Loading

தியா தண்ணீர் தெளித்ததில் மயக்கதிலிருந்து கண் விழித்த மந்தாகினி, மறுபடியும் அவள் அடிக்கும் முன்னே “சொல்லிடுறேன் மேடம் சொல்லிடுறேன்” என்று சரண்டராகி விட,

 

கையிலுள்ள காப்பை கீழே இறக்கிய தியா “சொல்லு..” என்க,

 

மூச்சு வாங்கியவரோ “சத்யா கொஞ்ச நாளாவே ஆள் சரியில்லாம இருந்தா.. என்கிட்ட ப்ரெண்ட்லியா தான் பேசுவா சோ நான் என்னன்னு கேட்டேன் அழுத்துட்டே யாரோ ரேப் பண்ணிட்டதா சொன்னா.. நானும் ஆறுதல் சொல்லி தப்பா எதாவது முடிவெடுத்துருவாளோ பயந்து அவள என் ரூம்ல தங்க வச்சிக்கிட்டன்..

 

அப்புறம் பீரியட்ஸ் தள்ளி போச்சுன்னு சொல்லி ரொம்ப பயந்தா அப்புறம் தான் டெஸ்ட் பண்ணி பாத்தோம் என்ன பண்றதுன்னு தெரியாம ரொம்பவே உடைஞ்சு போயிட்டா.. அவளும் அபார்ட் பண்றவளவு திங்க் பண்ணினா எனக்கு குழந்தைய கலைக்க இஷ்டம் இல்ல.. சோ அவள ஒரு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன்..

 

அவர் இந்த மாதிரி பிறக்கிற குழந்தைங்க பிறந்ததும் குழந்தை இல்லாதவங்களுக்கு கொடுப்பார்.. ஆனா குழந்தை பிறக்கிற வரை அங்க தங்கியாகனும் என்ற சுழல்.. அதோட அவளுக்கு வயிற் தெரிஞ்சா எல்லாரும் கேட்பாங்கன்னு அங்க தங்குறது நல்லதுன்னு முடிவெடுத்தோம்.. அவர பாத்துட்டு வந்ததும் அவளுக்கும் குழந்தை களைக்குற எண்ணம் போச்சு.. சோ வேலை கிடைச்சதா பொய் சொல்லி தான் அவள அங்க அனுப்பி வச்சேன்.. அவ கூட காண்டட்ல தான் இருந்தேன் அதோட என்கூட இருக்கிற யாருக்கும் எந்த விதத்துலயும் சந்தேகம் வர கூடாதுன்னு ரெண்டு பேரும் குழந்தை பிறக்கிற வர பேச்சிக்குறத குறைச்சிட்டோம்.. இவ்வளவு தான் எங்களுக்குள்ள நடந்துச்சு” என்க,

 

அவரையே அழுத்தமாக பார்த்தப்படி தாடையை தடவிய ரேயன் “ஓகே.. அந்த டாக்டர்கிட்ட என்ன கூட்டிட்டு போக முடியுமா” என்றதும் தயங்கியவர் “அது.. அது” என்று இழுக்க,

 

“வெல் ஈவ்னிங்கே போகனும்” என்று அழுத்தமாக கூறியவன் “அப்புறம் மிஸ் மந்தாகினி யாழிசை கதை என்ன” என்க,

 

ஒரு நொடி தடுமாறியவர் “சார் அவ வேலைக்கு இன்டர்வியூ போகனும் சொன்னதும் அவள ட்ரெயின் ஏத்திவிட்டது நான் தான்.. அதுக்கு அப்புறம் ரீச்சாயிட்டேன்னு அவகிட்ட மெசேஜ் வந்துச்சு.. அப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியாது அதோட அவள கடத்தினதுக்கும்.. எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல” என்றதை கேட்டு ஆடவன் தியாவை பார்க்க,

 

அதன் அர்த்தம் உணர்ந்து தலையாட்டியவள் மந்தாகினியை வெளியே நின்றவர்களிடம் விட்டு காயங்களுக்கு சிகிச்சை பார்க்க கூற, அவர்களும் அதனை ஏற்று கொண்டு மருத்துவரை வரவழைத்து அப்பணியை நிறுத்தினர்.

 

பின் உள்ளே வந்தவள் சதீஷை அழுத்தமாக ஏறிட வியர்க்க அமர்ந்திருந்த சதீஷ் “சார்.. எனக்கு ஒருநாள் கால் வந்துச்சு.. அதாவது சத்யா பத்தின தகவல் கேட்டாங்க அதுவும் நான் சொல்லேன்னா என் ஒய்ஃப்ப கடத்திருவோம் மிரட்டினாங்க.. அதான் வேற வழியில்லாம அனுப்பினேன்” என்று அவன் காலை பிடித்தவன் “இதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியாது சார்” என்று கதற,

 

தியாவோ “ஹே மிஸ்டர் எந்திரி முதல” என்று அவன் எழுந்து அமர்ந்ததும் “நீ இப்படி காலுல விழுந்து கதறினா நீ சொல்லுறத உண்மைன்னு நம்பிடுவோம் நினைச்சியா.. ஒழுங்கா மறைக்காம எல்லாத்தையும் சொல்லு” என்று கூறி கையிலுள்ள காப்பை மேலே ஏற்ற,

 

“யாழி” என்ற அழைத்த ரேயனோ பார்வையால் அமைதியாக இருக்கும்படி செய்கை செய்துவிட்டு “சதீஷ் உனக்கு கால் வந்த நம்பர் இருக்கா” என்றதுக்கு இல்லையென்று தலையாட்டியவனோ “இல்ல சார்.. என்னோட கால் ஹிஸ்டரில பத்து நாள் கால் லிஸ்ட் தான் இருக்கும் அதுக்கு மேல உள்ளதுலாம் தானவே டெலீட் ஆயிடும்.. அதோட சார் சத்யா இன்ஃபோ கேட்டதுக்கு பிறகு எந்த காலும் வரல சார்” என்க,

 

அவனின் ஒவ்வொரு பாவனையும் கூர்ந்து நோக்கிய ரேயன் “சரி சதீஷ் உன்னோட ஃபோன் நம்பர் கொடு” என்றதும் சதீஷும் தயங்காமல் அவனிடம் தன்னுடைய இலக்கை கூறினான்.

 

அதனை பெற்று கொண்டு ருத்ரனுக்கு அந்த எண்ணை அனுப்பிவிட்டு “கலெக்ட் கால் ஹிஸ்டரி லிஸ்ட்” என்று குறுஞ்செய்தி அனுப்பிய, பிறகு ரேயன் “இப்போவும் சொல்லுறேன் வேற ஏதாவது விஷயம் இருந்தா.. நீயா சொல்லிட்டா நல்லது நான் கண்டுபிடிச்சேன் வை.. உனக்கு பிள்ள பிறக்கும் போது நீ ஜெயில்ல களி திங்க வேண்டி தான்” என்க,

 

ரேயனின் தோலை தட்டிய தியா “விடு ரே.. எதாவது இருந்தா நம்மகிட்ட சொல்லலாம எங்க போயிட போறான் இல்லடா” என்று சதீஷ் வினவ, அவனும் ஆமென்பது போல் தலையாட்ட,

 

அதில் புன்னகைத்த தியா “சரி ரெண்டு நாளா இங்கேயே இருக்க.. உன் பொண்டாட்டி தேட போறா.. போய் புள்ளதாச்சிய கவனி” என்க, அவனும் விட்டால் போதுமென்று ஓடி விட,

 

தன்னை காணும் ரேயனை கண்ட தியா பேண்ட் பாக்கெட்டிலிருந்த வண்டி சாவியை கையில் எடுத்து சுழற்றியவள், ஆடவனை பார்த்துவிட்டு வெளியேற, பெண்ணவள் ஏதோ செய்திருக்கிறாள் என்பதை மட்டும் உணர்ந்த ரேயன் எதுவும் கேட்காமல் அவளின் பின்னே சென்று வண்டியில் பின் பக்கம் ஏறி கொண்டான்.

*****

 

ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று வீட்டிற்கு வந்து சேர்ந்த சதிஷ், அழைப்பு மணியை அழுத்தி மூச்சு வாங்க நின்றிருக்க,

 

கதவு திறந்ததும் உள்ளே சென்றவன் சோஃபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த ரேயனை கண்டு மூச்சே நின்றுவிட்ட உணர்வு,

 

அதோடு கதவை தாழிட்டு விட்டு ரேயன் அருகில் அமர்ந்து விலங்க சிரிப்புடன் ஏறிட்ட தியாவை கண்டு நாவு வறண்டு விட, எச்சியை கூட்டி விழுங்கி கொண்டே பயத்துடன் அவர்களை பார்த்திருந்தான்.

 

அதன் பிறகே மனைவியின் நினைவு வந்து வீடு முழுவதும் தேடிய சதீஷ், அவள் இருக்கும் தடம் கூட இல்லாததில் பயந்து அவர்கள் முன் வந்து “என் மனைவிய எங்க வச்சிருக்கீங்க.. அவள விட்ருங்க பிளீஸ்” என்று கதறியவனை பார்த்து புருவத்தை வில்லாக வளைத்த தியா “அய்யோ சதீஷ்.. நாங்க வரும் போதே கதவு திறந்து தான் இருந்துச்சு உள்ள யாருமே இல்லையே.. ஒருவேளை உங்க மனைவியையும் கிட்னாப் பண்ணிருப்பாங்களோ” என்று யோசிப்பது போல் பாவனை செய்ய, ரேயனோ நாளிதழ் படிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினான்.

 

தியாவின் பேச்சில் சதிஷிற்கு அடி வயிற்றில் புளியை கரைக்க, பீதியுடன் “மேடம்..” என்று அழைக்க,

 

அவளோ சொல்லுங்க “சதீஷ்.. உங்களுக்கு யாரும் எதிரி இருக்காங்களா வேற யாரு மேலயும் சந்தேகம் இருக்கா சொல்லுங்க..” என்று தீவிரமாக விசாரிக்க,

 

அவளின் பேச்சில் வேற யாரும் மனைவியை கடத்தி விட்டார்களோ என்று பயந்து இல்லையென்று தலையாட்டியவனை கண்டு கோணலாக இதழ் வளைத்த தியா “எங்க மேல கூடவா சந்தேகம் வரல” என்றதை கேட்டு இவ்வளவு நேரம் நாளிதழில் பார்வை பதித்திருந்தவன் பெண்ணவளை முறைத்து “உன் மேலன்னு கேளு.. எதுவும் செய்யாத என்ன ஏன்டி இழுக்குற”

 

“என்ன ரே நீ தான உன் பாதைல இனி நான் இருப்பேன் சொன்ன.. அப்போ அதெல்லாம் நடிப்பா கோபால்” என்று உதடு பிதுக்கி பாவமாக இதழ் பிதுக்கியதில், அதில் பார்வை படர விட்டு ‘அய்யோ டெம்ப்ட் பண்றாளே’ என்று முணுமுணுத்து பெரு மூச்சுவிட்டவன் தலை கோதி தன்னை சமன் செய்துகொண்டு மறுபடியும் நாளிதழில் கவனத்தை செலுத்தினான்.

 

அவனின் உணர்வு புரிந்து உள்ளுக்குள் வெட்கித்து இதழ் கடித்து அடக்கி கொண்ட பாவையோ, தங்களை பீதியுடன் பார்த்திருந்த சதீஷிடம் “உன்ன அனுப்பி விட்டதும் நீ சொன்னத நம்பிட்டோம் நினைச்சியா.. சில விஷயம் அங்க கேக்க முடியல அதான் பெர்சன்லா விசாரிக்க வந்தேன்.. சரி இப்போவாது சொல்லு எல்லா உண்மையும்” என்க,

 

அவனோ “மேடம் என் ஒய்ஃப்..” என்று இழுத்ததில் ஓங்கி அவன் கன்னத்தில் ஒன்று வைத்தவள் “உன் பொண்டாட்டிக்கு ஏதோன்னா துடிக்குது தான.. அப்படி தான மத்தவங்களுக்கும் வலிக்கும்.. நீங்க பண்ற சைக்கோ தனத்துக்கு என் வீட்டு பொண்ணுங்க உசுரு போராடி வந்திருக்காங்கடா.. கொலவெறில இருக்கேன் உண்மைய சொல்லிட்டா உன் பொண்டாட்டி உசுரோட வந்து சேருவா.. இல்லன்னா கொஞ்சம் கூட கருண பாக்காம அவளோடவே உன்னையும் சேத்து சொர்கத்துக்கு அனுப்பிட்டு போயிட்டே இருப்பேன்” என்று கற்சித்து முதுகிலிருந்த பிஸ்டலை எடுத்து துடைக்க,

 

அதில் முகம் வெளரியவன் “எனக்கு யாரு என்னன்னுலாம் தெரியாது மேடம் எப்போவாது பொண்ணுங்க டீட்டைலைஸ் கேப்பாங்க நானும் கொடுப்பேன்.. அவங்க செலக்ட் பண்ணிட்டு மறுமாச குறிப்பேடுல அவங்க நேம் எடுக்க சொல்லிடுவாங்க.. மத்தப்படி என்ன பண்றாங்க.. எதுக்கு சொல்லுறாங்கன்னு எனக்கு ஒன்னுமே தெரியாது” என்றதும் நாளிதழை ஓரம் வைத்த ரேயன் “அந்த டீட்டைல்ஸ்லாம் யார்கிட்ட கொடுப்ப எப்படி கொடுப்ப”

 

“யாருன்னு தெரியாது சார்.. ஃபேஸ் கவர் பண்ணிட்டு வருவார் அவர்கிட்ட பென்டிரைவ்ல கொடுப்பேன்.. அதுக்கு முன்னாலயும் பொண்ணு செலக்ட் பண்ணினதும் எனக்கு மெயில் வரும் அத நான் பாத்த மறுநிமிஷமே இருந்த தடம் கூட தெரியாம காணாம போயிடும்.. அப்புறம் நானும் அவங்க செலக்ட் பண்ணின பொண்ணு லிஸ்ட் மட்டும் ரிஜெக்ட் பண்ணி விட்ருவேன்” என்றதும் சிந்தித்த தியா “பேபிய கிட்னாப் பண்ண வந்த ரெண்டு பேருல ஒருத்தனா இருக்குமா ரே”

 

“இருக்கலாம்டி.. ஆனா நடந்த கலவரத்துல அவனுங்க யாரு என்னன்னு யாரும் கவனிக்கலயே எதாவது ஒரு க்ளூ கிடைச்சாலும் தூக்கிடலாம்” என்றவனுக்கு தன்னை யார் தாக்க வந்திருப்பார் என்ற சிந்தனையும் ஓடி கொண்டு தான் இருக்க, பெண்ணவளுக்கும் கூட அதே சிந்தனை தான் பின் அவ்வற்றை தள்ளி வைத்துவிட்டு சதீஷிடம் “சரி மந்தாகினி இதுல எப்படி சம்பந்தப்பட்டாங்க”

 

“இல்ல அவங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல.. ஒருவேளை நீங்க சொல்லுற போல சம்பந்தப்பட்டிருந்தாலும் எனக்கு அவங்க பண்ற வேலை எதுவும் தெரியாது” என்று முடித்தவன் “என் பொண்டாட்டி மேல சத்தியமா இவ்வளவு தான் எனக்கு தெரியும்.. இனி வேற எதுவும் தெரிஞ்சாலும் உங்களுக்கு தகவல் சொல்லுறேன் பிளீஸ் என்னோட மனைவியை விட்ருங்க” என்க,

 

அப்போது ருத்ரனிடமிருந்து சதீஷின் அழைப்பு வரலாறு வர,

 

அதனை கண்டவனுக்கு எதுவுமே பிடிப்படாமல் போனதில், ஆடவனின் மின்னஞ்சல் முகவரியையும் வாங்கி ருத்ரனிற்கு அனுப்பி வைத்து “கெட் டீட்டைல்ஸ்” என்று அனுப்பி விட்டிருந்தான்.

 

பின் தியாவிடம் கண்ணை காட்டி அவன் எழும்ப, பெண்ணவளும் வந்த வேலை முடிந்ததில் உடலை முறுக்கி எழுந்து கொண்டு “மிஸ்டர் சதீஷ் உன் பொண்டாட்டிய பத்து நிமிஷத்துல என் ஆளுங்க விடுவானுங்க.. டேக் கேர்” என்று அவன் கன்னம் தட்டியவள் “இன்பர்மேஷன் தேவைப்படும் போது உன்னை தேடி வருவோம் எங்கேயாவது எஸ்ஸாக நினைச்ச” என்று பிஸ்டலை சுடுவது போல் செய்து காட்டிவிட்டு அதனை முதுகில் ஆடைக்கு உள்புறம் சொருகிவிட்டே வெளியேறினாள்.

****

பின் இருவரும் அன்பு இல்லத்திற்கு வந்து மந்தாகினியை தயாராகி வரும்படி கூறிவிட்டு தங்களுக்கான காரை வரவழைத்து காத்திருந்தனர்.

 

தியாவோ தன் தம்பிக்கு அழைப்பு விடுத்து மருத்துவமனையில் உள்ளவர்களை பற்றி விசாரித்து முடித்து காரில் டிரைவர் இருக்கைக்கு அருகில் ஏறி கொள்ள,

 

அவளை தொடர்ந்து தானும் ஏறியவன் ‘எப்போயிருந்துடி சைட் பிசினஸா கடத்தல் தொழிலும் பாக்க ஆரம்பிச்ச” என்றதில் அவனை முறைத்தவள் “இந்த மாதிரி கன்னிங்கா மூவ் பண்ணினா தான் லீட் கிடைக்கும் மேன்” என்று இல்லாத காலரை தூக்கி விட,

 

அதில் புன்னகைத்த ரேயன் “சரி தான் கூடவே தான இருந்த எப்போ இந்த வேலைய பாத்த”

 

“ருத்ரன் வேலைய முடிச்சி கிளம்பவும் சதீஷ் நம்மகிட்ட சொன்ன அட்ரஸ் சொல்லி தூக்க சொல்லிட்டேன்.. அவனும் அத முடிச்சிட்டு தான் ஹோம் வந்து சேந்தான்.. அப்போவே மிரட்டி விசயத்த வாங்க நினைச்சேன் அதுக்குள்ள என்னலாமோ நடந்து போச்சு” என்றவளின் முகம் இரு பெண்களின் நிலை நினைத்து இறுகி விட,

 

அவளின் கையை இறுக்கி பற்றிய ஆடவன் “அப்போ ரெண்டு நாளா அவன் பொண்டாட்டிய நீ தான் வச்சிருக்க போல” என்றதுக்கு ஆமென்று தலையாட்டியவள் அதற்கு மேல் அமைதியாகி விட, பின் மந்தாகினியும் வந்து விட, மூவரும் பயணத்தை தொடங்கினார்கள்.

****

 

மந்தாகினி கூறிய மருத்துவரை சந்திக்க மூவரும் காத்திருக்க, மற்றவர்கள் பரிசோதித்து முடிய மூவருமே இறுதியாக தான் அவரின் முன் அமர்ந்திருந்தனர்.

 

மருத்துவரோ மந்தாகினியை பார்த்துவிட்டு தன்னை சந்தேகமாக பார்க்கும் இருவரிடமும் “என்ன விஷயமா வந்திருக்கீங்க” என்றதும் ரேயன் தியாவை பார்க்க,

 

அதன் அர்த்தம் உணர்ந்த பெண்ணவளோ “நாங்க ரெண்டு பேரும் சிஐடி ஆபீஸர் ஒரு கேஸ் விஷயமா இன்வெஸ்டிகேஷன் பண்ண வந்திருக்கோம்” என்றதும் புரியாமல் விழித்த மருத்துவரோ “என்ன விசாரணை யார பத்தி” என்க,

 

தியாவோ “மிஸ் சத்யா பத்தி தான்” என்றதும் புருவம் உயர்த்தியவர் “சத்யா?..” என்று தெரியாமல் வினவ,

 

அவரின் நடிப்பில் கடுப்பான தியா “இவங்கள யாருன்னு நியாபகம் இருக்கா” என்று மந்தாகினியை கை காட்டி கேட்க,

 

ஆமென்று தலையாட்டியவரும் “கொஞ்ச நாள் முன்னாடி ப்ரெக்னன்ட்டான பொண்ண கூட்டிட்டு வந்தாங்க.. அப்போ தான் டூ டைம்ஸ் பாத்துருக்கேன்”

 

“அவங்க கூட்டிட்டு வந்த பொண்ணு தான் சத்யா” என்று நடந்தை அவரிடம் கூறி சத்யாவின் புகைப்படத்தையும் காட்ட,

 

அதை கண்டு “வாட்” என்று அதிர்ந்தவரை கண்டு கேள்வியாக புருவம் உயர்த்திய தியா “மந்தாகினிகிட்ட இன்வெஸ்டிகட் பண்ணினதுல உங்ககிட்ட தான் விட்டு வந்ததா சொன்னாங்க.. சோ நீங்க தான் சொல்லணும் அந்த பொண்ணு எப்படி உங்ககிட்டயிருந்து தப்பிச்சி வந்தா.. பிளான் பண்ணி எப்படி அவள உங்ககிட்ட வர வச்சிங்கன்னு உண்மைய சொல்லணும்” என்க,

 

தன்னை அவள் சந்தேகப்படுவதை உணர்ந்த மருத்துவர், அவரிடம் ஏதோ கூற வர,

 

அப்போது உள்ளே வந்த செவிலியரோ “சார் இப்போ போன பேஷண்ட் ரிப்போர்ட் வந்துச்சு” என்று கொடுக்க, தன் எதிரே அமர்ந்திருந்தவர்களிடம் “டூ மினிட்ஸ்..” என்று அனுமதி வாங்கியவன், செவிலியர் கொடுத்ததை வாங்கி நோட்டமிட்டு ஏதோ எழுத,

 

அவனின் ஒவ்வொரு அசைவையும் அழுத்தமாக பார்த்த ரேயனின் பார்வை அவன் அருகில் தர்மாராஜ் மகப்பேறு மருத்துவர் என்று பொறிக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் நிலைத்து மீண்டும் அவனின் கையையே கூர்மையாக கவனித்தது.

 

தர்மராஜோ “இனி அவங்க நெக்ஸ்ட் மந்த் வந்தா போதும் சொல்லிடுங்க” என்றப்படி பரிசோதனை அட்டையை செவிலியரிடம் கொடுத்து,

 

அவர் சென்றதும் தியாவின் புறம் பார்வையை திருப்பிய தர்மராஜ் “மேடம்.. நீங்க தேவையில்லாம என்மேல பழி போடுறீங்க.. ஆனா உண்மை என்னன்னா சத்யா என்கிட்ட தான் இருக்காங்க அவங்களுக்கு இன்னும் 15 டேஸ்ல டெலிவரி..” என்க,

 

அதனை கேட்டு புரியாமல் ரேயனை பெண்ணவள் காண, அவளை பார்த்த அவனும் “மிஸ்டர் தர்மராஜ் சத்யா உயிரோட இருக்கிறத நாங்க எப்படி நம்புறது அண்ட் நான் கண்ணால பாத்தது பொய்ன்னு சொல்லுறீங்களா”

 

“சார்.. நீங்க தீர விசாரிக்காம வந்து என்ன சந்தேகப்படுறது தப்புன்னு சொல்லுறேன்.. உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா சத்யாவ நானே உங்கள மீட் பண்ண வைக்கிறேன்.. என்கூட வரீங்களா” என்றதும் உள்ளுக்குள் குழம்பிய ரேயனும் “கண்டிப்பா போகலாம்” என்று எழுந்தவன் அந்த அறையை தன் கண்களால் நோட்டமிட்டு வந்தான்

 

பின் நால்வரும் ஒரே காரில் மருத்துவர் தர்மராஜ் கூறிய இடத்திற்கு வந்து சேர, அங்கு ரெண்டு கர்ப்பிணிகளுடன் அமர்ந்து பூ கட்டி கொண்டிருந்த சத்யாவை கண்டு இருவரும் புரியாமல் விழித்தனர்.

தொடரும்…

– ஆனந்த மீரா 😍😍

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்