச்சியை விட, மாறாக அனைவரும் கலங்கியிருக்க, வாகினியின் சொல்லவே வேண்டாம் அவனை அதற்கு மேல் பார்க்க முடியாமல் பெண்ணவள் மடிக்கணினி இணைப்பையே துண்டித்து விட்டு முகத்தை மூடி அழுது கொண்டாள்.
****
இதற்கு முன் அவனை கடத்தும் போதே விழிப்பு வந்திருந்ததால், இந்த முறை எந்த வித கஷ்டமும் இல்லாமல் கண்விழித்த ஜோஸப் தன்னை ஏக்கமாக பார்த்திருந்தவர்களை கண்ணடிக்க,
தியாவை தவிர மொத்த ஆடவர்களும் அவனை அணைத்து கொண்டு கண்ணீரில் மூழ்கியவர்கள் அவனையும் மூழ்க விட்டார்கள்.
அனைவரையும் அணைத்திருந்தவனின் பார்வையோ இதழ் கடித்து குனிந்தவாறு துப்பாக்கியை இருவரை காட்டியப்படி அவர்களை மறைத்து நின்றிருந்த தியாவில் படிய, மற்றவர்களிடமிருந்து விலகி அவள் எதிரே நின்றவன் “என்ன சைட் என்ன பாத்து வெட்கமா தல குனிஞ்சி நிக்குறியா” என்றதுக்கு இல்லையென்று தலையாட்டிவளை கண்டு “அப்போ என்ன”
“அது.. நான்.. நான்.. உன்ன” என்று வார்த்தைகள் தடுமாற, அது எதற்கு என்று புரிந்தவன் “தியா பேபி..” என்றதும் அவனை தாவி அணைத்த பாவை “சாரி ஜோஸா* என்று குலுங்கி அழுதாள்.
இத்தனை கால இறுக்கம் தளர்ந்து மொத்தமாக கண்ணீரை நண்பனிடமே இறக்கி வைக்க,
அவளுக்கு ஆதரவாக தலையை வருடியவன், அப்போது தான் ரத்தம் வடிய அமர்ந்திருந்த சர்வாவை கண்டு திகைத்து பெண்ணவளை தள்ளி நிறுத்தி ஆடவர்கள் இருவரின் புறம் சென்று “யூ நீ தான் எல்லாத்துக்கும் காரணம்” என்று இருவரையும் மாறி மாறி செவியில் அடிக்க,
ராகவிற்கோ காதில் ரத்தமே வடிய தொடங்கியது, இருப்பினும் வெறி குறையாமல் அடித்து கொண்டிருக்க மற்றவர்கள் தான் அவனை சூழ்ந்து தடுத்தனர்.
பின் தியா “ஜோஸா.. இவனுங்க தெரியுமா உனக்கு”
“ஏன் தெரியாது.. உன்னயும் ரேயனையும் பிரிக்க திட்டம் போட்டு.. என்ன நாலு வருஷம் என் வானிக்கிட்ட இருந்து பிரிச்சி வச்சி.. உன்ன குற்றயுணர்சில துடிக்க வச்சதே. இவனுங்க தான எப்படி தெரியாம இருக்கும்” என்றுதும் அனைவருக்கும் குழப்பமாகி விட,
ஆர்யன் மற்றும் ருத்ரன் தான் ‘அடுத்த ஃப்ளாஷ்பேக்.. இவனுங்க நம்ம ஒருத்தனையும் விட்டு வைக்கல போல இதுக்கு இல்லையா சார் எண்ட்’ என்று ஒரே போல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள,
தியா தான் “எனக்கு புரியலடா நீ சொல்லுறது” என்றதும் இம்முறை கடந்த காலத்திற்கு செல்வது ஜோஸப்பின் முறையாகி போனது.
****
டெல்லியில் இருந்து வர, நான்கு நாட்கள் ஆகுமென்று தன்னவளிடம் பொய் கூறிவிட்டு,
அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க எண்ணி ரெண்டு நாட்கள் முன்னமே சென்னை வந்து சேர்ந்தவன் வாகினியின் அப்பார்ட்மெண்ட்டை நோக்கி செல்ல, தியா பதற்றமாக மருத்துவமனை நுழைவதை கண்டு என்னவாகயிருக்கும் என்று மருத்துவமனைக்கு நடந்து வந்து உள்ளே நுழைந்தான்.
அப்போது தான் வாகி ரேயன் இருவரும் பதற்றமாக போனதை கண்டு அவர்கள் அறியாமல் மறைந்து கொண்ட ஜோஸப் ‘என்ன வரிசையா போகுதுங்க’ என்ற சிந்தனையுடன் உள்ளே நுழைந்து முதலில் தியாவை தேடியவன் பெண்ணவள் வாசலை வரை சென்று மீண்டும் வந்து எதையோ தேடிவிட்டு கண்கள் விரிய உள்ள நுழைந்தாள்.
அவள் சென்ற திசையை கண்டு கொண்ட ருத்ரன் அங்கே சென்று கிடைத்த இடைவெளியில் காதை வைத்து உள்ளே நிகழ்ந்தவை கேட்டு உடைந்து விட்டான்.
அதிலும், அவளுக்கு நிச்சயமானது தெரியும் ரேயன் தான் அந்த அத்தை பையன் என்று தெரிந்ததோடு இருவரின் திருமணம் என்று அனைத்தில் இதயத்தில் எழும் வலியால்.
அவனின் கண்களில் கண்ணீர் வடிய, அந்நேரம் தியா வெளியே வர அவள் கண்ணில் படாமல் மறைந்து விட்டான்.
பின் தளர்ந்த நடையுடன் வெளியே வந்து, தன் உணர்வுகளை சமன்படுத்தி எழுந்தவன் தியாவை தேடி போக என்று எழும்பி நடக்க,
அங்கு சற்று தள்ளி சர்வா “டேய் ராகவா.. தியாக்கு ஃபர்ஸ்ட் டோஸ் கம்ப்ளீட்.. இனி வாழ்க்கைல வலி மட்டும் தான் அதுல தூக்கத்த தொலைச்சி அவ படுறப்பாடு நினைக்கவே.. அப்படியே ஜிவ்வுன்னு இருக்குடா” என்று பேசி கொண்டிருக்க,
அவன் காலை கொத்தாக பற்றி மூக்கில் குத்திய ருத்ரன் “யாருடா நீ என்னோடு தியா பேபிக்கு.. என்ன சதி பண்ற” என்று மூச்சு வாங்க முறைக்க,
மூக்கில் குத்தியதில் வலியில் தேய்த்து விட்ட சர்வா “நீ அவ உயிர் தோழனாமே உன்ன வச்சி தான்.. அடுத்து அவள அடிக்கயிருந்தேன் நீயே வந்து மாட்டிக்கிட்ட பட் என்ன பண்ணலாம் கண்டன்ட் இல்லையே” என்று யோசிப்பது போல் பாவனை செய்ய, அதற்குள் அவ்விடம் வந்த ராகவ் ருத்ரனை பிடித்துக் கொள்ள,
சர்வாவோ “இவன என்ன பண்ணலாம்” என்று முடிவெடுத்துவிட்டு இவன கார்ல தூக்கி போட்டு அந்த இஞ்செக்சன் போடு” என்று கட்டளையிட,
“டேய் விடுங்கடா” என்று திமிரியவனை இழுத்து சென்று அவன் கழுத்தில் ஊசியை ராகவ் இறக்கியிருக்க,
அடுத்த ஐந்து நிமிடத்தில் ஆடவன் உடலில் உணர்வின்றி எதுவும் செய்யாத நிலையில் முகம் கடுகடுப்புடன் அமர்ந்திருந்தான்.
பின் தியா வரும் வழி உணர்ந்து ஒரு இடத்தில் ருத்ரனை பிடித்தப்படி ஓரமாக நின்றவர்கள், சரியாக தியாவின் கார் வரவும் ஆடவனை தூக்கி வீச, அதில் பெண்ணவளின் காரில் அடிப்பட்டு தூக்க வீசப்பட்டிருந்தான்.
அதன் பின், அவனை பெண்ணவள் மருத்துவமனைக்கு அழைத்து போக, பின்னயே, இருவரும் அவள் அறியாவண்ணம் கண்கானித்தனர்.
மருத்தவர் “கோமா” என்று கூறிய வார்த்தையில் மெல்லமாக இதழ் விரித்த சர்வா “ராகவா மத்த வலியோட குற்றயுணர்ச்சியும் . அவள் நரக வேதனை அனுபவிப்ப.. ஹா ஹா” என்று சிரிக்க, நிகழ்ந்ததை கூறி முடித்து தியாவை நோக்கிய ஜோஸப் “நீ தேவையில்லாம குற்றயுணர்சி கூட்டு பொறியல்ன்னு செய்யாத தப்புக்கு ரொம்பவே கஷ்டப்பட்டுட்ட அதுக்குலாம் இவனுங்களுக்கு நரகத்த காட்டணும்” என்றவனுக்கும் தன் வாழ்க்கையோடு நண்பர்களின் வாழ்க்கை இழந்த காலத்தின் இழப்பில் தோன்றிய கொலவெறி.
அனைவரிடமும் பார்வையை நிலைக்க விட்டு ரேயனை பார்க்க, அவனோ அவள் ஒருத்தி இருப்பதையே மதிக்காமல் நின்றிருந்தான்.
பின் மெல்ல மூச்சை இழுத்துவிட்டு இரு சைக்கோகளின் புறம் திரும்பியவள் “உன்னால குழந்தை பெத்துக்க முடியலன்னு ஆதங்கத்த தப்பே பண்ணாத பொண்ணுங்க மேல காட்ட உனக்கு எப்படிடா மனசு வருது..
ஒரு விதத்துல நீ என்னால இப்படி ஆயிட்ட நான் ஒத்துக்கிறேன்.. அதுக்கு தான் எனக்கு தண்டனை கொடுத்து உயிர எடுத்திட்டியே.. அப்படியும் உன் மனசு ஆறாலன்னா” என்று ராகவ் புறம் திரும்பி “நீ ஒரு நல்லா சகோதரனா இருந்திருந்தா அவனுக்கு தேவையான கவுன்சலிங் கூட்டிட்டு போய் இந்நேரம் அவன மனுஷனா மாத்திருந்தா.. ரெண்டு பேருமே இனி நிம்மதியா இருந்துருப்பீங்க” என்று ஆர்யனை அழைத்து அவன் காதில் ஏதோ கடிக்க,
அதை கேட்டு தலையாட்டிய ஆர்யன் கூடவே ருத்ரனை அழைத்து கொண்டு தமக்கையின் கட்டளையை செயலாற்ற சென்றான்.
ராகவின் மனதிற்குள், அவள் கூறுவது ஒப்பு கொள்ளும் படியிருந்தாலும் தன் ரெட்டையன் மகிழ்ச்சிக்காக செய்தவனுக்கு பெண்ணவள் அடித்ததில் தனி கோபமிருக்க,
அவளை பழி வாங்கும் நோக்கிலும் சர்வாவுடன் இணைந்தவனுக்கு அடுத்தடுத்த சர்வாவின் தவறான பாதை, அவனிற்கு எதாவது ஆபத்தாகி விடுவோம் என்ற பயமிருந்தாலும் அவனின் சந்தோசத்திற்கு செய்தவனுக்கும் இது அடுத்தவர் வலியில் கதறுவதை ரசிப்பது அவனுக்குள்ளும் போதையாகி போனது.
அரை மணிநேரம் சென்ற நிலையில் அவ்விடம் தமக்கை கூறியதை வாங்கி வந்த ஆர்யன்,
அவளிடம் கொடுக்க முதலில் கையில் உரை அணிந்து ஆர்யன் கொடுத்ததில் கண்ணாடி குவளை எடுத்தவள் “ராகவா நீ தான உடல் உணர்வு இழக்க மருந்தும்.. பொண்ணுங்களோட மூட் ஸ்விங்ஸ் அதிகப்படுத்தி அதை டிப்ரஷன் அளவு கொண்டு போக மருந்து கண்டுபிடிச்ச அதுவும் அதிக டோஸ் சொன்ன தான.. உனக்கு நான் கொடுக்கிறேன் டோஸ்” என்று “மச்சி அவன் சட்டைய கழட்டு” என்க,
ருத்ரனும் செய்து முடிய, பின் மற்றவர்களை பார்வையால் தள்ளி நிற்க வைத்துவிட்டு தானும் தள்ளி நின்றவள் ராகவின் முகத்தை தவிர, மேல் சட்டையில்லா மேனியில் ஆசிட் ஊத்தியிருந்தால்,
அதோடு அவனின் பேண்ட்டின் மேலும் உத்திருக்க உடையை தாண்டி கால்களிலும் பட்டு எரிந்ததில் ஆடவன் பேய் கதறு கதறினான்.
அதை பார்த்து மற்றவர்கள் ரசிக்க தியா “நீ சொன்னது உண்மை தான் போல ராகவ்.. நீ இப்படி வலியில கதருறது எனக்கு போதையாக இருக்குதுயா” என்று ரசித்து சிரிக்க,
பக்கத்திலிருந்த சர்வாவின் புறம் வந்து “என்ன மச்சி பயமே இல்லயோ.. இல்ல உன்ன ஒன்னும் செய்ய மாட்டேன் நினைக்கிறியா.. ஆனா பாரேன் நிஜமாவே உன்ன எதுவும் செய்ய வேண்டாம்ன்னு மனசு சொல்லுது மூளை உன்ன கண்ட தூண்டமா செய்ய சொல்லுது..
சோ நான் மூளை பேச்சு கேட்டு தான் பழக்கம் அதுனால எங்கள ஒரு தடவ ஆசை தீர பாத்துக்க” என்றுவிட்டு அங்கிருந்த கத்தியை எடுத்தவள்
“இந்த ரெண்டு கண்ணு தான எல்லா பொண்ணுங்க கதறும் போது ரசிச்சுது” என்று ரெண்டு கண்களிலும் பெண்ணவள் கத்தியை சொருகி எடுத்திருக்க,
வலியில் அலறியவன் மேல் “செத்து போன பொண்ணுங்க சாம்பல் கூட வெளிய தெரியாம பாத்துக்குற தான இப்போ உன்னோட சாம்பல் வெளிய தெரியாம இருக்கா பாப்போமா” என்று அவனின் மேல் பெட்ரோல் ஊற்றி கொழுத்தி விட்டாள்.
பின் உடல் எரிவில் கதறி கொண்டிருந்த ராகவை காட்டி “ருத்ரா இவன ஹாஸ்பிட்டல் அட்மிட் பண்ணு” என்க
அதில் புரியாமல் விழித்த ருத்ரன் “தெரிஞ்சி தான் பேசுறியா மச்சி.. அவன் உடம்புல காயம் இருக்கு எப்படின்னு கேட்டா என்ன சொல்லுவ பேசாம அவன போல இவனையும் முடிச்சி விட்டுரு”
“மச்சி நமக்கு தான் அவைங்க ரெண்டு பேரும் குற்றவாளின்னு தெரியும்..
ஆனா, வெளிய தெரியாதே.. அவன் காயத்த பத்தி கேட்டா நான் பதில் கொடுத்துக்குறேன் என்ன மிஞ்சி மிஞ்சி போனா சஸ்பன்ஸ் தருவாய்ங்க.. சோ எனக்கும் ரெஸ்ட் தேவை அதான் கொஞ்ச நாள் வீட்டுல இருக்கிற சில வேலைகள் கவனிக்கணும் சோ எனக்கு தேவை தான் இது டோண்ட் வொர்ரி காய்ஸ்” என்றவளின் பார்வை ரேயனை தொட்டு சென்றது.
பிறகு அவள் கூறியது போல் ராகவை மருத்துவமனையில் சேர்க்க, சர்வாயிருந்த தடம் தெரியாமல் அழிக்கப்பட்டது.
அதோடு கேஸை முடித்து மேல் அதிகாரியிடம் தன்னவனுடன் கொடுக்க சென்றவள் சர்வாவை பற்றியும் சொல்லியிருக்க, அவரும் “கிரேட் ஜாப்” என்று பாராட்டினார்.
அதில் புன்னகைத்து தியா “தேங்க்ஸ் சார்..” என்று நிறுத்தியவள் “மாமா” என்று முடித்து கண்கள் சிமிட்டிக்கொள்ள,
அதிலே அவளுக்கு உண்மை புரிந்து விட்டது என்று உணர்ந்தவர் இருவரின் தலையையும் ஆசையாக வருடி கொடுத்து ஆசி வழங்க,
“இன்னும் தனியா இருக்க தான் பிளான் சீக்கிரம் மகன் வீட்டுக்கு வந்து சேருங்க.. இல்லன்னா பெரிய மனுஷன் இல்லாத வீட்டுல உங்க பையன் கொடுமை பண்ணுவான்”
“என் மகன் வீட்டுக்கு நான் வருறது ஓகே.. உன் அப்பா” என்றதும் வாய் அடைத்து போன தியா, அமைதியாக தலையசைத்து விட்டு வெளியேறினாள்
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍

