
காலையில் மதுரை சேர்ந்தவர்கள் ஆட்டோ பிடித்து அவர்கள் வீட்டியில் இறங்க,
இவர்களுக்காக அங்கு நின்ற வாகி ஜோஸப்பை கண்டு விழி விரித்த தியா என்னடா சொல்லவே இல்ல எங்களுக்கு முன்னாடியே வந்து ஷாக் கொடுக்குறீங்க என்க, ஜோஸப் எதுவும் பேசாமல் அவளின் உடமையை வாங்கி கொண்டான்.
அவனின் வாடிய முகத்தை பார்த்துவிட்டு வீட்டியில் வெளியே நின்றிருந்த கூட்டத்தை பார்த்தவளுக்கு ஏதோ உரைக்க, கால்கள் நடுங்கி அடுத்தயடி எடுத்து வைக்க முடியாமல் இரு கைகளால் ரேயன் மற்றும் வாகி கையை பிடித்து கொண்டு உள்ளே சென்றவள்,
அவள் அன்னை கண்ணாடி பெட்டியிலிருந்ததை கண்டு வாசலிலே உடைந்து மண்டியிட்டு “அம்மா..” என்று கதறிவிட்டாள்.
அன்னையின் இழைப்பில் நிகழ் காலத்தில் தன் கதையை ருத்ரனிடம் கூறி கொண்டிருந்தவளுக்கு இப்போதும் கண்ணீர் வந்து விட, அவளை தோலோடு அணைத்த ருத்ரன் “மச்சி..” என்றதும் தான் தாமதம், அவன் மார்பில் புதைந்து சட்டையை நனைக்க தொடங்கி விட்டாள்.
அப்போது ஆர்யன் உடன் வாகி சித்திரா யாழிசை பாட்டி அனைவரும் வருவதை பார்த்து நொடியில் அவனிடமிருந்து விலகி கண்ணை துடைத்துவிட்டு இறுக்கமாக எழுந்தவள்,
யாழிசை கையை பிடித்து நின்ற நிஷாவையும் சித்திரா கையிலிருந்த குட்டி குழந்தையும் கண்டு “கிழவி நீ வந்ததே வேஸ்ட்.. இதுல குழந்தைங்க ரெண்டு பேரையும் கூடவே கூட்டிட்டு வந்திருக்க அறிவு இல்ல” என்க,
வாகியோ “குட்டிக்கும் யாழிசைக்கும் ஆபத்துன்னு தெரிஞ்சு எப்படி தனியா விட்டுட்டு வரன்னு தான் சேத்தே கூட்டிட்டு வந்தேன்” என்றவளின் கூற்றின் உண்மை நிலை புரிய சித்திராவிடமிருந்த குழந்தையை கையில் வாங்கி தியா ஓரமாக அமர்ந்து “ஆர்யா டாக்டர் அவனுக்கு பிளட் தேவைப்படும் சொன்னாங்க.. நீ என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு அவளையும் கூட்டிட்டு போய் கொடு” என்றதை கேட்டு தலையாட்டியவன் வாகியுடன் அப்பணியை காண சென்றான்.
அவன் சென்றதும் ருத்ரன் புறம் பார்வையை திருப்பியவள் “மச்சி.. இவங்க எல்லாரும் ஸ்டே பண்ண இங்கேயே ரூம் ஏற்பாடு பண்ணு” என்றதும் தோழியின் கூற்றை செயலாற்றி விட்டு, அங்கிருந்தவர்களை அழைத்து சென்றான்.
****
அனைவரையும் சரியாக கவனித்தவள் இரவு வரை ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் அதே இடத்தில் அமர்ந்திருக்க, அப்போது அவளுக்கு பழசாறு வாங்கி வந்த ருத்ரன் “மச்சி.. இத மட்டும் குடியேன்”
“வேண்டாம்ன்னு சொல்லுறேன்ல கட்டாயப்படுத்தாத அப்புறம் எங்காயவது எழும்பி போயிடுவேன்” என்றதும் அமைதியானவன் அருகிலே அமர்ந்திருக்க, ஆர்யனும் தமைக்கையின் மறுபுறம் அமர்ந்து கையை பற்றி “தியா ரே மாம்ஸ்க்கு ஒன்னும் ஆகாதுடி” என்று முடிக்கவும்,
வாகி அவ்விடம் வரவும் வெளியே வந்த மருத்துவர் “மிஸ்டர் ஆத்திரேயன் உயிருக்கு இனி எந்த பிராப்ளமும் இல்ல ஆபத்துலயிருந்து தாண்டிட்டார்.. ஆனா கான்சிசியஸ் எப்போ வரும்ன்னு எக்ஸாக்ட்டா சொல்ல முடியல அண்ட் இன்னைக்கு ஒருநாள் ஐசியூல இருக்கட்டும் நாளைக்கு நார்மல் வார்ட் ஷிப்ட் பண்ணிடுவோம்.. யாராவது பாக்கணும்ன்னா ஒரு ஹாஃப் ஹவர் கழிச்சி போய் ரெண்டு பேரு மட்டும் பாத்துட்டு வாங்க” என்று கூறிவிட்டு சென்று விட்டார்.
இப்போது தான் இரு பெண்களுக்கும் மூச்சே வந்தது போல் இருக்க, தியாவோ உணர்வுகளை வெளியே காட்டாமல் “ஆர்யா அவள ஹாஃப் ஹவர் கழிச்சி போய் பாத்துட்டு வர சொல்லு” என்க, அதனை மறுத்த வாகினி “இல்ல தியா.. நீயே போய் பாரு”
“ஆர்யா அவ பாக்குறது தான் சரியா வரும்.. அவள பாக்க சொல்லு” என்க, ருத்ரன் தான் “அதான் டாக்டர் ரெண்டு பேரு போகலாம்ன்னு சொன்னாரு தான.. ரெண்டு பேரும் போக வேண்டியது தான” என்க, தியாவோ அமைதி காத்தாள்.
ஏனோ இனியும் பேசாமல் இருப்பது சரியா இருக்காது என்று எண்ணிய வாகினி “தியா” என்று அழைக்க, அதில் கையை மடக்கி கோவத்தை கட்டுப்படுத்தியவள் “ஆர்யா.. தயவு செஞ்சி அவள என் பெயர சொல்ல வேண்டாம்ன்னு சொல்லு”
“தியா நான் சொல்லுறத கேளேன்” என்றதில் பொறுமையிழந்த தியா அவளை சுவற்றத்தோடு சாய்த்து “என்னடி கேக்க சொல்லுற அன்னைக்கு எல்லாரும் அசிங்கப்படுத்தும் போதும் மூடிட்டு தான இருந்த.. ஏன் உனக்கு தெரியாதா நாங்க லவ் பண்ணினது.. அப்போ வாய் திறந்திருந்தா நான் அசிங்கப்பட்டிருப்பேனா நீயும் ஒரு பொண்ணு தான இதுல எனக்கு நீ ப்ரெண்ட் வேற.. வேண்டாம் வாகி விட்ரு.. என்ன பேச வைக்காத” என்று அவளை விடுவித்து தள்ளி நிற்க,
அவள் எதிரே வந்த வாகி “பேசு தியா.. பேசு இன்னைக்கே பேசி முடிச்சிடலாம்.. இனியும் மறைக்க விரும்பல” என்க,
தமைக்கையின் வேதனை கண்ட ஆர்யா “வேண்டாம் சிஸ்டர் பழச பேசாதீங்க முடிஞ்சி போனத விட்ருங்க.. இனி பேசினாலும் ஒன்னும் மாற போகிறது இல்ல.. நீங்க போய் உங்க புருஷன பாருங்க” என்றதை கேட்டு தன் கழுத்திலிருந்த தாலியை வெளியே எடுத்து காட்டிய வாகி “என் கழுத்துல மூணு முடிச்சி போட்டவன் தான என் புருஷன்” என்று கேட்க,
அவளின் பேச்சை மூவரும் வினோதமாக பார்க்க, மேலும் தொடர்ந்த வாகி “அப்போ இந்த தாலிக்கு சொந்தகாரன் ரேயன் இல்ல” என்றதில் விருட்டென்று அவளை ஏறிட்ட தியா “என்னடி புதுசா கத விட்டு தியாகியாக பாக்குறியா.. நான் தான் அவன் உன் கழுத்துல கட்டின தாலிய பாத்தேன்ல”
“ஆமா தியா.. அது அவசரதுக்காக அவன் போட்ட ஒரு முடிச்சி.. சோ ஒரு முடிச்சிலாம் போட்டா புருஷனா என்ன.. அப்போ மூணு முடிச்சி போட்டு என் கழுத்துல தாலி கட்டின சொந்தகாரன் உன் சைட் ஜோஸப்க்கு என்ன பதில் சொல்லுவ” என்றதை கேட்டு ஜோஸப் என்று இதழ் அசைத்த தியாவின் உடல்கள் ஆட்டம் காண, அப்படியே இடிந்து அமர்ந்து விட்டாள்.
தமைக்கையின் உணர்வுகளை புரிந்த ஆர்யா, அவளை ஆதரவாக பிடித்து “தியா ரிலாக்ஸ்” என்று கண்கள் மூடி திறக்க,
அது உணர்ந்தும் பெண்ணவளால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியவில்லை,
இருப்பினும் அவள் கூறியது உண்மையா என்று அறியும் பொருட்டு கண்கள் மூடி இதழ் குவித்து ஊதிவிட்டு எழுந்து வாகினி அருகில் சென்றவள் “வாகி ஜோ..சப் நீயு..ம்” என்றவளுக்கு வார்த்தைகள் வாரமல் தந்தியடிக்க,
வாகியோ “நான் சொல்லுறது உண்மை தியா.. நானும் ஜோஸப்பும் லவ் பண்ணினோம் ஒரு கட்டத்துல என் கழுத்துல தாலி கட்டினான்.. புருஷன் பொண்டாட்டியா சேந்தும் வாழ்ந்தோம் அதுக்கு கிடைச்ச பரிசு தான் நிஷா” என்று நிறுத்தியவள் “அன்னைக்கு அந்த சம்பவம் நடக்கும் போதே நான் ப்ரெக்னன்ட்.. இந்த விஷயம் ரேயனுக்கும் தெரியும் அதுனால தான் என்னையும் என் குழந்தையும் காப்பாத்த தாலி கட்டினான்.. அவன் கட்டும் போதே ஒரு முடிச்சி தான் போடுவேன் சொன்னான் நானும் நீ வந்து போனதும் எனக்கு கிடைச்ச கேப் பயன்படுத்தி அவன் கட்டின தாலியை கழட்டி விசிட்டு ஜோசப் கட்டின தாலிய எல்லாருக்கும் தெரியுற மாதிரி வெளியே போட்டுக்கிட்டன் யாருக்கும் எந்த சந்தேகமும் வரல” என்றதை கேட்டு கண் கலங்கிய தியா “ஜோ.. ஸப்” என்று ஏதோ கேட்க வர,
தானே அர்த்தை புரிந்து கொண்ட வாகியோ “தெரியல தியா.. அன்னைக்கு போனவன்.. இன்னும் வர என்ன தேடி வரல” என்றவளுக்கும் தன் காதல் கணவன் நினைவில் கண்களும் கலங்கி விட, மறுநிமிடம் தியா அவளை வாரி அணைத்திருந்தாள்.
******
அப்போது சித்திராவுடன் யாழிசை கையை பிடித்து கொண்டு, அவ்விடம் வந்து கொண்டிருந்த நிஷா தன் அன்னை யாரையோ கட்டிப்பிடித்து அழுவதை கண்டு யாழிசையின் கையை உதறிவிட்டு அவர்களின் முன் சென்றவள், அம்மாவின் காலை தட்டி “ம்மா துக்கு” என்று மழலை குரலில் கூற,
அதில் அவளைவிட்டு பிரிந்த தியாவோ சுவற்றை வெறித்து அமர்ந்து விட, ஆண்கள் இருவரும் அவளுக்கு துணையாக அருகில் அமர்ந்து கொண்டனர்.
வாகி குழந்தையை தூக்கி கொள்ள, நிஷாவோ, அவள் கண்ணை துடைத்து “ஏன் அலற” என்றதை கேட்டு புன்னகைத்த வாகி “அம்மாக்கு ஊசி போட்டுட்டாங்க குட்டி அதான்.. நீ ஏன் தூங்கல”
“தூக்கம் வரல.. ப்பா நேனும்” என்க, அவள் தலையை கோதிவிட்ட வாகின் “அப்பா ஊருக்கு போய் இருக்கான்.. நீ சமத்தா தூங்கினா நாளைக்கு நிஷா குட்டிக்கு அப்பா பொம்மை வாங்கி வருவான்” என்றதில் கண்கள் சிமிட்டி சிரித்த குட்டியோ “எஜமாவா” என்று தலையாட்டி கேட்க, அவளும் ஆமென்று தலையாட்டினாள்.
பின் அங்கு கண்ணீர் வடிய அமர்ந்திருந்த தியாவை கண்ட குழந்தை “ம்மா ஏக்கி விடு” என்க,
அவள் இறக்கி விட்டதும் ஓடிய நிஷா, தியாவின் அருகில் வந்து, அவளின் கண்ணீரை துடைத்து “உனக்கும் உசி குத்தியா” என்றதில் கண்ணீரை துடைத்த தியா, குழந்தை தூக்கி மடியில் வைத்து கொண்டு ஆமென்று தலையசைத்த தியா “உன் பெயரு என்ன”
“நான் நிஷா குத்தி” என்றதை கேட்டு அவள் கன்னம் கிள்ளி “நிஷா குட்டியா நீங்க.. நான் தியாழினி ஹேன்ட் ஷேக் பண்ணுங்க” என்று கையை கொடுக்க,
குழந்தையோ “யாழி” என்று கூறி கை குலுக்கியது, குழந்தையின் யாழி என்ற அழைப்பில் தன்னுடைய ரேயின் அழைப்பை கேட்பது உணர்ந்த தியாவிற்கு மறுபடியும் கண்ணீர் கன்னத்தில் இறங்க, அதில் உதடு பிதுக்கிய நிஷா “யாழி அழாத நீ அழுது நிஷா குத்தி அழும்” என்றதில் வேகமாக கண்ணை துடைத்த தியா “இல்லடா குட்டி அழ மாட்டேன்”
“குட்டு கேள்.. இப்போ நிஷா குத்தி போய் தூங்கும்..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு “எனக்கு முத்தா தா” என்று உரிமையாக அவளிடம் கேட்டு வாங்க,
அதில் இறுக்கம் மறந்து இதழ் விரித்த தியா குழந்தையின் முகம் முழுவதும் முத்தத்தை வாரி வழங்கியவளுக்கு ஏனோ முத்தத்தை நிறுத்த மனமில்லை, அதோடு குழந்தையின் அருகாமையில் தன் இரண்டு வருட துயரத்தை கடந்தது போல் இருப்பதையும் உணர முடிந்தது.
பின் ஆசை தீர முத்தமிட்டு முடித்து சித்திராவிற்கு கண்ணை காட்ட, அவளும் குழந்தையை தூக்கி கொண்டு யாழிசையுடன் தாங்கள் தங்கியிருக்கும் அறைக்கு சென்று விட்டாள்.
போகும் குழந்தையை ஏக்கமாக பார்த்திருந்த தமக்கையின் தோலில் கைப்போட்ட ஆர்யா “நிஷா குட்டி கியூட்ல” என்க, அதில் பெண்ணவள் புன்னகைத்து தலையாட்டினாள்.
அதை அதிசயம் பார்ப்பது போல் பார்த்த ருத்ரன் “டேய் ஆர்யா.. உன் அக்காக்கு சிரிக்க கூட கத்து கொடுத்துருக்கீங்கன்னு இன்னைக்கு தான்டா தெரியுது” என்று தோழியை வார,
அதில் பெண்ணவள் அவனின் தலையில் தட்டி போலியாக முறைக்க, அங்கு மெல்லிய சிரிப்பலை பரவியது.
அதன் பின் இரு பெண்களும் ஒன்றாக இணைந்து சத்தமில்லாமல் அவனை பார்த்து வந்திருக்க, உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு கழிவறை வந்தவள் கண்ணீரை மொத்தமாக கொட்டிவிட்டே வெளியே வந்தாள்.
*****
அவனின் உயிருக்கு ஆபத்தில்லை என்ற நிம்மதியில் மறுநாள் ருத்ரனுடன் சர்வாவை காண மருத்துவமனைக்கு வந்திருக்க, தியாவின் வருகை அறிந்தும் வந்தவர்களை பார்த்துவிட்டே கடைசியாக தான் அவளை அழைத்திருந்தான்.
தன் முன் அமர்ந்த இருவரையும் பார்த்த சர்வா “சாரி தியா.. பேஷண்ட் வெயிட் பண்ண வைக்க எனக்கு இஷ்டம் இல்ல..”
“இட்ஸ் ஓகே சர்வா.. நான் கேஸ்காக உன்கிட்ட விசாரிக்க வந்தேன்.. சோ இதான் ஃப்ரீ” என்றவள் “இது என்னோட ப்ரெண்ட் ருத்ரன்.. இவனும் சிஐடி தான்” என்க, இருவரும் கை குலுக்கி கொண்டனர்.
பின் சர்வா “இன்னைக்கு என்ன விசாரணை.. ஆமா ரேயன் டூயூட் வரலையா”
“இல்லடா ஒரு சின்ன ஆக்சிடென்ட் ஹாஸ்பிட்டல இருக்கான்.. அதபத்தி அப்புறம் பேசலாம்” என்றுவிட்டு தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து யாழிசை கூறிய வீட்டியில் துப்பறிய செல்லும் போது ரேயன் கண்டறிந்த ஊசி மருந்தின் கவரை, அவனிடம் காட்டி “இந்த மருந்து பத்தி எதாவது தெரியுமா..” என்று கேட்க,
அதை வாங்கி பார்வையிட்ட சர்வா மடிக்கணினியில் எதையோ நோட்டமிட்டு விட்டு “தியா இந்த மருந்து மோஸ்ட்லி யாருமே யூஸ் பண்றது இல்ல.. மெண்டலி ரொம்ப பிராப்ளம் ஆர் டிரக் அடிக்ட் இந்த மாதிரி பெர்சன் கன்ட்ரோல் பண்ண யூஸ் பண்ணுவாங்க அதுவும் ரேர் தான்..”
“நார்மலா உள்ளவங்களுக்கு யூஸ் பண்ணினா என்னாகும்”
“இந்த மருந்து ஒரு விதத்துல மைண்ட் கன்ட்ரோல் பண்ணும் தியா.. எக்ஸாம்பிளா சொல்லணும்ன்னா இப்போ நீ மெண்டலி அப்பெக்ட்டாகி பிரஸர் தாங்காம சாகுறளவு உன் மைண்ட் ஃபோர்ஸ் பண்ணுது.. உன்ன அதுலிருந்து வெளிய கொண்டு வர டாக்டர் இந்த இஞ்செக்சன் போட்டு உன் மைண்ட் கன்ட்ரோல் பண்ணிட்டு பேசும் போது.. அவங்க சொல்லுறது சரின்னு உன்ன நம்ப வைக்கும்.. நீயும் அவர் சொல்லுறத நம்பி சாகுறத பத்தி யோசிக்க மாட்ட” என்க,
இடை புகுந்த ருத்ரன் “அந்த மருந்து வேலை செய்யுற வரை அந்த கன்ட்ரோல் இருக்கும்.. அப்புறம் மறுபடியும் அந்த நெகடிவ் மைண்ட்ஸ் வராதுன்னு என்ன நிச்சயம்”
“ருத்ரன் டூயூட் கவுன்சலிங்ன்னா என்ன.. நம்மளோட நெகடிவ் மாத்துறது தான் அதோட டிபரஷன் பொறுத்துவரை நிறைய அளவு இருக்கு.. அவங்க மைண்ட் பொறுத்து தான் நம்ம பேச முடியும்.. ஆனா பேசினா தான அவங்கள மாத்த முடியும்.. சில பேரு முத்தி போய் என்ன பேசினாலும் கோபத்துல கன்ட்ரோல் மீறினா..” என்று சிந்தித்தவன்
“ஹான்.. இப்போ நானே உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்.. நீங்க கேட்க முடியுமா கோபத்துல இங்கயிருக்கிறத தூக்கி அடிச்சா நான் எப்படி கன்ட்ரோல் பண்ண முடியும்.. அந்த மாதிரி உள்ளவங்ககிட்ட இந்த மருந்து யூஸ் பண்ணிட்டு பேசும் போது நம்ம பேசுறத கேட்க முடியும்.. மோஸ்டிலி இந்த மாதிரி உள்ளவங்கள அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுப்பாங்க சோ அதுக்கு தகுந்த அளவுக்கு தான் மருந்து கொடுப்பாங்க.. கொடுக்கிற மருந்து அளவுக்கு டேஸ் கால்குலேட் இருக்கும்.. அந்த டேஸ்க்குள்ள அவங்ககிட்ட மாறி மாறி பேசி கன்ட்ரோல் பண்ணி அவங்களோட நெகடிவ் மைண்ட்ஸ மொத்தமும் பாஸ்டிவா சேஞ்ச் பண்ணிடுவாங்க.. அப்படியில்லன்னாலும் ஆபாய நிலையிலிருந்து வெளிய வந்திருக்காங்க” என்றதை இருவரும் தங்களுக்குள் உள்வாங்கி கொள்ள,
நெற்றியை நீவி சிந்தித்த தியாவோ “சர்வா இந்த மருந்து எல்லா பக்கமும் கிடைக்குமா”
“நான் மகப்பேறு மருத்துவர் சோ என்கிட்ட இருக்காது.. அது போல ஹாஸ்பிட்டல் டாக்டர்ஸ் பொறுத்து கிடைக்கும் ஓவர் ஸ்டாக் யூஸ் பண்ண மாட்டாங்க”
“சரி சர்வா எல்லாம் ஓகே ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு.. இப்போ நான் நார்மலா இருக்கேன் எனக்கு அந்த மருந்து கொடுத்தா என்ன செய்யும்”
“அதான் சொன்னேன்லடி மைண்ட் கன்ட்ரோல் பண்ணும் அது யாராயிருந்தாலும் சரி.. இப்போ அந்த மருந்து நீ எடுத்துருக்கன்னு வச்சிக்க நான் என்ன பேசினாலும் அது உனக்கு சரின்னு தான் தோணும்.. இன்கிளுடிங் தப்பான விஷயமா இருந்தாலும்..” என்க,
அவன் பேசியதை அனைத்தும் பதிவு செய்தவள் “ஓகே சர்வா தேங்க்ஸ் ஃபார் இன்பர்மேஷன்.. சீக்கிரம் மீட் பண்ணலாம்.. பாய்” என்று வந்த வேலை முடிந்ததில் எழுந்து ருத்ரனுடன் வெளியேறி விட,
அவளின் விசாரணையில் குழம்பிய சர்வா ‘எதுக்கு இதபத்தி கேட்டான்னு சொல்லாமலே போயிட்டாளே’ என்று எண்ணிவிட்டு வேலையில் கவனத்தை செலுத்தினான்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍
