Loading

இருவரின் நாட்களும் மகிழ்வாக கடந்து கொண்டிருக்க, தர்மாலிங்கமோ வெறி நாய் போல் அவளை வேட்டையாட நேரம் பார்த்து காத்திருக்க, இரு முறை அவளை தூக்க முயற்சித்து ருத்ரனின் முன் தோற்றவன் அப்போதும் திருந்தாமல் காத்திருந்தான்.

 

அவன் தாலிக்கட்டி ஒரு மாதம் முடிந்த நிலையில் வழக்கம் போல் பெண்ணவளை பள்ளி கூடத்தில் விட்டு வந்தவனுக்கு குற்ற புலனாய்வு துறைக்கான பயிற்சியில் ஆடவன் தேர்வு செய்யப்பட்டிருக்க,

 

அதற்கான மின்னஞ்சலும் ருத்ரனின் திறன்பேசிக்கு வந்திருக்க, அதில் மகிழ்வு ஏற்ப்பட்டாலும் சித்திராவை தனியே விட்டு செல்ல மனமில்லாமல் அவள் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கவும் தன் லட்சியத்தை நிறைவேற்றி கொள்ளலாம் என்று முடிவெடுத்தவனுக்கு தர்மாவின் கழுகு பார்வையில் மற்றவர்களை நம்பி விட்டு செல்லவது சரியாகாது என்ற காரணமும் சேர்ந்தே தன்னுடைய லட்சியத்தை தள்ளி வைத்திருக்க,

 

அதுவரை தந்தையுடன் இணைந்து விவசாயம் பார்க்க நினைத்தவன், சித்திராவிடம் மறைத்து பெற்றோர்களிடமும் விஷயத்தை கூற, அவர்களுக்கோ மகனை எண்ணி பெருமையாகவே இருந்தது.

 

அந்த பயிற்சிக்கான நாளுக்கு ரெண்டு நாள் முன் ரேயன் ஜோஸப்பிடம் இருந்து கான்பரன்ஸ் வர மாடி சென்று அழைப்பு ஏற்றவனிடம் “என்னடா இன்னும் வரமா இருக்க” என்க,

 

அவன் நடந்ததை விவரித்து காரணத்தையும் கூற, நண்பனை நினைத்து பெருமைப்பட்ட இருவருக்குமே அவனின் முடிவு சரியென்று தோன்றியது.

 

ஜோஸப்போ “சூப்பர்டா மச்சி.. என் தங்கச்சி ரொம்ப கொடுத்து வச்சவ தான்.. ஆனா கண்டிப்பா அடுத்ததுல நீ செலக்ட் ஆகுற” என்க,

 

ரேயனும் “ஆமா மச்சான்.. மூணு பேருமே சூஸ் பண்ணின கரியர் தான் இது.. ஆனாலும் நீயில்லாம நாங்க ரொம்ப கஷ்டம் சோ சீக்கிரம் வந்திரு”

 

“கண்டிப்பா மச்சான்.. நீங்க உள்ள இறங்கி மாஸ் பண்ணுங்கடா..” என்று வாழ்த்துக்கள் கூறிவிட்டு அழைப்பை துண்டித்து திரும்பியவன், அவனின் சிட்டு கண்கள் கலங்க நின்றதில் அதிர்ந்து விட்டான்.

 

வழக்கத்தை விட, இன்று ஏனோ பெண்ணவளின் பள்ளி விரைவாகவே வீட்டிற்கு விட்டிருக்க, அதில் குஷியாகி தானே நடந்து வந்தவள் மாமியாரிடம் கணவனை விசாரித்து மேலே வந்தவள் தனக்காக அவனின் லட்சியத்தை ஒதுக்கிய உண்மை அறிந்து சிலையாக நின்று விட்டாள்.

 

அவளை கண்டு முதல் அதிர்வு ஏற்பட்டாலும் பிறகு தான் அவள் தனியாக வந்திருக்கிறாள் என்று புரிய, கோவமாக அவளின் அருகில் சென்று “உன்கிட்ட படிச்சி படிச்சி சொல்லுறேன் தான.. நான் இல்லாம வெளிய போகாதுன்னு கேட்க கூடாதுன்னு திமிராடி உனக்கு” என்று அவன் பதறி கொண்டிருக்க,

 

அதை கண்டு கொள்ளாத பாவை “உன் லட்சியத்த.. எதுக்கு மாமா என்கிட்ட மறைச்ச”

 

“ப்ச்.. மறைக்க நினைக்கல சொல்ல சரியான சூழ்நிலை அமயல.. அப்படியே சொன்னாலும் நீ என்ன போக சொல்லி கட்டாயப்படுத்தி இருப்ப.. என்னால உன்ன தனியா விட்டுட்டு போக முடியாது சோ அடுத்த டிரை பண்ணும் போது சொல்லிக்கலாம்ன்னு விட்டுட்டன்”

 

“எனக்காக எதுக்கு மாமா.. இதெல்லாம் பண்ற”

 

“என்னடி பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்க.. இப்போ நீ மிஸ் சித்திரா தேவி இல்ல.. மிஸ்டரஸ் சித்திரா தேவி ருத்ரேஷ்வரன் பெயருல மட்டும் இல்ல எப்போவுமே உன் கூட தான் இருப்பேன்” என்றதில் அவனின் முகம் முழுவதும் முத்தமிட்டவள் “லவ் யூ மாமா” என்று அவனின் இதழை சிறை செய்துவிட்டாள்.

 

முதலில் அதிர்ந்து பிறகு, அவளின் முத்தத்தில் தொலைந்தவனுக்கு இத்தனை நாள் அடக்கியிருந்த உணர்வுகள் வெளியே வர துடிக்க,

 

‘தப்பு ருத்ரா.. அவ சின்ன பொண்ணு’ என்று மனம் உரைத்ததில்,

 

அவளை தள்ளி நிறுத்தியவன் ஏக்கம் கலந்த பெண்ணவளின் பார்வையில் ‘அய்யோ பார்வையிலயே மூட் ஏத்துறாளே.. கண்ண பாக்காத அப்புறம் சின்னாபின்னமா ஆயிடுவ’ என்று தலையை தட்டி சமன்செய்தவன் “உன்ன சின்ன பிள்ளை நினைச்சா ரத்தகாட்டேரி மாதிரி கடிச்சி வச்சிருக்க” என்று கூறியவனுக்கு ஏனோ உள்ளுக்குள் இனிக்கவே செய்ய,

வெளியே விறப்பாக “படிச்சி முடிக்கிற வரை.. என் பக்கத்துல வந்த பச்ச பிள்ளைன்னு பாக்க மாட்டேன் செவியிலயே விடுவேன்.. போடி” என்று அவளை போக கூறியவன் முடியாமல் தானே தபித்தோம் பிழைத்தோம் என்று ஓடி விட, அவனின் செயலில் பக்கென்று சிரித்து விட்டாள்.

*****

 

ஒருவழியாக சித்திரா பன்னிரெண்டாம் வகுப்பில் மாவட்டளவில் தேர்ச்சி பெற்றிருக்க, பள்ளி வீட்டிலில் பெண்ணவளை தலையில் தூக்கி வைத்து கொண்டாட ஆரம்பித்தனர்.

 

பின் தன்னுடைய லட்சியதிற்காக பெண்ணவளை சென்னை கல்லூரி சேர்க்க முடிவெடுத்திருக்க, பட்டம்மாள் தானும் வருவென்று அடம் பிடித்திருக்க, ருத்ரனுக்கும் அவரின் வருகை தேவை என்று தோன்றியதால்,

 

இருவருடன் சென்னை வந்தவன் முன்னமே நண்பர்களிடம் வீடு பார்த்து வைக்க கூறியிருக்க, அவர்களும் நண்பனுக்காக அனைத்தும் பக்காவாக செய்திருந்தார்கள்.

 

முதலில் சித்திராவை கல்லூரியில் சேர்த்துவிட்டவன் அதே கல்லூரியில் பேராசிரியாக பணி புரிந்து கொண்டே தன்னுடைய தேர்விற்கு தயாராகி கொண்டிருந்தான்.

 

முதல் முயற்சியில் தோல்வியாகி விட, தன்னம்பிக்கையை விடாமல் அடுத்த முறைக்கான பயிற்சியில் முன்பே விட அதிகமாக இறங்கியிருக்க, சித்திராவிற்கு தன்னால் தான் அவனுக்கு கஷ்டமென்று குற்றயுணர்வாகி விட, ஆடவன் தான் அவளை சமாதானம் படுத்துவதற்குள் திண்டாடி போவான்.

 

அப்படியே பெண்ணவள் ரெண்டு வருட கல்லூரியை முடித்திருக்க, ஆடவனும் ரெண்டாவது முயற்சியில் தேர்வாகி விட்டான்.

 

அதில் குஷியான சித்திரா மூன்றாம் வருட கல்லூரியை கடக்க, ருத்ரனோ இம்முறை பயிற்சியை திறம்பட கற்று தேர்ந்து தான் பணியில் சேர்வதற்கான கட்டளை கடிதத்திற்காக காத்திருந்து நண்பர்களுடன் இணையும் நாளை எதிர் பார்த்திருக்க,

 

நண்பர்கள் இருவரின் வாழ்க்கையில் ஆயிரம் திருப்பங்களில் போராடி கொண்டிருப்பது தெரியாமல் போனது.

****

 

அப்போது தான் தியாவின் பிரசவம் முடிந்து ஜோஸப்பின் பொறுப்பிற்காக வேலைக்கு செல்ல எண்ணி பிரசவ விடுப்பு முடிந்து நகை கடையை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

 

அன்று கணவனின் பிறந்த நாள் என்பதால் அந்நாளை மட்டும் தனியை கழிக்க, பேத்தியுடன் கூறிவிட்டு சென்றிருக்க, அதற்கு முன்னமே ரேயன் ஏதோ வேலையாக வெளியே சென்று விட்டான்.

 

பாட்டி சென்றதும் வீட்டு வெளியே கதவை அடைத்துவிட்டு அறைக்குள் நுழைந்தவள், அறை கதவை சாத்தாமல் விட்டு விட்டு குப்பர படுத்து கொண்டு காதில் ஒலிப்பான்களை மாட்டிவிட்டு பாடலை கேட்டு கொண்டிருந்தாள்.

 

அவளின் தனிமைக்கு காத்திருந்தது போல், அப்போது தான் அறைக்குள் ஒரு உருவம் நுழைந்திருந்தது,

 

பெண்ணவளோ இசை மழையில் மூழ்கியிருக்க, அவளின் தூப்பாட்டாவை  அந்த உருவம் உருவியது.

 

அதன் வேகத்தில் பெண்ணவளின் கழுத்தில் தூப்பாட்டா அழுத்தி காயம் ஏற்பட, அதில் பதறி எழுந்தாள்.

 

அங்கு குரூரமாக சிரித்தப்படி நின்றிருந்த தர்மலிங்கத்தை கண்டு உடல் கூசி தூப்பாட்டா இல்லாததில் தன் கையை வைத்து மறைத்தவளுக்கு அவன் அருகே வர வர உடல்கள் நடுங்க தொடங்கியது.

 

“என்னடி உன் ஆசை புருஷன் உன்னவிட்டு தனியா விட்டுட்டு போயிட்டான்.. அதுவும் நல்லதுக்கு தான்.. இப்போ தான் பாக்கவே கும்ஸா இருக்க” என்று அவளை தள்ளிவிட்டு ஹாலிற்கு வந்து “கிட்ட வாராத.. யாராவது காப்பாத்துங்க” என்ற இரு வாசகத்தையும் மாறி மாறி கதற,

 

அவளின் கதறலை ரசித்தப்படியே பெண்ணவளின் ஆடையில் கைவைக்க,

 

அவள் திமிரியதில் இடுப்பு பக்கம் சிறிதாக கிழிந்து, அவனின் கண்களுக்கு பெண்ணவளின் இடை இறையாக,

 

சித்திராவோ ஹாலிலே சுற்றி சுற்றி ஓடி கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் கடுப்பானவன் அவளை இழுத்து செவியிலே அறைப்போட்டு அவள் கால்களை தன் கால்களால் சிறை செய்து பெண்ணவளின் இதழை  குனிந்தவன் ,மறுநொடி தூர சென்று  வலியில் சுருண்டு விழுந்து விட்டான்.

****

நகை கடைக்கு போகும் வழி தான் ருத்ரனின் வீடுயிருக்க அங்கிருந்த வந்த சத்தத்தில் நடையை தளர்த்தி பார்வையை சுழலவிட்டவளின் கண்ணில் ருத்ரன் வீட்டு ஜன்னல் வழியே சித்திரா கதறிப்படி ஓடுவது தெரிய,

 

திறந்திருந்த கேட்டை தாண்டி உள்ளே நுழைந்தவள் முகத்திலிருந்த திரையை மட்டும் மேலே ஏற்றிவிட்டு, கதவருகில் வந்த தியா தாழ்பாள் போடாததில் தள்ளிய ஒரு தள்ளியில் கதவு திறந்துக்கொள்ள,

 

அங்கு தர்மா செய்த காட்சியில் கண்கள் சிவந்து காலி அவதாரம் எடுத்திருந்த தியா, பெண்ணவளின் இதழை நோக்கி குனிந்த தர்மாவின் வாயிலே எத்தி மித்தித்தாள்.

 

பின் கண்கள் மூடியப்படி பயந்திருந்த சித்திராவின் கன்னத்தை தட்டி “பயப்படாம கண்ண திறங்க.. ஆர் யூ சேப் நவ்” என்று பெண்ணவளை அமர வைக்க முயற்சித்து மூச்சு திணறி கொண்டிருந்த அவளின் முதுகை நீவி “ரிலாக்ஸ் ஒன்னும் இல்ல” என்க,

 

கலங்கிய விழிகளுடன் அவளை நன்றி பார்வை பார்த்த சித்திராவின் கண்களில் தியாவை பார்க்க, அன்னை போல் தெரிந்ததில் “அம்மா” என்று தாயிடம் அடைக்களம் தேடி அணைத்து கொண்டாள் .

 

அவளின் பயம் புரிந்து சிறிது நேரம் அணைத்து விடுவித்து தான் அணிவித்திருந்த பர்தாவை கழட்டி சித்திராவிற்கு போர்த்திவிட்டவள், சுருண்டு கிடந்த ஆடவனின் முடியை கொத்தாக பற்றி முக்கில் குத்துவிட்டு “ஏன்டா நாயே.. இப்படி சொரி புடிச்சி அலையுறீங்க பொண்ணு தனியாயிருந்தா போதுமே”

 

“ஏய் என்னபத்தி தெரியாம பேசாத.. அவ என்ன கட்டிக்க வேண்டிய பொண்ணு.. இங்கயிருந்து போயிடு” என்றவனின் செவியில் அரைவிட்ட தியா “உன் வயசு என்ன அந்த பிள்ளை வயசு என்ன” என்று அவனின் மூக்கை பஞ்சராக்கிவிட்டு தான் தங்கியிருக்கும் வீட்டு உரிமையாளருக்கு அழைப்பு விடுத்து,

 

அவர் மூலம் காவல் அதிகாரியை அழைத்து வந்திருக்க, அவர்கள் வருவதற்குள் சித்திராவிற்கு வேறு ஆடை அணிவிக்க கூறிவிட்டு தன்னுடைய பர்தாவை போட்டுவிட்டு தன் முகத்தையும் மறைத்து கொண்டாள்.

 

பின் தர்மாவை காவல் துறை கைது செய்து அழைத்து செல்ல “உன்ன சும்மா விட மாட்டேன்டி” என்று வக்கிரமாக பார்த்து சென்றான்.

 

அவன் சென்றதும் தியா “ஆமா வீட்டுல யாரும் இல்லன்னா டோர் நல்லா லாக் பண்ண வேண்டாமா”

 

“அது கேட் பூட்டியிட்டன்.. டோர் நார்மலா சாத்திட்டு லாக் பண்ண மறந்துட்டேன் நினைக்கேன்” என்றவளுக்கு பயத்தில் இன்னும் மூச்சு வாங்கியது.

 

“சரி ரிலாக்ஸ்.. நீ தனியா தான் இருக்கியா கூட யாருயிருந்தா”

 

“பாட்டி பக்கத்துல கோவில் போயிருக்காங்க” என்றதும் அவளின் மூலம் அழைத்து பட்டம்மாளையும் பேசி வரவழைத்திருக்க, வீட்டிற்கு வந்தவர் விஷயம் கேள்வி பட்டு பதறி பேத்தியை அணைத்தப்படி அவளுக்கு ஆயிரம் நன்றியை கூற,

 

தியாவோ “இந்த வழியா போனதுனால பாத்தேன்.. இனி கேர்ஃபுல்லா பாத்துக்கங்க.. நான் கிளம்பனும்” என்றதும் சித்திரா “தேங்க்ஸ் அக்கா” என்று அவளுக்கு அணைத்து விடை கொடுக்க,

 

அவளின் தலையை கலைத்துவிட்டு வெளியே வந்தவள் வேலைக்கு நாளை சென்று கொள்ளலாம் என்று வீட்டிற்கு சென்று விட்டாள்.

****

 

அன்றைய நாள் நண்பர்களை பார்க்க எண்ணி சென்ற ருத்ரனுக்கு அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த அதிர்ச்சி தெரிய வர, தியா ஜோஸப்பை தேடி கொண்டிருக்கிறோம் என்று கூறியதை கேட்டு வேதனையடைந்த ருத்ரன் “மச்சி நீ உன் பொண்டாட்டி பிக் அனுப்பி வை.. நானும் சில டிடெக்டிவ்ஸ் கிட்ட சொல்லி தேடுறேன்” என்று வீட்டிற்கு வந்தவன் தன்னவளுக்கு நடந்த விஷயத்தை கேட்டு கொந்தளித்து “உன்ன காப்பாத்துனது யாருன்னு தெரியுமா”

 

“இல்ல மாமா.. அவங்க முஸ்லிம் நினைக்கேன் பர்தா போட்டுயிருந்தாங்க.. அவங்க மட்டும் இல்லன்னா” என்று அவள் அடுத்து கூற வருவதை உணர்ந்து தடுத்த ருத்ரன் “சிட்டு இப்படிலாம் பேசாதடி” என்று சமாதானம் செய்து கொண்டிருக்க, அப்போது தான் நன்பணிடமிருந்து தியாவின் புகைப்படம் வந்தது.

 

அதை பதிவிறக்கம் செய்து ஆடவன் பார்க்க, அப்போது அவனை விட்டு விலகி எழுந்த சித்திரா, அவனின் திறன்பேசியை பிடுங்கி பார்த்துவிட்டு கண்கள் விரிய “ஏய் இந்த அக்கா தான் என்ன இன்னைக்கு சேப் பண்ணினாங்க” என்க,

 

அதில் அதிர்ந்தவன் “சிட்டு நல்லா தெரியுமா”

 

“என் அம்மா மேல சத்தியமா இவங்க தான்.. உனக்கு இந்த அக்காவ தெரியுமா” என்றதை கேட்டு தன் நண்பர்களின் வாழ்க்கை பற்றி கூறிவிட்டு ரேயனுக்கு அழைத்து தன்னவளுக்கு நிகழ்ந்த கொடுமையையும், அதில் தியா செய்த சாகசத்தை கூறி முடித்திருக்க,

 

அவள் கிடைத்து விட்டதில் நிம்மதியடைந்த ரேயன் மறுநாள் வீட்டிற்கு அவர்களை காண வந்துவிட்டான்.

***

நண்பனின் வீட்டிற்கு வந்த ரேயன், சித்திராவிடம் நடந்ததை விசாரிக்க “இல்ல அவங்கள பத்தி எதுவுமே தெரியாது.. அவங்க முஸ்லிம் போல பர்தா போட்டுருந்தாங்க.. உள்ள வரும் போது ஃபேஸ் கவர் பண்ணல அதுனால எனக்கு அவங்க ஃபேஸ் தெரிஞ்சிது பாட்டிக்கூட அவங்க பேஸ் பாக்கல..” என்று கூறி கொண்டிருக்க, அழைப்பு மணி சத்தம் கேட்க,

 

ரேயனின் இதயமோ தன்னவளின் வாசம் உணர்ந்து எகிறி துடிக்க, கதவு திறக்க போன சித்திராவை தடுத்த ரேயன் “அவ தான் வந்திருக்கா.. நாங்க உள்ள ஒளிஞ்சிக்குறோம்” என்று ருத்ரனையும் இழுத்து வந்திருக்க,

 

அவனோ “என்ன எதுக்குடா இழுத்து வந்த”

 

“கம்பனிக்கு கூட்டிட்டு வந்தேன்.. சத்தம் போடாம நில்லுடா” என்று நடப்பதை மறைந்து நின்று ஒட்டு கேட்டார்கள்.

***

 

இருவரும் ஒளிந்து கொண்டதை உறுதிப்படுத்திவிட்டு வாசலில் கண்களை தவிர மொத்தமாக பர்தாவால் மூடப் பட்டிருந்தவளை புருவம் சுருக்கி பார்த்த சித்திரா “நீங்க..” என்று ஏதோ கூற வர,

 

அவளின் முகத்திலிருந்த திரையை அகற்ற, அதில் புன்னகைத்த சித்திரா “உள்ள வாங்க” என்று பாட்டியை அழைத்து அறிமுகப்படுத்த, இன்று தான் அவர் தியாவின் முகத்தை பார்த்திருந்தார்.

 

பின் குரலை செருமிய தியா “உங்ககிட்ட கொஞ்ச பேசணும்” என்றதும் இருவரும் அவளின் அருகில் அமர்ந்து என்னவென்று கேட்க,

 

“அது நேத்து இங்க நடந்ததுல என்னால உங்கள ஏனோ தனியா விட தோணல.. அதோட அவன் எப்போ வேணாலும் வெளியே வருவான்.. உங்க ரெண்டு பேருக்கும் பாதுக்காப்புக்காக என்னோட தங்கிக்குறீங்களா.. எனக்குன்னு யாருமே இல்ல” என்றதும் சித்திரா திரு திருவென்று முழிக்க,

 

பட்டம்மாள் தான் “நாங்க ரெண்டு பேரும் தனியா தான் இருக்கும்.. இந்த இடம் எங்களுக்கு புதுசு.. எங்களுக்கும் துணை கிடைச்சா நல்லா இருக்கும்.. நாங்க வரோம்”

 

“ஓகே அப்போ நான் ஒரு வீடு பாத்துட்டு சொல்லுறேன்..” என்றுவிட்டு தன் திறன்பேசி எண்ணையும் கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து விடை பெற்று செல்லும் வரை ஏனோ ரேயனின் நினைவுகள் வந்து சென்றது.

 

இவளின் நிலை இப்படியென்றால் அவளை கண்டு மறைந்து நின்றிருந்த ரேயன் கலங்க, அவள் பர்தாவுடன் சுத்திய வேடத்தால் தான் இத்தனை நாட்கள் தன் கண்ணில் மாட்டாமல் ஆட்டம் ஆடிருக்கிறாள் என்று புரிய தவிக்க விட்டு சென்ற தன்னவளை ஏக்கமாக பார்த்திருக்க,

 

ருத்ரன் தான் அவனின் தோலை ஆதரவாக பிடித்து கொண்டான்.

 

பின் அவர்கள் பேசியதை கவனித்தவர்கள் பட்டம்மாளின் பேச்சில் உள்ளுக்குள் மெச்சி கொண்டனர்.

 

பின் அவள் சென்றதும் வெளியே வந்தவன் பாட்டியை அணைத்து விடுவித்து “தேங்க்ஸ் பாட்டி” என்றுவிட்டு “ரெண்டு நாள்ல நீங்க கிளம்ப வேண்டி வரும்.. சித்திரா நீ எதுவுமே சொல்லாம இப்படியே மெயின்டெய்ன் பண்ணுங்க.. ஆனா மச்சி உன்ன உள்ள கூட்டிட்டு போனதும் இப்போ நல்லதா போச்சு” என்று சொல்ல, அங்கே மெல்லிய சிரிப்பலை பரவியது.

****

அவள் கூறியது போல் இரண்டு அவர்களை வேறோரு வீட்டிற்கு அழைத்து வந்தவள், ஜோஸப்பை தன்னறையில் இருந்த அறைக்குள் ரகசியமாக பாதுகாக்க,

 

அதன் பின் தான் சித்திரா கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருகிறாள் என்பது தெரிய, இப்போது பார்க்கும் வேலை விடுத்து தன்னுடைய புலனாய்வு பணியில் ஈடுப்பட எண்ணி,

 

முதலில் மேல் அதிகாரியான ரேயன் அப்பா என்று தெரியாமல் அவரிடம் பேசி மாற்றல் வாங்கிவிட்டு சித்திரா பாட்டியிடம் தன்னுடைய வேலை பணியை பற்றி கூறிவிட்டு ஜோஸப்பை தம்பியிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் இருவருடன் பெங்களூர் வந்து சேர்ந்திருந்தாள்.

 

தந்தையின் மூலம் விஷயத்தை அறிந்திருந்த தருணத்தில் ருத்ரனுக்கும் பணியின் கட்டளை வர வேண்டியிருக்க அதை அறிந்து நண்பனை இறக்க திட்டமிட்ட ரேயன் தந்தையிடம் ருத்ரனை பெங்களூருக்கே பணியை கேட்க, அவரும் கொடுத்ததில் தியாவிற்கு ஜூனியராக இணைந்து கொண்ட ருத்ரன் பெண்ணவளிடம் நட்பாக பேசி தன்பக்கம் இழுத்திருக்க,

 

அவனின் நட்பில் கவர்ந்த தியா வெளியே காட்டிக்கொள்ளாமல் கடுவென்று தான் அவனிடம் பேசுவாள். அடுத்து அடுத்து வந்த மாதங்களில் வீட்டிற்கு அழைத்து வந்து பாட்டி சித்திராவை அறிமுகப்படுத்தி வைக்க அவனும் இப்போது தான் பேசுவது போல் பக்காவே நடித்து வைத்து அடிக்கடி வீட்டிற்கு வர தொடங்கி அவளுக்கு தெரியாமல் காதலையும் ஓட்டி கொண்டிருந்தான்.

 

அதோடு சித்திராவும் தியாவின் உதவியுடன் முதுகலை படிப்பில் இணைந்து கொண்டாள்.

 

பகலில் தியாவிடம் நடிப்பவர்கள் இரவில் ரேயனிடம் நடந்ததை கூறி திட்டங்கள் தீட்டும் அதையும் பொறுப்பாக செய்தனர்.

 

தன் கதையை கூறி முடித்த ருத்ரன், தியாவை பார்த்தான்.

 

ஒருபக்கம் அனைவரும் கூட்டு சேர்ந்து தன்னை வைத்து ஆடிய ஆட்டத்தை நினைத்து நண்பனை குற்றபார்வை பார்த்தாலும் சித்திராவிற்காக அவன் செய்த தியாகங்கள் அனைத்தும் நண்பனை நினைத்து பெருமை பட வைத்தது,

 

இதிலும் சித்திராவிற்கு திருநெல்வேலி அவளுக்கு நிகழ்ந்ததை தெரிந்து தங்கையை நினைத்து வேதனையடைய தானும் அவளை காயப்படுத்தியிருக்கிறோம் என்ற குற்றயுணர்சி வாட்டியது.

 

அவர்கள் நடத்திய நாடகத்திற்கு தலைவனான தன்னவனை முறைத்து வைத்தாள்.

***

ருத்ரன் கதை முடித்தும் சில நிமிடம் அமைதி நிலவவிட்டு எல்லாருடைய உணர்வுகளை உள்வாங்கி கொண்ட ராகவ் “எல்லா உண்மையும் ரிவில் பண்ணிட்டீங்களா.. வேற யாரையும் மிஸ் பண்ணிட்டேனா சொல்லிடுங்க அதை முடிச்சிட்டே போகலாம்” என்றவன் அனைவரின் முகத்தில் தெரியும் கவலையில் சத்தமாக சிரித்து

“என்னடா கிளைமேக்ஸ்ல எல்லாரோட கதைய முடிக்காம கதைய கேட்டிட்ருக்கேன் இதுனால என்ன பெனிபிட்.. என்னடா வில்லன்னு தான யோச்சிக்குரீங்க..” என்றப்படி தியாவின் கட்டை அவிழ்த்து பெண்ணவளின் மூடியை கொத்தாக பிடித்தவன்

 

“பெனிபிட் நிறையா இருக்கு.. இதோ எல்லா உண்மையும் தெரிஞ்சி குற்றயுணர்சி வேதனை துடிக்கிறதும் அவள் வாழ்க்கையில் மறைக்க நினைச்சது கூட நினைவு வந்து வேதனைப்படுறதும்.. அதோட தனக்கு நெருக்கமான கஷ்டத்துக்கும் துடிக்கிற வலியில அவள் சத்தமே இல்லாம உள்ள கதருறது..

 

இதெல்லாம் முடியாம அப்படியே உயிர் போயிறாதன்னு சாவுக்கு ஏங்குறது.. எனக்கு மட்டும் கேட்கும் போது வருர போதையிருக்கே இதுக்கு முன்னால ஃபாரின் சரக்கு கூட அவுட் தான்.. அதுலயும் இந்த வலியோட அவள கதறவிட்டு கொஞ்சமா அவ உயிர் எடுப்பேன் இந்த போதைலாம் கஞ்சாவிட தூக்கலா இருக்கும்.. அப்படியே அனுபவிக்கும் போது சொர்கத்துல மிதப்போம்” என்று அடுத்தவர்கள் வேதனையில் போதை கண்ட சைக்கோவின் உருவமாக நின்றான் ராகவேந்திரன்.

 

பின் அவளின் மூடியை இறுக்கி பிடித்து இழுத்து செல்ல முயல, பெண்ணவளோ வலியில் கதற,

 

மடிக்கணினியில் பார்த்து கொண்டிருந்த வாகினி “டேய் சைக்கோ நாயே.. தெரிஞ்சோ தெரியாமலோ இல்லன்னா உன் போதைக்கு உறுகாவோ எப்படியோ எல்லாம் உண்மையும் எங்களுக்கு உணர்த்தி நல்லது செஞ்சிருக்க.. அந்த நன்றிக்காக சொல்லுறேன்..

 

அவள விட்டுட்டு என்னோட அத்தை மகன்கிட்ட சரண்டர் ஆயிட்டன்னு வை ஏதோ மனநிலை சரியில்லன்னு குறைஞ்ச தண்டனையாவது பாத்து பண்ணுவான்.. அப்புறம் உன் விதி” என்று மேலை கடவுள் என்பது கைக்காட்டி வாகி கண்ணடித்த மறுகணம் தன் முதுகிற்கு பின் மறைத்து வைத்திருந்த ஊசி ஒன்றை அருகிலிருந்த மந்தாகினி கழுத்தில் குத்தி அதிலிருந்த மருந்தை உள்ளே இறக்கியிருக்க,

 

வலியில் அவர் கத்திய சமயம் உள்ளே வந்த இரு அடியாட்களுக்கும் ஒரே நேரத்தில் ஊசியை இறக்க அவர்களும் சுருண்டு விழுந்தனர்.

 

வாகியின் அதிரடியில் ராகவ் திகைத்த நிற்க, அவனின் திகைப்பை பயன்படுத்தி சிங்கமாக எழுந்த ரேயனை கண்டு மேலும் ராகவ் திகைத்து விட,

 

அதில் அவனின் பிடி சற்று தளரியதில் தன்னவளை இழுத்து கை வளைவுக்குள் வைத்துகொண்டவன், மற்ற இரு ஆடவர்களுக்கு கண்ணை காட்ட, இருவரும் ராகவை நகர விடாமல் பிடித்து கொண்டனர்.

 

பின் ராகவின் குழம்பிய விழிகளை கண்டு வாகினி “என்னடா சைக்கோ நாயே.. நீ இஞ்செக்சன் போட்டும் மூணும் பீஸ்சும் எப்படி சிங்கம் போல விறப்பா இருக்காங்க தான குழம்புற.. ஏன்னா நீ போட்டு இஞ்செக்சன் நான் ஏத்திவச்ச இம்யூனிட்டி டோஸ்டா எருமை..” என்று கெத்தாக கூறினாள்.

 

வாகினி மயக்கத்தில் இருப்பதை நம்பி அவளை கட்டி போடாமல் விட்ட ராகவ் மூன்று ஊசியிலும் உடலில் உணர்வுகள் இழக்க மருந்தை ஏற்றி வைத்துவிட்டு வெளியே சென்றிருக்க,

 

அடியாள் அடித்த அடிக்கு மயங்கியவள் காரில் செல்லும் போதே மயக்கம் தெளிந்தவளின் சிஐடி மூளை வேலை செய்ததில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள மயக்கத்திலே இருப்பது போல் நடித்து கொண்டாள்.

 

பின் அவள் சென்றதை உறுதிப்படுத்தி கொண்டு வேற ஒரு மூன்று ஊசிகளை எடுத்து எதிர்ப்பு சக்தி தரும் மருந்தை ஏற்றி,

 

அதை நிலையில் சந்தேகம் வராதுப்படி வைத்தவள், அவன் வைத்திருந்த ஊசியை நாற்காலியில் தனக்கு பின்னே தெரியாதப்படி வைத்துவிட்டு,

 

அவன் வரும் அரவம் கேட்டு மறுபடியும் மயக்கத்தை தொடர, அதன் பின் மந்தாகினியும் கூடயிருந்ததில் நடிப்பை தொடர்ந்தவள் மடிக்கணினியில் யாருமறியா வண்ணம் ஓரக்கண்ணில் தெரிந்தவர்களை நோட்டமிட்டு,

 

அப்போது தான் மயக்கம் கலைந்தது போல் நடித்து விழித்தவளின் செயலை ரேயனும் கண்டு கொள்ள, அவன் பார்ப்பதை கண்டு ஆடவன் புறம் கிடந்த ஊசியை பார்வையால் காட்டி கண்ணடித்து ஏதோ உணர்த்த,

 

அதிலே புரிந்து கொண்டான் பெண்ணவள் அவன் கொடுக்கயிருந்த மருந்தை மாற்றிவிட்டாள் என்று புரிந்து கொண்டான்.

 

அதோடு ஊசி குத்தியதும் ஏதோ தவறாக உணர்ந்தவன், அரைமணி நேரம் கடந்து அவன் சுற்றியிருந்த கயிற்றை தைரியமாக அவிழ்பதிலே,

 

அவன் ஊசி கொடுத்தான் என்பதை மூவரும் யூகித்து உடலில் எந்த மாற்றமும் ஏற்படாததில் ஆடவர்கள் ஒருவருக்கு ஒருவர் அர்த்த பார்வை பார்த்து கொண்டு, உடல் மறுத்தது போல் ஒன்றாக நடித்தனர்.

****

 

தான் மாற்றி வைத்த தந்திரத்தை இல்லாத சட்டை காலரை உயர்த்தி பெருமையடித்து கொண்ட வாகினியின் இதழ்கள் மறுநிமிடம் “ஜோ..” என்று கதறியது.

 

அதில் பார்வை திருப்பி ஜோஸப்பின் மேல் படரவிட்டவர்கள் கண்ட காட்சியில் அதிர்ந்து விட, ரேயனோ தான் யூகித்தேன் என்பது போல் பார்த்துவிட்டு “சர்வா ஜோஸப விடு” என்றவன் ஜோஸப் கழுத்தில் கயிற்றை சுற்றியப்படி நின்ற சர்வேந்திரனிடம் தான் அழுத்தமாக பார்த்தான்.

 

மற்றவர்கள் ராகவை சுற்றி நின்றிருந்த இடைவெளியை பயன்படுத்தி கொண்ட சர்வா தான் பெயருக்கு என்று கட்டியிருந்த கையை விடுவித்து கொண்டு அக்கயிற்றுடன் ஜோஸப்பை நெருங்கி மிரட்டினான்.

 

ரேயனின் பேச்சை கேட்டு குரூரமாக சிரித்த சர்வாவோ “இவன விடுறேன்.. அதுக்கு முன்ன உன் ரெண்டு ஆளுங்கள ராகவ விட சொல்லு” என்றதும் ரேயன் இரு ஆடவர்களின் புறம் பார்வை பதிக்க, அதன் அர்த்தம் உணர்ந்து இருவரும் அவனை விடுத்து விலகி நிற்க, இப்போது ஆடவர்கள் இருவரையும் அடியாட்கள் பிடித்து கொள்ள,

 

ஜோஸப்பை பழைய இடத்திலே அமர வைத்தவன், தன்னை அதிர்ச்சி விலகாமல் இமைக்காமல் காணும் தியாவின் அருகில் வந்தான்.

 

இம்முறை பெண்ணவளின் முடியை கொத்தாக பிடிக்கும் முறை சர்வேந்திரன் உடையதாகி போனது.

 

சர்வாவின் சைக்கோ அவதாரம் தியாவிற்கு இப்போது வரை நம்ப முடியவில்லை, அவன் கொடுத்த அதிர்ச்சியில் முடியை பிடித்ததில் எடுத்த வலி கூட காற்றில் பறந்தது போலிருக்க,

 

இன்னொரு கை கொண்டு அவள் தாடையை அழுத்திய சர்வாவோ பெண்ணவள் வலியை இதழ் கடித்து மறைப்பதில் “வலிக்குதா தியா..” என்று மேலும் தன் இறுக்கத்தை கூட்ட,

 

“சர்வா வலிக்குது விடுடா.. உனக்கு என்னாச்சி”

 

“வலிக்கட்டும்டி இப்படி தான் தினம் தினம் வலிச்சிது.. அந்த வலி தான் என்ன இப்போ சைக்கோ உன்னோட முன்னாடி நிறுத்திருக்கு” என்று அவகின் முகத்தை சுவற்றதோடு அடிக்க, அதில் பெண்ணவளின் தலையில் உரசி கீறல் ஏற்படுத்தி அவளின் வலியில் மகிழ்வாக சிரித்தான்.

 

அவளுக்கு தான் கொடுத்த வலியோ காணாதது என்பது போல் இரு கன்னத்திலும் மாறி மாறி அடிக்க,

 

நண்பன் என்ற முறையில், அவன் அடியை வாங்கிய தியாவிற்கு சத்யாவின் பிரசவம் நினைவில் வந்து போக,

 

அடுத்த நொடி தன் உடலை ஒரு சுற்று சுற்றி தன் கை வலைவிற்குள் அவனை கொண்டு வந்திருக்க, அவ்வளவு நேரம் ராகவ் கொடுத்த அடியை வாங்கி கொண்டிருந்தவன் தன்னவள் சுதாகரிக்கவும் தானும் ராகவின் முக்கிலே குத்துவிட்டு தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.

 

ஆர்யன் ருத்ரன் இருவரும் அடியாட்களை அடிக்கும் பணியை செய்தனர்.

 

ரேயன் மற்றும் தியா இருவரும் தங்கள் முதுகிற்கு பின்னால் மறைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, ரெட்டையர்கள் இருவரையும் அமர வைத்து துப்பாக்கியை அவர்களின் நெற்றியில் வைத்திருக்க,

 

வேறுவழியில்லாமல் அவர்களுக்கு அடங்கி அமர்ந்திருக்க, ராகவ் மூக்கில் குத்துவிட்ட ரேயன் “எதுக்குடா பொண்ணுங்கள கடத்துறீங்க..” என்க,அதற்கான காரணத்தை கூற தொடங்கினான்.

தொடரும்…

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்