Loading

அத்தியாயம் 67

     “இந்தாங்க” என்றபடி கொண்டு வந்த பாலை கணவனிடம் நீட்டினாள் தேவகி.

     “என்னது?” மனைவியின் வழக்கத்திற்கு மாறான அலங்காரத்தைப் பார்த்து யோசனையாகக் கேட்டான் தர்மன்.

     “பால்” ஒன்றும் தெரியாதவள் போலவே சொன்னாள்.

     “நான் கேட்கவே இல்லையே.” மனைவியின் எண்ணம் புரிந்தது. கொஞ்சம் வெட்கம் வந்தது. கூடவே தன்னைச் சமாதானப்படுத்த இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாளோ என்கிற நினைப்பும் வர, அதனால் ஆசையை வளர்த்துக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தான்.

     “இன்னைக்கு நம்ம ரூம் எப்பவும் விட ப்ரைட்டா இருக்கு இல்ல.” கடுப்பாய் கேட்டாள் தேவகி.

     “என்ன சம்பந்தம் இல்லாம பேசுறீங்க.” கேட்டவனுக்குச் சிரிப்பைக் கட்டுப்படுத்துவது சிரமமாக இருந்தது.

     “பேசுறன்னு சொன்னாலே போதும் தேவையில்லாத இந்த ‘ங்க’ எல்லாம் இனி வேண்டாம்.” கோபமாகச் சொல்லியபடி அவன் அருகே மெத்தையில் அமர்ந்தாள்.

     “ஏன் இத்தனை நாளா இப்படித் தானே கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். இப்ப மட்டும் ஏன் மாத்த சொல்றீங்க.” மனைவியின் அருகாமையை இரசித்தபடி கேள்வி எழுப்பினான் தர்மன்.

     “அதெல்லாம் அப்படித்தான். சரி எல்லாம் போகட்டும் இந்தப் பாலைக் குடிங்க, சூடு ஆறிடப் போகுது.” கால்களால் தரையை அழுத்திப் பிடித்தபடிச் சொன்னாள்.

     அவள் குரல் மாற்றத்தில் இதழ்கள் விரியப் புன்னகைத்துக்கொண்டு, “சரி கொடுங்க” எனக் கையில் வாங்கினான்.

     “குங்குமப்பூ போட்டு கொண்டு வந்தேன் அதான் இப்படி இருக்கு.” கணவன் கேட்காமலேயே பதில் கொடுத்தவளுக்குச் சத்தியமாக அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை தான்.

     “ஆமா எதுக்கு இது. நீங்க ஏன் இப்படி ஏதோ கல்யாணத்துக்குப் போற மாதிரி ரெடியாகி இருக்கீங்க. தூக்கம் வரலையா?” வேண்டுமென்றே கேட்டான்.

     அதில் அவளுக்கு இருந்த தயக்கம் மற்றும் வெட்கத்தோடு சேர்த்து சலிப்பும் வந்து சேர, “சத்தியமா என்னால் முடியலங்க. உங்களுக்கு உண்மையிலே எதுவும் தெரியலையா? இல்ல எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்களா?” வேகமாகக் கேட்டாள்.

     “இப்ப என்ன வேணும் தேவகி உங்களுக்கு.” என்க, “நான் கேட்டுடுவேன், அப்படி நானாக் கேட்டா அது உங்களுக்கு அசிங்கமாப் போயிடுமேன்னு பார்க்கிறேன்.” தேவகியின் பதிலில் முதலில் குழம்பியவன் போல காட்டிக்கொண்டவன், அவளிடமே, “அப்படி என்ன கேட்கப் போறீங்க.” எனப் புருவம் உயர்த்திக் கேட்டான்.

     “உங்களை எல்லாம் வைச்சிக்கிட்டு ஒன்னும் பண்ண முடியாது போங்க.” என்று தலையில் அடித்துக்கொண்டவள் அவன் காதில் ஏதோ சொன்னாள்.

     “என்ன தேவகி இப்படியெல்லாம் பேசுறீங்க.” இப்போது நிஜமாகவே வெட்கம் வந்து தொலைத்தது தர்மாவிற்கு.

     “இது என்ன ஆம்பிளைங்களுக்கு மட்டும் னு எழுதி வைச்சிருக்கா என்ன. எங்களுக்கும் ஆசைகள் இருக்கும் இல்ல. அதை நாங்களா முன் வந்து கேட்டா தப்பா என்ன? இந்த வெட்கம், தயக்கம், பயம் எல்லாம் கல்யாணம் ஆன அன்னைக்கே எல்லாம் நடக்கிறவங்களுக்குத் தான் இருக்கும்.

     நமக்குத் தான் நல்லா செட்டாகிடுச்சே, அப்புறம் என்ன. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணுங்க எல்லாம் பர்ஸ்ட் டேவே இந்த அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இது எதுவும் இல்லாம தான் இருப்பாங்களாம். அதே மாதிரி தான் நானும். என் புருஷன்கிட்ட எனக்கு என்ன கூச்சம் வேண்டி கிடக்கு.” என்றாள் தேவகி.

     “அப்ப இத்தனை நாளா எதுக்காக அமைதியா இருந்தீங்களாம்.” சீண்டிவிட்டான்.

     “நீங்க சாமியார் மாதிரி இருந்தீங்க. அதான் நானும் சாமியாரிணியா இருந்தேன். எப்ப உங்களுக்கு இதில் விருப்பம் இருந்தும், எனக்காக ஒதுங்கி இருந்தீங்கன்னு தெரிந்ததோ அப்பவே முடிவு பண்ணிட்டேன்.” சற்றே தயக்கத்துடன் சொன்னாள்.

     “அதுக்காக இப்படி திடீர்னு எல்லாம் நடக்கணுமா? இதெல்லாம் திட்டம் போட்டு நடத்துறது இல்ல தேவகி.” என்றவன் என்ன சொல்வது என்று புரியாமல், “நல்ல நேரம் பார்க்க வேண்டாமா?” என்றுவிட்டான் பட்டென்று.

     அவன் தடுமாற்றத்தை இரசித்துக்கொண்டே, “எல்லாம் பார்த்தாச்சு, இன்னைக்கு நல்ல நாள் தான். பத்து மணிக்கு மேல நல்ல நேரமும் ஸ்டார்ட் ஆகுது.” என்றபடி கடிகாரத்தைப் பார்த்தாள்.

     “இருங்க இருங்க நீங்க எல்லாத்துக்கும் தயாரா வந்திருக்கிறதைப் பார்த்தா எனக்குச் சந்தேகமா இருக்கு. இன்னைக்கு நடந்த சண்டையைப் பத்தி உங்க அக்காங்ககிட்ட ஏதாவது டிஸ்கஸ் பண்ணீங்களா. அவங்க தான் இப்படி ஒரு ஐடியாவைக் கொடுத்தாங்களா?” சங்கடத்துடன் கேட்டான். அவனுக்குத் தன் சகோதரர்களுடன் இதைப் பற்றிப் பேசியதிலேயே விருப்பம் இருந்திருக்கவில்லை. அப்படி இருக்க, இப்போது மனைவியுமா என்று மலைத்தான்.

     “புத்தி போகுது பாருங்க உங்களுக்கு. ஆம்பிளைங்க வேணும் னா நான் அப்படி இப்படின்னு பெருமையா பேசலாம். பொண்ணுங்க எவ்வளவு நெருக்கமான உறவா இருந்தாலும் இதையெல்லாம் சொல்ல மாட்டாங்க கூச்சமா இருக்கும்.” வாக்கியத்தை முடிக்கும் முன்னர் தேவகிக்கு வெட்கம் வந்திருந்தது.

     “அப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்களுக்குக் கூச்சம் எல்லாம் கிடையாதுன்னு சொன்னீங்க.” வேண்டுமென்றே வம்பிழுத்தான். அதாவது அப்படிச் சொல்லிக்கொண்டு தைரியம் என்கிற போர்வைக்குப் பின்னால் இருக்கும் மனைவியின் பயமும், தன் பதற்றம் என்கிற போர்வைக்குப் பின்னால் இருக்கும் லேசான தயக்கமும் குறைவதற்கான நேரத்தை எடுத்துக்கொண்டிருந்தான்.

     “ஐயோ ராமா எனக்குக் கூச்சமே இல்லன்னு நான் எப்ப சொன்னேன். உங்ககிட்ட கூச்சம் பார்க்க மாட்டேன்னு தான் சொன்னேன்.” என்றாள் தேவகி.

     “அப்ப” அவன் ஏதோ சொல்ல வர, “இங்க பாருங்க முதலும் கடைசியுமா சொல்றேன். நல்ல ஆபர் கொடுத்து இருக்கேன். இதை மிஸ் பண்ணிட்டீங்கன்னா, அடுத்த இரண்டு வருஷத்துக்கு நீங்க தலைகீழா நின்னாலும் ஒத்துக்க மாட்டேன் பார்த்துக்கோங்க.” சற்றே மிரட்டலாகவே சொன்னாள் தேவகி.

     “அவ்வளவு நாள் எல்லாம் தாங்காது மா.” என்றவண்ணம் அவளை மெதுவாக இழுத்து தன் மடியில் அமர வைத்தான். அவளும் வாகாக அவன் மார்பில் சாய்ந்து கொள்ள அவனியதம் துடிக்கும் சப்தத்தை தன் கன்னத்தில் உணர்ந்தாள். நிமிடங்கள் கடக்க, துடிப்பு அதிகமாக அவனுடைய பதற்றத்தை உணர்ந்து எழுந்து நேராக அமர்ந்தாள் தேவகி.

     “ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல. பேசாம இரண்டு வருஷம் தள்ளி போடுவோமா?” என்க, ஐயோ எனக் கிட்டத்தட்ட அலறியே விட்டான் தர்மா.

     அதில் அவள் பலமாகச் சிரிக்க, “தேவகி கொஞ்சம் டென்ஷனா இருக்கு.” என்று தன் மனதை வெளிப்படுத்தினான்.

     “அதுதான் முகத்திலே பச்சை குத்தி இருக்கே.” தேவகி கிண்டலடிக்க, “இல்ல இது வேணும் தான். ஆனா ஆரம்பிக்கிறதுக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு.” என்றான்.

     “என்ன பண்ணலாம் எங்கேயாச்சும் டியூசன் சேர்த்து விடவா.” என்றாள் நக்கலாக.

     “இல்ல பர்ஸ்ட் ஸ்டெப் நீ எடுத்து வையேன்.” என்றான் கண்களில் கெஞ்சுதலாய்.

     “என்னது நானா? அதெல்லாம் முடியாது. நான் இவ்வளவு தூரம் தைரியமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறதுக்கே எவ்வளவு ப்ராக்டீஸ் பண்ணேன் தெரியுமா?” தர்மா எதிர்பார்த்தது போலவே உளறிவிட்டிருந்தாள் தேவகி.

     இப்போது சத்தமாய் சிரிப்பது அவனுடைய முறையாகிற்று “இப்ப என்ன சொன்னோம். எதுக்காக இவரு இப்படி சிரிக்கிறாரு.” என்று யோசித்தவளுக்கு அவன் போட்டு வாங்கிய உண்மை புரிந்தது.

     “ப்ராடு ப்ராடு அப்ப இவ்வளவு நேரம் அப்பாவி மாதிரி நடிச்சிக்கிட்டு இருந்தியா?” தேவகி திரும்பி தர்மனை அடிக்க, “என்னடி பொசுக்குன்னு புருஷனை மரியாதை இல்லாம பேசுற.” சிரிப்போடு கேட்டான்.

     “அப்படித்தான் பேசுவேன், என்ன பண்ணுவ?” புருவம் உயர்த்தினாள்.

     “சரிடி, இப்படியே கூப்பிடு. இது கூட நல்லா தான் இருக்கு.” என்றபடி கண்ணடித்தான்.

     “இருந்த பயம் எல்லாம் போன இடமே தெரியல.” என்றவள் அதன்பிறகே கணவனின் சமார்த்தியத்தை உணர்ந்தவளாக, “நான் கூட உங்களை ஒன்னும் தெரியாத அப்பாவின்னு நினைச்சுட்டேன். ஆனா நீங்க உங்களுக்கு ஏத்தமாதிரி சூழ்நிலையை மாத்திக்கிட்டு இருந்திருக்கீங்க இல்ல.” பேசிக்கொண்டே அவனை நேருக்கு நேராக பார்க்க முடியாமல் முகத்தை அவன் மேனியிலே மறைத்தாள் தேவகி.

     “உன்னோட காஸ்டியூம், கையில் இருந்த ரோஸ் மில்க் எல்லாத்துக்கும் மேல தலையில் வைச்சிருக்கியே இந்த மல்லிப்பூ.” என்றவன் அதை ஆசையாய் முகர்ந்து அனுபவித்துவிட்டு, “இது எல்லாம் உன்னோட மனசைச் சொல்லாம சொல்லுச்சு. என்ன தான் உன்னோட நடை, உடை, பாவனை எல்லாம் த்ரீ படத்தில் பர்ஸ்ட் நைட் ரூமுக்கு வர ஸ்ருதிஹாசன் மாதிரி தைரியமா இருந்தாலும், முகத்தில் அப்பப்ப வந்து போற தவிப்பு, தயக்கம் எல்லாம் நீ இன்னும் ப்ளாக் அண்ட் ஒயிட் ஹீரோயின் தான்னு சொல்லாம சொல்லிடுச்சு. அதான் நானும் கொஞ்சம் அம்பி மாதிரி நடிச்சேன். எப்படி என்னோட நடிப்பு சும்மா அசத்திட்டேன் இல்ல.” தனக்குத் தானே பாராட்டுப் பத்திரம் வாசித்தான்.

     “ரொம்பக் கண்ட்ராவியா இருந்துச்சு.” என்றவளைப் பார்த்து சிரித்தவன், “நீ சொன்ன நல்ல நேரம் வந்திடுச்சு, அது கெட்ட நேரமா மாறுறதுக்குள்ள ஆரம்பி ஆரம்பி.” எனப் பயங்கரமாக சீண்டினான்.

     “அதெல்லாம் என்னால முடியாது.”

     “அப்படியா அப்ப சரி இரண்டு வருஷத்துக்கு அன்னம் தண்ணி பழங்காம தள்ளி வைச்சிடலாம்.”

     “ஏங்க ஏன் இப்படி அடம் பண்றீங்க.” சாதாரணமாகப் பேச நினைத்தாலும் தயக்கம் வந்து சிணுங்கலாய் பேசினாள் தேவகி.

     “நீ அப்ப சொன்னதை நான் இப்ப சொல்றேன். என்கிட்ட உனக்கு என்ன வெட்கம். சரி நான் நல்ல மூடில் இருக்கிறதால உனக்கு சின்ன டாஸ்க்கா தரேன். ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடு மத்ததெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.” அநியாயத்திற்கு அடம்பிடித்தான் தர்மா.

     “நீங்க கொடுங்க நான் வாங்கிக்கிறேன்.” இதைச் சொல்வதற்குள்ளாகவே நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது அவளுக்கு.

     “மேடம் தாம்பத்யம் ஒரு கொடுக்கல் வாங்கல் கணக்கு மாதிரி. இரண்டு பக்கம் இருந்தும் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தா மட்டும் தான் அது அன்போட வெளிப்பாடா இருக்க முடியும்.” பாடம் எடுக்க ஆரம்பித்தான்.

     “அன்பை கொடுத்து மட்டும் தான் காட்ட முடியுமா வாங்கி காட்ட முடியாதா வாத்தியாரே.” என்க, “இவளை விட்டா இவ என்னை பேசியே சமாளிச்சிடுவா விடக்கூடாது.” என்று நினைத்தவன், “தேவகி நீ ஆள் பார்க்க தான்டி ஒல்லியா இருக்க. ஆனா நிஜம் அப்படி இல்ல. ரொம்ப நேரம் என் மடியிலே உட்கார்ந்து இருக்க. என்னால கொஞ்சம் கீழ இறங்குறியா?” என்றான்.

     வேகமாக தன் முகத்தை நிமிர்த்தியவள், “என்னது நான் வெயிட்டா இருக்கேனா உங்களுக்கு.” என்று அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தவளை அடுத்த வார்த்தை பேசவிடாது செய்தான் தர்மா.

     அவன் ஆசைப்படி அவள் அறியாமல் அவள் அவர்களின் வாழ்வின் துவக்கத்திற்கு புள்ளி வைக்க, கை தேர்ந்த ஓவியனைப் போல் அதை அழகான ஓவியமாக்க ஆரம்பித்தான் தர்மா.

     “ஊர்மி எங்க ரூமில் இன்னும் லைட் எரியுது, கதவும் திறந்து இருக்கு. அவர் இன்னமும் தூங்கல போல. நான் போய் என்னன்னு பார்த்திட்டு கொஞ்ச நேரத்தில் வந்திடுறேன்.” என்றுவிட்டு லீலா தன்னறைக்குச் சென்றாள்.

     “பொண்டாட்டியை ரூமுக்கு வர வைக்க இது புது ஐடியா போல, மாமா கலக்குறாரு.” எனத் தன்னோடு நினைத்து சிரித்துக்கொண்டாள் ஊர்மி.

     விளக்குகள் எரிய, கதவை நன்றாகத் திறந்து வைத்து நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தான் செல்வா. லீலா படுக்கும் இடத்தில் அவள் கேட்ட நிபந்தனைக் காகிதங்கள் செல்வாவின் கையொப்பத்தை தாங்கியபடி இருந்தது. உடன் ஆர் யூ ஹேப்பி நௌ என்ற வாசகமும்.

     “இது என்னங்க வெறும் பேப்பர். இதில் நீங்க போடுற இந்த ஒத்தக் கையெழுத்தை வைச்சா நான் உங்க மேல நம்பிக்கை வைக்கணும். இதெல்லாம் சும்மா கண் துடைப்புக்கு. சாப்பிடலன்னா பூச்சாண்டி புடிச்சிட்டு போயிடுவான்னு குழந்தைங்களை பயமுறுத்துற மாதிரி, இந்தப் பேப்பரை காட்டி உங்களை நிம்மதியாவும், சந்தோஷமாவும் வைச்சிருக்கத் தான் எல்லாமே.” என்று மனதில் நினைத்தபடி ஏசியை ஆன் செய்து ப்ளாங்கட்டை அவன் மார்பு வரை இழுத்துப் போர்த்தி விளக்கணைத்து அறைக்கதவை வெளியில் சாத்திவிட்டு ஊர்மியுடன் சென்று படுத்துக்கொண்டாள் லீலா.

     அடுத்த நாள் காலை, “குட்மார்னிங் கா.” என்று கொட்டாவி விட்டுக்கொண்டே வந்தாள் ருக்கு.

     “ருக்கு, வர வர ரொம்ப சோம்பேறியாகிட்டே வர. மணியைப் பாரு ஏழாகுது இவ்வளவு நேரமா தூங்குவ.” கண்டித்தாள் லீலா.

     “ருக்குக்கா, வர வர லீலாக்கா உன் மேல காரணமே இல்லாம கோவப்படுறாங்க இல்ல. தேவகி கூடத்தான் இன்னும் எழுந்து வரல. அவளோட புருஷன் ஆறு மணிக்கே எங்கேயோ வெளியில் போயிட்டாரு. அவளைப் போய் எழுப்புறதுக்கு என்ன. அதை விட்டுட்டு உன்னைத் திட்டுறதைப் பார்த்தியா? லீலாக்கா சரியில்ல ருக்குக்கா. பேசாம நாம இரண்டு பேரும் சேர்ந்து தனிக்கட்சி ஆரம்பிச்சிடுவோமா.” சின்னதாய் சிரித்துக்கொண்டே சொன்ன ஊர்மிளாவை குறுகுறுப்பாகப் பார்த்தாள் ருக்கு.

     அவள் காதைப் பிடித்து திருகிய லீலா, “உன் வயித்துக்குள்ள தானே குழந்தை இருக்கு. என்னவோ நீயே குழந்தை மாதிரி கோள் மூட்டுற.” என்றாள்.

     “குழந்தைங்க தான் கோள் மூட்டுமா. நான் அதெல்லாம் வில்லி பண்ற வேலைன்னு இல்ல நினைச்சேன்.” சிரித்தபடி கேரட்டை எடுத்துக் கடித்தாள் ஊர்மி.

     இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருந்த நேரத்தில், அதிகாலையில் வெளியே சென்றிருந்த தர்மா திரும்பி வந்து பூனை நடையிட்டுத் தங்கள் அறைக்குச் சென்றான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
13
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. பரவாயில்ல தர்மா நீங்க தைரியமாவே ரூமுக்கு போகலாம் .. ஆனா இந்த அண்ணனுங்க ரெண்டு பேருக்கும் அறிவே இல்ல .. என்ன தான் இருந்தாலும் தம்பிங்க காதல் சூப்பர் தான் .. டாக்டருக்கும் போலீசுக்கும் சாமர்த்தியம் போதல ..