Loading

பெங்களூரில் ஓவியம் கண்காட்சி நடந்து கொண்டிருந்த தருணம் அது, அங்கு சில கல்லூரி மாணவர்களின் ஓவியக்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தது.

 

அதில் யாழிசை ஓவியமும் ஒன்று, சிறு வயதிலே இயற்கையாகவே வரைவதில் ஆர்வம் கொண்டவள் ஆசிரமத்தின் தயவால் ஓவியம் வகுப்பையும் முழுதாக கற்று தேர்ந்தவள், அவ்வப்பொது சிறு சிறு கண்காட்சிகளில் தன்னுடைய ஓவிய திறமையை காட்டி பரிசு பெற்றதும் உண்டு.

 

அத்திறமையால் கல்லூரி நிர்வாகம் பொறுப்பில் தன் தோழிகள் சிலருடன் பங்கேற்று தன் திறமையை வந்தவர்கள் வியக்க பார்க்க வைத்தாள்.

 

அதே சமயம் ஓவியக்கலையிலே முதலாவது இடத்தை பிடித்திருந்த ஆர்யன், டெல்லி நிகழ்ந்த மாபெரும் போட்டியில் பங்கேற்றததில் நாடெங்கும் அவனின் கலை பேசப்பட்டது.

 

அதோடு, அவனின் ஓவியத்தில் மயங்கிய பெண் ரசிகைகள் ஏறாலாம், அதில் யாழிசையும் ஒன்று என்றாலும் பெரிதாக ஆடவனின் முகம் அவளுக்கு தெரியவில்லை,

 

அவளுக்கு மட்டுமில்லாமல், அவன் பொதுவாக வெளியிடங்களில் மாஸ்க் அணிந்து வருவதோடு, சமூக வலைதளங்களில் அவனின் புகைப்படத்துக்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் தெரியும் அதனால் கூட யாருமே அதிகம் அறிந்திருக்கவில்லை,

 

அவனை நன்கு உற்று கவனித்தால் மட்டுமே கண்டுபிடிக்க எழும், அதிலும் யாழிசைக்கு அதிகம் சோஷியல் மீடியா பழக்கம் இல்லாததால் அவளுக்கும் கூட ஆர்யனை அடையாளம் காண முடியாது.

 

இவ்விடத்திலும் விஐபி பார்வையாளராக வந்திருந்த தே கிரேட் ஆர்டிஸ்ட் மிஸ்டர் ஆர்யனும் தன்னுடைய ஓவியங்களை வந்திருந்த அனைவருக்கும் விருந்தாக காட்சிப்படுத்திருக்க, அதோடு அதில் கலந்து கொண்டவர்களின் ஒவியத்தையும் பாராட்டி சிலவற்றை வாங்கியும் கொண்டான்.

 

இறுதியாக யாழிசை ஓவியமிருந்த இடத்திற்கு வந்திருந்தான்.

 

வழமை போல் அல்லாமல் இம்முறை அதிசயமாக முகத்தை மறைக்க எந்த மாஸ்க்கும் அணியாமல் வந்திருக்க, பெண்ணவளோ அப்போது தான் அழைப்பு வந்ததில் பேச சென்று விட்டாள்.

 

பேசி முடித்து அவள் வரவும் யாரு ஓவியத்தை வாங்கியது என்று தோழிகள் மூலம் தெரிந்திருக்க தனக்குள் நொந்த யாழிசை ‘எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட் என்னோடது வாங்கிட்டு போயிருக்கார்.. எனக்கு தான் பாக்க கொடுத்து வைக்கல’ என்று அக்கண்காட்சி முடியும் வரை சற்று வருந்தியவள் தன்னுடைய ஆசிரமத்திற்கு சென்றதும் அங்கிருந்தவர்களுடன் ஐக்கியமாகியதில் மற்றவை மறந்தே போனாள்.

 

அவளுக்கு தான், அவனின் முகம் தெரியவில்லை ஆனால் ஆடவனோ அவள் மதி முகம் தெரிந்தே தான் வாங்கினான்.

 

அவளிடம் அதிகம் நேரம் பேச்சு கொடுப்பதற்காக தான் இறுதியாக அவளின் இடத்திற்கு சென்றதே, ஆனா பெண்ணவள் இல்லாததில் முகம் சுருங்கியவன் யாரிடம் கேட்பது அநாகரிகம் கருதி அவளின் பெயரிட்ட ஓவியத்தை மட்டும் அப்போது வாங்கி கொண்டான்.

 

அவ்வொயியத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவனுக்கு இரவு தூக்கம் வர மறுக்க, அதிலிருந்த அவளின் பெயரை வருடியவனின் இதழ்களோ உரிமையாக “இசை” என்று அழைத்து புன்னகைத்தது, பின் படுக்கையில் கண் மூடியவனுக்கு அவளை பார்த்த கணம் நினைவில் வர அதோடே கலந்து கொண்டான்.

***

 

ஓவிய காட்சிக்கு முன் தினமே ஓவியங்களை அந்த இடத்தில் இறக்கியிருக்க வேண்டும், எப்போதும் இந்த மாதிரி நிகழ்விற்கு புகைப்படத்தை அனுப்பி வைத்துவிட்டு விழாவிற்கு மற்றும் வந்து செல்பவனுக்கு,

.இன்று ஏனோ செல்ல தோணியதோ என்னவோ அவனே வந்திருக்க, அதே போல் தான் அங்கு கலந்து கொள்ளயிருந்த மற்றவர்களும் ஓவியத்தை இறக்கியிருக்க, அதில் யாழிசையும் ஒருத்தி.

 

அவன் எளிமையான தோற்றத்தில் மாஸ்க் போட்டு வந்திருந்ததால் இக்காட்சியை நடத்தும் உரிமையாளர்கள் தவிர பெரிதாக யாருமே கண்டயறியவில்லை,

 

அது அவனுக்கு இன்னும் வசதியாகி போக தன்னுடையதை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சுற்றி பார்த்தவனின் கண்கள், அப்போது தான் தோழிகளிடம் பாவனைகள் மாறி சிரித்து பேசி கொண்டிருக்கும் யாழிசை தென்ப்பட, அவளை பார்த்ததும் அவனின் கால்கள் நகர மறுக்க, காரணமே அறியாமலே அவளின் பாவனைகளை தன்னுடைய கண்களால் புகைப்படம் எடுத்து, அதை ஆழ் மனதில் பதித்து கொண்டான்.

 

பின் சூழ்நிலை கருதி அங்கிருந்து கிளம்பியவனுக்கு ஏனோ பெண்ணவளின் மதி முகமே வந்து போக,

 

மறுநாள், அவளை பார்க்க போகும் உற்சாகத்தில் வந்தவனும் கூட பெண்ணவள் தன்னை காண வேண்டும் என்று எண்ணி தான் தான் முகத்தை மறைத்திருந்த மாஸ்க்கை கழட்டிருந்தான்.

 

பாவம் காட்சி கொடுக்க, அவளின் அவன் இருந்தும் பார்க்க தான் பேதைக்கு கொடுத்து வைக்கவில்லை என்று அவளின் நினைவுகளில் நிகழ் உலகத்தில் தூக்கத்துடன் போராடி கொண்டிருந்தவனுக்கு,

 

இது என்ன பைத்தியகாரதனம் பார்த்த மாத்திரத்தில் காதலா என்று தனக்குள் கேட்டு விடை தெரியாமல் சிரித்து கொண்டவனுக்கு அடுத்தடுத்து சில வேலை வந்துவிட, அதை முடித்துவிட்டு அவளை கண்டறிந்து கொள்ளலாம் என்று அதில் மூழ்கியவன் அவ்வப்பொது அவளின் ஓவியத்திடம் பைத்தியம் போல் தனியாக பேசவும் தவறவில்லை.

 

இப்படியே நாட்களும் கடந்து ரெண்டு மாதங்கள் முடிந்து பெண்ணவளை காண தேடுதலை தொடங்கிய ஆர்யனின் கண்ணில் வரமாகவே அவனின் இசை வந்து சிக்க,

 

பின் நடந்த விபரீதத்தில் தமாதிக்காமல் திட்டம் தீட்டி தன்னுடன், அவளை இருக்க வைத்து கொள்ள யாரும் இழக்க கூடாத ஆண்மையையே இழந்தது போல், அவள் முன் காட்சியளித்தான் என்று கதை கேட்ட பெண்ணிடம் கூறியவனின் இதழ்கள் தாராளமாகவே விரிய, அவளை இமைக்காமல் பார்த்திருந்த யாழிசைக்கோ எப்படிப்பட்ட காதல் இவனுடையது என்ற வியப்பில் பேச்சில் வார்த்தைகள் கூட வராமல் போக,

 

தன்னை பார்த்திருந்தவளை கண்டு ஆர்யன் “என்னடி எதுவும் பேச மாட்ற”

 

“தெரியல ஆரி.. எனக்கு சந்தோஷத்துல எப்படி ரியாக்ட் பண்றதுன்னு தெரியல.. உங்க காதலுக்காக நீங்க இம்போடென்டா என் முன்னாடி வந்து நின்னீங்க.. ஆனா அது எனக்கான்னு தெரியாம உங்களோட இருந்த ஒவ்வொரு மணி நேரம் உங்கமேல வந்த ஈர்ப்பு அதிகமாகி காதலவும் மாறிடுச்சு..

 

ஆனா, நான் கற்பழிக்கப்பட்டவ அதுனால உங்ககிட்ட காதல சொல்ல தகுதி இல்லன்னு நினைச்சி குழந்தை பிறந்தாலும் இப்படியே உங்களோடவே இருந்துற நினைச்சேன்..” என்று இதழ் கடித்து விம்மலை அடக்கி தொடர்ந்த யாழிசை, அவன் விழிகளோடு விழிகளை கலக்க விட்டு “ஆனா குழந்தை களைஞ்சதும் உங்களுக்கு குழந்தை கொடுக்க முடியலன்னு கஷ்டத்தோட குழந்தை இல்லாமல் நீங்க என்னவிட்டு பிரிஞ்சிடுவீங்களோன்னு நினைக்கவே வலிச்சிது ஆரி” என்க,

 

அவளை காற்று கூட பூக முடியாதளவு அணைத்தவன் பெண்ணவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு “நான் எப்போவும் உன்கூடவே இருப்பேன் இசை.. சோ எல்லாத்தையும் மறந்து தூங்குடி” என்று பெண்ணவளின் முதுகை வருடி கொடுக்க, தன் மனபாரம் குறைந்த நிம்மதியில் உறங்கியும் போனாள்.

*****

 

குட்டி குழந்தையை தூங்க வைத்துவிட்டு ரேயனை தேடி வந்த தியா, அவன் கையில் எதையோ வைத்து உருட்டி கொண்டிருப்பதை கண்டு அருகில் அமர்ந்தவள் “என்ன பேப்பர் இது”

 

“நான் பாரன்சிக் லேப்ல டெஸ்ட்க்கு மச்சிட்ட கொடுத்தேன்ல.. அதுக்கான ரிப்போர்ட் இப்போ தான் அவன் கொடுத்துட்டு போனான்” என்று அவளிடம் அதை கொடுக்க,

 

அதை கூர்ந்து நோக்கியவள் “சோ ரெண்டும் மேட்ச் ஆகல ரைட்” என்றதுக்கு ஆமென்று தலையாட்டிய ரேயன் “ரெண்டு ஹேன்ட் ரைட்டிங் அண்ட் ரெண்டு பேரோட ஹேபிட்ஸ் அண்ட் ஏஜ் எல்லாமே சேம் தான்.. ஆனா ஆள் மட்டும் வேற வேற” என்று நெற்றி நீவி ஆடவன் ஏதோ தீவிரமாக யோசிக்க,

 

தியாவோ “எனக்கு ஒரு டவுட் ரே” என்றதுக்கு தன் சிந்தையிலிருந்து வெளியே வந்த ஆடவன் பெண்ணவளை புருவம் உயர்த்தி பார்க்க,

 

அவளோ “நம்மளயே ஃபாலோ பண்ற சைகோக்கு நமக்கு இன்பார்மேஷன் கொடுத்தவன இன்னுமா தெரியாம இருக்கும்.. அப்படினாலும் அவன் உயிரோட இருப்பான என்ன” என்றதை கேட்டு தாடையை தடவிய ரேயன் “99% இருக்க வாய்ப்பு இல்ல தான்.. ஒரு பெர்சென்ட் இருந்தா அதான் அதையும் கண்டு பிடிக்க டிரை பண்றேன்” என்றதை கேட்டு அது சரியென்று எண்ணியவள் அமைதியாகி ஏதோ சிந்திக்க,

 

இம்முறை அவளின் சிந்தனையை களைத்த ரேயன் “நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் தான”

 

“பண்ணிக்கலாம்” என்க,

 

தலையாட்டி கேட்டு கொண்ட ரேயனும் “சரிடி.. டிஸ்சார்ஜ் ஆனதும் உன் வீட்டுக்கு போக வேண்டாம் ஆரி வீட்டுக்கு போகலாம்” என்றதை பெண்ணவளுக்கு தூக்கி வாரி போட,

 

“அங்க எது..க்கு என் வீட்..டுக்கே போக..லாம்” என்றவளுக்கு வாய் திணறி கைகள் உதற,

 

அதை கண்டும் காணதது போல் இருந்த ரேயன் “உன் வீட்டுல தான கத்தி குத்து நடந்துச்சு சோ இப்போதைக்கு ஆரி வீட்டுலயும்.. என் வீட்டுலயும் பாதி பாதி பேர் இருந்துக்கலாம் எல்லாரும் ஒன்னா இருந்து இப்படி மொத்தமா ஹார்ட் ஆகிறதுக்கு தனி தனியாயிருந்தா கொஞ்சம் ஈஸ்யா இருக்கும்” என்று அவன் கூறும் நன்மை புரிந்தாலும்,

 

ஏற்றுக்கொள்ள மறுத்த தியா “இல்ல ரே.. இப்போ ஆரி இருக்கிற வீடு பத்தாது சோ நான் வேற வீடு ஏற்பாடு பண்றேன்”

 

“ஏய் பைத்தியம் அவன் வீட்டுல தான் மூணு ரூம் இருக்கே.. அது போக மீதி பேர என் வீட்டுக்கு அனுப்பி வச்சிடலாம்..” என்றவன் வியர்க்க அமர்ந்திருந்த பெண்ணவளை அழுத்தமாக ஏறிட்டு “அது சரி.. அவன் வீட்டுல எதுவும் போதை பொருள் கடத்தி வச்சிருக்கியா.. இப்படி பதருற” என்று அவன் சாதாரணமாக கேட்டு வைக்க,

 

பாவம் பாவைக்கு தான் தானே காட்டி கொடுத்திட்டோமோ என்று வயிற்றில் புளியை கரைக்க, தன்னை சமன் செய்த தியா “ஆமா போத பொருள் எக்ஸ்போர்ட் இம்போட் வேலை அங்க தான் நடக்குது” என்று கூறி கொண்டிருக்க,

 

தங்களை காணாமல் செல்ல போன ஆர்யனை கண்ட ரேயன் “டேய் நீ எங்கடா இந்நேரத்துல போற” என்க,

 

தன்னை கண்டு கொண்டான் என்றதில் நொந்து, அவன் அருகில் சென்ற ஆர்யன் “அது ஒன்னும் இல்ல மாம்ஸ் இசை தூங்கிட்டா சோ வீட்டுக்கு போறேன்” என்றவனின் முதுகில் தட்டிய ரேயன் “என்ன தான்டா உன் வீட்டுல இருக்கு.. இவ உன் வீடுன்னு சொன்னாலே பதருறா நீ என்னடான்னா உன் பொண்டாட்டி இந்த நிலைமை விட்டுட்டும் வீட்டுக்கு போறேன் சொல்லுற..”

 

“உண்மைய சொல்லுங்க ரெண்டு பேரும் எனக்கு தெரியாம என்னடா தொழில் பண்றீங்க” என்றதை கேட்டு தமக்கை முறைத்தவன் “அதுவா மாம்ஸ் போதை பொருள் இம்போட் எக்ஸ்போர்ட் பன்றதோட பொண்ணுங்களும் கடத்தி வச்சி சப்ளை பண்றோம்” என்றதை கேட்டு முறைக்கும் ரேயனை கண்டு தானும் முறைத்தவன் “பின்ன என்ன மாம்ஸ் சும்மா சந்தேகப்பட்டா என்னத்த சொல்ல சொல்லுறீங்க.. எனக்கு ஒரு பெயின்டிங் வொர்க் இருக்கு வெளிநாட்டு புராஜக்ட் அதுக்காக தான் வீட்டுக்கு போறேன்” என்றவன் அடுத்து அவன் கூற வருவதையும், தியா ஏதோ கண்ணை காட்டுவதையும் கவனிக்க தவறிவிட்டு ஓடி விட்டான்.

***

மறுநாள் பொழுதும் விடிய ரெண்டு நாட்கள் சரியாக தூக்கம் இல்லாத காரணத்தினால் தாமதமாகவே எழுந்த ரேயன் தன் காலை வேலையை முடித்து கொண்டு யாழிசை அறைக்கு வந்தவன் ஆர்யனிடம் “எங்கடா உன் அக்கா” என்க,

 

“தெரியலையே.. நான் வந்ததுல இருந்து அவள பாக்கல” என்றப்படி அவனுக்காக தேனீர் ஊற்றி கொடுக்க,

 

அதை கையில் வாங்கியவன் சித்திரா அறைக்கும் சென்று பார்க்க, அங்கையும் இல்லாததில் மருத்துவமனையில் சில இடங்களில் தேடியவன், பெண்ணவள் தென்ப்படாமல் போகவும் அழைப்பு விடுக்க, அதுவும் ஏற்கப்படாததில் குழம்பியவன் ருத்ரனிடம் வந்து “மச்சி யாழி எங்க”

 

“கேஸ் விஷயமா போறேன் கிளம்பினாடா.. எங்க போறேன் கேட்டதுக்கு முடிச்சிட்டு வந்து சொல்லுறேன் சொல்லிட்டா” என்று முடிக்கவும் ரேயனுக்கு பெண்ணவளிடமிருந்து அழைப்பு வர, அங்கிருந்து வெளியே வந்தவன் அவளை தேடிய கடுப்பு மற்றும் சொல்லாமல் சென்றதில் “எங்கடி போய் தொலைஞ்ச” என்று அவளிடம் கடுக்கடுக்க,

 

அதை எல்லாம் செவியில் ஏற்காத தியா “சீக்கிரம் அன்பு ஹோமுக்கு வந்து சேரு.. ஹோம் தள்ளி உனக்காக தான் வெயிட் பண்றேன்” என்றவள் கூற வேண்டியதை கூறி திருப்தியில் அழைப்பை துண்டித்து விட, கடுப்பில் தரை உதைத்த ஆடவன் பைக்கில் அன்பு ஹோமிற்கு வந்து சேர்ந்தான்.

தொடரும்..

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்