
உனது ஓரவிழிப் பார்வையினாலேயே…
என் இதயத்தைத் ……
தொலைத்தேனடா!.
நீ தொலைவில் இருந்தாலும்…..
உனது நினைவுகளால்
வாடிபோகிறேனடா!.
உன் வரவை எதிர்பார்த்து
இரு விழிகள் ………
பட்டாம்பூச்சியினைபோல
படபடவென …….
சிமிட்டுகின்றதடா!….
என் இதயம் ஒவ்வொரு நிமிடமும்
உன் பெயரைச் சொல்லி,..
துடிக்கின்றதே …….
உன்னுடயை அழைப்பிற்காக…
எனது கைப்பேசி..
விழிகளைப் பதித்தபடி …
உறைந்து இருக்கிறேனடா!.
நீ வந்த நாளோ என்னுள் அன்பும்
பொங்கும் நாளது தானோ!..
.
..
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான கவிதை சகி..