
தர்மராஜ் உடன் வந்த இடத்தில் சத்யாவை கண்டு தியா மற்றும் ரேயன் இருவரும் குழம்பி அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்து நிற்க,
தர்மராஜோ “இப்போ என்ன சொல்லுறீங்க சார்.. சத்யா உங்க முன்னாடி தான் இருக்காங்க” என்றதை கேட்டு, தியா “எப்படி இது பாசிபில்.. இங்க இருக்கிறது சத்யான்னா.. அப்போ நாங்க பாத்தது யாரு”
“அத நீங்க தான் கண்டு பிடிக்கணும் மேடம்” என்றவர் மந்தாகினி புறம் திரும்பி “உங்கள பாக்க முடியலன்னு சத்யா ரொம்ப ஃபீல் பண்ணினாங்க போய் பாத்துட்டு வாங்க”
“இல்ல டாக்டர்.. இப்படி காயத்தோட போனா பயந்துருவா.. நான் இன்னொரு நாள் பாத்துக்கிறேன் டாக்டர்” என்றதை கேட்டு புருவம் உயர்த்திய தர்மராஜ் “எப்படி அடிப்பட்டுச்சு” என்க,
தியாவை பார்த்த மந்தாகினி “கீழ விழுந்துட்டன் டாக்டர்” என்றதை கேட்டு தியாவோ “நான் தான் அடிச்சன் அதுனால என்ன இப்போ.. கேட்டதும் உண்மைய சொல்லியிருந்தா இதெல்லாம் தேவையா” என்க,
அவளின் பேச்சு பிடிக்காத தர்மராஜோ “உங்களுக்கே இதெல்லாம் தப்புன்னு தெரியாதா மேடம்.. ஒருத்தர பத்தி தீர விசாரிக்காம காயப்படுத்துறீங்களே இதுக்கே உங்கமேல ஆக்ஷன் எடுக்கலாம்.. டிபார்ட்மெண்ட் ஆபீஸர்ன்னா என்ன வேணாலும் பண்ணுவீங்களா” என்றதை கேட்டு முறைத்த பெண்ணவள் “தாராளமா ஆக்ஷன் எடுத்துக்கங்க அதுக்கு முன்ன நான் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க.. அதாவது நீங்க பண்ற இந்த சோஷியல் சர்வீஸ் வெளிய தெரியுமா” என்க,
அவளின் திமிர் பேச்சில் கடுப்பானவர் வெளிய காட்டிக்கொள்ளாமல் “நாங்க ஹோம் மாதிரி நடத்துறோம் லைக் இது முழுக்க முழுக்க அனாதை குழந்தைகளுக்கான ஹோம் தான்.. என்கிட்ட வருறவங்க குழந்தைய எந்த முறைலயும் பெத்துக்க முடியாம வருத்தப்படுறவங்களுக்கு என்கிட்ட இருக்கிற குழந்தைய கொடுப்போம்.. சோ இது நடத்துற அங்கீகாரம் என்கிட்ட இருக்கு..
அதோட கற்பழிக்கப்பட்டு குழந்தைய களைக்க முயற்சிக்கிறவங்க கிட்ட என்னோட நோக்கத்தை கூறி குழந்தைய களைக்க விடாம தடுத்து.. அவங்க குழந்தைய பிறக்கிற வரை கூடவே வச்சி பாதுக்குவோம்..
ஒருவேளை குழந்தை பிறந்ததும் தன் குழந்தைய பிரிய முடியுமா மனசு மாறினா நாங்க கட்டாயப்படுத்த மாட்டோம்.. அதே சமயம் இந்த சமூகத்துக்கு பயந்து குழந்தையின் எதிர் காலம் கருதி சிலர் குழந்தைய அடாப்ட் பண்ண அவங்களே சைன் பண்ணி கொடுத்துட்டு குழந்தைய விட்டுட்டு போயிடுவாங்க..
மோஸ்ட்லி நான் ஹோம் நடத்துறது குழந்தை அடாப்ட் பத்தி வெளியே தெரியும்.. ஆனா இந்த மாதிரி ப்ரெக்னன்ட் லேடீஸ்க்கு ஹெல்ப் பண்ற விஷயம் என்கிட்ட வருற பேஷண்ட்டுக்கு தவிர்த்து சில பேருக்கு தெரியும்” என்று முடித்திருக்க,
அவன் கூறியதை கூர்மையாக காதை தீட்டி இருவரும் கேட்டு கொள்ள, ரேயனோ “உங்க நோக்கத்தை நான் பாராட்டுறேன் டாக்டர்.. இப்போ நீங்க எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும் அதாவது சத்யா இங்க எப்போ வந்தாங்க எப்படி வந்தாங்க அவங்க ப்ரெக்னன்ட் ட்ரீட்மென்ட் பத்தி எல்லாம் பேப்பர்ல எழுதி சைன் போட்டு தந்தீங்கன்னா கேஸ் க்ளோஸ் பண்ணிடுவேன்” என்றவன் தியாவிற்கு கண்ணை காட்ட,
பெண்ணவளோ காரின் அருகிலிருந்த பேப்பர் பேனா ரெண்டையும் எடுத்து வந்து கொடுத்தாள்.
பின் தர்மராஜும் சற்றும் யோசிக்காமல் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தார்.
அதனை நோட்டமிட்ட ரேயன் “தேங்க்ஸ் டாக்டர்.. அண்ட் விசாரணை எந்த விதத்துலயாவது ஹர்ட் பண்ணியிருந்தா ரியலி சாரி” என்றதை கேட்டு தர்மராஜும் அவனின் மன்னிப்பை ஏற்று கொள்ள,
பின் ரேயன் அவரை மருத்துவமனையில் விட்டு மந்தாகினியை அன்பு இல்லத்தில் இறக்கி விட்டவன் “மிஸ் மந்தாகினி சத்யா கேஸ் க்ளோஸ் ஆகிருக்கலாம்.. ஆனா யாழிசை கிட்னபிங் கேஸ் விசாரணையா கண்டிப்பா வருவேன்” என்க,
சம்மதமாக தலையாட்டிய மந்தாகினி “கண்டிப்பா சார்.. எப்படியாவது யாழிசை கண்டு பிடிச்சி கொடுத்துருங்க பாவம் சின்ன பொண்ணு” என்றதை கேட்டுவிட்டு அவரிடமிருந்து விடை பெற்று ருத்ரனை அழுவலகத்திற்கு வர கூறியவன், தியாவுடன் அவனும் வந்து சேர்ந்தான்.
*****
அலுவலகத்திற்கு வந்த தியா நண்பனிடம் தான் கண்டதை கூற, அதன் பின் மூவருமே குழம்பிய மனநிலையில் அமர்ந்திருந்தனர்.
பின் ரேயன் தர்மராஜியிடம் வாங்கிய கடிதத்தை ருத்ரனிடம் கொடுத்தவன் “மச்சி இந்த பேப்பர நமக்கு சார் கொடுக்கும் போது கிடைச்ச பேப்பரோட சேத்து பாரன்சிக் லேப்ல கொடுத்து மேட்ச் ஆகுதான்னு கேட்டு சொல்லு” என்க,
அதனை வாங்கி பார்த்த தியா ஹே “ஹேன்ட் ரைட்டிங் மேட்ச் ஆகுதே ரே”
“எஸ் தியா.. அதோட நீ கவனிச்சியா ஹீ ஸ் லெஃப்ட் ஹேன்ட் ஆல்சோ.. சோ ஐ வில் செக் தட்” என்க,
ருத்ரனும் இரு கடிதத்தையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு “ஓகே நான் செக் பண்ண சொல்லுறேன்.. ஆனா சத்யா கதை என்ன.. தர்மராஜ் ஹோம்ல இருக்கிறது சத்யான்னா நம்ம பார்த்த பொண்ணு யாரு”
“நோ கெஸ் மச்சி.. ஒரே போல பல பேர் இருப்பாங்கன்னு சொல்லுவாங்களே அது போல சத்யா போல இன்னொருத்தியா இருக்கலாம் இல்லன்னா அவளோட டிவின்னா இருக்கலாம்.. சரி அத விடு மெயில் டீட்டைல்ஸ் என்னாச்சி”
“உனக்கு அனுப்பிட்டேன் ரேயா.. அண்ட் அதுல எந்த லீடும் கிடைக்கல நீயும் ஒன்ஸ் செக் பண்ணிக்க” என்க,
தன் திறன்பேசியில், அவன் அனுப்பியதை நோட்டமிட்ட ரேயன் “மச்சி மறைஞ்ச மெயில் கண்டுபிடிக்க முடியலயா”
“அதுவும் சொல்லிருக்கேன் ரேயா டூ டேஸ் டைம் கேட்டாங்க.. சோ வெயிட் ஃபார் ரிசல்ட்” என்றதும்,
அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தியாவோ “ரே நாளைக்கு ஹோம் போய் சத்யா ரூம் செக் பண்ணனும்.. அங்க எதாவது கிடைக்க வாய்ப்பு இருக்கு அண்ட் தர்மராஜ் ஹோம் போய் சத்யாகிட்ட போய் விசாரிக்கணும்..” என்று நிறுத்தியவள் “எனக்கு என்னமோ யாரோ வேணும்ன்னே குழப்புற போல இருக்கு ரே.. நமக்கு சத்யா கேஸ் தான் மெயின் லீட் சோ அதவச்சி நம்மள திசை திருப்ப பாக்குறாங்க” என்று நெற்றியை தடவி,
எதையோ சிந்தித்த தியா “ருத்ரா.. சத்யா டெட் ரிப்போர்ட் எடுத்து வா” என்க,
அவன் எடுத்து வந்து கொடுத்ததும் அதை பார்த்து கண்கள் மின்னிய தியாவோ “கண்டுபிடிக்கிறேன் நிஜ சத்யா யாருன்னு” என்று இதழை வில்லாக வளைக்க,
ஏதோ திட்டம் தீட்டி விட்டாள் என்பதை உணர்ந்த ரேயன் “என்னடி பண்ண போற” என்றதை கேட்டு கண் சிமிட்டி சிரித்தவள் “நாளைக்கு தெரியும் வெயிட் அண்ட் வாட்ச்” என்று கண்ணடித்து விட்டு செல்ல, அவளின் செயலில் பழைய யாழியை கண்டவனின் இதழ்கள் தாராளமாக விரிந்து கொள்ள,
ருத்ரனோ இரு கடிதத்தையும் எடுத்து கொண்டு ரேயன் கொடுத்த பணியை பார்க்க சென்று விட்டான்.
***
மருத்துவமனையில் யாழிசைக்கு உணவு கொடுத்து மாத்திரையும் போட்டு விட்டவன் பெண்ணவளை தன் மார்பில் போட்டு தட்டி கொடுக்க, அவனின் அன்பில் நெகிழ்ந்த பெண்ணவளுக்கோ கண்ணீர் வடிந்து அவன் மார்பை நனைத்தது.
அதில் அவள் கன்னம் பார்த்து “இசை என்னடா இது.. ஏற்கனவே உடம்பு வீக்கா இருக்குடி நினைச்சி நினைச்சி அழாத” என்று அவள் முதுகை தடவி கொடுக்க,
அவனிடமிருந்து விலகி அமர்ந்து “சாரி ஆரி” என்க,
அதில் தானும் எழுந்து, அவள் தோலில் கைப்போட்டப்படி “பைத்தியம் இன்னைக்கு ஒரு நாள்லயே நூறு சாரிக்கு மேல சொல்லிருப்படி.. நான் தான் சொல்லுறேன்ல எதையும் யோசிக்காதன்னு” என்க,
அவனின் மார்பில் சாய்ந்த யாழிசை “எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ஆரி.. என்னால உங்களுக்கு குழந்தை கொடுக்க முடியலையே”
“ஏய் லூசு இந்த குழந்தை போனா என்ன அடுத்த குழந்தை பத்திரமா பாத்துக்கலாம்” என்றதை கேட்டு நிமிர்ந்து,
அவனின் கண்ணை ஏக்கமாக பார்த்த யாழிசை “எப்படி ஆரி முடியும்.. நான் தான் தப்பு பண்ணிட்டேன் உங்க பிராப்ளம் தெரிஞ்சும் கேர்லெஸா இருந்திருக்க கூடாது.. ரொம்ப கஷ்டமாயிருக்கு ஆரி.. நம்ம வேணும்ன்னா குழந்தை தத்தெடுத்தக்கலாமா” என்றதை கேட்ட பின் தான் பெண்ணவள் கூறுவது ஆடவனின் மண்டைக்கு உரைக்க,
தலையில் கைவைத்த ஆர்யோ ‘ச்ச இத எப்படி மறந்தோம்.. இனியும் மறைக்க கூடாது சொல்லிடுவோம்’ என்று நினைத்து பெருமூச்சு விட்டவன் “இசை.. நான் உன்கிட்ட பொய் சொல்லிட்டேன்” என்று தயங்கிப்படியே அவளின் முக பாவனைகளை பார்த்தான்.
அவளோ கேள்வியாக, அவனை ஏறிட்டு “என்ன விஷயம்” என்பது போல் பார்க்க,
“அது நான் இம்போடெண்ட்ன்னு உன்கிட்ட சொன்னது பொய்” என்றதை கேட்டு பெண்ணவள் கோவப்படுவாள் என்று அவன் பார்த்திருக்க,
அதை கேட்டு மகிழ்ச்சியில் கண் கலங்கியவள் “ஆரி.. நிஜமா தா..ன சொல்லு..றீங்க.. உங்க..ளால குழந்..தை பெத்..துக்க முடியு..மா” என்றவளுக்கு சந்தோசத்தின் மிகுதியில் வார்த்தைகள் திணறி ஒலிக்க,
அவன் ஆமென்று தலையை ஆட்டியதும் தான் தாமதம் தன்னுடைய உடல் நிலையை கூட மறந்து அவனை தாவி அணைத்து இதழை கவ்வி கொண்டாள்.
தன்னவளின் திடீர் தாக்குதலில் அதிர்ந்தாலும், அவளின் தவிப்பு உணர்ந்து மெல்ல கண்களை மூடி பெண்ணவளின் முதல் முத்தத்தை அனுபவிக்க தொடங்கினான்.
***
சில நிமிடம் கடந்தும் அவளின் முத்தம் முடிவு பெறாமல் போக, பெண்ணவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு ஆடவனே அவளை தன்னிடமிருந்து விளக்கினான்.
அதன் பின் தான் உணர்ச்சிவச்சத்தில் தான் செய்த காரியம் பேதைக்கு உரைக்க, அவனை பார்க்க முடியாமல் நானி தலையை கவிழ்த்தவள், அவனின் இதழ் தன்னோடு இருப்பது போல் உணர்ந்து சிலிர்த்து அமர்ந்திருந்தாள்.
அவளின் வெட்கம் கூட ஆடவனை கிறங்கடிக்க, அவளை சீண்டும் நோக்கியில் பெண்ணவளின் முகத்தை தன்னை நோக்கி திருப்பியவன் “இப்படியொரு பம்பர் ஆஃபர் கிடைக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா உண்மைய எப்போவோ சொல்லியிருப்பேனே” என்று அவள் இதழ்பட்ட இடத்தை தடவிய கண்ணடிக்க,
அதில் மேலும் சிவந்த பேதைக்கோ பிறகு தான் அவன் தன்னிடம் பொய் கூறியது விளங்க கண்கள் சுருக்கி முறைத்தவள் அவனின் முதுகில் அடி வெளுத்தாள்.
பெண்ணவளின் கை தீண்டலை சுகமாக உணர்ந்தாலும் வலிப்பது போல் “ஏய் வலிக்குது இசை” என்று அவளின் கையை பற்றி முத்தம் வைத்தான்.
அதில் வெடுக்கென்று கையை பிடுங்கியவளுக்கு, அவனின் தீண்டலில் உடல் சிலிர்த்து மூச்சு வாங்க,
அவளின் இடையில் கரம் பதித்தவன் “என்ன மேடம் கொஞ்சம் நேரம் முன்னாடி மனுஷன கிறங்கி விட்டவ.. இப்போ ஒத்த முத்தத்துக்கே ஆஃப் ஆயிட்ட” என்றதை கேட்டு இதழ் கடித்து வெட்கத்தை அடக்கிய பாவை “சும்மா இருங்க ஆரி” என்று செல்லமாக சிணுங்க,
பாவம் ஆடவன் தான் அவஸ்தையுடன் “தயவு செஞ்சி சினுங்காத.. சத்தியாம இனி கன்ட்ரோல் போயிடும்” என்றதை கேட்டு திரும்பி அவனை முறைத்தவள் “இப்படிலாம் என்ன மயக்க டிரை பண்றீங்களா.. நான் கோவம் தான்” என்று முகத்தை வெட்டி திரும்பி கொண்டாள்.
அதில் புன்னகைத்த ஆர்யன் “ஒரு அப்பாவிய பாத்து என்ன வார்த்தை சொல்லிட்ட.. நான் உன்ன மயக்குறேனா கொஞ்சம் நேரம் முன்னாடி..” என்று கூறியவனின் வாயில் கை வைத்து தடுத்தவள் “சரி நான் தான் மயக்கிட்டேன்.. அத விடுறீங்களா.. நான் தூங்குறேன்” என்றவளுக்கு மீண்டும் மீண்டும் அவன் அதையே பேசுவது ஏதோ ஏதோ உணர்வுகளை தூண்ட,
அடக்க வழி தெரியாமல் தூக்கம் வருவது போல் அடித்து விட்டு தப்பிக்க முயற்சிக்க,
அவளின் நிலை புரிந்து சீண்டலை கைவிட்டவன் பெண்ணவளின் கன்னம் ஏந்தி “நான் சொன்னது பொய் தான் இசை.. ஆனா, எனக்கு உன்ன என்கூட வச்சிக்க அப்போ அத விட வேற வழி தெரியல.. நீ நினைச்சிருக்கலாம் பரிதாப்படுறேன் ஆனா உண்மை அதுயில்லடி உன்மேல இருந்த காதல் மட்டும் தான்.. அதுக்காக என்கிட்ட இருக்கிற ஆண்மைய கூட இழக்க தயாராகிட்டன்..
நீ எப்படி இருந்தாலும் எனக்கு உன்ன மட்டும் தான்டி பிடிக்கும்.. அப்போ நீ இருந்த நிலமைல அத சொல்லியிருந்தாலும் நீ ஏத்துக்க கூட மாட்ட.. உன்ன அப்படியொரு நிலமைல பாக்க ரொம்பவே வலிச்சிது.. எனக்கானவள இன்னொருத்தன் எடுத்துட்டங்குற வலி இல்லடி அது..
அந்த வலில நீ துடிக்கும் போது உன்ன எனக்குள்ள அடக்காத்து ஆறுதல் சொல்ல முடியாம எங்கையோ நான் இருந்துக்குறேன் என்ற வலியே நித்தம் என்ன கொல்லுதுடி” என்றவனுக்கு கண்களும் கலங்கி விட்டது.
அவனின் கண்களில் தன் மேல் உள்ள காதலை கண்ட பேதை “லவ் யூ ஆரி” என்றவள் தன் காதலின் ஆழத்தை செலுத்த அவனின் இதழில் முத்திரையிட்டு விட்டு விலகினாள்.
ஆனால், இம்முறை எந்த வித சங்கடமும் இல்லை மாறாக தன்னவன் கொண்ட காதலின் கர்வத்தில் நிமிர்ந்து, அவனின் கண்ணை நோக்கியவள் “இப்போ சொல்லுறேன் ஆரி.. இனி எதையும் கேட்டு உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன்.. நீங்க என்மேல வச்ச காதல நினைச்சி நான் அப்படி என்ன அதிர்ஷ்டம் பண்ணியிருக்கேன் தெரியல ஆனாலும் ரொம்ப சந்தோசமா இருக்கேன் ஆரி..
இத்தன நாள் வரை எனக்கு யாருமில்லன்னு சங்கடத்த உங்க குடும்பம் போக்குச்சு சில நேரம் எதுக்கு உயிரோட இருக்கன்னு நினைச்சி இருக்கேன்.. ஆனா இப்போ உங்களுக்காகவே கோடி வருஷம் வாழனனும் தோணுது..” என்று அவனின் மார்பில் சாய்ந்து கொள்ள,
அவளின் தலையை வருடிவிட்டவனும் “என்ன கிறங்கடிக்க நீயிருந்தா கொடி வருஷம் தாண்டி கூட உயிர் வாழ நான் தயார் டீல் ஓகே வா..” என்றவனின் கை அவளின் இடையில் அழுத்தம் கொடுக்க,
அதனை சுகமாக ஏற்று கொண்ட யாழிசை “ஆரி.. என்ன எப்போயிருந்து உங்களுக்கு பிடிக்கும்” என்றதை கேட்டு அவளின் முதல் நாள் தரிசனத்தை நினைத்து புன்னகைத்தவன், தன்னவளையும் அந்நாளின் நிகழ்விற்குள் அழைத்து சென்றான்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍

