
மறுநாள் ருத்ரன் வழக்கு விஷயமாக விசாரிக்க ஓடி விட, யாழி மற்றும் வாகி தான் முந்தயைய நாள் உண்மை தெரிந்த நிகழ்வு பத்தி சிந்தனையில் முகத்தை இறுக்கமாக வைத்தப்படி உலன்று கொண்டிருந்தார்கள்.
தமக்கை இருவரையும் கண்டு ஆர்யனுக்கு மனது வலித்தாலும் வெளியே இயல்பாகவே காட்டி கொள்பவன், தன் அறைக்குள் யாரும் செல்கிறார்களே என்று கழுகு பார்வையால் கண்காணிக்கவும் தவறவில்லை.
மற்றவர்கள் நேற்றைய நிகழ்விலிருந்து சாதரணமாக மாறியிருக்க, சித்திரா கூட இப்போது எழுந்து நடக்குமளவு தேரியிருந்தாள் ஆனால் வயிற்றில் தையலில் ஏற்படும் வலியில் சில நேரம் பெண்ணவளின் முகத்தில் சுனுக்கம் ஏற்படுவதும் உண்டு, ருத்ரன் வேலை விஷயமாக சென்றிருப்பதால் ஆர்யன் தான் பெண்ணவளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வான்.
இதிலும் அன்று மருத்துவமனையில் தியா சித்திராவிடம் பேசியதோடு அதன் பின் அவளை தவிர்த்து வந்தாள், காரணம் ஏனோ அவளை இந்நிலையில் பார்க்க தியாவிற்கு வலிக்க, அதனால் அழுது தொலைத்து விடுவோமோ என்ற பயத்தில் தங்கையை பார்ப்பதை கூட அதிகம் தவிர்த்து விட்டாள்.
அவளின் பாராமுகம் சித்திராவிற்கு வலியை கொடுக்க, தமக்கையின் நிலமை புரிந்து அவளும் தொந்திரவு செய்யாமல் விட்டு விட்டாள்.
ரேயன் இரு பெண்களுக்கும் இடைவெளி கொடுக்க எண்ணி இரு குழந்தைகளையும் தானே பார்த்து கொண்டு, அவ்வப்போது வெளியையும் சென்று வந்து கொண்டிருந்தான்.
அதன் பின் மாலை நேரம் சர்வா வந்திருக்க, அவனை கண்டு இயல்பு நிலைக்கு மாறிய தியா ஆடவனை அணைத்து விடுவித்து வரவேற்க, பின் சர்வாவின் கல கல பேச்சில் அனைவருக்கும் அவனை பிடித்து விட, மற்றவை மறந்து அவனின் பேச்சில் ஒன்றினர்.
அவனை கண்டதும் யாழிசைக்கு ஒரு மாதிரியாகி விட, தியாவின் மூலம் விஷயம் மேலோட்டமாக அறிந்த சர்வா பெண்ணவளிடம் இயல்பாகவே பேச, அதில் நிம்மதியடைந்தவள் அவனை பார்த்து புன்னகைத்து வைத்தாள்.
தன்னை கண்டு கொள்ளாமல் சர்வாவிடம் பேசும் தியாவை கண்டு ரேயனுக்கு பொறாமை தீ பற்றி எரிய, அவனின் பக்கத்தில் அமர்ந்திருந்த ஆர்யா தான் “என்ன மாம்ஸ் ஓவர் ஸ்மோக் வருது” என்று வாரி, அவனின் அனலை பார்வையை கண்டு கொள்ளாது மற்றவர்களிடம் கதைக்க தொடங்கி விட்டான்.
அப்போது பட்டம்மாள் “ஆமா தம்பி உன்ன பெத்தவங்க எங்க இருக்காங்க.. என்ன பண்றாங்க” என்க,
அவ்வளவு நேரம் நன்றாக பேசி கொண்டிருந்தவனின் முகம் நொடியில் மாறி விட்டது.
அவனின் உணர்வுகள் புரிந்து தோலோடு அணைத்த தியா “சர்வா” என்று மென்மையாக அழைக்க,
அதில் போலியாக புன்னகைத்த சர்வாவோ “ஐ ஆம் ஓகே..” என்றுவிட்டு பட்டம்மாளிடம் “பாட்டி என் அப்பா அம்மா ரெண்டு பேரும் சென்னைல பிசினஸ் பண்றாங்க.. அது போக நிறைய பிராஞ்ச் இருக்கிறதுனால அவங்களுக்கு என்ன பாத்துக்கலாம் டைம் இருக்காது கொஞ்ச காலம் கேர் டேக்கர் கிட்ட வளந்தேன்.. அப்புறம் ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன்..
எனக்கு தேவைப்படும் போது பணத்த கரெக்ட்டா தருறவங்க நான் எதிர்பாத்த அன்பு மட்டும் தரல.. அப்புறம் நான் காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது தான் தியா ஃபர்ஸ்ட் இயர் ஜாயின் பண்ணினா.. ரெண்டு பேருக்கும் ஒன் இயர் தான் பழக்கம் ஆனா அந்த ஒரு வருஷம் எனக்கு தோழி அம்மா ரெண்டு உறவோட அன்பையும் ஒரு சேர கொடுத்தா..” என்றவனுக்கு அவனின் கடந்த கசப்பு நிகழ்வில் வர,
அவனின் கையை அழுத்த பற்றிய தியா “அவனுக்கு டாக்டராக ஆசை பாட்டி வீட்டுல ஃபோர்ஸ் பண்ண போய் தான் இங்க சேர்ந்திருக்கான்.. அவன்கிட்ட பழகும் போது எனக்கு தெரிஞ்சிது சோ நான் பேசினேன் அவனும் புரிஞ்சுக்கிட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போய் மெடிக்கல் காலேஜ் ஜாயின்ட் பண்ணிட்டான்.. அப்போ பாத்தது அதுக்கு அப்புறம் இப்போ கொஞ்ச நாள் முன்ன கேஸ் விஷயமா விசாரிக்க போகும் போது தான் இங்க இருக்கான் தெரியும்” என்று தன்னை உணர்ச்சி பொங்க பார்த்தவனிடம் கண்கள் மூடி திறந்து ஏதோ அவனுக்கு உணர்த்த,
அதை புரிந்து கொண்ட சர்வாவும் பெண்ணவள் கூறியதற்கு ஆமென்று கூறும் விதமாக தலையாட்டி வைக்க, இருவரின் பார்வையில் ஏதோ ரகசியம் ஓடுகிறது என்பதை ரேயனும் கண்டு கொண்டான்.
அவனின் ஏக்கம் புரிந்து தலை வருடிவிட்ட பட்டம்மாள் “நீ வருத்தப்படாத கண்ணு இனி உனக்கு நாங்க இருக்கும்.. நீ இங்கேயே எங்க கூடவே தங்கிடு”
*ரொம்ப தேங்க்ஸ் பாட்டி.. ஆனா இங்கயிருந்து என்னோட கிளினிக் ரொம்ப தூரம் சோ நினைச்ச நேரம் போக முடியாது.. ஆனா அடிக்கடி வீட்டு பக்கம் வந்து போவேன்..” என்றான்.
அனைவரின் வற்புறுத்தலின் படி இரவு உணவு இங்கேயே முடிக்க, அப்போது ருத்ரனும் அனைவருடனும் ஆஜராகியிருந்தான்.
சாப்பிட்டு முடித்து வீட்டை சுற்றி வந்த சர்வாவோ, ஆர்யாவிடம் “டேய் ஆர்யா.. நீ நல்லா பெயின்டிங் பண்ணுவன்னு தியா சொல்லிருக்கா.. அது போக உன் பெயரு உலகம் முழுக்க பேசுதே.. உன் பெயின்டிங்ஸ் ஒன்னு எனக்கு தாடா” என்றதை கேட்டு புன்னகைத்தவனோ “இரு அண்ணா எடுத்து வரேன்” என்று செல்ல,
அவனின் பின்னயே ரேயன் மற்றும் சர்வா செல்ல, அதில் பதறிய ஆர்யன் “ரெண்டு பேரும் எங்க வரீங்க” என்க,
ரேயனோ “உன் பெயின்டிங் பாக்க தான்டா..” என்றதை கேட்டு வாகி யாழிசையும் இணைந்து கொள்ள, அதில் மேலும் திண்டாடியவன் “நான் போய் எல்லா பெயின்டிங்ஸ் எடுத்துட்டு வரேன்.. நீங்க இங்கேயே இருங்க” என்க,
யாழிசை தான் “என்ன ஆரி.. எல்லாத்தையும் தூக்கிட்டு அலைவீங்களாக்கோம் உங்களுக்கு எதுக்கு சிரமம் நாங்க சத்தமே இல்லாம பாத்துட்டு போயிடுவோம்” என்றதை கேட்டு நொந்தவன் தியாவை பாவமாக பார்க்க,
தியாவோ “அவன் டிராயிங் ரூம்க்கு யாரும் போனா அவனுக்கு பிடிக்காது.. இதுவரை நானே போனது இல்ல.. எதுக்கு டிஸ்டர்ப் பண்ணிட்டு விடுங்க அவனே எடுத்துட்டு வரட்டும்” என்றதை காதில் வாங்காத ரேயன், இன்று அவனின் அறையிலிருக்கும் ரகசியத்தை கண்டயறிந்தாக வேண்டுமென்ற உறுதியில், ஆர்யன் தோலில் கைபோட்டு தானே அவனின் அறைக்குள் இழுத்து சென்றான்.
ரகசிய அறைக்கு முன் வந்த ஆர்யன் பெருமூச்சு ஒன்றை இழுத்துவிட்டு “சரி இங்கேயே எல்லாரும் இருங்க.. நான் உள்ள போய் எடுத்து வரேன்” என்றதும்,
ஆர்யன் தியா முகத்தில் தெரிந்த கலவரத்தை பார்த்த ரேயன் “டேய் உள்ள பெயின்டிங்ஸ் தான இருக்கு.. தங்க புதையல் இருக்கிற போல ஓவரா பில்ட்டப் பண்ற.. ச்சி கதவ திற”
“மாம்ஸ் அடம் பண்ணாதீங்க.. அப்புறம் இந்த வீட்டுல இருக்க கூட யாரையும் அலோ பண்ண மாட்டேன்” என்றவனுக்கு சிறிது கோவம் எட்டி பார்க்க,
தனக்கு கோவம் வரும் என்பது போல் “தாராளமா மிஸ்டர் ஆர்யன்.. ஆனா எனக்கு இந்த ரூம்ல நீங்க தப்பான விஷயம் பண்றீங்கன்னு தோணுது சோ அஸ் ய ஆபீஸரா கண்டிப்பா அந்த ரூம நான் செக் பண்ணியாகனும்” என்க, அவனின் பேச்சில் அதிர்ந்த தியா “ரே..” என்று கத்த,
சர்வா தான் தன்னால் இவர்களுக்குள் சண்டையா என்று நொந்து “ரேயன் விடுங்க எனக்கு பெயின்டிங்கே வேண்டாம்.. எனக்காக தேவையில்லாம சண்ட போடாதீங்க..” என்க,
முதலில் தன்னை அங்கிருந்து அகற்ற நினைக்கும் தியாவை பார்வையால் அடக்கியவன் “இல்ல சர்வா.. இவன்கிட்ட ஏதோ தப்பா இருக்கு.. நானும் வீட்டுக்கு வந்ததுயிருந்து இவன் நடவடிக்க வாட்ச் பண்ண தான் செய்றேன் ஏதோ சரியில்ல.. இன்னைக்கு அது என்னன்னு தெரிஞ்சே ஆகனும்” என்று கையை மார்புக்கு குறுக்கே கட்டி ஆர்யனை கூர்மையாக ஏறிட்ட ரேயன் “மிஸ்டர் ஆர்யன்.. நான் இப்போ ஆபீஸரா உங்க முன்னாடி நிக்கிறேன்.. அதோட என் ஆளோட தம்பின்னு தான் உங்கள மரியாதையா டீல் பண்றன்.. சோ நீங்களும் அந்த மரியாதைய காப்பாத்திட்டு எனக்கு கோ – ஆபரேட் பண்ணினா ரொம்ப நல்லது” என்க,
உனக்கு நான் சலைத்தவன் இல்லை என்பது போல், அவனை புருவம் உயர்த்தி ஏறிட்ட ஆர்யாவோ “என்ன சிஐடி ஆபீஸர் எந்த ஒரு பேப்பரும் இல்லாம யாரோட வீட்டுலயும் சர்ச் பண்ண கூடாதுன்னு ரூல்ஸ் உங்களுக்கு தெரியாதா.. முதல பேப்பரோட வாங்க தாராளமா அனுமதிக்கிறேன் இப்போ போகலாம்” என்று அறை வாசல் வெளியே கையை காட்ட,
இங்கு இவர்கள் செய்யும் கலாட்டாவில் மற்றவர்களும் பதறியடித்து வந்திருக்க,
ருத்ரன் தான் ‘மாமன் மாப்பிளை பேசிக்கிட்டதுங்களா இப்படி அடிச்சிக்குதுங்க’ என்று எண்ணியப்படி நிற்கும் தன்னவளை படுக்கையில் அமர வைத்தவன், அவளின் அருகிலே நின்று அமைதியாக வேடிக்கை பார்த்தான்.
ஆர்யனின் பேச்சில் கடுப்பான ரேயன் ‘பொடி பையன் நீ எனக்கு ரூல்ஸ் போடுறியா’ என்று பார்வை பார்த்தவன், அவன் சுதாகரிக்கும் முன் அவனின் கையை இழுத்து விரல் பதிக்கும் கருவில் வைத்தான்.
அவனின் தீடீர் செயலில் ஆர்யன் திகைத்து நிற்க, அதனை தனக்கு சாதகமாக பயன்ப்படுத்திய ரேயன், ஆர்யன் கையை பிடித்தப்படியே கதவை திறக்க, அங்கே கண்ட காட்சியில் உறைந்தவனின் கைகள் அவனை அறியாமலே ஆர்யனை விடுதலை செய்தது.
சுற்று நின்றிருந்தவர்களும் திகைப்பு மாறாக நிற்க, வாகியின் நிலமை அதை விட மோசம், கருமணிகள் நகர மறுத்து விழிகளில் கண்ணீர் தேக்கி உள்ளே உணர்வற்று இருந்த தன்னவனை கண்டு “ஜோ..” என்று இதழயசைத்தவள் அப்படியே சிலையென நின்றாள்.
அனைவரையும் பார்வை பார்த்துவிட்டு பெரு மூச்சுவிட்ட ஆர்யன் சக்கர நாற்காலியில் இமைகள் ஆசையாது இலக்கின்றி வெறித்தப்படி அமர்ந்திருந்த ஜோஸப்பை தூக்கி படுக்கையில் கிடைத்தியவன், அவனுக்கு போர்த்தி இரவு விளக்கை போட்டுவிட்டு கதவை சாத்திவிட்டு வெளியே வந்தவனின் பார்வை தமக்கை இருவரின் மேலே வட்டமடித்தது.
தியாவின் நிலையே அவளுக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது என்று அனைவருக்கும் உணர்த்த, எப்படி கேட்பதென்று தயங்கி நின்றிருக்க,
தலையும் புரியாமல் வாலும் புரியாமல் குழம்பிய சர்வா தான் “ஆர்யா உள்ளயிருக்கிறது யாரு அவருக்கு என்ன பிராப்ளம்.. எதுக்கு யாருக்கும் தெரியாம மறைச்சி வைக்கணும்” என்றதும் தான் தாமதம் தியா உடைந்து தரையில் மண்டியிட்டு தலையில் அடித்து கொண்டு கதறிவிட்டாள்.
அன்னையின் இழப்பிற்கு பின் இன்று தான் ரேயன் பெண்ணவளின் கண்களில் கண்ணீரை பார்க்கிறான், இத்தனை நாட்கள் உணர்வுகளை அடக்கி பழகியவளுக்கு இன்று ஏனோ முடியாமல் போக மொத்த உணர்வுகளையும் இறக்க, அவளை சமாதானம் படுத்த சென்ற ஆடவர்களை பார்வையால் அடக்கிய ரேயன் அழவிட்டு வேடிக்கை பார்த்தான்.
பெண்ணவளோ “நான் தான் ஜோஸா நிலமைக்கு காரணம்.. நானே ஜோஸப் வாகினி பிரிவுக்கு காரணமாகி பாவியாட்டேன்.. நான் தான் தப்பு பண்ணிட்டேன்” என்று தலையில் அடித்து கொண்டு ஒப்பாரி வைக்க,
கடுப்பான ஆர்யன் “தியா என்ன அடிக்க வைக்காத.. நடந்தது ஜஸ்ட் ஆக்சிடென்ட் அது உனக்கு தெரியும் புரிஞ்சும் உன்ன நீயே பிளேம் பண்ணிக்காத” என்றவனின் வார்த்தைகளை கண்டு கொள்ளாத தியா, திக் பிரம்மை பிடித்தவள் போல் நிற்கும் வாகியின் காலை பிடித்து “என்ன மன்னிச்சிடு வாகி.. நான் உனக்கு பெரிய பாவம் பண்ணிட்டேன்.. ஐ ஆம் சாரி” என்க,
அதுவரை என்ன நடக்கிறது என்று புரியாமல் ஜோஸப் இருந்த அறையை பார்த்திருந்தவள், தியாவின் செயலில் பதறி தியா “முத என்ன நடந்துச்சுன்னு சொல்லாம இப்படி உன்ன நீயே பழி சொல்லுறது சரியில்ல.. என்ன நடந்துச்சுன்னு சொல்லு தப்பு யாரு மேலன்னு அப்புறம் பாக்கலாம்” என்று தியாவை தோலோடு அணைத்து கொள்ள,
அன்றைய நிகழ்வை நினைத்து பார்த்த தியா “ஜோஸப் கேஸ் விஷயமா டெல்லி போயிருந்தப்போ அவன் கார் என்கிட்ட தான் இருந்துச்சு.. அன்னைக்கு எனக்கு உடம்பு முடியாம தான் ஹாஸ்பிட்டல் வந்தேன் அதுவும் ஜோஸப் கார்ல தான்.. அப்போ தான் ரேயன் அம்மா ஆக்ட் பண்ணி உங்க கல்யாணத்த நடந்தினாங்க.. நான் கூட எல்லார்கிட்டயும் கோவமா பேசிட்டு வெளியே வந்துட்டன்ல..
என்னால நடந்தத டைஜஸ்ட் பண்ணவே முடியல கோபத்துல கார் ஓட்டிட்டு இந்த திசைல போறேன் கூட தெரியாம போனேன் அப்போ தான் பேலன்ஸ் தவறி ஜோ.. ஜோஸப்” என்றவளுக்கு வார்த்தைகள் தொண்டை குழியில் சிக்க, கையை மடக்கி குரலை செருமிய தியா “என் கார் கன்ட்ரோல் இல்லாம ஜோஸப் மேல மோதிடுச்சு.. யாரோ அடிப்பட்டது தெரிஞ்சி தான் நிதானம் வந்து வேகமாக இறங்கி பார்த்தா அது ஜோஸப்.. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல.. அப்புறம் கஷ்டப்பட்டு நானே அவன ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனேன்..
டாக்டர் அவன் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லா கோமா போயிட்டான் சொன்னாங்க.. யாருமே இல்லாம யோசிக்க கூட முடியாம அனாதையா நின்னேன்.. யார்ட உதவி கேக்க யார நம்பன்னு தெரியாம அல்லாடினேன்..
அப்புறம் சென்னைலயே ஒரு முஸ்லிம் ஏரியால ஃபாத்திமா பேருல ஒரு வீட்டுல வாடகைக்கு இருந்தேன்.. வீட்டு ஓனர் ஜோஸப் பத்தி கேட்டா அண்ணன்னு சொல்லிடுவேன்.. யாருக்குமே என்ன தெரிய வாய்ப்புல்ல வெளியே போனாலும் பர்தா போட்டுட்டு தான் போவேன் சோ ரேயனால கூட என்ன கண்டு பிடிக்க முடிஞ்சிருக்காது..
அப்படியே பக்கலத்துல இருந்த ஜூவல்ஸ் ஷாப்ல வொர்க் பண்ணி தான் ஜோஸப் பாத்துக்கிட்டன்.. அப்படியே கொஞ்ச காலத்த அங்க ஒட்டிட்டன் அப்புறம் பாட்டி சித்திரா உறவு கிடைச்சுது.. சித்திராவுக்கு அப்போ ஒரு இக்கட்டான சூழ்நிலை” என்றதும் சித்திராவோ பற்களை கடித்து தன் உணர்வுகளை அடக்க, ருத்ரன் தான் ஆதரவாக அவளின் கையை பற்றி கொண்டான்.
மேலும் தொடர்ந்த தியா “சோ என்னால அவங்களையும் அம்போன்னு விட முடியல.. கொஞ்ச மாசம் சென்னைலயே வேற வீடு பாத்து இருந்தோம்.. அவங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வர முன்னவே ஜோஸப்புக்கு அந்த வீட்டுல கண்டு பிடிக்காதப்படி இடம் செட் பண்ணிட்டேன்..
ஆர்யா ரூம் போல தான் நான் இருந்த ரூம்ல ஒரு சின்ன ரூம் இருக்கும் அந்த வீட்டுல ஜோஸப் அங்க வச்சி பாத்துக்கிட்டேன்.. அப்படியே சித்திராவும் நானும் பக்கத்துல சூப்பர் மார்க்கெட்ல வேலை பாத்தோம்.. அப்புறம் தான் அவ காலேஜ் படிக்கிற பொண்ணு தெரிஞ்சிது..
அவள படிக்க வைக்க என்னோட வேலைக்கே போக நினைச்சேன் சென்னைல இருந்த ரேயனுக்கு தெரிய வந்திரும்.. சோ பெங்களூருக்கு டிரான்ஸ்ஃபர் கேட்டேன் என் மாமனாருக்கு அப்போவே என்ன தெரிஞ்சிருக்கும் போல ஈசியா என்ன ஏதுன்னு கூட கேட்காம டிரான்ஸ்ஃபர் கொடுத்துட்டார்.. அதோட இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம் சொன்னேன் சரின்னு சொல்லிட்டார்..
அப்போ தான் ஆர்யாகிட்ட உதவி கேட்டேன் அவனும் நீ அனுப்பி விடு நான் ஜோஸா மாமாவ பாத்துக்கிறேன் சொல்லிட்டான்.. பட் என்ன நடந்துச்சுன்னு அப்போ இருந்த நிலமைல என்னால சொல்ல முடியல.. அப்புறம் ஆர்யாவே சென்னை ஏர் போர்ட் வந்து ஜோஸப் கூட்டிட்டு போயிட்டான்.. அப்புறம் தான் தியாழினிங்குற என்னோட உண்மையான பெயரு என்னோட வேலை பத்தி பாட்டி சித்திராக்கிட்ட சொன்னேன்.. அப்போ எல்லாரையும் கூட்டிட்டு பெங்களூர் வந்து ஜாப் ஜாயின் பண்ணிட்டேன்.. அங்க தான் ருத்ரன் ஜூனியரா ஜாயின் பண்ணினான்.. ஒரு ஆறு மாசம் முன்ன தான் ஆர்யன் ஜோஸப் கூட்டிட்டு பெங்களூர் வந்து சேர்ந்தான்..” என்று முடித்திருக்க,
அடுத்து தொடர்ந்த ஆர்யன் “நான் பெங்களூர் வந்தப்புறம் தான் மாம்ஸ் வாகி கல்யாண பத்தியும் ஜோஸ் மாம்ஸ் ஆக்சிடென்ட் பத்தியும் சொன்னா.. எவ்வளவு டிரை பண்ணியும் எந்த இம்ப்ரூவ்மெண்ட்டும் இல்ல அவர்கிட்ட” என்றப்படி ருத்ரனிடம்
“அன்னைக்கு நீங்க தியா பைக் பாத்து வீட்டுக்கு வந்தீங்களே.. தியா கூட பதறினாளே அன்னைக்கு தான் ஒரு ஃபேமஸ் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனோம் அவர் நல்ல ஹோப் கொடுத்தார் ஃபர்ஸ்ட் இருந்ததுக்கு கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் தெரிஞ்சிச்சு சோ எங்களுக்கும் சரியாயிடும் நம்பிக்கை வந்துச்சு.. ஆனா தியா தான் ரொம்ப கில்ட்டா ஃபீல் பண்ணினா அதோட வாகி பத்தி தெரிஞ்சதும் ரொம்ப டிப்ரஸ்ட் ஆயிட்டா.. ஜோஸா மாம்ஸ சரி பண்ணிட்டு தான் உங்க முன்னாடி நிறுத்தனும் உறுதியா இருந்தா” என்க,
அவ்வளவு நேரம் அமைதியாக கேட்டு கொண்டிருந்த சர்வாவிற்கு அவள் கதறுவது வலியை தர, மற்றவர்களை மறந்து பெண்ணவளை அணைத்தவன் “பம்பர கண்ணு ஒன்னும் இல்லடி” என்று தேம்பும் அவளின் முதுகை நீவியவன் “நடந்தது ஆக்சிடென்ட் சோ இதுல உன் மேல எந்த தப்பும் இல்ல.. நான் என்ன சொல்லிருக்கேன் எதாவது ஹெல்ப் தேவைப்பட்டா என்ன கண்டாக்ட் பண்ண சொன்னேன் தான.. நானே வேண்டாம்ன்னு என் நம்பர தூக்கி போட்டியா” என்றதில் “சர்வா” என்றவள் அவனின் சட்டையை நனைத்தாள்.
தன்னவளை சமாதானம் செய்ய, அவன் யார் என்று எண்ணிய ரேயனுக்கு சர்வாவின் மேல் கடுப்பு எழ, அவனை கண்டு கொள்ளாமல் பெண்ணவளை அவனிடமிருந்து பிரித்து தன் கையில் ஏந்தி கொண்டவன் “நாங்க வீட்டுக்கு போறோம் பேபிஸ நீங்க பாத்துக்கங்க” என்றவன் ஆர்யாவிடம் பார்வையால் வாகியை காட்டிவிட்டு காரில் தன்னவளை அமர்த்தி சீட் பெல்ட் போட்டுவிட்டவன் தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

