
அத்தியாயம் 39
தங்கள் அறைக்குள் வந்த ஊர்மி கையோடு கொண்டு வந்த பாலை நாகாவிடம் கொடுக்க, மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான்.
“உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா?” ஊர்மி கேட்கவும் அவளையே பார்த்தவன், “தேவைப்படுது தான் ஆனா நீ தான் தடை போட்டுட்டியே.” இரு பொருள்பட பேசினான்.
“ப்ச்… உங்ககிட்ட போய் கேட்டேன் பாருங்க என்னைச் சொல்லணும்.” என்றுவிட்டு வேக வேகமாக தலையணை, போர்வையை எடுத்தவளை விசித்திரமாகப் பார்த்தவன், “என்னம்மா பத்தினி தெய்வமே திடீர்னு என்னாச்சு உனக்கு. நேத்து எல்லாம் என்கூட ஒன்னா தானே படுத்துக்கிட்ட. நானும் நல்ல பையனா தானே நடந்துக்கிட்டேன். இன்னைக்கு என்ன வந்துச்சு உனக்கு.” நக்கல் போலக் காட்டிக்கொண்டாலும் அவன் வார்த்தையில் குழப்பமே மேலோங்கி இருந்தது.
“எனக்கு ஒன்னும் ஆகல, லீலா அக்கா தனியா இருக்காங்க. நான் அவங்ககூட போய் தூங்கப் போறேன்.” செய்தியாகத் தான் சொன்னாள்.
“நீ அங்க போயிட்டா நான் தனியா இருப்பேனே அது பரவாயில்லையா?” நாகா கேட்க கோவம் வந்தது ஊர்மிளைக்கு.
“உங்களுக்கு தனியாத் தூங்கிப் பழக்கம் தானே. எங்க அக்காவுக்கு அது கிடையாது. செல்வா மாமா வர வரைக்கும் நாங்க மூணு பேரில் யாராவது ஒருத்தர் அவங்க கூட போய் துங்கலாம் னு இருக்கோம்.” என்றாள் அறிவிப்பாக.
“பாருடா ப்ளானிங் எல்லாம் பலமா தான் இருக்கு.” எனச் சிரித்தவன் திடீரென முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு, “நீ என் கூட தான் தூங்கணும் னு நான் சொன்னா, அப்பவும் உங்க அக்காகிட்ட போவியா?” என்றான்.
“ஏங்க, உங்களுக்கு எதில் எதில் உங்க வீராப்பை காட்டணும் னு விவஸ்தையே இல்லையா?” எரிச்சலாய் கேட்டாள் ஊர்மி.
அதைக் கண்டுகொள்ளாமல், “என் கேள்விக்கு என்ன பதில். நீ இப்ப இந்த ரூமை விட்டுப் போகக் கூடாதுன்னு நான் சொன்னா, என்ன பண்ணுவ என்ன பண்ணுவ.” பாடலாகப் பாடிக் காட்டினான்.
“போகக் கூடாதுன்னு மட்டும் இல்ல, வேற என்ன சொன்னாலும் நான் அக்காகிட்ட போகத்தான் போறேன். நான் நினைச்சிருந்தா உங்ககிட்ட சொல்லாமலே அக்காகிட்ட போய் இருப்பேன். புருஷன்னு மரியாதை கொடுத்து உங்ககிட்ட சொன்னேன். அதே மாதிரி பொண்டாட்டின்னு மரியாதை கொடுத்து என்னை நீங்க அனுப்பி வைங்க.” சட்டம் பேசினாள்.
“இதுக்குப் பெயர் மரியாதை இல்லடி செல்லம், கொழுப்பு. உண்மையான மரியாதைன்னா என்னன்னு தெரியுமா. ஏங்க, என் அக்கா பாவம், அவங்களுக்கு வாயில் விரல் வைச்சாக் கூட கடிக்கத் தெரியாது, இராத்திரி தனியாத் தூங்க பயப்படுறாங்க. நான் அவங்க கூடப் போய் படுத்துக்கட்டுமான்னு கேட்டு இருக்கணும். ஆனா நீ அப்படியா பண்ண?”
“அப்ப நான் எது பண்ணாலும் உங்ககிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு தான் பண்ணனுமா. நானா ஒரு முடிவு எடுத்தா அதை நீங்க ஒத்துக்க மாட்டீங்களா, என்ன ஆணாதிக்கமா?” எண்ணையில் இட்ட கடுகாய் வெடிக்கத் துவங்கி இருந்தாள்.
“ஐயோ என் செல்லமே, விஷயம் அது இல்லம்மா. இதுக்கு முன்னாடி நீ ஒரு முடிவு எடுத்தா அது உன்னை மட்டுமே சார்ந்தது. அதில் லாபமோ நஷ்டமோ அது உன்னை மட்டும் தான் பாதிக்கும். ஆனா இப்ப அப்படி இல்லையே.
உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, தாலி கட்டின புருஷன் கண் கண்ட தெய்வமா உன் முன்னாடி இருக்கேன். இப்ப நீ எடுக்கிற ஒவ்வொரு முடிவோட பலன் அது இலாபமோ, நஷ்டமோ எனக்கும் சேர்த்து தானே கிடைக்கும்.” நாகா தன் போக்கில் பேச, அவன் பேச்சில் உண்மை இருப்பது போல் தான் தெரிந்தது. ஆனாலும் இவன் என்று தன்னிடம் கேட்டு எதையும் செய்தான். தான் மட்டும் எதற்காக சின்னச்சின்ன விஷயத்திற்குக் கூட அவனிடம் கருத்து கேட்க வேண்டும் என வீராப்பாய் நினைத்துக்கொண்டாள்.
“இப்ப நான் என் அக்கா கூட படுக்கிறதில் உங்களுக்கு அப்படி என்ன பெரிய நஷ்டம் வந்திடப் போகுது.” எரிச்சலுடன் கேட்டாள்.
“என்ன கஷ்டமா? இன்னைக்கு இந்த ரூமைத் தாண்டி நீ போனா எனக்கு மிகப்பெரிய நஷ்டமே இருக்கு.” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.
அவளைப் பார்த்து புன்னகைத்தவன் மிக மென்மையான குரலில், “நான் இன்னைக்கு ரொம்ப ரொமேன்டிக் மூடில் இருக்கேன். இன்னைக்குன்னு பார்த்து நான் அக்காட்ட போறேன் ஆட்டுக்குட்டிட்ட போறேன்னு சொன்னா கடுப்பாகுமா ஆகாதா?” அசடு வழிந்தான்.
அவனுக்குக் கடுமையான சகவாசதோஷம் அடிக்கிறது என்பதை இந்த நேரத்தில் உறுதிப்படுத்திக்கொண்டாள் ஊர்மி. எங்கோ இருந்து எவனோ சொல்லிக்கொடுக்க அதை இங்கே இவன் நிறைவேற்றுகிறான். இல்லாமல் போனால் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒவ்வொரு முகத்தை ஒருவனால் காட்ட முடியாது என்று திடமாக நம்பினாள்.
வீட்டின் படுக்கை அறை விஷயத்தைக் கூட கண்டவனிடமும் பகிர்ந்து கொள்ளும் இவனைத் திட்டுவதா இல்லை அடுத்தவனின் படுக்கை அறையை எட்டிப் பார்க்க முயற்சிக்கும் அவனைத் திட்டுவதா என்று கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.
அவள் இருக்கும் நிலை புரியாமல், எழுந்து வந்து அவள் தோளில் கை போட்டவன், “டார்லிங் நீயும் நானும் தான் புருஷன் பொண்டாட்டின்னு ஆகிடுச்சு. நீயும் என்கூட வாழ்ற இந்த டாம் அண்ட் ஜெர்ரி வாழ்க்கை பிடிச்சிருக்கு, என்கூட குப்பை கொட்ட, என்னைச் சமாளிக்க உன்னால முடியும் னு வேற சொல்லிட்ட.
எனக்கும் கொஞ்சம் அப்படி இப்படி ஓகே தான். அப்புறம் எதுக்கு நாம இப்படி வெட்டிக்கிட்டு திரியணும். ஒட்டிக்கிட்டு கட்டிக்கிட்டு சந்தோஷமா வாழலாமே.” என்றவன் தொடுகையில் சின்ன வித்தியாசத்தைக் கூட உணர முடியவில்லை ஊர்மியால்.
