
ஒரு மணிநேரம் கடந்த நிலையில் மெல்ல கண் விழித்தாள் தியா.
என்ன நடந்தது எங்க இருக்கிறோம் என்று ஒன்றும் புரியவில்லை மெல்ல தலை பிடித்து எழுந்து அமர்ந்தவளுக்கு உடல் வேறு ஏனோ பரமாக இருக்க, சுற்றி முற்றி பார்வையை சுழலவிட்டவளின் பார்வையில் அருகில் காண்டம்ஸ் இருந்தது.
அதில் பெண்ணவளே தன்னுடைய நிலை உணர தொடங்க, உடலில் ஆங்காங்கே ஏற்ப்பட்ட காயத்தால் எரிச்சல் உண்டாக, மெல்ல தன் மேல் போர்த்தப்பட்டிருந்ததை விலக்கி பார்த்தவளுக்கு ஆடைகள் சற்று இறங்கியிருக்க, உடல்கள் நடுங்க படுக்கையில் விட்டு எழும்பி நின்றவளுக்கு கால்கள் நடுங்கி நிற்கவே தடுமாறியவளின் பார்வை எதிரேயிருந்த கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உதட்டில் ஏற்பட்ட காயத்தில் பதிந்தது.
அனைத்தும் உணர்ந்தும் தான் கற்பழிக்கப்பட்டு விட்டோம் என்றவளுக்கு கதறி அழவே தோன்றியது.
மனதாலும் உடலாலும் நொந்த போயிருந்த தியாவிற்கு முதலில் இங்கிருந்து செல்ல வேண்டுமென்ற எண்ணம் தோன்ற, தன்னை சரி செய்து கொண்டு மக்களுடன் மக்களாக சாதாரணமாகவே நடந்து வந்து வீட்டிற்கு சேர்ந்து விட்டாள்.
வீட்டிற்குள் ஓடி வந்து தன்னறைக்கு சென்றவள் மூலையில் அமர்ந்து கதறினாள் கத்தினாள் தலையில் அடித்து கொண்டு வெதும்பிய தியாவோ தான் ஒரு அதிகாரி என்பதை மறந்து சராசரி பெண்ணாகவே உயிர் பிரிந்து விடாதா என்பது போல் அமர்ந்திருந்தாள்.
அதோடு தன்னவன் காதல் சின்னம் தந்த இடத்தில் இப்போ கண்டவனின் கைகள் பட்டிருக்கும் என்று தன் உடலையே எரித்து விடலாமா என்றளவில் அறுவெருத்து குளியல் அறைக்குள் சென்று ஷவரின் கீழ் அமர்ந்து பாவத்தை கழிக்க நினைத்து தண்ணீரில் கண்ணீரையும் சேர்த்து கரைத்தாள்.
தண்ணீர் தீரும் வரை உணர்வற்று அமர்ந்திருந்த தியா, தண்ணீரில் நின்றதை உணர்ந்து மார்பில் பூந்துவாலையுடன் கண்ணாடி முன் நின்றவள் வெறி நாய்கள் கடித்ததில் ஏற்பட்ட காயம், அவளை பார்த்து கேவலமாக பல் இளிக்க, அதில் நொடியும் தாமதிக்காது அருகிலிருந்த கத்தியை எடுத்து கழுத்தருகில் கொண்டு செல்லவும் பெண்ணவள் திறன்பேசி அடிக்கவும் சரியாக இருந்தது.
அழைப்பில் தன் உயிரானவனின் பெயரை சலனமற்று பார்த்திருந்தவள், பின் அழைப்பை ஏற்று “சொல்லு ரே” என்றவள் உணர்வுகளை அடக்க போராடி கொண்டிருக்க,
அவளின் குரலை கேட்டு ரேயன் “இப்போ தான் வீட்டுக்கு வந்தேன்.. நீ ஆபீஸ் போகலயா”
“போக தோணல”
“என்னாச்சி வொய் வாய்ஸ் டல்லாயிருக்கு”
“மிஸ் யூ ரே..” என்றதை கேட்டு தன்னை தேடுகிறாள் என்பது புரிந்தாலும், அதில் அவளை பார்க்க துடிக்கும் மனதை ஆடவன் அடக்கிவிட்டு “என்ன நினைச்சிட்டு இருக்காம கேஸ போய் பாரு.. ஈவ்னிங் மேல கோவில் கிளம்பிடுவேன்.. அடிக்கடி கால் பண்ண முடியாது டெக்ஸ்ட் பண்றேன்” என்று அழைப்பை துண்டித்திருக்க, இப்போது ஜோஸப்பிடமிருந்து அழைப்பு வந்தது.
பெண்ணவள் இன்னும் வராததில் என்ன ஏது என்று விசாரிக்க, தனக்கு உடல் சரியில்லை என்று கூறிவிட்டு படுக்கையில் விழுந்தவள் அன்றைய உணவு தண்ணீர் தூக்கம் நிம்மதி என்று அனைத்தையும் தொலைத்திருந்தாள்.
அதன் பின் தன்னை இயல்பாக காட்டிக்கொண்டு, மறுநாளே பணியில் தன்னை ஈடுப்படுத்தியவளின் முகம் கலையிழந்து காணப்பட நேற்று அவள் உடல்நிலை சரியில்லை என்று கூறியதை நினைத்து “ஆர் யூ ஓகே தியா பேபி.. வேணும்ன்னா வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு” என்க,
பெண்ணவளோ அவனின் கூற்றை மறுத்து விட, தியாழினி ஜோஸப் வாகினியை காதலிப்பது உணர்ந்து அவனை சொல்லட்டுமென்று விட்டது போல் தான்,
ஜோஸப்பும் பெண்ணவளுக்கு ரேயன் மேல் காதலிருப்பதை உணர்ந்து, அவளே சொல்லட்டுமென்று எண்ணியவனுக்கு இப்போது, அவனின் விடுப்பே தியாவின் வாட்டத்திற்கு காரணமாக இருக்குமென்று எண்ணிக்கொண்டு ரேயன் வரவு நிகழவும் சரியாகி விடுவாள் என்ற நம்பிக்கையில் பெண்ணவளை தொந்திரவு செய்யாமல் விட்டு விட்டான்.
மூன்று நாட்கள் கழித்து அவன் வந்ததும் தாவி சென்று அவனை அணைத்து கதறினாள்.
அவளை சமாதானப்படுத்த ஆடவன் தான் ஒரு வழியாகி விடுவான்.
அதன் பின் மாதவிடாய் அதிக உதிர போக்கு என்று காரணம் கூறி சிறிதாக அவனை விட்டு விலக முயற்சித்தவளோ அவன் தனக்கு செய்யும் பணிவிடையில் மேலும் புழுவாக துடித்தாள்.
இக்காரணத்தால் அவளை பெரிதாக யாரும் தொந்திரவு செய்யாமல் இருக்க, அவன் பணிக்கு செல்லும் நேரம் ஜன்னலை வெரிப்பவள் இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவனை சற்று தள்ளியே வைத்திருகக, ஆடவனும் அவளுக்கு பிடிக்காமல் எடுத்து கொள்ள கூடாதென்று தன் உணர்வுகளை அடக்கி கொள்வான்.
இப்படியே ஒரு மாதம் கழிந்திருக்க, அவளை இழுத்து தன் மார்பில் போட்டு கொண்டு ரேயன் தலையை வருடிக் கொடுக்க, அவனைவிட்டு இன்று ஏனோ விலக மூடியவில்லை, அதற்கு காரணம் இருவருக்கும் இடையில் ஏதோ தவறாக நடப்பது போல் பெண்ணவளின் உணர்வுகள் எச்சரிக்க, அதின் தாக்கத்தில் “ரே..”
“ம்ம் சொல்லு” என்றும் அவளிடமிருந்து பதில் வராததில் தன்னவளின் முகத்தை தன்னை காணும் படி நிமிர்த்தியவன் அவள் கலங்கியிருப்பதில் “யாழி என்னடி”
“பயமா இருக்கு ரே.. ஏனோ நமக்குள்ள பிரிவு ஏற்படுற போலவே என் உணர்வு சொல்லிட்டு இருக்கு” என்றவளின் பேச்சில் ஆடவனுக்கும், அவளின் உணர்வுகளால் நிகழ்ந்த நிகழ்வை நினைத்து பார்த்தவனுக்கும் ஏதோ பயபந்து உருண்டாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் “ஏற்கனவே பீரியட்ஸ் ஹையாகிடுச்சு அதுனால மூட் ஸ்விங்ல கண்டத யோசிக்காத” என்று அவளுக்கு தடவி கொடுக்க, ஏதோ நிகழ்வுகளுடன் உறங்கி போனாள்.
****
மறுநாள் ஆடவனுடன் வேலைக்கு கிளம்பியவளுக்கு தலை சுற்றி வாந்தி வர, அதில் பதறி ஓடியவளின் பின்னே தானும் ஓடி தலையை பிடித்து கொண்டான்.
பிறகு அவளுக்கு தண்ணீர் கொடுத்து அமர வைத்த ரேயன் “யாழி.. ஆர் யூ ஓகே”
“பெட்டர்.. நான் ரெஸ்ட் எடுக்கிறேன் நீ ஆபீஸ் போ” என்றதும் தானும் இருப்பதாக கூறியதில் நொந்தவள் “டேய் ஒன்னும் இல்ல நீ போ ஜோஸப் வேற டெல்லி போயிருக்கான் வாகி தனியாயிருப்பா” என்று கட்டயாப்படுத்தி அவனை வழியனுப்பி வைத்தவளின் இதயமோ படபடத்து.
இத்தனை நாட்கள் தன்னை தனிமைப்படுத்தி கொள்வதற்காக மாதவிடாய் கோளாறு என்று கூறி வீட்டியில் மனஅழுத்ததுடன் இருந்தவளுக்கு, இப்போது தான் தன்னுடைய மாதவிடாய் தேதி தள்ளி சென்றது உரைக்க, உறுதி செய்ய மருத்துவமனையை நோக்கி காரில் பறந்து விட்டாள்.
****
மகப்பேறு மருத்துவர் முன் பதற்றத்துடன் தன் உடல் மாற்றத்தை கூற, அதனை கேட்டுவிட்டு அவளை அழைத்து சென்று பரிசோதித்து வந்தவர் புன்னகை முகமாக “காங்கிரஸ் மிஸ்.. நீங்க அம்மாவாக போறீங்க” என்று கைக்கொடுக்க,
நடுங்கிய கரங்களை அவருக்கு கொடுத்து பதிலுக்கு புன்னகைத்து அவரின் பரிந்துரைப்பு மொத்தத்தையும் கேட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தவளுக்கு தன் வயிற்றில் ஜனித்திருந்த உயிரில் கைவைத்தவளுக்கு உணர்ச்சி வசத்தில் கண்கள் கலங்கி விட்டது.
தனக்கு நிகழ்ந்த கருப்பு பக்கத்தை மறந்து அன்னையாகி மிதப்பில் மிதந்து மகிழ்ந்து கொண்டிருந்த மகிழ்ச்சியை கலைக்கவே பெண்ணவள் காதில் விழுந்தது அந்த குரல்.
குரல் வந்த திசையை நோக்கி காதை தீட்டியவளுக்கு ஒரு தாய் மகளிடம் “ஏன்டி எவன் பிள்ளை வயித்துல வாங்கியிருக்கன்னு தெரியாம வந்து நிக்கிற.. இதுனால குடும்பம் மானமே போயிடும் ஒழுங்கா பிள்ளைய களைச்சிட்டு படிக்கிற வேலைய பாரு” என்று கடிந்துவிட்டே மகளை மருத்துவரின் அழைத்து செல்ல,
இத்துணை நேரம் அன்னையாகி விட்டோமென்ற கர்வம் கொண்டவளின் முகம், அவ்வார்த்தை கேட்டு கருப்பு பக்கங்கள் நினைவில் வந்து செல்ல, அவளின் மூளையோ ‘இது யாருடைய குழந்தை.. இக்குழந்தை உன்னை கற்பழிக்கப்பட்டவர்களால் உருவாகியதாக இருந்தால்.. இதை உன்னுடைய ரேவியிடம் எப்படி கூறுவாய்.. அவனிடம் கூறாமல் மறைத்து வைத்தால் எவ்வளவு காலத்திற்கு மறைக்க முடியும்.. அதிலும் நீ மறைத்தது தெரிந்தால் ஆடவன் உன்னை வெறுத்து விட மாட்டானா..?’ என்று ஆயிரம் கேள்விகள் பெண்ணவளின் மண்டையை குடைய,
இறுதியில் மூளை ‘இக்குழந்தையை களைத்து விடு’ என்றதில் பதறி வயிற்றில் கைவைத்தவள் “இல்ல இல்ல என்னால குழந்தைய களைக்க முடியாது.. அதே சமயம் இந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு நான் தெரிஞ்சிக்க போறது இல்ல.. என்னோட ரே என்ன வெறுக்க மாட்டான்.. அவன்கிட்ட உண்மைய சொல்லிடலாம்” என்று மனதில் திடமான முடிவெடுத்து பெருமூச்சு எழுந்த தியா,
மருத்துவமனை விட்டு வெளியே செல்ல எத்தணித்த தியா, அவளின் முடிவை களைக்கும் நேரம் வந்துவிட்டது போல் அவன் கார் இருந்ததில் உள்ளே தேடி சென்று, அவள் கண்ட காட்சி தான் வாகினி கழுத்தில் ரேயன் கட்டிய தாலி.
ஒரு நிமிடம் உலகமே தலை கீழாக மாறி தலையில் இடி விழுந்த உணர்வு, அதிலும் அவன் வாகினிக்கு நிச்சயக்கப்பட்டவன் என்ற உண்மையில்
உயிர் பிரிந்த வலியை உணர்ந்தவளின் மூளையோ ‘தான் கற்பழிக்கப்பட்டு விட்டோம்.. தன்னவனுக்கு தான் தகுதியில்லை’ என்று தானே முடிவெடுத்தவள், அவன் விழிகள் பேசும் உண்மையை உணர முடிந்தும் உணராது போல் காட்டி கொண்டாள்.
பின் ரங்கநாயகியின் என்றும் தெரிந்தும் கூட தன் மனதை கல்லாக்கி கொண்டு அவனை வெறுத்து பேசிவிட்டு மொத்தமாக, அவனை விலக நினைத்து வெளியே வந்தவள் காரில் ஏறி கொண்டாள்.
ஏனோ, அவனை விட்டு விலக நினைத்து வந்தாலும் ஆடவன் அவளின் கழுத்தில் கட்டிய தாலியும், அவன் நிச்சயமானவன் என்ற உண்மையை மறைத்தது பெண்ணவளுக்கு ரணமாக எரிந்தது.
ஏற்கனவே மனவலியில் இருந்தவளுக்கு இதுவும் சேர்ந்து கொள்ள அழுத்தம் தாங்காமல் காரின் வேகத்தை கூட்டியவளின் பாதை தடுமாற, அப்போது தான் ஜோஸப்பை இடித்திருந்தாள்.
அதில் பதறி யாரென்று பார்த்தவளின் கண்கள் ஜோஸப்பை கண்டு இதயம் வேகமாக துடிக்க, அவனை அள்ளிக்கொண்டு மருத்துவமனை வந்தவள் யாருமற்ற அனாதை போல் தான் தவித்தாள்.
பின் அவனின் நிலையை மருத்துவர் விளக்கியதும் வயிற்றிலிருந்த குழந்தையோடு ஜோஸப்பையும் பொறுப்பேற்று கொண்டாள்.
தன்னை யாருக்கும் தெரியாதப்படி “பாத்திமா” என்ற பெயரில் இஸ்லாமிய தெருவில் குடியிருந்தவள், அக்கம் பக்கத்தினர் கேட்டால் ஜோஸப்பை அண்ணன் என்றும் குழந்தை கருத்தில் கொண்டு கணவன் இல்லை என்று கூறியிருக்க மற்றவர்களோ உயிரோடு இல்லையென்று பெண்ணவளை அன்பாகவே பார்த்து கொண்டனர்.
அவளின் மேல் இறக்கப்பட்டு அவள் குடியிருக்கும் இல்லத்தின் உரிமையாளரே தன்னுடைய நகை கடையில் கணக்கு வழக்கு பார்க்க சேர்த்து கொள்ள, தன்னுடைய அடையாளமாக எந்த பொருளும் இல்லை என்று கூறியும் அவள்மேல் வந்த நம்பிக்கையில் மாத சம்பளத்தை அதிகமாக கொடுத்தே வேலைக்கு வைத்தனர்.
அதோடு வெளியே செல்லும் போது பர்தாவுடனே பெண்ணவள் அதிகம் திரிவதால், அவளின் ரே மட்டுமின்றி யாருக்குமே அவள் இருக்கும் இடம் தெரியவில்லை.
இப்படியே பெண்ணவள் நிறை மாதத்தை தொட்டிருக்க, குழந்தை உதைக்கும் பொழுது அவளின் ரே எண்ணமும் வந்து பெண்ணவளை பாடாய் படுத்தவும் தவறவில்லை.
தான் கற்பழிக்கப்பட்டிருந்தும், ஏனோ அதில் உண்டான கருவென்று பெண்ணவளால் நினைக்க முடியாமல் போக, குழந்தையிடம் அப்பா என்று அவளின் ரே பற்றி தான் பேசி கொண்டேயிருப்பாள்.
ஆனாலும் அவனை பார்க்கும் ஏக்கத்துடன் புகைப்படத்தை பார்த்து தன்னை தேத்தி கொள்பவள், தூங்கும் போது அவன் தன் கழுத்தில் கட்டிய தாலியை இறுக்கமாக பிடித்தப்படியே உறங்குவாள்.
இதில் கண்கள் திறந்து உணர்வற்ற நிலையில் படுத்திருக்கும் ஜோஸப்பிடம் பேசுதோடு அவ்வப்போது மருத்துவர் கூறிய மருந்தை நரம்பு வழியில் டிரிப்ஸாக ஏத்தி விடவும் தவறாமல் குழந்தை போல் பார்த்து கொண்டாள்.
நிறை மாதம் என்பதால் வேலைவிட்டு விடுப்பிலிருந்த தியா, ஜோஸப்பிற்கு மருந்து வாங்குவதற்காக பர்தா அணிந்து வெளியே வந்தவளுக்கு வெயில் காரணமாக தலை சுற்ற ஓரமாக பேருந்து நிறுத்தம் அருகில் அமர்ந்து விட்டாள்.
நேரம் செல்ல செல்ல படபடப்பு கூடி வயிற்றில் மெல்ல மெல்ல வலியை உணர்ந்தவளுக்கு ஒரு பக்கம் பயம் வந்து விட,
மருத்துவமனை சென்று விடலாம் என்று வெடுக்கென்று எழும்பியவளுக்கு வலி அதிகரித்து விட, வலியில் “அம்மா..” என்று கதறி அமர்ந்தவளின் எண்ணமோ ஆர்யன் பிறக்கும் வேலையில் அன்னையின் நிலையே கண்முன் வந்து போக ‘அம்மா நானும் உன்ன மாதிரி ஏமாந்து போய் அனாதையா கிடைக்குறேன்’ என்று மனதிற்குள் அன்னையிடம் நிலையை கூறி கதறினாள்.
அவளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தனர்.
(சர்விடம் விசாரிக்க இருவரும் சென்ற மருத்துவமனையின் ஒரு கிளை தான் சென்னையில் பெண்ணவள் இப்போது அனுப்பி வைக்கப்பட்ட இடம்.. அதனால் தான் அன்று அவளின் முகம் வாடியது)
அவளை மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் தொடங்கியிருக்க, அவள் மாதந்தோறும் வரும் அதே மருத்துவமனை என்பதால் மருத்தவரும் அவளின் பிரசவத்தை முடித்திருந்தார்.
பிரசவம் முடித்து மயக்கத்திலிருந்து கண் விழித்த தியா, உலகில் உதித்த தன் பிஞ்சு குட்டியை விழிகளால் தான் இருந்த அறையில் தேடியவள் பக்கத்திலிருந்த செவிலியரிடம் “என் குழந்தை எங்க சிஸ்டர்.. என்ன குழந்தை” என்று கண்கள் மின்ன ஆர்வமாக கேட்ட தியாவை கண்டு செவிலியருக்கு பாவமாகவே இருந்தது.
பின் வெளியே சென்று குழந்தையை எடுத்து வந்து அவளின் கையில் கொடுக்க, கண்கள் மூடியிருந்த பெண் குழந்தையின் உச்சந்தலையில் இதழ் பதித்தாள்.
சில நிமிடம் கடந்தும் குழந்தையிடம் அசைவு இல்லாததில் பதறிய தாயுள்ளம் “சிஸ்டர் பாப்பா அசைய மாட்டிக்குறா” என்று கேட்டவளின் இதழ்கள் பயத்தில் துடிக்க,
அவளின் கையை பற்றிய செவிலியர் “சாரி குழந்தை இறந்துருச்சு” என்றதில் விழி விரித்தவள் “இல்..ல இ..ல்ல பா..ப்பா தூங்..க தான் செ..ய்றா” என்று தன் மார்போடு அணைத்து பிடித்தவளுக்கு குழந்தையின் இதய துடிப்பு கேட்காதில் வெடித்து கதறி அழுக, செவிலியர் தான் அவளை சமாதானப்படுத்த வழி தெரியாமல் தவித்து போனார்கள்.
***
அதன் பின் மருத்துவமனையிலே குழந்தையின் இறுதி காரியத்தை முடித்திருக்க, அழுகையை கைவிட்ட பெண்ணவளின் முகம் அன்றே இறுகி போனது.
இரவு போல் தான் குடியிருக்கும் வீட்டியின் உரிமையாளருக்கு செவிலியரின் திறன்பேசி மூலம் அழைத்து விஷயத்தை சொல்லியிருக்க, அவர்களும் பெண்ணவளை காண ஓடி வந்து அவளின் துயருக்கு ஆறுதலாக இருந்தனர்.
அது மட்டுமின்றி ரெண்டு நாட்கள் அவளுக்கு பலமாக மருத்துவமனையில் துணை நின்றவர்கள், வீட்டிற்கு சென்றும் கூட சில நாட்கள் அவளின் உடல் தேறும் வரை ஆரோக்கியமான உணவு கொடுத்து கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்கள்.
ஒரு மாசத்தில் தேறி வந்த தியாவோ மாறி மாறி வாழ்க்கை கிடைத்த அடியில் சிரிப்பு தோற்றம் என்று அனைத்தும் மாறி இறுகிய நிலையில் நாடக வில்லி போலவே காட்சியளிக்க ஆரம்பித்து விட்டாள்.
இனி ஜோஸப்பை பழைப்படி திருப்பும் பொறுப்பில் முழுதாக இறங்கியவள் அவனை நல்ல மருத்துவரிடம் அழைத்து செல்ல முடிவெடுத்து பணத்திற்காக பிரசவத்திற்காக விடுப்பெடுத்திருந்த நகை கடையை நோக்கி பயணத்தை தொடங்கினாள்.
தன் கடந்த கால கதையை நிகழ் காலத்தில் கூறி கொண்டிருந்த தியாவை “ஏய் ஏய் ஸ்டாப் ஸ்டாப்.. இங்க உன் கதை முடியுது” என்று நிறுத்திருக்க, கலங்கிய விழிகளை நிமிர்த்தி ராகவை பார்க்க,
அவனோ “என்ன பாக்குற உன் கதை முடியல தான் பட் நீ சொல்ல வேண்டிய ஃபிளாஷ்பேக் இது போதும் மீதி வேற ஒருத்தர் சொல்லுவார்.. அதுக்கு முன்ன ஒரு டீ ப்ரேக் எடுத்துக்குறேன்” என்று தன்னுடைய அடியாள் ஒருவனுக்கு கண்ணை காட்ட,
அவன் கொடுத்த தேனீரை வாங்கி பருகியவனின் பார்வை கண்ணீர் வடிய மனவலியுடன் அமர்ந்திருந்த தியாவின் மேல் திருப்தியாக பதிந்தது.
****
தியாவின் கதை கேட்டு ஆடவர்கள் இருவரின் இதயமும் பெண்ணவள் நீந்தி வந்த நிலையை நினைத்து கனத்து போனது என்றால், அதை கேட்ட பெண்ணான வாகிக்கோ கதறி அழ வேண்டும் போல் தான் இருந்தது, இதில் அவளின் தனிமை போராட்டத்திற்கு தானும் காரணம் என்ற குற்றயுணர்வும் கொல்லாமல் கொன்றது.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நிலையில் கலங்கி அவளை பார்த்திருக்க, தனக்காக கலங்கியவர்களை பார்த்த தியா, இறுதியில் தன்னவனின் புறம் பார்வையை நிலைக்க விட,
அவனோ எந்த உணர்வுகளும் இல்லாமல் இருந்தான் இல்லை இல்லை உணர்வுகள் வெளியே காட்டாமல் நடித்து கொண்டே பெண்ணவளை தான் அழுத்தமாக பார்த்திருந்தான்.
தேனீரை ரசித்து ருசித்து குடித்து முடித்த ராகவோ “சிஐடி ஆபீஸர் ருத்ரன் இப்போ யூவர் டர்ன்.. உங்க கதைல இருந்தே ஸ்டார்ட் பண்ணுங்க” என்றதும் தோழியை பெருமூச்சுடன் ஏறிட்டவன், இதுவே வாய்ப்பு இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்றப்படி ரேயனை பார்க்க, அவனும் சொல் என்பது போல் பார்வையால் சம்மதம் வழங்க, தன்னுடைய கடந்த காலத்தை நோக்கி சென்றான்.
****
ரேயன் ஜோஸப் ருத்ரன் மூவருமே ஒரே கல்லூரியில் பயின்ற நெருக்கமான நண்பர்கள் என்றதோடு மூவரும் ஒரே எதிர்காலத்தை தேர்ந்தெடுத்து அதற்கான விடாமுயற்சியில் தேர்வை முடித்து, அதன் பதிலுக்காக காத்திருந்தவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு சென்றனர்.
நண்பனிடமிருந்து விடைபெற்று தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்து இறங்கியவன் கிராம பகுதிலிருந்த தன்னுடைய வீட்டிற்கு சென்று சேர்ந்தான்.
பயணக்களைப்பின் காரணமாக ரெண்டு நாட்கள் நன்றாக ஓய்வெடுத்தவன் மறுநாள் காலை போல் தங்களின் வயக்காட்டின் அழகை ரசித்தப்படி நடந்து கொண்டிருந்தான்.
அப்போது தான் குழந்தைகளுடன் குழந்தையாக துள்ளி குதித்து விளையாடியப்படி சிட்டாக ஓடி வந்த அவனின் சிட்டு ஆறடி உருவத்தை கவனிக்காமல் மோதி நிலை தடுமாறி விட, அதில் ஆடவன் அவளின் இடுப்பை வளைத்து பிடித்திருந்தான்.
நிலை தடுமாறியதில் கீழே விழப் போகிறோம் என்றதில் அஞ்சி பயத்தில் கண்களை மூடிக்கொள்ள, அந்தரத்தில் பறப்பது போல் உணர்ந்த பாவை ‘அச்சோ விழுந்ததுல சொர்கத்துக்கு போயிட்டோம் போல’ என்று எண்ணியப்படி படக்கும் விழிகளுடன் மெல்ல கண்களை திறந்து ஆடவனை கண்டு ‘அய் நம்மாளு’ என்று எண்ணியவளின் வயிற்றில் அவனின் நெருக்கத்தில் பட்டம் பூச்சி பறக்க, அதனை அடக்கிவிட்டு அவனைவிட்டு விலகியவள் “தேங்க்ஸ் மாமா” என்றுவிட்டு செல்ல,
அவள் கண்கள் மூடி பயந்ததும், அதில் புன்னகைத்து தன்னிலை தொலைந்த ருத்ரன், அவள் நகரவும் தான் ‘ஒரு பொண்ண இவ்வளவு நேரமா பாத்து வைக்கிறது’ என்று தன்னை கடிந்து கொண்டவன் பெண்ணவள் மாமா என்று கூறியதும் திகைத்து பின் செல்ல போனவளின் கைபற்றி “உனக்கு நான் மாமா.. எந்த முறைலடி” என்றவன் ஏனென்று புரியாமலே உரிமையாக டி போட்டு அழைக்க,
அவனின் கேள்வியில் இதழ் சுழித்த பாவை “எல்லாம் கூப்பிட வேண்டிய முறை தான்.. அதுசரி காலேஜ் படிக்க வேற ஊர் போனது தான் போனீங்க பட்டணதுத்துல சமூகம் பெருசாகவும் எங்கள எப்படி தெரியும்.. வீடாவாது கரெக்ட்டா ஞாபகம் வச்சி வந்தீங்களா என்ன” என்று அவனை வார,
பெண்ணவளை முறைத்தவன் “என்னடி திமிரா.. என் வயலுக்கே வந்து என்கிட்டயே எகத்தாளமா பேசுறியா”
“சரி தான்.. ஆனா வருங்காலத்துல நானும் இந்த இடத்துக்கு சொந்தக்காரி தான்.. சோ நானும் வரலாம் உரிமையிருக்கு” என்று இரு பொருளில் பேச,
அதில் குழம்பி பின், அவளின் பேச்சில் ஈர்க்கப்பட்டு யாரென்று தெரிந்து கொள்ள எண்ணியவன் “ஓ மகாராணி வருங்காலத்துல இந்த இடத்த வாங்க போறீங்களா.. ஆனா சாரி இப்போ இடம் என்னோட பேருல இருக்கு எனக்கு விக்கிற ஐடியா இல்ல அப்படியே வித்தாலும் பேரு தெரியாதவகிட்டலாம் விக்க மாட்டேன்” என்க,
அவளுக்கு தான் ‘ஏன்டா அப்படி கூறினோம்’ என்று தலையில் அடித்து “என்னயா உன்னோட பெரிய ரோதனையா இருக்கு.. பெயரு தெரியணும்ன்னா ஸ்ட்ரெய்ட்டா கேளு சொல்லிட்டு போறேன்.. அதவிட்டுட்டு சின்னபிள்ளை தனமா பேசிக்கிட்டு.. போயா போய் புலப்ப பாரு.. எனக்கு ஆயிரம் ஜோலி கிடக்கு” என்று அவனின் பிடியிலிருந்த தன் கைகளை விடுவிக்க முயற்சி செய்து தோற்றவள் “என்னயா வேணும்” என்க,
ஆடவனோ ‘நீ யாருன்னு சொல்லாம இங்கயிருந்து போக முடியாது” என்றப்படி உறுதியாக பார்த்து வைக்க,
அதில் தன்னை நொந்த சித்திரா “உன் அம்மாவோட சித்தப்பா பையன் பொண்ணு சித்திரா தேவி” என்றதில் வியந்த ருத்ரன் “தேவியா நீ நான் ஸ்கூல் முடிச்சி போகும் போது சின்ன பிள்ளையா சுத்திட்டு இருந்த.. இப்போ ஆளே தெரியாம மாறிட்ட”
“யோவ் யாருயா சின்ன பிள்ளை நான் மேஜர் தெரியும்ல” என்றவளின் ஆடவாடியில் தலையாட்டி சிரித்த ருத்ரனுக்கு முதலில் சித்திராவை அடையாளம் தெரியவில்லை,
ஆடவன் பள்ளி முடித்து தேனியில் புகழ்பெற்ற கல்லூரியில் கால் வைத்த சமயம் அங்கேயே தங்கி படித்தவன் சொந்த ஊர் வருவதே அபூர்வம் தான், அதிலும் நண்பர்களை விட்டு வர மனமில்லாமல் பெற்றோரை பார்க்க கூறி பார்த்து கொள்வான்.
அதிலும், அவன் போகும் முன் சிறு குழந்தையாக சித்திராவை பார்த்துவிட்டு சென்றவன் இப்போது அவள் வளர்ந்து நிற்கவும் அடையாளம் தெரியாமல் போனது.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் சித்திராவின் வீட்டியில் ருத்ரனின் குடும்பத்துடன் வயல் சம்மந்தமாக ஏதோ தகராறு என்பதால் இரு குடும்பமும் பேசி கொள்வதில்லை ஆனால் சித்திரா மாமன் குடும்பமென்று உரிமை கொண்டாடி திரிபவள், மாமனின் மகனையும் உரிமையாக்க நினைத்து விட்டாள்.
பின் அவள் கைக்கு விடுதலை அளித்தவன் “அது சரி.. உங்க வீட்டுக்கு எங்க வீட்டுக்கும் தகராறுன்னு கேள்விபட்டேன்.. அத்தைக்கு எங்கமேல இருக்கிற கோபத்துக்கு நீ என்ன மாமான்னு தைரியமா சொந்தம் கொண்டாடுற”
“அதெல்லாம் அப்படி தான்.. சண்டைன்னா சில பல இடத்துல ரத்தம் வர தான் செய்யும்.. அதுக்காக மாமா உறவு தான் இல்லன்னு ஆகிடுமா இல்ல மாமன் பையன் நீ தான் உரிமையில்லாம போயிடுவியா* என்றவளின் பேச்சில் ஈர்க்கப்படும் மனதை கண்டு திகைத்த ருத்ரன் ‘அச்சோ மனமே அவள லவ் கிவ்வுன்னு பண்ணி தொலைச்சிடாத.. சின்ன பிள்ளைடா அவ’ என்று தன் மனதிற்குள் கடிவாளமிட்டவன் “ஆமா நீ என்ன படிக்கிற”
“நான் 12th படிக்கேன்.. திஸ் இயர் கம்ப்ளீட்”
“இப்படி வாயடிக்காம படிச்சி முன்னேற வழிய பாரு” என்றதுக்கு இதழ் சுழித்தவள் “எங்களுக்கு தெரியும் தேங்க்ஸ் ஃபார் த அட்வைஸ்” என்று முறைத்து சென்றவளை கண்டு தலையாட்டி சிரித்து கொண்டு அங்கிருந்து சென்றான்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍

