
பொழுது விடியவுமே ரேயனை சாதாரண அறையில் மாத்திருக்க, ஆர்யன் சித்திரா வாகி மூவரும் அவனின் அறையில் இருந்து கொள்ள, ஏற்கனவே இருந்த அறையில் யாழிசை மற்றும் பாட்டி குழந்தைகளுடன் இருந்து கொண்டனர்.
அதன் பின் தியா மற்றும் ருத்ரன் மருத்துவமனைக்கு சர்வாவை காண சென்றதும் தான் ரேயன் கண் விழித்திருந்தான்.
உடனே வாகி மருத்துவரை அழைத்து விஷயத்தை தெரிவிக்க, அவரும் பரிசோதித்துவிட்டு “பயப்பட ஒன்னும் இல்ல.. நாளைக்கே டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம் கொஞ்சம் ரெஸ்ட் தேவை பாத்துக்கங்க” என்று கூறிவிட்டு சென்றதும் ஆடவன் எழும்ப முயற்சிக்க, அவனுக்கு ஆர்யன் உதவி செய்தான்.
எழுந்து அமர்ந்தவனின் பார்வை அவனின் யாழியை தான் தேடியது, ஆனாலும் வெளிப்படையாக கேட்க மறுத்து “மத்தவங்க எங்க” என்க,
ஆர்யனோ “பாட்டி யாழிசையும் குழந்தைங்க கூட இருக்காங்க.. மாம்ஸ் தியாவும் கேஸ் விஷயமா வெளிய போயிருக்காங்க” என்றதும் அவன் அமைதியாகி விட,
ரேயன் கண் முழித்ததை சித்திரா மூலம் தெரிந்து பாட்டியும் யாழிசையும் அவனை பார்க்க வந்து விட்டனர்.
அடுத்து தியாவும் ருத்ரனும் கூட வந்து விட, ஏனோ பெண்ணவளால் அவனின் வாடிய முகத்தை பார்க்க முடியவில்லை.
அவள் தன்னை பார்க்காததில் ரேயன் “தியா சர்வா பாக்க தான போன.. என்னாச்சி எனி க்ளூ” என்றதுக்கு ருத்ரன் தான் “ரேயா நீ ரெஸ்ட் எடு.. நாங்க பாத்துக்குறோம்”
“அதான் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ண சொல்லிட்டாங்கள.. இப்போ நான் ஓகே தான்.. நாளைலிருந்து நானும் ஜாயின் பண்ணிடுவேன்” என்றதில் முறைத்த வாகி “சொல்லுறத கேளேன்டா”
“இங்க யாருமே யார் சொல்லுறதும் காது கொடுத்து கேக்குறதில்லையே.. நான் யாருக்காக கேக்கணும்” என்றவனின் பார்வை தியாவை தான் அழுத்தியது.
அவன் தன்னை தான் மறைமுகமாக சொல்கிறான் என்று பெண்ணவளுக்கு புரிய, இதழை கடித்தப்படி தலை குனிந்து விட்டாள்.
பின் தூங்கி கொண்டிருந்த நிஷா எழுந்து தந்தையை கண்டு “அப்பா..” என்று தாவி விட, வாகி தான் “நிஷா குட்டி அப்பாவ டிஸ்டர்ப் பண்ண கூடாது.. அப்பா உடம்புல புண் இருக்கு பாரு” என்க,
குழந்தையை அடிப்படாத கையில் பிடித்தவன் குழந்தையை தூக்க போன வாகியை தடுத்து “இருக்கட்டும் வாகி டியர்.. ஐ அம் ஓகே” என்றவனிடம் நிஷா “என்னாச்சி ப்பா”
“அப்பா கீழ விழுந்தட்டன்டா குட்டி.. டாக்டர் வந்து ஊசி போட்டாங்க சரி ஆயிடும்” என்றதை தலையை ஆட்டிய குழந்தையை “அப்பா.. அப்போ நெக்கு பொம்மா இல்லையா” என்றதை கேட்டு அவளை அள்ளி கொண்ட தியா “நிஷா குட்டிக்கு பொம்மா வேணுமா”
“நெனும் யாழி” என்றவளின் அழைப்பை கேட்டு ரேயனை பார்க்க, அவனும் அவளை தான் பார்த்திருக்க, இருவரின் பார்வையும் ஒன்றோடு உரசி கொண்டது.
அதில் சட்டென்று திரும்பியவள் ருத்ரனிடம் கண்ணை காட்ட, அதன் அர்த்தம் உணர்ந்தவனும் சர்வாவை சந்தித்துவிட்டு வரும் வழியில் பொம்மை கடை கண்ட தியாவிற்கு நேற்று நிஷா பொம்மை கேட்டது ஞாபகம் வர காரை நிறுத்தி வாங்கிருந்தவையை காரிலிருந்து எடுத்து வந்து கொடுத்தான்.
குழந்தையும் சந்தோசத்தில் கன்னத்தில் முத்தமிட்டு பொம்மையை வைத்து அவளுடன் விளையாடினாள்.
*****
இப்படியே அன்றைய மருத்துவமனை வாசம் முடித்து மறுநாள் காலையில் அவனுடன் அனைவரும் தியாவின் வீட்டிற்கு வந்து விட, காலை உணவு முடித்து இருவரும் அலுவலகதிற்கு கிளம்பி விட்டனர்.
அதன் பின் ஒரு மணிநேரம் கழித்து வீட்டிலிருந்தவர்கள் சொல்லு கேட்காமல் அவர்கள் இருவருடன் வந்து இணைந்து கொள்ள,
ருத்ரன் தான் “உன்ன ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு தான வந்தோம்” என்க, அதை சிறிதும் கேட்காதவன் “நேத்து சர்வாகிட்ட அந்த மருந்து பத்தின இன்பர்மேஷன்” என்றதை கேட்டு எவ்வளவு கூறினாலும் கேட்க மாட்டான் என்பதை உணர்ந்து அமைதியாகி விட, தியா தான் நேற்று விசாரிக்கும் பதிவு செய்ததை அவனிடம் போட்டு காட்டினாள்.
அவன் கூறியதை அனைத்தையும் ரேயன் மனதில் பதித்து கொண்டிருக்க, ருத்ரனோ “சர்வா சொன்னத பாக்கும் போது அந்த ஊசி போட்டு பொண்ணுங்கள கன்ட்ரோல் பண்ணி ரேப் பண்றாங்களா” என்று அவன் சந்தேகத்தை கேட்க,
தியாவோ “மச்சி கடத்தின எல்லாம் பொண்ணுங்களையும் ரேப்பா?” என்று சிந்தித்தவள் “இதுவரை அன்பு ஹோம்ல 12 பேரு காணாம போயிருக்காங்க.. எல்லாரையுமா ரேப் பண்ணியிருப்பாங்க.. இதுல சத்யா தவிர மீதி பேரு என்னயானங்கன்னே தெரியலயே” என்க,
இம்முறை ரேயன் “இதுல வேற ஏதோ இருக்கு.. ரேப் பண்ணிட்டு வொய் பொண்ணுங்கள கடத்தனும்.. சத்யா யாழிசை ரெண்டு பேருமே ப்ரெக்னன்ட்.. சத்யா ப்ரெக்னன்டான மறு மாசம் கடத்தப்பட்டிருக்காங்க.. அதே போல தான் யாழிசை ப்ரெக்னன்ட் ஆனதும் அந்த மறுமாச குறிப்பேடுல அவ பெயரு எடுத்துட்டாங்க.. அதோட சத்யா தன் குழந்தைக்கு ஆபத்துன்னு சொன்னாங்க சோ நம்ம தேடுற எக்ஸ்க்கு மெயின் தேவை குழந்தை ஒன்னும் குழந்தைய காசுக்கு விக்கணும் இல்லன்னா வேற ஏதாவது இருக்கலாம்” என்க,