ஒன்று வம்பிழுக்கிறான் இல்லையேல் தன் மனதை அறிந்துகொள்ளப் பார்க்கிறான் என்று கணித்த ஊர்மி தைரியமாகவே பேசினாள்.
“நீங்க சொன்ன எல்லாம் நான் சொன்னேன் தான். அதே சமயத்தில் உங்களைப் பிடிச்சிருக்குன்னு கூட இப்ப வரைக்கும் சொல்லவே இல்லையே. கல்யாணத்தைத் தாண்டிய வாழ்க்கைக்குப் பிடித்தம் ரொம்ப முக்கியம்.
உங்களுக்கும் தான் என் முகத்தைப் பார்க்கவே பிடிக்காதே. கல்யாணத்துக்கும், தாலிக்கும் முக்கியமா உங்க அப்பாவுக்கும் மதிப்பு கொடுத்து தானே, நான் தப்பான பொண்ணா இல்லையாங்கிற உங்க குழப்பம் இன்னும் தீராமல் இருந்தாலும் என்னை இந்த வீட்டுக்குள்ள, உங்க ரூமுக்குள்ள கடைசியா உங்க வாழ்க்கைக்குள்ள விட்டு வைச்சிருக்கீங்க. அப்புறம் எப்படி உங்களால இதுக்கு தயாராக முடிஞ்சது.” தைரியமாகவே கேட்டாள்.
எப்போதும் தொல்லையாய் தெரியும் அவள் அதீத தைரியம் கூட இன்று இனித்தது நாகாவிற்கு. “பேபி நமக்கு நடந்தது அரேன்ஜ் மேரேஜ். பொதுவா அரேன்ஜ் எல்லாம் பார்த்த உடனே பிடிக்காது. பழகப் பழக ரொம்பப் பிடிக்கும்.” என்றான். அவன் பேச்சில் வழக்கத்தை விட உறுதி அதிகம் தெரிவது அவளைக் கொஞ்சம் குழப்பியது. கூடுதலாக இப்போது அவன் தொடுகையில் வித்தியாசம் தெரிய ஆரம்பிக்க, ஊர்மியின் தைரியம் குறைந்து படபடப்பு வந்தது.
“மத்த நேரத்தில் தேவையில்லாத வார்த்தைகளைக் கொட்டுவியே இப்ப ஏதாவது பாயிண்ட்டை எடுத்துக்கொடு. இவன் இம்சையில் இருந்து தப்பிக்க ஏதாவது ஒரு வழி அமைச்சுக் கொடு.” என்று தன் மூளையிடம் போராடிக்கொண்டிருந்தாள்.
“ஊர்மி ட்ரை டூ அண்டர்ஸ்டாண்ட். நாம புருஷன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிச்சிட்டா நமக்குள்ள இருக்கிற சின்னச்சின்ன பிரச்சனைகள் கூட தானா சரியாகிடும்.” பேசிக்கொண்டே அவள் தோளில் இருந்த கரத்தை இறக்க ஆரம்பித்திருந்தான். அவள் அதைத் தட்டிவிட, சிரித்தவன் இன்னொரு கரத்தையும் கோர்த்து அவளைச் சிறைபிடித்தான்.
அவன் கைச்சிறைக்குள் இருந்துகொண்டே பட்டென்று அவன் முகம் பக்கம் திரும்பியவள், “இது எல்லாம் விளையாட்டு, உன்னை ஏமாற்றவும் தவிப்பில் ஆழ்த்தவும் தான் இப்படியெல்லாம் செய்தேன்.” எனச் சொல்லிவிட மாட்டானா என்று பயந்த விழிகளுடன் அவனையே பார்த்தாள்.
இதழ்களில் ஆளை மயக்கும் புன்னகையுடன் அவன் தன் கைச்சிறையின் அகலத்தைக் குறைக்க, உடலைக் குறுக்கி அனலைக் கக்கும் அவன் உடலின் தீண்டலில் இருந்து தப்பிக்க முயற்சித்தாள் அவள்.
அவள் உடலைக் குறுக்க குறுக்க அவனும் அதையே செய்தான். உள்ளும் புறமும் ஏதோதோ மாற்றங்கள் நடக்க, அது அனைத்தையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள முடியாமல், அவன் கைச்சிறையில் இருந்து போராடி வெளியே வந்து தங்களுக்கு முன்னிருந்த சுவரை நோக்கித் திருப்பி அவனுக்கு முதுகு காட்டி நின்றாள் ஊர்மி.
அதில் இன்னும் கொஞ்சம் அதிகமாகப் புன்னகைத்தவன், நெருங்கி அவள் முதுகில் தன் உடல் பதிய நின்றான். மனைவியின் உடல் தூக்கிப் போடுவதை உணர்ந்தவன், “ரிலாக்ஸ் ஊர்மி இதில் எந்தத் தப்பும் இல்ல, ரிலாக்ஸ்” எனப் பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவள் கரத்தைப் பற்றி அவள் விரல்களுக்குத் துணையாக தன்விரல்களை கோர்த்துக்கொண்டு அவள் மேல் இன்னும் அதிகமாக ஒட்டினான்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் நின்றவளின் கரத்தோடு இணைந்திருந்த தன்னுடைய கரத்தை எடுத்து அவள் வயிற்றில் அழுத்தம் கொடுத்து பின்னோக்கி தள்ளி தன் மேல் இடிக்க வைத்தவன், அவள் கரம் நடுங்குவதை உணர்ந்து புன்னகைத்து விட்டு லேசாக நடுங்க ஆரம்பித்த அவள் முதுகில் முதல் முத்தத்தை வைத்தான்.
தீபட்ட தேகம் போல துடித்தவள் அனிச்சைச் செயல் போல் அவனைத் தள்ளிவிட்டாள். ஆனால் அவன் ஒரு முடிவுடன் தான் இருந்தான் போல, “ஏன் ஊர்மி என்னை விட்டு விலகுற. என்னைப் புருஷனா ஏத்துக்கிட்ட தானே. அப்புறம் ஏன் உனக்கு இந்த நெருக்கம் பிடிக்கல.” என்றான்.
இந்த நேரத்திற்குள் அவன் காமித்த மோகன வலையில் இருந்து மொத்தமாய் வெளிவந்திருந்தாள் அவள். “பிடிக்கலன்னா பிடிக்கல தான்.” கோபமாய் சொல்லிவிட்டு அறையை விட்டுச் செல்ல முயன்றாள்.
“ஏன் ஊர்மி, டெல் மீ எ வேலிட் ரீசன் பேபி. என்னைப் பிடிக்கலையா?” என்றவண்ணம் அவளை நோக்கி நடக்கத் துவங்கினான்.
வழக்கமான அவனுடைய கோபம், திமிர், ஏளனம் எதுவும் இல்லாத அவன் குரல் பேதம் அவளுக்குள் திகிலை உண்டாக்கி இருந்தது. இன்று இவனிடம் இருந்து தப்பிக்க முடியும் என்று அவளுக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் போராடிப் பார்க்க முடிவு கொண்டாள்.
அவள் தனக்குள்ளாக யோசித்துக்கொண்டிருக்க, “ஹே, ஒருவேளை எல்லாத்தையும் முடிச்சிட்டு உன்னை ஏமாத்திடுவேனோன்னு பயமா இருக்கா?” என்றான். உண்மையில் இந்தக்கேள்வி அவளுக்கு மாபெரும் அதிர்ச்சி தான்.
“அப்படியும் நடக்குமோ” என்று விழி பிதுங்கி நின்றவளைப் பார்த்து சிரிக்கத்தான் தோன்றியது அவனுக்கு.
அவளைப் பிடித்து தன்னோடு நெருக்கிக் கொண்டவன், “எல்லாத்துக்கும் இப்படி ஷாக்காகிட்டே இருக்காத டார்லிங். இன்னும் நீ ஷாக்காகுறதுக்கு நிறைய விஷயம் இருக்கு. ஆனா அதெல்லாம் காலையில் தான். இப்ப நமக்கு முக்கியமான வேலை இருக்கு.” என்றுவிட்டு தன்னுடைய இரு உள்ளங்கைகளையும் சூடு பறக்க நன்றாகத் தேய்த்தான்.
என்ன செய்கிறான் இவன் என்று ஊர்மி தயக்கம் தடுமாற்றம் கலந்த கலவையோடு அவனையே பார்த்துக்கொண்டிருக்க, சூடான கரங்களை அவள் கன்னங்களில் வைத்தவன், “ஊர்மி என்னைப் பாரு, என் கண்ணை மட்டும் பாரு. உன்னை ஏமாத்தவோ இல்லை பழிவாங்கவோ நான் நினைக்கல. அதுக்குப் பதிலா உன்னோட சந்தோஷமா வாழ தான் ஆசைப்படுறேன்னு தெரியும்.
இது நார்மலா எல்லாக் கணவன், மனைவிக்குள்ளும் நடக்கிறது தான். இது எதுவுமே தப்பு இல்ல, நான் உனக்கு மட்டுமே சொந்தமானவன், நீ எனக்கு மட்டுமே சொந்தமானவன்னு நாம நம்புறதுக்கு இது அவசியம்.
நல்ல ஒட்டுதல் இருக்கிற ஜோடிகளோட தாம்பத்யம் அவங்களோட நெருக்கத்தை அதிகரிக்கும். ஒட்டுதலே இல்லாத நம்மளை மாதிரி ஜோடிகளுக்குள்ள ஒட்டுதலை இது கொடுக்கும். அந்த ஒட்டுதல் நமக்குள்ள வேணும். இன்னும் உனக்குத் தயக்கமோ, பயமோ எதுவும் இருக்கா என் கண்ணைப் பார்த்து பதில் சொல்லு.” அவன் சொல்லிவிட அவளும் ஒரு நொடி பார்த்தாள் தான்.
அங்கே தான் மொத்தமாய் விழுந்தாள் ஊர்மி. பிரச்சனை ஏதும் இல்லைன்னு சொல்லிடேன் என்று அவன் கண்களால் கெஞ்சுவது போல் தோன்ற, அவன் அவளைப் பற்றி பேசிய பேச்சுக்கள், அவள் மீது அவன் கொண்டிருந்த சந்தேகம் அனைத்தையும் மறந்து தலையை ஆட்டிவிட்டாள் ஊர்மிளா.
“ரொம்ப தேங்க்ஸ் ஊர்மி, காலையில் உன்னோட பயம், குழப்பம் எல்லாம் தெளிவாகிடும்.” என்றவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
இது தேவையா தேவையில்லையா என்னும் குழப்பத்துடனே அவனுக்கு இசைந்து கொடுக்க ஆரம்பித்த ஊர்மி, சில நிமிடங்களிலே அவன் உரிமையான அன்பில் நெகிழ்ந்து தான் போனாள். நிஜமாகவே சண்டைக்கோழிகளுக்கு சம்சார சாகரத்தின் ஆழம் ஒரு ஜான் குறைவு தான் போல.
தெய்வாவின் அறையில், “இன்னும் கோபமா தான் இருக்கீங்களா?” என தெய்வா, ருக்கு இருவரும் ஒரே நேரத்தில் மற்றவரைப் பார்த்து கேட்டு முடிக்க, இறுக்கம் சற்று தளர்ந்து சிரிப்பலை பரவியது அவ்விடத்தில்.
“அப்பாடா உங்களுக்குக் கோவம் போயிடுச்சா. நான் கேள்விப்பட்டு இருக்கேன், மூக்கு நீளமா இருந்தா கோபம் அதிகமா வரும் னு. அதனால் தான் உங்க பெரிய மூக்குக்கு மேல கோவம் வருது போல.” ருக்கு சொல்ல சிரித்தவன் மெல்ல அவளை நோக்கி நடந்து வந்து அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.
“ஸ்சாரி ருக்கு நீங்க என்னை ஏமாத்திட்டீங்கன்னு கண்மூடித்தமா நடந்துக்கிட்டேன். ஏன் அந்த ஒரு விஷயத்தையே ஆணிவேர் மாதிரி பிடிச்சிக்கிட்டு இருந்தேன்னு எனக்குத் தெரியல.
நான் உங்களை ரொம்ப ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டேன் என்பதை மறந்து, அந்த ஒரு விஷயத்தை மட்டுமே பிடிச்சுக்கிட்டு பாடா படுத்திட்டேன்.” தெய்வா பேசப்பேச தான் காண்பது கனவா இல்லை நனவா என்று யோசித்துக் கொண்டிருந்தாள் ருக்கு.
“என்ன ருக்கு அப்படிப் பார்க்கிறீங்க. என்னடா இவன் வைச்சா குடுமி அடிச்சா மொட்டைங்கிற அளவுக்கு இருக்கானேன்னு தோணுதா?” என்க, இவள் தலையைத் தலையை ஆட்டினாள்.
“சோ கியூட்” என்று அவள் கன்னம் பிடித்து ஆட்டியவன், “நான் நம்ம எதிர்காலத்தைப் பத்தி பெரிய கனவே கண்டு வைச்சிருந்தேன் ருக்கு.
என்னோட ரிட்டயர்மெண்ட் வரைக்கும் போலீஸ் குவாட்டர்ஸில் தங்கி இருக்கணும். எனக்கும், என் பொண்டாட்டிக்கும் நடுவில் யாரும் வரக் கூடாது. எனக்கும் உங்களுக்கும் நிறையத் தனிமை வேணும். அந்தத் தனிமையில் எல்லாம் நீங்களும், நானும் நிறைய நிறைய பேசணும்.
சங்கோஜமே இல்லாம நம்ம இஷ்டத்துக்கு நாம நினைச்சதை எல்லாம் பண்ணனும். உங்களுக்கு நான் எனக்கு நீங்க, நமக்கு நம்ம பசங்க.
என் பசங்க போலீஸ்காரங்க, போலீஸ்காரன் பசங்கன்னு சுத்தி எல்லாரையும் கம்பீரமானவங்களா பார்த்து தைரியமானவங்களா வளரணும். ரிட்டயர்டு ஆனதுக்கு அப்புறம் சேவிங்க்ஸில் அமைதியான ஒரு வீடு கட்டி நிம்மதியா இருக்கணும்.
நான் சாகுற வரைக்கும் உங்களுக்கு நான் தான் முதல் பிரையாரிட்டியா இருக்கணும். இன்னும் இன்னும் நிறைய கனவுகள் எனக்குள்ள இருந்தது. அதுக்கு ஏத்த மாதிரி தான் நீங்க எனக்குக் கிடைச்சீங்க.” என்று நிறுத்த, அழகான இவனுடைய கனவைக் கலைக்கும் உரிமையைத் தனக்கு யார் கொடுத்தது. இவனிடம் உண்மையை மறைத்தது பெரும் தவறு என்று மனம் வருந்தினாள் ருக்கு.
“நீங்க மறைச்ச ஒற்றை விஷயம் என்னோட ஆசை எதையும் நிறைவேற விடாதுன்னு தெரிய வரப்ப என்னோட மனசு என்ன பாடு பட்டிருக்கும் னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. என்னோட கோவம் தான் உங்க கண்களுக்குத் தெரியுது. நான் பட்ட கஷ்டங்களும், ஏமாற்றங்களும் உங்களுக்குத் தெரியாது.
எல்லாத்தையும் கடந்து கல்யாண பந்தத்துக்கும், நான் உங்க மேல் வைச்ச பிரியத்துக்கும் மதிப்புக் கொடுத்து உங்களை முழு மனசோட தான் ஏத்துக்கிட்டேன். அந்த வகையில் நான் உங்களை ஆசையா நெருங்கலாம் னு வரும் போது நீங்க தெரிஞ்சோ, தெரியாமலோ உங்க அக்கா தங்கச்சியை இழுத்துடுறீங்க.
அந்தச் சமயம் உங்களுக்கு என்னை விட அவங்களை தான் ரொம்பப் பிடிக்கும் என்கிற உண்மை என்னைச் செருப்பால் அடிக்கிது. அதனால எனக்கு கோவம் வந்து, நான் போயிடுறேன். இல்லைன்னா என்னோட கோவத்தை வார்த்தைகளா உங்க மேல காட்டிடுறேன்.” என்க, தன் கணவன் எத்தனை பாவம் என்று பார்த்துக்கொண்டிருந்தாள் ருக்கு.
“நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னதை நல்லா யோசிச்சுப் பார்த்தேன். அப்பதான் இத்தனை நாளா நான் பண்ணிக்கிட்டு இருந்த முட்டாள்தனம் எனக்குப் புரிஞ்சது. என் நிலைமையில் இருந்து மட்டும் பார்த்தேனே தவிர, உங்க நிலைமையில் இருந்து ஒரு நிமிஷம் கூட நான் யோசிக்கல.
நீங்க இதுவரைக்கும் கடந்து வந்த பாதை முழுக்க அவங்க மட்டும் தான் இருக்காங்க. அதனால் தான் உங்க நினைப்பு எல்லாம் அவங்களை மட்டும் சுத்தி சுத்தி வருது. நல்லவேளை ரொம்ப சீக்கிரம் நான் இதைப் புரிஞ்சிக்கிட்டேன்.”அவன் சொல்ல ருக்கு இன்னதென்று சொல்ல முடியாத உணர்வுக் கலவைகளுடன் அவனைப் பார்த்தாள்.
“அப்ப இனிமேல் நான் தெரியாம அக்கா, தங்கச்சிங்களைப் பத்தி பேசினால் இனிமேல் நீங்க என்னைத் திட்ட மாட்டீங்க இல்ல.” பாவம் போல் கேட்டாள் ருக்கு.
“மாட்டேன், மாட்டவே மாட்டேன்” உறுதியாகச் சொன்னான் தெய்வா.
“என்னைப் பத்தி புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க. எனக்குத் தெரியும் நிச்சயமா ஒருநாள் நீங்க என்னை புரிஞ்சிப்பீங்கன்னு. ஆனா அந்த நாள் இவ்வளவு சீக்கிரத்தில் வரும் னு நான் நினைச்சுக் கூடப் பார்க்கல.” என்று உணர்ச்சிவசப்படுவளை அவன் தன்னோடு அணைக்க இவளும் ஆசையாய் அவனுடன் ஒன்றினாள்.
“உங்க மனசைப் புரிஞ்சிக்கிட்டதோட நிற்காம நான் ஒரு முடிவும் பண்ணி இருக்கேன் ருக்கு. உங்களோட மனசு, உடம்பு மட்டும் இல்ல உங்க நினைவு முழுக்க நான் நிறையணும். அந்த அளவுக்கு நான் உங்க மேல அன்பு காட்டப் போறேன்.
திகட்டத் திகட்ட அனுபவிக்கக் கூடியது அன்பு மட்டும் தான். என் மூலமா உங்களுக்குக் கிடைக்கப் போற அன்பு, உங்க அக்கா தங்கச்சிங்களை மறக்க வைக்கணும்.
நான் சொல்றதைக் கேட்டு என் பின்னாடியே உங்களை வர வைக்கணும். என் அன்புக்கு அப்படி ஒரு சக்தி இருக்குன்னு நான் முழுசா நம்புறேன்.” என்று தனக்குள் நினைத்துக்கொண்டவன், புன்னகையுடன் தன் மேல்சாய்ந்து கொண்டிருந்த மனைவியை உரிமையுடன் அணைத்துக் கொண்டான்.
தங்கைகள் அனைவரும் அவரவர் வாழ்க்கையில் பிஸியாக இருந்த நேரம் அவர்கள் தமக்கையைக் கொல்லும் நோக்கத்துடன் அவள் இருக்கும் அறைக்குள் நுழைந்திருந்தான் ஒருவன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
19
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நினைச்சேன் லீலா தனியா இருக்க போறா … அவளுக்கு ஆபத்து வர போகுது … செல்வா வந்து கத்த போறான் … யார் கொல்ல ஆள் அனுப்பினாங்க … கைலாஷ் … லேகா … அந்த போலீஸ் வேற யாரா இருக்கும் …
அதான நாகா ஊர்மி தான் முதல்ல சேருவாங்க அப்படின்னு நினைச்சேன் … பேசியே கவுத்துட்டான் … ஆனா காலைல ஏதோ னு சொன்னான் அதுதான் இடிக்குது …
தெய்வா இதென்ன இவ்ளோ பொய் நடிப்பு …
Leela va yar kola panna varanga…
Deva en printhu pokanummu nenaichite irukan.. very bad deva