ருத்ரன் “அப்போ ரேப்ன்னு யாழினி சொன்னது.. அப்புறம் நம்ம கண்டு பிடிச்ச இஞ்செக்சன் மருந்து இதெல்லாம் நம்மள கண்பூஸ் பண்ணவா”
“இதெல்லாம் பொண்ணுங்கள கண்பூஸ் பண்ண இருக்கலாம்ல” என்க,
இருவரும் குழம்ப தியாவோ “என்ன சொல்ல வர புரியல” என்றதில் ஒற்றை கையை ஊனி எழுந்தவன் “லுக் ப்ரெண்ட்ஸ் இப்போலாம் செயற்கையாவே குழந்தைய உருவாக்க நிறைய வழியிருக்கு சோ யாழிசைய மயக்கமாக்கி கடத்திருக்காங்க.. அவ மயக்கம் களைஞ்சி எழும்பும் போது பக்கத்துல யாருமே இல்ல அந்த இடைப்பட்ட நேரத்துல தனக்கு என்ன நடந்துச்சுன்னு கூட தெரிஞ்சு இருக்காது அவளுக்கு..
அந்த நேரத்த பயன்படுத்தி ஆர்டிபிசியலா பேபி ஃபார்ம் பண்ற புராசஸ் நடந்துருக்கலாம்.. தென் அவள ரேப் பண்ணின போல செட் பண்ணினது இல்லாம அந்த கன்ட்ரோல் இன்ஜெக்சனும் செலுத்திருக்காங்க.. அதோட பிரேகன்ஸி டைம்ல வர மூட் ஸ்விங்னால ஏற்படுற நெகடிவ் மைண்ட்ல அந்த இஞ்செக்சன் கன்ட்ரோலும் சேந்து அவங்களே ரேப்ன்னு முழுசா நம்பிடுறாங்க.. இதெல்லாம் அவங்க கடத்தப்படுற முன்னமே நடக்க வச்சி பிளாக் மெயில் ஆர் அந்த இஞ்செக்சன் கன்ட்ரோல வச்சி கூட அவங்க தன் வசம் இழுத்துக்குறாங்க.. தட்ஸ் இட்” என்று முடித்துவிட்டு சுழல் நாற்காலியை தீவிர யோசனையில் சுற்றிவிட்டு அமர்ந்த ரேயன் யோசனையாக இருக்கும் இருவரையும் கண்டு “எதாவது சொல்லுங்க” என்க
தியாவோ “நீ சொல்லுறதே உண்மைன்னு இருக்கட்டும்.. இப்போ அடுத்து என்ன பண்ணலாம்”
*இப்போதைக்கு ஒரு பிளானும் இல்ல.. யாழிசை காணும் காம்பிளைன்ட் வந்தா தான் அடுத்து யோசிக்கலாம்” என்றதை கேட்டு ருத்ரன் “காம்ப்ளைன்ட் கொடுப்பாங்களா என்ன”
“மே பீ கொடுக்கலாம் டூ டேஸ் வெயிட் பண்ணுவோம் இல்லன்னா சத்யா வச்சி ஹோம்ல நுழையவும்” என்க தியாவோ “சரி அப்போ ரெண்டு நாள் வீட்டுலயே ரெஸ்ட் எடு” என்றதை கண்டு கொள்ளாதவன் “லெட்ஸ் கோ ஹோம்” என்க, மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
****
இரவு உணவு முடிய யாழிசையை தியாவின் அறைக்கு வர கூறியிருந்தார்கள்.
அவளும் மறுபடியும் என்ன கேட்க போகிறார்கள் என்ற பதற்றத்தில் வந்திருக்க, பின்னயே ஆர்யாவும் வந்திருந்தான்.
அவனை மூவரும் ஒரு மார்க்கமாக பார்க்க, ருத்ரனோ “என்னடா அதிசயம் சாப்பிட்டு முடிச்சிட்டு உன் வீட்டுக்கு போயிடுவ.. இன்னைக்கு உன் பொண்டாட்டி பின்னாலயே நூலை பிடிச்சிட்டு வந்திருக்க” என்க,
அதனை தொடர்ந்து தியா “அதான.. டேய் தம்பி.. உன் பொண்டாட்டிய நாங்க கடிச்சி முழுங்கிற மாட்டோம் நீ வீட்டுக்கு கிளம்பு” என்க,
அவர்கள் இருவரையும் அடக்கிய ரேயன் “ரெண்டு பேரும் சும்மா இருக்கீங்களா” என்றுவிட்டு யாழிசையிடம் “நீ உக்காருமா.. ஆர்யா நீயும் இருடா” என்க, அவன் அமர்ந்ததும் பெண்ணவளும் அமர்ந்து கொள்ள, அதில் ருத்ரன் தியா இருவரும் வாயை முடி சிரித்து விட்டனர்.
அவர்களை முறைத்த ரேயன் “யாழிசை உங்க ஹோம்ல இருந்த சத்யா பத்தி தெரியுமா” என்றதை கேட்டு சில வினாடி சிந்தித்தவள் “ஆமா அண்ணா.. அவங்க வேலைக்காக வெளியூர் போய் பத்து மாசம் இருக்கும்..” என்றதும் சிரிப்பை நிறுத்திய இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்ள,
தியாவோ “கன்பார்மா வொர்க்கா தான் போனான்னு தெரியுமா”
“ஆமா.. எங்க ஹோம்ல படிச்சி முடிக்கவுமே ஜாப் கிடைச்சா அனுப்பி வச்சிடுவாங்க.. அதுனால தான் சத்யா அக்காவும் ஜாப் கிடைக்கவும் போயிட்டாங்க.. ஆனா பாவம் அவங்களுக்கு இங்கயிருந்து போக கஷ்டமா தான் இருந்துருக்கும் போல சோகமா தான் போனாங்க” என்றதும் தியா “அவ கேரக்டர் எப்படி யாழிசை”
“ரொம்ப சாதுவான அக்கா.. எல்லார்கிட்டயும் அன்பா பேசுவாங்க காலேஜ் படிக்கும் போதே ஈவ்னிங் மேல பக்கத்துல சூப்பர் மார்க்கெட் இருக்கும் அங்க வேலை பாத்துட்டே தான் படிச்சாங்க.. மோஸ்ட்லி எங்க ஹோம்ல படிச்சிட்டே வேலை பாக்க நினைக்கிறவங்க அந்த சூப்பர் மார்கெட்ல தான் வேலை பாப்பங்க.. அதுல கிடைக்கிற காச ஹோமுல உள்ளவங்கள டின்னர் லஞ்ச் கூட்டிட்டு போய் எல்லாரையும் ஜாலியா வச்சிப்பாங்க..
அந்த அக்கா லாஸ்ட் செம் எழுதும் போது தான் அவங்களுக்கு ஜாப் கிடைச்சிது சோ எக்ஸாம் முடியவும் போயிட்டாங்க.. ஆனா எக்ஸாம் முடியுற வரை சோகமா தான் இருந்தாங்க யார்கிட்டயும் சரியா பேசல சாப்பிட கூட வர மாட்டாங்க.. என் ஹோம்ல மந்தாகினின்னு ஒரு வார்டன் உண்டு அவங்க அந்த அக்காவ சமாதானப்படுத்தி சாப்பிட வச்சி ஜாப் போகிற வரை ரொம்ப கேர் எடுத்து பாத்துக்கிட்டாங்க..
எல்லாரும் போய் கேட்டதுக்கு அவ எல்லாரையும் பிரிய வருத்தப்படுறான்னு சொன்னாங்க.. அப்புறம் அவங்க கிளம்பும் போது வார்டன கட்டிப்புடிச்சி அழுத்துட்டாங்க வார்டனும் அவங்கள தனியா அழைச்சி போய் சமாதானம் பண்ணி தான் அனுப்பி வச்சாங்க” என்று முடிக்க,
ருத்ரன் “அந்த பொண்ண தனியாவா அனுப்பி வச்சீங்க செண்ட் ஆப் பண்ண கூட யாரும் போகலயா”
“ஏன் போகல வார்டனே கூட போனாங்க..”
“ஓகே அப்படி எங்க போனா.. எதுல போனா”
“ரயில்வே ஸ்டேஷன்ல ட்ரெயின் ஏத்திவிட்டதா தான் வார்டன் சொன்னாங்க.. ஆனா எங்க போனாங்கன்னு கேக்கல” என்றதும் இடை புகுந்த ரேயன் “அதெல்லாம் விடு சத்யா எக்ஸாக்ட்டா ஹோம்ல இருந்து எப்போ போனான்னு சொல்ல முடியுமா”
“அதான் சொன்னேனே ஒன்பது பத்து மாசம் முன்ன இருக்கும்.. சரியா டேட் ஞாபகம் இல்ல அண்ணா” என்றதை கேட்டு நெற்றியை நீவியவன் “தியா..” என்று ஏதோ சொல்ல வந்து,
யாழிசையை கண்டு “சரி நீ போ வேற ஏதாவது டவுட்ன்னா கேக்குறன்.. அது போல உனக்கும் எதாவது ஹோம்ல டிஃபரண்டா தெரிஞ்ச விஷயம் எதாவது தோணுச்சுன்னா சொல்லு” என்க,
சம்மதமாக தலையாட்டியவள் “அண்ணா ஹோம்ல தான் எதுவும் பிராப்ளமா..” என்றவளுக்கு அவளை கடத்த முயற்சிக்கிறார்கள் என்ற விஷயம் கூட சொல்லவே இல்லை கர்ப்பமாக இருப்பதால் பெண்ணவளை கவலைப்படுத்த வேண்டாம் என்று நினைத்திருந்தார்கள்.
அவளின் கேள்விக்கு ரேயன் “சாரிடா.. கேஸ் பத்தி யார்கிட்டயும் எதுவும் சொல்ல கூடாது சோ நேரம் வரும் போது கண்டிப்பா சொல்லுறேன்.. இப்போ போய் ரெஸ்ட் எடு” என்றவன் ஆர்யாவிற்கு கண்ணை காட்ட, அதற்கு மேல் பெண்ணவளை கேள்வி கேட்க விடாமல் கையை பற்றி அழைத்து சென்று விட்டான்.
அவள் சென்றதும் “தியா நாளைக்கு நீ ரயில்வே ஸ்டேஷன் போய் நைன் டூ டென் மந்தஸ் முன்ன கிடைச்ச பேசஞ்சர் லிஸ்ட் அந்த டைம் உள்ள சிசிடிவி புட்டேஜ் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணு” என்க,
புரியாமல் விழித்த தியா “அவ தான் எங்கயும் போகலன்னு தெரியுமே பின்ன எதுக்கு இந்த தேவையில்லாத ஆணி” என்றதில் முறைத்த ரேயன், ருத்ரனிடம் “மச்சி நீ அந்த மந்தாகினி பத்தின டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணி டூ டேஸ் அவங்கள ஃபாலோ பண்ணு.. அண்ட் அவங்க ஒவ்வொரு மூவும் நல்லா அப்சர்வ் பண்ணு” என்றதை கேட்டு அவனும் சம்மதமாகவே தலையாட்ட,
தியாவோ “நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல..” என்றதில் இதழ் குவித்து ஊதியவன் “தியா அவங்க ஹோமுக்கு நுழைய வேண்டிய நேரம் வரும் போது தேவையான ஆதாரம் நம்ம கையலயிருக்கணும்” என்றதை கேட்டு இம்முறை அவன் சொல்ல வருகிறான் என்பது பெண்ணவளுக்கு புரியவே செய்தது.
அதன் பின் ருத்ரன் விடை பெற்று சென்று விட, அவன் பின்னயே செல்ல போன தியா, ரேயனிடம் வந்து “டேப்லெட் சாப்பிட்டியா” என்க,
அவன் பதில் பேசாமல் திறன்பேசியை நோண்ட, அதில் முறைத்த தியா அவனருகில் இருந்த மருந்துகளை எடுத்து கணக்கு செய்து பார்த்து ஆடவன் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்து கொடுக்க வேண்டிய மருந்துடன் தண்ணீர் எடுத்து வந்து அவனருகில் அமர்ந்தவள் “காலைலிருந்து டேப்லெட் போடலயா.. இந்தா போட்டுக்க” என்று ரெண்டையும் நீட்ட, அவனோ அவள் இருப்பதையே மதிக்காதது போல் அமர்ந்திருந்தான்.
அதில் பொறுமையிழந்த தியா, அவனின் திறன்பேசியை பிடுங்கி படுக்கையில் வீசிவிட்டு “உன்கிட்ட தான கொடுக்கிறேன்” என்றும் கூட,
அதனை வாங்காமல் கையை கட்டி அழுத்தமாக பார்த்திருக்க, தியாவோ “என்ன தான் உன் பிராப்ளம்”
“அத தான் நானும் கேக்குறேன்.. உனக்கு என்ன பிராப்ளம் சடனா அக்கறைலாம் வருது என்ன விஷயம்” என்று புருவம் உயர்த்தி கேட்க, கண்டு கொள்ளாத தியா “இப்போ நீ டேப்லெட் போடுவியா இல்லையா”
“நோ தியா என்ன கன்ட்ரோல் பண்ண நினைக்காத.. அது உன்னால முடியவும் முடியாது” என்றதில் கேலியாக இதழ் வளைத்தவள்
“ஓ என்னால உன்ன கன்ட்ரோல் பண்ண முடியாதா” என்று தலையாட்டி சிரித்து கொண்டே, அவனுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து வாயில் ஊற்ற, அவள் செயலில் புரியாமல் விழித்தவன்,
பெண்ணவள் தன்னை நெருங்கவும் அவள் நோக்கம் புரிந்து “வேணாம் தியா” என்று எழும்ப முயற்சிக்க, முதுகில் ஏற்பட்ட காயத்தால் சட்டென்று எழும்ப முடியாமல் போனதில் பெண்ணவள் அவன் கைகள் ரெண்டையும் தன் ஒரு கையால் சிறை பிடித்தவள்,
அடுத்த நொடி அவனின் இதழை முற்றுகையிட்டு மருந்தை உள்ளே செலுத்தினாள்.
அவளின் செயலில் அதிர்ந்து பெண்ணவளை தள்ள முயற்சித்தவனுக்கு வாகியும் தியாவும் சாதாரணமாக பேசுவதிலே அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டது,
அதனால், இப்போது உரிமை எடுக்கிறாள் என்று எண்ணி முகம் கருத்து பெண்ணவளின் வன்மையான இதழனைப்பில் விலக முயற்சித்து தோற்றவனின் உணர்வுகள் முழித்து கொள்ள,
அவன் பதில் முத்தம் வழங்கிய கணம் ஏதோ நினைவு வந்தவளையாய் பட்டென்று, அவனிடமிருந்து இதழை பிரித்தவளுக்கு முகம் கருத்து விட்டது.
இந்த இடைவெளியில் தன் வாயிலிருந்த மருந்தை முழங்கிய ரேயன் விலகிய பெண்ணவளை இழுத்து அவளின் இதழையும் முழுங்கினான்.
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍
